Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 141
- Thread Author
- #1
❤காதல் ஓவியம்❤
❤ஓவியம்..️
“பரவாயில்லையே. இருட்டா இருந்தாலும் என் மாப்பிள்ளை கில்லி மாதிரி மோதிரத்த கையில போட்டுட்டாரு” என்று இந்து சொல்ல,
முல்லை அகிலனைப் பார்த்து சிரித்தப்படி, “உங்க மாப்பிள்ளை... அதாவது என் மாமன் கில்லி தான் அம்மா.” என்று சந்தோஷமாக சொன்னாள்.
அவளின் இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்று அகிலுக்கு புரியாமல் இருக்க பொறுமையாக, “முல்லை. உன் கையில நான் மோதிரத்தை போடல” என்றான்.
“டேய்! டொனால்ட் மண்டையா. நீ அதுக்கான ஆள் இல்லை என்று எனக்கு எப்போவோ தெரியும். போடா. டுமாங்கோலி.” என்று முல்லை திமிராக சொல்லவும், மோதிரத்தை போட்டது யார் என்ற கேள்வி அகிலனுக்கு வந்தது.
அன்றைய இரவு முல்லையின் அறையில், “என்னடி ரொம்ப ஹாப்பியா இருக்க” எனக் கேட்டாள் ஷாமிலி.
“ஆமா ஹாப்பி தான். என் மாமன் சரியான நேரத்தில், என் கையில எப்படி மோதிரத்தைப் போட்டாருன்னு பாத்தியா.”
“ஆமாடி. நான் கூட கரண்ட் நின்னதும் பயந்துட்டேன். ஆனா, பரவாயில்ல கரெக்டா வந்து கதிர் மாமா ஆஜராகி, மோதிரத்தைப் போட்டுருச்சு. ஆனா, அதுக்கப்புறம் எங்க போச்சு” என்றாள் அவன் அங்கு இல்லாததை மனதில் வைத்து.
“வேற எங்கே போயிருக்கும். இவ்வளவு நேரமும் நம்ம பேசுறத இந்த கட்டிலுக்கு கீழே படுத்துகிட்டு கேட்டுக் கொண்டு தான் இருக்கும்” என்று சொன்னப்படி முல்லையும், ஷாமலியும் கீழே குனிய, கதிர் கட்டிலின் கீழ் கண்களை மூடிக்கொண்டு உறங்குவது போல நடித்துக் கொண்டிருந்தான்.
அதைப் பார்த்த ஷாமிலி, “அது சரி. நல்ல புருஷன் நல்ல பொண்டாட்டி. ஏய்! நீ கதவை சாத்திக்கோ நான் போறேன்” என்றாள் ஷாமிலி.
“அக்கா எங்க போற?”
“எப்படி இருந்தாலும், நீங்க ரெண்டு பேரும் இப்போ கொத்து பரோட்டா போட போறீங்க. நான் எதுக்கு உங்களுக்கு இடைஞ்சலாக இருந்துகிட்டு. நான் போயி உம்மாவை நினைச்சு சும்மா இருக்கிற என்னுடைய ஆளை பார்க்கிறேன்” என்று சொன்னபடி சென்றாள்.
தன் அறையின் கதவை தாழிட்ட முல்லை பொறுமையாக கட்டிலின் கீழ் போனவள், “மாமா மாமா” என்றழைத்தாள்.
“என்னடி?”
“நடிச்சது போதும். எழுந்திரி மாமா.”
“தூங்கும்போது எழுப்பாத.”
“நடிக்கிறன்னு தெரிந்தும் அதை மெய்ண்டைன் செய்யுற பார்த்தியா. நீ எப்படி அங்க சரியான நேரத்துக்கு வந்த? என்ன தான் நீ வந்திருவ தெரிஞ்சாலும், நேரம் ஆகவும் நான் பயந்துட்டேன். அந்த அகிலன் மட்டும் என் கையில மோதிரத்தை போட்டிருந்தான் வை.,,”
அவள் முடிக்கும் முன், “அவனுடைய இன்னொரு கையையும் வெட்டி இருப்பேன். நான் ஒருத்தன் இருக்கும் போது, உன் விரலை தொடக்கூடிய தைரியம் அந்த அகிலனுக்கு மட்டுமில்லை. இந்த அகிலத்தில் இருக்கும் எவருக்கும் வரக்கூடாது. புரியுதா.”
“ம்... புரியுது. ஆனா, எனக்கு முதுவெல்லாம் வலிக்குது.”
“ஏன்டி?”.
“கட்டிலுக்கு கீழே படுக்க முடியல மாமா.”
“ம்... அப்போ கட்டிலுக்கு மேலே படுக்கலாம்னு சொல்றல்ல.”
“ம்க்கும்... புரிஞ்சா சரி. சரி சரி மேலே ஏறு மாமா.”
“ஏய் என்னடி ஆச்சு உனக்கு? தப்புத் தப்பா பேசுற.”
“ச்சி. கட்டில் மேலே ஏறி படு மாமா.” என்றாள்.
