- Joined
- Aug 31, 2024
- Messages
- 40
- Thread Author
- #1
அத்தியாயம் - 15 (இறுதி)
கரண் கம்பை சுழற்றியபடி சிரித்துக் கொண்டே நிற்க, “எவ்வளவு நேரம் கதவைத் தட்டுறோம் திறக்காம இருக்க. மாடிக்கு ஏறி அங்கிருந்து உள்ள வரது எவ்வளவு கஷ்டமா இருக்கு” என்றவன் கதவைத் திறக்கவும் மற்றவர்கள் உள்ளே நுழைந்து சங்கவியைச் சுற்றி அமர்ந்தார்கள்.
முதல் முறையாகப் பயத்தில் நடுங்க ஆரம்பித்தாள். மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “யார் நீங்கெல்லாம் எதுக்கு வந்திருக்கீங்க? முதல்ல வெளிய போங்க” எனக் கத்தினாள்.
“எதுக்குக் கத்திட்டு இருக்க? உன் அண்ணன் வினோத் புகார் கொடுத்திருக்கான். அதனால், விசாரிக்க வந்திருக்கோம். உன்னைத் தள்ளிட்டு வந்தானே அவனை எங்க?”
“கண்டபடி பேசாதீங்க. நானா இஷ்டப்பட்டுத்தான் வந்தேன். அவர் இப்போ என் கணவர்” என்று தாலியைக் காட்ட, “உங்களை அனுப்பிய வினோத்கிட்ட போய்ச் சொல்லுங்க எங்களுக்குக் கல்யாணமாயிட்டு. உன் தங்கை இங்கிருந்து வரமாட்டா. உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோன்னு நான் சொன்னேன்னு சொல்லுங்க”
எல்லோரும் சத்தமாகச் சிரிக்க, “அவன் உன்னைக் கூட்டிட்டு வரச் சொல்லவே இல்லையே. உன்னையும் நகுலையும் புதைச்சிட்டு வரச் சொல்லியிருக்கான்” எனக் கரண் சொல்லவும் சங்கவிக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. நிஜமாவே வினோத் தன்னை கொல்லும் அளவுக்குச் சென்றுவிட்டானா? நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை.
பயத்தில் தலை முதல் கால்வரை நடுங்க, இவர்களிடமிருந்து தப்புவது இயலாத காரியம். அடுத்து என்ன செய்வதென்று சுற்றிப் பார்த்து யோசிப்பதற்குள், கரண் அவள் மூக்கில் வெள்ளை தூளைத் தடவினான்.
சங்கவி என்னவென்று யோசித்துச் சுதாரிப்பதற்குள் அவள் உள்ளிழுத்த காற்று வழியாக உள்ளே செல்ல, தலை சுற்ற, பார்வை மங்கலாக, கை, கால்கள் மிதப்பது போலிருக்க, அப்படியே கீழே சாய்ந்தாள்.
தன்னைச் சுற்றி நடப்பதெல்லாம் தெரிந்தாலும், எதிர்த்து அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. போதை தலைக்கேற கிடந்தவளுக்குக் காக்கிச் சீருடைத் தவிர, நகுல் இருக்கும் அடையாளமும் தெரியாமல் போனது.
சிகரெட்டில் தூளைக் கொட்டி உள்ளிழுத்துக் கொண்டு மது பாட்டில்களோடு ஆட்டம் ஆடினார்கள். தன் நிலையை மறந்த கரண், சங்கவியைத் தூக்கிக் கொண்டு மாடிக்குச் செல்ல, அவன் பின்னே மற்றவர்களும் சென்று கரும்பு சக்கையாகப் பிழிந்தனர்.
