• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
143
🔱யின்

❤காதல் ஓவியம்❤

❤ஓவியம் ️நிறைவுப்பகுதி❤

“டேய்! அறிவு கெட்டவனுங்களா. யார தூக்கிட்டு வர சொன்னா, யாரை தூக்கிட்டு வந்து இருக்கீங்க?” என்று ஷாமிலியைத் தூக்கி வந்தவர்களை திட்டினான் அகிலன்.

“பாஸ் அங்க இந்த பொண்ணு தான் இருந்துச்சு” என்றான் ஒருவன்.

“டேய்! இது நான் கட்டிக்கப்போற பொண்ணு இல்லடா. அவளோட அக்கா” என்றான் அகிலன்.

“டேய் அகில். கெட்டதிலும் ஒரு நல்லது இருக்குடா. இவ கழுத்துலயும் தாலியை கட்டு.” என்றார் சேது.

“என்ன கிழவா சொல்ற?”

“அட ஆமாடா. முல்லையை மட்டும் கல்யாணம் பண்ணா, உனக்கு ஒரு பங்கு சொத்து தான் கிடைக்கும். இவ கழுத்துலயும் சேர்த்து தாலியை கட்டு. இவளுங்க ரெண்டு பேருடைய சொத்தும், உனக்கு தான் வரும். கட்டுடா தாலியை” என்று மகனிடம் சொன்னார்.

“தாலி கட்டுவதற்கு ரெண்டு கை தேவை. ஆனால், உனக்கு ஒரு கை தான் இருக்கு. இப்போ அந்த ஒரு கைக்கும் விலங்கு மாட்ட ஆள் வராங்கடா மாப்பிள்ளைங்களா.” என்று வந்தான் மணிமாறன்.

“டேய்! காமெடி பிஸ். நீ எங்கடா இங்க?”

“நான் வரது இருக்கட்டும். என்னை ஏன்டா அகிலா ஆள் வச்சு கடத்துன? நீ கூப்பிட்டா நானே வந்து இருப்பேனே.” என்றான் நக்கலாக.

“ஏய் அகில்! இந்த லூசு பையனிடம் உனக்கு என்ன பேச்சு. கட்டுடா அந்த ஷாமிலி கழுத்துல தாலியை.” என்றார் சேது.

“அட மட சாம்பிராணி. இப்போ நீ என் கழுத்துல தாலியைக் கட்டினால் உனக்கு சொத்து கிடைக்குமா? நீங்க என்ன பைத்தியமா?” என்று ஷாமிலி கேட்க,

“ஆமா அப்பா. அந்த முல்லைக் கூட என்னைப் பார்த்தா கொஞ்சம் பயப்படுவாள். ஆனா இந்த ஷாமிலி இருக்கு பாரு. பத்து ஊரு வாயை சேர்த்து ஒண்ணா வச்சு பேசுவா. அப்படியே இவ ஆத்தா மாதிரி.” என்றான் அகிலன்.

“டேய்! நான் ஒன்னும் என் அம்மா மாதிரி, உனக்கு மரியாதை எல்லாம் கொடுத்துக்கிட்டு இருக்கமாட்டேன். உன் வாயை பேத்துடுவேன் பார்த்துக்கோ.”

“என்னடி சவுண்ட் விடுற.?”

“ஏய்! நான் ரைட்ல ஒன்னு விட்டேன் வை. லெப்ட்ல திரும்பிக்கும். முதல்ல மரியாதையா என் கைக்கட்டை அவுத்து விடு. எங்க அம்மாவுக்கு மட்டும் உன்னுடைய யோக்கியதை தெரிஞ்சதுன்னு வை. அவங்களே உன்னை சுட்டுத் தள்ளிடுவாங்க.”

