• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
111
💚 ஓவியம்....1️⃣

கதாநாயகன் : கதிரோவியன் என்ற கதிர்.

கதாநாயகி : முல்லையோவியம் என்ற முல்லை.
ஷாமிலி ,நவின் : முல்லையின் சொந்தம்.
மணி : கதிரின் நண்பன்.

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
அன்றைய தினம் காலை நேரம், வானில் உள்ள நிலவை மேகம் மறைத்துக் கொண்டது.
நம் கதாநாயகன் "கதிரோவியன்" வீட்டின் ஜன்னலின் வெளியே குயில் பாடும் பாட்டு இவன் செவி வழியே சென்று, அவன் நித்திரையை நீடிக்க விடாமல் நிறுத்தியது.
தன் படுக்கையில் இருந்து சோம்பல் முறித்தப்படி கதிரோவியன் எழுந்து குளியல் அறையை நோக்கி நடந்தவன், காலைக் கடமைகளை முடித்த படி வெள்ளை நிற பைஜாமா உடுத்தி, கையில் தேனீர் கோப்பையுடன் தன் வீட்டின் பால்கனியில் வந்து நின்றவன் கண்களில்பட்டது, வலது பக்கம் ஓரு பெண்மணி தன் பெண் பிள்ளையின் கூந்தலை உளற வைத்துக்கொண்டு இருந்தார். அவள் அருகில் ஐந்து வயது பையன் பைக் துடைத்துக் கொண்டிருக்கும் தன் அப்பாவிடம் வம்பிழுத்துக் கொண்டு இருந்தான்.
இடது பக்கம் இருக்கும் மேசையில் வயதான ஐந்து பேர் அமர்ந்து, பழைய கதைகள் பேசிக் கொண்டு இருந்தனர்
கதிரோவியனின் பக்கத்து வீட்டு பால்கனியில், 60 வயது முதியவர் ஒருவர் கதிரை முறைத்துக்கொண்டு நின்றிருந்தார்.
கதிரோவியன் கண் ஜாடையில் ’என்ன? என்று கேட்டான்.
“ஒண்ணுமில்ல.” என்று கதிரோவியனை முறைத்தபடி சொன்ன அந்த முதியவர் அவரின் வீட்டிற்குள் செல்ல,
தன் நண்பன் மணியிடம் இருந்து கதிரோவியனின் கைபேசிக்கு வந்த குறுஞ்செய்தியை பார்த்தவன் அதை மனதிற்குள் வாசித்தான்.
‘டேய் ஓவியா! இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. அதுகுள்ள நம்ம அவங்க கேட்ட ஓவியத்தை வரைந்து கொடுத்தாகனும். சோ, நான் இன்றைய இரவு உன் வீட்டிற்கு வருகிறேன்.” என்று கதிரோவியனின் நண்பன் மணி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.
“சரி” என்று பதில் அனுப்பியவன், தான் ஓவியம் தீட்டத் தேவையான எல்லா பொருட்களையும் ஒரு பையில் எடுத்துக்கொண்டு, தன் கண்ணாடியை சரி செய்தவாறு காலில் செருப்பை மாட்டியவன், கையில் மிதிவண்டி சாவியை எடுத்துக்கொண்டு வீட்டை பூட்டியவன், நேராக அனுமன் கோவிலுக்கு செல்ல, அங்கு வாசலில் இருக்கும் பூக்காராப் பாட்டி அழைத்தார்.
“இந்தாப்பா ஓவியா. என்னடா இன்னைக்கு சனிக்கிழமை ஆச்சே. இன்னும் உன்னை காணோமே என்று பார்த்தேன்.” என்று பாட்டி கேட்க, அவனோ சைகையில், ‘தூங்கிட்டேன்’ என்று சொன்னான்.
“ஆமா. நேத்து வெள்ளிக்கிழமை இல்ல. பாவம் உனக்கு வேலை அதிகமா இருக்கும். சரி இந்தா வடை மாலையும், விளக்கும். அனுமன் உனக்காக தான் காத்துகிட்டு இருப்பான்” என்று வாசலில் இருக்கும் பூக்காரப் பாட்டி சொல்ல,
கதிரோவியன் அதை அனைத்தையும் வாங்கிக் கொண்டு கோயிலுக்குள் செல்வதற்கு முன்பு மீண்டும் அவரிடம் சைகை காட்டினான்.
“நீ போ. உன் சைக்கிளையும், இந்த சாமான்களையும் நான் பார்த்துக்கிறேன்” என்று அவனைப் புரிந்து பாட்டி சொல்ல, கதிரோவியன் சிறு புன்னகையை சிதற விட்டபடி கோவிலுக்குள் சென்றான்.
