• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
122
நின்றுக்கொல்லும்!!!.

அது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. ஒரே ஒரு வீடு மட்டும் உள்தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. வெகு நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்ததால், அங்கு இருப்பவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஒருவித துர்நாற்றமும் வீச ஆரம்பித்தது. உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

காவலர்கள் உள் நுழைந்து, யார் போன் பேசியது என்று கேட்டுக் கொண்டே, என்ன நடந்தது??, என்று விசாரித்தனர்.

அங்கிருந்து ஒரு பெண்மணி, “இந்த வீட்டில் தான் சார் ஒரே துர்நாற்றமா இருக்கு. வெகுநேரமா கதவு திறக்கல”, என்று கூறினார்.

போலீசாரின் உதவியுடன் கதவு உடைக்கப்பட்டு, உள்நுழைந்தனர். அவர்கள் கண்ட காட்சியில் அதிர்ச்சியில் உறைந்தனர்.
ஆம் இரு பிணங்கள் அங்கு அழுகும் நிலையில் இருந்தது. கணவன் மனைவி இருவரும் இறந்து கிடந்தனர். இது கொலையா, அல்லது தற்கொலையா?? விசாரணையை துவக்க தொடங்கினர்.

பிரேதபரிசோதனை நிபுணருக்கு தெரிவிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் இறந்தவர் உடலை எடுத்துச்சென்று விட்டனர்.

இந்த கொலை எப்படி நடந்தது, எதனால் நடந்தது, ஏன் நடந்தது?, என்ற கோணத்தில் ஒரு போலீஸ் படையும், இது தற்கொலை தானா அதற்கான காரணம் என்ன?, ஏன் இவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?, என இன்னொரு பிரிவினரும் துப்பு துலக்க தொடங்கினர். பிரேத பரிசோதனையில் இருவரும் ஆசிட் குடித்ததற்கான அறிகுறிகள் தென்பட்டது. அதனால் அவர்களின் வாய் தொண்டை வயிறு பகுதி மிகவும் பாதிப்படைந்து இறப்பு நேர்ந்து இருப்பதாக தெரிந்தது.

அவர்களின் வீட்டில் ஒவ்வொரு இடத்தையும் சல்லடை போட்டு தேடிக் கொண்டிருந்தனர். ஏதாவது ஒரு எவிடன்ஸ் கிடைக்குமா என்று?. எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை. அண்டை வீட்டினரிடம் இறந்தவர்களின் யாராவது எதிரியோ, அல்லது சண்டை, சச்சரவு ஏதாவது சமீபத்தில் நடந்த்தா, என்று போலீஸ் முதல் விசாரணையை தொடங்கினர்.

பக்கத்து வீட்டினரும்“அப்படி ஒன்றும் இல்லை சார். யாரும் இங்க வந்ததே இல்லை. இங்கே எந்த ஒரு சண்டையும் நடக்கல. அவங்க அவங்க வீட்டுல அவங்க அவங்க தான் இருந்தோம். நேத்து வரைக்கும் அவங்க நல்லா தான் பேசிட்டு இருந்தாங்க. ஆனா என்னனு தெரியல சார்“, என அவர்களுக்கு தெரிந்ததை கூறியிருந்தனர்.


அதில் ஒரு வயதான பெண்மணி, “ஐயா அவங்களுக்கு சில கடன்கள் இருந்ததா அந்த பெண் சொல்லி இருந்தாங்க. யாரிடம் கடன் வாங்கினாங்கன்னு எல்லாம் தெரியாது. கடன் கொடுத்தவர்கள் யாரும் இங்கே வந்து சத்தம் போடல”, என்றார் அந்தப் பெண்மணி.

இப்பொழுது போலீசின் பார்வை, கடன் கொடுத்தவர்கள் யார், அவர்களால் இந்த கொலை நடந்திருக்குமோ, என விசாரணையில் இறங்கினர்.
அடுத்ததாக இறந்தவர்களின் செல்போன் பரிசோதிக்கப்பட்டது. அதில் யாருடைய செல்போன் அதிகமாக பேசப்பட்டது பகிரப்பட்டது என ஆராய்ந்து பார்க்க துவங்கினர்.

