Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 116
- Thread Author
- #1
❤ஓவியம் ❤11
முல்லையின் குடும்பம் இந்தக் காட்சியைப் பார்த்து காரில் இருந்து இறங்க, அடியாட்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
“ஐயோ மாமா. மாமா என்ன ஆச்சு உனக்கு?”
“ஏய் ஏய் இங்க பாரு என் மகளை. முல்லை என்னமா? என்ன ஆச்சு?”
“ஐயோ முல்லை கால்ல ரத்தம். டேய் அகில் அவனுங்க தப்பிக்கிறானுங்க பாரு. அவனுங்களைப் பிடி” என்றவர் மகளிடம் திரும்பி, “யாரு இவனுங்க?” என்று கேட்டார்.
“ஐயோ முல்லை கால்ல ரத்தம்
முல்லையின் அப்பாவும் அம்மாவும் அவனது மாமன் முறை உள்ள அகீலும் அங்கு இருக்கிறவர்களை பிடிக்க போக, முல்லை காலில் அடிபட்டு கீழே விழுந்து இருக்க, மயக்கத்தில் இருந்த கதிரைப் பார்த்த முல்லை தேம்பி அழுதுக் கொண்டே இருந்தாள்.
அந்த இடத்திற்கு விரைந்து வந்த முல்லையின் அக்கா ஷாமலியும், கதிரின் நண்பன் மணி மாறனும் பதறியபடி வர, “மச்சான் என்னடா ஆச்சு உனக்கு? டேய் மச்சான் உன்னை தாண்டா. மேடம் என்ன ஆச்சு என் மச்சானுக்கு?” என்று கேட்டான் முல்லையிடம்.
“ஏய் யாரு நீங்க?” என்று இந்து கம்பீரமாக கேட்க
“இவன் என் மச்சான். இவனுக்கு என்ன ஆச்சு? அடப்பாவிகளா என் மச்சான என்ன பண்ணிங்க?” என்று சத்தம் போடா ஆரம்பித்தான்.
“அப்பா இவரை காப்பாத்துங்க.”
“முல்லை. அம்மாடி இங்க என்னமா நடக்குது?” என்றார் சந்திரன்.
“ஏய் அகில்.என்ன மசமசன்னு பாத்துட்டு இருக்க நீ கட்டிக்கப்போற பொண்ணு கால்ல அடிபட்டு விழுந்து கிடக்கிறா. அவள தூக்கமா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க?”
“அத்தை எனக்கு தான் வலது கை இல்லையே. அந்த படு பாவி தான் என் கையை வெட்டிட்டானே. நான் எப்படி முல்லையை தூக்க முடியும்” என்றான் அகில்.
“ஐயோ என்னை யாரும் தூக்க தேவையில்லை. அக்கா என் கையை பிடி. இங்க பாரு மாமாவை.” என்றாள் சகோதரியிடம்.
“என்ன மாமாவா. ஏய் யாருடி இவன்?”
தாயிடம் பயம் கொண்டு, “இல்ல இல்லம்மா. இங்க பாரும்மான்னு சொன்னேன். அம்மா இவர் என்னை காப்பாற்ற வந்து தலையில் அடிபட்டு இருக்கிறார். அவரையும் காப்பாத்தணும்” என்றாள்.
“யார் இவன்?”
“அம்மா இது... இது... வந்து இவரு... இவர்தான் நம்ம முல்லையுடைய டிரைவர். இவளை காப்பாற்ற போய் தான் இவருக்கு தலையில் அடிபட்டு இருக்கு.” என்று சமாளித்தாள் ஷாமிலி.
“ஆமாம்மா. இவரை காப்பாத்துங்க. அவனுங்க இவர அடிச்சுட்டாங்க. அப்பா தயவு செய்து இவரையும் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போங்க.”
“அங்கிள். அதான் இவன் மச்சான் வந்திருக்கிறானே. இவனை ஏதாவது ஒரு கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்க சொல்லுங்க. பாவம் முல்லைக்கு ரத்தம் வருது. வாங்க வாங்க நம்ம முல்லையை அழைச்சிட்டுப் போவோம்.” என்றான் அகில்.
