• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Jul 12, 2025
Messages
23
நிழலாக இருந்த ஒளி.

பாகம். 13


பூபதி பெரும் கனவில் இருந்தான் .
அந்த நடிகையுடன் சல்லாபிப்பது அவனது வாழ்நாள் கனவாக இருந்தது .
அது தன் நண்பன் மூலம் கிடைக்கப் போகிறது . எப்பேர்ப்பட்ட அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்து இருக்கிறது.
நண்பன் என்றால் அவன் அல்லவோ . அவனுக்கு காலமெல்லாம் விசுவாசம் ஆக இருக்க வேண்டும் . என்று நினைத்ததை எண்ணி அவனுக்கு அவன் மேலே காறி துப்பிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது .



எவ்வளவு அவமானம் இதற்கு பதிலடி கொடுத்தே ஆகணும்.


அவள் கிடைக்காத விரக்தியில், வீட்டில் மோட்டு வளையத்தை பார்த்துக் கொண்டே யோசித்தான்.


அன்று அவளுடன் இருக்கப் போகிறான் என்று நாலு நாளைக்கு ஒரு தடவை குளிப்பவன் அன்று மட்டுமே நான்கு தடவை குளித்தான் .


உயர்ரக பட்டு வேட்டி எல்லாம் போட்டு கொண்டவனுக்கு பெருத்த ஏமாற்றம் இருந்தால் எப்படி இருக்கும் .


முரடான குரல் கேட்டு பயந்து வராமல் இருந்து விடுவாள் என்று நினைத்து தான் தனபாலை விட்டு பேச சொன்னான் .
அதுவே தப்பாகிவிட்டது


நான் முட்டாள். ‘.....முட்டாள் …….என்று கத்தினான்.


மனைவி மேகலாவை இழந்து இரண்டு வருடங்கள் ஆகியது..



ஏழை பெண்ணான மேகலா சித்தியின் கொடுமை தாங்காமல் வேறு வழி இல்லாமல் இவனை திருமணம் செய்து கொண்டாள்.


மோகம் 30 நாள் என்பதற்கேற்ப , அவன் மனைவி மீது கொண்ட மோகமும் தீர்ந்து போக , அவளுக்கு அடி, உதை தான் பரிசாக கிடைத்தது.


அடி உதை யெல்லாம் பெற்றுக்கொண்டு, ஆண் மகனையும் பெற்றெடுத்தாள்.


சிங்ககுட்டி, சிங்க குட்டி என்று செல்லம் கொடுத்து குட்டி சுவராக்கினான்.


இவனை ஜெராக்ஸ் எடுத்தார் போல், குணத்திலும், தோற்றத்திலும் வளர்ந்தான்.அவனும் தன் தந்தையை போலவே தற்குறியாக வளர்ந்தான்.



இவனோடயே மேகலாவால் தாக்கு பிடிக்க முடியவில்லை. இப்போது மகனும் சேர்ந்துக்கொள்ள, வாழ்க்கை வெறுத்து போனது.


மகனை பிரபுவை திருத்த எவ்வளவோ முயற்சிகள் செய்தும் பலனளிக்கவில்லை.


பிரபுக்கு 12வயது ஆனது.


படிப்பும் ஏறல. கூட படிக்கின்ற பெண் பிள்ளைகளிடம் சில்மிஷம் . பள்ளியை விட்டு துரத்தி அடிக்கப்பட்டான்.


அவனிடத்தில் கதறினாள்.


நீ இப்படியே இருந்தாய் என்றால், உன் வாழ்க்கை உன் அப்பனை விட வாழ்வு கேடு கெட்டதாய் அமைந்து விடும். வேண்டாம் டா. தீய பழக்கத்தை கைவிடு என்றெல்லாம் சொல்ல,


அவன் அவளிடம் ‘“எங்கப்பா ராஜா. அவருக்கென்னகுறைச்சல்” என்று அவளை அலட்சியபடுத்திவிட்டு செல்வான்.



ஒரு கட்டத்தில் வாழ்க்கை வெறுத்து போனது.



