• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
356
நீ உடல் நான் நிழல்
பாகம் - 71


தேனு மாப்பிள்ளைக்கு டிபன் எடுத்து வை நான் கமலா அண்ணி வீட்டு வரைக்கும் போயிட்டு வரேன் இருங்க மாப்பிள்ளை வந்துடறேன்.

யசோதா சென்றதும் தேவ் ஆனந்த் தேனருவியை அவளது அறைக்குள் இழுத்துச் சென்றான்.

காலையிலே போனில் அவனது ஆசையை தூண்டியதால் இப்போது அவளது இதழில் மென்மையாக தனது இதழை பதித்து தேன் உறிஞ்சினான்.

காலையில் கனவென்று அறியாமல் அவனோடு ஒன்றாக இருக்கிறோம். என்று நினைத்து பேசியவள் அதை நினைத்தே சிவந்திருக்க இப்போது நடந்த இதழ் யுத்தத்தில் மேலும் சிவந்துவிட்டால் மென்மையிலும் மென்மையாக ஒரு முத்தத்தை கொடுத்துவிட்டு இப்போது அவளின் செவிகளை தனது பற்களால் லேசாக ஒரு கடி கடித்துவிட்டு விலகியவன் வரவேற்புரை சென்ற அமர்ந்து விட்டான்.

யசோதா எந்த நேரமும் வீட்டுக்குள் வரலாம். பூவிழி வீட்டிற்குள் தான் இருக்கிறாள் என்பதால் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு இப்போது சோபாவில் அமர்ந்திருந்தான்.

தேனருவி அவளது அறைக்குள்ளே நின்று விட்டாள் அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது.

இப்போது உள்ளே வந்த யசோதா என்னங்க மாப்பிள்ளை நீங்க இன்னும் சாப்பிடலையா? என்று கேட்க ?

அவனோ? தேனருவியை காணோம் அதனால தான் சரி உள்ள டிரெஸ்ஸிங் பண்ணிட்டு இருப்பாங்க கத்தை.

தேனு அப்பளையாவே ரெடியாயிட்டாலே நான் என்ன சொல்லிட்டு போனேன் மாப்பிள்ளைக்கு டிபன் எடுத்து வைடின்னு சொல்லிட்டு போன நீ இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க என்று தனது மகளை கடிந்து கொண்டே பாருங்க மாப்ள காலேஜ் போகும்போது இப்படி பண்ணுவா ரொம்ப லேட் பண்ணிட்டு தூங்கிட்டே கிடப்பா என்ன ஆகும் இப்ப நீங்க வர்றதுக்கு பத்து நிமிஷத்துக்கு முன்னால் வரைக்கும் அவ குளிக்க போகவில்லை.

ஐயோ இவள வச்சுட்டு என்னதான் பண்றதுன்னு எனக்கு ஒரே பயமா இருக்குது. இங்க பரவால்ல தாய் வீடு எப்படி இருந்தால் பரவாயில்லை.

நாளை கல்யாணம் பண்ணிட்டு போனா அங்க என்ன சொல்லுவாங்க எல்லா திட்டுவாங்க போங்க.

அத்த நீங்க நினைக்கிற மாதிரி இல்ல ஒருத்தரு வந்து ஒன்னும் பேச மாட்டாங்க எங்க அண்ணிங்கள வீட்ல நேரத்தில் எந்திரிச்சு வேலை செய்ய மாட்டாங்க அதெல்லாம் வேலைக்கு ஆள் இருக்கறதுனால எல்லாம் தாமதமாகத்தான் இதுவரை எந்திரிச்சு வருவாங்க நீங்க தேன் அருவி பத்தி பயந்துக்கவே வேண்டாம் எங்க வீட்ல ஒருத்தரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க அவ இங்கு எப்படி இருக்கிறாளோ? அதே மாதிரி அங்கே இருக்க போறாள்.

உண்மையிலேயே மாப்ள எனக்கு அந்த பயம் இல்ல அதனால தான் தைரியமா உங்க வீட்டுக்கு பொண்ணே குடுக்குறேன்ப்பா என்ன இப்ப எல்லாம் இந்த காலத்தில் நடக்கிறது என்று நினைத்தால் பயமா இருக்குது அதுக்கு வெளியில இருந்து மாப்பிள்ளை பார்க்காம ஒன்னுக்குள்ள ஒன்னு இருக்குனு சொந்தமா நீங்க போனீங்க அதனாலதான் நமக்கும் பயமில்லை போங்கோ.

அதற்குள் பூவிழி கிளம்பி வந்தால் மாமா இப்பதான் வந்தீங்களா?

