New member
- Joined
- Jul 12, 2025
- Messages
- 4
- Thread Author
- #1
தனபாலன் ஆட்கள் சரியாக ஒரு மணிக்கு பங்களாக்குள் வெட்டரிவாளுடன் நுழைந்தனர்.
தனபாலன் முன்னெரிச்சையாக வேலையாட்கள் அனைவரையும் வெளியே அனுப்பி இருந்தான்.
அடியாட்கள் அரண்மனை போன்று இருக்கும் அந்த பங்களாவில்
நுழைந்தனர்.
செல்வனையும், அவன் மனைவி சிவகாமியையும், வெறிக் கொண்டு தேடினர்.
கிடைக்கவில்லை. இன்னும் கோபம் அதிகமாயிற்று.
சமையலறையில ஓர் உருவம் தலை வரை இழுத்து போர்த்திக் கொண்டு படுத்தி இருந்தது.
உருட்டுக்கட்டையால் நெம்பி எழும்பினர்.
அவர்களை பார்த்ததும் பாக்யம் பயந்து அலறினாள்.
ஏய்… யார் நீ… வேலைக்காரர்கள் யாருமே இல்லை. நீ மட்டும் இங்கு எப்படி…. என்று உருட்டலுடன் அதட்டி கேட்டனர்.
அவர்களை பார்த்ததும் பயத்தில், நாவே ஒட்டிக் கொண்டது.
திணறினாள்.
ம்ம்ம்.. சொல்லு என்று அதட்டல் போட்டவுடன்
நான் சமையல் செய்யும் பாக்யம்.
எங்கே உன் எஜமானும், எஜமானியும். இரவு இங்கே தான் தூங்கிவி யா
இல்லை. எஜமான் வர சொல்லி இருந்தார்.
எதற்கு..
நிறைமாத கர்ப்பிணி அம்மாவிற்கு பழரசம் செய்து கொடுப்பதற்காக
எங்கே அவர்கள்.
அவர்கள் அப்போதே போய் விட்டார்கள்
எங்கே சொல்லு என்று அவள் கழுத்தில் கத்தியை வைத்து கேட்டான்.
ஐயா, நிஜமா எனக்கு தெரியாது -
அவர்கள் என்னிடம் சொல்ல வில்லை. நடுநிசியில் காரில் போனார்கள்.
எந்த பக்கம் போனார்கள் என்று ஒருவன் கேட்க எஜமானி விசுவாசி ஆன அவள், விபரீதம் புரிந்து அவர்கள் போன திசையை காண்பிக்காமல் எதிர் திசையை காண்பித்தாள்.
இதில் எதாவது பொய் சொல்லிஇருந்தினா உன்னை வெட்டி கூறுபோட்டு விடுவோம் என்று சொல்லிவிட்டு சென்றனர்.
அந்த இரவே அவள் அவசர அவரசமாக அவள் மாமனை வரச்சொல்லி, அவனுடன் தன் இருப்பிடம் சென்றாள்.
ஐயாவும் அம்மாவும் வரும் விபரீதத்தை அறிந்து தான் வெளியே கிளம்பி இருக்கிறார்கள். நம்மூருக்கு வந்திருந்தால பாதுகாத்து இருப்போம். எங்கே போனார்களோ என்று தெரியவில்லையே. என்று தன் மாமனிடம் புலம்பினாள்.
புள்ள.. புலம்பாத . ஐயா, அம்மா நமக்கும் நம் ஊருக்கும் செய்த உதவி கொஞ்சநஞ்சமில்ல . நாம் உயிருடன் இருப்பதற்கே அவர்கள் தான் காரணம். உன்னை வீட்டில் விட்டுட்டு, நான் சிலருடன் கிளம்பி போகிறேன். எங்கிருந்தாலும் தேடி அழைத்து வருகிறேன் என்று அவள் மாமன் காத்தமுத்து கூறினான்.
பாக்யம் ஊட்டிக்கு அருகிலுள்ள சின்னமலை கிராமம். கீழறங்கி போக வேண்டும். கடினமாக பாதை போவதும், வருவதும் சுலபமில்லை. சிவகாமி, செல்வன் திருமணத்திற்கு முன்பு பாக்யம் ஊரிலுள்ள மக்களை இனம்புரியாத நோய் பீடித்தது. . மக்கள் செத்து மடிந்தார்கள்.
