• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
354
நீ உடல் நான் நிழல்
பாகம் - 63


அமைச்சர் காத்தவராயன் தனது முகத்தில் முக கவசம் அணிந்து இருந்தார் .

அவரின் ஆறு விரல் அல்லக்கைகள் தலைவா ?என்ன முக கவசம் அணிந்து இருக்கிறீர்கள்? என்று கேட்டனர்.

அட என் நண்பன்களா என்ற வாயில் சுவற்றில் ஊரும் பல்லி உச்சா போய்விட்டது .அதுதான் அதிலிருந்து தண்ணியா வடியுது அதனால நான் உங்களுக்கு எல்லாம் பரவ கூடாதுன்னு மாஸ் போட்டு இருக்கேன் டா.

அப்புறம் உங்களுக்கெல்லாம் ஒரு சந்தோஷமான செய்தி வைத்திருக்கிறேன் டா.

என்ன தலைவரே சொல்லுங்க இன்னைக்கு எல்லாரும் எங்க தோட்டத்து வீட்டுக்கு வாங்கடா உங்களுக்கு எல்லாத்துக்கு பெரிய விருந்து வைத்திருக்கிறேன். நிஜமாவா தலைவரே இப்ப படத்துல ஃபேமஸான நடிகை வருவாளா அப்ப எங்களுக்கெல்லாம் ஜாலிதான் என்று குதூகளித்தனர்.

ஆமாண்டா வந்தா தான் தெரியும்டா நாளைக்கு நீங்களும் எல்லாரும் முகத்தில் மாஸ்க் தாண்டா போட்டுட்டு சுத்துவீங்க என்று மனதில் நினைத்தவராக வெளியே சிரித்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.

கவர்னர் மாளிகை வந்ததும் இப்போது காரை விட்டு இறங்கிவிட்டார். அங்கே பத்திரிகையாளர் சூழ்ந்திருக்கும் நிலையை கண்டவர் தன்னால் இப்போது வாய் திறந்து பேச முடியாது என்பதை உணர்ந்து கையசைத்துக் கொண்டே உள்ளே சென்று விட்டார்.

கவர்னரை பார்த்ததும் வணக்கம் வைத்துவிட்டு தான் என்ன பேச வந்தோம் என்பதை சொல்ல முடியாமல் தவித்தார் அவருடைய பிஏவை பார்த்து நீயே பேசு என்பது போல் சிக்னல் கொடுத்தார் இவரின் முகத்தையே சந்தேகமாக பார்த்த கவர்னர் என்ன ஆச்சு வாய்க்கு என்று சைகையில் கேட்டார்.

அதற்கு பி. ஏ வும் அவருக்கு இன்பெக்ஷன் ஆகி விட்டது சார் அது தான் உங்களைப் பார்த்து தொகுதி நிதியை விடுவிக்க வேண்டும் என்று கேட்பதற்காக வந்து இருக்கிறார்.

அந்த நேரம் பார்த்து காத்தவராயனுக்கு தும்மல் வந்து விட்டது. அவருக்கு தும்மல் வந்தால் மிகவும் சத்ததோடு வரும் அப்போது அவரது முகத்தில் இருந்த மாஸ்க் பிய்ந்து விட்டது.

அவரின் உதடுகள் இரண்டும் பெருசாக வீங்கி இருந்தது. அவரது முகத்தில் அந்த உதட்டைப் பார்த்து விட்டு அங்கே இருந்த அனைவரும் சிரித்து விட்டனர்.

ஆறுவிரல் அல்லக்கைகள் அனைவரும் தலைவரே இது என்ன எதிலையோ? உங்க உதடு சிக்கி சின்னபின்னமாகி இருக்குது. என்று நேரம் காலம் தெரியாமல் கால் வாரி விட.

கொத்தவரங்காய் நினைத்து பார்த்தது. தன்னைக் கண்டு பம்மிக் கொண்டு இருந்தவர்கள் எல்லாம் ஏளனமாகப் பார்த்து சிரிக்கிறமாதிரி ஆகிவிட்டத்தே
நிழலா உன் சாவு என் கையில் தான் என்று சூழுரைத்து அங்கே இருந்து விடைபெற்றார். ஆனால் முகத்தை துண்டு கொண்டு மறைத்துச் சென்றார்.

