Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 354
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 62
பாகம் - 62
டேய் மச்சான் இந்த வடக்குத்தானோட தொல்லையே தாங்க முடியலடா? ஏதோ கூவத்தில் கொழுந்தியா விழுந்தா என்று காப்பாத்துப்போனாமா டா அவனுக்கு நீச்சல் தெரியல கொழுந்தியா தப்பிச்சுட்டா இவன் செத்துப் போனான்.
அதனால் கொண்டு வந்து கல்லறைத் தோட்டத்துல வீசிட்டு போயிட்டாங்க டா சரி நம்மளுக்கும் பொழுது போகணுமே அப்படின்னு நல்லா வெண்ணையில் செஞ்ச கொழுக்கட்டை மாதிரி இருக்கிறானே. சேர்த்துட்டது ரொம்ப தப்பா போச்சு டா மச்சான் நிழலா மாறின பின்னால நீச்சல் அடிக்கணும் அதனால எனக்கு பொம்பள நிழல் தான் வேணும்னு சாவடிக்கிறான் டா அதுதாண்டா மச்சான் கோவத்துல மைனாக்கா அங்க பொணம் வெந்திட்டு இருந்ததா அந்த நெருப்பு எடுத்து அவன் வாய்க்குள்ள போட்டு விட்டுட்டா அது தான் டா இப்படி கோலம் போட்டுக்குறான். . எனக்கென்னமோ இவன் பேசுறத பாத்தா இவந்தே மும்பையில பாட்ஷாவா இருப்பானோ?
கிழிச்சானுவ இந்த மூஞ்சி போயி மும்பைக்கு தாதான்னு சொல்றியே ?நம்பர் மாதிரியா இருக்குது பானிப்பூரி திருடி தின்றவன் மாதிரி தெரியுதுடா .சரி நம்ம ஊரு பாஷை கேட்டு கேட்டு போர் அடிக்குது இவன வேணா காமெடி பீஸா வெச்சு செய்யலாம் என்று பார்த்தா,
இவன் நம்ம கிட்ட கீழ வேலை செய்ற நிழல் பேய்கள் எல்லாம் சங்கம் சேர்த்திட்டு இத்தனை நாள் இல்லாம இன்னைக்கு என்னை நாட்டாமை சேரில் உக்கார வச்சுட்டானே.!!அப்படித்தான் நம்ம நாட்டாமை நிழல் வந்துருச்சு அப்படின்னு ஏதாவது அப்பரண்டிஸ் நிழல்கள் மரியாதை கொடுக்கிறார்களா?
நான் வந்து இந்த சேர்ல உக்காந்ததுமே எனக்கு இளநீர் வெட்டிக்கிட்டு வர ஒன்னும் எவனாச்சிக்கு தோணுதா? நான் நேத்து பூரா என்ன வேலை செஞ்சிட்டு வந்தேன் உங்களுக்கு எல்லாம் தெரியுமாடா?
தமிழ்நாட்டு அமைச்சரே கண்ணுலையே நோண்டி நொங்கு எடுத்துட்டு வந்து இருக்கிறேன் .அதனால இந்த வடக்கு தான் எல்லாம் வெண்ணையில் செஞ்ச கொழுக்கட்டை என்ன என்னடா பண்ணி போடுவான்.
அவனுக்கு நீச்சல் அடிக்கணுமா நீச்சலு அவன வெச்சுதாண்டா நிறைய பிளான் போட போறேன்.
டேய் மச்சான் என்றா சொல்ற நீ அமைச்சர் வீட்டுக்கு போனியா? நீ ஏன்டா எங்களையெல்லாம் கூப்பிடவே இல்ல நாங்களும் வந்து இருப்போம் இல்ல எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசைடா.
என்னடா ?ஆசை உனக்கு?
டேய் நான் சொல்லுவேன் நீ தப்பா நினைச்சுக்க கூடாது சொல்லி தொலைடா அதுடா மச்சான் நான் தான் அமைச்சருக்கு ஒரு காரில் மேல ஒன்னு சிவப்புகலர்ல சுத்திட்டே போகும் இல்ல அதை எனக்கு வேணும்டா ..நானும் என் தலையில வச்சுட்டு எல்லாத்தையும் நைட்டுக்கு பயப்பட வைக்க வேண்டும் .
அடக்கப்போக்கத்தவனே இப்படி எல்லாம் உனக்கு ஆசை வரனும் அதை எல்லாம் எப்பவே எடுத்துட்டாங்க டா டேய்.