போதை இறங்க இறங்க திரும்ப ஏற்றிக் காலைத் தொடங்கியது மாலைவரை தொடர, இருட்டுவதற்குள் ஒவ்வொரு இதழாகப் பிய்த்துக் கசக்கி எறியப்பட்டு குற்றுயிராகா கிடந்தாள். சிறிது நினைவு வர மெல்ல கண்களைத் திறந்து பார்க்க, தன் நிலை கண்டு அழக் கூடப் பலம் இல்லாமல் இருந்தவளுக்கு இனிமே உயிரோடு இருக்கப் போவதில்லை என்பது புரிந்து போனது.
அறையைச் சுற்றி கண்களைச் சுழல விட்டவளுக்குத் தன் கை அருகில் கைப்பேசி இருப்பதைக் கண்டு எடுத்துக் காணொளிப் பதிவைப் பதிய, “என் சாவுக்கு என் அண்ணன் வினோத்தும் அவன் அனுப்பிய பத்துப் போலீசும்தான்” எனத் திக்கித் திணறிப் பேசியவளால் அதற்கு மேல் பேச முடியாமல் பதிவைச் சேமித்துவிட்டு கீழே வைத்தாள்.
“ஐயோ! சங்கவி! சங்கவி!” என நகுல் அலறும் சத்தம் காதுகளில் கேட்க, மூடிய கண்கள் திறக்க, தலையில் அடித்து அழும் நகுல் தெரிந்தான். அவளைத் தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு, “உன்னைத் தனியா விட்டுட்டுப் போயிருக்கக் கூடாது” நகுலின் நாடக புலம்பலில் கண்ணீர் சிந்தியவள், அவன் கைகளில் கைப்பேசியை வைத்தாள்.
“போலீ…ஸி…டம் கொ…டு” எனத் தன் உயிரை விட்டிருந்தாள் சங்கவி. அதை உறுதி செய்தவன் மற்றவர்களையும் மேலே வரச் சொல்லி, இரவோடு இரவாகத் தோட்டத்தில் சங்கவியையும் அவள் பொருட்கள் அனைத்தையும் சருகோடு சருகாக எரித்துவிட்டனர். அவள் வந்த தடயம் எதுவுமின்றி அழித்துவிட்டனர்.
சங்கவி பதிவு பண்ணிய கைப்பேசியை மட்டும் பத்திரமாகத் தன் கால் சட்டைப் பையில் வைத்தான். நாள் முழுவதும் ஏற்றிய போதையில் சென்றவன், இயற்கை உபாதையைக் கழிக்க வழியில் இறங்கியவன் கைப்பேசியைத் தவறவிட்டிருந்தான்.
******
நடு வீட்டில் பூசைப் பொருள்களுடன் புகை மண்டலம் சூழ சாமியார் மந்திரங்கள் ஓத, சீடர்களும் அவர்களுடன் சேர்ந்து மந்திரங்கள் சொல்ல, விலங்கு மாட்டி நகுலும் கரணும் இருக்க, அவர்கள் பின்னாடி தேவன், கண்ணன், முகிலன் இருந்தனர். அவர்களுக்கு எதிரில் தெய்வானைத் தவிர மற்ற எல்லோரும் இருந்தனர்.
நகுலும் கரணும் நடப்பது எதுவும் புரியாமல் குழப்பத்தில் இருக்க, கணொளியை நீதிமன்றத்தில் காண்பித்துத் தப்பிவிடலாமென நினைத்தவர்களுக்கு அங்கு அழைத்துச் செல்லாமல் இங்குப் பலி கொடுத்துவிடுவார்களோ என்ற ஐயத்தில் இருந்தனர்.
வினோத்தும் சந்துருவும் நகுலை வீட்டிற்கு அழைத்து வரக் கேட்டது பற்றிக் கண்ணன் தேவனிடம் சொல்ல, தன் சொந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அனுமதி கொடுத்துவிட்டு தானும் உடன் வந்திருந்தார்.
நேரம் ஆக ஆகப் பூசையின் உச்சத்தில் சங்கவி வர வேண்டும். ஆனால், அவள் வராமல் அலைக் கழித்தாள். அவளை வர வைக்கச் சாமியாரும் சீடர்களும் முயற்சிக்க, சங்கவியின் ஆன்மா வரமால் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருப்பதைச் சாமியார் எல்லோரிடமும் சொன்னார்.
