Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 322
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 49
பாகம் - 49
முதல் வகுப்பு இன்று மீரா மேடம் தான் வகுப்பறைக்குள் வந்ததும்
தேனருவியைத் தான் அழைத்தாங்க.
தேனருவி கல்லூரிக்கு எதுக்கு வருகிறாய் ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளத்தான். ஆனால் அது எதுவும் உன்னிடம் இல்லையே சரி பாடம் படிக்க மட்டும் வருவது போல் இல்லையே நீ பாய்ப்ரண்ட் பிடிக்கவும் தான் வருகிறாயா?
தேனருவி வாய்மூடி மௌனச் சாமியார் போல் நின்று கொண்டாள். ஆனால் சில்பா வாய்க்குள் முனகினாள் மேம் கேட்கிறாங்க இல்லையா? வாயைத் திறந்து சொல்லுடி.
என்ன? பொய் சொல்லி தப்பிக்கலாம் என்று பார்க்கிறாயா? படிக்க வந்தால் தானே? வருவது எல்லாம் வேறு எதுக்கோவாச்சே பிறகு எப்படி பதில் வரும். சரி உனக்கு கொடுத்த ப்ராக்ஜெக்ட் எழுதி முடித்தாயா?
இதுக்குத் தானே காத்திருந்தேன் என்று தேனருவி அவள் எழுதியது எல்லாம் எடுத்துக் கொண்டு சென்று மீரா மேம் முன்பு வைத்தாள்.
அவங்களுக்கு அதிர்ச்சி நேற்று கொடுத்ததே இவள் ஒரு வாரம் எழுதினாள் கூட முடிக்க முடியாது என்று மிகவும் பெரிய சிக்கலான ப்ராக்ஜெக்ட் அவளுக்கு கொடுத்து இருக்க இவளும் ஒரு நாளில் முடித்துக் கொண்டு வந்து டேபிளில் வைக்க என்ன? கூகுளில் பார்த்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு வந்து விட்டாயா? நான் உன் கைப்பட எழுதச் சொன்னேன்.
அத்தனையும் திறந்து காண்பித்தாள். அப்படியும் நம்பாமல் சரி நீ இதைப் பற்றி கொஞ்சம் எக்ஸ்ப்ளைன் பண்ணிச் சொல்.
ஐயோ பங்கு மாட்டிக்கினியா? கொஞ்சம் அடக்கி வாசித்து இருக்க வேண்டுமோ? நிழல் வைத்து எழுதிய என்கிட்ட போய் அதை எக்ஸ்ப்ளைன் பண்ணிச் சொல்லுகிறாங்களே இப்ப நான் என்ன செய்வேன்!! பேசாமல் இன்று நாம் மௌனவிரதம் என்று சொல்லி விடலாமா? ஆமாம் அது தான் சரி என்று தேனருவி அவளையே இரசித்துக் கொள்ள.
அவமனசாட்சி அவளையே காரித்துப்பியது. காலையில் நீதேவ் ஆனந்த் கூட வாயால் தந்தியடித்ததைப் பார்த்து தான் மீரா, மேம் உன் மேல் பாய்ச்சலா இருக்கிறாங்க. இதில் நீ மேய்ச்சலுக்கு வந்த மாடு மாதிரி முழித்துக் கொண்டு நிற்கிறாய்? பேசாமல் உன் அல்லக்கை நிழலைக் கூப்பிடு அதை விட்டால் உனக்கு இந்த மேடம் கிட்ட இருந்து தப்பிக்க வழி இல்லை.
மேம் நான் இப்போது இதைப் பற்றி பேச வேண்டும் என்றால் அதாவது விளக்கிச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு நாளே ஆகும் என்று தப்பிக்கப் பார்த்தாள்.
இல்லை தேனருவி எப்படிச் சுருக்கிச் சொல்ல முடியுமோ? அப்படி சொல் நாங்க எல்லாம் கேட்க ஆவலாக இருக்கிறோம். என்ன கைஸ் ஓகே தானே.