“நான் கூட ஷாக் ஆகிட்டேன்” என்று நெஞ்சைப் பிடித்தான் கதிர்.
“ஆகுவ ஆகுவ. சரி மாமா நீ சாப்டியா?”
“இல்லடி கொள்ளை பசியில இருக்கேன். இனிமேல்தான் உன்னை சாப்பிட போறேன்.”
“நான் அந்த சாப்பாடு கேக்கல. நீ வயித்துக்கு சாப்பிட்டியானு கேட்டேன்.”
“இந்த பங்க்சன் டென்சன்ல சாப்பிடலை.”
“நான் போய் உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரட்டுமா?”
“ஒன்னும் தேவை இல்ல. நான் நாளைக்கு காலைல வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்குறேன்” என்றான்.
“ஏன் மாமா? இது உன்னோட வீடு இல்லையா?”
“அப்படி இல்ல. நமக்கு கிடைக்கிறதே கொஞ்ச நேரம். இந்த நேரத்தில் அன்னத்தில் கை வைக்கக்கூடாது. என்னுடைய அழகியின் கன்னத்தில்தான் கை வைக்க வேண்டும்.” ❤என்று சொன்னபடி கதிர் முல்லையை கட்டி அணைக்க, கணவனும் மனைவியும் இல்லற வாழ்க்கையில் இன்பமாக அன்றைய இரவைக் கழித்தனர். இப்படியே பத்துப் பதினைந்து நாட்கள் கடந்தது.
“என்னடா மகனே? ஏன் இவ்வளவு சோகமா இருக்க?” என்று அகிலனிடம் கேட்டார் சேது.
“ஏய் கிழவா! அன்னைக்கு நான் முல்லை கையில மோதிரத்தை போடவே இல்ல. இங்கே வேற என்னமோ நம்மளை சுத்தி நடக்குது.”
“என்னடா சொல்ற?” என்று பதறினார் சேது.
“ஆமா. நான் அவ கையில மோதிரம் போடவே இல்ல.”
“ஆனா, முல்லை கையில மோதிரம் இருக்கே. அப்போ யாரு அந்த மோதிரத்தை போட்டு இருப்பாங்க?”
“அதான் தெரியல.”
“என்னடா இது? புதுசு புதுசா கதை நடக்குது.”
“ஏய் கிழவா! நீ முல்லை முகத்துல சந்தோஷத்தை பாத்தியா. நான் மோதிரம் போட்டால் அவ இப்படியா சந்தோஷப்படுவாளா? எதோ நம்மை மீறி நடக்குது” என்றான் யோசனையாக.
“ஆமாடா. எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு. சரி யாரோ கதவை தட்டறாங்க யாருன்னு பாரு” என்றார்.
வெளியே இந்து நின்றிருப்பதைப் பார்த்த அகிலன், “அத்தை வாங்க. என்ன இந்த நேரத்துல?” என்றான்.
“இரு முதல்ல கதவ சாத்து. ஏய் அகில்! இங்கே என்ன நடக்குது?” என்றார்.
“ஏன் அத்தை? எதுக்கு இவ்வளவு கோவப்படுறீங்க?”
“இங்க பாரு. எனக்கு டிபார்ட்மெண்டில் இருந்து கம்ப்ளைன்ட் வந்து இருக்கு.”
“என்ன அத்தை? என்ன கம்ப்ளைன்ட்?” என்றான் புரியாது.
“நம்ம சட்டத்துக்கு விரோதமா சொத்து சேர்த்து வைத்திருக்கிறோமாம். அதுவுமில்லாமல் நான் வேற ஏதேதோ பிசினஸ் பண்ணி தான், இந்த சொத்தை எல்லாம் சேர்த்து இருக்கேனாம்.”
“ஐயோ யாரு நம்ம மேல கம்ப்ளைன்ட் தந்து இருப்பாங்க?” என்றான் ஒன்றும் அறியாதவனாய்.
“இந்த சொத்துல பாதி, கீதா, மற்றும் லட்சுமி, பாண்டியனுடைய மகன் கதிரின் பங்கு. நான் என்னைக்குமே அடுத்தவங்க சொத்துக்கு ஆசைப்பட மாட்டேன். அவங்க என்னைக்கு வந்து கேட்டாலும், இந்தச் சொத்தை நான் திருப்பிக் கொடுத்துவிடுவேன். எனக்கு என்னமோ இந்த பிசினஸ்சை ஆரம்பிக்க வேணாம்னு தோணுது” என்றார்.
“என்ன நீங்க? இதுல நம்ப கோடி கணக்குல இன்வெஸ்ட் பண்ணி இருக்கோம் அத்தை.
“ஆமா இந்து. அதெல்லாம் ஒன்னும் இல்ல. இந்த பிசினஸ் நல்ல பிசினஸ் தான். என் மகன் அகில் எல்லாத்தையும் பார்த்துப்பான்.” என்றார் சேது.
