• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
263
நீ உடல் நான் நிழல்🌚🌚
பாகம் -5



தேனருவி தனது தோழிகளிடம் இன்று வணிகவியல் டெஸ்ட் இருக்கிறது என்று வாத்தி சொன்னதையும். தான் எதுவும் படிக்கவில்லை என்றும் கூறிக் கொண்டு இருந்தாள்.

இன்று பேங்கிங் தான் வைப்பார் நாம் அதைப் பற்றி எழுதுவது ஒன்றும் கடினமாக இருக்காது. என்று மலர்க்கொடி கூற.

தேனருவிக்கு உடனே மின்னல் அடித்தது. பெட்டகத்தில் இருக்கும் பணத்தை பாதுகாப்பு நெறிமுறைகள் பற்றி கப்சா அடித்து விடலாம் என்று தான் அவ்வளவு சந்தோசமாக இருந்தாள்.

தேவ் ஆனந்த் வகுப்பறைக்குள் வந்ததும் தான் தாமதம் அனைத்து மாணவிகளும் எழுந்து காலை வணகத்தை வைக்க.. தேனருவி மட்டும் உறக்கத்தில் இருந்தாள்.

சன்னல் பக்கத்தில் இருக்கும் கொன்றை மலர் மரத்தின் காற்று தென்றலாய் வருட நேற்று இரவு உறக்கத்தை தொலைத்தவள்.

சற்று முன் நடந்த லெக்சரர் போட்ட பேளேடில் தூக்கத்தை தழுவியவள் கண்கள் சுகமாக தூங்க.

எப்பவும் தேவ் ஆனந்த் வகுப்பிற்குள் வந்ததும். டெஸ்ட் வைக்கும் நேரங்களில் உடனே வினாத்தாளை நீட்டாமல் கொஞ்ச நேரம் மாணவர்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் அதைப் பற்றி தெளிவான விளக்கங்கள் கொடுத்து விட்டு பிறகு தான் தேர்வு வைப்பான்.

கல்லூரியாக இருந்தாலும் சிலர் தேர்வு என்ற பயத்தில் படித்ததைக் கூட மறந்து இருப்பார்கள். அதற்காகவே இவ்வாறு செய்வது.

அனைவரும் கேள்விகளைக் கேட்க தேவ் ஆனந்த் பதில் அளித்து கொஞ்சம் விளக்கம் சொல்லிக் கொண்டு இருந்தான்.

தேனருவி தூங்கிக் கொண்டு இருப்பதைப் பார்த்து விட்டான்.

தேவ் ஆனந்த் பார்வை சென்ற திசையைப் பார்த்த சக மாணவி மாணவர்கள் தேனருவி வாகாக
டெஸ்கில் படுத்து தூங்குவது தெரிய. அவளைப் பிடிக்காதவர்கள். மாட்டிக்கிட்டா
ஹனிபால்ஸ் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

சரியான ஸ்ரிக்ட் ஆபீசர் தேவ் ஆனந்த் அவர் பாடம் நடத்தும் போதே இவள் தூங்கி வழிந்தால் சும்மா இருப்பரா..

மலர்க்கொடி சில்பா இருவரும் அடிப்பாவி இந்தத் தூங்கு தூங்கிறாள். கொடி அவளை எழுப்புடி சார் பார்க்கிறார். நான் மாட்டேன் நீ எழுப்பு சில்பா சொல்ல. அங்கே என்ன சத்தம்
என்று கேட்டு அவர்கள் அருகில் வந்தவன். தன் கையை டெஸ்கில் ஓங்கி ஒரு தட்டு தட்டினான்.


அம்மா.. என்று தூக்கத்தோடவே
ஏம்மா காலையில் எங்க வாத்தி மாதிரியே சத்தம் போட்டு எழுப்புகிறாய்? நீ கம்முனு போகாமல் என்னைத் திரும்ப எழுப்பினாய். நான் பேயாக மாறி உன் கழுத்தில் ஓட்டை போட்டு ரத்தம் பூரா உறிஞ்சி விடுவேன் என்று அவளின் தூக்கத்தில் இருந்து வெளியே வந்து இப்போது பார்த்தாள் மொத்த வகுப்பறையும் அவளையே பார்க்க.

