• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

நிறைவுப் பகுதி

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
25



வளைகாப்பு அன்று காலை பரபரப்புடனே விடிந்தது. தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்த அகிலாவிற்கு நன்றி சொன்னாள் சுபா.

“எதுக்கு சுபா இந்த திடீர் நன்றி? உனக்கு மேக்கப் போடுறோமே அதுக்கா?”

“ப்ச்... இல்லடி. நீ ஒருநாள் பண்ணின அட்வைஸ்தான் என் மனமாற்றத்துக்கு முதல் முக்கிய காரணம். அதான் இந்த நன்றி.”

“அடிப்பாவி! நான் ஐந்து மாதங்களுக்கு முன்னாடி அட்வைஸ் பண்ணி வீட்லபோயி யோசிக்க சொன்னேன்தான். அதுக்காக இத்தனை மாசமாவா உட்கார்ந்து யோசிச்ச? உன்னால மட்டும்தான்டி இதெல்லாம் முடியும்” என்று சுபாவின் லேட் பிக்கப்பிற்கு சர்டிபிகேட் கொடுத்தாள்.

“என்ன அகிலா நீங்க.. அண்ணிக்கு எங்க அண்ணனை சைட்டடிக்கவே நேரம் சரியாயிருந்திருக்கும். இதுல நீங்க என்ன சொன்னீங்கன்னு மறந்திருப்பாங்க. நியாபகம் வந்து யோசிக்க டைமாகிருக்கும். இல்லையா அண்ணி?” என்று கேலியுடன் கேள்வியை சுபாவிடம் திருப்பினாள்.

“யா... சாதுமா ஹண்ட்ரர்ட் பெர்சண்ட் கரெக்ட்.”

சாதனா, ‘பார்த்தீங்களா. நான் சொல்லல’ என்று அகிலாவைப் பார்க்க... அவள் சுபாவை முறைத்து, “நல்லா வருவடி நீ. நான்தான் என்னுடைய மூளையை உனக்காக யோசிச்சி வேஸ்ட் பண்ணியிருக்கேன்னு நல்லாவே தெரியுது. இதுல உன்னோட பாசமலர் வேற என் தங்கச்சியை எதுவும் சொல்லாத அகின்னு சீன் போடுறாங்க.”

அதே நேரம் ஜீவா அங்கேவர... “ஏன் ஜீவாண்ணா இதெல்லாம் கேட்கமாட்டீங்களா?” என்றாள் அகிலா.

“வெளங்கிடும்! உங்களுக்கு பஞ்சாயத்து பண்ண ஆளே கிடைக்கலையா அகிலா? அண்ணியோட அண்ணன்களையாவது கொஞ்சமே கொஞ்சமாவது நம்பலாம். ஆனா என் அண்ணன் இருக்கானே......... அந்த டாட் போட்ட இடத்தை நீங்களே நிரப்பிக்கோங்க.”

“அவ கிடக்கிறா விடுமா. கடைசியா என்னை அண்ணான்னு கூப்பிட்டுட்டியா?”

“ஆமா. நான் சொன்னது நடந்திருச்சி. அதனால நீங்க எனக்கு அண்ணாவாகிட்டீங்க.”

“ஹேய் அகி! என்ன பேசுறீங்கன்னு தெளிவா எனக்கு புரியுற மாதிரி பேசுங்க” என்று சுபா சொல்ல...

“ஆமாடி. நீ இத்தனை மாதமா ரொம்ப தெளிவாத்தான பேசுன.”

“அகி தங்கச்சியை எதுவும் சொல்லாத?”

“சொல்லலங்க சார். வந்துட்டாங்க வாழைக்காய்க்கு வாய்ப்பாடு வராதுன்னு சொல்றதுக்கு.”

“ஹேய்! இதெப்படி உங்களுக்குத் தெரியும்.” சாதனா கேட்க...