அதிலும் சரியான துப்பு கிடைக்கவில்லை. பரிசோதனை முடிவில் அவர்கள் இரவில் உணவு உண்டு விட்டு நீர் அருந்தி விட்டு சிறிது நேரம் கழித்து படுக்க சென்று இருந்தனர். அந்தத் தண்ணீர் தான் ஆசிட் கலந்து உள்ளது என முடிவு எடுத்து வாட்டர்கேனில் உள்ள தண்ணீரை பரிசோதனை செய்ததில், அதில் ஆசிட் கலந்துள்ளது என முதல் விசாரணையில் தெளிவு படுத்தப்பட்டது. இப்பொழுது தண்ணீர் போடும் ஆட்களை கண்டுபிடிக்க வேண்டும் என முடிவு எடுத்து அப்பகுதியில் உள்ள வாட்டர் கேன் போடும் ஆட்களை விசாரணை செய்தனர்.

அதில் வினோத் என்ற இளைஞன் “அந்த வீட்டில் நான் தான் சார் தண்ணீர் கேன் போட்டேன். அவர்களுக்கு மட்டுமல்ல அந்த மாடியில் மூன்று வீடுகளுக்கு தண்ணீர் கேன் போட்டது நான்தான்”, என்று கூறினான்.

“சரி நீ எப்ப கூப்பிட்டாலும் வரணும். இப்ப போ என அனுப்பி வைத்தனர்.

அடுத்ததாக அந்தத் தண்ணீரில் ஆசிட் கலந்தது யார்??, ஏன் பழைய பகையை மனதில் வைத்து சரியான தருணத்தில் பழிவாங்க துடித்திருக்கிறான். யார் அவன்??, அவனை கண்டுபிடிக்க போலீஸ் மிகவும் கவனமாக விசாரிக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

அடுத்த நடவடிக்கையாக இறந்தவர்களின் பேங்க் பாஸ்புக் தேடி எடுக்கப்பட்டு அதில் ஸ்டேட்மெண்ட் எடுக்க வேண்டும். பேங்க் மேனேஜரிடம் இந்த பாஸ்புக் ஸ்டேட்மென்ட் எங்களுக்கு வேண்டும் என அடுத்த விசாரணை ஆரம்பமானது. அதில் எட்டு வருஷத்துக்கு முன் ஐந்து லட்சம் ரூபாய் பரிவர்த்தனை நடத்தப்பட்டு. பேங்க் அக்கவுண்டில் வரவு வைக்கப்பட்டது தெரியவந்தது. இந்தப் பணம் அனுப்பியவர் யார்? என விசாரணையில் துப்பு கிடைத்தது.

போலீஸின் அடுத்த நடவடிக்கை. வீராசாமி அவர்தான் ஐந்து லட்ச ரூபாய் கடன் கொடுத்தவர்.

அவரை விசாரிக்க தான் இப்பொழுது போலீசார் சென்றனர். “வீட்ல யார் ஐயா, வீராசாமி இருக்கிறாங்களா?”.

உள்ளே இருந்து ஒரு குரல், “யாரது, உள்ளே வாங்க. நான் தான் வீராசாமி”, என்றார். நடுத்தர வர்க்கம். இரண்டு பிள்ளைகள் மனைவி என்று சிறிய குடும்பம்.

“என்ன வேணும் சார்?“, என வீராசாமி கேள்வி கேட்க.

“உங்களிடம் விசாரணை செய்துவிட்டு போகலாம்னு வந்தோம்”, என்றனர்.

“என்ன விசாரணை சார்?, உள்ள வாங்க”, என அவர்களை உள்ளே அழைத்தார் வீராசாமி.