அப்போது தான் அவளுக்கு நினைவு வந்தது. அச்சோ தேனுக்குட்டி இவன் எப்போது வந்தான் தெரியலையே இவளுக
இரண்டு பேரும் எழுப்பாமல் விட்டதால் இந்த மலமாடு என்னை என்ன தான் நினைத்து இருப்பான்.

அவளையே முறைத்த தேவ் ஆனந்த் இப்போது நான் நடத்திக் கொண்டு இருந்த டாபிக் பத்தி சொல் என்று கூறிவிட்டு அவன் சென்று அவனின் நாற்காலியில் அமர்ந்து விட.

பே முழி விழித்தவள் பாவமாக
முகத்தை வைத்துக் கொண்டு தன் தோழிகளைத் தான் பார்த்தாள் யாராவது உதவுவார்களா? என்று அவர்கள்
வாய் திறந்து சொன்னால் அவர்கள் மாட்டிக் கொள்வார்களே அதனால் எதுவும் பேசாமல் இருக்க.

வகுப்பறையில் தூங்குகிறாயே. உனக்கு வெட்கமாக இல்லையா? நீ எல்லாம் எதுக்கு தெண்டமாக
இங்கே வந்து மற்றவர்களுக்கு இடைஞ்சல் செய்கிறாய்?

இரவு பூராவும் செல்போன் நோண்டவேண்டியது இப்போது வகுப்பறையில் தூங்க வேண்டியது.

தேனருவிக்கு அழுகை வந்து விட்டது. இருந்தாலும் அழுகாமல் சார் என்று கூறியவள் இப்போது
வாயைத் திறந்து அவன் கண்டிப்பாக இன்று வைக்கும் டெஸ்ட் பற்றி தான் சந்தேகம் நிவர்த்தி செய்து இருப்பான் என்று அதைப் பற்றி கூற ஆரம்பித்து விட்டாள்.

மலர்க்கொடி சில்பா இருவருக்குமே ஆச்சரியம் தான் இவள் எப்படி அவர் சொல்லிய
சொல்லில் ஒரு வார்த்தை கூட
பிசிறாமல் சொன்னால் என்று
நிஜமாலுமே இவள் தூங்கினாளா?

தேவ் ஆனந்த் கூட ஆச்சரியப்பட்டு போனான். ஒரு வேளை இவளுக்கு அபாரத் திறமை தான் இருக்கிறது. இவள் மெய் மறந்து தூங்கினாலும்
காது கவனித்துக் கொண்டு தான் இருக்கிறது.

அனைவரும் கை தட்ட தேனருவி வானத்தில் பறப்பது போல நான் எதுவுமே சொல்லவில்லை அதற்குள் அனைவரும் கை தட்டுகின்றனர். எல்லாம் சரியான லூசுகள். அதில் இந்த வாத்தியுமா? இடம் பிடிக்கிறார்.

இல்லை காலையில் எனக்கு உதவி செய்ததால் நீ தப்பித்தாய் என்று மனதில் குத்தாட்டம் போட்டவள் தனது இருக்கையில் அமர்ந்து கொண்டு தனது தோழிகளிடம் நான் எதுவும் பதில் சொல்ல வில்லை. பிறகு எதுக்குடி
எல்லாரும் கை தட்டினீங்க.

என்னது? நீ எதுவும் சொல்லவில்லையா? அட எருமை நீ தாண்டி இத்தனை நேரம் சார் என்ன சொன்னாரோ? அது அச்சு பிசிறாமல் சொன்னாய்?

போடி பைத்தியங்களா? நானே நேற்று நல்லா தூங்காமல் இப்போது வாத்தி கேள்வி கேட்டதும் எதை வாந்தி எடுக்கிறது என்று யோசித்துக் கொண்டு நின்று இருந்தேன்.