எஸ் மேம் என்று பக்கத்து டெஸ்க் பாவனா சத்தமாக சொன்னாள்.
தேனருவி அவளைப் பார்த்து படுபாவி போன வாரம் உன் டிபன் பாக்ஸில் இருந்து காளான் பிரியாணியை நான் தான் சாப்பிட்டேன் என்று தெரிந்து இன்று இந்த சூழ்நிலையில் இப்படி பழி தீர்த்திக்கிறாயே பாதகத்தி நான் என்ன பண்ணுவேன் என்று இப்போது சில்பா மலர்க்கொடி இருவரையும் பாவமாகப் பார்த்தாள்.
அம்மா தாயே ஆமா நீ யாரு கொஞ்ச மாச்சும் அடங்குனாயா? இப்போது எல்லாம் வரிசை கட்டி நிற்கிறது. இதில் அப்பாவி மாதிரி முகத்தை வைத்துக் கொள்வது த்தூ என்று செய்து காண்பிக்க.
தேனருவிக்கு அந்த கலவரத்திலும் சிரிப்பு வந்து விட்டது.
என்ன தேனருவி பயத்தில் சிரிப்பு வந்து விட்டதா? என்று மீரா மேம் கேட்க அப்போது தான் நிற்கும் இடமறிந்து வாயை மூடினாள்.
சொல்லுமா கை வலிக்க பூராவும் எழுதி இருக்கிறாய்? ஆனால் கேள்வி கேட்டா பதில் தெரியாமல் இப்படி விழிக்கிறாய்? இதிலிருந்தே தெரிகிறது இதில் நீ எதுவோ? பித்தலாட்டம் செய்து இருக்கிறாய்? என்று உண்மையைச் சொல்கிறாயா? இல்லை ப்ரின்ஸ்பால் அறைக்கு வருகிறாயா?நீ பதில் சொல்வாய் என்று உன் வாயைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா?
மருக்கொழுந்து வாசம் அடித்தது தேனருவிக்கு சரியான நேரத்திற்கு என் செல்லம் வந்திருச்சு என்று மனதில் நினைத்தவள் இப்போது அவர்களுக்கு எக்ஸ்ப்ளைன் பண்ண ஆரம்பித்து விட்டாள்.
மீரா மேம் வாய் பசை போட்டது போல் ஒட்டி விட்டது. இவள் என்ன மனுசியா இல்லை ரோபோவா? கேட்காத கேள்விக்கும் பதில் சொல்கிறாளே.
அவளா சொல்கிறாள் அவளுள் இருக்கும் நிழல் தான் இனி கேள்வி கேட்பாய் என்று கடகடவென சொல்ல மீரா மேடமிற்கு தலைசுற்றிப் போய் விட்டது. அத்தோடு விடாமல் தேனருவி வைத்திருந்த எழுதிய கொஞ்ச நேரத்தில் மறையும் இன்க் பேனாவையும் மீரா மேம் பர்சில் வைத்து விட்டது.
சுத்தமா சோலியை முடித்து விட்டது. சத்தமில்லாமல் இனி தேனருவிகிட்ட வம்பு வைப்பாய் என்று.
தேனருவி வெரிகுட் போதும் போய் உட்கார் என்று சொல்லிய மீரா மேம் அடப்பாவமே என்று முகம் சோர்ந்து விட்டால் போதும் சாமி என்று வகுப்பறையை விட்டு ஸ்டாப் ரூம் நோக்கி சென்று விட்டார்.
எங்கே போனாலும் நான் விட மாட்டேன் என்பது போல் தேனருவி குரல் மீரா மேம் காதுக்குள் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டே இருந்தது.
