• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Jul 12, 2025
Messages
4
ரோந்து போலீஸ்காரர் அதல பாதாளத்தில் வெள்ளை நிற கார் விழுந்து இருப்பதைக் கண்டார்.

தற்கொலை மீட்பு படையினர் கிழறங்கி பார்த்தார்.





பிறகு மேலேறி வந்தனர்.


ஸார்..ர்.. அது வெள்ளை நிற பென்ஸ் கார். உள்ளே ஒருவரும் இல்லை. காரின் கதவு திறந்து இருந்தது.


ஒரு பழக்கூடை மட்டும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டியிருந்தது.
காரின் நம்பரை சொல்ல இன்ஸ்பெக்டர அவசரமாக R.T.O.வுக்கு போன் செய்து அது யார் வண்டி என்று பார்க்க , அது ஜமின்தார்செல்வன் வண்டியாக இருந்தது.


அப்பளமாக நொருங்கிக் கிடந்தது.
அதில் பயணித்து இருந்தால் உயிரோடு இருக்க வே வாய்ப்பு இல்லை.




இன்ஸ்பெக்டர் அரண்மனைக்கு
போனார். இருள் சூழ்ந்து ஆள் அரவமற்று இருந்தது. அவர் சுற்றும் முற்றும் பார்த்தார் . அந்த காலத்தில் களையப்படாத மரபு சார்ந்த அந்த வீடு, ஒரு அரண்மனை போல கம்பீரமாக வானத்தை நோக்கி நிமிர்ந்து நின்றது. சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த மாளிகை, கால பழக்கத்தையும். குடியிருப்பவர்களின் அழியாத கெளரவத்தையும் கொண்டியிருந்தது.

கதவை திறந்துக் கொண்டு உள்ளே போனார்.


அந்த கதவே கோவில் கதவுகள் போல் வேலைபாடு மிகுந்து காணப்பட்டது அந்த விஸ்தாரமான ஹாலில் சலவை கற்களால் செய்த இரண்டு படிக்கட்டுகள். அதன் இரு புறமும் செம்பழுப்பு நிறத்தில் செதுக்கிய தூண்கள். ஒவ்வொரு தூணிலும் பூ. மயில். கோவில் கலசம், யாழ் போன்ற தொன்மையான வடிவங்கள் பொறிக்கப்பட்டு இருந்தா..ஹாலில் போடப்பட்டிருந்த விலையுயர்ந்த சோபாக்கள் .. வேலைப்பாட்டுடன் கூடிய ரோஸ்வுட் மரத்தில் செய்யப்பட்டு, அதன் மெருகு குலையாமல் பளபளவென்று இருந்தது.


ஹாலின் நடுவே பெரிய வெண்கல தட்டு நீரால் நிரம்பி பூக்கள் அதில் மினுங்கிக் கொண்டியிருந்தது.


நீளமான மரமேஜையில் விளக்குகள், சுவரில் தொங்கும் பழங்கால ஓவியங்கள், அனைத்தும் அந்த அந்த வீட்டிலுள்ளவர்களின் கலாரசனையை பறைசாட்டியது.



சமையலறை நீண்டு, பரந்து காணப்பட்டது. அதை ஒட்டி இருந்த ஹாலில் 20 பேர் அமர்ந்து சாப்பிடக் கூடிய மரமேஜை கண்ணை பறித்தது..



படிக்கட்டுகள் ஏறி, மாடியறையை அடைந்தார்
.

வேலைக்காரர் கள் இது தான் ஐயாவின் அறை என்று ஒரு அறையை காண்பித்தார்கள்.


வாவ். என்று கண்கள் விரிந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டார்.
மனுஷன் வாழ்ந்து இருக்கார்.


அறை சிருங்காரத்திற்கு கேற்றார்போல் அலங்கரிக்கப்பட்டுள்ளது.



அந்த அறையே ஒருமாளிகை போல் இருந்தது.



மெல்ல அடியெடுத்து வைத்து, நோட்டம் விட்டார். எதுவும் புலப்பட வில்லை.


