Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 263
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 7
பாகம் - 7
தேனருவி நிழல் தன் காதருகில் சொல்லி விட்டு சிரித்ததை தாங்கமுடியாமல் அதை அடிப்பது போல் செய்ய, கோசலை மேடமுக்கு கூட இது என்ன இவள் இப்படி செய்கிறாள். ஒருவேளை நாம் திட்டியதால் இப்படி ஆகி விட்டதோ?
மலர்க்கொடி சில்பா இருவரும் என்னடி இவ இப்படி நடிக்கிறாள். சும்மாவே கோசலை மேம் செம காண்டுல இருக்கிறாங்க இவ செய்யற சேட்டையில் இவ இன்னைக்கு பிரின்ஸ்பால் அறையில் போய் நிற்கப் போகிறாள் என்று தங்களுக்குள் குசு குசு என்று பேசிக் கொண்டு இருந்தனர்.
தேனருவி இங்கே பாருமா நீ என்ன இப்படி செய்கிறாய்? உனக்கு என்னாச்சு என்று அவர் பயத்தை மனதில் வைத்துக் கொண்டு அவளைப் பார்த்து கேட்டார். அவருக்கோ பயம் நாம் திட்டியதால் இவளுக்கு மூளை குழம்பி விட்டதோ? இந்தக் காலத்தில் தான் ஆசிரியர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லையே அதை மனதில் அசைபோட்டவர் இப்போது அவளைப் பார்த்து இங்கே பாருமா போ போய் உட்கார்ந்து கொள் நான் உன்னை யாருகிட்டவும் மாட்டி விடலை போ
உனக்கு இது மாதிரி அடிக்கடி நடக்குமா? எதுக்கும் ஆரம்பத்திலேயே மருத்துவ ஆலோசனை செய்து கொள்மா?
நான் பேசியதை எதையும் மனதில் வைத்துக் கொள்ளாதே மா. ஏம்பா மலர்க்கொடி உன் தோழியை அருகில் அழைத்து உட்கார வைத்துக் கொள்மா. என்று தேனருவியைப் பார்த்து சொல்லி விட்டு சென்று விட்டார்.
தேனருவி செய்த சேட்டையில் அவருக்கு ஒரு நிமிடம் உயிரே போய் வந்து விட்டது. இதுகள் எது செய்தாலும் நாம் இனி கண்டுகொள்ளக் கூடாது. ஒரு நிமிடம் தான் எப்படி பயத்தை போட்டு விட்டாள்.
கோசலை மேடமுக்கு போலீஸ் வந்து தன்னை கைது செய்து அழைத்துச் செல்வது போல் கண்ணுக்குள் தோன்றிய பயத்தில் தான் அவளிடம் சமாதானம் செய்து வந்து விட்டார்.
சில்பா அடியே கெத்தா இருந்த கோசலை மேமை கொசு என்று சொல்லி விட்டு அவர் திட்டியதும் என்னமா? ஆக்ட் போட்டு தப்பித்து விட்டாய் நீ கில்லாடி தான். இதே டெக்னிக் தேவ் ஆனந்த் சார் கிட்ட
போடுவியா?
என்னடி சொல்கிறாய்? நான் எங்கடி நடித்தேன். நானே குழம்பி நின்று கொண்டு இருந்தேன்.
ஆமாண்டி நீ செய்வதை எல்லாம் வீடியோ? எடுத்துத் தான் வைக்கனும்.
மதிய உணவு இடைவேளையில் முதல் வேளையாக அருகில் இருக்கும் பெரிய மாரியம்மன் கோவிலுக்குத் தான் அவளை அழைத்துச் சென்றார்கள்.
சாமி கும்பிட்டுக் கொண்டு இருக்கும் போது தேனருவிக்கு ஒரு ஐடியா தோன்றியது. உடனே தன் பர்ஸில் இருந்து பணத்தை எடுத்தவள் அருகில் பூ விற்கும் பாட்டியிடம் ஐந்து எலுமிச்சை பழம் வாங்கியவள் அதைப் பூசாரியிடம் கொடுத்து சாமி காலடியில் வைத்து தருமாறு வாங்கி தனது பர்சில் வைத்துக் கொண்டாள்.