இன்றைக்கு யார் முகத்தில் விழித்தேன். காலையில் இருந்து என் உசிரை வாங்குகிறாள். என்று புலம்பி விட்டு விட மாட்டேன் உன்னை உன் இறுதியாண்டு மார்க் என் கையில் தான் இருக்கிறது. உன் மேல் இப்போதே பிரிஸ்பாலுக்கு
புகார் கடிதம் எழுதி அனுப்புகிறேன். என்று எழுத ஆரம்பித்தார் நிழல் மாற்றி வைத்த பேனாவை வைத்து, கொஞ்ச நேரம் கழித்து கொண்டு போய் கொடுக்க வேண்டும் இப்போதே கொடுக்கக் கூடாது.
தேவ் ஆனந்த் இன்றைக்கு உதவி பிரின்ஸ்பாலாக பொறுப்பு ஏற்று உள்ளான். அதனால் அவன் இருப்பான். இவள் சொல்லும் பொய் அங்கே எடுபடாது என்று தான் கொஞ்ச நேரம் சென்ற பிறகு அங்கே செல்ல திட்டமிட்டாங்க.
ஆனால் மீரா மேம் அறியாதது. இங்கே வகுப்பறையில் நடந்தது அனைத்தும் தேவ் ஆனந்த் சிசிடிவி காமிராவில் பார்த்து விட்டான். என்பதையும் கூடவே அதில் ஒரு பிரதி தனது செல்போனில் சேமித்து வைத்து விட்டான்.
ஹனிபால்ஸை அவமரியாதையாக பேசியது அவனுக்கு வருத்தம் அளித்தது. இதுப் போல மற்றவர்கள் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றால் அனைவரிடமும் சொல்லி விட வேண்டும்.
முதலில் பிரின்ஸ்பால் அவரிடம் சொல்லி விட வேண்டும். பிறகு அனைத்து ஸ்டாப்புகளுக்கும் பத்திரிகை கொடுத்து விட வேண்டும்.
இப்போது தேனருவியின் வகுப்பு அறைக்கு சென்றான். அங்கே இருந்த மாணவ, மாணவிகள்அனைவரும் தேனருவியைத் தான் சூழ்ந்து இருந்தனர். எப்படி தேனருவி உன்னால் இத்தனையும் நியாபகம் வைக்க முடிஞ்சது.
செம கிழி அந்த மேடம் இனி வாழ்நாளில் யாரைக் கேள்வி கேட்டாலும் கேட்கும் உன்னைப் பார்த்தாலே தலை தெறிக்க ஓடி விடும் என்று சொல்லி சிரித்தனர்.
தேனருவி சும்மாவே செம பில்டப் கொடுப்பா இப்போது சொல்வா வேண்டும். பாவனா அவள் டிபன் பாக்ஸில் கொண்டு வந்து இருந்த லெமன் சாதம் உருளைக்கிழங்கு வருவல் அவளாகவே எடுத்து வந்து கொடுத்தாள்.
சாரி தேனு இத்தனை நேரம் பதில் சொல்லியே உன் வாய் வலித்து இருக்கும். நியாயமா பார்த்தா உனக்கு ஐஸ்கிரீம் தான் வாங்கித் தர வேண்டும் ஆனால் என்கிட்ட இது தான் இருக்கிறது என்று அவளிடம் நீட்ட.
கொலைப்பசியில் இருந்த தேனருவி இப்போது பாவனா தேங்ஸ்டி உனக்காவது தோனிச்சே எனக்குப் பசிக்கும் என்று கொடுடி என்று வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள்.
சாப்பிடும் முசுவில் தேவ் ஆனந்த் வகுப்பறைக்குள் வந்து அமர்ந்ததைக் கூட கவனிக்கவில்லை. மற்றவர்கள் அனைவரும் தங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்று தான் அமர்ந்து இருந்தனர்.
தேவ் ஆனந்த் வந்தது கூடத் தெரியாமல் சாப்பிட்டு முடித்தவள் கடைசி வாய் சாப்பிடும் போது விக்கல் வந்து விட்டது.
