• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
263
நீ உடல் நான் நிழல்🌚🌚
பாகம் - 6



தேனருவி தனது பேப்பரைக் கொண்டு போய் தேவ் ஆனந்திடம் கொடுத்தவள். ஒரே
துள்ளலாக எச்சச்ச கச்சச்ச.. ஊ ல லா என்று உல்லாசமாக மனதில் ஹம்மிங் செய்து கொண்டு தனது இடத்தில் அமர்ந்து கொண்டாள்..

பேப்பரில் என்ன இருக்கிறது அது விடையா? வினையா? என்று தெரியாமல் ஊ ல லா.. உல்ல லா லா அப்படியே கஜோல் என்று நினைப்பு அதில் இருக்கும் விடையால் நாளைக்கு ஊத்திக்குச்சு என்று பாடுவாளா?

மலர்க்கொடி சில்பா இருவரும் அடியே என்னடி இப்படி குத்தாட்டம் போடுது உன் கைகள் கொஞ்சம் அடிக்கி வாசிடி டெஸ்கில் தாளம் போடாதே சார் பார்த்தார் நீ தொலைந்தாய்.

அதெல்லாம் சார் பார்த்தார்.. பார்த்தார் என் அருகில் தான் உட்கார்ந்து நான் எழுதுவதையே
பார்த்தார் நான் எழுதும் ஸ்பீடு பார்த்து குளிர் ஸூரம் வந்து எழுந்து சென்று விட்டார்.

( நாளைக்குத் தெரியும் டி யாருக்கு குளிர் ஸூரம் வரும் என்று.)

நீ தான் படிக்கவே இல்லை என்று பம்பரம் சுற்றினாயே. பிறகு என்னத்தையிடி எழுதி வைச்ச.

அது எல்லாம் சஸ்பென்ஸ் நாளைக்குத் தெரியும்.. இந்த தேனருவி யார்? அவளின் டேலண்ட் என்ன என்று பிறகு பாருங்க டி எல்லாரையும் எனக்கு சேவகம் செய்ய வைக்கிறேன். யாருகிட்ட எனக்கு எல்லாம் பிள்ளையார் சப்போர்ட் இருக்கிறது.

என்னது பிள்ளையாரா? அவர் உன் தொல்லை தாங்காமல் தான், அரசமரத்தடியில் அமர்ந்து கொண்டு இருக்கிறார். அப்படியும் அவரை விடாமல் போய் எல்லாரும் காலையில் பச்சைத் தண்ணீர் அவர் மேல் ஊற்றி, அவர் குளிருக்கு நடுங்கினாலும், இடுப்பில் ஒரே துண்டு மட்டும் கட்டி விட்டு, அவருக்கு படையல் சுண்டல் என்று கூறிவிட்டு, அவருக்கு இத்துநூண்டு கண்ணில் காமித்துக் கொண்டு, பூராவும் உன் வயிற்றில் தள்ளிக் கொண்டு, இப்போது அவர் தான் உனக்குத் துணை என்று சொல்கிறாயே.

அவர் என்ன உன் நிழலா? நீ கூப்பிட்டதும் வந்து நிற்க போடி. என்று சில்பா தேனருவி மறந்து போன நிழலை நியாபகப்படுத்த..

ஒரு வேளை நிழல் நம் கூட காலையில் வந்து விட்டதோ? அப்படினா நம் காலையில் இருந்து நடந்து கொள்வது நான் இல்லையா? நிழலா இப்போதே என் உடலுக்குள் வந்து என்னை ஆட்டிப் படைக்கிறதா?

எப்படா கல்லூரி முடியும் வீட்டிற்கு போய் அந்தப் புக்கில் இந்த நிழல் கிட்ட தப்பிக்க ஏதாவது வழி இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும்.

தேனருவி அமைதியாகி விட சில்பா மலர்க்கொடி இருவரும், ஏன்டி இவள் ஒரு மாதிரி ஆகி விட்டாள். நாம் மதிய சாப்பாடு சாப்பிட்டு விட்டு பக்கத்தில் இருக்கிற அம்மன் கோவிலுக்குப் போகலாமா?

என்னடி ஒரே பக்தி பரவசம் ஆகி விட்டாயா?

அதுக்கு வாய்ப்பு இல்லை ராசாத்தி.

இன்று அமாவாசையா? அது தான் உச்சிப் பூசை முடிந்ததும் சர்க்கரை பொங்கல் சுண்டல் எல்லாம் தருவாங்க.. அது தான்டி

ஏன்டி அதுக்கு தான் இப்போது அவசரமா? நானே ஒரே குழப்பத்தில் இருக்கிறேன்.

தேனருவி எல்லாரையும் தெளிவா குழப்பி விட்டு இப்போது நீ குழப்பத்தில் இருக்கிறேன் என்று சொன்னால் நாங்க நம்பவேண்டுமா?

சில்பா எனக்கு என் முகத்தை இப்பவே பார்க்க வேண்டும் டி

அதெல்லாம் மேக்கப் கலையவில்லை மூடிட்டு உட்காரு
உன்னால எங்களையும் சேர்த்து வெளியே தள்ளி விடுவாங்க.

