• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
143
15.2

மறுநாள் காலை இந்து மயக்கத்திலிருந்து எழுந்த இந்து, “டேய்! உங்களையெல்லாம் நான் தூக்கி உள்ள வைக்கிறேன் பாரு. நான் யாருன்னு நெனச்சே. நான் ஒரு போலீஸ்டா” என்று கத்தினார்.

“யாரு நீ போலீஸ்? ஹாஹா..” என்று சத்தமாகச் சிரித்து, “நீ எல்லாம் ஒரு போலிஸ்? உன்ன நெனச்சா எனக்கு சிரிப்பா இருக்கு. ஏய் இந்து நீ ஒரு ஏமாந்த பொம்பள” என்றான் அகிலன்.

“ஏய் யாரை பார்த்து திமிரா பேசுற?”

“பின்ன என்ன. நான் எவ்வளோ பெரிய தில்லாலங்கடி தெரியுமா. உன் விரலை வச்சே உன் கண்ணை குத்தினேன் பாத்தியா.” என்றான்.

“என்ன உளர்றே?”

“ஆமா. நான் பதினெட்டு வயசுல உன் வீட்டுக்குள்ள நுழையும் போதே, உன்னுடைய தம்பி பாண்டியனுடைய மகனுக்கு, உன் கையாளயே கட்டம் கட்ட வைத்தேன். ஆனால், நீ ஒரு படி மேல போய் அவனை ஜெயில்லேயே வச்சிட்ட.”

“என்னடா சொல்ற.?”

“ஆமா இந்து. அன்னைக்கு கதிர் ஜெயிலுக்கு போனதுக்கு காரணம் யார் தெரியுமா? நான் தான். நான் மட்டும்தான் காரணம்” என்றான் அகிலன்.

“வாட்?” என்று இந்து அதிர,

“ஆமா அத்த. சின்ன வயசுலேயே அவன் என்கிட்ட ரொம்ப ஓவரா சீன் போட்டான். அதான் அவன் மேல பொய் சொல்லி, அவனை இந்த சீனில் இருந்தே தூக்கி உள்ளே தள்ளினேன்.”

“அடப்பாவி!”

“ம்... இப்போ உன் மகளையும் சரி. உன் குடும்பத்தையும் சரி. என்ன வேனும்னாலும் பன்னுவேன். அன்னைக்கு உன்னுடைய மகள்கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணது நான் தான். கதிர் அதை தடுக்க வந்தான். அப்பேர்ப்பட்டவன் மேல தான் நான் திருட்டு பழி போட்டேன். நீ வீட்டை விட்டு வெளில அனுப்புவ பார்த்தா, ஒரு படி மேலே போய் ஜெயில்ல தள்ளிட்ட. ம்... அவன் இன்ன வரைக்கும் ஆள் எங்கன்னே தெரியல. அந்த கிழவி கீதுவும் இல்ல. சோ, எல்லா சொத்தும் எனக்கு தான்” என்றான் சிரித்தபடி.

“அடப்பாவி. என் தம்பி மகனுக்கு, தாயாக இருக்க வேண்டிய நானே, அவனை உள்ள தள்ளிட்டேனே. அப்ப இதுக்கு எல்லாம் காரணம் நீ தானா? அந்த பிள்ளையின் சாபம் தான் இன்னைக்கு உன்னை நம்பி நான் இப்படி இருக்கேன். உன்ன நான் சும்மா விடமாட்டேன்.” என்று கத்தினார் இந்து.

“ஏய்! சும்மா கத்தாதே. உன்னால ஒண்ணுமே பண்ண முடியாது. இந்தா போன். இப்போ ஒழுங்கு மரியாதையா உன் புருஷன கூப்பிட்டு, நாளைக்கே அகிலனுக்கும், முல்லைக்கும் கல்யாண ஏற்பாடு பண்ண சொல்லு” என்றார் சேது.

“என் உயிரே போனாலும், நான் இதுக்கு சம்மதிக்க மாட்டேன்.”