அவர்களும் உள்ளே வந்து நடந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டனர்.
“இரண்டு கொலை நடந்திருக்கு. அது உங்களுக்கு தெரிஞ்சவங்க, எட்டு வருஷத்துக்கு முன்னாடி நீங்க கடன் கொடுத்திருக்கிறீங்க. அவங்க இப்போ இறந்துட்டாங்க. அவர்கள் குடித்த தண்ணீரில் ஆசிட் கலந்துள்ளது. சந்தேகத்தின் பெயரில் உங்களை விசாரிக்க வந்துள்ளோம்”, எனக் கூறி முடித்தார்.

“சார் அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் கடன் கொடுத்தது உண்மைதான். கடன் கொடுத்து ஏமாந்துட்டேன் சார். அவங்க என்னை ஏமாத்திட்டாங்க. எல்லாத்துக்கும் அந்த கடவுள் சாட்சி. கஷ்டப்பட்டு உழைத்த பணம் சார். பையனுக்கு படிப்புக்கு பணம் கட்ட வேண்டும் என கேட்டு வாங்கி சென்றார்கள். பெண்ணுக்கு திருமணம் செய்ய வேண்டும் நகைகள் எடுக்க வேண்டும் எனக் கேட்டு வாங்கி சென்றார்கள் சார். அவர்கள் என் தூரத்து உறவினர்கள் தான். ஆனால் அவர்களை பழிவாங்கும் எண்ணம் எனக்கு வந்ததில்லை சார். பணம் கொடுத்து ஒரு வருடம் ஆகியும் பணம் திரும்பி வராததால் நாங்கள் வீட்டிற்கு சென்று பணம் திரும்ப கேட்டோம். பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிட்டு மிகவும் கஷ்டத்தில் இருக்கிறோம் பையன் இன்னும் வேலைக்கு போகல பையன் வேலைக்கு போனா உங்க பணத்தை திருப்பி கொடுக்கிறோம்னு சாக்கு சொல்லி எங்களை அனுப்பி வைத்தனர். அதன் பிறகு நாட்கள் கடந்து செல்ல அவர்களின் பிள்ளைக்கு வேலை கிடைத்துவிட்டது. என அறிந்து மறுபடியும் திருப்பி பணம் கேட்க வீட்டிற்கு சென்றோம். ஆனால் இந்த முறை அவர்களின் பேச்சும் நடையும், செயலும் மிகவும் எகத்தாளமாகவும் ஏளனமாகவும் காணப்பட்டது நாங்கள் இந்த முறை பணம் கேட்டும் முறையான பதில் வரவில்லை. அதற்கு மாறாக மிகவும் கீழ்த்தரமாக பேசி எங்களை அடித்து துரத்தாத குறையாக வெளியே அனுப்பினர். இதனால் மனம் உடைந்து கடவுள் மீது பாரத்தை போட்டு என் மனைவியை உடன் அழைத்து வந்து விட்டேன். அதிலிருந்து அவர்கள் முகத்தில் விழிப்பதே இல்லை. இது நாள் வரை அவர்களை எங்கு பார்த்தாலும் பார்க்காதவாறு சென்று விடுவேன். மனம் வருத்தம் தான் சார். இதனால நான் ரொம்ப பாதிக்கப்பட்டேன். மன உளைச்சலில் இருந்தேன். ஆனால் அவர்களை கொல்ற அளவுக்கு கொலைகாரன் இல்ல சார் நானு. அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொண்டுச்சு சார். என்னை ஏமாற்றி வாங்கிய பணம் இன்று என்ன ஆச்சு அனுபவிக்க முடிஞ்சுதா?? ஒரு வருத்தம் இருந்தாலும் என்ன சார் சொல்றதுக்கு இல்ல. ஆனா இந்தக் கொலை நான் செய்யல. இது எங்க வேணாலும் சொல்லுவேன் சார்” என வீராசாமி தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து விட்டார்.

இதை பக்கத்தில் இருந்த போலீஸ் அதிகாரி வாக்கு மூலத்தை ரெக்கார்ட் செய்து கொண்டார்.