இந்த ஆம்புலன்ஸ் இருக்குதுல்ல அதுல போய் உட்கார்ந்துக்கோ?
இல்லடா மச்சான் அதுல எல்லாம் சரிப்பட்டு வராது டா. நாம வேற அல்பாய்ஸ்ல பல்பு வாங்கி செத்து போயிட்டோம். இப்போ நிழலா எல்லாம் சுத்திட்டு இருக்கிறோம். நிறைவேறதா ஆசையோடு...
ஆசையில அவனே எத்தனை ஆசையோட ஆம்புலன்சில் படுத்துட்டு போறாங்க ஆம்புலன்ஸ் டிரைவர்களும் அந்த உயர காப்பாத்தறதுக்கு எத்தனை கஷ்டப்படுறாங்க அதனால ஊழல் செய்யறவங்களை தாண்டா விரட்டனும். நல்லவங்களுக்கு நாம எப்பவுமே நிழல்கள் பாதுகாப்பா இருக்கோம்டா .
அதற்குள் இன்னொரு அப்பரண்டிஸ் பேய் டேய் அந்த காலத்து நிழல்கள் எல்லாம் நெஞ்ச நக்கிட்டே இருக்குதுடா என்னடா அரசியல் மேடையில் பேசுற மாதிரி பேசிட்டு இருக்காங்க என்ன இவங்க புதுசா நாட்டாமைத்தனம் பண்ணிடுவாங்க.
நாம வந்து வேடிக்கை பார்த்து என்டர்டைன் பண்ணலாம் அப்படின்னு வந்தா இது காமெடி பீசா கிட்ட பேசிட்டு இருக்கிறாங்க முதல் ரிமோட் எடுத்துட்டு வாடா அந்த சேனல் மாற்றலாம்.
அங்கே எவண்டா குசுகுசுன்னு பேசிட்டு இருக்குறது. இது என்ன உங்கவீடா ரிமோட் எடுத்து சேனல் மாற்ற நாங்க எல்லாம் 200 வருஷத்து நிழல்.
நீ நேத்து வந்தவனுக்கு இந்த இடம் போர் அடிக்குதா? மொதல்ல இந்த சேர் எங்க இருந்தது உனக்கு தெரியுமாடா? நிலாவிலிருந்தது அங்கேயே பெரிய சூறாவளி அடிச்சது அப்படியே பொத்துன்னு வந்து இங்க கல்லறைத் தோட்டத்துல விழுந்துருச்சு.
அதையே பாரம்பரியமா எங்கேயோ ஏலியன் தூக்கி வீசி இருக்கு எத்தனை நாட்ல இந்த சேர்க்கு போட்டி இருந்தது உனக்கு தெரியுமா ?
நம்ம நாட்டாமையாரும் ஒரு ஐநூறு வருஷத்துக்கு முன்னால பெரிய இளவரசியா இருந்தது. அதை முதல் தெரிஞ்சுக்கோ!!சும்மா எல்லாரும் போய் அந்த சேர் உக்காந்துற முடியாது சும்மா நொய் நொய்னு பேசிட்டு.
சைலன்ஸ் சைலன்ஸ்..
இங்கிலீஷ்ல யார்டா சொல்றது
இப்பதான் சொன்ன ஒன்லி தமிழ்..
நாட்டாமை நிழல் நீங்க மட்டும் இங்கிலீஷ் பேசுறீங்க நான் இங்கிலீஷ் பேசுவ தங்கிலீஷ் பேசுவ எல்லா பேசுவ அது நான் மட்டும் தான் பேசுவேன் ஆனா நீங்க எல்லாம் பேசக்கூடாது ஏன்னா இந்த சேர்ல உட்கார்ந்து பாருடா அதன் மகிமை எல்லா மொழி தெரிந்திருக்கும் அதனால் என்னங்க நாட்டாமை உங்களுக்கு தான் எல்லா மொழியும் தெரியுமே நாங்க இங்கிலீஷ்ல பேசுறோம் கன்னடத்துல பேசுறோம் தெலுங்குல பேசுறோம் மலையாளத்துல பேசுறோம் நீங்க எல்லாத்துக்கும் அர்த்தம் கண்டுபிடித்து சொல்லுங்களேன்.