அதை பாக்யம் மூலமாக தெரிந்துக் கொண்டு, அந்த ஊருக்கு உதவ முன் வந்தார்கள் .
கோயமுத்தூரிலுள்ள . ஒர் மருத்துவ குழுவை தன் தந்தை செல்வாக்கு மூலம் இருவரும் வரவழைத்தார்கள்.
அவர்கள் மூலம் நோய் கண்டறிய பட்டது. உரிய சிகிச்சை மூலம் நோயை விரட்டினார்கள் மக்களும் உயிர் பிழைத்தனர் இதையெல்லாம்
அப்பா கார்மேகத்திடம் சொல்லி செல்வனும் சிவகாமியும் செய்தனர்.
பிறகு, அவர்களுக்கு கவர்மெண்ட் மூலம் ரோடும் போடப்பட்டது. ரோடு இருந்தால போதும் . பல வியாபாரம் தன்னால் செழித்து ஓங்கும். அவர்களது வாழ்வாதாரமும் உயர்ந்தது. அந்த ஊர் மக்கள் சிறுவயது இளைஞர்களாக செல்வனையும் சிவகாமியையும் போற்றி, தங்கள் குல சாமியாகவே வழிப்பட்டனர்.
அப்பேர் பட்டவர்கள், தங்கள் எஜமானனுக்கு ஆபத்து என்றால் சும்மா விடுவார்களா…
ஊர் மக்கள் ஒன்று திரண்டனர்.
வீச்சரிவாள் வேலுடன் புறப்பட்டனர்.
பென்ஸ் கார் போன வேகத்திற்கு இவர்களால ஈடு கொடுக்க முடியுமா.
ஊட்டி மலையை விட்டு கீழிறங்கி எங்கே போனார்களோ, என்று ஒரு வேனை பிடித்துக் கொண்டு, அதில் அமர்ந்துக் கொண்டு தேடினர்.
நேரம் ஆக ஆக, பதைபதைப்புடன் காணப்பட்டனர்.
வண்டுகளின் ரீங்காரமும் / குளிர் காற்று அடிக்கும் போது ஏற்படும் இலைகள் உராயும் சத்தம் தவிர, எதுவுமே தெரியவில்லை. நடு நிசி அமானுஷ்யமாக தெரிந்தது.
பென்ஸ் கார் வேகமாக போய் கொண்டு யிருந்தது.
சிவகாமியும், கணவனுக்காக தூங்காமல் , அரை தூக்கத்தோடு விழித்துக் கொண்டு அந்த ஆள் அரவற்ற நடுநிசியில காற்றை கிழித்துக் கொண்டு ஓடும் காரையும், காரின் வெளிச்சத்தில் தெரியும் சாலையையும் பார்த்துக் கொண்டே வந்தாள்.
செல்வனோ அனாயசமாக காரை லாகவமாக ஓட்டிக் கொண்டு, தன் காதல் மனைவியை பற்றி சிந்தித்தான். இவளை பத்திரமாக . சித்தரிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்குள் எந்த விபரீதமும் நடக்கத் கூடாது என்று தங்கள் குலசாமியை
வேண்டிக் கொண்டான்.
எதோ கெட்டது நடக்கப் போகிறது என்பது போல மிகவும் கலக்கமடைந்தான்.
வரப்போகும் தவறு கண்ணுக்கு தெரியாமல அச்சுறுத்தியது.
அவன் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது.
சிவகாமி என் முகத்தை பார்த்தாலே புரிந்து கலக்கமடைவாளே.
அவள் என் தர்மபத்தினி ஆச்சே.அகத்தின் அழகை படித்து விடுவாளே.
கடவுளே… இது என்ன சோதனை.
முடிந்த மட்டும், தன் உள்ளக்குமறலை
முகத்தில் காண்பிக்காது தவிர்த்தான்.
இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொண்டான்.
தனக்கு ஏற்பட்டு இருக்கும் பயத்தை போக்குவதற்கும், அவளுக்கு ஏற்பட்டு இருக்கும் குழப்பத்தை போக்குவதற்கும் ஏதுவாக பாட்டு பாடினான்.