“அகில் கொஞ்சம் சும்மா இரு. இந்த பையன் நம் முல்லைய காப்பாற்றி இருக்கான். இவனை அப்படியெல்லாம் விட்டுட்டு போக முடியாது.”
“அத்தை இந்த மாமா இப்படி தான். நீங்க சொல்லுங்க. கண்டவனை எல்லாம் நாம் ஏன் ஹாஸ்பிடளில் சேர்க்கணும்?”
“ச்சீ வாய மூடு. நீயெல்லாம் ஒரு மனுஷனா? என்னை காப்பாத்த வந்தவறு அடிபட்டு இருக்காருன்னு சொல்றேன். அவரை இங்கேயே விட்டுட்டு போகணும்ன்னு சொல்றிங்க. இங்க பாருங்க இப்ப இவரையும் ஹாஸ்பிடலுக்கு அழைத்துக்கொண்டு வரல. நான் இந்த இடத்தைவிட்டு ஒரு அடி கூட நகர மாட்டேன்” என்று பிடிவாதமாக இருந்தாள்.
“டேய் அகில். என்னதான் இருந்தாலும் நம்மை காப்பாற்றியவர்களை நாம் கைவிடக்கூடாது. இவனையும் வண்டியில் ஏத்து”
என்று இந்து சொல்ல, ஷாமிலி உதவியோடு முல்லை காரில் ஏறி அமர, மணிமாறன் தன் நண்பன் கதிரை காரில் ஏற்ற, இவர்கள் விரட்டிய கார் ஹாஸ்பிடலுக்கு சென்றது.
“அப்பா அப்பா அவருக்கு என்னன்னு பாருங்க. அவருக்கு என்னை காப்பாற்றப் போய் தான் அடிப்பட்டுடுது. அப்பா பிளீஸ் அவருக்கு என்னனு பாருங்க.”
“ஏன்மா இப்படி பதட்டப்படுற? அந்த தம்பிக்கு ஒன்னும் ஆகாதுமா. நான் பார்த்துக்குறேன். முதல்ல இங்க பாரு உன் கால்ல எவ்வளவு ரத்தம் வருதுன்னு” என்றார்.
“அய்யோ அப்பா... எனக்கு வலி எல்லாம் இல்ல. தயவு செய்து அவரை பாருங்க.”
“என்ன அவரா? ஒரு டிரைவருக்கு இவ்வளவு மரியாதையா?” என்று கேட்டான் அகில்.
“ஏய் நான் உன் கிட்ட பேசவே இல்ல.” என்று அதட்டினாள் முல்லை.
“ஏய் என்ன பயம் விட்டு போச்ச்சா? என்கிட்ட குரலை உசத்தி பேசுற?
“அய்யோ கொஞ்ச நேரம் வாயை மூடுங்க. அங்க பாருங்க அம்மா வராங்க” என்று இருவரையும் திட்டினாள் ஷாமிலி.
“என்னடா முல்லை? என்ன ஆச்சு? எதுக்காக நீ வேலை நேரத்துல. அந்தப் பக்கம் போன?
“இங்கப் பாருங்க உங்க கேள்வி எல்லாம் அப்புறம் வச்சுக்கங்க. இவங்க கால்ல ரொம்ப பிலீத் ஆகுது. இவங்களுக்கு உடனே முதலுதவி பண்ணி ஆகணும்” என்று சொன்ன நர்ஸ் முல்லையை அவசர சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல, அவளின் நினைவுகள் முழுதும் தன் மாமனும் கணவனுமான கதிரை நோக்கியே இருந்தது.
கண் ஜாடையில் அவள் தன் அக்கா ஷமிலிடம் தன் மாமன் கதிரை பார்த்துக்கொள்ள சொல்லி சொன்னதை புரிந்து கொண்டாள் ஷாமிலி.
