• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Jul 12, 2025
Messages
23
நிழலாக இருந்த ஒளி.

பாகம். 16.


சின்னமலை கிராமத்திலுள்ள பாக்யம் காத்தமுத்துவின் செல்ல மகள் கயல்விழி.


மருத்துவம் படிக்கும் அவள் அதிவீரனின் காதலி.


ஒரே குதிரையில் கயல்விழியும் . வீரனும் ஒன்றாக வந்ததை கோச் பார்த்ததிலிருந்து மிரண்டாள்.


ஒரு வாரம் குதிரையை தொடக்கூடாது என்றும் பனிஷ்மென்ட் கொடுத்திருந்தார் .


அவளுடைய மாமா தான் கோச் .
6.1 அடி உயரம் . எப்போதும் முகத்தை மூடியே மறைத்து இருப்பார். கம்பீரமாக இருப்பார். ஆனால் முதுகு இலேசாக வளைந்தது போல் இருக்கும்.


அவருக்கு குதிரையை லாவகமாக கையாளத் தெரியும். சிறந்த பயிற்சி யாளர். பேசவே மாட்டார் .அப்படியே பேசினாலும் நறுக்கு தெறித்தார் போல் ஒன்றிரண்டு வார்த்தைகளுக்கு மேல் பேச மாட்டார்.


அவருடைய கண்கள் எதையாவது யோசித்துக் கொண்டு இருப்பது போல் இருக்கும்.


கயல்விழிக்கு ஒன்று மட்டும் புரிய வேல்லை. அம்மாவும் ,அப்பாவும் ஏன் ஊரே அவரிடம் மிகவும் பயபக்தியாக இருப்பார்கள்.


தன் 4 வயது வரை கூடவே இருந்தவர் பிறகு கோயமுத்தூர் போய் விட்டார்.


எல்லோரும் அவரை ஐயா என்று தான் கூப்பிடுவார்கள்.


கயல் மட்டும் மாமா என்றே கூப்பிடுவாள்.


அதற்கு பிறகு அவர் சின்னமலைக்கு வந்ததே இல்லை எனலாம்.


கோயம்புத்தூரில் சிவசுப்ரமணியன் என்பவரோடு தங்கி இருப்பதாக அம்மா சொன்னதாக சொன்னாள்.’”


இதையெல்லாம் கயல்விழி, பஸ்ஸில் தன் ஊருக்கு போக அதிவீரனோடு போகும் போது சொல்லிக் கொண்டே வந்தாள்.


ஆமாம். எனக்கும் அவரை பார்க்கும் போது ஒரு புதிராகத் தான் தெரியும். அவரைப் பற்றி முழுவதுமாக தெரிந்துக் கொண்டு வா “என்றான்..



பிறகு இருவரும் ஒருவர் மேல் ஒருவர் தலை சாய்த்து உறங்கினார்கள்.



பஸ் குன்னூர் வந்ததும், மக்களின் பேசும் இரைச்சல் சத்தம் கேட்டு விழித்தனர்.


அவரவர் பைகளை தூக்கிக் கொண்டு இருவரும் இறங்கினர்.


‘“என்னோட எஸ்டேட் வர்றியா “” என்றான்.


இல்லடா. அம்மாவிடம் பஸ் ஏறிவிட்டேன் என்று சொல்லி விட்டேன்.
உன்னுடன் வருவதற்காகவே நேராக எங்கள் கிராமத்திற்கே போகும் பஸ்ஸில் போகாமல் உன்னுடன் வந்தேன்.



அம்மாவும் ,அப்பாவும் காத்துக் கொண்டு இருப்பார்கள்.


சரி.வா.உன்னை உன் கிராமத்திற்கு போக பஸ் ஏற்றி விடுகிறேன்.


பஸ் வந்ததும், இலேசாக கட்டியணைத்து டாட்டா காண்பித்து .பஸ் போனதும் போய் விட்டான்.


இவனை எஸ்டேட்டு பங்களாவிற்கு ‘அழைதது போக கார் ரெடியாக காத்துக் கொண்டியிருந்தது.


இவனைப் பார்த்ததும் டிரைவர்., ‘வாங்க தம்பி,
என்று ஓடோடிச் சென்று பெட்டியை வாங்கிக் கொண்டான்.


