Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 143
- Thread Author
- #1
14.2
“மாமா இன்னைக்கு நைட்டு நான் இங்கேயே தங்கட்டா?”
“ஏய் என்னமா? எப்படி இங்க தங்க முடியும் சொல்லு? டாக்டர் வீட்டுக்கு போறேன்னு சொல்லி இருக்க. நீ நைட் இங்க தங்கினா என்ன ஏதுன்னு கேள்வி கேட்க மாட்டாங்களா?”
“என்ன மாமா நீ. ஒரு வாரமா என் கூட நைட்டு தங்கிட்டு, இப்ப உன்ன பிரிஞ்சு இருக்க எனக்கு...” என்றவள் பட்டென்று நிறுத்த,
“உனக்கு?” என்று கேலியாகக் கேட்டான் கதிர்.
“ஆமா எல்லாம் உனக்கு விவரமா சொல்லுவாங்க. போ மாமா” என்றாள் வெட்கத்தில்.
“ஏய் கொஞ்சம் பொறுமையா இரு. எல்லாமே நல்லபடியா முடியும். அதுக்கப்புறம் உன்னை என்கிட்ட இருந்து யாராலயும் பிரிக்க முடியாது. பிரிக்கவும் விடமாட்டேன்.” என்றான் உறுதியான குரலில்.
“ம்... பேச்சு எல்லாம் நல்லாத்தான் பேசுற. இதோ கல்யாணம் ஆகி எத்தனை நாள் ஆச்சு. எனக்கு நீ முட்டை பரோட்டாவை தவிர வேற என்ன மாமா வாங்கி கொடுத்து இருக்க?”
“வேற என்னடி வேணும் உனக்கு?”
“எனக்கு என்ன வேணும். எனக்கு நீ மட்டும் தான் வேணும்.”
வேறெதுவும் தேவை இல்லை நீ மட்டும் போதும்
கண்ணில் வைத்து காத்திருப்பேன் என்னவானாலும்
உன் எதிரில் நான் இருக்கும் ஒவ்வொரு நாளும்
உச்சி முதல் பாதம்வரை வீசுது வாசம்
தினமும் ஆயிரம் முறை பார்த்து முடித்தாலும்
இன்னும் பார்த்திட சொல்லி பாழும் மனம் ஏங்கும்
என்று பாடினாள் முல்லை.
“உன் ஏக்கம் எனக்குப் புரியாம இல்லை. இப்ப நான் உன் கூட தானே இருக்கேன்.”
“ம்... எதாவது கேட்டால் இந்த மாதிரி பேசியே என் வாயை அடச்சுடு.” என்றாள் அவள்.
“இப்படி பேசி தான் உன் வாயை அடைக்கனும்ன்னு இல்லடி. உன் வாயை...” என்ற கதிர் முல்லையை கட்டி அணைத்து அவள் இதழ்களில் முத்தம் இட்டான்.
அந்த நிமிட மென்மையில் அவள் தொலைந்து போக, “இந்த ஒன்னு போதும் மாமா. இன்னைக்கு நைட்டு முழுக்க தாங்கும்.” என்று கண்சிமிட்டினாள்.
“வர வர நீ ரொம்ப கெட்டுப் போயிட்ட.”
“ஆமா. யாரு இல்லன்னு சொன்னது. அதுவும் என் புருஷனிடம்” என்று சிரித்து, “ப்பா... என் புருஷன்கிட்ட ஒரு முத்தம் வாங்குறதுக்கு எவ்வளவு தூரம் வரவேண்டி இருக்கு.”
“ஒரே ஒரு முத்தம் போதுமா? நான் கூட ஒரு கொத்து பரோட்டா போடலாம்னு நினைச்சேன்.”
“ஆமா ஆமா. நீ போட்டு அப்படியே கிழிப்ப. சரி நான் கிளம்புறேன். கையை விடு மாமா. ஐயோ! வெளிய பழனி மாமா இருக்காரு” என்றாள் சத்தமாக.
“அவரு இந்நேரம், கீதுவை கரெக்ட் பண்ணிட்டு இருப்பாரு.” என்று கட்டி அணைத்தான்.
“விடு மாமா. எனக்கு ஒரு மாதிரி இருக்கு. நான் போறேன் போ.
“ஏய் பொய் சொல்லாதடி. உன் உதடு தான் போறேன் போறேன்னு சொல்லுது. உன் மனசு முழுக்க என்கிட்ட தான் இருக்கு.”
“அது எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்தே, உன்கிட்ட தான் இருக்கு. சரி நான் கிளம்புறேன். நீ நைட்டு வீட்டுக்கு வா.”