“ஹ்க்கும்... இன்னும் கொஞ்ச நாள்ல உலகத்துக்கே தெரியப்போகுது, எனக்கு தெரிஞ்சதுக்காக ஃபீல் பண்ணுறா பாரு.”

“அகிலா ப்ளீஸ் விளையாடாம சொல்லுங்க?”

“ம்... எல்லாம் உங்க ஆத்துக்காரர்தான்.”

“யா... தட்ஸ் மீ” என்றபடி வந்தான் ப்ரேம். தன்னை முறைத்த மனைவியிடம், “எல்லாம் உனக்கான பபளிசிட்டிதான்டா தனாகுட்டி.”

“அச்சோ! குட்டி விட்டின்னுட்டு.”

“ஹேய்! நான் என்ன என் மாமனார் மாதிரி டார்லிங்கா சொன்னேன்.”

“ஆமா பெரிய வித்தியாசம் கண்டுட்டீங்க. நல்லா பாருங்க ரெண்டுக்கும் ஒரே அர்த்தம்தான் வரும்.”

“அப்படியா சொல்ற சாதுமா? இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா வந்து டார்லிங்கை, வந்து குட்டியாக்கியிருப்பேனே” என்று விவேக் வாரலுடன் வர...

“அப்பாஆஆஆ” என பல்லைக்கடிக்க...

“ஓகே ஓகே எனக்கு டார்லிங்கே போதும். ப்ரேம் நீ குட்டி வச்சிக்கோ.”

“தங்கள் சித்தம் என் பாக்கியம் மாமா.”

“பங்ஷனை வச்சிக்கிட்டு இங்க என்ன கூத்தடிச்சிட்டிருக்கீங்க?” என்றபடி வந்தனா வர, “”வந்து டார்லிங் ஐ மிஸ் யூ” என விவேக் சட்டென்று சொன்னார்.

“ஆமா நாங்களும் மிஸ் யூ” என கோரஸ் குரல்கள் கேட்க... “தொலைச்சிடுவேன் ராஸ்கல்ஸ். எல்லாருக்கும் கொழுப்பு ஜாஸ்தியாகிருச்சி. அகிலா மேக்கப்லாம் முடிஞ்சிதா?” என்றார்.

“முடிஞ்சது” என்று அவள் பதிலளித்ததும், “ஒருத்தர் போய் வாசல்கிட்ட நில்லுங்க. ஒருத்தர் எனக்கு துணைக்கு வாங்க. ஒருத்தர் ஹோட்டல்ல ஆர்டர் பண்ணிய சாப்பாடு எல்லாம் கரெக்டா வந்திருச்சா பாருங்க” என ஒவ்வொரு வேலையாக கொடுத்து ஒவ்வொருவராக விரட்டினார்.

“டேய் தடிமாடு தாண்டவராயா! எங்கடா போன? வாசலுக்கு நேரே பூ தொங்குது பாரு. ஒவ்வொரு விசேஷத்துக்கும் சொல்லிக்கிட்டே இருக்கணுமா?”

“ஐயா எனக்கு கல்யாணமாகிருச்சி. இன்னும் என்னை தடிமாடுன்றது தப்பில்லையா?” என்று அப்பாவியாய் கேட்க...

“அதை என் மருமக சொல்லட்டும் ஒத்துக்கறேன். நீ சொல்லுமா அகிலா? நான் உன் புருஷனை எப்படி கூப்பிடுறது?”

“நான் இப்ப இடையில வந்தவ மாமா. எனக்காக உங்க பழக்கவழக்கங்களை மாத்திக்க வேண்டாம். உங்களுக்கு தோணுறதை செய்யுங்க” என்று பவ்யமாக சொல்லி ராஜனுக்கு ஹைபை கொடுத்து கணவனைப் பார்த்து கண்ணடித்தாள்.