எப்படி இருக்கிறீர்கள் அண்ணே. நலமா என்று அவரையும் நலம் விசாரித்து விட்டு, காரில் ஏறி அமர்ந்தான்.


xxx xxxxxxxx



பாக்யம் வாசலிலே தன் டாக்டர் மகளை வரவேற்க காத்துக் கொண்டியிருந்தாள்.


வந்ததும், அவளை கட்டியணைத்து உள்ளே அழைத்துச் சென்றாள்.

அப்பா இல்லாததை அறிந்து. ‘“அப்பா எங்கேம்மா” என்று சுற்றும் முற்றும் பார்த்து கேட்டாள்.


“உனக்கு சாப்பிட இலை அறுக்க போய் இருக்கிறார்”.


“இதோ வந்துவிட்டேன் . வாடா என்று பாசத்தோடு மகளை அழைத்த காத்தமுத்து வந்ததும், மகளை பற்றி கேட்காமல், ‘,உன் மாமா எப்படி இருக்கிறார்”” என்றார்.



“ஏன்ப்பா என்னைப் பற்றி கேட்க மாட்டீர்களா……..... என்று கோபித்து கொண்டாள்.


“ நீ டாக்டர் மா . உன்னையே எப்படி இருக்க என்று கேட்க முடியுமா..’?



சரி. சொல்லுடா.. என்று திரும்ப கேட்க,


அவருக்கு என்னப்பா. எப்போதும் போல் தான் இருக்கிறார்.


‘அம்மா.. அவர் உன் கூட பிறந்தவரா..


“வாயை கழுவுடி. அவர் எங்க , நாம எங்க…”


காத்தமுத்து பாக்யத்தை முறைத்தார்.


“என்ன சொன்ன.” என்று கயல் கேட்க,


கையை கழுவுடி. சாப்பிடலாம் என்றாள்.


“நானும் நிறைய தடவை அவரைப் பற்றி கேட்டு இருக்கேன். ஏம்மா பதிலே செல்லமாட்டேன்கிற . அவருக்கு பேமிலி இல்லையா.’



“அதற்கான வேளை வரும் சொல்றேன்.”



“ இந்த மாமா ஏன் நம் வீட்டில் தங்காமல் சிவசுப்ரமண்யம் அங்கில் வீட்டில் தங்க வேண்டும் “” என்றும் கேட்க,

அதற்கும் பதிவில்லை.


“போய் கையலம்பிட்டு வா. சாப்பாடு ஆறிட போகுது” என்று இலையை போட்டார்.


இலை முழுக்க மட்டன்பிரியாணி, சிக்கன் | பிஷ் பிரை, எ றா தொக்கு என்று இருந்தது.


அம்மா… என்ன இது. நான் என்னவோ சாப்பாடே இல்லாத ஊரிலிருந்து வருகிறேன் என்று நினைச்சியா . உன் அண்ணனுக்கு தெரிந்தால் அவ்வளவு தான். ஹார்ஸ் ரைடு பண்றவங்க வெயிட் மெயின் டெயின் பண்ணனும்.
இவ்வளவு சாப்பிடக் கூடாது.


“ஆனாலும் உன் கைபக்குவம் யாருக்கும் வரும். எப்படிமா உனக்கு இவ்வளவு நல்லா சமையல் நல்லா வருது. “


“நல்லா வரவில்லையென்றால் ஜமீன் வீட்டில் வேலை செய்திருக்கமுடியுமா.’ i என்று முணு முணுக்க


“இரு. இரு. இப்ப என்ன சொன்னே”.?


“நீ ஜமீன் வீட்டில் வேலை பார்த்தியா . எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ஒரு முறை கூட நீ வேலைக்கு போகலையே. உன் கல்யாணத்திற்கு முன்பு செய்தியோ”


“ஜமீனே இங்கு இருக்கும் போது, நான் எங்கு வேலைக்கு போவது.” என்று அவள் வாய் முனுமுனுத்தது.


“புரியும்படி சொல்” என்றாள்.


“முதலில் சாப்பிடு”

.

“உனக்கு என் கையால் செய்து பரிமாறி எவ்வளவு நாளாச்சி” என்று பேச்சை மாற்றினாள்


கயலும் அவரிடம் பிறகு கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்.