“உன் உயிர் போகாது அத்தை. ஆனா, உன் குடும்பத்துல இருக்குற எல்லாரின் உயிரும் போய்விடும். பரவாயில்லையா?” என்றான் நக்கலாக.

“என்னடா சொல்ற?”

“அப்பா இந்த வீடியோவை குடு.” என்று சொல்ல அந்த வீடியோவில் இந்துவின் வீட்டைச் சுற்றி பாம் வைக்கப்பட்டிருந்தது.

“டேய் என்னடா என்ன காரியம் பண்ண?”

“ஆமா அத்த. எண்ணி நாளைக்குள் இந்த கல்யாணம் நடக்கலைன்னா, அடுத்த நிமிடம் இந்துவோட பில்டிங்கே இடிந்து தரைமட்டம் ஆயிடும். பரவாயில்லையா.”

“டேய்! அந்த மாதிரி எல்லாம் பண்ணிடாத என் மகள் வாழ வேண்டியவள்.”

“ஆமா ஆமா. வாழ வேண்டியவ தான். அவ எட்டு வயதிலேயே உன் தம்பி மகன் கதிர் மேல, பாசம் வைக்க ஆரம்பிச்சா. ஆனால், அவளுடைய தலை எழுத்து, என் மகன்கிட்ட அவ மாட்டிக்கிட்டு சாகணும்னு இருந்தால், அதை யாராலும் மாற்ற முடியும்” என்றார் சேது.

“இல்ல எது நடந்தாலும் பரவாயில்லை. என் மகளுக்கு நீ என்னைக்குமே ஜோடியாக முடியாது.”

“ஏய்! இப்போ ஒழுங்கு மரியாதையா நீ போன் பண்ணி, நாளைக்கு இந்த கல்யாணம் நடக்கணும்னு சொல்லலனா, அந்த வீட்ல இருக்கிற பாமை வெடிக்க வைக்க சொல்லிடுவேன்.” என்று மிரட்டினான்.

“நீ என்ன சொன்னாலும் சரி. நான் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன்.”

“டேய் அகில் பேசாம நம்ம ஆளுங்ககிட்ட சொல்லி, முல்லையை இங்க தூக்கிட்டு வர சொல்லிடு. அவ எதிரில் அவங்க அம்மா கழுத்தில் கத்தியை வச்சா, அவளே உனக்கு கழுத்தை நீட்டப்போறா.”

“வாவ்! இது செம்மையா இருக்கே. இரு நான் அவனுங்களுக்கு போன் பண்றேன்” என்று சொன்ன அகிலன், தனது அடியாட்களிடம் முல்லையை அவனின் இடத்திற்கு கடத்தி வர சொல்லி கட்டளையிட்டான்.

அங்கே இந்துவின் வீட்டில் முல்லையின் அறையில், “ஏய் எங்கடி கிளம்புற” எனக் கேட்டாள் ஷாமிலி.

“வேற எங்க. இந்த திருட்டு பையலை தேடி தான்.”

“யாரு அகிலனையா?”

“ஏய் ச்சி... என் மாமனைச் சொன்னேன். அவர் என்னை பாக்க வந்து ரெண்டு நாள் ஆச்சு. ஆள் எங்க போய் கையை வச்சி மாட்டிக்கிட்டு இருக்குனு தெரியல. சரி எங்க அம்மாவை காணோம்? காலையில டிபன் சாப்பிடும் போது கூட ஆளை காணோமே. எங்கன்னு பார்த்தியா?” எனக் கேட்டாள்.

“எதோ பிசினஸ் விஷயமா நைட்டே அம்மா வெளியூர் போயிட்டாங்கனு அப்பா சொன்னாரு.”

“சரி அக்கா. எனக்கு உன்னோட பேன்ட் சர்ட் குடு. யூனிபார்ம் டைட்டா இருக்கு.”

“ஆமாடி. ஆள் கொஞ்சம் குண்டாகிட்ட.” என்றாள் கிண்டலாக.

