New member
- Joined
- Jul 12, 2025
- Messages
- 23
- Thread Author
- #1
நிழலாக இருந்த ஒளி. பாகம் 23.
பூபதியை கொன்றது பிரபு என்று தெரிந்தது. அதை நிரஞ்சனா கேட்டதும், அவனுக்கு இது ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது.
எப்படி… கண்டு பிடித்தார்கள். எப்பவோ நடந்தது.
என் அப்பாவையா ……….? .
நானா…………?
இதோ இங்கு இருக்கிறரே தனபால் அவர் தான் என் அப்பாவை புலியை ஏவி கொலை பண்ண வைத்தது””
என்று சொல்ல, கூட்டத்தினரிடையே சலசலப்பு ஏற்பட்டது.
திருமுலர் சொன்னது போல் குருடும்’’
குருடும், குருட்டாட்டமடி
குருடும் ,குருடும் குழி விழு மாறே.””
என்று ஆகிவிட்டது என்று வேங்கையன் சொல்ல அதை அதியும் ஆமோதித்தான்.
பிரபுவால் அசைய கூட முடியவில்லை.
“ஏன் உன் அப்பாவை கொன்ன.
சொல் என்று துப்பாக்கி முனையில் கேட்க,
வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டான்.
“அவனின் தாய் இறந்தபிறகு, பூபதிக்கு இவன் மீது இருந்த பாசம் போய், இவனை அடிக்க ஆரம்பித்து உள்ளான்.
இத்தனை வருடங்களாக அவன் கோபத்தை அம்மா தாங்கி கொண்டியிருந்தார். அவனுக்கு யாரையாவது அடிக்கணும். பிரபுவால் தாங்க முடியல. ஒரு கட்டத்தில் கொலை செய்ய முடிவு செய்தான்.
தனபாலை பார்த்து விட்டு வந்தவுடன்,
போதையில் இருந்த அவரை கத்தியால் குத்தினான்.. வண்டியில் ஓட முடியாதபடி பெட்ரோலையும் எடுத்து விட்டான்..
அவரை புலி அடித்து கொல்ல ஏற்பாடு செய்து இருப்பது பிரபுவுக்கு தெரியாது.
கத்தியால் குத்தியவுடன் புலி உறுமும் சத்தம் கேட்கவே , ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான்.
புலியும் பூபதியை அடித்து தின்றது.
இதையெல்லாம் கேமிராவில் பதிவு செய்து. போனில் ஏற்றிக் கொண்டு அந்த போனையும் போதையில் தொலைத்து விட்டார்கள்.
அது இப்போது கிடைத்து உண்மை வெளிவந்தது.
இதையல்லாம் அவன் வாயிலாக கேட்டு தெரிந்துக் கொண்டு , சீனியரியிடம் பேச திரும்பினாள்.
கொஞ்சம் வாய்ப்பு கிடைத்தவுடன்
பென்டிரைவ் கொடுத்த சிறுவனை பிடித்து, தன் இடுப்பில் மறைவாக வைத்திருந்த கத்தியை அவன் கழுத்தில் வைத்தான்.
அந்த சிறுவன் அலற மக்கள் திகைத்தனர்
நிரஞ்சனா அவனிடம் “” தப்புக்கு மேல் தப்பு செய்யற . அந்த பையனை விடு..
என்றாள்.
போடி என்றான்.
வேங்கையனும், அதிவீரனும் அவன் அருகில் போக ,கத்தியை அவன் கழுத்தில் சொருகி விடுவேன் என்று மிரட்ட சிறுவனின் தாய் கதறினாள்.
சரி. நாங்கள் ஒன்றும் செய்யவில்லை.
சிறுவனை ஒன்றும் செய்யாதே” என்றார்
பிரபு தனபாலை கூப்பிட்டு காரை எடுக்க சொன்னான்.
பிரபுவிற்கு ஒருகையும், காலும் இழுத்துக் கொண்டதால், அப்படியே இழுத்துக் கொண்டே ஓடி காரில் அமர அந்த சிறுவனோ, காரில் அடியில் உருண்டு அந்த பக்கம் போய்விட்டான்.
அதற்குள் தனபால் காரை எடுத்து விடவே, ’ மக்கள் அலறினார்கள் -
சிறுவன் தப்பித்து விட்டான்.
