• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
320
நீ உடல் நான் நிழல்
பாகம் - 47


தேனருவி நிழலை பாண்டுப் பேப்பரில் கையெழுத்துப் போடச் சொன்னாள். அது ஒரு நிழல் என்பதை மறந்து விட்டு இப்படி வாயாடித்தனம் செய்து கொண்டு இருந்தாள்.

ஆமா நான் என்ன உருவமாகவா? இருக்கிறேன். நீ நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போடுவதற்கு நானே ஒரு நிழல் அதுவும் உன் முன் ஜென்மம் அதுவும் உன் கண்ணுக்கு மட்டும் தான் தெரிவேன் இதில் நான் வெளியே போய் என்ன வேலை செய்யப் போகிறேன்.

அப்படீனா நீ எங்கே போனாய்? நான் உன்னிடம் என்ன சொன்னேன். எனக்கு ரெக்கார்டு நோட் தானே எழுதச் சொன்னேன். அதை இன்றைக்கு சப்மிட் செய்ய வேண்டும். ஆனால் நீ அதை எழுதாமல் ஜாலியாக போய் உன் ஆளு கூட டூயட் பாடிக் கொண்டு வருகிறாய்?

பிறகு தான் நிழல் தேவ் ஆனந்த் வீட்டிற்குச் சென்றதையும் அங்கே அவர்களுக்கு விடிய விடிய சுத்த விட்டதையும் நினைத்துப் பார்த்தது. இதை இவளிடம் சொல்லலாமா? வேண்டாம்.. அந்த மாப்பிள்ளை சாரே சொல்லிக் கொள்ளட்டும். அவுங்க இரண்டு பேர்க்குள் நாம் உள்ளே போக வேண்டாம்.

நிழலு நான் கேட்டதிற்கு பதில் சொல்லு ரெக்கார்டு நோட் எழுதினாயா? இல்லையா? என்று நொய் நொய்னு பேசுவதைப் பார்த்த நிழல் தேனருவியிடம் அந்த நோட் இரண்டையும் எடுத்து கொடுத்தது.

நிழல் கொடுத்ததை வாங்கிப் பார்த்தவள் பக்கங்களில் அவள் எழுத்து போலவே நிழல் எழுதி வரைந்து இருந்தது. அதைப் பார்த்து தேங்க்ஸ் என்று தேனருவி சொல்லி விட்டு உனக்கு என்ன வேண்டும் என்று சொல் நிழல் நான் உனக்கு வாங்கித் தருகிறேன் என்று அவசரப்பட்டு வாக்குறுதி கொடுக்க.

சொல்லவா? வேண்டாமா? என்று தேனருவி யைப் பார்த்து நிழல் வினா தொடுக்க.

எல்லாம் என் நேரம் நீ எல்லாம் இந்த டயலாக் பேசுகிறாய்? ஆமா ஏன் அதோட நிறுத்தி விட்டாய் நெருப்பின் நாக்கு என்று சொல்லு அது சொன்னால் உன் நாக்கு என்ன கருகியா போய் விடும்.

நிழல் விஜய் டிவியில் நேற்று சூப்பர் சிங்கர் பார்த்தது. அதில் நிகழ்ச்சி தொகுப்பாளணி பிரியங்கா சிரிப்பது போல்.. ஹா ஹா ஹா ஹா ஹா என்று சிரிக்க ஆரம்பித்துவிட்டது.

ஏய் எதுக்கு இப்போது சிரிக்கிறாய்?

சிரிக்கிறமாதிரி நீ கேள்வி கேட்கிறாய்? நானே நிழல் எனக்கு எப்படி நாக்கு இருக்கும். தேனருவி பேசும் முன் யோசிக்கவே மாட்டாயா?

போ நிழலு. நீ சோகமா இருந்தாயா? அது தான் உன்னைச் சிரிக்க வைக்கும் எண்ணத்தில் தான் இது போல் பேசினேன்.

நிஜமா நீ என்னைச் சிரிக்க வைக்கும் நோக்கில் இப்படி பேசினாய் இதை நான் நம்ப வேண்டுமா? கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்றுதானே சொல்வாய்?

நிழலு எனக்குத் தான் மீசையே இல்லையே அப்புறம் எப்படி நான் மீசையில் மண் ஒட்டி இருக்கிறது என்று நீ சொல்வதை ஏற்க முடியும். பேசுவதை லாஜிக் ஓட பேச வேண்டும். சும்மா தைக்கா பைக்கா ஜைக்கா மைக்கா என்று உளறக் கூடாது.