“ஏய்! என்ன ரொம்ப திமிரா பேசுற. உன் அம்மா என்ன கிழிக்க போறான்னு நானும் பாக்குறேன். இதோ பாரு இங்கதான் உன் அம்மா இருக்கா” என்று சொன்னபடி சேது ஒரு அறைக்குள் முல்லையின் அக்கா ஷாமிலியையும், முல்லையின் அப்பா சந்திரனையும், கதிரின் நண்பன் மணிமாறனையும் உள்ளே தள்ளிவிட்டார் சேது.

“இந்திரா” என்று அங்கு இருந்த மனைவியைக் கண்டு அதிர்ந்தார் சந்திரன்.

“என்னங்க. ஐயோ பாத்து. டேய்! என் புருஷன் மேலயா கை வைக்கிற உன்னை...” என்று அவர் திட்ட,

“என்ன இந்திரா? நீ எப்படி இங்க? ஏன் உன்னைக் கட்டிப் போட்டுருக்காங்க?”

“என்னங்க என்னை மன்னிச்சிடுங்க. இவனுங்களை எல்லாம் நம்பி நான் மோசம் போய்ட்டேன்.” என்று சொல்ல,

“ஐயோ! இந்துமா என்ன பேச்சு பேசுறீங்க? நீங்க மோசம் போயிட்டீங்களா?” என்று அதிர்ந்து கேட்டான் மணிமாறன்.

“ஏய்! லூசு மாறா. அவங்க வேற அர்த்தத்தில் சொல்றாங்க. உங்களுக்கு வாய் இருக்கு பாருங்க” என்று கடிந்தாள் ஷாமிலி.

“இந்துமா எதை சொல்வதாக இருந்தாலும் முழுசா சொல்லுங்க பயமா இருக்கு இல்ல

“டேய்! இவன எதுக்குடா கடத்திக்கிட்டு வந்தீங்க.?” என்றார் சேது.

“நீங்கதான சார் சொன்னீங்க. பஞ்சாமிர்தம் சாப்பிடுற முகம் மாதிரி ஒருவர் இருப்பாருன்னு. இவன் தான் அப்படித் தெரிந்தான். அதான் தூக்கிட்டோம்” என்றான் அடியாள்.

“டேய்! அது பழனிடா. நான் பாவம்டா. ஐயோ கடவுளே! இந்தக் குடும்பத்துல மாட்டிகிட்டு நான் முழிக்கிறேன்” என்று தன்னையே நொந்து கொண்டான் மணிமாறன்.

“ஷாமிலி என்னை மன்னிச்சிடுமா. நீயும் முல்லையும் எவ்வளவு சொல்லியும் கேட்காம, நான் இந்த அகிலனை நம்பினேன். இவனுங்க காலைச் சுத்தின பாம்பு மாதிரி ,நம்ம குடியைக் கெடுத்தூட்டானுங்க. நல்லவேளை இவன் முல்லை கழுத்துல தாலி கட்டுறதுக்கு முன்னாடி இவனுடைய கேவலமான புத்தி நமக்கு தெரிஞ்சிருச்சு” என்றார் இந்திரா.

“ஏய் கிழவி.! நீ கவலைப்படாத. இதோ இப்பவே நான் உன் வீட்டுக்கு போயி. முல்லையை தூக்கிட்டு வந்து. உன் கண் எதிரிலேயே அவ கழுத்துலயும், இவ கழுத்துலயும் தாலி கட்டி, இவளுங்க ரெண்டு பேரையுமே என் பொண்டாட்டியா ஆக்கிகிறேன். என்றான் அகிலன்.

“ஏய் அறிவு கெட்டவனே. நீயின்னு இல்ல, உன் அப்பனுக்கு அப்பன் வந்தாலும், உன்னால ஒன்னும் கிழிக்க முடியாது” என்று கத்தினாள் ஷாமிலி.

“அதானே இவனால மோதிரமே போட முடியல. இவரு தாலி கட்ட போறாராம். போடா” என்றான் மாறன்.