இவ்வளவு சொத்து உள்ளவரின் கதி இப்படியா ஆக வேண்டும். ஒரு வேளை இது கொலையாக இருக்குமோ என்ற கண்ணோட்டத்தில் விசாரிக்க வேண்டும். அங்கிருந்த கான்ஸ்டபிளிடம், எஸ்டேட்டில் விஷயத்தை சொல்லி தனபாலை அழைத்து வரச் சொன்னார்.



தனபாலன் என்னைவா எதோ என்று பதறியடித்து ஓடி வந்தான். அவனிடம் விஷயத்தை கூற, அவன் நீலிக் கண்ணீர் வடித்து ஆர்ப்பாட்டமாக அழுது அரற்றினான்.



எஸ்டேட் காரர்களும் ஓடோடி வந்தனர்.


இவ்வளவு பெரிய அரண்மனையில் வேலைக்காரர்கள் இல்லையா என்று கேட்க , சிலர் வந்தனர்.அனைவரிடமும் விசாரிக்க எல்லோரும் ஒரே பதிலையே சொன்னார்.



செல்வன் ஐயாதான் எங்களை அன்று விடுமுறை கொடுத்து வீட்டுக்கு அனுப்பியது.

அப்படித்தான் தனபாலன், செல்வன் சொல்வது போல், எல்லோரையும் வெளியேற்றி இருந்தான்.



ஏன் அப்படி செல்வன் செய்ய வேண்டும். என்று காவலர் டீம் குழம்ப எல்லோரையும் அவரவர் வேலையை பார்க்கச் சொன்னார்.


………….
.

அங்கே ஒரு பரிமளம் ,வரதன் என்ற தம்பதியினர் சோகத்துடன் புலம்பிக் கொண்டே காரில் வந்தனர்.

.

‘iஏங்க இவளுக்கொல்லாம் என்னங்க வந்தது. நாம புள்ளய பெத்துக்கிறோம் இல்ல ,இல்லாமா போறோம். இவங்களுக்கு என்ன வந்தது. ஏன் நம்மை அசிங்க படுத்துகிறார்கள்

எத்தனை குத்தலான பேச்சு. அவமரியாதை. முடியலங்க.”


‘“விடும்மா. அதான் நம்ம ஊரை விட்டே வந்து விட்டே மே. ‘“


‘iஇவர்களுக்கு பயந்து நாம ஊரா விட்டு ஏங்க வரணும்.’”


‘iநீ தினம் தினம் படற பாடு தாங்க முடியலடி.”


“நம்ப சொத்தெல்லாம் அங்க இருக்கே.”


“இருக்கட்டும். நம்ப விசுவாசி பரதன் பார்த்துப்பான்.”



ஒன்றும் பேசாமல் காரிலிருந்து வெளியே பார்த்தாள்.



ஓங்கி வளர்ந்த யூகலிப்டஸ் மரங்களின் வாசனையை முகர்ந்தாள்.


குன்னூரை நோக்கி போய் கொண்டு இருந்தார்கள்.



பரிமளம் குன்னூரை சேர்ந்தவள்.


பத்து வருடங்களுக்கு முன்பு வரதனை கைபிடித்து திருமணமாகி கொல்லி மலை பக்கத்தில் இருக்கும் பூஞ்சோலைக்கு வந்தாள்.


இருவரும் மகிழ்ச்சியாக காதலுடன்.வாழ்ந்தார்கள்..



இந்த பத்து வருடத்தில் இப்ப குழந்தை உண்டாகி விடும். .. என்று நினைத்து, ஏங்கி ஏங்கி காலம் போனது. ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானாள்.



இவள் திருமணமாகி புகுந்த வீடு போகும் போது, மாமியார் மட்டுமே இருந்தார். மாமனார் வரதன் திருமணத்திற் முன்பு T.B வந்து இறந்து போய்விட்டார். நல்ல வசதி படைத்தவர்கள் .


மாமியார் தேவி அப்பிராணி. வாய் எதுவும் பேசமாட்டார். மருமகளும், மாமியாரும் ஒற்றுமையா இருந்தார்கள். அது பொறுக்காமல் அக்கப் பக்கத்தினர் குழந்தை இல்லாத தை சுட்டிக் காட்டி, அவர் மனதில் நஞ்சை கலக்க முயன்றனர்.