அவர் எல்லாம் அப்பளையாவே வந்தாச்சு உங்க அக்கா காரியும் இன்னும் மேக்கப் முடியவில்லை போய் அவளையும் கூப்பிட்டு வா எல்லாரும் சாப்பிட்டு சீக்கிரம் இன்னைக்கு மதுரைக்கு கிளம்பனும்.

மதுரை நித்யா நீ வீட்டுக்கு போகணும் அங்க பத்திரிக்கை வச்சுட்டு அப்படியே நகை கடைக்கு பார்த்து எல்லாம் வாங்குவது வாங்கிட்டு வந்துடும் சும்மா பொழுது நிக்குமே கடைக்கு போயிட்டு இருக்க முடியாது.

தேனுக்கா மாமா உனக்காக எத்தனை நேரம் வெயிட் பண்ணிட்டு இருக்காரு இன்னும் நீ ரூம்குள்ளயே இருந்தா என்ன அர்த்தம். கண்ணை முழிச்சிட்டு கனவு கண்டுக்கொண்டு இருக்கிறாயா? வா இன்னைக்கு மதுரை போறோம்.

எனக்கு ஒரே ஜாலியா இருக்குது. நித்தியா அண்ணி பார்க்கலாம் அவங்க ரெண்டு தம்பி இருக்காங்களா எப்ப பார்த்தது அவனுக எல்லாம் என்னதான் இன்னொரு வாரத்தில் கல்யாணத்துக்கு வருவாங்க.

இப்ப போன ஜாலி துணி எல்லாம் எடுத்துட்டு வந்துக்கலாம்.

அதைவிட இன்னும் இருக்குது பூவிழி என்று தேன் அருவி சொன்னாள்.

என்ன அக்கா இன்னும் என்ன இருக்குது.

எதுவுமே தெரியாத மாதிரி கேக்குற அதெல்லாம் உங்க மாமா அம்மாட்ட சொல்லியாச்சு.

என்னத்த அக்கா சொன்னாரு?

உன்னோட ஆளைப் பற்றி என்னது அம்மாக்கு தெரியுமா? ஐயோ அம்மா என்னை ஒண்ணுமே பேசல எனக்கு ஆச்சரியமா இருக்குது.

மாமா தான் சொல்லி இருக்கிறார் அவரோட ஃப்ரெண்டு எப்படி உன்னை காலேஜில் பாத்துட்டு புடிச்சதுனால பொண்ணு கேட்டாங்க அப்படிங்கற மாதிரி சொல்லி இருக்கிறார் .ஆனால் நீ உளறி வச்சுக்காத .

தேங்க்ஸ் அக்கா எனக்காக யோசித்துக் கொண்டிருந்தாயா?

(ஆமாம்மா தேனா என்னம்மா பொய் சொல்ற நீ பூவிழிக்காகவா யோசிச்சிட்டு உட்கார்ந்திருந்தே உன்னோட ஆளு முகத்தை எப்படி பார்க்கிறது என்று பரிதவிச்சுட்டு உட்கார்ந்து இருந்தே என்னம்மா கப்சா விடுற நீ யாரு தேனருவி ஆச்சு என்று அவளின் மனசாட்சி வந்து எடுத்துரைக்க)

சீ என்று சம்பந்தமில்லாமல் சிரித்து வைத்தால் ..

தேனு மாமா பயந்துட்டு போய் இருப்பாரு நீ சிரிக்கிறது பார்த்து.

வாடி சாப்பிட போலாம் என்று அக்காளும் தங்கையும் இப்போது டைனிங் ஹாலுக்கு வந்தனர்.

உங்ககிட்ட நான் என்ன சொல்லிட்டு போனேன் மாப்பிள்ளைக்கு டிபன் எடுத்து வைன்னு சொல்லிட்டு போனா நீ வீட்டுக்குள் என்னடி பண்ணிட்டு இருந்தா மாப்பிள்ளை என்ன நினைப்பாரு வா என்று யசோதா அனைவருக்கும் தட்ட எடுத்து வைத்து இட்லி வைத்தார்.

அப்ப நீங்களும் உட்காருங்கள் எல்லாருமே ஓட்டுக்காக சாப்பிடலாம் நம்ம வீடு தானே யாரோ வீடு மாதிரி நீங்க எதுக்கு பரிமாறிட்டு இருக்கீங்க இருக்கிறது நாம் நான்கு பேரும் சேர்ந்து சாப்பிட்டு சீக்கிரமா கிளம்பி போலாம் .

மாப்ள அது எப்படி மாப்பிள்ளை உங்களுக்கு சமமா நானும் உட்காருவது

உங்களுக்கு ஒரு மகன் இருந்தா இப்படித்தான் பிரிச்சு வைப்பீங்களா அப்படி நினைச்சுக்கோங்க என்னைய வர்ற மருமகன் தானே மகன் என்று தேவானந்த் சொல்ல உண்மையில் யசோதாவுக்கு விழியில் ஹநீர் கோர்த்து விட்டது.