வேண்டும் என்று தானே எங்களிடம் டெஸ்டிற்கு படிக்க வில்லை என்று புருடா விட்டாய். பூராவும் படித்து விட்டு வந்து தான் இப்போது நிம்மதியாக தூங்கினாயா?

நேற்று நான் படித்தேனா? பாடத்தை.. என்று யோசித்தவள் நேற்று இரவு படித்த புத்தகம் தான் நினைவில் வந்தது. கூடவே
தனக்கு வந்த கனவும் வந்தது.

என்னடி அமைதியாகி விட்டாய்? நீ காலையில் இருந்தே ஒரு மார்க்கமாகத்தான் இருக்கிறாய்?

சில்பா சார் அவளைக் தூக்கிக் கொண்டு மருத்துவமனை போனதால் இவளுக்கு அந்த நினைவில் தான் சார் கூட டூயட் பாடுவதற்கு தூக்கத்தை தத்து எடுத்துக் கொண்டாளோ?

கொடி இவளுக்கு இருக்கும் பீலிங் அவருக்கும் இருக்குமோ?

சில்பா பார்த்தா அப்படித் தெரியலையே அவர் எப்போதும் இருக்கும் அதே மாதிரி விறைப்பாகத் தான் இருக்கிறார்.

தேனருவிக்கு தான் நானா? சொன்னேன். ஒருவேளை என் கூடவே நிழல் வந்து இருக்குமோ? அது தான் வகுப்பறையில் கவனித்து பதில் சொல்லி இருக்குமோ?

அது தான் இரவு தான் வருகிறேன் என்று சொன்னது. இப்போது எப்படி நான் பதில் தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கும் போது சரியான பதில் சொன்னேன் என்று எல்லோரும் கைதட்டினார்களே.

தன்னைத் தானே கிள்ளிப் பார்த்தால் நான் தேனருவியாக இருந்தால் எனக்கு வலிக்க வேண்டும். இல்லை நிழல் உள்ளே இருந்தா வலிக்காது என்று அவளே அவளின் கையைப் பிடித்து கிள்ளி வைத்து விட்டு அது வலிக்கவும் தான் சுய உணர்வுக்கு வந்தவள். தன்னைச் சுற்றி இருப்பவர்கள் தான் பொய் சொல்கிறார்கள் என்று குழம்பிக் கொண்டு இருக்கும் போதே.

தேவ் ஆனந்த் வினாக்களைச் சொல்லி விட்டு அனைவருக்கும் டெஸ்ட் எழுதச் சொல்லி விட்டு
இடம் மாறி உட்கார வைத்து விட்டான்.

சில்பா மலர்க்கொடி அருகில் இருந்தால் அவர்களைப் பார்த்து எழுதலாம் என்று நினைத்து இருந்தேனே. இப்போது பார்த்து வாத்தி நம் அருகில் வந்து உட்கார்ந்து விட்டாரே. நாம் என்ன எழுதினாலும் கண்டு பிடித்து கொள்வாரே.

சரி நமக்கு தெரிந்த பீலாவை எல்லாம் எழுதுவோம் என்று முதலில் பிள்ளையார் சுழி போட்டாள்.

போச்சு போ இனி நிழல் எப்படி வந்து எழுதும். அடியே பாதகத்தி இத்தனை நேரம் நிழல் தான் வந்து பதில் சொல்லியது கூடத் தெரியாமல் ஜிகிர்தாண்டா குடித்தவளாட்டம் பிதுபிதுனு முழித்து விட்டு இப்போது நிழல் கேண்டீனில் உளுந்து வடை வாசத்தில் அங்கே வாசம் பிடிக்கப் போன கேப்பில் பிள்ளையார் சுழி போட்டு பில்லி சூனியம் வைத்து விட்டாளே இப்போது நான் வந்து
எப்படி எழுதுவது என்று நிழல் கத்திக் கொண்டு இருந்தது.