“அப்பா பாத்தீங்களா நான் சொன்னது உண்மைதான். முல்லைக்கு அந்த மோதிரத்தை போட்டது நான் இல்ல.”

“வேற யாருடா மகனே” என்று புரியாது கேட்டார் சேது.

“வேற யாரு. என் மச்சான்... இல்ல இல்ல. என் சகல தான்.”

“என்னடா சொல்ற?”

“டேய்! தொப்பி, டோப்பா மண்டை. எங்க மாமா கதிரு தான்டா என் தங்கச்சி விரலில் மோதிரம் போட்டது.” என்று சிரிக்க,

“என்னம்மா சொல்ற? கதிர்... கதிர நீ பார்த்தியா. அவன் நல்லா இருக்கானா? அவனுக்கு செஞ்ச பாவம் தான், நான் என் சொந்தக்காரங்க கையாலேயே அசிங்கப்பட்டு நிற்கிறேன்” என்றார் இந்திரா.

“அம்மா நீங்க ஏதும் கவலைப்படாதீங்க. இவனுடைய பூச்சாண்டி எல்லாம் கதிர் மாமாகிட்ட செல்லுபடியாகாது. நம்ம கதிர் மாமா தான் அன்னைக்கு நம்ம முல்லை கையில மோதிரத்தை போட்டாரு.”

“என்ன, எனக்கு மருமகளா வர வேண்டிய பொண்ணு கையில, அவன் மோதிரம் போட்டானா?”

“ஹலோ! நீ என்ன மோதிரம் போட்டதுக்கே வாயை பிளக்குற. என் மச்சான் மோதிரம் போட்டதுக்கு முன்னாடியே, கொத்து பரோட்டா போட்டுட்டான்.”

“என்ன கொத்து பரோட்டாவா? அப்படினா?” என்று சேது கேட்க,

“ஆங்! முட்டையை உடைத்து ஊற்றி, பரோட்டாவை பிச்சி போட்டு...”

“ஏய் மாறா! வாயை மூடு. இங்கே என்ன நடக்குது. நீ என்ன இப்போ சமையல் குறிப்பு சொல்லிகிட்டு இருக்குற?” என்று மணிமாறனைக் கடிந்தாள் ஷாமிலி.

“என்ன? அப்போ கதிர் இந்து அத்தை வீட்டுக்கு வந்தானா.?”

“டேய்! கூமுட்டை. என் மச்சான் இந்து வீட்டுக்கு வந்ததுக்கே நீ இவ்வளவு ஜெர்க் குடுக்குறியே. அவன் தான் முல்லைக்கு வீட்டுக்காரன்னு சொன்னா, நீ என்ன பண்ணுவ?”

“டேய் என்னடா சொல்ற? நான் மட்டும் அவனை பார்த்தேன்னு வை. அவனுக்கு மறுநாளே பாடை கட்டிடுவேன்” என்று அகிலன் கோவத்தில் கொதிக்க,

“அடப் போடா ஸ்டேம்ப் வாயா. என் மச்சான் தொட்டிலே கட்டிட்டான்டா. நீ என்னடான்னா...” மணிமாறன் நக்கலாய் அனைத்தையும் சொல்ல,

“ஏய் என்ன சொல்றிங்க?” என்று கத்தினார் இந்து.

“ஆமா அம்மா. நீங்க பாட்டி ஆக போறீங்க.”

“ஏங்க உங்க அம்மா ஏற்கனவே பாட்டி மாதிரி தான் இருக்காங்க” என்று அவன் ஷாமிலிக்கு பதில் கொடுக்க,

“ஹேய் ஷட் அப். என் இந்திரா பாட்டி இல்ல. என்னோட பியூட்டி” என்று இடையிட்டார் சந்திரன்.

“ம்... அன்னைக்கு சாப்பிட்ட ஜிலேபி, ரொம்ப நல்லா வேலை செஞ்சு இருக்கு போல.”