“அப்புறம் வீராசாமி நீங்க ஒருமுறை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து ஒரு கம்ப்ளைன்டா ரெஜிஸ்டர் பண்ணி கையெழுத்து போடணும். நாங்க எப்ப கூப்பிட்டாலும் நீங்க வரணும்” என்றார்.

“சார் இன்னைக்கு சாயந்திரமே அங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துடறேன்” வீராசாமி சொல்ல வந்த போலீஸ்காரர்கள் திரும்பிச் சென்று விட்டனர்.

கொலைக்கான காரணம் கடன் கொடுத்த வீராசாமி இல்லை என தெரிந்தாலும். அடுத்த என்ன செய்யலாம் என்ற கோணத்தில் புலன்விசாரணை ஆரம்பிக்க தொடங்கினர். மறுபடியும் இறந்தவர் வீடு அங்கு மறுபடியும் துப்பு துலக்க ஆரம்பித்தனர்.

இரவில் சாப்பிட்ட தட்டுகள் இரண்டு சிங் கிள் இருந்தது. அடுத்ததாக அவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில். பாதிக்கு மேல் குடிக்கப்பட்டு அதில் கொஞ்சமாக தண்ணீர் இருந்தது. அதில் தான் ஆசிட் கலந்துள்ளது அது ஒரு பழைய பாட்டில். யார் இதை வைத்திருப்பார்கள் தண்ணீர் இவர்கள் இருவரை தவிர வேறு யாரும் உபயோகிக்கவில்லை. அப்படி இருக்க இந்த ஆசிட் பாட்டில் எப்படி வந்தது? என்ற கண்ணோட்டத்தில் விசாரணை அடுத்த கட்டத்திற்கு சென்றது.

மறுபடியும் முதலில் இருந்து போலீஸ் விசாரணை ஆரம்பிக்கப்படுகிறது. போலீசுக்கு தகவல் செய்த பெண்மணியை அழைத்து, “நீங்க என்ன பாத்தீங்க எப்ப பார்த்தீங்க நேத்து அவங்கள உங்க கூட தான் இருந்தாங்களா?“ இப்படி பல கேள்விகளை காவலர்கள் கேட்டார்கள்.

“சார் நேற்று இரவு ஒரு ஒன்பது மணி அளவில் எல்லோரும் மொட்டை மாடியில் தான் இருந்தோம். அவர்களின் கணவர் அவர்கள் வீட்டு வாசலில் இருந்து மனைவியை கூப்பிட்டார். கொஞ்சம் குடித்து இருப்பார் போல. வார்த்தைகள் குளறியபடி கூப்பிட்டார். அப்புறம் அந்த அம்மா கீழே போய்ட்டாங்க. அதுக்கப்புறம் மேல வரவே இல்ல. பிறகு அவர்களின் வீடு உள்தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. அவ்வளவுதான் சார் காலையில் எழுந்து பார்க்கும் பொழுது இரவில் எப்படி இருந்ததோ. அதேபோல கதவும் மூடப்பட்டு இருந்தது. விடிந்து கதவு திறக்கப்படவே இல்லை” என்றார்.

“இரவு வரை அதேபோல இருந்ததனால் சந்தேகம் வந்து, அவர்களின் ஜன்னல் ஓரத்தில் நின்று கதவை தட்டினேன். லேசான துர்வாடை அடிப்பது போல் உணர்ந்தேன். அப்புறம்தான் சார் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணேன்” என்றார் அந்த பெண்மணி.

“சரி நீ போமா.” அடுத்த அந்த வயதான பெண்மணியின் புறம் திரும்பியவர், “நீங்க சொல்லுங்கமா? நேற்று என்ன நடந்தது?“
 