‘“ஏன் தேவி. என்ன இப்படி இருக்கிற உன் மருமகளுக்கு குழந்தை பிறக்கலயே ஏன் ? என்னாச்சி என்று கேட்க மாட்டியா “”..?
.

“கடவுளின் பிராப்த்தம் என்னவோ அதன்படியே நடக்கும்” என்று சொல்லி வந்தவர்கள் வாயை அடக்கி விடுவார்.


இது வேலைக்காவது என்று பரிமளத்தையே குத்தி கிழிக்கலாயினர்.


“என்ன பரிமளம். வயிற்றில் எதாவது புழு, பூச்சி உண்டா . ஒரு சிலர் அந்த டாக்டரை பார்க்க வேண்டியது .தானே. வேறு சிலரோ அந்த கோவிலுக்கு போ. இந்த கோவிலுக்கு போ அம்மனுக்கு அங்க பிரதட்சணம் பண்ணு”. என்றெல்லாம் சொல்லி சொல்லி அவளை மன குழப்பத்திற்கு ஆளாக்கி னார்கள்.



பரிமளம் அழுதாள்.. எரிந்து விழுந்தாள்..
போகா த கோயில் இல்லை. பார்க்காத டாக்டரும் இல்லை.
என்ன பிரச்சனை, இருவரில் யாருக்கு பிரச்சனை என்று தெரியாமல் குழந்தை பிறக்கும் வாய்ப்பு கிட்ட வில்லை.


மாமியாருக்கும் T.B வந்து இறந்தார்.


இவர்கள் இருவருக்கும் அவ்வூரில் இருக்க பிடிக்கவில்லை. யாருக்காக இருக்க வேண்டும்.



குன்னூரில் அவள் பெற்றோருக்கு
சின்னதாக டீ எஸ்டேட் உள்ளது. ஒரே பெண் என்பதால் அதைப் பார்த்துக் கொள்ள போனார்கள்.


டீ எஸ்டேட் பங்களா அவர்களுக்கு ஒதுக்கப்பட்டு வைத்தார்கள்.



‘“ஏங்க உங்களுக்கு வருத்தமா இருக்கா . உங்க முன்னோர்கள் வாழ்ந்த ஊரை, வீட்டை விட்டு வெளியேறி, என் ஊருக்கு போகிறோமே”… என்று பரிமளா கேட்டவுடன்,

‘“அதெல்லாம் இல்லமா. உன் சந்தோஷம் தான் என சந்தோஷம். வேற எங்க போயிருந்தாலும் உனக்கு மகிழ்ச்சி ஏற்படாது. அத்தை, மாமா என்னை மருமகனாக வா பார்த்தார்கள்

மகனாக அல்லவா ஏற்றுக் கொண்டார்கள். எனக்குத் தான் பெற்றோர் இல்லை. நாம் போனால் உன் பெற்றோர்க்கு மகிழ்ச்சி கிடைக்கும்.’”



காரின் கதவை திறந்தே வைத்து இருந்தாள்.


அடர்த்தியாக காட்டின் பக்கவாட்டு ரோட்டில் கார் சீராக போக,


நீல வானம் தன் நிறத்தை இழந்துக் கொண்டியிருந்தது.



“ஏங்க இந்த காட்டில் மலை ஜாதி மக்கள் வசிப்பதாக கேள்வி பட்டு இருக்கேன். அப்படியா " என்று கேட்க.



“நானும் கேள்விதான் பட்டு இருக்கேன். போனதில்லை , பார்த்ததில்லை.” என்று வரதனும் சொல்ல, அந்த கரிய அடர்ந்த காட்டை பார்த்தாள்.



“இதனுள் மக்களா… நம்மால் முடிந்த உதவியை அவர்களுக்கு செய்வோமா” என்று அவள் கேட்க,



‘ஓ… செய்யலமே.’. என்றான்.



அப்போது ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது.



கண் மூடி இருந்தவள் குழந்தையின் அழுகுரலை கேட்டதும், திடுக்கென விழித்து பார்த்தாள்.