“என்னது? நைட் வீட்டுக்கு வரணுமா.? என்னால இப்போ வர முடியாது. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு” என்றான் வேகமாக.
“என்னை விட உனக்கு என்ன இப்படி முக்கியமான வேலை? திருட்டுப் பையன் தானே நீ. மறுபடியும் திருட போறியா?”
“ஏய்! நான் தான் இப்போ எல்லாம் திருடுவது இல்லன்னு சொல்லிட்டேன்னே. மறுபடியும் இப்படியே சொல்லிக்கிட்டு இருந்தன்னு வை, நான் போய் மறுபடியும் திருட ஆரம்பிப்பேன்.”
“அய்யோ! வேணாம் மாமா. நான் சும்மா சொன்னேன். அதெல்லாம் வேண்டாம். நீ இங்கேயே இரு. சரி நான் கிளம்பவா?” என்றாள் முல்லை.
“அப்போ கொத்து பரோட்டா கொடுக்க மாட்டியா?”
“மாட்டேன். உனக்கு வேணும்னா நீயே வீட்டுக்கு வந்து சாப்பிடு. நான் கிளம்புறேன்.” என்று சொன்ன முல்லை, கதிரின் கன்னத்தில் முத்தமிட்டவள், அவளின் வீட்டிற்கு கிளம்பினாள்.
அன்றைய இரவு நேரம் கதிரின் வீட்டில், “டேய் மச்சான் எங்கடா கிளம்பற. முல்லை வீட்டுக்கா?” எனக் கேட்டான் மணிமாறன்.
“இல்லடா. நானும் சித்தியும் ஒரு முக்கியமான வேலையா வெளிய போய்ட்டு வரோம். நீ தூங்கு.”
“இரண்டுபேரும் எங்கடா போறீங்க?”
“அதெல்லாம் உனக்கு இப்போ தெரிய வேண்டாம். சித்தி வா போகலாம்” என்று சொன்னபடி கதிரும், கீதாவும் எங்கேயோ வெளியே சென்று வர, மறுநாள் காலை அகிலனும், இந்துவும் தொழில் விஷயமாக வங்கிக்குச் சென்று வந்தவர்களை, வழியில் மறைத்து ஒரு கும்பல் அவர்கள் கையில் இருக்கும் பணத்தைக் கொள்ளையடிக்கப் பார்த்தது.
“டேய்! என் அத்தையை விடுங்கடா. நான் யாருன்னு தெரியுமா? என் அத்தை எவ்வளவு பெரிய போலீஸ் அதிகாரி தெரியுமா?” என்று சலம்பினான் அகிலன்.
“ஏய்! உன் உருட்டல் மிரட்டல் எல்லாம் என்கிட்ட வேணாம். சூட்கேஸ்ல இருக்கிற நகையை பணத்தை எல்லாம் கொடு” என்றான் ஒருவன்.
“இல்லை என்னால கொடுக்க முடியாது.”
“இப்ப நீ தரல. உன் கழுத்தை கழுத்தைத் திருப்பிடுவேன்.” என்று மிரட்ட,
“டேய்! என் மாப்பிள்ளையை விடுங்கடா. இந்தப் பணம் தானே வேணும் எடுத்துக்கோங்க” என்று சொல்லி தன் கையில் இருந்த, ஒரு கோடி ரூபாய் பணத்தையும், நகையையும், கொள்ளையர்களிடம் கொடுத்து அகிலனைக் காப்பாற்ற, பணத்தைக் கொல்லை அடித்தவர்கள் அந்த இடத்தை விட்டு மின்னல் போல மறைந்தனர்.
“அத்தை ரொம்ப நன்றி அத்தை. எப்படியோ என்னை நீங்க காப்பாத்திட்டிங்க.” என்றான் அவன்.
“மாப்பிள்ளை என்ன நீங்க. உங்க உயிர் தான் மாப்பிள்ளை எனக்கு முக்கியம். பணம் நகை தானே, நான் எப்படியாவது இந்த கேடிகளை கண்டு பிடிச்சுடுவேன். அவங்களுக்கு நான் யாருன்னு தெரியல.” என்று இந்து கோபமாக காரை எடுத்தார்.
அன்றைய இரவு இந்துவின் வீட்டில் அகிலனின் அறையில், “அப்பா நான் இன்னைக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? அந்த பணத்தை நீ ஒழுங்கா வைக்க வேண்டிய இடத்தில் வச்சிட்டியா. மறந்து கிறந்து தொலைச்சிடாத” என்றான் அகிலன்.