அனைவருக்கும் வெளியே தெரிந்து விட்டால் மீம்ஸ் மன்னன் வடிவேலுவை விட நெட்டிசன்கள் வைச்சு செய்வார்களே அதனால் தான் தன் மூக்கோடு துண்டு வைத்து மறைத்துக் கொண்டு காருக்குள் சென்று அமர்ந்து கொண்டார்.

தேவ் ஆனந்த் கிளிம்பி வந்தவன் தேனருவியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

யசோதா அப்போது தான் கடைக்குச் சென்று வந்து இருந்தார்.

அத்தை நீங்க எதுக்கு கடைக்குப் போனீர்கள். என் ப்ரண்ட் கடைக்கு
வாட்சாப் லிஸ்ட் அனுப்பினால் அவர்களே டோர் டெலிவரி செய்வாங்க .

மாப்பிள்ளை அது நாம் போய் பார்த்து எடுப்பது மாதிரி இருக்குங்களா? என்று தேவ் ஆனந்திற்கு குடிப்பதிற்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.

அத்தை நான் இன்றைக்கு தேனருவியை அழைத்துக் கொண்டு வெளியே சென்று வருகிறேன். அப்படியே பூவிழியும் அழைத்துச் சென்று வருகிறேன்.

ஆமாங்க மாப்பிள்ளை நானே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

நீங்கள் மதுரைக்கு ஏதாவது போகும் சோலி இருந்தது என்றால் சொல்லுங்க தேனருவிக்கு நகை எல்லாம் கொஞ்சம் புது மாடல்களாக பார்த்து எடுக்க வேண்டும்.

நாங்களே மூன்று பேரும் போய் எடுக்கலாம் தான் ஆனால் கூடத் துணைக்கு ஒரு பாதுகாப்பு இல்லை அது தான் எங்கள் அக்கா மருமகள் நித்யா சபரி
அழைத்துக் கொண்டு போகலாம் தான். இருந்தாலும் அவுங்க கம்பெனி பார்க்கவே நேரம் இருக்கிறதோ? என்னவோ? வருவதற்கு சௌகரியப்படுமா?
தெரியவில்லை அது தான் உங்களுக்கு நேரம் இருந்தால் இன்றே நான் பணம் கொடுத்து அனுப்புகிறேன். உங்களுக்கும் பிடித்த மாதிரி தேனருவிக்கும் பிடித்த மாதிரி நகை எடுத்துக் கொண்டு வாருங்கள்.

அத்தை நீங்க என்னைத் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். என்னடா இவர் இப்படி பேசுகிறார் என்று நினைத்து கொள்ளாதீங்க.

என்னங்க மாப்பிள்ளை சொல்ல வருகிறீர்கள்? எனக்கு ஒன்றும் புரியவில்லை.

அத்தை நீங்க எனக்குத் தேனருவியை மட்டும் கட்டிக் கொடுத்தால் போதும். அவளுக்கு நகை போடுங்கள் வரதட்சினை கொடுங்க என்று எல்லாம் நான் கேட்கவில்லை. நானும் அவளும் தான் சேர்ந்து வாழப் போகிறோம். நகையோ? பணமோ? சொத்தோ? அது எல்லாம் வேண்டாம்.

மாப்பிள்ளை அதில்லைங்க என்ன இருந்தாலும் நாங்க பொண்ணுக்குச் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும் நாலு சனம் என்ன சொல்லுவாங்க.

அத்தை நாலுசனம் என்ன சொல்லும் என்று வாழநினைத்தால் நம் நிம்மதி தான் போய் விடும். போலி வாழ்க்கை தான் வாழ முடியும்.

சரிங்க மாப்பிள்ளை நான் உங்க அப்பா அம்மாவை கலந்து ஆலோசித்துக் கொள்கிறேன். இருங்க மாப்பிள்ளை நான் சாப்பிடுவதற்கு ஏதாவது செய்கிறேன் என்று சமையல் அறைக்குள் சென்று விட்டார்.