அங்கே அவள் கண்களை நம்ப முடியவில்லை ஒரு வெள்ளைத் துணியில் சுற்றப்பட்டு இருந்ததை கண்டாள்


நிறுத்துங்க நிறுத்துங்க என்று அலறினாள்.


“என்னம்மா தூங்கிட்டு இருந்த திடீரென்று இந்த காட்டு பக்கத்தில் நிறுத்த சொல்லற. எதாவது கொடிய மிருகம் இருக்கப் போகுது”. என்று சொல்லிக் கொண்டே , வண்டியை கொஞ்சம் மெதுவாக செலுத்தினான்.


“ப்ளீஸ் ங்க. நிறுத்தி விட்டு, ரிவர்ஸ்ல போங்க.”


“அங்கே… அங்கே”… என்று திக்கினாள்.


அங்க என்ன …


அவள் சொல்வது போல் வண்டியை நிறுத்தினான்.



ப்ளீஸ் கொஞ்சம் ரிவர்ஸில் போங்க.


செய்தான்.



துணி மூட்டையாக இருந்ததை காண்பித்தாள்.


இப்பொழுது அவனுக்கும் குழந்தை அழும் சத்தம் கேட்டது.


“அய்யோ.. அது பச்சிளம் குழந்தைங்க.”


யாரோ இந்த காட்டில் மனசாட்சி இல்லாமல் போட்டு இருக்கிறார்கள்.’


“தவற விட்டு இருப்பார்களோ.”...?


“இருக்காது. குழந்தையை போய் யார் தவற விடப் போற அதுவும் இந்த காட்டில்.”



வாங்க போய் பார்க்கலாம்.


“நீ காரிலே இரு நான் போய் பார்க்கிறேன் .”



இரண்டு பேரும் போவோம். என்று சொல்லி அவன் பதிலுக்கு கூட காத்திராமல் இறங்கி விட்டாள்.



சரி. சீக்கிரம் வா எதாவது மிருகங்கள் வந்து விடப் போகுது.


கிட்ட போய் பார்த்தார்கள்.


அந்த துணியை விலக்கி பார்த்தால்
ஆ… வென்று வாயை பிளந்தர்கள் .


அப்போது பிறந்த ஆண் குழந்தை
புத்தம் புது மலராய் . கண்கள் இலோசாக கூட திறக்காத நிலையில். உடம்பில் துணி இல்லாமல் |ஒரு வெள்ளைத் துணி மட்டுமே போர்த்திய படி இருந்தது.


எதைப் பற்றியும் யோசிக்காமல், அப்படியே வாரி அணைத்துக் கொண்டாள்.


ஒரு வேளை வன வாசிகள் குழந்தையாக இருக்குமோ. என்று வரதன் பரிமளத்தை கேட்க.,

‘’இருக்காது மாமா. அவர்கள் ஏன் இங்கே குழந்தையை இங்கே விடப் போகிறார்கள் .
குழந்தையின் முகத்தை பாருங்க என்றாள்”….


இவளை பார்த்து பூவாய் புன்னகை பூத்தது.


அப்படியே உச்சி முகர்ந்தாள்.


“வாங்க . நமக்கு கடவுளா பார்த்து குழந்தையை கொடுத்து இருக்கார். போய் விடலாம்.”


அப்படியெல்லாம போக முடியாது. குழந்தையை தவற விட்டவர்கள் தவிப்பார்களே”” என்று பரிதவித்தான்.


‘“என்னங்க. இப்பவே இருட்டாக விட்டது. முழுவதுமா இருள் வருவதற்குள் நாம் குன்னூர் போக வேண்டும். பச்சிளங் குழந்தை அழுதால் பால் கொடுக்க கூட முடியாது. வாங்க ஊருக்கு போய் விடுவோம் “ என்று நச்சரித்தாள்.

அரைமனதாக ஒப்புக் கொண்டான்.


குழந்தையை அப்படியே துணியுடன் சுற்றி , மார்போடு அனைத்துச் சென்று காரில் அமர்ந்தாள்.


கார் கிளம்பியது.


கார் போவதை இருகண்கள் பார்த்துக் கொண்டியிருந்தது
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top