“அடிப்பாவி! நீயுமா? டேய் தாண்டவ் நீ ஒரு ஆயுள் தண்டனை கைதிடா. இதிலிருந்து விடுதலையே இல்லை. இனியும் விடுதலை வேண்டாம்” என்று கிளம்பினான் மாலையை சரிசெய்ய.

“அப்பா நீங்களா? ஹைபைலாம் கொடுத்துட்டு நம்பவே முடியலையே? எங்ககிட்ட பேசுறதுக்கே அவ்வளவு யோசிப்பீங்களே. நான் ஆஃபீஸ் போனதும் இந்த வேலையெல்லாம் நடக்குதா?” என ப்ரேம் வியப்பாய் வினவ...

“அதுடா எனக்கு சேர்க்கை சரியில்லையாம். உங்கம்மா டெய்லி சொல்றா. மருமகள்களோட சேர்ந்து அவங்களை மாதிரியே பேசுறேனாம்.”

“ஹ்ம்... நடக்கட்டும்பா நடக்கட்டும்.” ப்ரேம் சந்தோஷத்தில் சலித்தபடி சொன்னான்.

சுபாவிற்கு புதிதாக டிரைவர் வந்ததால் தாண்டவிற்கு வேலை போனது. யார் அந்த புது டிரைவர் பார்க்குறீங்களா? அதான்ங்க அவளோட சிவா. ராஜன் தாண்டவை தன்னகத்தே அழைத்துக் கொண்டார். மகனோடு மருமகளையும்(அகிலா) சேர்த்து தன் கம்பெனியிலேயே வேலை கொடுத்து தங்களுடனே தங்க வைத்துக் கொண்டார்.

சற்று நேரத்திற்கெல்லாம் அனைவரும் தங்கள் அறையை விட்டு அகல, அவர்களின் சேட்டைகளை பார்த்துக் கொண்டிருந்த ஜீவா மனைவியின் பக்கம் திரும்ப... சுபாவோ அங்கு நடந்த எதுவும் காதிலோ, கருத்திலோ ஏற்றாமல் கணவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அழகன்டா சிவா நீங்க.” எப்பொழுதும் போல் மனதில் நினைத்தது வார்த்தையாய் வெளிவர, அதைக் கேட்டபடி மனைவியின் மயக்கும் பார்வையில் மந்திரத்திற்கு கட்டுண்டவன் போல் அவளருகில் வந்தவன், “இப்ப என்ன சொன்ன சுப்பு” என்றான்.

“நானா? நான் என்ன சொன்னேன்?” என தடுமாறி கணவனின் கண்பார்த்து “அழகன்டா சிவா நீங்க சொன்னேன்” என பார்வையை மாற்றாமல் வெளிப்படையாகவே சொல்ல...

அவள் அமர்ந்திருந்த ஷோபாவின் கைப்பகுதியில் அமர்ந்து, “சுப்பு சூப்பராயிருக்கடி” என்ற கணவனின் ஹஸ்கி வாய்ஸில் மயக்கும் பார்வை மந்தகாசமாகி சன்னமான புன்னகையும் சேர்ந்து வர, அந்த அழகை ரசித்தவன் “அழகுடி செல்லம்” என்றான் அவளின் கண் பார்த்தபடி.

என் கண் கொண்டு

உனை காணச் செய்வதாய்

சொல்லியவன்.!

உன் விழிபட்டு,

என் விதி வென்றேன் தேவியே!

மீண்டும் என் வாழ்வில்,

நின் பாதம் பதித்ததும்

புத்துயிர் பெற்றதுபோல்

என் அணுக்கள் யாவிலும்

நிறைத்துக் கொண்டேனடி உனை!

உன் விழிப்பார்வை ஈர்ப்பினில் - என்

கண்ணில் ஒளி வீசுதடி!

“கவிதை சூப்பர்ங்க” என்று கணவனின் கன்னத்தில் முத்தமிட்டு, அவன் முகத்தை தன் கைகளில் ஏந்தி கணவன் கவிதைக்கான பதில் சொன்னாள்.