தேவ் ஆனந்த் நாம் வந்து இத்தனை நேரம் ஆச்சு ஹனிபால்ஸ் காணவில்லை என்று வீட்டைச் சுற்றி அவளைத்தான் தேடினான்.

அம்மா என்று கத்திக் கொண்டு ஓடி வந்தாள் தேனருவி அவள் கண்டாளா? தேவ் ஆனந்த் வந்து உட்கார்ந்து இருப்பான்.

அவளைத் துரத்திக் கொண்டு வந்தாள் பூவிழி இரண்டு பேரும் ஒரு சுடியை வைத்துக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டு இருந்தனர்.

ஏய் பூ குடுடி இதை நான் இன்னும் போடவே இல்லை. நான் ஒரு தடவை போட்டு விட்டு உனக்கு கொடுக்கிறேன்.

தேனுக்கா உனக்குத் தான் இந்தக் கலர் பிடிக்காது என்று எனக்கு கொடுத்து விட்டாயே இப்போது நீ வேண்டும் என்று சொன்னால் உடனே நான் தூக்கி கொடுக்க வேண்டுமா??

யசோதாவிற்கு இரண்டு பேர் மண்டையில் கொட்ட வேண்டும் போலவே இருந்தது. கழுதைகள் இரண்டும் ஒரு சுடிதாருக்கு இப்படி சண்டை கட்டிக் கொள்கிறார்கள். மாப்பிள்ளை என்ன தான் நினைப்பாரு என்று
அவர்கள் இருவரையும் கையில் இருக்கும் கரண்டியில் அடித்து விட தான் வெளியே வந்தார்.

இவர்கள் இருவரும் சண்டைக் கட்டுவதை தேவ் ஆனந்த் வீடியோ எடுத்துக் கொண்டு இருந்ததைப் பார்த்து அவருக்கு சிரிப்பு வந்து விட்டது.

யசோதா சிரிப்பதைப் பார்த்து இரண்டு பேரும் அம்மா இங்கே பாருமா தேனுக்கா அன்றைக்கு வேண்டாம் என்று கொடுத்ததை இன்றைக்கு வேண்டும் என்று கேட்கிறாள்.

அம்மா நீ என்னமோ சொல்லிக்கோ எனக்கு இன்றைக்கு இந்தச் சுடி தான் வேண்டும்.

இரண்டு பேரும் அதை வைத்து விட்டு தேனருவி நீ சேலை கட்டு பூவிழி நீ தாவணி பாவாடை போடு போ என்று அவர்கள் இரண்டு பேரும் ஆளுக்கொரு பக்கம் இழுத்துக் கொண்டு இருந்த சுடிதாரை வாங்கி விட்டார்.


யசோ சேலை கட்டச் சொல்லி விட்டாய். ஆனால் அதைக் கட்டத் தெரியாதே அதனால் நீயே வந்து கட்டி விடு.

பூவிழி உடனே திருமணத்திற்கு பிறகு யார் கட்டி விடுவா? அதுவும் அது அதர பழசான ஊர் நீ தினமும் சேலை தான் கட்ட வேண்டும் என்று பழிப்பு காட்ட.

தேனருவி அடியே கிறுக்கி யார்? வாழப் போகும் ஊரைப் பார்த்து அதர பழசு என்று சொன்னாய். அதெல்லாம் நான் போய் அந்த ஊரில் கால் வைக்கும் நேரம் பெரிய சிட்டியா மாறி விடும்.

ஆமா நீ பெரிய அப்பாடக்கரு ச்சூ ஓடிப் போய் விடு என்று பூவிழி தேனுவைத் திட்ட.

பூவு கொஞ்சம் கூட அக்கா என்ற மரியாதை இருக்கா உனக்கு.. நான் கூட உனக்கு எதிர்காலத்தில் டீச்சரா வரலாம் அப்போது உன் பேப்பரில் எல்லாம் முட்டை போட்டு வைப்பேன் பார்த்து நடந்து கொள்டி.