அனைவரும் எழுத ஆரம்பித்தும் தேனருவி பேப்பரில் பிள்ளையார் சுழி தவிர எதுவும் இல்லாததால்
தேவ் ஆனந்த் ஹேய் நீ என்ன ஏழாம் வகுப்பு படிக்கிற பெண்ணா எதுக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்து இருக்கிறாய்?

சார் அது மங்களரமா இருக்கட்டும் என்று தான் உங்களுக்கு பிடிக்கவில்லையா?

முழுமுதற் கடவுள் அவர் தான் அது தான் சார். நான் வேண்டும் என்றால் அழித்து விடுகிறேன்.

அவள் அழிக்கும் வரை அங்கேயே நின்றவனைப் பார்த்து மனதில் வறுத்து எடுத்தவள். அப்பனே பிள்ளையார் அப்பா உன் மேல் இருக்கும் பாசத்தில் நான் உன்னையே நினைத்து இங்கே உன் சுழி போட்டால் நம் வாத்தி அதுக்கு ஆப்பு வைத்து விட்டது. அதற்காக எனக்கு கிடைக்கும் கொழுக்கட்டை சுண்டலில் நீயும் சுண்டெலியும் பங்குக்கு வரக் கூடாது என்று டெஸ்ட் என்பதை மறந்து மனதில் பேசியவள் அறியாதது.

நிழல் அவளுக்கு உதவிக் கொண்டு இருப்பதை
இப்போது அவள் கை பாட்டிற்கு எழுத ஆரம்பிக்க அவளின் பார்வை வேறு எங்கோ இருந்தது.

அவளின் மேல் வந்த விழுந்த சாக்பீஸ் துண்டில் சுயத்திற்கு வந்து பார்க்க.. தேவ் ஆனந்த் கண்ணை பேப்பரில் வைத்து எழுது என்று கூறிவிட்டு மற்றவர்கள் ஒழுங்காக எழுதுகிறார்களா? என்று பார்க்கச் சென்று விட்டான்.

சரி வாத்தி சொல்லுது நாம் எழுதலாம் என்று கீழே பேப்பரைக் குனிந்து பார்க்க அவள் கை அத்தனை வேகமாக எது சரியான விடையோ? அதை அப்படியே எழுதி இருந்தது.

அவளுக்கு ஆச்சரியம் இது தன் கை தானா? நாம் தான் எதுவுமே தெரியாமல் பிள்ளையார் சுழியோடு நிற்க, இது என்ன பிள்ளையார் வந்து தான் பூராவும் எழுதி விட்டாரா? என்று அவளின் மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் போக.

நிழலுக்கு கோபம் வந்து விட்டது. நான் உன் மேல் பரிதாப்பட்டு உனக்கு உதவினால். அதுவும் என் கல்லறைக் கல்லூரி டிமிக்கி கொடுத்து வந்து, காலையில் கீழே விழுந்து வந்து என்ன செய்கிறாயோ? என்று பரிதாப்பட்டு வகுப்பறையில் பார்த்தால் கும்பகர்ணனின் அக்கா மாதிரி தூங்கிட்டு இருக்கிறாயே என்று உனக்காக பதில் சொல்லி, எனக்கு தாகம் எடுக்க நான் போய் மோப்பம் பிடித்து வருவதற்குள். உன் வண்டவாளம் தண்டவாளம் ஏறாமல் காக்க நான் பதில் எழுதினால் நீ பிள்ளையார் என்று என்னைக் கேவலப் படுத்தி விட்டாய். உன்னை நான் உன் வாத்தியிடம் மாட்டி விடுகிறேன்.

இத்தனை நேரம் எழுதிய பதில் பூராவும் நீ உடல் நான் நிழல் என்று மாறிவிட்டது. அது அறியாத பச்சப் புள்ள பேப்பரை துள்ளலோடு வாத்தியார் கிட்ட கொடுத்து விட்டு இப்போது கொழுக்கட்டை சுண்டல் கனவுக்குள் ஐக்கியம் ஆகி விட்டாள்.

தொடரும்...

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top