“இங்கே பாரு முல்லை. நீ உணர்ச்சிவசப்பட்டு பேசாத. கதிர் மாமா தான் ஓவியம் என்று அம்மாக்கு தெரிஞ்சா பிரச்சனை பெருசாயிடும். நீ கொஞ்சம் அமைதியா இரு. நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன்”
என்று சொன்னபடி முல்லையை அவசர சிகிச்சைக்கு அனுப்பி வைத்தாள்.
“என்ன ஷாமிலி? இங்கே என்ன நடக்குது?” என்று கேட்டார் இந்து.
“அம்மா நம்ம பாப்பா ஊரிலிருந்து வந்தும், இந்த ஊர்ல இருக்கிற பொறுக்கிகளை எல்லாரையும் அடித்து தும்சம் பண்ணிட்டா. அத மனசுல வச்சுக்கிட்டு காளையன் என்ற ஒருத்தன், பாப்பா வர வழியிலேயே அவளை போட்டு தள்ள பிளான் பண்ணியிருக்காங்க. பாவம் நம் முல்லையை காப்பாற்ற போய் டிரைவர்க்கு இப்போ அடி பட்டு இருக்கு.” என்றாள் ஷாமிலி.
“திக்கற்றவர்களுக்கு தெய்வம் துணை என்ற மாதிரி, நல்ல வேளையாக அந்த புள்ளயை அந்த கதிர்வேலன் முருகனே அனுப்பி வைத்து இருக்கான்.”
“போதும் நிறுத்துங்க. உங்களுக்கு சொல்றதுக்கு வேற கடவுள் பெயர் கிடைக்கலையா? இந்த பெயரை கேட்டாலே எனக்கு.காண்டு ஆகுது.” என்று எரிச்சலாக சொன்னார் இந்து.
சந்திரன், “இல்லம்மா...”
“ம்... நீங்க வாய மூடுங்க. டேய் அகில் என்ன ஏதுன்னு விசாரிச்சு அந்த பையனுக்கு எவ்வளவு காசு கட்டணும்னு கேட்டு நம்ப சார்பில் கட்டிடு.”
“சரிங்க அத்தை.”
“சரி அம்மா நீங்க கிளம்புங்க. நாங்க பத்துக்குறோம்.”
“முல்லையை இந்த நிலைமைல விட்டுட்டு நான் எப்படி விட்டுக்கு கிளம்பறது.?”
“இல்ல அம்மா. பாப்பாவை நான் பார்த்துக்குறேன். நீங்க கிளம்புங்க” என்றாள்.
“ஆமா அத்தை நீங்க போங்க நான் பாத்துக்குறேன்.” என்றான் அகில்.
“ஹலோ நீங்க இருந்து இங்க என்ன பண்ண போறீங்க? என் தங்கச்சியை தூக்கவே உங்களுக்கு கையில்லை காலில்லைன்னு, அங்க கதை சொல்லிட்டு, இப்ப என்ன பண்ண போறீங்க?” என்று அதட்டலாகக் கேட்டாள் ஷாமிலி.
“என்ன உன் தங்கச்சியை கட்டிக்க போறவன் என்ற மரியாதை இல்லாம பேசுற?”
“ஏய்! உன் உருட்டல் மிரட்டல் எல்லாம் முல்லைகிட்ட வெச்சிக்கோ. என்கிட்ட எல்லாம் வச்சுகிட்டீனா கை இடம் மாறிடும் சொல்லிட்டேன்.”
“என்ன ஷாமிலி நீ? தங்கச்சி புருசனாகப் போறவன மரியாதை இல்லாம பேசுற. முதல உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து கட்டி வைக்கணும்” என்று இந்து மகளை அடக்கினார்.
“போதும் நிறுத்துங்க அம்மா. உங்களுடைய பேச்சுக்கு அப்பா வேணும்னா தலையாட்டுவாரு. என்கிட்ட எல்லாம் வெச்சுக்காதீங்க புரியுதா. நகருங்க அந்த பக்கம்.” என்றாள் அவள்.
“என்னமா இது இப்படி பேசுற?” என்று சந்திரன் கேட்டார்.