சங்கவியின் ஆன்மா என்றதும் நகுலும் கரணும் வெடவெடத்துப் போக, எழுந்து ஓட முயற்சிக்க எழ முடியாமல் பின்னிருந்த மூவரின் கரம் அழுத்திப் பிடித்திருந்தது.
திடீரென்று எழுந்த வினோத், “சங்கவி, வா! நான்தான் கொலை பண்ணேன்னு சொன்னியே… யார் காரணம்னு உண்மை தெரிஞ்சிக்கனும்னா இங்க வா” என வினோத் கூப்பிட்டான்.
“உயிரோடு இருக்கும் போதுதான் நாங்க சொல்றதைக் கேட்கலை. உன் வாழ்க்கையை இழந்து இவ்வுலகை விட்டு போன பிறகும் உனக்கு நிம்மதி இல்லைன்னா அது கொடுமை சங்கவி. இப்பவாது நாங்க சொல்றதைக் கேளு. நீ உண்மையைத் தெரிஞ்சிக்கனும்னா வா சங்கவி” திவ்யா சுற்றிச் சுற்றிப் பார்த்து விழிகளில் நீர் வடிய அழைத்தாள்.
திவ்யாவின் கண்ணீர் சங்கவியை அசைக்க, திடீரென்று சாமியார் போட்டிருந்த வட்டத்திற்குள் தீச்சுவாலைகளின் நடுவில் தெரிந்தாள், நெருப்பைத் தாண்டி அவளால் அடியெடுத்து வைக்க முடியாது. சாமியாரின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாள்.
“சொல் உனக்கு வேணும்? எதுக்கு இவங்களைப் பழி வாங்க துடிக்கிற?” சாமியார் மிரட்டலுடன் கேட்க.
“எனக்கு என்ன வேணும்னு தெரியாமலா பூசை செஞ்சு என்னை உன் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்த?” எனக் கர்ஜித்தாள்.
“நீ முதலில் இவங்க சொல்றதைக் கேள். அதுக்குப் பிறகு என்ன செய்யனுமோ செய். ஆனா, யார் உயிரையும் எடுக்க உன்னை அனுமதிக்கமாட்டேன். தப்புப் பண்ணவங்களைச் சட்டம் பார்த்துக்கும்” எனச் சாமியாரும் பதிலுக்குக் கர்ஜித்தார்.
“ஓ! பார்க்கலாம் அதையும்… ம்… ம்…” என உறுமியவள், “சொல்லச் சொல்லு” என்றாள் எகத்தாளாமாக.
“வினோத் என்னுடனும் இன்ஸ்பெக்டருடனும் பேசியது உண்மைதான். அது உன்னைக் கொல்ல இல்லை. உன்னைக் கண்டுபிடிக்க. அதை வீடியோ எடுத்து உன்னைக் கொல்ல திட்டம் போட்டதாக நகுல் மாற்றியிருக்கான். அதை நம்பிதான் வினோத்தை தப்பா நினைச்சிட்டு இப்படிப் பண்ணிட்டு இருக்க” என்றான் முகிலன்.
“வினோத்தை ஜெயிலுக்கு அனுப்ப சாகுற நேரத்தில் நீ பதிவு பண்ணியிருந்த கைப்பேசியை நகுல் தவற விட்டுட்டான். அந்தக் கைப்பேசி என்னிடம் கிடைச்சது. அதை வைத்து விசாரணை தொடங்கினப்போதான் எங்களுக்குப் பல உண்மைகள் தெரிய வந்தது. நீ பதிவு பண்ண கைப்பேசி உன்னுடையது இல்லை. உன்னுடைய பொருள்கள் இருந்தால் மாட்டிக் கொள்வோம்னு எல்லாத்தையும் நகுல் அழிச்சிட்டான்” கண்ணன் சொல்ல.
Last edited: