• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
22



இரவில் தன் உறக்கத்தால் யாரையும் கவனிக்க முடியாமல் போக, காலையில் எழுந்ததும் குளிக்க ஆடை தேடி எடுத்துக் கிளம்ப, அதற்குள் கண்விழித்த ஆனந்த், “குளிக்கவா போற? நேத்து காலையில பீவரோட குளிச்சதால போன காய்ச்சல் வந்திருக்கலாம்னு டாக்டர் சொன்னார். இப்ப நீ குளிக்க வேண்டாம்” என்றான்.

“குளிக்கலன்னா ஒரு மாதிரியாயிருக்கும்ங்க. ஹாஸ்பிடல், ட்ராவல்னு என்னவோ மாதிரியிருக்கு.”

“நீ சொன்னா கேட்கமாட்ட. இரு அம்மா வந்து சொல்லட்டும்” என்று தாயை அழைத்து வந்து மருமகளைத் திட்டச் சொல்ல, இருவரும் சிரித்து, “ஹீட்டர் போட்டு தலையை மட்டும் நனைக்காம குளிச்சிருமா” என்றார்.

“அம்மா நேத்து ட்ரிப்ஸ் ஏறியிருக்கு. உடம்புல தண்ணீர் பட்டா எதாவது ஆகிடப்போகுது” என்றான் அவசரமாக.

“ப்ச்... இவன் வேற. சுடு தண்ணீர்தான்டா. நேத்து இவளிருந்த மன உளைச்சலுக்கே உடம்பு அசதி அதிகமாயிருக்கும். குளிச்சா பெட்டரா ஃபீல் பண்ணுவா” என்று அவர் செல்ல... கணவனின் முறைப்பைத் தன் சிரிப்பில் கரைத்துக் குளித்து ஆடைமாற்றி வெளியே வந்தவளைப் பார்த்தவன் பார்வையின் அனல் தாளாது, “சாரிங்க.. சாரிங்க தலைக்குக் குளிக்கிற ஐடியால போகல. ஆனா, தண்ணீரைப் பார்த்ததும்.. ஆட்டோமேடிக்கா தலையில...” நாக்கைக் கடித்தபடி சொல்லி தலையைத் துவட்ட ஆரம்பித்தாள்.

அதை வாங்கித் தானே துவட்டி ஹேர் ட்ரையர் கொண்டு முடியின் ஈரம் போக்க... இமை தட்டாது கணவனவனை மட்டுமே பார்த்திருந்தவள், “தேங்க்ஸ்” என்றாள்.

“எதுக்குமா?”

“என்னைத் தேடி வந்ததுக்கு.”

“ஏற்கனவே சொல்லிட்ட.”

“தோணும் போதெல்லாம் சொல்வேன்” என்றாள் ஒருவித லயிப்பல்.

அவளின் முடி ஒதுக்கி அவள் அமர்ந்திருந்த ஸ்டூலில் கைவைத்து கழுத்தோரம் குனிந்து இருவர் முகத்தையும் கண்ணாடியில் பார்த்தபடி, “உனக்கும்தான் தேங்க்ஸ்” என்றான். ஏனென்பதாய் கேள்விக்கணையைக் கண்ணாடியின் மூலம் பாவையவள் தொடுக்க, “எனக்காகக் காத்திருந்ததுக்கு” என்றான் கண்ணாடியிலிருக்கும் அவள் கண்பார்த்து.

“உங்களுக்காகன்னுலாம் காத்திருக்கல” என்று சிணுங்க...

“வேற யாருக்காகவும் இல்லதான. அதான் தேங்க்ஸ்.” ஸ்டூலைப் பிடித்திருந்த கைகள் அவளை வளைத்துக்கொள்ள, ஏதோ ஒரு ஆழ்ந்த மயக்கம் இருவருக்குள்ளும்.

“அண்ணி.. அண்ணீ குளிச்சதும் அம்மா கீழ வரச்சொன்னாங்க” என்று வெளியில் நின்றே கதவைத்தட்டி குரல் கொடுத்தபடி அனு செல்ல...

அவசரமாக விடுபட்ட இருவரும் ஒருவர் முகம் ஒருவர் பார்க்கத் தயங்கி நிற்க, “நான் பாப்பா பார்த்துட்டு அவங்களையும் கூட்டிட்டு வர்றேன்” என மெல்லிய குரலில் சொன்னாள்.

“எதிர் ரூம்லதான் இருக்காங்க. போய்ப்பாரு. அதுக்கு முன்ன லேசா தலைமுடி பின்னிக்க. நான் கீழ போறேன்” என சென்றான்.

மனம் சந்தோஷிக்க முகம் அதை வெளிப்படுத்த, சின்னதாக ஒரு பின்னலைப் போட்டு எதிர் அறைக்கதவை மெல்லத் திறக்கையில் கேட்ட வார்த்தையில் அப்படியே நின்றாள்.