கார் வேகமாக போக , பின்னாலே நிரஞ்சனா ஜீப்பில் அதியும்,
வேங்கையனும் ஏறிக் கொள்ள மலையில் சேஸிங் நடைப்பெற்றது.
இவர்கள் துரத்த தனபாலை வேகமாக ஓட்ட சொன்னான்
செல்வனை அடித்த போட்ட இடத்திற்கு வரும்போது, எதிரே குதிரையில் யாரே வருவது போல் இருக்க தனபாலும், பிரபுவும் கண்ணை கசக்கி கொண்டு பார்த்தாரகள்.
தனபால் கண்ணுக்கு. செல்வன் கம்பீரமாக குதிரை யில் வருவது போல் இருந்தது.
பிரபுவின் கண்களுக்கு குதிரையின் மீது சினம் கொண்ட வேங்கை
அமர்ந்து இருப்பதுபோல், தெரிய அவன் அலற
தனபால். செல்வனை பார்த்த மாத்திரத்தில் ஒரு ஒளி தெரிந்த அதிர்ச்சியில், தன் கட்டுபாட்டை இழந்து காரை தாறுமாறாக ஓட்ட ஆரம்பித்தான்.
செல்வனையும் அவன் கர்ப்பிணி மனைவி சிவகாமியையும் எந்த மலையுச்சியிலிருந்து காரோடு தள்ளி விட சொன்னானோ அதே மலையுச்சியில் அவனின் கார் எகிறி உருண்டது.
காரிலிருந்து தூக்கி வீசப்பட்ட இருவரும் பாறையில் மோதி, தலை சுக்கு நூறாக உடைந்து , கை, வேறு கால் வேறாக போய் அவர்கள் அழிவை அவர்களே தேடிக் கொண்டார்கள்.
நிழலாக இருந்த ஒளி அவர்களுக்கு அழிவை கொடுத்தது.
அவரவர் பாவ புண்ணியத்தை சேர்த்து’’நன்மையும், தீமையும் நடைபெறும் என்பதை காட்டுகிறது.
அவன் கார். பறப்பதை கண்டதும் பின்னால் வந்த போலீஸ் ஜீப் நின்றது.
அடுத்தவனுக்கு தீமை தரக்கூடிய சமுதாய ஒழுக்கக் கேட்டை மட்டுமே சட்டம் தடுக்க முடியும்.
தனிமனித ஒழுக்கத்திற்கு அது உத்திரவாதம் தர முடியாது.
அவனே அந்த ஒழுக்க கேட்டிற்கு
பலியாவான்”.என்று வேங்கையன்
சொன்னதும்,
உச்ச். கொட்டினார்கள்.
.............
பரிமளம் எஸ்டேட்..
சிவகாமியும், பரிமளமும் மகன்கள் இருவரும் கிளம்பி போனார்களே அங்கே என்ன நடந்ததோ…என்று கவலை பட்டுக் கொண்டியிருக்க அனைவருக்கும் கயல்விழி ஆறுதல்.சொல்லிக் கொண்டியிருந்தாள்.
இருவருமே அறிவில் சிறந்தவர்கள். கண்டிப்பாக பத்மாவை மீட்டுக் கொண்டு வருவார்கள் என்றார்.
பாக்யம் தான் சொல்ல வந்த விஷயத்தை சொல்ல துடித்துக் கொண்டியிருந்தாள்.
தன் கணவர் ‘மருமகன்கள் இருவரும் வரட்டும் என்று பொறுமை காத்தாள்.
இன்ஸ்பெக்டர் நிரஞ்சனா சில பார்மாலிடிக்ஸ் முடித்து விட்டு. அவர்கள் இருவரையும். அனுப்பி வைத்தாள்.
காத்தமுத்து பத்மாவை அழைத்துக் கொண்டு பரிமளம் எஸ்டேட் வந்தார்.
அதிவீரன் சிவகாமியிடம் நடந்ததை சொல்ல, அவர்கள் செய்த பாவம் இந்த கதிக்கு ஆளாக்கியது.”என்று வசந்திக்காக கண்ணீர் விட்டாள்.
பாக்யம் அனைவரிடமும் செல்வனை பற்றி சொல்ல, மகிழ்ச்சியில் சிவகாமி திக்குமுக்காட மயக்கமடைந்தாள்.
