• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Jul 12, 2025
Messages
23
பாகம்…9

இந்த மலையில் கள்ளிக்காடு பெரிய பட்டி, தாமூர், சிறிய பட்டி போன்ற பத்துக்கும் அதிகமாக குக்கிராமங்கள் சுற்றுவட்டாரத்தில் உள்ளது. இவையனைத்தும் நிர்வாக வசதிக்காக ஜனகபுரி பட்டினம் என்ற பஞ்சாயத்து யூனியன் கீழ் ஒருங் கிணைக்கப் பட்டுள்ளது.


அதிவீரனும், அவன் தாய் மைத்திரியும் படையல் நிகழ்ச்சிக்காக ஊருக்குள் போகும் போது. காடே திருவிழா கோலம் பூண்டியிருந்தது.


கலர் கலராக பூக்கள் தோரணங்கள் மக்கள் அனைவரும் தூய உடை உடுத்தி, பெண்டிரும்,தங்களை நன்றாக அலங்கரித்துக்கொண்டு, தலையில் தங்களுக்கு பிடித்த பூவை சூடிக் கொண்டுவந்திருந்தனர்.



வனத் தலைவர் ருத்ரன் இவர்களை வரவேற்றார்.


வாடா பேராண்டி என்று கட்டி அணைத்தார்.



அவரே இவர்கள் வீட்டை கிராம பெண்டிரைவைத்து சுத்தம் செய்து விட்டார்.


உள்ளே போனதும், மரிக்கொழுந்து நறுமணம் இயற்கை காற்றில் வீசியது.



நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்குள் அதிவீரனும், கயல்விழியும் கையில் காமிராவுடன் வந்தனர்.


மைத்ரி தோட்டத்தில் தான் வைத்து விட்டு சென்றியிருந்த ரோஜாக்கள், மற்றும் சாமந்தி செடிகளையும், சீதாப்பழம், மற்றும் பலவகை செடிகளையும் காணச் சென்றியிருந்தார்.


அம்மா எங்கே என்று கயல் கேட்க


அவருக்கு தான் வளர்த்த செடிகொடிகளை பார்த்தே ஆகவேண்டும்.


அம்மா… அம்மா… என்று அழைக்க
வந்தாள்.



அவர் வந்ததும் எழுந்து நின்றார்கள். இவ்வளவு தெய்வீக அழகா என்று வைத்த கண் வாங்காமல் அவரையே பார்த்தனர்.



மஞ்சள் நிறத்தில் அன்று மலர்ந்த பூ போல அழகு கொண்டவளாக இருந்தாள்.


நிதானம் பேசும் பார்வையே அவளின் பெரும் பண்பு. கண்ணில் ஒரு மென்மையான தீப ஒளி. சற்று சோர்வும் இருந்தாலும், அதற்குள் ஒரு கண்ணியம் இருந்தது.


நெற்றியில் குங்குமம், தலையின் மத்தியிலிருந்து பின்னிய நீண்ட கூந்தல். எளிய பருத்தி புடவையில் மெல்லிய தேகம் கொண்டவளாக இருந்தாள்.



அவளின் நடை மொழி, பார்வை அனைத்திலும் தாய்மை வழிந்தோடியது.



அதியும், கயலும், அவர் காலில் வீழ்ந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர்.



அதிவீரனை தொட்டு தூக்கியதில் ‘
அவர் வளர்க்கும் கிளி க்க்கீ என்று கத்தியது. இங்குமங்கும் பறந்து அதிவீரன் தோளில் அமர்ந்தது.


மைத்ரிக்கு நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது.



அது முகத்தில் தெரிந்தது.


வேங்கையனுக்கு அவரின் போக்கு வித்யாசமாக இருந்தது.


உணர்ச்சி வசப்படகூடியவர் இல்லையே.


அதிவீரனை அருகில் அமர்த்திக் கொண்டு அவன் கைவிரல்களை பற்றிக் கொண்டியிருந்தார்.



மெல்ல அவள் கைகளை விலக்கி வேங்கையன் தன் அம்மாவின் கைகளை தடவி கொடுத்தான்.



அப்போது ஒரு பெண்மணி, தலைவர் கூப்பிடுகிறார் என்று சொல்லிவிட்டு போனாள்.


அம்மா..படையலுக்கு நேரமாகி விட்டதுபோகலாமா என்று வேங்கையன் கேட்க


சற்று தடுமாற்றத்துடன் போகலாம் என்றார்.


பெரிய கூடை நிறைய பழவகைகள்,
காய்கறிகள், பலகாரங்கள். கூடைநிறைய அம்மா தன் கையால் நேர்த்தியாக கட்டியமாலைகள், பூச்சரங்களை எடுத்துக் கொண்டு கிளம்பினர்.


கயலுக்கும் தான் தொடுத்த கோழி கொண்டை பூக்களை கொடுக்க அதை அவள் தலையில் வைத்ததும், அழகு கூடியது.


அவளை பார்த்து அதிவீரன் சூப்பர் என்று சொல்லி, கண்ணடித்தான்.



இவர்கள் வந்ததும் சிவபார்வதிக்கும்.
முருகனுக்கும் படையல் போடும் நிகழ்ச்சி ஆரம்பம் மாயிற்று.



விவசாயம் செழிக்கவும், கால்நடைகள் நோயின்றி வாழவும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது .

அந்தப் பகுதியில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களே செய்து வருகின்றனர் .


இந்த மலையில் பெரும்பாலான விளை நிலங்களில் திணை சாமை வரகு கேழ்வரகு ஆகியவையே பயிரிடப்படுகின்றன .

மிளகும் மிக அளவில் பயிரிடப்படுகிறது .


