• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
143
🔱யின்
♥️காதல் ஓவியம்♥️
♥️ஓவியம் 1️⃣4️⃣

14.1

❤ கதிரும் முல்லையும் சந்தோஷமாக இருக்கும் தருணத்தில் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்க, முல்லை போய் பொறுமையாக கதவை திறந்தாள்.

“கீது அத்தை. எதுக்கு நீங்க இப்போ வெளியே வந்திங்க? அகிலோ, அம்மாவோ உங்களை பாத்தா என்ன ஆகிறது?” என்று பதறினாள்.

“உன் அம்மாவும், அப்பாவும் ஜிலேபி சாப்பிடுறாங்க. இப்போதைக்கு வரமாட்டாங்க.” என்றார் ஓவியகீத்து.

“என்ன ஜிலேபி?” என புரியாது கேட்டாள் முல்லை.

“ஆங்... இப்போ அது ரொம்ப முக்கியமா. இங்க பாரு என்னால இனி ஒரு நிமிஷம் கூட இங்கே இருக்க முடியாது. அவங்க கண்ணில் பட்டால் தேவையில்லாத பிரச்சனை வரும். நான் வீட்டுக்கு கிளம்பறேன். அதைச் சொல்லத்தான் வந்தேன்.” என்றார்.

“சித்தி.” என்ற கதிரின் குரலில்,

“மவனே குரல் மட்டும் கேக்குது. எங்கடா இருக்க?”

“கட்டிலுக்குக் கீழே பாருங்க சித்தி” என்றான் கதிர்.

“அது சரி. ஒட்டடை தட்டினது போதும். வா கிளம்பலாம்.”

“ஏய் கிழவி! நீ என்ன பைத்தியமா? நீ சித்தப்பா ரூம்ல தானே இருக்க. அப்புறம் என்ன பிரச்சனை வரப்போகுது.

“அதுதான் பிரச்சினையே. இங்க பாரு நீ நினைத்த காரியம் எல்லாம் நடக்கப்போகுது” என்றார் கீதா.

“என்ன காரியம்? என்று முல்லை கேட்க,

“அது. அது ஒன்னும் இல்லம்மா. கதிரை உன் அம்மா இந்துக்கு இப்ப அடையாளம் தெரியாது. ஆனா, என்னை நல்லா தெரியும். எத்தனை நாள் தான் நாங்க இப்படி ரூமுல் மறைந்து இருப்போம். அதான் வீட்டுக்குப் போகலாம்னு சொல்றேன்.”

“என்ன அத்தை இப்படிச் சொல்றீங்க?”

“ஆமாம்மா. இன்னும் ஒரு 2 மணி நேரத்திலே எல்லாரும் நிம்மதியா தூங்குவாங்க. அப்ப பார்த்து நாங்க வெளியே போய்டுறோம்.”

“ஏன் அத்தை? கதிர் மாமா இங்கேயே வேலைக்கு சேர போறாருன்னு சொன்னிங்க. இப்ப இப்படிப் பேசுறீங்க” எனக் கேட்டாள்.

“அதெல்லாம் சரிவராது. மாறன் தான் இங்கே இருக்கான் இல்ல. அவன் பார்த்துப்பான். அப்புறம் கேமராவும் பக்காவா பிட் பண்ணியாச்சு இல்ல. அது போதும்.”

“கேமராவா? என்ன கேமரா மாமா?” கதிரிடம் சந்தேகம் கேட்டாள்.

“அதெல்லாம் உனக்கு இப்போ தெரிய வேண்டாம் முல்லை. நீ கொஞ்சம் அமைதியா இரு.”

“ம்... எதோ ஒரு பெரிய பிளான் போட்டு தான் உள்ள வந்திருக்கன்னு நினைக்கிறேன்.”

“ஆமா ஆமா. நான் பிளான் போட்டு இந்த சொத்தை அடிக்க போறேன்.” என்று கிண்டலாகச் சொன்னான்.

“பணத்துக்கு ஆசைப்படுற ஆளு இல்லையே நீ. ம்... ஆனா வேற ஏதோ ஒரு பிளான் இருக்கு.” என்று உண்மை முழுதாக தெரியாவிட்டாலும் தன் சந்தேகத்தை முன்வைத்து விட்டாள்.