Administrator
Joined
Sep 3, 2024
Messages
122
“சார் இங்கே குடியிருப்பவர்கள் அனைவரும் ஒரு ஏழு மணி போல மொட்டை மாடிக்கு சென்று விடுவோம். காற்றோட்டமாக காற்று வாங்கிய படி பேசிக்கொண்டிருப்போம். அப்படி பேசும்போது இறந்த பெண்மணி என்னிடம் நாங்கள் சில மன கஷ்டத்தில் இருக்கிறோம் அது எங்களின் தெரிந்தவரிடம் பணம் வாங்கி கொடுக்காமல் இழுத்து அடித்து விட்டோம்.சில நேரத்தில் எனக்கு சங்கடமாக உள்ளது எனக்கு உடல் ரீதியாக ஏதாவது ஆகிவிடுமோ என பயமாக இருக்கிறது, என்று கூறினாள். அதற்கு நானும், என்னமா உங்க கஷ்டத்துக்கு பணம் வாங்கினீங்க அதை கொஞ்சம் கொஞ்சமா திருப்பிக் கொடுத்து பார் ஏன் பயப்படணும். கடன் கொடுத்தவர் நம்ம கஷ்டத்தை அறிந்து தான் கொடுத்திருப்பார். அவர்களுக்கும் குடும்பம் குடித்தனம் என்று இருக்கும் அதனால அந்த சாபம் வாங்காதமா??, அது நம்மள சும்மா விடாது அதனால யாராவது ஒரு பெரியவர்களை வைத்து பேசி கொஞ்சம் கொஞ்சமா கடன அடைக்க வழியை பாருமா. என்று அறிவுரை கூறினேன் சார். இதுதான் அவள் என்கிட்ட சொல்லி புலம்புனது”, என்று முடித்தார்.

“தண்ணீர் பாட்டில் ஆசிடைகலந்து குடிச்சிருக்காங்க. ஆசிட் பாட்டில் அவங்க வீட்டுக்கு எப்படி வந்துச்சு, யார் வாங்கி கொடுத்தாங்க?,இத பத்தி உங்க யாருக்காவது ஏதாவது தெரியுமா?”, என்று கேட்டார்.

அங்கு விளையாடிக் கொண்டிருந்த பனிரெண்டு வயது சிறுவன். “சார், காலையில அவங்க கீழ பினாயில் வித்தாங்களா, அந்த அண்ணா கிட்ட ஆசிட் பாட்டில இந்த ஆன்ட்டி வாங்குனாங்க. நான் பார்த்தேன்”, என்று கூறினான்.

“தம்பி கொஞ்சம் கிட்ட வாப்பா. நீ என்ன பார்த்த. மறைக்காம சொல்லு?”.

“சார் காலையில அம்மா முட்டை வாங்கிட்டு வர சொன்னாங்களா?, நான் கடைக்கு போனனா அப்போ அந்த அக்காவும் என் கூட தான் வந்தாங்க. அவங்க மீன் மார்க்கெட் போறதுக்கு என் கூட தான் வந்தாங்க. கீழே வரும்போது ஆசிட் பினாயில் எல்லாம் வித்துட்டு வருவாங்களா அந்த அண்ணா கிட்ட ஒரு லிட்டர் ஆசிட் வாங்கினாங்க. அப்ப நான் பார்த்தேன் அப்புறம் நான் கடைக்கு போயிட்டேன். அவங்க எங்க போனாங்கன்னு தெரியல. எனக்கு தெரிஞ்சு மீன் மார்க்கெட் தான் போயிருப்பாங்க”, என்றான் அந்த சிறுவன்.

இப்பொழுது போலீஸுக்கு, ஆசிட் வாங்கியது அந்த அம்மணி தான் என உறுதியாகிவிட்டது. சரி ஆசிட் வாங்குனதாவே இருக்கட்டும் அதில் தண்ணீர் கலந்தது யாரு ? ஆசிட் ஃபுல்லா இருந்திருக்கும். ஆனா பாதி ஆசிட் பாதி தண்ணீர் இது கலந்தது யாரு?? என்று சிந்தித்தனர்.

அந்த விசாரணையில் புரியாத புதிரா இருக்கு என்ன நடந்திருக்கும்?? என்று மீண்டும் மீண்டும் சிந்தித்தனர்.