“வித்தி நீ எப்ப வந்த?”

“ஏன் வந்தேன்னு இருக்கு அண்ணி. அவங்க மேலயிருக்கிற தப்பான அபிப்ராயத்தை நீங்க இன்னும் மாத்திக்கலை இல்ல.”

“அப்படியில்ல வித்தி. அது வேற. இது வேற.”

“தோசையை எப்படித் திருப்பிப் போட்டாலும் அது தோசைதான் அண்ணி. சப்பாத்தி ஆகிராது. முகத்துக்கு நேரே உண்மை தெரிந்தாலும் அதை ஏத்துக்கற பக்குவம் உங்களுக்கு இல்லண்ணி. நாளைக்குக் காலையிலதான பங்க்ஷன், நாங்க மதியம் கிளம்பி வர்றோம். அப்ப உங்களுக்கு எந்தவித பிரச்சனையும் இருக்காதுல்ல?”

“வித்தி என்ன பேசுற? தாய்மாமன்ற உறவுல உள்ள அருமை அவளுக்குத் தெரியாம இருக்கலாம். எனக்குத் தெரியும். இவள் எனக்கும் குழந்தைதான். நான் சொல்...”

“இங்க பாருங்க அவர் நல்லவர்தான் ஒத்துக்கறேன். ஆனா குழந்தை விஷயம் வேற” என்று கணவனை முழுதாகப் பேசவிடாமல் தடுத்தாள்.

“சாரிண்ணா. பங்க்ஷன் வந்து ஓரமா நின்னுட்டுப் போற உறவா வர நாங்க தயாராயில்ல. அதுக்கு நாங்க வராமலே இருக்கலாம். அதுக்கு கல்யாண மயக்கம், காதல் மயக்கம்னு என்ன பெயர் வச்சாலும் ஐ டோண்ட் கேர். நான் கீழ போறேன் சீக்கிரம் வாங்க. கீர்த்தி வா” என்று அவளையும் அழைத்துச் சென்றாள்.

தலையில் கைவைத்தபடி உட்கார்ந்திருந்தாள் கார்த்திகா. ‘என்ன சொல்ல ஆரம்பித்தோம், என்ன சொன்னோம்’ என்று அவளுக்கே விளங்கவில்லை. இரு நாட்களாக ஏதோ ஒன்று தன்னையும் மீறிப் பேச வைப்பதாகத் தோன்றியது.

“நீ பண்ற வேலைக்கு தலையைப் பிடிச்சிட்டு நாங்கதான் உட்காரணும் கார்த்தி. நீ ஏன் இப்படியிருக்க? குழந்தை குழந்தைன்னு உரிமையா பேசுறியே அந்தக் குழந்தை அவர் இல்லன்னா இப்ப இல்ல. அது தெரியுமா உனக்கு?” என்றான் கோபத்துடன்.

“ஐயோ நான் ஏதோ சொன்னேன்னு, நீங்க ஏன் தப்பாப் பேசுறீங்க?”

“தப்பாப் பேசாம, வேற என்ன செய்யணும்ன்ற? படிச்சிப் படிச்சிச் சொன்னேன். அமைதியாயிரு எல்லாம் சரியாதான் நடக்குதுன்னு. கேட்டியா நீ? பெரிய நியாய தேவதை மாதிரி சட்டம் பேசிட்டிருக்க. நாங்க தப்பா பேசுறோமாம். இவங்க மட்டும்தான் சரியா பேசுறாங்களாம். ஹாஸ்பிடல்ல என்ன நடந்ததுன்னு தெரியுமா உனக்கு? உன்கிட்ட சொன்னது கால்வாசிதான். முழுசா தெரிஞ்சா உன் மனசும் உடலும் கஷ்டப்படுமோன்னு மறைச்சா, நீ என்னலாம் பேசிட்டிருக்க?”

“எ.. என்ன மறைச்சீங்க? கீர்த்தி கூட ஹாஸ்பிடல்னு ஏதோ ஆரம்பிச்சி நிறுத்திட்டா. நல்லாயிருந்த குழந்தைக்கு நோய் இருக்கிறதா பயமுறுத்தி நிறைய பணம் பறிக்கிறதா சொல்லி டாக்டர் மேல கேஸ் போட்டு அரஸ்ட் பண்ணிட்டதா சொன்னீங்க. இதுக்கு மேல என்னயிருக்கு? இதுல வித்தி ஹஸ்பண்ட் எங்க வந்தார்?” என்றாள் தவிப்புடன்.