நான் என்ன டிக்க்ஷனரியாடா இல்ல google ஆ எல்லாத்துக்கும் அர்த்தம் கண்டுபிடித்து சொல்லிட்டு நானே எல்லாமே பண்ணிட்டு இருந்தா அப்புறம் அத்தனை கம்பெனி வைத்து நடத்துற முதலாளி எல்லாம் நட்டத்துல போய் இரும்டா.
அப்புறம் நட்டத்துல போகுதுன்னு சொல்லிட்டு அவனுக்கு மண்டைய பிச்சிட்டு என்ன பண்றது அப்புறம் எல்லாருமே செல்போனை வச்சிக்கிட்டு கிடக்குறாங்க.
அதுதான் நாட்டாமை நாமளும் புதுசா ஏதோ ஆப்பிள் போன் வந்திருக்குதாமா அதை வாங்கிக்கலாம் நாட்டாமை.
ஆப்பிள் போய் ஏண்டா. ஆப்பிளுக்குள் போய் தேடணும் நாம போய் ஆப்பிள் தோட்டத்தில் உட்கார்ந்து கொண்டு சாப்பிடலாம் டா போன் குள்ள போயி ஆப்பிள் துளாவாட்டி இன்னும் போன் குள்ள போய் ஆப்பிள் மட்டும்தான் தொலாவ முடியும் மரத்துல போய் உட்கார்ந்து கொண்டம்னா நிறைய பழங்கள் சாப்பிடலாம் கொய்யாமரத்துல கொய்யா சாப்பிடலாம் மாங்கா மரத்துல மாங்காய் சாப்பிடலாம் டா பணம் கொட்ட மண்டையா.
நாட்டாமை நீ நேத்து அமைச்சர் வீட்டுக்கு போனேன்னு சொன்னியே அங்க ஏதாவது பாரின் சரக்கு எடுத்து அடிச்சிட்டியா?
உங்க தீர்ப்பு இன்னைக்கு ஏதுக்குவே முடியல சரக்கடித்த பன்னாட மாறியே பேசிட்டு இருக்கிறாயே.?
டேய் மச்சான் என்னை இப்படி சந்தேகப்பட்டுட்டியே நீ நான் அப்படியெல்லாம் ஒண்ணுமே பண்ணல டா அந்த காத்தவராயன் வாயை என் வாய்கிட்ட கொண்டு வந்து வச்சான்டா அதுதாண்டா அந்த 108 கிழவியோட பல்லு செட்ட வச்சிட்டு போய் இருந்தேன்.
அதுல வெச்ச அவன் உதட்டை தாண்டா கடிச்சு வச்சுட்டேன்.
டேய் ஏன்டா மச்சான் இப்படி பண்ணுன. அவனே! ஏற்கனவே போதையில் தான் இருந்திருப்பான் நீ அவனை கடிச்சதனால அவன் வாயிலிருந்து போதை எல்லாம் உன்ற வாய்க்குள்ள வந்துருச்சுடா.
டேய் என்னடா சொல்ற நெஜமாவா டா அப்படி கூட ஆகுமாடா நமக்கு என்ன வாய்க்குள்ள இருந்த உமிழ் நீரா இருக்குதுடா. அந்த பல் செட்டு தான் டா நாமலே நிழலா ஆச்சு நம்ம உடம்பு எங்கடா எல்லாம் சுத்த போகுது.
டேய் மாப்ள நீ அப்படி நினைக்கிற டா ஆனா உண்மையான ரீசன் என்ன தெரியுமா போலீஸ் காரெல்லாம் வாயில வச்சுட்டு உப்புன ஊதச் சொல்றாங்கடா அப்ப அந்த குழலே கண்டுபிடிக்குதுடா அது மாற அவன் ஒன்னும் இல்லாம இருந்தும் நான் நிழல் வாய்க்குள்ள அவன் வாயை வச்சு நீ அவனை கடிச்சு வச்சு என்னமோ பண்ணி இருக்கிற அவன் எப்படியும் போட்ட சரக்கு உனக்கு வந்துருச்சு.
நீ வேணா காலையில இருந்து நீ என்னென்ன பண்ணங்குறத சொல்லு பாக்கலாம்.
நைனா நான் அதுல கண்டுபிடிச்சுக்கிறேன்.