“இல்ல. எனக்கு என்னமோ இதெல்லாம் சரி வரல. நாளைக்கே டாக்குமென்ட் ரெடி பண்ணு. நான் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துடுறேன். பத்தாததுக்கு இந்த நகையும், பணமும் வேற காணாம போச்சு. இது எல்லாத்தையும் சேர்த்து கனக்ட் பண்ணி பார்க்கும்பொழுது, வேற ஏதோ எங்கேயோ இடிக்குது. கூடிய சீக்கிரம் நான் அத கண்டுபிடிக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, இந்துவிற்கு தன் தோழியிடம் இருந்து அழைப்பு வந்தது.
“ஹலோ. சொல்லுடி. அப்படியா? உண்மையாவா? இல்ல என்னால நம்ப முடியலையே. சரி எங்க வீடியோவை அனுப்பு.” என்று இந்து தன் தோழியிடம் பேச, அவர் அனுப்பிய வீடியோவில், அகிலனின் தந்தை சேது அந்த ரவுடிகளிடம், ‘இந்திரா வரும் பொழுது பணத்தையும், நகையையும் என் மகனின் கழுத்தில் கத்தியை வைத்து வழிப்பறிக் கொள்ளை அடிக்க வேண்டும்’ என்று பேசிக்கொண்டிருந்த வீடியோவைப் பார்த்து இந்துவின் கோவம் உச்சம் தொட்டது.
“டேய். உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்றீங்களா?” என்று கத்தினார்.
“என்ன சொல்றீங்க அத்தை?”
“யாருக்கு யாரு அத்தை. அப்போ என் நகை, பணம் எல்லாம் திருடினது நீங்கதானா?”
“இல்ல நான் இல்ல அத்தை.” என்றான் வேகமாக.
“ஏய் இதோ எனகிட்ட இருக்கு.”
“ஐயோ இந்துமா. பணத்து மேல ஆசைப்பட்டு இந்த விஷயத்தை செய்தது நான் தான். என் மகனுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.” என்றார் சேது.
“நீ எல்லாம் ஒரு அண்ணனா? ஒழுங்கு மரியாதையா என்னுடைய பணம், நகையெல்லாம் குடுத்துட்டு, இந்த ஊரிலே இல்லாம ஓடிப் போயிடு. இல்ல உள்ள தள்ளி கம்பி எண்ண வைத்து விடுவேன்” நேற்று கோவத்தில் கொந்தளித்தார் இந்து.
அகிலன் சேதுவைப் பார்த்து கண்ணடித்து, “நீயெல்லாம் ஒரு மனுசனா? அத்தை எவ்வளவு நல்லவங்க. அவங்களுக்கு போய் துரோகம் பண்ண உனக்கு எப்படி மனசு வந்துச்சு. அத்தை, எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் அப்பாவுடைய இந்த கீழ்த்தரமான புத்திக்கு, நான் என்னைக்கும் துணை போக மாட்டேன். நான் முல்லையை எவ்வளவு காதலிக்கிறேன் தெரியுமா? நான் அவளுக்காகத்தான் உயிர் வாழறேன்” என்று வசனம் பேசினான்.
“இல்ல இல்ல. உன் அப்பா மாதிரி தான் நீயும் இருப்ப. அதனால ஒழுங்கு மரியாதையா அப்பா, புள்ள ரெண்டு பேரும் இந்த வீட்டை விட்டு இடத்தை காலி பண்ணுங்க” என்றார்.
“அத்தை என்னை நம்புங்க. நான் முல்லையை உயிருக்கு உயிரா காதலிக்கிறேன். என்னை நம்புங்கள்” என்று சொன்னபடி அகிலன் இந்துவின் கால்லில் விழுந்தவன், இந்துவின் காலை வாரி விட, இந்து பின்பக்கமாக சாய்ந்து கீழே விழ, தலையில் அடிபட்டு அதே இடத்தில் மயங்கினார்.
“டேய்! என்ன காரியம் பண்ணிருக்க?” என்று மகனை திட்ட,
“பின்ன என்ன கிழவா. இந்த பொம்பளைக்கு நம்மள பத்தி எல்லாமே தெரிஞ்சிருச்சு. இந்த பொம்பளையை நைட்டோட நைட்டா நம்மளுடைய இடத்துக்கு தூக்கணும்.” என்றான் அகிலன்.
“என்னடா சொல்ற?”
“ஆமா கிழவா. பிசினஸ் விஷயமா இந்து வெளியூர் போய் இருக்குது. அப்படின்னு சொல்லி இந்த கல்யாணத்தை நம்ப சீக்கிரம் முடிக்கணும்.”
“டேய்! இந்து இல்லாம கல்யாணம் எப்படிடா முடியும்?”
“அது எல்லாம் முடியும். நீ சும்மா இரு. நம்ம இடத்துக்கு இந்துவை தூக்கிட்டு போய், இது கழுத்துல கத்திய வச்சு, நாம இந்த கல்யாணத்தை நடத்த சொல்லி பேச சொல்லுவோம்” என்று சொன்ன அகிலன், இரவோடு இரவாக இந்துவை அவனது இடத்திற்கு கடத்தினான்.