இப்போது உளறுவது நீ தான் தேனருவி குவாட்டர் அடிச்சவன் போல் பேசுகிறாய்? ஒரு வேளை நேத்து சரக்கடித்தாயா?

நிழல் நீ ரொம்ப ஓவராகப் போகிறாய்? உனக்கு ஆலாமிட்டாய் தர மாட்டேன் போ என்று சொல்லி விட்டு கல்லூரி செல்வதற்கு குளிக்கச் சென்றாள்.

தேவ் ஆனந்த் வீட்டில் அனைவரும் கிளம்பி இருந்தனர். சுரேஷ் சுனைனா இருவருக்கும் இன்று திருமணம் சும்மா சிம்பிளா நடத்தி விடலாம் என்று தான் அரண்மனை வீட்டிலிருந்து ஐந்து காரில் கிளம்பி இருந்தனர்.

லதா நீ குளிக்கவில்லையா? உன் மேல் மாட்டுக்கத்தல் வாசம் அடிக்கிறது.

ரவிக்குமார் கேட்டதும் வானதி கழுக்கென்று சிரித்து விட விஜயலதா தன் ஓரகத்தியை முறைத்தவள் மாட்டுக்கத்தலில் தான் விடிய விடிய உருண்டு பிரண்டோம் என்றா சொல்ல முடியும். அதுங்க நான் இன்று திங்கட்கிழமை மாட்டுக்கு அகத்திக் கீரை கொடுக்கப் போனேன் அது தான் அது அந்த நேரம் அதன் வால் வைத்து என் மேல் ஒரு விசிறு விசிறியது அது தான் அந்தக் கத்தல் வாசம். அத்தை நேரமாகி விட்டது என்று சொன்னதால் நான் கை கால் முகம் மட்டும் கழுவி வந்தேன் உடை மாற்றவில்லை.

விஜயலதா நீ இந்த ஒரு வாராமா? செய்யும் செயல் எனக்கு முகச் சுழிப்பைத் தான் கொடுக்கிறது. இத்தோட நிறுத்தி விட்டு பிரணவ் வளர்க்கிற வழியைப் பார்.. உன் தங்கச்சி சுனைனா விற்கும் திருமணம் நடக்கப்போகிறது. இனி மேல் எந்த சித்து வேலையும் செய்யாமல் ஒழுக்காமா இருக்கிற மாதிரி நடந்து கொள். நான் இத்தனை தூரம் சொல்லிய பிறகும் நீ உன் இஷ்டத்திற்கு தான் நடப்பாய் என்றால் தாராளமா உன் அம்மா அப்பா கூடவே போய் விடு என் பையனை வளர்த்துக் கொள்ள எனக்குத் தெரியும்.

கொழுந்தனாரே எதுக்கு எல்லார் முன்னேயும் பேசுகிறீங்க, அவுங்களுக்கு அவமானமா இருக்கும் தானே விடுங்க இப்போது அவுங்க தங்கச்சி திருமணம் அந்த மகிழ்ச்சியை கொண்டாட்டும் நீங்க அவுங்க இத்தனை நாட்கள் செய்த தவறை சுட்டிக் காட்டினீர்கள் என்றால் அவுங்க மனசு உடைஞ்சுவிடுவாங்க அதுவுமில்லாமல் குழந்தைகள் முன்னாடி பெரியவர்கள் சண்டை போட்டால் அதுகள் மனசு சஞ்சலப் படும் தானே எந்தப் பிரச்சினையும் பேசி தீர்த்து விடாமல் மனசுக்குள்ள வைத்து புழுங்கிட்டு இருக்கக் கூடாது.

அண்ணி உங்கள் முன்னாடி பேசுவதை நான் பிரிச்சு பார்க்கவில்லை நாம் எல்லாரும் ஒரே குடும்பம் தான் நீங்களும் பார்க்கிறீர்கள் தானே, பொழுதுக்கும் வெளி சோலி பார்த்து விட்டு ஓய்ந்து போய் இரவு வந்தா ஏதாவது பிரச்சினை வம்பு வாய்தா இருந்தா? மனுசனுக்கு வரவர வீட்டிற்கு வருவதற்கு பிடிக்கவில்லை.

கொழுந்தனாரே விடுங்க நீங்க இரண்டு பேரும் பேசி தீர்வு கண்டு கொள்ளுங்கள். நீ பெருசா நான் பெருசா என்று விதாண்டாவாதம் செய்தால் பிரச்சினை முற்றுப் பெறாமல் வளர்ந்து கொண்டு தான் போகும்.