“ஐயோ இங்க என்ன நடக்குது? ஷாமிலி நீ சொல்றது உண்மையா? நிஜமாவே நான் பாட்டியாக போறேனா?” என்று கேட்டார் இந்து.

“அம்மா நாங்க ஊர்ல இருந்து வந்த கொஞ்ச நாளிலேயே கதிர் மாமாவையும், கீதா அத்தையையும் பார்த்தோம்” என்று இதுவரை நடந்த எல்லாக் கதையையும் சொன்னாள்.

இந்து ஆனந்த கண்ணீருடன், “அப்போ என் மகளுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? என் மக அவ ஆசைப்பட்ட துணையையே கட்டிக்கிட்டாளா? எனக்கு அந்தப் பையன முதன்முதலில் பார்க்கும் போதே ஒரு சந்தேகம் இருந்துச்சு. எப்படியோ என் மகள் சந்தோஷமா இருந்தால் எனக்கு போதும்.” என்றார்.

“அம்மா அந்த சந்தோஷத்துக்கு அடையாளமா, இப்போ முல்லை வயத்துள்ள கதிர் மாமாவுடைய குழந்தை வளருது.” என்றாள் ஷாமிலி.

“இல்ல இத நான் ஒத்துக்கவே மாட்டேன்” என்று அலறினான் அகிலன்.

“டேய் டுபுக்கு. நீ என்னடா ஒத்துக்குறது. என் மச்சான் அங்க கொத்து பரோட்டாவும், சால்னாவும் ஊத்தி சாப்பிட்டு முடிச்சு கை கழுவிட்டு, வாழை இலையை தூக்கிப் போட்டுட்டான். இப்போ வந்து நீ என்னடானா பந்தி முடிந்துடுதான்னு கேக்குற?”

“ஆண்டவா! இங்க என்ன நடக்குது?அப்போ அந்த கதிர் வந்துட்டானா?”

“டேய் அகில்! இனிமேல் காலதாமதம் ஆக்கக்கூடாது. முல்லை அந்த இந்து வீட்டில்தான் இருக்கிறாள். அந்த வீட்டையே பிளாஸ்ட் பண்ண சொல்லு. அவளோடு சேர்ந்து அந்த வீடு இடிந்து தரைமட்டமாகட்டும். நீ இந்த ஷாமிலி கழுத்துல தாலி கட்டு. அப்போ தான் மீதம் இருக்கிற சொத்து நம்ப கைக்கு வரும்.” என்று சேது சொல்ல, அதை செயல்படுத்த அகிலன் கைபேசியை எடுத்தான்.

“ஹலோ... ஹலோ... டேய் அகிலா. யாருக்குடா கால் பண்ற? நீங்க கால் பண்ணி டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம். நீ வச்ச பாமும் சரி, உன்னோட ஆள் மாலினியும் சரி, என்கிட்ட தான் இருக்காங்க” என்று வந்தான் கதிரோவியன்.

“டேய்! நீ அந்த ட்ரைவர் பையன் தானே?”

“நான் டிரைவர் பையன் இல்லடா. என் முல்லை செல்லக்குட்டியோட முறை பையன். இன்னும் கேட்டால் என் அழகியோட புருஷன். அதுக்கு மேலயும் கேட்டால் என் அழகி பெற்றெடுக்க போகும், குட்டி தேவதைக்கு அப்பா.”

“கதிர் மாப்பிள்ளை என்னை மன்னிச்சிடுங்க. உங்களுடைய நல்ல மனசு எனக்கு புரிய.ல அந்த சின்ன வயசில உங்க வாழ்க்கையை நான் கெடுத்துட்டேன்.” என்று மன்னிப்பு கேட்டார் இந்து.