ஆமா முதலில் உன் பேப்பர் எல்லாம் அரியர் வைக்காமல் எழுதி முடிக்கப் பார்.. மாமா காலேஜ் என்று பரிட்சை எழுதாமல் பாஸ் ஆகி விடலாம் என்று நினைத்து விடாதே. அவர் எப்போதும் ஸ்ரிக்ட் ஆபீசர் தேனுக்கா இங்கே அம்மாவை ஏமாற்றி டிமிக்கி கொடுப்பது போல் அங்கே எல்லாம் டிமிக்கி கொடுக்க முடியாது.

ஹே பூவு உனக்கு என்ன யாருக்குமே தெரியாது எனக்கு ஏழாவது அறிவு இருக்குது. அதெல்லாம் முன்கூட்டியே எது நடப்பதா இருந்தாலும் தெரிந்து விடும். நீ எந்தப் புக்கில் இருந்து கேள்வி கேட்டாலும் அதுவும் எந்த மொழியில் இருந்தாலும் உன் அக்கா பதில் சொல்வேன் தெரியுமா? அதுவும் ஆவிகள் கூடப் பேசும் எக்ஸ்ட்ரா அறிவு இருக்கிறது.

அம்மா தேனுக்காவுக்குள் ஏதோ ஆவி புகுந்து விட்டது. அது தான் இப்படி பேசுகிறாள் என்று பூவிழி எடுத்துக் கொடுக்க.

இரண்டு பேரும் அரைலூஸு மாதிரி பேசாமல் போய் ஒழுக்கமா கிளம்புங்க போடி மாப்பிள்ளை வந்து எத்தனை நேரமாச்சு இரண்டு பேரும் சிண்டி பிடித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.

என்னது வாத்தி மாமா வந்துட்டாரா என்று தேனருவி அப்படியே ஸ்லோமோசனில் தலையைத் திருப்பி பார்க்க தேவ் ஆனந்த் இவளையே குறுகுறுவென பார்த்துக் கொண்டு இருந்தான்.

பூவிழி தேவ் ஆனந்த் பெயரைக் கேட்டதும் சுடிதாரும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று ஓட்டம் எடுத்து இருந்தாள். வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் தேவகோட்டையை அதர பழசு என்று சொல்லி விட்டாளே பிறகு அதை தேவ் ஆனந்த் கேட்டு விட்டால் என்ன செய்வது?

தேனருவியை தேவ் ஆனந்த் எவ்வளவு பிடிக்கும் அவளை வம்பு இழுப்பதிற்கு வேண்டி வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி இருக்கிறாளே அதை விட இரண்டு பேரும் சேர்ந்து ஒரு சுடிதாருக்கு சண்டைக் கட்டியது அதைப் பார்த்து அவர் என்ன நினைத்து இருப்பார்.

தேவ் ஆனந்த் வீடியோ? எடுத்தது கார்முகிலனுக்கு அனுப்பி வைக்கத்தான். உன் ஆளு என் ஆளை என்னம்மா? படுத்தி எடுக்கிறாள். இரண்டும் சிண்டு பிடிக்கத்தான் இல்லை சகலை என்று அனுப்பி இருந்தான்.

தேனருவி தேவ் ஆனந்த் பார்த்து இப்போது தான் வந்தீர்களா? கொஞ்ச நேரம் இருங்கள் சேலை மாற்றி விட்டு வந்து விடுகிறேன். என்று சொல்லி விட்டு ஓடிவிட்டாள்.

யசோதா தேவ் ஆனந்த் கிட்ட இந்த விளையாட்டுத் தனம் தான் எப்போது மாறும் என்று தெரியவில்லை என்று கூறினார்.

அத்தை தேனருவி இப்போது எப்படி இருக்கிறாளோ? அதே போல் இயல்பா இருக்க வேண்டும். போலியாக அவளால் இருக்க முடியாது. நானும் அதை விரும்ப மாட்டேன்.

தேனருவி யசோதா வை உள்ளே வரச் சொன்னாள். ஆனால் அவர் வெளியே மாட்டுக்கொட்டகை சென்று விட்டார்.

தேனருவியின் பின்னால் ஒருவர் உள்ளே சென்றார். அவர் யாரோ? அடுத்த பதிவில் பார்க்கலாம்.



தொடரும்..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top