“இது நாங்க உன்கிட்ட சொன்னது. ட்ரீட்மெண்ட்ல சந்தேகப்பட்டு டாக்டர்கிட்ட டிஸ்சார்ஜ் பண்ணச் சொல்லி கேட்டேன். ஒரு மாச வருமானத்தைப் பத்தே நாள்ல எப்படி விடுவாங்க”

“ஒரு நிமிஷம்ங்க. பணம்தான் அவங்க டார்கெட்னா, சிசேரியன்னு ஆரம்பிச்சிருக்கலாமே? ஏன் நார்மல் டெலிவரி பண்ணினாங்க?”

“இதே கேள்விதான் நம்ம வீட்ல உள்ளவங்களுக்கும். அது பிசினஸ் ட்ரிக் கார்த்தி. உனக்கு வர்ற எண்ணம் எல்லாருக்கும் வந்திருக்கும். அப்படியிருக்கிற பட்சத்துல அவங்க தங்களை ஏமாத்துறதை எப்படி உணர்வாங்க. அந்த சென்டிமெண்டை தான் இவன் தனக்காக யூஸ் பண்ணிக்கிட்டான். நான் டிஸ்சார்ஜ் பண்ணக் கேட்டதும், என்கிட்ட நல்லவிதமா பேசிட்டு குழந்தையைக் கொல்லப் பார்த்தான்.”

“என்னது?” என அதிர்ந்து எழுந்தவள், சட்டென்று குழந்தையை வாரியணைத்துக் கொள்ள...

“ம்... நர்ஸ் ஒருத்தர் போன் பண்ணி விஷயத்தைச் சொன்னதும் வேகமா ஓடிப்போனேன். தடுக்கப் பார்த்தப்ப டாக்டரோட ஆளுங்க என்னைப் பிடிச்சி நகரவிடாமல் செய்து, இன்குபேட்ல குழந்தைக்கு வைரஸ் செலுத்துற நேரம் ஆனந்த் மச்சான் வந்தார். கண்சிமிட்டுற நேரத்துல டாக்டரை அடிச்சிப்போட்டு குழந்தையையும் காப்பாத்தி, அவங்க மூணுபேரையும் சமாளிச்சி, போலீஸ்கும் இன்பார்ம் பண்ணினோம்.”

“அரை நிமிஷம் லேட்டாயிருந்தா கூட என் கண்முன்ன நம்ம குழந்தையை...” வார்த்தைகள் திக்க, குழந்தையின் தலைவருடி, “இப்ப சொல்லு கார்த்தி? அவருக்கு சப்போர்ட் பண்ணினதுல என்ன தப்பு? நம்ம குடும்பம் இவ்வளவு சந்தோஷமா இருக்குதுன்னா அது யாரால? வார்த்தைகளை சட்டுன்னு கொட்டிட்ட? கொட்டின வார்த்தைகளை இல்லன்னு உன்னால சொல்ல முடியுமா?”

“சா..சாரிங்க. நிஜமாவே பேசணும்னு பேசல. நான் பேசினதையெல்லாம் இப்ப நினைச்சா ரொம்ப சில்லியா இருக்கு. என் பேச்சினால எத்தனை பேர் மனசைக் கஷ்டப்படுத்திட்டேன். இப்ப மத்தவங்க முகத்தைப் பார்க்கிறதுக்குக் கூட கூசுதுங்க” என்று அழ ஆரம்பித்தாள்.

அதே நேரம் அவள் செல் அடிக்க சாதனாவின் பெயர் பார்த்ததும், குழந்தையைப் படுக்கவைத்து, “சொல்லு சாது?” என்றதும் அவள் மன்னிப்பு மேல் மன்னிப்பு கேட்டு நடந்தது அனைத்தையும் சொல்ல... “ஓ... சரி சாது. எதுவும் பிரச்சனையில்லை... ஹேய் போதும் உன் மன்னிப்பு... தெரிஞ்சி எதுவும் செய்யலையே. அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்மா... நீ கில்டியா ஃபீல் பண்ணாத. சரி வச்சிருறேன்” என்று போனைக் கட் செய்தவளால் அதற்குமேல் தாங்கமுடியாமல் சத்தமாகவே அழ ஆரம்பித்தாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
சற்று நேரம் அழவிட்டவன் அருகில் வந்தமர்ந்து, “என்னாச்சி கார்த்தி?” என... கணவன் மடிசாய்ந்து இன்னுமே அழ... “அழாத கார்த்தி. உடம்புக்கு எதாவது ஆகிரப்போகுது” என்றான் ஆறுதலாக.

“ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல. நேத்து பேசும்போதாவது சொல்லியிருக்கலாமே?”

“முதல்ல நாங்க சொன்னா கேட்கிற நிலையில் நீயில்ல கார்த்தி. வித்திக்குத் தப்பா நடந்திருச்சேன்ற ஆதங்கத்துலதான் நீ பேசினது.”