“இப்பதாம்மா வந்துட்டு போனேன். என் அண்ணன் வீரவேங்கையன் ஊரில் நடக்கிற படையல் விழாவுக்கு போயிட்டு வந்தேனே.”


“எந்த ஊருக்கு போனே. எங்க கிட்ட சொல்லவே இல்லையே . வந்த உடனே கிளம்பிட்ட.”


அப்போது தான் அவளுக்கு தான் சொல்லவில்லை. என்று ஞாபகம் வங்தது.


“வேட்டுவ மலை மா.”


“அம்மா நான் இன்னொன்று சொல்ல மறந்து விட்டேன்.


என்னவென்று பெற்றோர் இருவரும் பார்த்தார்கள்.


“அண்ணாட அம்மாவை சந்தித்தேன். எம்புட்டு அழகு தெரியுமா.’

“அப்படியா…இருக்கட்டும் .”


“ஒரு ராஜ குமாரியை போல் இருக்கிறார்கள்.”


ஆ………. …என்னது.


“ஆமாம்மா. அசந்து போய் விட்டேன்.எளிய பருத்தி உடையில் இருந்தார்கள். ஆனாலும் அவர்களை பார்க்க பிரமிப்பா இருந்தது.”


இதைக் கேட்டு கொண்டியிருந்த இருவருக்கும் இலேசாக சந்தேகம் தட்டியது.


“எங்களுக்கும் அவர்களை ‘ சந்திக்க வேண்டும்.
ஏற்பாடு செய்கிறாயா.”


“வேட்டுவ மலையில் இருக்கிறார்களா.”...?


“இல்லமா. அண்ணன் லாயர் இதனால் கோயம்புத்தூரில் இருக்கிறார்கள்.
அந்த விழா முடிந்து அவர்கள் கோயமுத்தூர் சென்று விட்டார்கள்.
. அதுவுமில்லாமல் அவர் ஹார்ஸ் டிரெயினி வேற. இப்போது அங்கு தான் இருப்பார்கள்”.


“நீங்க இரண்டு பேரும் அங்க வரமாட்டேன் என்கிறீர்களே.”


“எப்படி மா வர முடியும்.” என்று பாக்யம் அலுத்துக் கொள்ள,


“ஊர் பொறுப்பு இருக்கே. அதற்கே நேரம் சரியா போகுது.” என்று அப்பா கூற



“சரிம்மா. எங்க கல்லூரியில் விழா நடக்கப் போகுது. பெண்மை ஃபெஸ்ட் என்று. நான் இராஜகுமாரியாக நடிக்கிறேன். இராஜ குமாரனாக என் தோழன் நடிக்கிறான் . “
.

“இது வெறும் டிராமா தான். நீங்க இருவரும் பார்க்க வர வேண்டும். என் உத்திரவு.” என்று ராஜ்குமாரியை போல் சொல்ல


இருவரும் கைகட்டி, வாய் பொத்தி அப்படியே ஆகட்டும் இளவரசி” என்றார்.


“இராஜகுமாரி இப்பொழுது நீங்கள் சற்று ஓய்வெடுங்கள்” என்று சொல்ல, சிரித்து விட்டு தூங்க போனாள்.


தூங்க போனாள். ஆனால் தூக்கம் வராமல் வெறுமனே கண்களை மூடி படுத்து இருந்தாள்.


அவள் தூங்கி விட்டாள் என்று பாக்யம் காத்தமுத்துவிடம் ‘’ ஏங்க இவ சொல்ற அந்த அம்மா ஒரு வேளை நம்ம சிவகாமி அம்மாவாக இருக்குமோ.”


“இருக்காதுடி.”


“இருக்காதுமா . நம்ப செல்வன் ஐயா இங்கே வந்ததிலிருந்த நாம போய் அந்த காட்டுல அம்மாவை தேடலயா . அப்ப கிடைக்கலையே.”


“அதுமில்லாமல் வேங்கையனை நாம் பார்த்து இருக்கிறமே அவனைப் பார்த்தால் நம்ம சிவகாமிக்கு அம்மாவிற்கு பிறந்த புள்ள மாதிரியா இருக்கு. அதனால் இருக்காது என்றே நினைக்கிறேன்.”