பட்டென அவன் கன்னத்தில் அடித்த சேது, “என்னடா விளையாடுரியா. நீயும் பணத்தை எடுத்துட்டு வெளியே வந்துட்டோம்னு, எனக்கு போன் பண்ண. சரி நீயும், அந்த இந்துவும் பேங்க்ல இருந்து பணத்தை எடுத்துக்கிட்டு, நான் சொன்ன வழியில தான் நீ வருவன்னு, நானும் நம்ம ஆளுங்க கூட வெயிட் பண்றேன். நீங்க கார்ல வரவே இல்ல. இப்ப என்னடான்னா பணத்தை பேங்குல போட்டுட்டியானு கேட்கிற? என்ன நக்கலா?” என்றார்.
“என்னப்பா சொல்ற? நம்ம ஏற்பாடு பண்ண மாதிரி, அப்ப நம்ம ஆளுங்க என் கழுத்தில் கத்தியை வைத்து பணத்தைக் கொள்ளை அடிக்கலையா?” என்று அதிர்ந்து கேட்டான்.
“டேய் அகிலா. என்னடா சொல்ற? அப்ப பணம் போயிடுச்சா. ஐயோ எனக்கு நெஞ்சு வலிக்குது. மொத்தம் ரெண்டு கோடிடா.” என்றவருக்கு மனம் ஆறவில்லை.
“ஐயையோ. அப்பா அந்த பணத்தை அப்ப நம்ப ஆளுங்க வாங்கலையா? அப்போ அந்த பணம் எங்கே?” என்றான் அகிலன்.
இந்துவிடம் இருந்து தன் அடியாட்களை வைத்து, அந்தப் பணத்தையும் நகையையும் கொள்ளை அடிக்க திட்டம் போட்டிருக்க, அந்தப் பணத்தை நம் திருட்டு பையன், ஹீரோ கதிரும், அவனின் சித்தியும் இவர்களின் ஆட்களை வைத்து கொள்ளை அடித்துவிட்டனர்.
“காசு, பணம், துட்டு, மணி... மணி. காசு, பணம், துட்டு, மணி, மணி.” என்று சந்தோசமாக வீட்டில் குதித்துக் கொண்டிருக்க,
“என்ன கிழவி, என்னை கூப்பிட்டியா?” என்று வந்த மணிமாறன், அங்கு இருந்த பணத்தைப் பார்த்து, ‘ஏய் ஏதுடா இவ்வளவு பணம்?” என்று கதிரிடம் கேட்டான்.
“அதுவா மச்சான், இது தான் நமக்கு கிடைத்த முதல் வெற்றி.” என்று அவனும் சந்தோஷத்தில் குதித்தான்.
“புரியலையே?”
“அகிலன், இந்து பேங்க்ல இருந்து ட்ராப் பண்ணிட்டு வந்த, ஒரு கோடி ரூபாவையும், நகையையும், அவனோட ஆளுங்கள வெச்சு அடிக்கணும்ன்னு நெனச்சேன். நானும் என் சித்தியும் அவனுக்கு முன்னாடி நம்ப ஆளுங்களை அனுப்பி அடிச்சிட்டோம். அதனாலதான் இந்த செலப்ரேசன். லெட்ஸ் ஜாயின்ட் வித் அஸ் டியூட்.”
“அடப்பாவிகளா! என் கூட தான் இருக்கிங்க. எப்படா கட்டம் கட்டுனிங்க?”
“கட்டம் கட்ட நான் ஒன்னும் சண்டியர் இல்லடா. நான் திருடன். கட்டிடத்துக்கு உள்ள பூந்து அஸ்திவாரத்தில் கை வைப்பவன்.” என்று கர்வமாகச் சொன்னான்.
“அப்போ இனிமே நம்ம லைஃப்ல செட்டில்டா மச்சான்.”
“இல்லவே இல்லைடா. இந்த பணத்தை வைத்து தான், என் வேலையே ஆரம்பம் ஆகப்போகுது.” என்றான் கதிர்.
“என்னடா சொல்ற?” என்றான் மணிமாறன்.
“டேய் மவனே! இவன் சின்ன பையன்டா. நம்ம பிளானை இவன்கிட்ட சொல்லாதே. முதல்ல இந்த பணத்தை எங்க பதுக்கி வைக்கிறதுன்னு பாரு” என்றார் கீதா.
“அதெல்லாம் நான் பிளான் பண்ணிட்டேன் கிழவி.” என்று சொன்னபடி கதிர் வெளியே சென்றவன், அரை மணி நேரம் கழித்து மீண்டும் வீட்டிற்கு வர, மணிமாறன் தன்னைச் சுற்றி இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தான்.