• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
348
நீ உடல் நான் நிழல்
பாகம் - 69


விஜயலதா வனிதா இருவரும் காலையில் அனைவரும் எழுந்து கொள்ளும் முன் எழுந்தவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் சுற்றிலும் நோட்டம் விட்டுக் கொண்டே இருவரும் பின்புறமாக மோதிக் கொண்டனர்.

பயத்தோடு திரும்பி பார்க்கவே பயந்து கொண்டு இருவரும் போர்வை கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டு இருந்ததால் இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்து ஏய் நீ திருடனா இந்த வீட்டில் திருடுவதற்கு எதுவுமே இல்லை என்று விஜயலதா சொல்லவும்,

வனிதா புரிந்து கொண்டாள். "ஓ நீங்கதானா அதுதான் திருடுவதற்கு ஒன்றும் இல்லை அப்புறம் எதுக்கு முக்காடு கட்டிட்டு வந்து இருக்கீங்க"?

ஏன் நீ என்னடி பண்ற இங்க?

"நீங்க என்ன பண்றீங்க அதை சொன்னீங்கன்னா நானும் சொல்றேன்" ...

நான் என்ன வேணா பண்ணுவ இது என்னோட வீடு.

"அப்புறம் திருட்டுத்தனமா தலையில் முக்காடு போட்டு வந்தீங்க உங்க வீடு தானே சுதந்திரமா வர வேண்டியதுதானே!!"

அது என்னோட இஷ்டம்டி நீயே அதை பத்தி கேக்குற நீ இங்க என்ன திருட வந்த உனக்கு என்ன உரிமை இருக்குது.

இது எங்க அக்கா வாக்கப்பட்ட வீடு அதுவும் மூத்த மருமகள், அதனால அந்த உறவில் நான் வரேன்.

உனக்கு உங்க அக்கா தான் மூத்த மருமக ஆனால் நான் இந்த வீட்டு இளைய மருமகள்..

நேத்து எப்படி இளைஞ்சு வளைந்து போய் புண்ணாக்கு சட்டிக்குள்ள உட்கார்ந்து இருந்தீங்களே அதை நினைச்சா எனக்கு இப்பவும் சிரிப்பா வருது அது எப்படி எப்ப பார்த்தாலும் வித்தியாசமா நீங்க யோசிச்சு..

உங்களுக்கே "வினையா வச்சிக்கிறீங்க ஆனால் அது எங்களுக்கு என்டர்டெயின்மெண்டா இருக்குது "..

நீங்களா ஒரு பிளான் போடுறீங்க அதுல நீங்களே சொதப்பிக்கிறீங்க ?அப்ப நீங்க மூக்கடி பட்டு நிக்கறீங்களே அதுதான் பா செம காமெடி ஆனாலும் நீங்களும் வில்லி ரேஞ்சுக்கு பண்றீங்க? அது கடைசியில சரியான காமெடி பீஸா இருக்கு இதே நிலைமை நீடித்தா உங்களுக்கு பட வாய்ப்பு கூட வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பேசாமல் இதை ரீல்சா போடுங்கள் நிறையா வீவ்ஸ் வரும்.

"ஏய் என்னடி வாய் கொழுப்பா" உனக்கு? நீயும் தான் இல்லாதயும் பண்ணி மூஞ்சி கூட கொப்பரை தேங்காய் மாதிரி வீங்கிக் கிடந்தது ."என்னமோ எதுவுமே தெரியாத பாப்பா மாதிரி ரொம்ப துள்ற இப்ப வரைக்கும் நீயும் பிளான் பண்ணிட்டு இருக்கேன்னு எனக்கும் தெரியும் ஆனால் நீ வந்த சோலிக்கழுதை என்னவோ அதை பாரு நான் என்ற வேலை பார்க்கிறேன் என்று மூஞ்சியை திருப்பினாள்.

அப்படின்னா நீங்க இடத்து காலி பண்ணுங்க எனக்கு சோளி கழுதையே இங்க தான் இருக்குது.