உன் கண் கொண்டு - எனை

காணச் செய்தாய் - விதியை உடைத்து

எனக்கான உலகம் அமைத்தாய்!

உயிரற்ற சருகான - என் வாழ்வில்

விழி வாசல் திறந்து வைத்தவன் நீயடா!

உன் கருவிழிப் பார்வைதனிலே - என்

கண்ணிற்கு ஒளியாய் வந்தாயடா!



சற்று நேரத்திற்கெல்லாம் ஆள்கள் வர, இரண்டு பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளும் ஜீவாவின் மனைவி யாரென்று தெரிந்து கொள்வதில் ஆர்வமாக வந்தனர்.

“எனக்கு அவங்களைத் தெரியும்” என்பதை யோகா பெருமையடிக்க... “ஹேய்! எப்படித் தெரியும்? பார்த்திருக்கிறியா? எப்படியிருப்பாங்க?” என்று அவளைப் பிடித்து உலுக்கினர்.

“பார்த்திருக்கிறதென்ன, பல தடவை பேசியிருக்கேன். நீங்ககூட பேசியிருக்கீங்க அவங்களுக்கும் எல்லாரையும் போல ரெண்டு கை, ரெண்டு கால் இப்படித்தான்பா இருந்தாங்க” என்று மற்றவர்களின் முறைப்பைப் பார்த்து, “ஒகே இப்ப வருவாங்க நேர்லயே பாருங்க” என்றாள்.

“ஹையோ! இவகிட்ட போயி கேட்டோம் பாரு” என்று திரும்ப, கணவனின் காதலுடனும், தாய்மையின் பூரிப்புடனும் இந்த இரண்டு நாட்களுக்குள் சுபாவின் முகம் இன்னுமே ஜொலிக்க... சாதனா, அகிலாவின் மேக்கப்பும் சேர்ந்து உண்மையிலேயே தேவதையாக காட்டியது சுபஸ்ரீதேவியை.

ஆர்வத்தில் “ஹேய்! சுபா மேம்!” ஆச்சர்யத்தில் வினவ...

“எஸ் சுபா மேம்தான் ஜீவா சார் ஒய்ஃப்” என்றாள் யோகா.

“ஜோடிப்பொருத்தம் சூப்பர். ஒரே இடத்துல வேலை பார்த்தும் ஒருத்தரை ஒருத்தர் தெரியாத மாதிரி இருந்துட்டாங்களே!”

அவர்களை ஜீவா வந்து வரவேற்க, அவர்களின் கே(ள்வி)லி பேச்சுக்களை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
வளைகாப்பு ஆரம்பித்து ஜீவா, சுபாவிடம் சொல்லிச் செல்லலாம் என்று வந்தவர்கள், அவர்களின் பார்வை விளையாட்டில் கலந்து கொள்ளாமல் மற்றவர்களிடம் சொல்லிச் சென்றார்கள்.

“அண்ணி இது என் சார்பா” என்று கைக்கு நான்கு தங்க வளையல்கள் சாதனா போடவும், பதிலுக்கு அவளை அருகில் அழைத்து, “முதல்ல நீயும் ஐந்தாவது மாத சாஸ்திரத்துக்கு போடு” என்று அவளுக்கும் போட... “அ..ண்..ணி நான் ப்ரெக்னண்ட்னு உங்களுக்கெப்படி தெரியும்? நாங்க யார்கிட்டேயும் சொல்லவே இல்லையே?” என ஆச்சர்யமாய் கேட்டாள்.

“நீ சொல்லலைமா. ஆனா, இந்த சம்முகம் இல்ல அவங்க உன் முகத்தைப் பார்த்து கெஸ் பண்ணி நேத்தே எல்லாருக்கும் நியூஸ் தெரிஞ்சி நீங்க பார்க்கிற டாக்டர்கிட்டயும் கேட்டுட்டாங்க. சரி ஏன் நீ ப்ரெக்னண்டா இருக்கிறதை மறைச்ச?”