“இந்து மேடம். உங்களுக்கும் எனக்கும் இருக்கிற பெர்சனல் வேற டீலிங். இப்போ நாங்க வந்த விஷயமே வேற. மேடம் ஜீ வாங்க” என்று கதிர் சொல்ல, கீதா அவர்கள் பேண்ட் சட்டை அணிந்து, கிட்டதட்ட CID சகுந்தலா மாதிரி உள்ளே நுழைந்தார். 🌹
 
Joined
Feb 6, 2025
Messages
143
“என்னாது மேடம் ஜீயா? நல்லா பொம்பளை வேடம் போட்ட பிரேம்ஜி மாதிரி இருக்கு கீது. இதுக்கு இவ்வளவு பில்டப்பா?” என்றான் மாறன்.

“கீதா நீ...”

“மேடம் உங்களை இல்லீகல் பிசினஸ் செஞ்சதுக்கும், கணக்கில் வராதபடி சொத்து சேர்த்ததுக்கும் அர்ரெஸ்ட் பண்றோம்.” என்றார் ஓவியகீதா.

“என்ன சொல்றீங்க? எங்க அம்மாவ அரேஸ்ட் பண்றீங்களா?” என்று ஷாமிலி அதிர,

“வாட்? வாட் யூ மீன்?” என்றார் சந்திரன்.

“ஹலோ! என்ன மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி ரெண்டு தடவை கேட்குறீங்க?” என்றான் மாறன்.

“எதற்காக இவர்கள அர்ரெஸ்ட் பண்றீங்க?”

“அதெல்லாம் நம்ம ஸ்டேஷன்ல போய் பேசிக்கலாம் ஷாமிலி. கீதா ஜீ...” என்று அழைத்தான் கதி.

“எஸ் சன். சாரி எஸ் மிஸ்டர் கதிர்” என்றார் கீதா.

“இந்து மேடம்மை உங்க வண்டில ஏத்திக்கோங்க.”

“ஏய் கதிரு. என்ன நீ என்ன பெரிய போலீஸ் மாதிரி பில்டப் கொடுக்குற?” என்று கேட்டான் அகிலன்.

“டேய் சைக்கிள் டியூப் வாயா. நாங்க போலீஸ் இல்லடா. வி ஆர் பிரம் பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்ஸி.” என்று சொல்லி கீதாவும் கதிரும் அடையாள அட்டையை காட்டினார்கள்.

“என்ன நீங்க டிடெக்டிவ் ஆபீஸரா?”

இந்துவின் கேள்விக்கு, “ஆமா நாங்க பிரைவேட் டிடெக்டிவ் ஆபீசர். உங்களை இல்லீகல் பிசினஸ் செய்த குற்றத்திற்காக நாங்க அர்ரெஸ்ட் பண்றோம்.”

“என்ன கதிர் மாமா இது. எங்க அம்மாவைப் பழிவாங்க தான் நீங்க எங்க வீட்டுக்குள்ள வந்திங்களா?”

“ஹேய் ஸ்டாப் இட். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் மாதிரி இல்ல. நான் கொள்ளைக்காரன் மாதிரி” என்றான் கதிர்.

“இப்போ தான் உண்மையயை சொல்றான். இதுங்க நம்பாதுங்க.”

“கீதா அத்தை என்ன நடக்குது இங்க.?”

“இங்க பாருங்க. நீங்க உங்க கடமையைச் செய்யுங்கள். என் மேல எந்த தப்பும் இல்ல. நான் உங்க கூட வர்றேன்.” என்றார் இந்து.

“சந்திரன் சார் என்ன இது? உங்க ஜிலேபி நீங்க இருக்கும் போது என் மச்சான் கூட போறேன்னு சொல்றங்க.”

“ஐயோ சும்மா இருப்பா மாறன். கதிர் மாப்ள என்ன இது?” என்று மருமகனிடம் கேட்டார்.

“இல்ல மாமா எல்லாம் காரணமா தான்.”

“மாமா வீட்ல வேற முல்லை தனியா இருக்கா. அகிலன் வேற வீட்ல பாம் வைத்து இருக்கான். முல்லை பாவம். ஏதாவது செய்யுங்க” என்றாள் ஷாமிலி.