சரி சரி என்னை யாராவது பார்த்தால் பிரச்சனையாயிடும். நான் கிளம்பவா?” என்றான்.

“என்ன மாமா இது. ஒரு வாரம் எப்படி போச்சுன்னே தெரியல. வர வெள்ளி வேற நிச்சயதார்த்தம் சொல்லி அதற்கான ஏற்பாடு எல்லாம் செய்துட்டு இருக்காங்க. எனக்கு பயமா இருக்கு மாமா.”

“ஏய்! நீ என்னோட பொண்டாட்டி உன் கையிலே ஒருத்தன் மோதிரம் போடும் அளவிற்கு எல்லாம் நான் விட்டு வைக்கமாட்டேன். வெள்ளிக்கிழமை நிச்சயம் நிச்சயமா நடக்கும். ஆனா, அது என் கூட தான் நடக்கும்.” என்று சொன்னபடி கீதாவை அழைத்துக்கொண்டு கதிர் அவன் வீட்டிற்கு சென்றான்.

வீட்டில் வந்து இருக்கையில் அமர்ந்து, “என்ன கிழவி? நான் சொன்ன மாதிரி, எல்லாம் ரெக்கார்ட் ஆகி இருக்கா?” எனக் கேட்டான் கதிர்.

“இருக்குடா மவனே. அவனுங்க வாய்ஸ் முதற்கொண்டு எல்லாமே இருக்கு. இத கேளு. அப்படியே இந்தா அவன் லேப்டாப்பில் இருக்கும் பைல் காப்பி இந்த பென் டிரைவில் இருக்கு.

“ம்... குடு.” என்று போட்டுப் பார்க்க, “அடப்பாவிகளா. அப்போ நம்ம நினைச்சது சரியா போச்சு. இவன் செய்யும் எல்லா பிசினஸ்க்கும் முல்லையோட அம்மா இந்துவின் பெயரை தான் கொடுத்து வச்சிருக்கான். பக்கா ப்ளான்.” என்றான் கதிரோவியன்.

“ம்... அதனால தான் நம்மகிட்ட. நம்ம ஆளுங்க இந்த இந்துவை தூக்கிட்டு வந்து பார்த்துக்கச் சொல்லி இருக்காங்க. ம்... சூப்பர்டா. நம்ப இந்த இந்துவை சும்மா வச்சு செய்யணும்.” என்றார் கீதா.

“இல்ல இல்ல கிழவி. ஆயிரம் தான் இருந்தாலும் அவங்க என் மாமியார். அவங்களை துன்புறுத்தக்கூடாது.”

“என்னடா பொண்டாட்டி பாசம் தடுக்குதா.?” என்றார் கேலியாக.

“அப்படியெல்லாம் இல்ல. உண்மையாவே. அந்த இந்து கொஞ்சம் நல்லவங்க தான். ஆனால் திமிரு அதிகம். அந்தத் திமிர முதல் அடக்கணும். அதை அடக்கினா எல்லாம் சரியாகிடும்.

“எப்படி அடக்குறது மவனே?”

“அதுக்கு நான் ஒரு பிளான் வச்சிருக்கேன்.” என்று தன் திட்டத்தைச் சொன்னான் கதிர்.


மறுநாள் காலை கதிரின் வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டு கீதா, “கண்டிப்பா அந்த அப்பாஸ் தான்.” என்றார்.

“அப்பாஸா! யாரு?” என்று புரியாது கேட்டான்.

“அதான் உன் சித்தப்பன். இன்னைக்கு பாத்துக்கிட்டே இரு. அவனுக்கு இருக்கு. டேய் மாறா! அந்த சரக்கை குடு.” என்றார்.

“ஏய் கிழவி. ராவா சரக்கு அடிக்காத. உடம்புக்கு ஆகாது.” என்றான் மணிமாறன்.

“இல்லடா. இந்தச் சரக்க இப்ப நான் அடிக்கலன்னா, அந்த வெள்ளை உளுந்து மூட்டையை தூக்கி போட்டு மிதிப்பேன்.” என்று கடுப்புடன் சொன்னார்.