எங்கு சுத்தினாலும் வந்த இடத்திலேயே வந்து நிற்பது போல இருந்தது. என்ன செய்யலாம் என்று அவர்களுக்குள் கலந்தாலோசிக்க.

ஒரு காவல் அதிகாரி, “நம்ம சாம்பு அண்ணாவை கூப்பிடு. இதுக்கெல்லாம் அவரு தான் கரெக்டா ஜட்ஜ் பண்ணுவாரு. விசாரிச்ச எல்லாத்தையும் சாம்புவிடம் சொல்லிடுங்க”, என்றார்.
அந்த நொடியே சாம்புவை அழைத்தனர்.

“ஐயா வணக்கம், ஒரு கேஸ் விஷயமா உங்களிடம் பேச உள்ளோம் நீங்க வர முடியுமா?, எங்களுக்கு கேஸ் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிக்குது. உங்க உதவி வேணும்”, என்று கூற.

அவரும் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து சேர்ந்தார். அவர்கள் விசாரணையில் விசாரித்த அனைத்து பைல்களும் அவர் டேபிளில் வைக்கப்பட்டது. அதையும் அவர் ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பித்தார்.

“அந்தக் கடன் கொடுத்த வீரசாமியை முதலில் கூப்பிடு”, வீராசாமி போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டார்.”சொல்லுங்க வீராசாமி? “, என்று கூறினார்.

“எல்லாத்தையும் அங்கேயே சொல்லிட்டேனே”, என்றார் வீராசாமி.

“இல்ல இது என்னுடைய கேஸ். இப்ப மறுபடியும் விசாரிக்கணும். நீங்க எவ்வளவு கடன் கொடுத்தீங்க? “.

“ஐந்து லட்சம் சார்”.

“கொடுத்து எத்தனை வருஷம் ஆகுது? “.

“ஒரு எட்டு வருஷம் இருக்கும் சார்”.

“அதை திரும்ப போய் கேட்டீங்களா? “.

“போனோம் சார். அவங்க எங்களுக்கு மரியாதை கொடுக்குற மாதிரி இல்ல. எங்களுக்கு அடித்து துரத்தாத குறையா வெளியே அனுப்பிட்டாங்க சார்”.

“அது சரி, நீங்க மேற்கொண்டு எதுவும் செய்யலையா?”.

“இல்ல சார், தெய்வமே சாட்சி அப்படின்னு மனச தேத்திக்கிட்டு வந்துட்டேன் சார்”.

“அவ்வளவு பெரிய மனசா உனக்கு? “., என்று கேட்டார் சாம்பு.

“அப்படி இல்ல சார். எனக்குன்னு ஒரு நோய் வந்தா அந்த பணம் செலவுதானே செய்து இருப்போம். ஆனால் இப்ப வரைக்கும் நான் ஆரோக்கியமாகவும் நல்லா தான் சார் இருக்கிறேன்”, என்றார் வீராசாமி.

“சரி நீங்க போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலையா? “.

“இல்ல சார், அப்படி கொடுத்தா நான் வட்டிக்கு பணம் கொடுத்ததா என் மேல கேச திருப்பிடுவாங்க. அதனால நான் போலீஸ் கேஸ் கொடுக்கல. நான் ஏமாந்துட்டேன் அவங்க ஏமாத்திட்டாங்க அவ்வளவுதான் சார். இத வஞ்சம் வெச்சு பழிவாங்க நினைக்கவே இல்ல சார்”, என்றார்.

“சரி நீங்க போகலாம்”.

“நன்றி சார் ”.

“அடுத்ததா அந்த பனிரெண்டு வயது சிறுவனை கூப்பிடுங்க”.

“தம்பி நீ என்ன பார்த்த அதை சொல்லு?“.

அவன் அன்று போலீசிடம் சொன்னதை அப்படியே சொன்னான். அவனை ஆழ்ந்த கவனித்து அவன் பேசியதை உள்வாங்கினார்.

“அவர்களின் பெண்? “, என்று கேட்டார் சாம்பு.

“திருமணமாகி போயிட்டாங்க சார்”.

