• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Jul 12, 2025
Messages
23
பாகம்..14..

தனபால் யோசிக்க அவனுக்கு குழப்பமே மிஞ்சியது .


இருவரில் யாரோ ஒருவர் தான் இந்த வீடியோவை எடுத்து இருக்க வேண்டும் .


எண்ணம் அசை போட்டுக் கொண்டே இருந்தது .



எழுந்தான்.


நின்றான் .


நடந்தான்.



மனமோ நிலை கொள்ளாமல் தவித்தது .


என் பிறந்தநாள் அதுவுமா இந்த அசம்பாவிதம் நடந்திருக்க வேண்டாம் .
வசந்தி தன்னை விட்டுப் போனது ஒரு விதத்தில் மகிழ்ச்சி அடைந்தாலும் ,
அவள் இல்லாத வீடு வீடாக இருக்க முடியாது என்று நினைத்தான் .



மனைவி வீட்டில் இருந்தால் தான் தனக்கு கெளரவம் என்று நினைக்க,
ஒன்றும் புலப்படாமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்.


அவள் இருந்தவரை ‘ செல்வன் அறையை பூட்டியே வைத்திருந்தாள்.



அந்த அறை அவர்களின் புனிதம்: அது கெடக்கூடாது. என்று பூட்டி சாவியை தன்னிடத்தே வைத்துக் கொண்டாள்.


‘தனபாலும் அந்த அறைக்குள் போக நினைத்தது இல்லை.


வசந் தி இருந்த வரை, இந்த வீடு கலகலப்பாக இருந்தது.



அவள் போன ஒரு மணி நேரத்தில சூன்யமாக இருப்பதாக நினைத்தான்.


விடக்கூடாது. இதற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்காமல் விடக்கூடாது.
அந்த சிறிய பெண் மச்சினி முன்பு என் மானம் கப்பல் ஏறியதை நினைத்து ஆவேசப் பட்டான்.


உடைந்த வசந்தியின் போன் தரையிலே கிடந்தது.


யோசனையுடன் அதிலிருந்து சிம்கார்டை எடுத்து வேறு போனில் போட்டு அந்த வீடியோவை பார்த்தான் .


இதை பார்க்க பார்க்க கிளுகிளுப்பாகத்தான் இருந்தது.
அவர்கள் உடை மாற்றுவது வரை பார்த்தான்.


உடை மாற்றிக்கொண்டு அவர்கள் மறுபடியும் கட்டி அணைத்து முத்தம் கொடுத்து விலகி கதவு திறந்து போகும் வரை நீடித்தது .


அந்த அறையையே காண்பிக்க உஷாராக பார்த்தான் .


இது என்ன முடிந்த பிறகும் அப்படியே கேமரா நிரந்தரமாக வா இருக்கிறது .

அப்போது யாரோ உள்ளே வந்தார்கள் . கேமராவை நோக்கி கை நிள்கிறது கூர்ந்து கவனித்தான் .


அது பூபதி தான் .


திருட்டு ராஸ்கல் அவனே தான் அடப்பாவி என்னமா நடிக்கிறான் என்கிட்டே வா அவனை ஒழித்து கட்ட வேண்டும் அவனும் பலசாலிதான் பல அண்டர் தாதாக்களை தெரிந்து வைத்திருப்பவன் . ஜாக்கிரதையாக
செயல்பட வேண்டும் .



இவன் ஒரு புல்லருவி குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருப்பான் .


ரகசியங்கள் அனைத்தும் தெரிந்து வைத்து இருப்பவன் .


என்றாவது ஒரு நாள் நம்மை போட்டுக் கொடுத்து விடுவான் .

ராமசுப்பு இறந்த வீடியோ எடுத்து வைத்திருக்கிறான்.


நான் பேசினதையும் ரெக்கார்ட் செய்து வைத்திருப்பானோ ………. என்று பயத்துடன் தன்னைத் தானே கேட்டுக்கொண்டான்.


இப்பொழுது வசந்தி போயிட்டா அப்புறம் இவனால் ஒவ்வொன்றாய் போனால் என்ன பண்ணுவது .


யோசித்தான் .


இவன் ஒரு முறை கொல்கத்தாவிற்கு போயிருக்கும் பொழுது அங்கே முகர்ஜியின் நட்பு கிடைத்தது .



அவனும் பசுத்தோல் போர்த்திய புலிதான் .


அவனுக்கு சிறு சகாயம் செய்ய போக நட்பானது .


எந்த உதவி இருந்தாலும் தான் செய்ய கடமை பட்டுள்ளேன். என்று உண்மையாகத்தான் சொன்னதாக பட்டது.