தன் முன்னால் தண்ணீர் பாட்டில் நீட்டவும் வாங்கி குடித்து முடித்தவள். தனக்கு தண்ணீர் கொடுத்தது யார் என்று பார்க்க வில்லை.
தண்ணீரை வாயில் வைத்துக் கொண்டு ஏண்டி சில்பா எல்லாரும் அமைதியாக இருக்கிறீர்கள். மறுபடியும் வேற யாராச்சும் வந்து விட்டார்களா? என்னையே பார்க்கிறீர்களே ஏன்?
மலர்விழி அவளின் தாடையைத் திருப்பி அங்கே பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள் உன்னால் கிளாஸ் கவனிக்கா விட்டாலும் பதில் எழுதி மார்க் வாங்கி விட முடியும். ஆனால் நாங்க அப்படி இல்லை தாயே அதனால் உன் வாலைக் கொஞ்சம் சுருட்டி வைக்கிறாயோ? இல்லை நீட்டி முழக்கிறாயோ? ஆள விடுமா தாயே என்று குசுகுசுவென பேசியவள் இப்போது தேனருவி முகத்தை திருப்பி தேவ் ஆனந்த் புறம் திருப்பி விட்டாள்.
மாமா சார் என்று சொல்ல வந்தவள் இப்போது அவனின் கோபப் பார்வையில் கப்சிப் என்று அமைதியாகி விட்டாள்.
என்ன? தேனருவி இது வகுப்பறையா? லஞ்ச் டேபிளா? கொஞ்சம் கூட டிசிப்ளினே இல்லையா?
சார் அது வந்து ரொம்ப பசி எடுத்து விட்டது. அது தான்.
ஓஹோ அதுக்குத் தான் கேண்டீன் இருக்கே இங்கே அமர்ந்து சாப்பிடுவது, அதுவும் சுற்றிலும் இத்தனை பேரை பார்க்கவைத்து சாப்பிடுகிறாய்
உனக்கு கொஞ்சம் கூட அறிவே வேலை செய்யாதா? ஒரு கல்லூரி படிக்கும் பெண் இப்படித்தான் ஒழுக்கம் இல்லாமல் நடந்து கொள்வாயா?
நீ என்ன செய்தாய்? உன் மேல் மீரா மேடம் பிரின்ஸ்பாலிடம் புகார் கடிதம் கொடுத்து இருக்கிறார். என்று சொல்லவும் தான் .
அட மாமா சார் அது தான் கோபமா? நான் கூட உங்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் சாப்பிட்டு விட்டேன் என்று தான் கோபப் படுகிறீர்கள் என்று நினைத்து விட்டேன் என்று மனதாலே கவி பேசியவள். சார் நான் எதுவும் செய்யவில்லை மேம் தான் என்னைக் கேவலமாக பேசியதோடு மட்டும் அல்லாமல் கேள்வி கேட்டு பதில் சொல்ல தாமதம் ஆனதும் என் கேரக்டர் குறித்து தவறாகப் பேசினார்கள். நான் அவர்கள் கேள்விக்குப் பதில் தான் அளித்தேன். வேண்டும் என்றால் இவர்களிடம் கேட்டுப் பாருங்கள் சார்.
பிரிஸ்ன்பால் அறைக்குள் சென்ற மீரா மேம் தேர்டு இயர் மாணவி தேனருவி பற்றித் தான் எனக்கு ஒரு கடிதம் வந்தது. என்ன இருந்தாலும் அதை நான் பிரித்துப் பார்த்தேன். அய்யோ அத்தனை கேவலமாக எழுதி இருக்கிறாங்க. அது தான் அவள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உங்களிடம் புகார் அளிக்க வந்தேன்.
மீரா மேடம் கொடுத்த கவரைப் பிரித்துப் பார்த்தவர் அதிர்ந்தார்.
தொடரும்...
அப்படி என்ன இருந்து இருக்கும்?
அடுத்த பதிவில்..