“சரி அவர்களின் பிள்ளை? “, என்று மறுபடியும் அவர் கேட்க.

“அவன் நேத்து காலையில் சேலம் போயிட்டான் சார் தகவல் தெரிவித்துள்ளோம்“. என்றனர் காவலர்கள்.

“எத்தனை மணிக்கு புறப்பட்டான்? “.

“காலையில அம்மா மார்க்கெட் போகும்போது அந்த தம்பி வீட்டுல தான் இருந்தான். அப்பறம் தான் சார் போனான்”, என்று பக்கத்து வீட்டுக்காரர் கூறும் போது.

“அப்போ அந்த ஆசிட் வாங்கும்போது அவரின் மகன் வீட்டில் தான் இருந்தானா?? “, என்று சாம்பு தன்னுடைய சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தினார்.

அடுத்ததாக மீன் மார்க்கெட் சென்று அங்கு உள்ளவர்களிடம் இறந்த பெண்மணியை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.

“அவங்க மீன் வாங்க வரும் போது கையில் ஒரு லிட்டர் வாட்டர் கேன் ஏதாவது வைத்து இருந்தார்களா? “, என்று அவர்களுடைய பாணியில் விசாரணையை ஆரம்பித்தார்.

அதற்கு மீன் விற்பவர்கள்.
“இல்ல சார் அவங்க சும்மா கை வீசியபடி தான் வந்தாங்க, இதோ இவங்க கிட்ட தான் மீன் வாங்கிக் கிட்டு போனாங்க”, என்று அங்கிருந்து மீனவப் பெண்மணி ஒருவர் கூற.

அப்போ ஆசிட் பாட்டில மீன் மார்க்கெடுக்கு எடுத்துட்டுவரலை என்று தெளிவாக தெரிந்தது.

“அடுத்ததாக அவர்கள் மகனை விசாரிக்க வேண்டும் அவன் உடனே அழைப்பு கொடுத்து வரவைங்க”, என்று சாம்பு கூற.

கைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது.
அதை உடனே எடுத்த அவர்களின் மகன் சசிதரன். “ஹலோ சொல்லுங்க? “, என்றான்.

“தம்பி நீங்க எங்க இருக்கீங்க, பெரிய அதிகாரி உங்ககிட்ட விசாரிக்கணும்னு சொல்றாரு? “, என்று காவல் அதிகாரி ஒருவர் கேட்க.

“நான் வந்துட்டேன் சார். பத்து நிமிஷத்துல வந்துருவேன்”, என்றான்.

சசிதரன் வீட்டை அடைந்தான். அங்கு அவனுடைய தாய் தந்தை பிரேதங்கள் இல்லை அது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருந்தது. அங்கே சென்றான். அங்கு அவனைப் பார்க்க அனுமதிக்கவில்லை காவல் நிலையத்திற்கு வந்து சேர்ந்தான்.

சாம்பு சசிதரனை பார்த்து. “தம்பி நீ சேலத்துக்கு செல்லும் போது. உனது தாய் ஒரு ஆசிட் பாட்டிலை உன்னிடம் கொடுத்து விட்டு சென்றார்களா, அல்லது அவர்கள் எடுத்துட்டு வந்து வீட்டில் வைத்தார்களா? “, என்று அவர் பாணியில் விசாரணையை ஆரம்பித்தார்.

அதற்கு சசிதரன். “சார் நான் கிளம்பிட்டு இருந்தேன். அம்மா படியேறி வந்தாங்க கையில ஒரு பாட்டில் வச்சிருந்தாங்க. அதை ஆசிட் பாட்டில்ன்னு சொன்னாங்க. நானும் அதை வாங்கி பாத்ரூமில் உள்ள அரை லிட்டர் பாட்டிலில் ஊற்றிவிட்டு மீதியை ஜன்னல் ஓரத்தில் வைத்துவிட்டு வீட்டை பூட்டிக் கிட்டு கீழே வந்தேன். சாவியை அவங்க கிட்ட கொடுத்துட்டு நான் ஊருக்கு கிளம்பிட்டேன் சார். இப்பொழுது தான் வருகிறேன்”, என்று அவன் வாக்குமூலம் கொடுத்தான்.