பூபதியை தீர்த்து கட்டுவதற்கு அவன் தான் சரியான ஆள் . வெளிமாநிலத்துக்காரன் வேறு.
யாருக்கும் சந்தேகம் வராது.


அவனுக்கு போன் போட்டு நேரில் வர சொன்னான் .


யாருக்கும் தெரியாமல் வரவழைக்கப் பட்டான்.


வந்ததும். கோத்தகிரி அரண்மனை போன்ற பங்காளவை பார்த்து அசந்து விட்டான்.

அப்போதிலிருந்து மரியாதை கூடிற்று.


மகாராஜ் என்றே கூப்பிட்டான்.


பூபதி பற்றி சொல்ல “என்ன செய்யலாம் ‘ என்று ஆலோசனை கேட்டான் .


அவனும் சிறுத்தை புலி தாக்கின மாதிரி செய்ய செட் பண்ணலாம் என்று சொன்னான் .


“இப்பல்லாம் யாரையாவது தீர்க்க வேண்டும் என்றால் இதுதான் சரியான வழி .நாம் மாட்டிக்க மாட்டோம்.”


எனவே பூபதி ராம சுப்புக்கு செய்ததுதான் ..அது அவனுக்கே வினையாக போகிறது .


முகர்ஜிக்கு பலமாக விருந்தும் கொடுத்தான் .


பூபதியின் மரண நாளுக்கு முகூர்த்தம் குறிக்கப்பட்டது
..


பூபதியை தனபால் வரவழைத்தான். ‘’


“ஸாரி நண்பா. உன் மேல் சந்தேகப்பட்டுட்டேன் . அந்த எடுபட்டவ தான் பண்ணியிருக்கா .”


இப்படி தான் பணக்காரர்களை வீடியோ எடுத்து மிரட்டுவார்களாம்.


பங்களாவில் என் மனைவியை துரத்தி விட்டு அவள் அந்த இடத்திற்கு வரலாம் என்று பார்த்திருக்கிறாள் .


எனக்கு அதைக் கேட்டதும்,அவ்வளவு ஆத்திரம் வந்தது . அப்படியே கொன்று
போட்டு விடலாம் என்று கூட இருந்தது .


என்ன செய்வது பெரிய நடிகை .


அவள் மேல் கையை வெச்ச நான் ஈசியா மாட்டிப்பேன் .


கழுதை..போய் தொலையுது என்று விட்டு விட்டேன் .”


பூபதிக்கு இவன் சொல்வதை கேட்க ஆச்சரியமாகவும் நம்புவதா வேண்டாமா என்ற குழப்பமும் வந்தது .


இவன் யோசிக்கிறான் என்று தெரிந்ததும் , அதை மாற்று வதற்காக
“வாடா. நாம் தண்ணியடிச்சி ரொம்ப நாளாச்சி. என்று சொல்லி குடிக்க வைத்தான்.


கொடுக்க கொடுக்க குடித்துக் கொண்டே இருந்தான்.


முடிவில் சரி போதும் வீட்டுக்கு போறேன்” என்றான்.


“டேய் இவ்வளவு குடித்து இருக்க. இரவாகி விட்டது. இப்போது போக வேண்டாம் என்று வேலைக்காரர். முன்பு சொல்ல , அவனோ” எவ்வளவு குடித்தாலும் என் புல்லட் என்னை வீட்டில் சேர்த்து விடும் என்று சொல்லிவிட்டு தள்ளாடியபடியே போய் விட்டான்.


அவன் போவதையே கடைசி பார்வையாக பார்த்தான் .


அவன் போனதும் சிக்னல் கொடுக்கப்பட்டது.


தன் நண்பன் தன்னை சந்தேகிக்கவில்லை என்ற குஷியில் இப்படியும் அப்படியும் ஆக அந்த நள்ளிரவில் தன் புல்லட்டை செலுத்தினான் .


மழை வேறு நசநச வென்று பெய்து கொண்டிருந்தது.


குந்தாவிற்கு செல்லும் வழியில் புலியின் உறுமல் சத்தம் கேட்டது .



அவன் புல்லட் அவனை விட தள்ளாடியபடியே போனது. பெட்ரோல் தீரும் நிலையில் இருந்தது ரோட்டில் ஒருவரும் இல்லை .


எதிரே கம்பீரமாக ஏதோ நடந்து வருவது போல் இருந்தது .



கண்களை கசக்கி கொண்டு பார்த்தான்.


அந்த இருட்டில் கண்கள் கோலி குண்டு போல் பளபளப்பாக இருந்தது.