கோவிலில் பிள்ளைகள் அங்கும் இங்கும் ஓடி விளையாட, சிலர் அடி பிரேதோஷம் செய்துகொண்டு இருக்க, பலர் கோவிலுக்கு வந்ததை மறந்து கைபேசியை பார்த்துகொண்டு இருக்க, இன்னும் ஒரு சிலர் சாமியை தவிர அங்கு இருக்கும் ஆசாமிகளிடம் வெட்டிக்கதை பேசிக்கொண்டு இருந்தனர்.
இதை அனைத்தையும் கவனிக்காத நம் கதாநாயகன், அவன் போன வேலையை முடித்தபடி அனுமனை கும்பிட்டவன் ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு கண்களை மூடி தியான நிலைக்கு சென்றான்.
கிட்டத்தட்ட அரைமணி நேரம் கடந்த நிலையில், யாரோ சண்டை போடும் சத்தம் கேட்பது போல தோன்ற, கதிரோவியன் தன் கண்களை திறந்து பார்த்தான். பின்பக்கம் திரும்பி நின்றவாறு இருந்த இரண்டு பெண்களைச் சுற்றி, நான்கைந்து பெண்கள் திட்டும் சத்தம் கேட்டு தன் தியான நிலையைக் கலைத்த கதிரோவியன் அங்கு என்ன நடக்கிறது என்று கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.
“இங்க பாருங்க ஏதோ தெரியாம மோதியதற்கு ஏன் இப்படி சீன் போடுறீங்க.” என்றாள் ஷாம்லி.
“என்ன சீன் போடுறோமா. ஏம்மா பாக்க படிச்ச பசங்க மாதிரி இருக்கீங்க. கோவிலுக்கு வந்தா அடக்க ஒடுக்கமா இருக்கணும்னு தெரியாதா” என்றார் அந்தப் பெண்மணி.
“இப்ப அடக்க ஒடுக்கமா இல்லாம நாங்க என்ன டன்ஸா ஆடிகிட்டு இருக்கோம்.”
“இங்க பாருமா நீ ரொம்பப் பேசுற.”
“ஆமா. அப்படித்தான் பேசுவேன். ஏதோ என் தங்கச்சி தெரியாம இடிச்சிட்டா. அதுக்கு தான மன்னிப்பு கேட்டா. அப்புறம் என்னங்க?”
“மன்னிப்பு கேட்டால் போதுமா. நல்ல காரியம் தொடங்கும் முன் இப்படி அபசகுனம் ஆகிடுத்தே. ச்சே... எல்லாம் இதோ நிக்குதே இந்த பொண்ண சொல்லனும். டாக்குமெண்ட் எல்லாம் நாசம் ஆகிடுத்து” என்று மீண்டும் அங்கு நின்றிருந்த பெண்ணைத் திட்டினார்.
“இங்க பாருங்க. மறுபடியும் மறுபடியும் என் தங்கச்சியை குறை சொன்னால் எனக்கு கெட்ட கோபம் வரும்” என்று தன் கோவத்தைக் காட்டினாள் ஷாம்லி.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. இந்தப் பொண்ணு செஞ்ச தப்புக்கு இவதான் தண்டனையை அனுபவிக்கனும்.”
“அதான் அவ தெரியாம மோதிட்டேன்னு சொன்னால்ல. இன்னும் எதுக்கு தேவை இல்லாம பேசிட்டு இருக்கீங்க. சொன்னதையே எத்தனை வாட்டி சொல்றது? எய் வாடி நம்ம போகலாம்.” என்று சொன்னபடி ஷாம்லி தன் தங்கை முல்லையோவியத்தை அங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றாள்.
“ஏய்! இரும்மா. நான் பேசிகிட்டு இருக்கும் போது எங்க போற? உன் தங்கச்சிக்கு அறிவில்ல. ஆள் இப்படி வளர்ந்து இருக்கால்ல. ஏன் இவ கண்ணு என்ன பிடறியிலையா வச்சுருக்கா. இல்ல இவளுக்கு என்ன கண்ணு தான் தெரியாதா” என்றார் அவரும் அந்தப் பிரச்னையை விடாது.
(நவின்) ஐயர், “ஆமாமா. இந்தப் பொண்ணுக்கு கண்ணுதான் தெரியாது. ஏய் ஷாமிலி! நீ முல்லையோவியத்தை கூட்டிக்கிட்டு வீட்டுக்கு போ” என்று நவின் சொல்ல, ஷாமிலியும், அவளின் தங்கை முல்லையோவியமும் கதிரோவியன் இருக்கும் பக்கம் திரும்பினர்.
தியான நிலையில் இருந்து கண் விழித்த கதிரோவியன் விழிகளில் தெரிந்தது, நம் அழகிய தேவதை முல்லையோவியத்தின் விழிகள் மட்டுமே. முல்லை தட்டு தடுமாறி நடந்து வருபவளை பார்த்தவாறு தன்னை மறந்த கதிர் எழுந்து நின்றான்.
“சார் உங்க சைக்கிளா வெளியே நிக்குறது.” என்று ஒருவன் வர, கதிரோவியன் சைகையில், ‘ஆமா ஏன்?’ என்றான்.