அதிவீரன் அவளுக்கு முதலுதவி கொடுத்தான்.
எழுந்ததும், சொல், அவரை எப்படி, எங்கே என்று வார்த்தைகள் வெளிவராமல் கேட்க,
காத்தமுத்து எல்லாவற்றையும் சொன்னார்.
ஏன் என்னை அந்த காட்டுக்குள் தேடி வர வில்லை என்று கேட்க,
அம்மா எங்களால் அவர் உயிரை மட்டும் தான் காப்பாற்ற முடிந்தது. அவர் தன் நினைவுகளை இழந்து விட்டார்.
கடைசியா உங்களை மட்டுமே நினைத்து இருந்ததால். உங்களை தவிர, யார் நினைவும் வந்ததில்லை. .உங்களை தனியே தவிக்க விட்டோமே என்ற குற்ற உணர்சியில் அவர் யாருடனும் பேசுவதில்லை.
அவருக்கு பிடித்த ஒரே விஷயத்தை மட்டும் தொடர்ந்து செய்கிறார்
“குதிரை பயிற்சியா” என்று சிவகாமி கேட்க
‘ஆமாம்” என்றாள்.
கயல், அதிவீரன், வேங்கையனுக்கும் அவராக இருக்குமோ என்று தோன்றி, மூவருமே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“பேச நேரமில்லை. உடனே கிளம்புங்கள். நான் அவரை பாரக்க வேண்டும். “ என்று சிவகாமி சொன்னதும் கிளம்பினார்கள்.
அந்த மாலை.
கோயமுத்தூரின் ஒதுக்கு புறத்தில், குதிரைகள் பயிற்சி மையம்.
ஒரு பெரும் மழையை எதிர்நோக்கி அமைதியில் மிதந்தது. காரிருள் மூட கனத்த மேகங்கள் இடியின் முழக்கத்தை முன்கூட்டியே சொல்வது போல் கிராமத்து ஆட்கள் , எஸ்டேட் தொழிலாளர்கள். மகன்கள் மருமகள்களுடன் சிவகாமி அனைவரும் கண்ணீர் மல்க குவித்திருந்தார்கள்.
அவர்கள் அனைவர் பார்வையும் ஒரு மனிதர் மீது.
செல்வன்.
பெரிய மர நிழலில் தன் குதிரை தடவிக் கொண்டு தொலைந்த கண்ணோட்டத்துடன் யாரையோ தேடி நின்றார்.
அவரது முகத்தில் மறைந்து போன
புன்னகையின் சிதறல்கள் மட்டும் இருந்தன..
அனைவரும் அவரை ஐயா என்றும், எங்கள் குலச்சாமியே என்றும் அழைத்தனர்.
அதிவீரன் அப்பா என்று அழைத்தான்.
கயலும், பத்மாவும் மாமா என்று அழைத்தார்கள்.
ஆனால் எதுவும் அவரது மனதில் ஒலிக்கவில்லை.
அந்த நேரத்தில் சிவகாமி மெதுவாக முன்வந்து கண்களில் அடங்காத நீரை தாங்கி அவரது காதில் ‘மன்னா..! ‘
என்றாள்.
அந்த ஒரு சொல் செல்வனின் கண்கள் மின்னின . அவரது இதயத்தை துளைத்தது. மறதியின் இருண்ட குகைக்குள் ஒளியை சேர்த்தது .
ஒளி முனையாக இதயத்தை ஏற்றியதும் காலத்தால் மறைக்கப்பட்ட நினைவுகள் மழைக்குப் பிறகு பச்சையாக தழைக்கின்றது போல் மெதுவாக மீண்டும் மலர்ந்தன .
‘ சிவகாமி’……!!
அவரது உதடுகள் அந்த பெயரை உச்சரித்ததும் கூடியிருந்தோர் அனைவரும் கண்களிலும் கண்ணீர் வெள்ளம் பெருகியது.
சிவகாமி அவரின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள்.
மறந்து போன உலகம் திரும்பி வந்தது .
இருவரின் கண்கள் சந்தித்த அந்த நொடி முழு எஸ்டேட்டும் கிராமமும் அந்த காதலின் வெற்றியில் மூழ்கியது.
முற்றும்.
Epilogue.