மகனுக்கு பெற்றவர்களை கொள்ள வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்று தெரிந்தது.

வீடு உள்பக்கமாக தாழ் போட்டு இருந்தது. பாட்டிலை மனைவிதான் வாங்கி வந்திருக்கிறார். மகனும் வீட்டில் இல்லை மேலே மொட்டை மாடியில் அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்தான் மனைவியை அழைத்து இருக்கிறார். குடி போதையிலும் இருந்திருக்கிறார் மனைவி உணவை எடுத்து வரச் சொல்ல. குடிபோதையில் ஆசிட் உள்ள பாட்டிலை எடுத்து பாதி அளவு தண்ணீரை நிரப்பிக் கொண்டார்.

அது தெரியாமல் மனைவியும் சாப்பிட அமர்ந்து விட. இருவரும் சேர்ந்தே சாப்பிட்டு முடித்தனர். மனைவி மற்ற பொருட்களை கிச்சனில் வைப்பதற்காக சென்று விட்டார். இவர் ஜன்னலின் அருகில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து கேனில் இருந்த தண்ணீரையும் அதில் நிரப்பி குடித்து விட்டார்.

மனைவி திரும்பி வந்து பார்க்கும்போது கணவன் தொண்டை பிடித்துக் கொண்டு துடித்தபடி மயங்கி சரிந்தார். அதை பார்த்ததும் அவருக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. மருத்துவமனைக்கு செல்லலாமா, வெளியே அழைக்கலாமா என்று சிந்தித்து குனிந்தவர் இருதயத்தை பரிசோதித்தார். துடிப்பு நின்று இருந்தது. பயம் அவரை கவ்வி கொண்டது. தண்ணீர் பாட்டிலை பரிசோதித்தவருக்கு தெரிந்து விட்டது.

கதவு தாழ் போட்டு இருக்க. கணவன் ஆசிடை குடித்து விட்டிருக்கிறார். ஆசிட் பாட்டிலை வாங்கியது தான்தான். வெளியில் சென்று இதை சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். இவருடைய சாவிற்கு காரணம் தான் என்று நினைத்து விடுவார்கள். ஜெயிலுக்கு போக வேண்டி இருக்கும். என்று சிந்தித்தவருக்கு பயப்பந்து ஒன்று நெஞ்சில் உருள ஆரம்பித்தது. எல்லோர் முன்பும் கையில் விலங்கை பூட்டி ஜெயிலுக்கு அழைத்துச் செல்வது போலவும் அங்கு எல்லோரும் அவரை கிண்டல் செய்வது போலவும். கொலைப்பழியை சுமந்து கொண்டு வாழ முடியுமா என்று யோசித்தார். படங்களில் பார்த்தது எல்லாம் அவருக்கு ஞாபகம் வர. தலையை உலுக்கியவர் அந்த ஆசிட் அடங்கிய தண்ணீர் பாட்டிலை சட்டென்று எடுத்து குடித்துவிட்டார்.

மொத்தத்தில் இது திட்டமிட்ட கொலையும் இல்லை. தற்கொலையும் இல்லை விபத்து கலந்த தற்கொலை போல தான், அதிலும் அவசரத்தில் எடுக்க முடிவு, தப்பாக தான் முடியும் என்பதற்கு இது ஒரு பாடமாகும். இருவரின் உயிர் பரிபோனது அவர்களின் அறியாமையில் செய்த தவறுதான் என்று இந்த கேஸை ஒரு முடிவுக்கு கொண்டு வருகிறார் சாம்பு.
 
Joined
Mar 17, 2025
Messages
26
அட்டகாசம்.

சூப்பர் சூப்பர்.

கடைசி வரையில் திக் திக் திக் தான்.

ஷாம்பு துப்பறிந்து நடந்த சம்பவத்தை அழகாக சொல்லி விட்டார்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top