போடி நான் தான் இந்த வீட்டுக்கு சொந்தமானவள் நான் தான் நீ போ அகட்டால அதெல்லாம் முடியாது நான் தான் போவேன் சரி ரெண்டு பேரும் ஒரே இடத்திற்கே போறோம் அதுக்கு நம்ம கிட்ட எதுக்கு சண்டை வா ரெண்டு பேருமே போகலாம் என்று இரண்டு பேரும் இப்போது முக்காட்டை எடுத்துக் கொண்டு சிசிடிவி பார்க்க உள்ளே சென்றனர் .

இது எப்படி ஆபரேட் பண்றது உனக்கு தெரியுமா? நேத்து நம்ம வீட்ல நடந்த சம்பவம் எனக்கே ஆச்சரியமா!! இருக்குது .யாரோ எனக்கு உனக்கோ யாருக்குமே தெரியாம நம்ம வீட்டுக்குள்ள வந்துட்டு போறாங்க என்கிறது எனக்கு ரொம்ப நாளாவே டவுட்டா இருக்குது .

ஆனா இப்பத்தான் அது உறுதியாச்சு அதனாலதான் இதை பார்க்க வந்தேன் .ஆமா நீ எதுக்கு இந்த பக்கம் வந்த என்று விஜயலதா கேட்கவும் வனிதா எனக்கு உங்கள மாதிரியே சந்தேகம் வந்துச்சு அதனால தான் பார்க்க வந்தேன்.

சரி இது எப்படி ஓபன் பண்றதுன்னு உனக்கு தெரியுமா?

அது எனக்கு தெரியுமே என்று எப்படியோ அதை ஓப்பன் செய்து பார்த்தார்கள்.

ஆனால் உண்மையில் இருவருமே பயந்துவிட்டனர். வெறும்பாட்டு மட்டும் வந்து கொண்டு இருந்தது .

உருவம் தெரியவே இல்லை ஆனால் வாமா மின்னல் அப்படிங்கிற மாதிரி ஒரு உருவம் போயிட்டு போயிட்டு வந்துட்டு இருந்தது.

அதை அவங்க இரண்டு பேரும் பார்க்கலாம் என்று முயற்சி செய்யும்போது இவர்களின் உருவம் தான் அதில் தெரிந்தது.

விஜயலதா கிருஷ்ணவேணி அம்மாவின் அறைவாசல் முன் எண்ணையை ஊற்றுவது அதில் தெளிவாகத் தெரிந்தது.

ஆனால் சிறிது நேரத்தில் அவ்விடத்தில் இருந்த என்னை மறைந்திருந்தது. விஜயலதா காலுக்கடியில் அது எப்படி வந்தது என்று தெரியவில்லை.

அங்கிருந்து சறிக்கி விட்டுநேராக சென்றாள் அந்த படிக்கட்டுகளில் உருண்டு டொக்கு டொக்கு டொக்குன்னு போய் நேரா புண்ணாக்கு அண்டாக்குள் விழுந்தால்.

அதை பார்த்து இப்போது வனிதா சிரி சிரி என்று சிரித்துக் கொண்டிருந்தாள். அக்கா உண்மையிலுமே செம காமெடி சீனுக்கா நான் உண்மையில் நினைக்கவே இல்ல தெரியுமா?

நான் ஏதோ புது வகையா ஒரு மிருகம் வந்து இருக்குதுன்னு தான் நினைச்சுட்டேன்.

ஆனா நெஜமா பாக்குறதுக்கு அப்படித்தான் இருந்தது. தெரியுங்களா? என்னால நினைச்சு நினைச்சு சிரிப்பு அடக்க முடியல அப்புறம் மாடசாமி தடி எடுத்துட்டு உங்க பக்கத்துல வர பயந்துருக்காங்க..

என்னடானு ஆகிப்போச்சு எங்களுக்கெல்லாம் ஆனா தைரியத்தை வரவழைத்து விட்டு உங்க மண்டையில் ஒரு போடு போட்டான் பாரு அப்ப நீங்க சுருண்டு விழுந்தீங்களா? அப்பம் கூட உங்க பக்கத்துல வர எல்லாத்துக்கும் பயம் போய் கயிறை துலாவுகிறாங்க அப்புறம் பக்கத்துல வந்து பார்த்தால் உங்க மூஞ்சி நல்ல வேலை நேற்று சின்ன மாமா இல்ல இருந்திருந்தால் பயங்கர காமெடியா இருந்து இருக்கும்.