அவனுக்கு தன் மனைவி ஞாபகம் வந்தது. அவள் கண்கள் கோலி குண்டு போல் இருக்கும். போதையில் அவளாக இருக்குமோ என்று கூட நினைத்தான்.
.


அவள் காலை மட்டும் உடைத்து இருக்கலாம். அநியாயத்திற்கு கொலை செய்து விட்டேன். என்ன மன்னித்து விடு.’ என்று கூட நினைத்தான்.


அந்த உருவம் நிதானமாகவே நடந்து வந்தது.


தன் எதிரே நிற்பது புலி என்று தெரிந்துக் கொள்ள அவனுக்கு அவகாசம் பிடித்தது.


ஐயோ… என்று கத்த கூட நா எழும்பாமல் .. என்ன செய்வது என்று கூட புரியாமல், பைக்குடன் திரும்பி போக முயற்சி செய்தான்.


அவனுடைய புல்லட்டும் அவனுக்கு ஒத்துழைக்கவில்லை. அவன் வண்டியை திரும்புவதற்குள் ஒரே பாய்ச்சலாக அவன் மீது பாய்ந்தது.


தன் கால்களால் ஓங்கி அறை விட்டது.


தடுமாறி கீழே விழுந்தான். முதலில் அவன் காலை ஆக்ரோசமாக கவ்வியது.


கால் துண்டானது.


அவனின் அலறல் சத்தம் அந்த மலையில் எதிரொலிக்க கூட முடியாமல் இடியின் சத்ததில் அமுங்கியது..



ராமசுப்புவின் கண்களில் தெரிந்த பயம் இவன் கணகளிலும் தெரிய அலறினான்.


புலி அவன் மீது தன் முழு பலத்தையும் பிரயோகித்தது.


அவனை பிய்த்து எறிந்தது.


காலை . போலீஸ் வந்தது.


அவன் மகன் பிரபு அலறியடித்துக்கொண்டு வந்தான்.



“இரவு எங்கே போய் விட்டு வந்தார் “என கேட்க ,


“தனபால் மாமா வீட்டிற்கு போனார். அவர் வரச் சொன்னார்”
என்று அழுகையுடன் சொல்ல போலீஸ் அங்கு விரைந்தது.



வேலையாட்களால் போலீஸ் வந்து இருக்கிறது என்று தெரிந்துக் கொண்ட தனபால் தூக்கம் கலையாமல் கண்களை கசக்கிக்கொண்டே வந்தான்.



அவனிடம் விஷயத்தை சொல்ல ஐய்யோ. நீங்கள் போலீஸ் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்காமல் என்ன செய்கிறீர்கள். அநியாயமாய் புலி என் நண்பனை அடித்துக் கொன்றுள்ளதே.
என்று அழுது ஆர்பாட்டம் செய்தான்.


போலீஸ் அவனைப் பார்த்து, ‘“நாங்கள் புலி அடித்து கொன்றது என்று சொல்லவே இல்லையே.” என்று சொல்லி சந்தேக கண்ணோடு பார்க்க,


அவன் ஒரு கணம் திடுக்கிட்டு முகம் மாறி, பின்பு பொய்யும் . புரட்டிலே வளர்ந்தவன் ஆனதால், சுதாரித்துக் கொண்டு,

“நீங்கள் சொன்னதாக நான்சொல்லவில்லையே. அங்குள்ள
வேலையாட்களில் ஒருவனைகாண்பித்து “ அவன் சொன்னான் “என்று புளுக.

அவனும் வேறு வழியில்லாமல் ஆமாங்க ஐயா. நான் தான் சொன்னேன். புலி ஒருவனை அடித்துக் கொன்றது என்று தெரியும்.


அது நம்ப பூபதி ஐயா என்று தெரியாது.



இரவில் போக வேண்டிய அவசியம் என்ன..?.


இங்கே தான் குடித்தான். இந்த நிலையில் போகவேண்டாம் என்று கூட சொன்னேன். அவன் கேட்கவில்லை
அவன் மகனுக்காக போனான்.” என்று சொன்னான்.


அந்த ‘ஸ்பாட்டுக்கு போய், அங்கு அழுது கொண்டியிருந்த பிரபுவை தேற்றி, அவனை தன்னுடனே அழைத்து வந்து விட்டான்.


அவன் செய்த தவறுகளில் பிரபுவை அழைத்து வந்தது தான் மாபெறும் தவறு. அது அவனுக்கே கேடாய் முடியும் என்று தனபாலுக்கு அப்போது புரிய வாய்ப்பில்லை.


பூபதியின் போனும் காணாமல் போய் விட்டது.



தொடரும்.
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top