ஏய் எதுக்குடி இத்தனை லெமன் ஏதாவது பில்லி சூனியம் வைக்கப் போகிறாயா?
என் அறையில் வைத்துக் கொள்ளத்தான். சும்மா தான் டி
நீங்கள் சந்தேகப் படும் அளவிற்கு எதுவுமில்லை. வீட்டில் நிலவாசப்படியில் கட்ட வேண்டும் அது தான். நான் என்ன மந்திரவாதியா? இல்லை பேய் பிடித்து இருக்கிறதா?
உன்னைப் பார்த்தால் பேய் கூட தெரித்து ஓடிவிடும். நீ செய்யும் சேட்டை அப்படி என்று வாயாடிக் கொண்டே மூவரும் மீண்டும் கல்லூரிக்குள் சென்று இதர வகுப்புகள் முடிந்து பிறகு தன் தோழிகளுக்கு பை சொல்லி விட்டு தனது வண்டியை எடுத்துக் கொண்டு பூவிழியையும் ஏற்றிக் கொண்டு வீடு நோக்கி விரைந்தாள்.
பூவிழி இங்கே பாருடி நீ வீடு போகும் வரை எதுவும் பேசாமல் வா அப்படி மட்டும் என்னைத் தொந்தரவு செய்யாமல் வந்து விட்டாய் என்றால் இந்த சுடியை நீயே வைத்துக் கொள் அப்புறம் காலையில் நடந்ததை அம்மாவிடம் சொல்லி விடாதேடி. அப்புறம் அம்மா நம்ம இரண்டு பேரையும் காலேஜ் பஸ்ஸில் பேக் செய்து விடும். நாம் அவ்வப்போது ஊர் சுற்ற முடியாது சரியா? என் செல்ல தங்கச்சி தானே.
உனக்கு தேவை என்பதால் நீ எந்த அளவுக்கு இறங்கி பேசுகிறாய்? நீ எனக்கு பாணிபூரி
வாங்கி கொடுத்தாய் என்றால் உன் கோரிக்கை நிறைவேற்றப்படும்.
சரியான திண்ணிப்பண்டாரம் நீ பூவிழி என்னிடம் இன்றைக்கு காசு இல்லை டி நாளைக்கு வாங்கித் தருகிறேன்.
இப்பவே நேரமாச்சு டி அம்மா வேற கோவிலுக்கு போலாம் சொல்லியது தானே.
சரி நாளைக்கு மறக்காமல் வாங்கித் தர வேண்டும்.
சரிடி என்று இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.
வண்டியை நிறுத்தியதும் வீட்டிற்குள் போகும் போதே அம்மா என்று ஏலம் போட்டுக் கொண்டே போனாள்.
யசோதா தன் கையில் கரண்டியோடு சமையல் அறையில் இருந்து வெளியே வந்து எதுக்குடி இந்தக் கத்து கத்துகிறாய்?
அது உன்னைக் காணலையா அது தான் கூப்பிட்டேன். அது நீ கோவிலுக்கு போனாயா? நான் வரட்டும் என்று காத்திருக்கிறாயா? பிறகு நீ ஏன் கிளம்பவேயில்லை.
அது ஒரு பெரிய காரியம் ஆகி விட்டது நம் தூரத்துப் பங்காளிடி அதனால் பதினாறு நாட்கள் நாம் கோவிலுக்கு போகக் கூடாது.
வீட்டில் விளக்கு போடலாமா மா?
அதுவும் போடக்கூடாது. நீ என்ன என்னைக்கும் இல்லாத கேள்வி எல்லாம் கேட்கிறாய்?
சும்மா தான் நானும் பெரிய பெண் ஆகி விட்டேன் தானே அது தான் ஒரு பொறுப்பு வந்து விட்டது.
அந்தப் பொறுப்பு ஏன் சமையல் செய்து பழக வேண்டும் என்று தோன்றவில்லை.