சிவகாமி அதிவீரன் .வேங்கையன், பத்மா . கயல்விழி ,பரிமளம் .
வரதன் என்று எல்லாரையும் அறிமுக படுத்தினார்.
அனைவருக்கும் செல்வன் நன்றி சொன்னார்.
இவர்கள் அரண்மனை பங்களா போவதற்குள் எஸ்டேட் மக்களும் சின்னமனூர் கிராமத்து வாசிகள்.
வேட்டுவ மலை மக்கள் எல்லோரும் சேர்ந்து பங்களாவை தூய்மை படுத்தினார்கள் .
வாழைமரம். பந்தல் போடப்பட்டு சித்தரின் மந்திரங்கள் ஒலிக்க, தெய்வீக மணம் வீசியது.
வீர வேங்கையன் சட்டத்தின் படி அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் கோர்ட்டில் ஒப்படைத்து, உத்திரவு வாங்கி கொண்டு வந்தான்.
ராமசுப்புவின் உதவியாளர்கள் கார்மேகம் ஜமீனின் உயிலை கொடுத்தார்கள்.
அதில் அதிவீரன் 25 வயது முடிந்தவுடன் அவன் பெயருக்கு இந்த சொத்து முழுவதும் வரும்படி எழுதி இருந்தது.
DNA டெஸ்ட் எடுத்து அவன் தான் வாரிசு என்றும் உறுதி செய்யப்பட்டது.
அவன் சிவகாமி செல்வனிடம்,’ “ஒரு வேண்டுகோள் அப்பா.“என்றான்.
என்ன என்பது போல் இருவரும் பார்க்க
ஒருவரிடமே இவ்வளவு சொத்து இருப்பது தான் பிரச்சனையே.
நான் சில ஆலோசனைகள் சொல்வேன். ஏற்றுக் கொள்வீர்களா”” என்று கேட்க
சொல்லுப்பா என்றனர்.
இந்த பங்களாவை ஆஸ்பத்திரியாக மாற்றி விடுவோம். நம்மூரில் நல்ல ஆஸ்பிட்டல் இல்லை.
எஸ்டேட்டை தொழிலாளர்களுக்கே பிரித்து கொடுத்து விடுவோம்.
அந்த வீணா போனவன் போட்ட கஞ்சா தோட்டத்தை போலீஸே அழித்து விட்டது. அங்கு மக்களுக்கு.வீடு கட்டி கொடுப்போம்.
அவன் சொல்ல சொல்ல அவர்களுக்கு பூரித்தது.
அவர்களுக்கும் அதே எண்ணமாக இருந்தது.
அப்பா, இதை நான் மட்டும் இந்த முடிவை எடுக்கவில்லை. வேங்கையன் முடிவும் இதே.
சிவகாமி தாய்மையில் பூரித்தாள்..
பெற்றவனும், வளர்த்தவனும் தங்களின் மன ஓட்டத்தை பிரதிபலிக்கும் படி எடுத்த முடிவு களுக்கு தலைவணங்கினாள்.
செல்வனும் பெருமிதம் அடைந்தான்.
வேட்டுவ மலையில் அந்த வருடம் படையல் நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைப் பெற்றது.
செல்வனும் சிவகாமியும் தம்பதியராக மகிழ்ச்சியுடன் கலந்துக் கொண்டு நடனமாடினர்.
அப்படியே வேங்கையன்,பத்மாவிற்கும்,
அதிவீரனன் , கயல் விழிக்கும் திருமணம் மிகச்சிறப்பாக நடத்த முடிவு செய்யப் பட்டது.
மக்கள் திரளாக கலந்துகொள்வார்கள் என்ற எதிர் பார்ப்பின் படி வேட்டுவ மலைத் தலைவர் தன் வீட்டு திருமணம் போல் மிகச் சிறந்த ஏற்பாடுகளை செய்திருந்தார்.
பரிமளம் வரதன் தம்பதி. மற்றும் சிவகாமி செல்வன் தம்பதியர் திருமணநாண் எடுத்துக் கொடுக்க, சித்தர் ஆசியுடன் திருமணம் இனிதே நடைப் பெற்றது.
நிழல் போல ஒளியாக அனைவர் வாழ்கையிலும் தீபமாக ஒளிர்ந்தார்.
முற்றும்.