“அ...அது அண்ணி கொஞ்சம் காமெடியோட, கொஞ்சம் ரொமாண்டிக்கா இருக்கும் பரவாயில்லையா?”

“பரவாயில்லை சொல்லு. நாங்களும்தான் கேட்கிறோமே.”

“தனா வேண்டாம்” என்று கணவன் கையசைத்தது கருத்தில் பட்டாலும், ‘ப்ச்..’. என அதை உதறி, “நீங்க வீட்டைவிட்டுப் போன அன்னைக்கு நைட்...”

சுபா மாமனாருடன் வெளியேறிய அன்று அனைவரும் சோகத்திலிருக்க, ப்ரேம் தங்களின் அறைக்கு வந்து, “தனா உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்” என்று சற்று இடைவெளி விட்டான்.

“ நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குத் தெரியும். என்ன என் தங்கச்சி ஹேப்பியா இல்ல. அவள் புருஷனோட சேருறவரைக்கும் நமக்குள்ள எதுவும் வேண்டாம்னு சொல்லப்போறீங்க அப்படித்தான?”

“ம்... ஆமாம்.”

“நீங்க சொல்ல வர்றதை செய்யலாமே” என்றதும் ப்ரேம் சம்மதமாக தலையாட்ட...

“கொன்னுருவேன் உன்னை. என்ன நினைச்சிட்டிருக்க மனசுல? என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது? நமக்குள்ள உடல் ரீதியா எந்த உறவும் இதுவரை இல்லாமலிருந்தா கூட சரி பரவாயில்லைனு மனசைத் தேத்திக்கிட்டு காத்திருக்க சம்மதிச்சிருப்பேன். ஆனா, மூணுநாள் குடும்பம் நடத்திட்டு உன்னை.. இப்படி நாம முடிவெடுப்போம்னு தெரிஞ்சதால தான அவங்க மூணுநாள் கேப் விட்டு இன்னைக்குச் சொல்லியிருக்காங்க போல.”

“அவங்க ஏதோ லூசுத்தனமா முடிவெடுத்தா, நீயும் சைல்டிஷா பிஹேவ் பண்ற? எனக்கும் மனம் முழுக்க அவங்க மேல பாசம் உண்டு. நீ ஏதோ தியாகம் பண்றதா நினைச்சி நானும் சரின்னு சம்மதிச்சிருவேன். ஆனா, யாருக்காக நாம நம்ம சந்தோஷத்தை இழக்கிறோமோ அவங்க இதைக்கேட்டா சந்தோஷப்படப் போறாங்களா? இல்ல அவங்களோட பிரச்சனையெல்லாம் சரியானதும் நம்ம தியாகத்துக்கு தீபாராதனையா காட்ட போறாங்களா? அத்தனை நாள் தொலைச்ச சந்தோஷத்தையும் முழுசா திகட்டத் திகட்ட அனுபவிப்பாங்க.”

“ம்கூம்... இதெல்லாம் வேலைக்காகாது. நானும் எங்க அண்ணியோட பாணியை கடைபிடிக்கிறதுதான் பெஸ்ட். நான் என் மாமனார், மாமியாரோட இங்கேயே இருக்கிறேன். நீங்க கிளம்புங்க. இல்லையா ஒரு வாரமோ, பத்து நாளோ டைம் எடுத்துக்கிட்டு என்னோட குடும்பம் நடத்துற வழியைப் பாருங்க” என்று பொறிந்து தள்ளிவிட்டு தண்ணீர் குடித்து கட்டிலின் மறுபுறம் படுத்துக்கொண்டாள்.