சட்டென நிமிர்ந்து கணவன் முகம் பார்த்து, “நிஜமாவே! அந்த எண்ணம் மட்டும்தான்ங்க என் மனசுல இருந்தது. தண்ணி சிகரெட்னா கூட திருத்திடலாம்ன்ற நம்பிக்கையிருக்கும். பொண்ணு விஷயம் அது. அதுவும் கல்யாணம் நெருங்கின டைம்ல நிறுத்தியிருக்கார். அப்படிப்பட்டவர் நம்ம வித்தியை ஏமாத்திட்டா என்ன பண்றதுன்ற பயம்தான். வேற எந்த எண்ணமும் எனக்கில்லைங்க. ப்ளீஸ் என்னை நம்புங்க” என மன்றாட...

அவளின் கண்ணீர் துடைத்து, “உன்னை எனக்குத் தெரியாதா கார்த்தி” என்றான் ஆறுதலாக.

“எல்லாரும் என்னைத் தப்பா நினைச்சிருப்பாங்கள்ல? என் பெயரை நானே கெடுத்துக்கிட்டேன்தான?” என்றாள் அழுகையுடன்.

“ஏய் கருவாச்சி! இங்க பாரு, யாரும் தப்பா எடுத்துக்கல. எல்லார்கிட்டயும் சகஜமா பேசு. நீயா மனசுல எதையாவது நினைச்சிக் குழம்பிக்காத. வித்தியை சமாதானப்படுத்தணும்னு நிறைய வேலையிருக்கு. உன் அழுகையில குழந்தை முழிச்சிட்டா பாரு தூக்கிட்டு வா கீழ போகலாம்.

கீழே இறங்கி வருகையிலேயே, “ஹாய் பச்சையம்மா வாங்க வாங்க. மருமகளை என்கிட்ட குடுங்க” என்றான் சந்தோஷமாக.

ஏனோ அவன் முகம் பார்க்க கூச்சமாகயிருந்தது கார்த்திகாவிற்கு. எத்தனை பேசியும் மனதில் எதையும் நினைக்காமல் சகஜமாகப் பழகுபவனை என்னவெல்லாம் சொல்லி, ‘ச்சே.. நீயெல்லாம் என்ன படிச்ச கார்த்தி’ என்று அவள் மனசாட்சியே அவளைத் துப்பியது.

“நீங்க குழந்தையைத் தூக்கிக்கமாட்டீங்க. குழந்தை அம்மாகிட்டயே இருக்கட்டும்” என்று வித்யா இடையிட்டாள்.

“இல்ல தியா. நான் நல்லா...”

“இல்லங்க நீங்க தூக்கிக்கமாட்டீங்க” என்றாள் அழுத்தமாக.

மனைவியின் அக்குரலில் ஏதோ சரியில்லையென்று பட்டது. அவளின் முகம் பார்க்கையில் என்றுமில்லாத பிடிவாதம் தெரிய, “சுபாஷ் இன்னைக்கே போகணுமா? நாளைக்குக் காலையில நாம எல்லாரும் சேர்ந்தே போகலாமே?”

“இல்லங்க. அவங்க இன்னைக்குக் கிளம்பட்டும். நாம நாளைக்குப் போகலாம்” என்றாள் அதே அழுத்தத்துடன்.

ஏன் என்பதாய் ஆனந்த் பார்வையிருக்க, மனைவியின் கலங்கிய கண்களைக் கண்டவன், “ஒரு நிமிஷம் இதோ வந்திருறோம்” என்று அங்கிருந்த தாயின் அறைக்குள் அழைத்துச் சென்று, “ஏன் தியா இப்படி பிஹேவ் பண்ற? உன்னோட கேரக்டர் இது கிடையாதே. மேல என்ன நடந்தது? ஏய் ஏன்மா அழுற? தியா...” சட்டென்று தன்மேல் ஒட்டிக்கொண்டவளை, ஆச்சர்யமாய் பார்த்து புன்னகையுடன் கட்டிக்கொண்டான்.

“நாம அங்க போக வேண்டாம்” என்றாள் அழுகையினூடே.

“மறுவீடு சடங்கு போய்த்தான ஆகணும். மறுத்தா பெரியவங்க சங்கடப்படுவாங்களேமா.”

“மறுவீடு இன்னொரு நாள் வர்றோம்னு சொல்லிரலாம்.”

“அப்ப என்ன நடந்ததுன்னு சொல்லமாட்ட?”

‘ம்கூம்’ என்று தோளிலேயே தலையசைக்க... “அப்ப ஓகே” என்று அப்படியே நிற்க, கதவு தட்டும் ஓசையில் தங்களின் நிலை புரிய முகத்தில் வெட்கங்கள் ஜாலமிட விலகப் போனவளை, “இப்ப எதுக்கு விலகுற? பர்ஸ்ட் டைம் நீயா வந்து கட்டிப்பிடிச்சிருக்க. இதை மிஸ் பண்ண விரும்பல. அப்படியே நில்லு” என்றான் செல்ல அதட்டலாக.