“ஏய் கிழவி! கொஞ்சம் வாயை மூடு. சித்தப்பாவோட தயவு நமக்குத் தேவை. நீ பாட்டுக்கு ஏதாவது பண்ணி வச்சிடாத” என்று கதிர் சொல்லச் சொல்ல, கீதா சரக்கை அடித்து விட்டு கதவை திறக்க, அவர் நினைத்தது போலி வெளியே புன்னகையுடன் நின்று இருந்தார் நம் ஹீரோ பழனி.🌹


“கீது குட்டி. என்னை பாக்கணும்னு இவ்வளவு ஆசையா. எப்பா என்ன இவ்வளவு வேகமா வந்து கதவு திறக்கிற?” என்றார் பழனி.

“யோவ் நான் ஒன்னும் உன்னை ஆசையா பார்க்கணும்னு கதவைத் திறக்கல. இந்த மூஞ்சி மேல நாலு கோடு போடணும்னு தான் கதவை திறக்கிறேன்.”

“கீதுமா. நீ இப்ப எல்லாம் என்னை ரொம்ப மரியாதை இல்லாம பேசுற.

“அவங்க எப்ப உங்களுக்கு மரியாதை குடுத்துருக்காங்க. இன்னிக்கு குடுக்க.” என்றான் மணிமாறன்.

“ம்... அதுவும் உண்மைதான்.” என்றார் வருத்தமாக.

“சரி அத விடுங்க. என் முல்லை எப்படி இருக்காள்?”

“மாமா” என்ற முல்லையோவியத்தின் குரலில் சந்தோசமாகத் திரும்பியவன், “ஏய் நீயும் வந்து இருக்கியா. வா வா இப்பதான் உன்ன பத்தி நெனசேன்.” என்றான்.

“பொய் சொல்லாத மாமா. நினைச்சிருந்தா எனக்கு போன் பண்ணி இருப்பியே.”

“சரி நீ என்னை வம்பு பண்ணாத. என்ன நீ காலையிலேயே வந்து இருக்க. உன்ன தான் ரெண்டு மாசத்துக்கு வேலைக்கு போக கூடாதுன்னு உங்க அம்மா சொன்னாங்களே. அப்புறம் எப்படி?”

“ஆமா மாமா. ஆனா, நான் டாக்டர்கிட்ட போகணும்னு பொய் சொல்லிட்டு, பழனி மாமா கூட இங்க வந்துட்டேன். அந்த அகில் வரேன்னு சொன்னான். நல்லவேளை அவனால் காரை ஓட்ட முடியாது என்று சொல்லி அவனை வீட்டிலேயே இருக்க சொல்லிட்டோம். அதுமட்டும் இல்லாமல் அவனுக்கும் கூட ஏதோ அம்மா கூட பிசினஸ் மீட்டிங் என்று சொல்லி நாளைக்கு பக்கத்து ஊருக்கு கிளம்ப போறாங்க.”

“அப்படி என்னதான் உங்க அம்மா பிஸ்னஸ் பன்றாங்க?” என்று கேட்டார் கீதா.

தெரியல அத்தை. அம்மாக்கு இதுல எல்லாம் இஷ்டமே இல்லை. இருந்தாலும் இவன் தான் சும்மா இல்லாமல், எல்லாத்துலயும் அம்மாவை கொத்துவிட்டுட்டு இருக்கிறான்?.

“அவனை நம்பி உங்க அம்மா நடுரோட்டில் தான் நிக்கப் போறாங்க பாரு.”

“அவங்க எங்க வேணும்னாலும் நிக்கட்டும். மாமா நீ வா எனக்கு பசிக்குது. எனக்கு கொத்து பரோட்டா வாங்கி கொடு” என்றாள்.

|ஏய் என்னடி? காலைல அதெல்லாம் சரி வராது.” என்றான் அலறாத குறையாக.

“ஐயோ மாமா. அந்த பரோட்டா காலையில வேணாம். எனக்கு நீ அத நைட் போட்டு குடு. இப்போ சாப்பிட வாங்கி தா.” என்றான்.