முதலில் இருவருக்கும் சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்று விடலாமா என்று கூட யோசித்தாள்.


அவளின் உள்ளம் இதை ஏற்கவில்லை.


அடி உதையும் வாங்க உடம்பில் தெம்பில்லை.


கணவனையும், தான் பெற்றதையும் விட்டுவிட்டு ஊரை விட்டு ஓடி போக முடிவு செய்தாள்.



அந்தோ பரிதாபம்.


மகன் மூலமாக செய்தி அறிந்து , பூபதி அவள் போகும் பஸ்ஸை வழிமறித்து .
அவள் முடியை பிடித்து இழுத்து, தரதரவென்று கீழே இறக்கினான்.


பஸ்ஸில் உள்ளவர்கள் அவனை தடுக்க ஒருவரும் முன்வரவில்லை.



‘“எங்கேடி ஓட பார்க்கிற.”



தலைமுடியை பிடித்த பிடியில் வலி தாங்க மாட்டாமல், "யோவ் என்னைவிட்டுடியா . என்னால் அடி, உதை தாங்க முடியல. நான் எங்காவது போய் பிச்சையெடுத்தாவது பிழைத்துக் கொள்கிறேன்” என்று கெஞ்ச,


மேலும் அறைந்தான்.


“நீ ஓடி போவ . இந்த பூபதி பொண்டாட்டி ஓடி போய்ட்டாளாமே. என்று ஊரார் என் மீது காறி துப்புவதற்கா.”


அவளும் கோபமாக, “நீ செய்யற அட்டூழியத்திற்கே உன் மீது காறி துப்பணும். உன்கிட்டேயிருந்து விடுதலை வாங்கி போறதுக்கா காறி
துப்ப போறாங்க “ என்று ஆவேசமாக கேட்க,


“ஓ… நீ இவ்வளவு பேசுவியா : நீ எப்படி வீட்டை விட்டு ஓடலாம் “ என்று அவளின் காலை முறித்தான்.


“நாசமா போறவனே, உனக்கு நல்லா சாவே வராதுடா “ என்று கத்த.


மேலும் ஆக்ரோஷம் அடைந்து சுற்றும் முற்றும் பார்த்து, ஒருவரும் இல்லை யென்றதும், அவளை தரதரவென்று இழுத்து போய்,

“உனக்கு மட்டும் நல்ல சாவா வரப்போகுது”, என்று சொல்லி, அந்த அப்பாவி பெண்ணை மலையுச்சியிலிருந்து கீழே தள்ளி விட்டான்.


ஒழிந்தாள். ‘என்று சாவகாசமாக இறங்கி வந்தான்.



அப்போதிலிருந்து தனியே தான் இருந்தான்.


பெண்கள் சகவாசம் இருந்தாலும், இந்த நடிகையை பார்த்தலிருந்து ஏகபத்தினி விரதனாக இருந்தான்.


பூபதி ரகசியமாக எடுத்த வீடியோவை பார்த்தலிருந்து அவனுக்கு பழிஉணர்ச்சி அதிகமாக இருந்தது.


எப்படியாவது தன் முதுகில் குத்திய நண்பனை அழிப்பது . என்று சபதம் எடுத்தான்.


இப்பொழுது தனபால் பெரும் சொத்திற்கு அதிபதியாக இருக்கிறான். அவனை தொடுவது அவ்வளவு சுலபம் இல்லை. நல்லா பயிற்சி பெற்ற பெற்ற பிளாக் கேட்ஸ் என்பவர்களை தன் பாதுகாப்புக்கு வைத்து இருக்கிறான்.
உறவாடி தான் கெடுக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.




மனைவியும் மட்டுமே அவனுக்கு குழந்தைகள் இல்லை.


தனபால் மனைவி வசந்தி சிங்கப்பூர் தொழில் அதிபரின் மகள். தன் கணவன் செய்யும் பாவ காரியங்களுக்கு நிவர்த்தி செய்யும் விதமாக நிறைய தான தர்மங்கள் செய்பவள். அவளால் அவனை தடுக்கவோ, திருத்தவோ முடியவில்லை.