நாம மூன்று பேரும் செல்பி எடுத்து எத்தனை நாளாச்சு.

அதுக்கு?

அது தான் இன்று எடுக்கலாம் தான் உங்களுக்கு என் கூட செல்பி எடுக்க ஆசை இல்லையா? நீங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவு தான் ஒரு வேளை ஒரே நாளில் பெரிய ஆளு ஆகிறமாதிரி நான் செலிபிரிட்டி ஆகி விட்டேன் என்றால் நீங்கள் எதிர்காலத்தில் அதை நினைச்சு பீல் செய்யக் கூடாது.

எது நீ செலிபிரிட்டி ஆகுவாய் ஒரே நாளில் எங்க இரண்டு பேரையும் பார்த்தா உனக்கு கேணக் கிறுக்கச்சி மாதிரி இருக்குதா?

கோசலை மேடம் வந்து விடுவாங்க அப்புறம் உன்னை கேசரி கிண்டி விடுவாங்க எதுவா இருந்தாலும் உன் சேட்டையை லன்ஞ் டைம் வரை முருங்கை மரத்தில் தூக்கிப் போடு. அது வேதாளம் போல் தொங்கட்டும்.

சரி இரண்டு பேரும் என்னைக் கிள்ளி வையுங்குடி..

தேனருவி கூறியதைக் கேட்ட இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சொல்லவே இல்லை உனக்கு அமாவாசை வந்தால் பைத்தியம் முத்தி விடும் என்று அது தான் எங்களுக்கு இப்போது பயமாக இருக்கிறது.

உன்னைக் கிள்ளச் சொல்கிறாய்? அதற்கு பதிலாக நீ எங்களைக் கடித்து விட்டால். வெறி நாய் கடித்தால் கூட தொப்புளைச் சுற்றி ஊசி போடலாம். ஆனால்
செலிபிரிட்டி நாய் கடித்தால் இந்த லோகத்தில் ஊசியே இல்லை. நேரா பிச்சுக்க வேண்டியது தான்.

என்னத்தையிடி பிச்சுக்க. என்று தேனருவி அப்பாவியாக கேட்க..

துணியைத் தான் என்று இருவரும் சொல்லி விட்டு சிரிக்க.

தேனருவி போங்கடி நீங்க என்னைக் கிண்டல் செய்கிறீங்க என்று அழுகும் மோடுக்குப் போ.

அம்மா தாயே உன் வாட்டர் பால்ஸ் ஓப்பன் பண்ணாதே உனக்கு என்ன இப்போது செல்பி தானே எடுக்க வேண்டும்.

எடு என்று இருவரும் வாகாக அவளின் தலைக்குப் பின்னால் தங்களது விரல்களை கொம்பு போல் வைத்து எடுக்க.

தேங்ஸ்டி என்று எடுத்ததும் அதைப் பார்த்தவள் என்னடி நான் இப்படி இருக்கிறேன்.

உன் மூஞ்சி தான் இருக்கிறது வேறு என்ன இருக்கிறது என்று இருவரும் அவளோடு சேர்ந்து போனில் போட்டோவைப் பார்க்க.

தேனருவி கண்ணில் இருந்த மை கொஞ்சம் கரைந்து இருந்தது. அது அவளின் கண்களின் கீழ் இருந்ததால் அதைப் பார்த்து விட்டு தான் தேனருவி இது நான் இல்லை என்று பயந்து கொண்டு இருவரையும் படாய் படுத்தினாள்.

அவர்களின் செல்போன் இப்போது பறிக்கப்பட்டது. எந்திரி நான் வந்ததிலிருந்து பார்க்கிறேன் செல்போன் வைத்து விளையாண்டு கொண்டு இருக்கிறீங்க கெட் அப் அண்ட்
அவுட் சைட் கிளாஸ் ரூம்.

சில்பா மலர்க்கொடி இருவரும் தேனருவியைத் தான் முறைத்தனர். இதுக்குத் தாண்டி எருமை மாடு நாங்கள் சொன்னோம். உன் மரமண்டைக்கு புரிந்துதா?

ஏய் நான் என் முகத்தைப் பார்க்க தாண்டி செல்பி எடுக்கலாம் சொன்னேன்.

அதுக்கு நீ ரெஸ்ட் ரூம் போய் கண்ணாடியில் பார்த்து இருக்கலாமே.

ஹேய் செம ஐடியா? இதுக்குத் தான் செல்லம் வேண்டும் என்கிறது என்று மலர்க்கொடியின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

லூசாடி நீ அங்கே பார் தேவ் சார் நம்மைத் தான் பார்த்து தலையில் அடித்துக் கொண்டு போகிறார்.

உனக்குத் தாண்டி வேப்பிலை அடிக்க வேண்டும் என்று சில்பா சொல்ல அதைக் கேட்க தேனருவி இருக்க வேண்டுமே.

ரெஸ்ட்ரூம் சென்றவள் தன் முகத்தைத் திருப்பி திருப்பி பார்த்தாள். எதுவும் வித்தியாசமாகத் தெரியவில்லை.