அதுவே இல்ல நீ வேணும்கிற அளவுக்கு நேத்து சிரிச்சிட்டீங்க இல்ல இன்னும் எதுக்குடி அதையே சொல்லி சொல்லி சிரிச்சிட்டு இருக்க எனக்கு செம காண்டாகுது தெரியுமா ?நானே என்னமோ நடக்குதுன்னு பயந்துட்டு இருக்கேன். நான் ஒன்று நடத்தினால் அது எனக்கே வந்து வினைய முடியுது என்று விஜயலதா புலம்பவும்.

ஆமா நீங்க எதுக்கு கிருஷ்ணவேணியத்தை ரூமுக்கு முன்னால விளக்கெண்ணெய் கொண்டு போய் ஊத்துறீங்க? "என்னமோ பிளான் பண்ணி தானே பண்ணி இருக்கீங்க" ஆனா நீங்க நினைச்சு பார்த்திருப்பீங்களா? அது உங்க கால்லயே வந்து சிக்கும் நீங்க அதுல சிக்கி கீழே விழுவீங்களா? நினைச்ச பாக்கல தானே ஆனா அதை எப்படிங்க அங்க நீங்க ஊத்துனது உங்க காலுக்கு அடியில் வந்தது.

அதை பாக்குறதுக்கு நீங்க இப்போ சிசிடிவி பார்க்க வந்தீங்க??

ஆமா ஆனா நீ என்னத்த பாக்க வந்தாய்?

நான் சும்மா வந்தேன் இந்த பக்கம் நீங்க வர்றதை பார்த்தது சரி என்னமோ அக்கா தனியே நம்மளுக்கு தெரியாம மறுபடியும் பிளான் பண்றாங்களா? அப்படின்னு வந்தேன்.

ஆனா உன்னை பார்த்தா அப்படி தெரியலையே? நைட் பூரா ஏதோ பேய் கூட குடும்பம் நடத்தனுவ மாதிரி வர்ற.

என்னது எனக்கு என்ன கல்யாணமாகி இருக்குது பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க?

"நீங்க தான் உங்க புருஷன் கூட குடும்பம் நடத்தாமல் உங்க பையனையும் மறந்துட்டு இல்லாத வில்லத்தனம் வேலை எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க."

"நீ கண்டயாடி நான் என் பையன பாக்கலன்னு அதெல்லாம் நான் என் பையனும் பத்திரமா தான் பாத்துக்குறேன்.

ஆமாமா அதையும் நாங்க தானே பார்க்கிறேன். முக்காவாசி நேரம் அத்தை வைத்திருக்கிறார்கள். இல்லாட்டி எங்க அக்கா வச்சுட்டு இருக்காங்க உங்களுக்கு வில்லத்தனம் பண்றதுக்கு நேரம் அளவா இருக்கிறதாச்சே இதுல எப்படி பையனை பார்த்துக்கொள்வது.

இருங்க நீங்க இன்னும் அத்தை ரூம் முன்னால எண்ணெய் ஊத்துனது சிசிடி ல் பதிவா இருக்குதுல்ல .

நான் போய் இதை முதல் வேலை எல்லார்த்து கிட்ட சொல்லணும். உங்கள மாட்டி விடல என் பேரு வனிதா இல்லை.

வனிதா ப்ளீஸ் டி சொல்லாதடி நீ என்ன கேட்டாலும் நான் உனக்காக ஹெல்ப் பண்றேன்டி.

நிஜமாவா சொல்றீங்க ?

ஆமாண்டி நெஜமாவே சொல்றேன். உங்க அக்காவை விட எனக்கு உன்னை தாண்டி ரொம்ப புடிச்சி இருக்கிறது.

இது கேட்கறதுக்கு நல்லாத்தான் இருக்குது ஆனா நீங்க எப்ப வேணா ஆளு மாறுவீங்களே..