ஒரே ஆறுதல் வேறு பெண்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான் என்ற நம்பிக்கை.


அவனும் அப்படியே இருக்க, அந்த நம்பிக்கையிலும் மண் விழுந்தது.


அந்த நடிகையுடன் தொடர்பு தொடர்ந்தது. அவள் மூலம் வேறு பெண்களுடன் தொடர்பு வந்தது ‘



இது எல்லாம் வசந்திக்கு தெரியாது என்றே பூபதிக்கு தெரியும். அவன் மனதில் ஒரு திட்டம் உருவானது.


எப்படியாவது இந்த வீடியோவை வசந்திக்கு அனுப்பி வைத்து விட வேண்டும் என்று நினைத்து . யாருக்கும் தெரியாமல் புதிய நம்பர் வாங்கி அதன் மூலம் வீடியோவை வசந்திக்கு அனுப்ப முடிவு செய்தான்.



அப்போது சிங்கப்பூரிலிருந்து வசந்தியின் பெற்றோர் தங்கை உட்பட ,,. தனபாலின் பிறந்தநாள் விழாவை கொண்டாட வந்து இருந்தனர்.



பூபதியும் அந்த விழாவிற்கு வந்து இருந்தான்.


பிறந்தநாள் விழாவா கொண்டாற.. அதுவும் நீ கெட்டகேட்டிற்கு…என்று மருகிக் கொண்டான்.


ஒருவருக்கும் தெரியாமல் . கழிப்பறை சென்று வீடியோவை புது நம்பரிலிருந்து அனுப்பி, அந்த சிம்கார்டை எடுத்து கழிப்பறையில் போட்டு ப்ளஷ் செய்து விட்டான்.


பூகம்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தான்.




சிறிது நேரம் கழித்து, அவள் தங்கை அக்காவின் போனுக்கு வந்திருந்த வீடியோவை ஓபன் பண்ணி பார்க்க .
ஐயோ..தூ…என்று கத்தினாள்.


வசந்தி என்னென்று கேட்க இந்த வீடியோவை பாரு” என்றாள்.


“கண்ட கண்ட வீடியோவை பார்க்காதே என்று எத்தனை தடவை சொல்வது”.


“அக்கா, இது கண்ட வீடியோ இல்ல. ..உன் கண்கவர் கணவர் வீடியோ.”



“அவரோடதா…!!!


“எங்கே காட்டு..”


அதில் தன் கணவன் தனபால் யாரோ ஒரு பெண்ணை முத்தமிட்டு கொண்டியிருந்தான்.



இருவர் உடம்பிலும் ஒட்டு துணி இல்லை.


பார்த்தவுடன் ஐயோ என்று அறுவறுப்பில் மயக்க மடைந்தாள்.


அனைவரும் பதற, அவரின் பெற்றோர் அந்த வீடியோவை பார்த்து அதிலிருப்பது தனபாலே தான் முடிவு செய்தார்கள்.



அவனிடம் கேட்க ,ஒரேடியாக நான் அவனில்லை. என்று சாதித்தான்.


“யாரோ என் வளர்ச்சியை பொறுக்க மாட்டாமல் என் போட்டோவை மார்பிங் செய்து விட்டார்கள்” என்று சாதித்தான்.



அப்பா… என்று இளைய மகள் நிலா கூப்பிட ,என்னம்மா என்று கேட்டார்.


அந்த போனை என்னிடம் கொடுங்கப்பா ,, அது மார்பிங் செய்யப் பட்டதா , இல்லை ஒரிஜினல் வீடியோவா “”என்று சொல்லிவிடுகிறன் என்று கேட்க


அவர் மறுத்தார்.


“நீ சின்னப் பெண் இதையெல்லாம் பார்க்கக் கூடாது.”


“நான்தாப்பாபார்த்து சொன்னேன்.”


தனபால் தன் மச்சினியை முறைத்தான்.