மை தான் அழிந்து இருந்தது. காலையில் டெஸ்கில் படுத்துத் தூங்கியதால் கொஞ்சம் தலை கலைந்து இருந்தது.

நானே பயந்து இருக்கிறேன். இவளுக இரண்டு பேரும் எச்சா பயபடுத்தி விட்டார்கள். என்று தனது முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி தலையை ஒதுக்கி விட்டு இப்போது வெளியே வந்தாள்.

கோசலை மேடம் வகுப்பு முடிந்தது இவளது செல்போனை கொடுத்தவர். இது தான் லாஸ்ட் வார்னிங் இனி இது போல் வகுப்பு நடக்கும் நேரத்தில் செல் வைத்து இருந்தீர்கள் என்றால் பிரின்ஸ்பால் கிட்ட தான் பேசவேண்டி இருக்கும்.

சாரி மேம் அவளுக்கு உடம்பு சரியில்லை மேம் அது தான் மேம்

அதுக்கு எதுக்கு செல்பி எடுத்தா உடம்பு சரியாகி விடுமா? இது புது டெக்னிக்கா இருக்கே என்று அவர் கூறவும். வகுப்பில் இருந்த அனைவரும் சிரிக்க.

வந்து வாய்க்கிறது நமக்கு என்று எங்கிருந்து தான் வருவார்களோ? என்று அவர் சென்று விட.

கொசுத்தொல்லை தான் எப்படியோ? அதுவே நம்மளை வெளியே தாட்டி விட்டாங்க இல்லை என்றால் இங்கு அமர்ந்து நம் இரத்தம் பூராவும் உறிஞ்சி இருப்பாங்க பாடம் நடத்துகிறேன் பேரில் ப்ளேடு போட்டு. என்று சொல்லி விட்டு திரும்ப.

கோசலை மேடம் தான் இவளைக் கொலை வெறியில் பார்த்துக் கொண்டு இருந்தார்.

உனக்கு எல்லாம் பாவம் பார்த்து விட்டேன் பார். வா உன் வகுப்பு ஆசிரியர் தேவ் ஆனந்த் சார் கிட்ட என்னால் முடியாது சாமி பெண்ணா நீ பேய் தாண்டி. என்னைப் பார்த்து கொசு என்று சொல்லி விட்டாயா?

ப்ளேடு போட்டு உங்கள் இரத்தம் பூராவும் உறிஞ்சி எடுக்கிறேனா?
செமஸ்ட்ரில் மார்க் போட வேண்டும் நாங்க தான் அப்போது தெரியும் இந்தக் கொசுவோட அருமை.

ச்சை உன்னால் எனக்கு என் பெயரே மறந்து விடும் போல் இருக்கிறது.

தேனருவி இந்த பூணையும் பாலைக் குடிக்குமா? என்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு இப்போது தனக்கு உதவிக்கு தன் தோழிகள் வருவார்களா? என்று பார்க்க அவர்கள் எப்போதே அவர்கள் இடத்தில் போய் அமர்ந்து கொண்டு இவளுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று கோசலை மேடம் நடத்திய பாடத்தை தான் எழுதிக் கொண்டு இருந்தார்கள்.

தேனருவி உனக்கு இந்த வாய் தான் சனி அது தான் இடம் பொருள் மறந்து பேசி விடுகிறது. இப்போது என்ன செய்வது?

நிழல் அதுவாவது வந்து உதவலாம் தானே. என்று மனதில் நினைத்துக் கொண்டு இருக்க.

நிழலோ? நீ ஆபத்தில் மாட்டி விட்டால் மட்டும் நான் வேண்டுமா? உனக்காக நான் உன் பின்னாலே பேய்க்குட்டி மாதிரி அலைகிறேன். நீ என்னவென்றால் நான் உனக்குள் புகுந்து விட்டேனா? என்று பார்க்க செல்பி எடுக்கிறாய்? ரெஸ்ட் ரூம் சென்று கண்ணாடியில் பார்க்கிறாய்? என்னை எப்படி ஒதுக்குவது என்று அந்தப் புத்தகத்தில் மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும் என்று நீ நினைக்கிறாய்?

இனி அந்தப் புத்தகத்தில் நீ படிக்க வேண்டும் என்று நினைப்பது அனைத்தும் அழித்து விடுகிறேன். உன்னை வைத்து தான் இனி என் ஆசைகள் ஏக்கம் அனைத்தும் நிறைவேற்றப் போகிறேன் என்று அவளின் காது அருகில் நின்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்லி சிரித்தது.

அது சிரிப்பதைப் பார்த்தவள். ஏய் சிரிக்காதே நீ என்னிடம் வராதே. என்று இரு காதையும் பொத்திக் கொண்டு கத்திக் கொண்டு இருந்தாள்.

உண்மையில் இப்போது கோசலை மேடம் தான் இவள் வேண்டும் என்று செய்கிறாளா? என்று குழம்பி போனார்கள். அவர் மட்டுமல்ல சில்பா மலர்க்கொடி இருவரும் தான் இவள் என்னடி இப்படி ஆக்டிங் போடுகிறாள்?..


தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top