திடீரென்று சிவகாமி கத்தினாள்.
அங்க பாருங்கள். வழியை மறித்து காட்டெருமைகள் நிற்கின்றது. என்றாள்.
அருகில் போக, போக அது காட்டெருமைகள் இல்லை. மனிதர்கள் என்று புரிந்தது.
கையில் வெட்டரிவாளுடன் ஒவ்வொருத்ததும் கோபமாக நிற்பது போல் இருந்தது.
கொல்லிமலை வருவதற்கு சிறிது தூரமே இருந்தது.
யார் இவர்கள். வழிபறி திருடர்களாக இருக்குமோ . என்று நினைத்தான்.
பார்த்தால் கொள்ளை காரர்கள் போல் தெரியவில்லை.
கொலை செய்யவும் அஞ்ச மாட்டார்கள் போல் இருந்தார்கள்.
மாற்று பாதையும் இல்லாமல் போய்விட்டது.
வேகமெடுத்து மோதி போய் விடலாமா என்று கூட யோசித்தான்.
அதற்குள் அவர்களிடமிருந்து வீச்சரிவாள் பறந்து இவர்கள் காரின் மீது விழுந்தது.
பயத்தில் சிவகாமி அலறிவிட்டாள்.
காரின் மீது ஈட்டி போன்றவர்கள எறிந்ததால், கார் அவன் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடி நின்றது -
செல்வனும் தன்னிடமிருந்த ஆயுதத்தை எடுத்துக் கொண்டான்.
அவர்களின் ஒருவன் “ எங்கடா ஓட பார்க்கிற . எங்கள் ஐயா தனபாலிடமிருந்து தப்பிக்க முடியுமா
என்றதும் செல்வனுக்கு புரிந்தது.
அவர்களை எதிர்த்து ஆக்ரோஷமாக போரிட்டான்.
அவன் மனம் முழுவதும். கர்பிணியான காதல்மனைவியை காப்பாற்ற வேண்டும் என்பதே.
அவளை ஓடி போகச் சொன்னான்.
நீங்க இல்லாமலா .
எனக்கு நீயும், குழந்தையும் முக்கியம். தயவுசெய்து போய்விடு “ என்றான்.
செய்வதறியாது திகைத்தாள்.
வலது புறம் காடு. இடது புறம் மலை யின் பள்ளத்தாக்கு . எங்கு செல்வது என்று தெரியாமல் காட்டுக்குள் ஓடினாள். அடர்ந்த காடு கொஞ்சதூரம் போனதுமே இவர்கள் கண்ணிலிருந்து மறைந்து போனாள்.
வந்த கூலிபடையினர் , என்னடா அவளை தப்பிக்க விட்டு விட்டீர்கள்.
அவள் நம்மிடம் இருந்து தப்பித்தாள். ஆனால், காட்டு யானைகள் , மற்ற விலங்குகள் அதிகமாக இருக்கும் இடம். அவளால் தப்பிக்க வே முடியாது. இவனை கவனிப்போம். என்று அவனை வெட்ட வீச்சரி வாளுடன் முன்னேறினர்.
தன் தந்தை கார்மேகம் ஜமின்தாரிடம் கற்றுக் கொண்ட வித்தை களை வைத்து இவர்களை தெறிக்க விட்டான்.
சுழன்று சுழன்று வாள் சுற்றினான்..
ஆனாலும் செல்வனால் அவர்களை எதிர் கொள்ள முடியவில்லை.
முதுகில் கழுத்தில் வெட்டு விழுந்தது.
ஆலமரம் வீழ்வது போல் சாய்ந்தான்.
அப்போது, தூரத்தில் எதோ வண்டி வேகமாக வருவது தெரிந்தது.
இவன் செத்துட்டாண்டா. நாம ஓடி போயிடுவோம் என்று ஓடினார்கள்.
சிவகாமி காட்டில் தன் உயிரை விட செல்வனின் வாரிசை காப்பாற்ற உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடினாள்.
காட்டிலுள்ளே ஓடும் போது, அவனின் சிவகாமி என்ற அலறல் சத்தம் காட்டில் எதிரொலித்தது.
அய்யோ. என்று மயங்கி விழ .ஒரு கரம் தாங்கி பிடித்தது