“யாரோ கதவைத் தட்டுறாங்க.”

“அவங்க தட்டிட்டே இருக்கட்டும். நாம கொஞ்ச நேரம் இப்படியே இருக்கலாம் தியா.”

“ப்ச்.. எதாவது முக்கியமான விஷயமா இருக்கப்போகுது. பார்க்கலாம் வாங்க.”

“ஏய் கதவு திறந்துதான் இருக்கு. அவங்களே நாகரீகம் கருதி நிற்கிறாங்க. நீ ஏன் அவசரப்பட்டு ஓடுற” என்று மெல்லிய குரலில் கடிய... அவளோ நிமிர்ந்து கணவன் முகம் பார்க்க... சட்டென்று கண்ணடித்து,

உள்ளம் கொள்ளை போகுதே

உன்னைக் கண்ட நாள்முதல்

உள்ளம் கொள்ளை போகுதே

அன்பே என் அன்பே – என்று பாட தலைதூக்கி ‘நிஜமா’ என அவள் பார்வையினாலே கேட்க,

காதல் காதல் இது காதல் என்றேன்! கண்சிமிட்டி உண்மையென்றதும், அப்படியே தோள்சாய்ந்து, இதயப்பகுதியில் முத்தமிட, இதயத்துடிப்பின் ஓசைகள் மட்டுமே அங்கே.

“ஏய் அண்ணி இப்ப வெளியில வரல, நீங்க எப்படியிருந்தாலும் பரவாயில்லன்னு உள்ள வந்திருவேன்” என்று கீர்த்தி மிரட்டல் விட்டாள்.

சட்டென்று இருவரும் விலகி, “வா லூசு” என சம்மதம் தெரிவிக்க, முதலில் வந்தவளைப் பார்த்து இவ்வளவு நேரமாக மலர்ந்திருந்த முகம் சட்டென்று வாடியது.

இவர்கள் பேசட்டும் என்று கீர்த்தி குழந்தையுடன் கீழே சென்று அனுவுடன் சேர்ந்து கொண்டாள்.

நேரே ஆனந்திடம் வந்த கார்த்திகா, “என்னை மன்னிச்சிருங்க அண்ணா. நான் நிறைய தப்புப் பண்ணிட்டேன். அதுவும் உங்களை... சாரி” என்று அழ ஆரம்பித்தாள்.

“ஏய் பச்சையம்மா! என்ன இது புதுசா? அண்ணன்ற, மன்னிப்புன்ற, ஆர் யூ ஆல் ரைட்” என்று சுபாஷைப் பார்த்து என்னவென்று ஜாடையாய் கேட்டான்.

“இதுவரை இவளுக்குத் தெரியாத சிலதைச் சொல்லிப் புரியவச்சேன் மச்சான்” என்றான் அமைதியாக.

“சாரி அண்ணா. நான்தான் என்ன செய்யுறேன்றது புரியாம உங்களை ரொம்ப நோகடிச்சிட்டேன். ஐம் சாரி” என்று திரும்பத்திரும்ப மன்னிப்பு கேட்க...

“ஹேய் தியா, உன் அண்ணி என்னை அண்ணா சொல்லி பச்சையம்மாள்னு பெயர் சொல்ல முடியாம பண்ணிட்டா” என்றான் சந்தோஷமாக.

“நீங்க சொல்லலைன்னா பரவாயில்ல மச்சான். நான் கருவாச்சியை விட்டுட்டு பச்சையம்மாவுக்கு மாறிட்டேன்” என்றதும் கார்த்தி அவனைக் கிள்ள, மற்றவர்கள் சிரிக்க வித்யா மட்டும் எதிலும் கலந்து கொள்ளாமல் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்திருந்தாள்.

அதைக்கண்ட கார்த்தி மனம் சுருங்க வித்யாவின் கைபிடித்து, “நான் அப்படி சொல்லியிருக்கக்கூடாது வித்தி. இனிமேல் அண்ணாவை தப்பா எதுவும் எப்பவும் பேசமாட்டேன்.”

“நடந்ததை எப்படி அண்ணி மாத்தமுடியும்? என்னால சட்டுன்னு மறக்க முடியல.”

“வித்தி கார்த்திதான் மன்னிப்பு கேட்கிறாள்ல.”

“சாரிண்ணா. என்னால அந்த விஷயத்தை அவ்வளவு ஈஸியா எடுத்துக்க முடியல. இப்பவும் மனசுக்குள்ள...”

“என்ன விஷயம் தியா? அதுக்கு காரணம் நானா?” என்று ஆனந்த் கேட்க...