“மச்சான் அடிக்கடி கொத்து பரோட்டா சாப்பிட்டா, பரோட்டா கோச்சிக்காதடா.” என்றான் மணிமாறன்.

“டேய்! நீ கொஞ்சம் வாய மூடு” என்று அதட்ட,

“மூடிக்கிடேன். மூடிக்கிட்டேன்.” என்று வாயைப் பொத்திக் கொண்டான்.

“முல்லை நீ உள்ள வா.” என்றார் பழனி.

“ஹலோ. முல்லை இங்க இருக்கட்டும். நீங்க ஏன் வந்திங்க? நீங்க கிளம்புங்க” என்று கீதா அதட்டலாக சொன்னார்.

“என்ன இப்படி பேசுற? உனக்காக நான் எவ்வளவு பெரிய வேலை எல்லாம் பண்ணி இருக்கேன்.”

“அப்படி என்ன வேலை பண்ணி இருக்கீங்க?”

“இதோ பாரு. இது என்னன்னு தெரியுதா? ஐ போன். உனக்காக தான் வாங்கிட்டு வந்தேன்.” என்று கொடுத்தார்.

“ஐ செக்கப் பண்ண வேண்டிய வயசுல இதுக்கு ஐ போன். ம்... நேரம்டா மாறா.”

“மாறா வாயை மூடுடா. இந்தாங்க எனக்கு இது வேண்டாம்.” என்று திருப்பிக் கொடுக்க,

“ஏன்மா?”

“பிகாஸ் நான் எப்பவும் திருடிய பொருளை தான் யூஸ் பண்ணுவேன்.” என்றார் கெத்தாக.

“அப்போ நீ திருடியா.?”

“ஐயோ சித்தப்பா. சித்தி சும்மா சொல்றாங்க. ஏய் கிழவி அதிகப் பிரசங்கித்தனமாக ஏதாவது பேசின, வாயில குத்துவேன். முதலில் சித்தப்பாவை உள்ளே அழைத்துக்கொண்டு போ. போய் சித்தப்பாக்கு சாக்லேட் பணியாரம் ஊத்திக் கொடு. ம்... போ” என்றான்.

“ஐ.சாக்லேட் பணியாரமா. கீதா குடுகுடு.” என்றார் பழனி.

“அய்யய்யோ இவரை பார்த்தா., நூறு பணியாரத்தை கொடுத்தாலும் பத்தாதுன்னு முகத்த வச்சு இருக்கிற மாதிரியே இருக்காரு.” என்று மாறன் புலம்பினான்.
கதிரும் முல்லையும் தன் அறைக்குள் செல்ல. கதிர் முல்லையை கட்டி அணைத்தவன், “ஏய் கொத்து பரோட்டா. நேத்து நைட் நீ இல்லாம என்னால ஒழுங்கா தூங்கவே முடியல. ஒரு வாரம் உன்னை என் இதயத்தோடு கட்டிபிடிச்சி படுத்து இருந்துட்டு, நேத்து நைட்டு ரொம்பவே கஷ்ட்டப்பட்டேன்டி.”

“மாமா. பேசாம நாம ஊரை விட்டு ஓடி போய்டலாமா?”

”என்ன நீ பைத்தியம் மாதிரி பேசுற? நீயும் நானும் ஊரை விட்டு ஓடுவதற்கு ஒண்ணும் கள்ளக்காதல் பண்ணல. சின்னதில் இருந்து காதலிச்சு கல்யாணம் முடிச்சுட்டோம். இப்ப என்ன பிரச்சனை உனக்கு?

“எனக்கு பயமா இருக்கு மாமா. அம்மா நம்ம கல்யாணத்த ஏத்துப்பாங்களா? நினைச்சாலே மனசெல்லாம் படபடன்னுது.”


“உங்க அம்மா எதுக்குடி நம்ம கல்யாணத்த ஏத்துக்க நினைக்கணும். ஏன் கவலைப்படுற? எதுவும் பிரச்சனையாகாது. நான் இருக்கேன்ல பார்த்துக்கலாம்” என்று அவளுக்கு தைரியம் அளித்தான்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top