“நான் குண்டா ஆகல. உண்டாகிட்டேன்.” என்று சிரித்தாள்.

“ஏய்! என்ன சொல்ற? எப்படி?” என்று கேட்டாள்.

“என்னக்கா நீ. லூசு மாதிரி கேக்குற?”

“அது இல்லடி. அம்மாக்கு தெரிந்தால்? அதை நினைச்சி கேட்டேன்.”

“அதனால் என்ன? நான் மூணு நாளைக்கு முன்னால தான், கதிர் மாமாவை பிரக்ணன்ஸி கிட் வாங்கி தர சொல்லி செக் பண்ணேன்.”

“சூப்பர்டி. மாமாக்கு தெரியுமா?”

“ம்... தெரியும். அவர் முகத்துல எவ்வளவு சந்தோஷம் தெரியுமா. என்னை அள்ளி எடுத்து எவ்வளவு முத்தம் தந்தார் தெரியுமா. அவுங்களோட அம்மா லட்சுமியே திரும்ப பிறக்க போறாங்கன்னு சொல்லி கொண்டாடித் தீர்த்துட்டார்.” என்று சந்தோசமாக சொன்னாள்.

“அப்போ நான் தான் வேஸ்ட் போல.” என்றாள் ஷாமிலி சோகமாக.

“ஏன்கா. நீயும் மணிமாறன் மாமாவை கல்யாணம் பண்ணிக்கோ.”

“யாரு அவனையா? அவன் ஒரு வீணா போனவன். உம்மா இவனுக்கு குல்ஃபீ. அதுவும் மும்பை குல்ஃபீ குடுத்துட்டு, அது அவங்க மாமாக்கூட அம்மா வீட்டுக்கு போயிடுது. பட், இந்த வீனா போன மாறன் உம்மா. உம்மான்னு சும்மா உயிரை எடுக்கிறான்.”

“அக்கா யாரோ கதவை தட்டுறாங்க. என்ன இது இவ்வளவு வேகமா தட்டுறாங்க? அநேகமா அந்த அகிலனா தான் இருப்பான். என்னை இப்போ அவன் இங்க பார்த்தான்னு வை. வம்பு பண்ணுவான். அதனால நான் அந்த பாத்ரூம்ல போய் ஒளிஞ்சிகிறேன்.” என்று சொன்ன முல்லை, கதவை தட்டியது அகிலன் என்று நினைத்துக் கொண்டு குளியல் அறையில் சென்று ஒளிந்துகொண்டாள்.

அகிலனின் அடியாட்கள் ஷாமிலியை முல்லை என்று நினைத்து, அவளின் முகத்தில் மயக்க மருந்தை அடித்து, அவளையும், சந்திரனையும் அகிலனின் இடத்திற்கு தூக்கி சென்றனர்.

முல்லைக்குப் பதில் ஷாமிலி இருப்பதைக் கண்ட அகிலன், “டேய் அறிவு கெட்டவனுங்களா, யார தூக்கிட்டு வர சொன்னா, யாரை தூக்கிட்டு வந்து இருக்கிங்க” என்றான்.

“பாஸ் அங்க இந்த பொண்ணு தான் இருந்துச்சு. அதான் தூக்கிட்டோம்.”

“டேய்! இது நான் கட்டிக்கப்போற பொண்ணு இல்லடா. அவளோட அக்கா” என்றான் கோவமாக.

“டேய்! கெட்டதிலும் ஒரு நல்லது இருக்குடா. இவ கழுத்துலயும் தாலியை கட்டு” என்றார் சேது.

“தாலி கட்டுவதற்கு ரெண்டு கை தேவை. பட் உனக்கு ஒரு கை தான் இருக்கு. ஆனா இப்போ அந்த ஒரு கைக்கும், விலங்கு மாட்ட நான் வந்திருக்கிறேன்” என்று சொல்ல, அந்த குரலுக்கு சொந்தக்காரன் யார் என்ற விடையுடன், விரைவில் சந்திக்கிறேன் உங்கள் நான்

🙏சக்தி 🔱
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top