அதுவரை திகைப்பிலிருந்த ப்ரேம் கொஞ்சம் சுயநினைவு வந்து “அடிப்பாவி” என்றான் வியப்பில். தான் ஆரம்பித்ததும் தன் எண்ணத்தை ஒட்டியே மனைவி பேச சந்தோஷப்பட்டவன், ‘கொன்னுருவேன் உன்னை’ என்றதும் வாயடைத்துப் போய் அவளின் வாயையே பார்த்துக் கொண்டிருக்க, முதல் நாள் சந்திப்பு மனதில் வந்து இருந்த கவலையெல்லாம் மீறி ஒரு புன்னகை தோன்ற தானும் யோசித்தான்.

‘கல்யாணத்துக்கப்புறம் தங்கையை முழு முயற்சியோடு பாதுகாக்கலாம். அதற்காக தன்னை நம்பி வந்தவளை ஏன் ஏமாற்ற வேண்டும். தங்கை எவ்வளவு முக்கியமோ, அதைவிட தாரம் முக்கியமல்லவா.” தேவியை அவள் கணவன் பொறுப்பில் விட்டுவிட்டு, மனைவியிடம் சென்றவன், “தனா ஒரு வாரமோ, பத்து நாளோ அதிகமா இருக்கே? குறைஞ்சது ஒன்றிரண்டு நாள் குடேன்” என்றான்.

கணவன்புறம் திரும்பியவள் முகம் மலர, பின் “ப்ச்... வேண்டாங்க. நான் ஒரு வேகத்துல சொல்லிட்டேன். இப்ப யோசிச்சா நீங்க சொல்றதுதான் சரின்னு தோணது. அதையே ஃபாலோ பண்ணலாம்” என்று கொஞ்சம் சீரியஸாகவே பேச...

மனைவியின் முகத்திலுள்ள தீவிரத்தை உணர்ந்து, ‘இவளை என்ன செய்யலாம்’ என நினைத்தவன், “ஏய் லூசு! உனக்கு ஒன்றிரண்டு நாள் இல்ல, ஒரு மணிநேரம் கூட கிடையாது. போடி” என்று மனைவியை தன் அணைப்பிற்குள் கொண்டு வந்தான்.

சாதனா சொல்லி முடிக்கவும் அனைவரின் சிரிப்பொலியிலும் ப்ரேம் அசடு வழிந்தபடி தாயின் பின் ஒழிய... சாதனா வந்த வெட்கத்தை மறைத்து தொடர்ந்து, “இது நாங்க எதிர்பார்க்காதது” என்று வயிற்றைக் காண்பித்தாள். “நீங்க ஒண்ணு சேர்ந்த பிறகு ப்ரெக்னண்டா இருக்கிறதை சொல்லிக்கலாம்னுதான் விட்டுட்டோம். எப்படியும் உங்களுக்கு குழந்தை பிறக்கிறதுக்குள்ள அண்ணன் உங்களை சமாதானப்படுத்திடுவான்னு தெரியும். அப்புறம் எங்க விஷயத்தைச் சொல்லிக்கலாம்னு” என நிறுத்த...

“அதுக்கு ஐந்து மாதம் வரையா மறைப்பீங்க?”

“சாரி” என்று அனைவரிடமும் பொதுவாய் மன்னிப்பை வேண்டினாள்.

“என்ன சொல்லு தேவிமா சாதனா பாணியே தனிதான்” என்று மருமகளை இதமாக அணைக்க... ப்ரேம்-சாதனாவிற்கு அனைவரும் வாழ்த்துச் சொன்னார்கள்.

அப்பொழுதுதான் சுபா கவனித்தாள், அகிலா தாண்டவை பார்த்துக் கொண்டிருப்பதை. உடனே அவளுக்கு விளங்கிற்று. இரத்த பந்தமில்லாத தாண்டவின் பாசத்தில் மெய்சிலிர்க்க, அதையும் மீறி வருத்தமே வந்தது. திருமணம் முடிந்ததிலிருந்து இவர்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கவே இல்லையென்று தோன்றியதும், முதன்முறையாக தன் உள்ள உணர்வுகள் மேல் கோபம் கொண்டாள்.