“என் முல்லை மேல ஒரு தூசுகூட படாது.”

“டேய் கதிரு. வேணாம்டா உனக்கு நேரம் சரியில்ல” என்றான் அகிலன்.

“ஏய் என் நேரம் ராசி எல்லாமே ஏகப்போகமா இருக்குடா. நீ என் அத்தையை மாமியார் ஆக்கணும்னு தானே நினைச்ச. உன்னை இப்போ நிரந்தரமா அரசாங்க மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன் வா செல்லம்.”

“டேய் திருட்டு பயலே.”

“அகிலா உன் அப்பன் உன்னை கூப்பிடுறான் பாரு.” என்றான் கதிர்.

“டேய்! நான் உன்னை கூப்பிட்டேன்டா.” என்று சேது சொல்ல,

“யூ மீன் மீ. ஓ... நோ. நான் திருட்டு பையன் தான். பட் நான் திருடனது. என் செல்லக்குட்டியை. சரி சரி உனக்கு அதெல்லாம் தேவையில்ல நீ வா. ஹலோ கீதா ஜீ இவனுங்களை வண்டியில ஏத்துங்க.”

“ஏய் விடுங்க என்னை.” என்று சேது கத்த,

“ஏய் சத்தம் போடாம வண்டியில ஏறு.” என்று கதிர் சொல்ல. அகிலனையும் சேதுவையும், கதிரின் ஆட்கள் ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு போக, இன்னொரு வண்டியில் இந்துவை மட்டும் கதிர் தனியாக அழைத்து சென்றான்.

அன்றைய இரவு இந்திராவின் வீட்டில், “என்ன மாப்ள இது. இப்படி பண்ணிட்டீங்களே? அப்போ பழசெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு என் இந்திராவை நீங்க பழி வாங்குறீங்களா? என்று கேட்டார் சந்திரன்.

“மாமா நீங்க இப்படி பண்ணிவிங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கல” என்றாள் ஷாமிலி.

“அக்கா ஏன் இப்போ இப்படி கத்துற. மாமா எது செஞ்சாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்.”

“ஆயிரம் தான் இருந்தாலும் நீங்க என் இந்துவை அர்ரெஸ்ட் பண்ணி இருக்கக்கூடாது மாப்பிள்ளை.”

“மச்சான் உன் மாமாக்கு ஜிலேபி சாப்பிட முடியாதுனு கவலை போல” என்று கிண்டல் செய்தான் மாறன்.

“கீதா அத்த. என்னதான் இருந்தாலும் உங்களுக்கு கொஞ்சம் கூட எங்க மேல பாசம் இல்ல.”

“ஐயோ என் கீதுவை ஏன் திட்டுறீங்க?”

“கொஞ்சம் வாய மூடு மாறா. நான் இப்போ என் இந்துவை பாக்கணும். அதுக்கு வழி சொல்லுங்க.” என்றார் சந்திரன்.

“என்னங்க” என்ற மனைவியின் குரலில் திரும்பியவர், “இந்திரா. நீ எப்படி
இங்க?” என்றார்.

“ஏங்க மாப்பிள்ளையும், கீதாவும் என் மேல இருந்த எல்லா பழியையும், அகிலன் தான் செய்தான்னு நிரூபித்துட்டாங்க. அதனால என்னை வெளியே விட்டுட்டாங்க” என்றார் சந்தோசமாக.

“டேய் மச்சான்! அப்போ நிஜமா நீ பெரிய டிடெக்டிவ் ஆபீசரா?” என்றான் மாறன்.

“ஆமா. என் மவனை என்னன்னு நெனச்சீங்க. நாங்க பிரைவேட் டிடெக்டிவ் ஆபிசர் புரியுதா?”