நிஜமா வாடா சொல்றே நான் அங்க இருந்து வந்தனா அந்த அரண்மனை வீட்டில் ஹனிபால்ஸ் கிட்ட...ஆமாண்டா நீ சொல்ற மாதிரி தாண்டா நடந்தது நான் பாட்டுக்கு லூசுத்தனமா பாட்டு பாடினேன். என்னை பிடிச்சு திட்டி விட்டுட்டா. சரின்னு அந்த பிள்ளை ஃப்ரீயா விட்டுட்டு இங்க வந்தா இங்கயும் வாய்க்கு வந்ததனால் உளறிட்டு இருக்குற சரக்கு அடிக்க வச்சுட்டானுங்களே சரக்கு அடிக்க வச்சுட்டாங்களே..
பல ஜென்மங்களுக்கு முன்னால என் கற்ப சூறையாடுன நாயி அவன் என்னை சரக்கடிக்க வச்சுட்டானே. அவனை சும்மா விடுவேனா நான்..நாத்தம் போக மாட்டேங்குது டா டேய் அந்த பன்னீர் கடைக்காரங்க கிட்ட போய் ஒரு பாட்டில் பன்னீர் வாங்கிட்டு வாடா டேய் டேய் டேய் டேய் அவசரப்படாதீங்கடா அவனும் எங்காச்சு டாஸ்மார்க் தண்ணி வச்சிருக்க போறான்டா..
நிழலுக்கே சோதனை வந்திருச்சுடா..
ஆமா மச்சான் இன்னைக்கு அம்மாவாசை டா அதனால நம்ம நிழலுக்கு கூட இருட்டுல தெரியாதுடா பேசாம நாமெல்லாம் இன்னிக்கி நம்ம குழிக்குள்ளேயே போய் படுத்துக்கலாம்.
ஐ நாதாரி வாய மூடுடா எத்தனை கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கி ஜாலியா உலாத்திட்டு இருக்கிறோம்.
மறுபடியும் போய் அந்த நாத்தம் புடிச்சு குழிக்குள்ள படுக்க உனக்கு ஆசை வந்துருச்சாடா? அதெல்லாம் முடியாது எனக்கு இன்று முக்கியமான வேலை இருக்குதுடா. எவன் வர்றீங்களா வாங்கடா குஜால் மசால் பண்ணலாம் இப்பவே பேர் சொல்லுங்கடா.
இங்கு இப்படி நடந்து கொண்டிருக்க அமைச்சர் காத்தவராயன் முக்கியமான விஷயம் பேசுவதற்காக கவர்னர் மாளிகை நோக்கி புறப்பட்டார்.
ஆனால் அவர் வாயை மூடும் படியாக முகக் கவசம் அணிந்திருந்தார். தன்ன நினைத்து தானே எப்படியோ ஒரு சொதப்பல் வந்திருச்சே என்று பீல் பண்ணிக் கொண்டே சென்றார்.
ஏன்டா எதுக்குடா இப்ப வாயில மாஸ்க் போட்டு இருக்கிற என்று ஆறு விரல் அல்லக்கைகள் கேட்டனர்.
அதுதான் என்ற வாயில பல்லி கடித்துவிட்டது அது பூர புண்ணா இருக்கு அதனால தான் உங்களுக்கெல்லாம் ஒட்டி விடக்கூடாது என்று தான் நான்
மாஸ்க் போட்டு இருக்கேன்.
இல்லாட்டி உங்களுக்கு பூரா ஒட்டிக்கும் டா அது தான் அப்புறம் இன்னைக்கு எல்லாரும் என்னோட பண்ண வீட்டுக்கு வர்றீங்க நாமெல்லாம் ஜாலியா என்ஜாய் பண்ணலாம்டா.
உடனே ஆறு விரல் அல்லக்கைகள் நிஜமா வாடா சொல்ற அப்போ புதுசா வந்த படத்தில் நடிச்சிருக்கா இல்ல அந்த நடிகை வருவாளா?
கண்டிப்பா வருவாடா உங்களுக்காக சிறப்பா ஏற்பாடும் செய்து இருக்கிறேன். அதனால எல்லாரும் அதை மனசுல வச்சுட்டு இன்னைக்கு கண்டிப்பா வர்றீங்க கொண்டாடுகிறோம். அப்புறம் தெரியும்டா நான் மாஸ்க் ஏன் போட்டு இருக்கிறேன் அப்படிங்கறது.. என்று மர்மமாக சிரித்தார். வெளியே ஆனால் உள்ளே நிழலா தன்னை மிரட்டியதை நினைத்து பயந்து இருந்தார்.
தொடரும்..