“அப்படிலாம் எதுவுமில்லங்க. நீங்க என்ன தப்பு செய்தீங்க காரணமாயிருக்க? இது வேற விஷயம். அண்ணா நீங்க கிளம்புங்க. நாங்க நாளைக்கு வர்றோம்” என்று தன் நிலையில் நின்றாள்.

“வித்தி ப்ளீஸ் இப்படிலாம் பேசாத. வேணும்னா அண்ணா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுக்கறேன்” என்று மற்றவர்கள் சுதாரிக்கு முன், ஆனந்த் நோக்கித் திரும்ப, சட்டென்று ஆனந்த் விலக, சுபாஷ் வந்து அவளைத் தடுத்து, “என்ன பண்ற கார்த்தி?” என்றான் அதட்டலாக.

“அச்சோ ஏன் அண்ணி இப்படிப் பண்றீங்க?” என்று வித்யா பதற...

“ஏய் பச்சையம்மா! ஏன்மா? உன்னை தங்கச்சின்னு பிரமோட் பண்றதுக்குள்ள டிபிரமோட் ஆகுற” என்றான் ஆனந்த் அலறலாக.

“என்னது டிபிரமோட் பண்ணிட்டீங்களா? சட்டப்படி இது செல்லாது. நான் கேஸ் போடப்போறேன்” என்று கார்த்தி வேகமாக சொன்னதும். “அண்ணி இதை நான் ஆமோதிக்கிறேன்” என்று வித்யா கார்த்தியினருகில் வந்தாள்.

“சாரி வித்தி. என் பிள்ளைக்கு தாய்மாமா உறவு வேணும்ன்றதைப் புரிஞ்சிக்கிட்டேன். கூடப்பிறந்தவனே இருந்திருந்தாலும் இப்போதைக்கு அந்த உரிமை அண்ணாவுக்கு மட்டும்தான். ப்ளீஸ் மாட்டேன்னு சொல்லிடாத” என்றாள் கெஞ்சலாக.

“அண்ணி விடுங்க நான் மறந்துட்டேன். அவங்களுக்கு இது தெரிய வேண்டாம். தெரிஞ்சா தாங்கிக்க மாட்டாங்க.”

“வித்யா” என்று கண்கலங்க.

“ப்ச்... கண்ணைத் துடைங்க அண்ணி. உண்மையைச் சொல்லட்டுமா, நீங்க என்னோட ஹீரோயின். உங்க கல்யாணத்துக்கு முன்னாடியும், நாம பேசிக்கலன்னாலும் உங்க கேரக்டர் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நீங்களே என் அண்ணியா வந்தப்ப நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா? உங்க கல்யாணம் பிரச்சனையில்லாமல் நடக்கணும்னு எத்தனை சாமியை வேண்டியிருக்கேன்னு எனக்குத்தான் தெரியும்.”

“வித்தி!” என்ன சொல்வதென்று தெரியாமல் அவளின் அன்பில் மலைத்து நிற்க...

“அண்ணி இந்த ரெண்டு நாளா நடந்த எல்லாத்தையும் நாம மறந்திரலாம். ஓகேவா?” என்றதும் நாத்தனாரை அணைத்துப் புன்னகைத்தாள் கார்த்திகா.

“நீங்க என்ன பேசிக்கறீங்கன்னு புரியல. கடைசியா சொன்னது பெஸ்ட். மறப்போம்! மன்னிப்போம்! தமிழர் பண்பாடு!”
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
“அதுவாங்க அண்ணி பெயர் பச்சையம்மாள்னா, அவங்க அண்ணன் பெயர் பச்சையப்பன்னு சொன்னேன்” என கிண்டலாய் மொழிய...

“ஏய்” என்று அவளை விரட்ட, படியிறங்கி வந்தவள் மாமியாரின் பின் ஒழிய... “தியா வந்திரு” என்றழைத்தான். அவளோ “அத்தை காப்பாத்துங்க” என்று மாமியாரிடம் சரணடைய,

“ஹேய் என்ன நடக்குது இங்க? வயசுப்புள்ள ஒருத்தி உட்கார்ந்திருக்கேன், என் முன்ன ஓடிப்பிடிச்சி விளையாடுறீங்க? இதோ வர்றேன்” என்று எழப்போனாள்.

“கீர்த்திமா குழந்தை ஜாக்கிரதை” என்று வரலட்சுமி சத்தமிட...

“ஹையோ! நம்ம வீடா இது? இவ்வளவு கலகலப்பா. அண்ணா உன் கல்யாணத்தால வீட்டுக்கே ஒரு அழகு வந்திருக்கு தெரியுமா?”

“அப்ப என்னால இல்லையா அண்ணி” என வித்யா அப்பாவியாய் கேட்டாள்.