“அடிப்பாவி… வசந்தியிடம் போட்டு கொடுத்தது மட்டுமல்லாமல் இதை ஆராய வேறு போறியா”.. என்று தன் மனதில் நினைத்து| மாமனார் கையிலிருந்த போனை பிடுங்கி உடைத்தான்.


“என் பேச்சுக்கு அவ்வளவுதான் மதிப்பா நான் எந்த தப்பும் பண்ணல. . ஊரார் தான் என்னை கஷ்டபடுத்து கிறார்கள் என்றால் என் உறவுகளே என்னை மதிக்கவில்லை என்றால் நான் என்ன செய்வது” என்று போலியான ஒப்பாரி வைத்தான்.


உணர்வு வந்து எழுந்த வசந்தி, இவன் போலியாக அரற்றுவதை கண்டு எரிச்சலடைந்து, அவனிடம் ஒன்றும் பேசாமல், தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு தன் பெற்றோருடன் சிங்கப்பூருக்கு கிளம்பிவிட்டாள்.


“என்னை விட்டு போகாத. பெண்டாட்டி இல்லனா சகலமும் போச்சி என்று சொல்வார்கள். நான் மண்ணா போய் விடுவேன் “.என்றெல்லாம் வாய் விட்டு கதற,


அவன் மனமோ, “போடீ போ ஒரு புள்ளய பெத்துக்க வக்கில்ல. இங்க இருந்து என்ன பண்ண போற . நானே உன்னை எப்படி தலை முழுக போறேன் என்று நினைத்தேன் . நீயே போற. போ . எனக்கு ஆயிரம் பெண்டாட்டிகள் கிடைப்பார்கள் என்று மனதில் கொக்கரித்தான்.





விழாக் கோலம் பூண்டியிருந்த மாளிகை வெறிச் சென்று இருந்தது.


வந்த விருந்தினர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.


பூபதியும், தனபால் மட்டுமே இருந்தனர்.


அவனும் கிளம்ப, தனபால்
சற்று பொறு..என்றான்.


என்னப்பா… என்ன நடந்தது என்று பிறகு கேட்டுக்கலாம் என்று நினைத்தேன்.


“சிஸ்டர் கோவிச்சிக்கிட்டு போன மாதிரி இருந்தது.”


“ஆமாம்.”


‘“நான் அந்த நடிகையுடன் இருந்தது உன்னத் தவிர யாருக்கும் தெரியாது.


ஏன்ப்பா. அந்த நடிகைக்குத் தெரியுமே..


“சரி. நம் மூவர்க்கு மட்டுமே தெரிந்த விஷயம்..
அதெப்படி வீடியேவாக வந்தது”.


‘’வீடியோவா!!! ……..
ஒன்றும் தெரியாத அப்பாவி போல் கேட்க,



‘“நடிக்காதாடா . உனக்கு அவ கிடைக்காத ஆத்திரத்தில் வீடியோ எடுத்து என் மனைவிக்கு அனுப்பி இருக்க. “”


“அய்யோ. என்னடா சொல்ற.. என்று அதிர்ந்து,
எனக்கு இருப்பது நீ மட்டும் தானேடா.
உனக்கு போய் துரோகம் இழைப்பேனா” என்று குரல் கரகரக்க சொல்ல.


“டேய் பொய் சொல்லாதா . நான் உனக்கு மேலேயே நடிப்பேன்.’


“நீ என்னிடமே நடிப்பியா . நான் உன் நண்பன்” என்று பதிலுக்கு பூபதி சொல்ல.,


தனபால் பேசாது இருந்தான்.


அந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு, ‘“இதோ பாரு. அன்று அந்த நடிகை யுடன் நான்தான் இருப்பேன் என்று நினைத்தேன். அதற்குத்தான் அந்த பட்டு வேட்டி
எல்லாம்.

கடைசி நிமிடம் வரை எனக்குத் தெரியாது. உனக்கும் அவமேல் ஆசை என்று அப்படி இருக்க. எனக்கு நானே வீடியோ எடுப்பேனா…….: ?


கொஞ்சம் உட்கார்ந்து தெளிவா யோசி.”ன்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினான்.



தொடரும்.
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top