அவரும் தட்டெடுத்து வைக்கணும் அமர்ந்து சாப்பிட்ட ஆரம்பித்தார்கள்.

தேவையான அளவு பணத்தை எடுத்துக்கொண்டு இப்போது தேவானந்த் கார் ஓட்ட அவனுக்கு அருகில் உள்ள சீட்டில் தேன் அருவி அமர்ந்து கொண்டால் பின்னாலே பூவிழியும் யசோதாவும் கமலா அண்ணியும் அமர்ந்து கொண்டனர்.

நேராகச் சென்றது ஒரு பழக்கடையில் பழங்களும் பூவும் இனிப்புகளும் வாங்கிக் கொண்டு நித்யா சபரி வீட்டுக்கு சென்றார்கள்.

உள்ளே போவதற்கு முன் வெளியே வந்த நித்தியசபரி வாங்க வாங்க போன் பண்ணி இருக்கலாம் இல்ல உங்க அக்கா இன்னைக்கு தேனி மாவட்டம் போயிட்டாங்க நீங்க முதலிலேயே சொல்லியிருந்தீங்கன்னா இருந்து இருப்பாங்க.

பரவால்ல மருமகளே நீ இருக்கிறாய் அதனால் என்ன எங்க அக்காளவே பாத்து பத்திரிக்கை நேரா கொடுக்கணுமா அப்படி எல்லாம் கோவிச்சுக்க மாட்டாங்க.

இன்னும் ஒரு வாரம் தான் இருக்குது நான் முதலிலேயே வந்து இருக்கோம்னு வர சூழ்நிலை அமையல தப்பா நினைக்காமல் எல்லாரும் ரெண்டு நாளைக்கு முன்னாலேயே வந்துறனும் கல்யாணத்துக்கு..

எங்கே என்று வரும் மகனை காணோம் பேரன் ரெண்டு பேர் எங்கே?

எல்லாம் ஸ்கூலுக்கு போய் இருக்காங்க உங்க மகன் வரும் நேரம் தான் சாப்பாட்டுக்கு எல்லாம் உட்கார்ந்து பேசிட்டு இருங்க நான் கட கடன்னு சமைச்சரேன்.

அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நித்தியா காபி மட்டும் குடிச்சிட்டு நான் கடைக்கு போகணும்.

அதுதான் சரி போறதுக்கு முன்னால உனக்கு வந்து எல்லாம் பத்திரிக்கை கொடுக்க வந்தோம்.

தேவானந்த் அக்கா ஆலா மிட்டாய் அக்கா உங்களை யாருன்னே தெரியாம அன்னைக்கு கோயில்ல கண்டு பேசினேன்.

கடைசியில் பார்த்தால் எல்லாம் சொந்தக்காரர் ஆயிட்டோம் பாருங்க இதுல எல்லாத்துக்கும் துணி இருக்குது கண்டிப்பா எல்லாரும் ஒரு வாரத்துக்கு முன்னாலேயே வந்துரனும்.

அப்ப உங்க கூடவே இன்னைக்கு வந்துட வேண்டியது ஒரு வாரம் தான் இருக்குது தம்பி எனக்கு கொஞ்சம் வேலை எல்லாம் இருக்குது .அதை எல்லாம் முடிச்சுட்டு கண்டிப்பா ரெண்டு நாளைக்கு முன்னால வந்திடுறேன் .

ஜெகஜோதியா இருக்கும் பிரதிலிபி சொந்தங்கள் நிறைய பேர் வருவாங்க இந்த கல்யாணத்துக்கு ஜாலியா இருக்கு என்று நித்தியா சபரி சொல்லவும் .

ஆமாம்மா மகாராஜா தம்பி வீட்டுக்கு போனவாரம் தான் போயிட்டு வந்த என்ன முதல் முதல் தம்பி வீட்டுல தான் பத்திரிக்கை வச்ச அப்புறம் எங்கேயும் அதிகமா போக முடியல சரி எப்படி இருந்தாலும் மதுரைக்கு போற வேலை இருக்குது அப்ப போய் அக்கா வீட்ல கொடுத்துக்கலாம் அப்படின்னு தான் நினைச்சுட்ட தப்பா நினைச்சுக்காத ஆம்பளை இல்லாத வீடு இக்கட்டா சூழ்நிலை எல்லா நீங்கதான் முன்னால் இருந்தெல்லாம் நடத்தனும் சரியா .