“ஆமா.நீங்களும் பேசாதீங்க. பேசுற எங்களையும் பேச விடாதீர்கள். நீங்க உங்க இந்துவுக்கு சிந்து பாடுங்க. எங்களை எதுக்கு தாளம் போட வைக்கிறீங்க. உங்க பொண்ண ஒருவன் காப்பாற்றி இருக்கிறான். இந்த அகில் அவனைக் கொண்டுபோய் வேற எதாவது ஆஸ்பிடல்ல சேர்க்க சொல்றான். அதை ஏன் கேக்க ஆள் இல்லாமல் என்கிட்ட எகுறுறீங்க. நீங்க எல்லாம் எப்போ திருந்த போறீங்களோ. அதனாலதான் உங்க யார் தொல்லையும் இல்லாம, நானும் என் தங்கச்சியும் ஹாஸ்டல்ல இருந்தோம்”
என்று சொன்னபடி ஷாமிலி அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
மணிமாறன் கதிரை அவசர சிகிச்சையில் சேர்த்த இடத்திற்கு வெளியே கண்கலங்கியபடி நின்றிருந்தவனை பார்த்த ஷாமிலி, “மணி என்ன ஆச்சு? கதிர் மாமா எப்படி இருக்காரு.?” என்றாள்.
“தெரியலங்க என்னனோமோ சொல்றாங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.”
“சரி. கதிர் மாமா எப்படி அந்த இடத்துக்குப் போனாரு?”
“அது ஒன்னுமில்லைங்க. காலையில நீங்க உங்க தங்கச்சிக்கு போன் பண்ணீங்களா, அதுல இருந்து அவங்களோட முகமே சரியில்ல. அதனால அவங்க போன வண்டி பின்னாடியே இவனும் போனான். அந்த இடத்தில் தான் அவங்களுக்கு ஏதோ பிரச்சனை நடந்திருக்கு போல. அதனால தான் உங்களுக்கு நான் phone பண்ணேன். ஆனா நம்ப ரெண்டு பேரும் அந்த இடத்துக்கு போறதுக்குள்ள உங்க அம்மா, உங்க அப்பா ஒரு வீணா போனவன் என்று எல்லோரும் வந்துட்டாங்க.”
“சரி சரி. எது எப்படியோ. ஆனால் கதிர் மாமாதான் கதிரோவியம்னு, அந்த அகில்கோ, இல்ல எங்க அம்மாவுக்கோ மட்டும் தெரியக் கூடாது. அத மட்டும் நீங்க பார்த்துக்கோங்க. அப்புறம் கீதா அத்தைகிட்ட இந்த விஷயத்தை சொல்லாதிங்க. அவங்க ஆதங்கப்பட்டு இங்கே வந்து எதாவது பிரச்சனை ஆயிடும். நீங்க அவங்களுக்கு போன் பண்ணி கதிர் மாமா வெளி ஊருக்கு போயிருக்காருன்னு சொல்லி சமாளிங்க. எங்க அம்மாவை நான் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறன்” என்று ஷாமிலி சொன்னாள்.
முல்லையை பரிசோதித்த டாக்டர், “அவங்களுக்கு காலுல கொஞ்சம் அடிபட்டு இருக்கு. நாங்க ஃபர்ஸ்ட் எய்ட் கொடுத்திருக்கோம். ஒரு வாரத்துக்கு அவங்க கால் அசைக்கவே கூடாது. உங்களுக்கு இஷ்டம் என்றால் அவங்க இங்க இருக்கட்டும். இல்லையா நாளைக்கு காலைல டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்.” என்றார்.
“இல்ல டாக்டர். இன்னைக்கு என் டாட்டர் நைட்டு இங்கேயே இருக்கட்டும். நாளைக்கு காலைல வந்து நாங்க அழைச்சுகிட்டு போகிறோம்.”
என்று சொன்ன இந்து ஷாமிலி, சந்திரன் மற்றும் அகிலன் பொறுப்பில் முல்லையை கவனிக்கும் படி உத்தரவு பிறப்பித்து, அந்த காளையன் ஆட்டத்துக்கு முடிவு கட்டுவதற்காக இந்து கிளம்ப, முல்லை மயக்கத்திலிருந்து எழுந்தாள்