“உங்க சைக்கிளை ஒரு கார் மோதி, உங்க டிராயிங் திங்க்ஸ் எல்லாம் கீழே விழுந்திடுத்துன்னு பூக்கார பாட்டி சொல்லச் சொன்னாங்க” என்று அவன் சொல்ல, கதிர் பதறி அடித்து வெளியே போக, முல்லையும் அவளின் அக்கா ஷாமிலியும் கோவிலை விட்டு வெளியே வந்தனர்.
காரில் வந்து தன் சைக்கிளை இடித்த பணக்கார பெண்ணை, “அறிவில்லை உங்களுக்கு. பார்த்து வர்றதில்லையா?” என்று சைகை காட்டி திட்டிக் கொண்டு இருந்த கதிரை பார்த்த ஷாமிலி.
“பாவம். வாய் பேச முடியாமல் இருக்கும் ஒருவர், ஓவியம் வரைந்து தன் திறமையை வெளிப்படுத்த ஆசைப்படும் பொழுது கூட, இந்த உலகம் அவரை மதிப்பது இல்லை” என்றாள் ஆதங்கமாக.
“என்ன அக்கா? யாருக்கு என்னாச்சு? யாரை பாவம்னு சொல்ற?”
“அங்க வாய் பேச முடியாத ஒருவர பார்த்து தான்மா.”
“ஏன் அக்கா? உன் தங்கச்சி எனக்கே கண்ணு தெரியாது. என்னை பார்த்தே ஒருத்தவங்க பாவப்படுற நிலைமையில் தான் நம்ம இருக்கிறோம். நீ ஏன் அவரை பார்த்து பாவப்படுற?” என்று முல்லையோவியம் கேட்டாள்.
ஒரு பணக்கார தோரணையை கொண்ட கார் கதிரின் சைக்கிளை மோத, அவன் வைத்திருந்த எல்லா சித்திரம் வரையும் பொருட்களும் கீழே விழுந்து கிடந்ததை பார்த்த கதிர் கோபப்பட, அங்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள விருப்பப்படாத முல்லையின் அக்கா ஷாமிலியும், அண்ணன் நவீனும் முல்லையை அழைத்துக்கொண்டு அங்கு இருந்து கிளம்பினர்.
காரில் இருந்து இறங்கிய பெண், பார்க்க வயது முதிர்ந்த பெண்ணை போல தோற்றம் இருந்தாலும், அவர் வாய் அதிகமாகப் பேசியது.
“ஏய் மேன்! உன்னால வாய் பேச முடியலனாலும், உனக்கு திமிர் ஜாஸ்தி. எவ்வளவு திமிர் இருந்தா என்னை எதிர்த்து பேசுவ?” என்று எகிறிக்கொண்டு வந்தாள் ஓவியகீத்து.
கதிர் சைகையில் அவளை நிறுத்தச் சொல்ல,
அங்கு இருந்தவர்களில் ஒருவன், “ஏம்மா, நீ காரில் வந்து இந்த பையனோட சைக்கிள்ள மோதிட்டு, அவன் வந்து வேணும்னே இடிச்ச மாதிரி இப்படி பிரச்சனை பண்ற?” என்று கேட்டார்.
அவளோ அதையெல்லாம் கண்டுகொள்ளாது, “இங்க பார் இந்த தேவையில்லாத பேச்செல்லாம் வேண்டாம். ஒழுங்கு மரியாதையா சைக்கிளை தூக்கிக் கொண்டு ஓடி போய்டு” என்றாள் கதிரோவியனை நோக்கி.
“முடியாது. இதற்கு உண்டான காசை நீ கொடுக்கணும்” என்றான் சைகையில்.
“என்னது காசா? என்னால முடியாது. என்னால காசெல்லாம் கொடுக்க முடியவே முடியாது. இந்த சைக்கிள் எப்படி வந்துச்சுன்னு எனக்கு தெரியாது” என்று இருவரும் மாறி மாறி பேசிக்கொண்டிருக்க, அங்கு கூட்டம் கூடிக் கலவரமானது.
சிறிது நேரம் கழித்து பூக்கார பாட்டி, “எப்பா கதிர் இன்னைக்கு சனிக்கிழமை. உனக்கு ஊறப்பட்ட வேலை இருக்கும். ஏதோ நடந்தது நடந்துடுச்சு நீ கிளம்பு. இந்தா உன் டாக்குமெண்ட்” என்று பாட்டி சொல்ல, அந்த பைலை வாங்கிய கதிர், சோகமாக தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு போனான்.
அங்கு இருந்த அனைவரும், “வாய் பேச முடியாத ஒரு பிள்ளைக்கு இப்படி ஒரு சோதனையா. இந்த பணக்கார கிழவிக்கு திமிர் அதிகம்” என்று அனைவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.

🙏......நான் உங்கள் சக்தி....🔱
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top