அவ்வளவு பெரிய பொறுப்பு எல்லாம் உன் பெண்ணுக்கு வரவில்லை அம்மா அப்படி ஒரு ஆசை இருந்தால் அதை மறந்து விடுமா.
அது தானே ரோசம் வந்து நீயாவது சமைக்கிறதாவது. என்று தலையில் அடித்துக் கொண்டு அடுப்பு வேலை பார்க்கச் சென்று விட்டார்.
அம்மா வாசனையே மூக்கைத் துளைக்கிறது என்று பூவிழி சமையல் திண்டில் அமர்ந்து கொண்டு அப்படி என்ன சமையல் செய்கிறாய்? யசோதரை!!!
புளியோதரை என்று சொன்னவரைப் பார்த்து.. யசோதரை புளியோதரையா?
அம்மா எனக்கு மட்டும் மேகி செஞ்சு தா டார்லிங் என்று கொஞ்சினாள்.
போடி அத்தனை தூரம் பஸ்ஸில் போய் வந்ததிற்கு ரொம்ப டயர்டாக இருக்கிறது. இதுவே செய்ய முடியவில்லை இரண்டு பேரும் சாப்பிட்டு தூங்குங்கள் நான் போய் படுக்கிறேன் என்று அவரின் அறைக்குள் சென்று விட்டார்.
எனக்கு வந்த சோதனை பாரேன். என்று தேனருவி யோசித்துக் கொண்டு இருந்தாள். தீபம் தான் போடமுடியாது. ஆனால் நாம் தான் கோவிலில் இருந்து கொண்டு வந்த எலுமிச்சை வைத்து ஏதாவது செய்யலாம் என்று யூடிப்பில் சென்று பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அக்கா இங்கே பாரேன் சந்தானம் செய்த சொக்க வைக்கும் சொக்க வைக்கும் ஜூவல்லரியை காமெடியை நடிகை வனிதாவை வைத்து போட்டு இருக்கிறார்கள். என்று பூவிழி ரீல்ஸ் பார்த்து சொல்ல.
அதில் காண்டான தேனருவி சொக்க வைக்கும் சொக்க வைக்கும் ஜுவல்லரி.. சொர்ணக்கா போட்டு விட்டா ஆல்ரெடி.. என்று ரைமிங்காக சொல்ல..
அக்கா நீ உண்மையில் செம காமெடி செய்கிறாய்? ஆமா நீ எதுக்கு இப்போது தேவை இல்லாமல் மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி எதையோ? நினைத்து உட்கார்ந்து இருக்கிறாய்?
அதெல்லாம் ஒன்றும் இல்லை. நீ போய் உன் அறையில் படுத்துக் கொள், நான் தூங்குவதற்கு நேரம் ஆகும் நான் கொஞ்சம் படிக்க வேண்டும்.
அப்புறம் நடு ராத்திரியில் வந்து கதவைத் தட்டக் கூடாது.
தேனருவி பூவிழியைக் கிளப்புவதிலேயே குறியாக இருந்தாள். பின்ன தான் செய்ய நினைத்ததை செய்ய முடியாமல் போய் விட்டால் என்ன செய்வது?
ஏக்கா என்னைத் துரத்தி விடுவதில் குறியாக இருக்கிறாய்? உன் பெஸ்ட்டி கூட பேச வேண்டுமா?
என்ன பெஸ்ட்டி யா? அதெல்லாம் ஒருத்தரும் இல்லை. நீயாக கற்பனைக் குதிரையை பறக்கவிடாதே போடி.
அப்படி இருந்தாலும் என்னிடம் சொல்லுக்கா நான் அம்மாவிடம் சொல்ல மாட்டேன். எனக்கும் ரூட்
கிளியர் ஆகும்ல.
போ அப்படி வந்தா சொல்கிறேன்.
பூவிழி சென்றதும் கதவைத் தாழ்போட்டு விட்டு இவள் என்ன இத்தனை கேள்வி கேட்கிறாள், எல்லாம் இந்த நிழலாள் வந்தது.