அங்கு பயிரிடப்படும் விலைப் பொருட்களை சுற்றுவட்டார மலைப்பகுதியில் சந்தைப்படுத்திக் கொள்கிறார்கள் .


மலை தேனையும் மலைத்தினை மாவையும் பிசைந்து உருண்டை உருண்டையாக வைக்கப்பட்டு இருந்தது. மலையாட்டு புலால் சமைத்து மலையாட்டு பால் காட்டெருமை பால் மலை இளந்தைப் பழம் மலை வாழைப்பழம் ஆகிய கனிகள் பிரதானமாக இடம்பெற்றிருந்தது .


உலர்ந்த மூங்கில் தளர்களில் செய்த பதார்த்தங்களும் இடம்பெற்றிருந்தது.


மலையில் விளையும் அனைத்து பழங்களும் சீதாப்பழம் பலாப்பழம் உட்பட படையலுக்காக காத்துக்கொண்டியிருந்தன.



சிறுவ சிறுமிகள் எப்போது படையல் முடிவு பெறும். எப்போது உண்போம் என்று பதார்த்தங்களை பார்த்தபடியே
பொறுமை இழந்து நின்றுக் கொண்டிருந்தார்கள்.



தலைவர் தலையசைத்ததும், மேளங்கள் முழங்க பூசாரி பெரிய உருண்டை கற்பூரத்தை ஏற்றி வழிபாடு செய்தார்.


பெண்கள் விநோத ஒலி எழுப்பி குலவை யிட்டனர்.


வீரவேங்கயனின் கண்கள் இங்குமங்கும் அலைபாய்ந்துக்கொண்டு இருந்தது.


திரும்பி பார்ப்பதும், சுற்றுமுற்றும் பார்ப்பதுமாக இருந்தான்.


இவர்கள் விழாவில் கண்டிப்பாக நடனம் நடைபெறும்


பெண்கள் பிரகாசமான வண்ணங்களில் நேர்த்தியான புடவைகள் முக்காடு போல் அணிந்து தலைமுடி முதல் மணிக்கட்டு வரை பூக்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டு நாட்டுபுற நடனத்தை ஆடினார்கள்.





அப்படி பெண்கள் ஆடும் போது வேங்கையன் ஒருவர் முகத்தையும் பாராது சோகமாக தலைகவிழ்ந்து அமர்ந்திருக்கும் இடத்தில் ஒரு பெண் தன் புடவையை உயர்த்தி காலில் அணிந்திருந்த வெள்ளி கொலுசை காண்பித்தாள்.


முதலில் அதை பார்த்து விட்டு, அசட்டையாக இருந்தவன், பொறி தட்டினாற் போல் விழித்துக் கொண்டான்.



துடிப்பான இசைக்கேற்ப. சுற்றி சுற்றிஆடி வரும் போது , நன்றாக கவனித்தான்.



அதே கொலுசு அவளை பிரியும் போது, வேங்கையன் பத்மாவிற்கு நினைவு பரிசாக கொடுத்தது. அதை ஒருவருக்கும் தெரியாமல் வைத்துக்கொண்டு இப்போது போட்டுக்கொண்டு நடனமாடினாள் -.


இந்த நாட்டுபுற நடன நிகழ்ச்சி பெரும்பாலும் துடிப்பான இசை மற்றும் இசைக் கருவிகளுடன் சேர்ந்து பார்ப்போர் நாடி நரம்புகளையும் தாளம் போட்டு ஆடவைக்கும்.


அடுத்து அவர்களே தலையில் மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட பானை யுடன். கைகளிலில் பிடித்துக் கொள்ளாமல் நம் கரகாட்டம் போன்று ஒரு நடனத்தை ஆடினார்கள்.


கயலும், அதிவீரனும் கைதட்டி, உற்சாகபடுத்தினார்கள்.


சிறுவர்களும் அவர்களோடு சேர்ந்து சேர்ந்து நடனமாட, வேங்கையன், கயல் ,அதியும் எழுந்து நடனமாட தொடங்கினார்கள்.


ஊர் மக்கள் அனைவரும் நடனமாட திருவிழா களைகட்டியது.



எப்படியோ வேங்கையன் கொலுசு
அணிந்தவளின் அருகில் போக. அவள் முக்காடை விலக்க பத்மா என்று உற்சாகமிகுதியால் கத்தினான்.


அந்த கூட்டத்தில் யார் யாருடன் ஆடுகிறார்கள் என்று தெரியாத நிலையில் அவளின் கைகளை பற்றிக்கொண்டு ஆடினான்.


இருவரும் ஜோடி போட்டுக் கொண்டு மூன்று வருடங்கள். ஏக்கங்கள் தீர ஆடினார்கள்..


கயலும்அதிவீரனும் ஆட அதைப் பார்த்த மைத்திரியின் கண்களில் ஏனோ கண்ணீர் வழிந்தது.


இது போல் அவள் ‘கணவருடன் ஆடியது நினைவுக்கு வந்தது.


கிடுகிடுவென்று ஓடி அவளருகில் வந்த அதிவீரன் அவளையும் ஆட அழைத்து போனான்.


தன் கணவருடன் ஆடியது நினைவுக்கு வர .தன்னை மறந்து ஆடினாள்..


அப்போது அவள் கணவர் ஒருவருக்கும் தெரியாமல் முத்தம் கொடுத்ததையும் தன்னை தன் இருகைகளால் ஏந்திக் கொண்டு ஆடியதும் நினைவு வர,
கதறி அழுதுக் கொண்டே தன் வீட்டை நோக்கி ஓடினாள்.


அதைப் பார்த்த வேங்கையைன், அவள் பின்னால் ஓடினான்..



தொடரும்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top