“கல்யாணத்துல ஹீரோயினே நீங்கதான அண்ணி. ஆல் கிரெடிட் உங்களுக்கு மட்டுமே!”

அன்று முழுவதும் கலகலப்பாக சென்று இரவு வர... “ஹேய் மிஸஸ்.வித்யானந்த் மேக்கப்லாம் கொஞ்சம் தூக்கலாயிருக்கு. என்ன விசேஷம்?” என்று ஒருவித ஆராய்ச்சியுடன் கேட்க.

“சும்மாதான்.”

“நம்பிட்டேன். காய்ச்சல் போயிருச்சா?”

“கல்யாண ஜுரம் போயிருச்சி. வேணும்னா செக் பண்ணிக்கோங்க” என்று கழுத்தை அவன்புறம் காண்பிக்க,

“நான் செக் பண்ணினா அது வேற மாதிரியிருக்கும். எப்படி வசதி?” என்றதும், “பரவாயில்லை” என்று வெட்கத்தில் தலை கவிழ... “தியா என்ன நீ வெட்கப்பட்டு என் ஹார்ட் பீட் எகிற வைக்கிற. நிஜமாவேதானா?”

கணவனின் சந்தோஷ அலறலில், “நான் பொய் சொல்லமாட்டேன்” என்றாள் பட்டென்று.

மனைவியின் ஜுரத்திற்கான டெம்பரெச்சர் அளவை அவளின் கழுத்தில் தன் உதடுகளால் அளவிட ஆரம்பித்து, அது முடிவில்லாமல் போய் அவர்களின் இல்லற வாழ்க்கையை இனிதே ஆரம்பித்து வைத்தது.

மறுநாள் குடும்பத்துடன் செங்கல்பட்டு சென்று பெயர் வைக்கும் விழாவை சிறப்பாக்க, திருமணத்தன்று வம்பு பேசிய வாய்கள் எல்லாம் அவர்களின் ஒற்றுமையைக் கண்டு அடங்கி, புகழ ஆரம்பித்தது.

பெயர் வைக்கும் சமயம் ஆனந்திடம் வந்த கார்த்திகா, “அண்ணா என் பொண்ணுக்கு தாய்மாமனா நீங்க பெயர் வைங்க” என்று நிற்க...

“பெரியவங்க இருக்கும்போது நான் எப்படி? அவங்ககிட்ட சொல்லுமா” என்றான்.

“அவங்க எல்லார்கிட்டேயும் பெர்மிஷன் வாங்கியாச்சி. நீங்க சொல்லுங்க” என்றதும் கண்கள் மனைவியைக் காண, அவளின் விழியசைப்பில், குழந்தையின் முகம் பார்த்தவன், “நிலா மாதிரி ஜில்லுன்னு எப்பவும் ஜொலிக்கணும். அதனால என் மருமகளுக்கு சந்தியான்னு பெயர் வைக்கிறேன்” என்று குழந்தையின் காதில் மூன்று முறை பெயரைச் சொல்லி செயினும் மோதிரமும் போட்டான்.

விழா முடிந்து காலை பதினோரு மணிக்கெல்லாம் ஆசிரமம் வந்து பேசியபடி, அங்கிருந்தோருக்கு மதிய உணவுக்கு ஏற்பாடு செய்து அவர்கள் வயிறார உண்டு மனதார வாழ்த்திட, அதை முக மலர்வுடன் ஏற்றுக் கொண்டார்கள் புது மணமக்களும், புதிதாகப் பூத்திருந்த அந்த நிலா மகள் சந்தியாவும்.

என் சோகக் கதையைக்கேளு

தாய்க்குலமே அம்மா தாய்க்குலமே!

மாலை ஐந்து மணியளவில் சோக கீதம் ஒன்று ஆசிரமத்தில் கேட்க... “திரும்பவும் அதே பாட்டா?” பாடிய ஆனந்தைப் பார்த்தபடி, “அவன்தான் கல்யாணம் வேண்டாம்னு பாடினான். உனக்கென்னப்பா? நீதான் பிடிச்ச பொண்ணையே கட்டிக்கிட்டியே அப்புறமென்ன?” என்று தேனு பாட்டி கேட்டார்.

“அதான தேனு. உன் சோகம்தான் என்னன்னு சொல்லுப்பா ஆனந்து?” என்றார் முத்துப்பாட்டி.

“அதுவா பாட்டி, நான் பொண்ணு கேட்டதும், எங்க கல்யாணத்துக்கு அவங்க ஒத்துக்க மாட்டேன்னு சொல்லி மறுத்து, ஹீரோயிஸம் காண்பிச்சி, அட்வென்ஜர்லாம் பண்ணி கஷ்டப்பட்டுக் கல்யாணம் பண்ணிக்கனும் நினைச்சிருந்தேன். இவளோட அத்தை என்னடான்னா ஈஸியா தூக்கிக் குடுத்துட்டாங்க” என்று சோகமாக சொல்லி பாவமாய் முகம் வைத்தான்.