அதற்குள் யூடிப்பில் பார்த்தது படி எலுமிச்சை பழத்தை எடுத்து சிவப்பு தடவி தனது கட்டில் சுற்றியும் வைத்தவள். ஒரு எலுமிச்சம் பழத்தை தனது தலையனை அடியில் வைத்து விட்டு பழைய செருப்பு பிஞ்சு போன சீமாறு என்று அவளின் கட்டிலைச் சுற்றி வேலி போட்டவள். இதை எல்லாம் மீறி நீ எப்படி என்னிடம் வருகிறாய்? பார்த்து விடுகிறேன். நிழல் நீயா? நானா? என்று அவளாகப் பேசியவள் படுத்து விட்டு இப்போது சுற்றியும் பாதுகாப்பு வைத்த தைரியத்தில் அந்தப் பேய் புக்" நீ உடல் நான் நிழல் "
அதை எடுத்து படித்துக் கொண்டு இருந்தாள்.
அடிப்பாவி மறுபடியும் இதை எதற்கு எடுத்து கட்டிலில் வைத்து படித்துக் கொண்டு இருக்கிறாய்? என்று மனசாட்சி எட்டிப் பார்க்க.
அவளோ அதைத் தள்ளி விட்டு, ச்சை அது தான் இத்தனை பாதுகாப்பு நடுவில் உட்கார்ந்து இருக்கிறேன். அதெல்லாம் வந்த வேகத்தில் திரும்பி ஓடி விடும்.
தேனருவி நீ இத்தனை புத்திசாலியா? அச்சோ செல்லம் கண் பட்டுப் போகும் என்று அவளே அவளைக் கொஞ்சிக் கொண்டாள்.
( அடியே நிழல் இருப்பதே இந்த புக்கில் தான் இருக்கிறது. இதை யார் இவளிடம் சொல்வது? கல்லூரிக்குப் போகும் போது இவள் கீழே விழுந்து அது வந்து இவள் மேல் ஏறிவிட்டது என்று இவள் நினைத்துக் கொண்டு இருக்கிறாள்.)
அது ஜாலியா? புக்கில் தான் இருக்கிறது. சாரி தூங்குகிறது என்று நிழல் வந்து அவளின் காதுக்குள் சொன்னது.
நீ ரொம்ப புத்திசாலி தான் உன் அறிவை மெச்சி நாளைக்கு உன் வாத்தியார் பேப்பர் கொடுக்கும் போது தெரியும்.
தூங்கிக் கொண்டு இருந்தாள். தேனருவி கையில் விரித்து வைத்த இருந்த புத்தகத்தில் இருந்த நிழல் வந்து அவளிடம் தகவல் சொல்லி விட்டு சென்றது.
அசதியில் நன்கு தூங்கி விட்டாள். காலையில் பூவிழி வந்து கதவைத் தட்டும்போது தான் நினைவு வந்து கதவைத் திறந்து விட்டாள். தினமும் திறப்பது போல் பிறகு தான் நினைவு வந்தவள் திரும்பி தனது அறையைப் பார்த்தாள்.
பார்த்தவள் தான் செய்து வைத்த எதுவும் இல்லை. அவை எல்லாம் எங்கே போச்சு நான் தானே வைத்தேன். இப்போது தான் கதவைத் திறக்கிறேன். என்று ஓடிச் சென்று கட்டிலைச் சுற்றி சுற்றி பார்த்தாள்.
தேனுக்கா இது என்ன புது ஐடியா கட்டிலைச் சுற்றி சுற்றி ஓடுகிறாய்? கட்டில் அருகில் கீழே குனிந்து தண்டால் எடுக்கிறாய்?
தொடரும்...
அடிப்பாவி நான் செய்வது உனக்கு தண்டால் எடுப்பது போலவா? இருக்கிறது. அவள் கடை பரப்பி வைத்தது எல்லாம் எங்கே சென்று இருக்கும். தேவ் பேப்பர் கொடுப்பது எல்லாம் அடுத்த பதிவில்..