“இப்ப நடந்த மாதிரி இருக்கு. ஆனால். 25 வருடங்கள் ஓடிவிட்டது. “


“ஐயாவை வெட்டி குற்றுயிரும்,, கொலையுருமாக நடுரோட்டில் போட்டு விட்டார்கள். அந்த சமயத்தில காரில் நம் ஊர் காரர்களுடன் போகவில்லை என்றால் என்னவாகி இருக்கும். காருடன் அவரை மலையுச்சியிலிருந்து தள்ளி இருப்பார்கள். “


“எல்லாம் சித்தர் செய்த தெய்வீக செயல். தவறான பாதையில் போக இருந்த எங்களை நிழலாக இருந்து ஒளி போல் பாதையை காண்பித்தார்.


ஐயாவையும் காப்பாற்ற முடிந்தது. சித்தர் கொடுத்த மூலிகையில் உயிர்பிழைத்தார்.


ஆனால், இன்னும் பழைய நினைவுகள் வரவில்லையே.


தலையிலே. அடித்து இருக்கிறாகள். எப்படி பழைய நினைவு வரும்.


நிறை மாத கர்ப்பிணியான சிவகாமி
அம்மாஎன்ன ஆனார்கள் என்று இன்று வரை தெரியவில்லை.


நாமும் தேடாத இடமில்லை.



கயலிடம் சொல்லி விடலாமா.


“அவ விளையாட்டு பொண்ணு. யாரிடமாவது சொல்லிவிடப் போறாள். நம்ப ஐயா உயிரோடு இருப்பது தெரிந்தால், அந்த தனபால் சும்மா இருக்க மாட்டான்.”


“இப்ப ஈச்சனார் எஸ்டேட் முழுக்க அவன் வசம் ஆக்கிக் கொண்டான்.”


“நம்ப வசந்தி அம்மாவும் அவனை விட்டு பிரிந்துபோய்விட்டார்களாம்.”


“பணம் பணம் என்று அலைந்து என்னத்தை கொண்டு போக போறான். ஒத்தையிலதான் சாவான். அவனுக்கு துர்மரணம்தான் அந்த கடவுள் எழுதி வைத்து இருப்பார்.”



“அவன் யாரை விட்டு வச்சான். நம்ப மானேஜர் சிவசுப்ர மணியத்தை கொலை பண்ண ஆட்களை அனுப்பினான்.


“நல்லவேளை, அவர் மச்சான் போலீஸ் .
அந்த உடையை போட்டுக் கொண்டு அவர் ஜீப்பிலே தப்பித்து விட்டார்.


குடும்பத்தையும் காப்பாற்றி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து விட்டார்.”



“எனக்கு தாங்கலங்க எப்பேர்ப்பட்ட ஜமீன் வம்சம். இப்படி கார்மேகம் ஐயா பாம்புக்கு பால் வார்த்து இருக்காரே…
அந்த பாம்பு தன் மகனையே கொத்தும் என்று தெரியாமலே போய் சேர்ந்து விட்டார்.. நீங்க நம்ப செல்வன் ஐயாவை தூக்கிட்டு வந்த காட்சி இன்னும் பயங்கரமா கண்ணுல நிக்குது. நம்ப அம்மா குணத்துக்கு எங்காவது செளக்யமாக இருப்பார்கள். “


“ஆமாம். பாக்யம்.அந்த ஆண்டவன் அப்படியெல்லாம் கைவிட மாட்டான்.
எல்லாம் நல்லபடியா நடக்கும். அதுமில்லாமல் நம்ப சித்தரின் ஆசி வேறு இருக்கு “என்று காத்த முத்து சொல்ல இவர்கள் பேசுவதை ஒன்று விடாமல் கயல் கேட்டாள்.


அம்மா என்று கூப்பிட்டதும் இருவரும் திடுக்கிட்டு திரும்பி பார்த்தார்கள்.


கயல் நின்றுக் கொண்டுயிருந்தாள்.


“நீங்கள் யாரை பற்றி போகிறீர்கள் . நம்ப மாமாவை பற்றியா”


“எல்லாவற்றையும் கேட்டு விட்டேன் ..சொல்லுங்கள். எனக்கும் பொறுப்பு இருக்கு. சின்னப் பெண் கிடையாது.”


“சொல்றேன்மா.” என்றார்.


தொடரும்.
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top