பின் அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக, “அகி தாண்டவ் அண்ணாவை ரொம்ப முறைக்காத. அதுக்கு காம்பன்சேஷன் பண்ணிறலாம்” என்றாள்.

“சுபா அப்படில்லாம் ஒண்ணுமில்லை” என்று ஆரம்பித்தவள், தோழியின் அர்த்த பாவனையில் தலைகவிழ்ந்தாள்.

“எதுக்கு அண்ணி திடீர்னு காம்பன்சேஷன் பண்ணப்போறீங்க?” சாதனா கேட்க...

அகிலா ‘சொல்லாதே’ என கண்ஜாடை காட்ட, அவர்களின் நல்லெண்ணம் மற்றவர்களுக்கும் தெரியவேண்டுமென்று அவளை அலட்சியப்படுத்தி, “இந்த ரெண்டு நல்லவங்களும் நீங்க செய்யாம விட்ட தியாகத்தை செஞ்சிருக்காங்க” என்று தாண்டவ் அகிலாவை கைகாட்டினாள்.

அவர்களின் பாசத்தில் அனைவரும் ஒருநிமிடம் அமைதியாகி, தங்களது நன்றியை கண்களில் காட்டி, சில நிமிடங்களுக்குப் பின், இருவரையும் கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள்.

“ப்ரேம் மச்சான் அன்ட் தாண்டவ் ரெண்டு பேருக்கும் ஒரு விஷயத்துல ரொம்ப ஒற்றுமை என்னன்னு யாராவது சொல்லுங்க பார்க்கலாம்” என்று ஜீவா சொல்ல...

“ஹா இது தெரியாதா, ரெண்டு பேருக்கும் அண்ணின்னா உயிர். பாசக்கார பயபுள்ளைங்க” என்ற சாதனாவை முறைத்து, “இது எல்லாருக்கும் தெரிஞ்சது. வேற வேற சொல்லு?”

‘ம்...’ என்று குறுக்கும் நெடுக்குமாக யோசித்து இல்லையென்று பதில் சொன்னாள்.

“இதுக்கு இந்த ஃபில்டப் ஆகாது சாது” என்று மற்றவர்களிடம் திரும்பி என்னவென்று கேட்டான்.

அனைவரும் அன்பு, பாசம் அது இதென்று சொல்ல, “ஒண்ணும் வேண்டாம். நானே சொல்றேன்” என்றான் பீடிகையுடன்.

“இது ப்ரேம்-தாண்டவ் கல்யாண விஷயத்துல நடந்தது. அதாவது தேவி, ப்ரேம் மச்சானுக்கு போன் பண்ணி, அண்ணா அடுத்த முகூர்த்தத்துல சாதனாவுக்கும், உனக்கும் கல்யாணம் சொல்றா. என்ன ஏதுன்னு கேள்வி கேட்காம மச்சான் உடனே ஓகே சொல்றாங்க. போலீஸ் ஸ்டேஷன்ல தாண்டவ்ணா அகியை கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு சொல்றா. மறுவார்த்தை பேசாம நீங்க சொன்னா சரி பாப்பான்றாரு” என்றவனின் பாவனையில் அனைவரும் சிரிக்க...

“ம்... உங்களுக்கு பொறாமை எங்க அன்பைப் பார்த்து. அதுவுமில்லாம எங்கண்ணன்களுக்கு சூப்பரான, நல்ல குணமுள்ள பொண்ணுங்களாதான் கட்டிவச்சிருக்கேன்.” என்று கெத்தாக சொல்ல...

“சரி சரி உங்க வாயாடலை விடுங்க. நமக்கு வேலையிருக்கு” என்று வந்தவர்களைக் கவனிக்க கிளப்பினார்கள் பெரியவர்கள்.