“சுபாஷுப் பயலே நமக்கேத்த புள்ளையைத்தான் வித்யாவுக்குப் பார்த்திருக்கீங்க. எப்பவும் இதே சந்தோஷத்தோட மனநிறைவா வாழணும்பா” என்று வயதான பெண்மணிகள் ஒரு மனதாக வாழ்த்தினார்கள்.

“வேற சுபாஷோட மச்சான்னா சும்மாவா” என்று காலர் தூக்க... “எங்க அண்ணாவாச்சே” என்று கார்த்திகா கணவனுடன் சேர்ந்து சொன்னாள்.

“ஆனந்த் தம்பி, ஏன்பா என்னை உன் பொண்டாட்டிகிட்ட போட்டுக் குடுத்துட்டீங்க? அவ உங்களை எப்படி முறைக்கிறாள்னு பாருங்க?” சுபாஷிணி தன் பங்கிற்கு வித்யாவைத் தூண்டிவிட...

“நான் உங்களுக்கு ஈஸியா கிடைச்சிட்டேனா? அட்வென்ஜர் பண்ணி, ஹீரோயிஸம் காட்ட ஆசையிருந்துச்சா? இப்பவும் ஒண்ணும் குறைஞ்சி போயிடல. நான் இங்கேயே இருக்கேன். நீங்க ஹீரோயிஸம் காட்டுங்க” என்று நடக்க ஆரம்பிக்க... மனைவியின் கோபம் உணர்ந்தவனோ சமாதானப்படுத்தியபடி பின்தொடர ஆரம்பித்தான்.

“ஹா..ஹா அண்ணா நீங்க காலி” என்று கீர்த்தி கத்த... வீட்டுப் பெரியவர்கள் அவர்களின் சேட்டைகளை ரசித்திருந்தார்கள்.

“ஏய் தியா நில்லு. நீ இப்படிலாம் சொல்லக்கூடாது. எனக்கு ஹீரோயிஸம் வேண்டாம். நீ.. நீ மட்டும் போதும். நீ எனக்கு ஈஸியால்லாம் கிடைச்சிரல. உனக்காக ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன்.”

“அப்படியென்ன கஷ்டப்பட்டீங்க?”

“கல்யாணத்தன்னைக்கு நீ மயக்கம் போட்டு விழுந்தப்ப, உன்னை நான்தான் கஷ்டப்பட்டுத் தூக்கிட்டுப் போனேன். ஷப்பா என்ன வெய்ட்டு, என்ன வெய்ட்டு” என்று மனைவியவளை வம்பிழுக்க...

அவன் எண்ணம் போல் வேகமாக கணவனருகில் வந்து, “நான் வெய்ட்டா? உங்களை...” என்று செல்லமாய் தோளில் அடித்து, அதிலேயே சாய்ந்து கொண்டவளை அணைத்துப் பிடித்து, “இந்த இடத்துலதான் உன்னை முதல்முறையா பார்த்தேன். உனக்கு வரப்போற மாப்பிள்ளையைப் பற்றியும் தெரிஞ்சிக்கிட்டேன். அது நானாயிருக்கணும்னுதான் காத்திருந்து கல்யாணமும் பண்ணிக்கிட்டேன். என்ன நீ கேட்ட சைட்டடிக்கிற சூழ்நிலை மட்டும் இல்லாமல் போயிருச்சி” என்றான் மென்மையான குரலில்.

“நீங்க அக்கறையா, அன்பா பார்த்த பார்வை அனைத்துமே எனக்கு சைட்டடிக்கும் பார்வைதான். காதல்னா கட்டிப்பிடிச்சிட்டு கொஞ்சிட்டே இருக்கிறதுன்னு அர்த்தம் கிடையாது. காதல்ன்றது வாழ்ந்து காட்டுறது. நீங்க என் வாழ்க்கையில் வந்ததுக்கு நன்றி சொல்லணும்தான். பட், கணவன் மனைவிக்குள்ள அதெல்லாம் சரிப்படாதுல்ல. சோ, ஐ லவ் யூ” என்றாள் சிரித்தபடி.

அவள் தலையோடு மெல்ல மோதி, “அது எனக்கும் பொருந்தும் தியா. என் வாழ்க்கை முழுமையடைய, என் மனைவியா நீ வந்ததுக்கு, நானும் ஐ லவ் யூ!”

மௌனங்கள் மட்டுமே அவ்விடத்திலிருக்க, மனங்கள் மட்டும் ஒருமித்ததோ!



நட்புடன்

சொர்ணா சந்தனகுமார்
 
Top