“என்ன என் மருமகன் டிடெக்டிவ் ஆபீஸரா? அந்த அகிலனை மிரட்ட செய்யுற நாடகம் நினைச்சேன்.” என்றார் சந்திரன்.

“ஆமாங்க. நம்ம மருமகன் பெரிய காவல்காரன்” என்றார் இந்து.

“என்னடா மவனே. நம்ம எது சொன்னாலும் நம்பறாங்க. இந்த இந்து முதல்ல ரிடயர்ட் போலீசான்னு நம்ம செக் பண்ணனும்.” என்றார் கீதா.

“கிழவி கொஞ்சம் சும்மா இரு.”

“சரி சரி சீக்கிரம் எல்லாரும் போயி படுங்க.” என்று சபையை கீதா கலைக்க,

“இருமா கீதா” என்ற இந்து, “கதிர் மாப்பிள்ள என்ன மன்னிச்சிடுங்க” என்று திரும்பவும் மன்னிப்பு கேட்டார்.

“இருக்கட்டும் அத்த. நான் உங்கள என் அம்மாவா தான் பார்க்கிறேன்.”

“அம்மா என்னை மன்னிச்சுடு” என்றாள் முல்லை.

“ஏன் முல்லை. நீயாவது என்கிட்ட இதையெல்லாம் சொல்லியிருக்கலாமே?”

“என்ன சொல்றீங்க. நான் சொன்னா நீங்க என் பேச்சையா நம்புவீங்க. அந்த அகிலன் பேச்சைக் கேட்டு தான் ஆடுவிங்க. அதனால தான் நான் சொல்லல.”

“உண்மைதான். நீ ஆசைப்பட்ட மாதிரி உன் மாமன் கையால தாலி கட்டிகிட்டு , என்னை பட்டியாகவும் ஆக்கப்போறன்னு செல்லும் போது, எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.”

“அப்புறம் என்ன. இந்து அத்தை ஓகே சொல்லிட்டாங்க. எல்லோரும் ஹாப்பியா இருங்க.”

“ஆமாடா மவனே. நீயும் முல்லையும் ஹாப்பியா இருங்க. நேரம் ஆகுது நான் கிளம்புறேன்.” என்றார் கீதா.

“கிழவிக்கு சரக்கு அடிக்க நேரம் ஆச்சு போல.” மாறன் சொல்ல,

“எங்க கீது போற? இது உன் வீடு. இனி நீ இங்க தான் இருக்கணும்.” என்றார் இந்து.

“ஐயோ நமக்கு இதெல்லாம் வேலைக்கு ஆகாது.”

“அப்படி எல்லாம் சொல்லாத கீது. என் தம்பி பழனி உனக்காக தான் காத்துகிட்டு இருக்கான். அவனுக்கு நீ தான் வாழ்க்கை குடுக்கணும்.”

“பழனிக்கு மண்டையில் வழுக்கை விழ வேண்டிய வயசில், இந்த கிழவி வாழ்க்கை கொடுக்கணுமா.”

“ஏய் மாறா. சும்மா இருடா” என்று அதட்டினான் கதிர்.

“அப்போ வர முகூர்த்தத்திலேயே கீதாவுக்கும், பழனிக்கும், ஷாமிலிக்கும், மாறனுக்கும் கல்யாணத்தை முடிவு பண்ணிடலாம்.”

“அய்யய்யோ கோச்சுக்காதீங்க இந்து மேடம். நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.”

“ஏன்? என்னை கூடவா கல்யாணம் பண்ணமாட்டிங்க” என்று கேட்க,

“ஆமாங்க. ஒருத்தவங்க கூட வாழற வாழ்க்கை எல்லாம் நமக்கு செட்டாகாது. வாழ்க்கை முழுக்க ஜாலியா இருக்கணும். ஷாமிலி டார்லிங் நீ உன் அம்மா சொல்ற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்கோ.” என்றான் சாதாரணமாக.

“ஏன்டா மச்சான் இப்படி சொல்லிட்ட?”