வளைகாப்பு விழா நல்லபடியாக முடிந்து பெண்ணை தாய்வீடு அழைத்துச் செல்ல, கிளம்பும் நேரம் கணவனைக் காணாமல் கலங்கிய கண்களை இதழ்கடித்து கட்டுப்படுத்த, நல்லநேரம் முடியுறதுக்குள்ள வீட்டுக்குப் போகணும் என்றதும் வேறு வழியில்லாமல் அவர்களுடன் சென்றாள். மாமியார் வீட்டிலிருந்து கிளம்பிவிட்டாலும் மனமெல்லாம் அங்கேயே சுற்றிச் சுற்றி வந்தது.

ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் வந்து சற்று நேரத்திற்கெல்லாம், “அம்மா நான் என்னோட ரூம் போறேன்” என்றதும், அப்பா, அம்மா, அண்ணன், சாதனா என அனைவரும் இவளறியாமல், ஏதோ ஜாடைப் பேச்சிக்கள் பேசுவது போல் தோன்ற, அவர்களைக் கவனித்தவள் ஒருவேளை பிரமையோ என் நினைத்து, ஒன்றும் புரியாமல் தன்னறைக்குச் சென்றாள்.

உள்ளே நுழைந்தவளுக்கு தன் அறையில் ஏதோ வித்தியாசம் தெரிய கதவை சாத்தி கட்டிலருகில் வந்தவளுக்கு அப்பொழுதுதான் தோன்றியது லைட் போடவில்லையென்பது.

ஸ்விட்ஜ் போட நினைத்த நேரம், திடீரென்று அந்த இடத்தில் ஒளி வீச, திடீர் வெளிச்சத்தில் கண்களை மூடித்திறக்க, கட்டிலில் பூக்களால் “ஐ லவ் யூ சுப்பு” என்றிருந்ததைப் பார்த்தவள் சந்தோஷத்தில் “சிவா” என்றழைத்தாள்.

பின்னிருந்து மனைவியை அணைத்து, “ஐ லவ் யூ சுப்பு” என்று காதோரம் பேச... மெல்ல கணவன்புறம் திரும்பியவள் மனதின் ஆசைகள் அனைத்தையும் சேர்த்து, “ஐ லவ் யூ சிவா. ஐம் ஸோ ஹேப்பி ஃபார் யூ அன்ட் யூ ஒன்லி!” என்று கணவனை அணைத்தாள்.

மனைவியை கட்டிலில் அமர வைத்தவன், தன் மார்பில் சாய்ந்திருந்தவளின் நெற்றியில் தன் ஒட்டுமொத்த அன்பையும் சேர்த்து முத்தமிட்டான். சுபா அந்த அன்பை அணுஅணுவாக ரசித்துக் கொண்டிருந்தாள்.

வாழ்வில் தங்களுக்கு அனைத்தும் கிடைத்த நிம்மதி, முகத்தில் புன்னகையாக இருவருக்குள்ளும் நிறைந்திருக்க, ஒருவித மோன நிலையிலிருந்த மனைவியின் தலைகோதி, அனைத்திற்கும் காரணமான கடவுளுக்கு நன்றிகள் பல சொன்னான்.”

பதிலுக்கு கடவுள் அவர்களுக்கு “காட் ப்ளஸ் யூ” சொல்லி, “ம்... நானே எப்படி காட் ப்ளஸ் யூ சொல்ல முடியும்? என் ஆசிகள் உங்களிரு... ம்கூம்... உங்கள் மூவருக்கும், அடுத்து வரப்போகும் சந்ததிகளுக்கும் உண்டு” என அருள்பாலித்தார்.

நாமும் அவர்களை வாழ்த்தி விடைபெறுவோம்!



நட்புடன்

சொர்ணா சந்தனகுமார்
 
Top