உங்க தங்கச்சி கூடவே அந்த போடு போடுகிறீர்கள், நான் எல்லா உங்களுக்கு எந்த மாத்திரம்.

நிஜமான் தாண்டி சொல்றேன். உனக்கு என்ன தேவ் ஆனந்த் நீ கல்யாணம் பண்ணிக்கோணம் அவ்வளவுதானே உனக்கு நான் நிறைய பிளான் வைத்திருக்கிறேன்.

தாலி கட்ட வரைக்கும் இருக்குது அப்படியே தாலி கட்டிட்டு கூட அவளை விரட்டி விட்டு போட்டு நீ தேவ் ஆனந்த் கூட வாழ்வியம்மா சரியா நான் நிறைய பிளான் பண்ணி வச்சிருக்கிற நீ அதை சரியா எங்க தங்கச்சி தான் சொதப்பிட்டா ஆனா நீ அதை சரியா ஃபாலோ பண்ண வச்சுக்கோ தேவானந்தா உனக்கு தான் நல்ல எழுதி வச்சுக்கோ உன்ற மண்டையில்.

அக்கா நெஜமாவா சொல்றீங்க? நான் உங்களை நம்பலாமா?

"தாராளமா நம்பலாம்" டி என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டு இருடி என்னையவே மிரட்டுகிறாயா? உன்னைய எப்படி சிக்க வைக்கிறேன்.

இந்த வீட்டைவிட்டு உன்னை எல்லாம் கழுத்து புடிச்சு தள்ளற மாதிரி உனக்கு பிளான் பண்ணி கொடுக்க போறேன். பாரு அதுல சிக்கி எங்க தங்கச்சி யாவது ஒரு நல்லவனா சிக்குனா "உன்னை பாரு சாக்கடைக்குள்ள தள்ளி விடுறேன்" என்று மனதுக்குள் கொக்கரித்துக் கொண்டாள்.

அப்படின்னா நீங்கள் எனக்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்லிட்டீங்க ?

அதனால நீங்க அத்த ரூமுக்கு முன்னால விளக்கெண்ணெய் ஊற்றுவதை அழித்து விடலாமா?

நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன். அதே மாதிரி நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணனும் டீல் ஓகே என்று கைபை அடித்தாள்.

எவ்வளவு கேணச்சியா இருக்குற இவளவெச்சே இன்னும் நிறைய பிளான் பண்ணி அடியே வானதி உன் தங்கச்சி வச்ச உன் கண்ணுக்குள்ள விரலை வைத்து ஆட்றேன்டி .

நான் தாண்டி எப்பவுமே இந்த வீட்டை ஆளப் பிறந்தவள்.

அங்கு கரெக்டாக நிழல் ஆஜரானது அட ரெண்டு வில்லச்சிகளும் ஒன்று சேர்ந்துட்டீங்களா?

நீங்க எத்தனை அழித்தாலும் பார் இன்னைக்கு டிவில இது ஒளிபரப்பாகுற மாதிரி நம்ம பண்ணி விடுறேன். அது உங்க வீட்டு டிவில நியூஸ் போடும் போது மட்டும் வர மாதிரி.

உங்க பிளான் பூரா இப்போ என்னோட ரெக்கார்ட்ல பதிவு ஆயிருச்சு நீங்க ரெண்டு பேரும் தொலைஞ்சீங்க .எந்த நேரத்தில் எப்படி போட்டு கோர்த்து விடுவனுங்கறது இனி நான் கட்டம் கட்டி வைச்சு இருக்கிறேன். நீங்க ரெண்டு பேரு சிக்கிடீங்க.

இன்னைக்கு எபிசோடு முழுக்க நீங்களே வந்துட்டீங்க எனக்கே போர் அடிக்குது நாளைக்கு தேவ் ஆனந்த் தேன் அருவி பூவிழி யசோதா எல்லாரும் மதுரைக்குப் போக போறாங்க ஆலா மிட்டாய் சாப்பிட போறாங்க.. உங்களுக்கு வேணுமா..



தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top