“ஆமா மச்சான் நமக்கு இதெல்லாம் வேலைக்காவாது. என் அக்காக்காரி வேற சும்மா இல்லாம, எழுதுறேன் என்ற பெயர்ல உபத்திரவம் பண்றா. அதனால நான் கல்யாணத்தை பத்தி யோசிக்க தயாரா இல்ல. உன் பிள்ளையின் கல்யாணத்துக்கு சொல்லு. நான் வரேன். இப்ப எல்லாரும் போய் அவங்க அவங்க ஜோடி கூட சந்தோஷமா இருங்க.”

“டேய்! எங்கடா பழனியை காணோம். பஞ்சாமிர்தம் வாங்க போயிட்டாரா” என்று கீதா கேட்டார்.

“இல்ல அத்.த உங்களுக்கு குவாட்டர்ரும், கோழி பிரியாணியும் வாங்க போயிருக்காரு.” என்று கீதாவுக்கு பதிலளித்த மாறன், பின் சந்திரனிடம் திரும்பி, “சந்திரன் மாமா நீங்க ஜிலேபி வாங்க போகலையா?” என்றான்.

“ஏய் ஸ்டுபிட். என்ன வாய் ரொம்ப நீளுது. பெரியவங்கன்னு மரியாதை இல்ல.” என்று இந்து அதட்ட,

“சாரி மேடம்” என்றான் மாறன்.
“விடுமா இந்திரா. எதோ சின்ன பையன் தெரியாம பேசுறான்.”

“அப்படி இல்லிங்க. கடைக்கு போய் ஜீலேபி வாங்கிட்டு வர நேரம் ஆகும். சோ நம்மளே செய்துக்கலாம்.”

“நீ கத்துக்குடுத்தா பண்ண வேண்டியது தான்.”

“ஆமா சொல்லிகுடுங்க. சரியா ஜீலேபியை பிளிஞ்சுடுவாரு.” என்று மீண்டும் இடையிட்டான் மாறன்.

“ஓ...” என்று இந்து மகிழ்ச்சியுடன் சொல்ல. சந்திரனும், இந்துவும் ஜிலேபி சாப்பிட, கீதாவும், பழனியும் குவாட்டரும் கோழி பிரியாணியும் சாப்பிடச் சென்றனர்.

முல்லையின் அறையில், “என்ன மாமா? எல்லாரும் எல்லாம் சாப்பிடுறாங்க. ம்... என்னால தான் எதுவும் சாப்பிட முடியாது போல.”

“ஆமாடி. வயத்துல பிள்ளை வச்சிக்கிட்டா அதெல்லாம் சாப்பிட முடியாது. தப்பு” என்றான்.

“ம்... மாமா. அப்போ நீ நல்லா படிச்சவனா?”

“இல்ல. நான் வந்து நான்...”

“என்ன மாமா சொல்ற? நீ யாருன்னு கேட்டதுக்கா இப்படி தயங்குற?”

“இல்ல நான் வந்து... நான் உண்மையை சொன்னா நீ கோச்சுக்க கூடாது” என்று புதிர் போட்டான் கதிர்.

“ம்... வேணாம் மாமா. நீ எதையும் சொல்ல வேண்டாம் . நீ கள்வனா இருந்தாலும் சரி. காவலனா இருந்தாலும் சரி. எனக்கு நீ கணவனா இரு. அதுவே போதும்” ❤என்று சொன்னப்படி முல்லை கருவுற்ற மங்கையாக தன் கணவனை கட்டிக்கொண்டாள்.

கதிர் அவளின் நெற்றியில் இதழ்களை பதிக்க, இவன் யாராய் இருந்தாலும், நமக்கு அவன் என்றுமே நம் அழகியின் அழகன் தான்.❤

❤❤❤❤❤❤❤ சுபம்❤❤❤❤❤❤❤

🙏 நான் சக்தி.🔱
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top