எப்படியோ எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னும் சம்பந்தமில்லாம இருந்தா தேனருவி கல்யாணத்து மூலியமா எல்லாம் சேர்ந்துருச்சு பரவால்ல சரிமா நாங்கல்லாம் கிளம்பறோம்.

இவங்க யாருனு சொல்லவே இல்ல நீங்க இத்தனை நேரம்.

நம்மளுக்கு நெருங்கின உறவு தான் சாமி எனக்கு அங்க இவங்களோட துணை இல்லனா நான் அங்க இருந்திருக்கவே முடியாது .எப்படியோ சின்ன வயசுல இருந்து கஷ்டப்பட்டாச்சு போ ஆண்டவன் புண்ணியத்துல தேனருவிக்கு நல்ல மாப்பிள்ளை அமைஞ்சிருச்சு அது ஒன்னு போதுமே அவரே இனி அடுத்த பூவிழிக்கும் நல்ல மாப்பிள்ளை
பார்த்து விடுவார்.

ஆமா நான் சொல்லணும்னு நினைச்சேன். ஒரு நல்ல இடம் வந்து இருக்குது எங்களை வந்து கேட்டாங்க என்று நித்திய சபரி சொல்லவும் தேவானந்த் அவரை கூர்மையாக பார்த்தான். நாம வேற கார்முகிலனுக்கு சொல்லி வைத்திருக்கிறமே நான் இருக்கிறேன் கவலைப்படாதீங்கன்னு அத்தகிட்ட சொல்லாமல் விட்டடனே தேனருவி கிட்ட நான் உங்க அம்மாட்ட சொல்லிட்டேன்னு சொன்னேன்.

நான் இங்க ஒன்னு சொல்லலையே என்ன பண்றது இப்போ மாப்ள என்ன பண்றாங்கப்பா மாப்பிள்ளையும் வந்துங்க பிசினஸ் தான் பண்றாங்க பையன் வந்து youtube சேனலும் வெச்சி இருக்குதுங்க பெரிய கம்பெனி வச்சிருக்காங்க பையன் பேரு கார்முகிலன் அவருக்கு தெரிஞ்சவங்களா அதுதான் இப்படி உங்களுக்கு சொந்தத்தில் பொண்ணு இருந்தா சொல்லுங்கன்னு கேட்டாரு. நம்ம உடனே பூவிழி ஞாபகம் வந்துதுங்க அதுதான் இங்கு வந்தா இல்ல தேனருவி கல்யாணத்துக்கு வந்த உங்களோட பார்த்து பேசலாம்னு இருந்தேன். என்று நித்தியா பூவிலழியை பார்த்துக் கொண்டே சொல்லவும் பூவிழிக்கு உண்மையில் சந்தோசமா போச்சு.

அண்ணி பாரு நான் மனசுல நினைச்சவரை மாப்பிள்ளையா நம்ம அம்மா கிட்ட ஈசியா சொல்லிட்டாங்க என்று மகிழ்ச்சியோடு நித்தியாவை பார்க்க பூவிழியை பார்த்து கண்ணை மூடி திறந்தால் நான் இருக்கிறேன் கவலைப்படாதே என்பதை அதில் உணர்ந்து கொண்டால் பூவிழி .

ஆமாங்க அத்தை நீங்க கவலைப்படாதீங்க நல்ல குடும்பம் அவருக்கு தெரிஞ்சவங்க தான் வரும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க .

அவங்களும் மதுரையா?

ஆமாம் மதுரை தான் பரவாயில்லை நானும் கூட இவ்வளவு பக்கத்துலயே அங்க தேவகோட்டை கொடுக்கிறோம் இவளை எங்கேயாவது ரொம்ப தூரம் போயிட்டான்னா என்ன பண்றதுன்னு நினைச்சேன்.

வந்தாங்கன்னா பார்த்து பேசி போயிடலாம் மாப்பிள்ளை உங்களுக்கு ஒன்றும் தர்ம சங்கடமும் இல்லை தானே.

அத்தை நானே அந்த பையன் எனக்கு பிரண்டு தான் என்னையும் பார்த்து கேட்டாங்க நானும் சரி இன்னைக்குள்ள உங்க கிட்ட சொல்லிடலாம்னு இருந்த பரவால்ல அதுக்குள்ள அக்காவே சொல்லிட்டாங்க .

நீங்க பயப்படவே வேண்டியது இல்லை அவங்களும் ரொம்ப நாளா பொண்ணு பார்த்து தேடிட்டு இருக்காங்க. அவங்க பையனுக்கு நம்ம பூவிழிக்கு ஏத்த பையன் தான் என்று தேவன் கூறி விட யசோதாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

கார்முகிலன் பூவிழி ஜோடி நல்லா இருக்கிறார்களா?


தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top