இங்கே பாருங்க வானதி நீங்க எங்கள் விஷயத்தில் தலையிடாதீங்க நானும் அப்போ இருந்து பார்க்கிறேன். ஏன் நீங்களும் தான் உங்கள் தங்கச்சி வனிதாவை தேவ் ஆனந்த் கட்டிக் கொடுக்க ஆசைப் பட்டீங்க, பெரிய உத்தமி மாதிரி என் மேல் தான் பூரா குற்றம் இருப்பது போல் பேசுகிறீர்கள்.

அண்ணி நீங்க எத்தனை பொறுமையா நல்லதை மட்டுமே சொல்கிறீங்க, ஆனால் இப்போது கூட உங்களை பிரிச்சு பேசி அவமானப் படுத்துகிறாள். நீங்கள் இவளைப் பேசுவதிற்குஇவளுக்குத் தான் அருகதை இருக்கிறதா? என்று ரவிக்குமார் சொல்வதைக் கேட்ட விஜயலதா இங்கே பாருங்க மாமா என்னை அவமானப்படுத்தி பேசாதீர்கள் நான் ஆசைப் பட்டேன் இல்லை என்று சொல்லவில்லை.

அக்கா தங்கச்சி ஒரே வீட்டில் வாழ்க்கைப் பட்டா எந்தப் பிரச்னையும் வராது என்று தான் அதற்காக வானதி அக்கா பெரிய தியாகச் செம்மல் போல் நீங்கள் பேசுவது கொஞ்சம் கூட சரியில்லை.

விஜயலதா பேசுவதைக் கேட்ட வானதி அமைதியாக இருந்து விட்டார். கோவில் போகும் வரை இனி நாம் எதுவும் பேசக் கூடாது.

அண்ணி மீது குறை சொல்கிறாயே உன் மேல் நீயே மண் அள்ளி போட்டுக் கொள்கிறாய். இத்தனை பட்டும் நீ திருந்த மாட்டாயா? அவுங்க என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவே மாட்டாயா? குழந்தைகள் முன் சண்டை போடாதீர்கள் என்று தானே சொன்னார்கள்.

உனக்கு எனக்கும் பொதுவாகத் தான் சொன்னாங்க. அதைச் சொல்வதால் அவர்களுக்கு ஏதாவது சுயலாபம் இருக்கவா? போகிறது. என்னவோ செய்து கொள்ளட்டும் என்று அமைதியாக வந்து இருக்கனும் அவுங்களை இதுக்குமேல் அவமானப் படுத்த முடியாது.

அண்ணி மன்னித்துக் கொள்ளுங்கள்.

விடுங்க கொழுந்தனாரே நானும் லதா சொல்வது போல் ஆசைப்பட்டேன் தான் ஆனால் உங்கண்ணன் சத்தம் போட்டதால் நான் ஒதுங்கி விட்டேன். ஒரே ஒரு தடவை தவறு இழைத்தாலும் தவறு தானே இப்போ சொல்கிறேன் தம்பி இனி என்னால் என் புருசனுக்கு தலைக் குணிவு வருவது போல் நான் நடந்து கொள்ள மாட்டேன்.

இவர்கள் பேசிக் கொண்டே வந்ததில் கோவில் வந்து விட்டது. இவர்களுக்கு அடுத்து அடுத்த காரில் வந்தவர்கள் கோவிலின் உள்ளே சென்று இருக்க.

இவர்களும் மேலே சென்றனர். என்ன வானதி ரொம்ப நல்லவள் மாதிரி பேசுகிறாய்? நீ யார் என்று எனக்குத் தானே தெரியும். என்ன நான் செய்தது எல்லார் கண்ணுக்கும் தெரிந்ததால் நான் தப்பானவள் ஆகி விட்டேன். நீ மட்டும் அன்று நானும் என் தங்கச்சி பேசியதை வீடியோ எடுக்காமல் இருந்து இருந்தால் இதே கோவிலில் தேவ் ஆனந்த் கையால் என் தங்கச்சி கழுத்தில் தாலி கட்ட வைத்து இருப்பேன்.

உன் தங்கச்சி முகம் ஏன் இப்படி குழவியிடம் கடி வாங்கி இருக்கிறது. என் தங்கச்சி சுனைனா அவளுக்காவது இப்போது தாலி ஏறிவிடும். ஆனால் உன் தங்கச்சி வனிதா முகத்தைப் பார்க்கிறவங்க தெறிச்சு ஓடி விடுவார்கள்.

விஜயலதா நீபேசுவதைப் பார்த்து எனக்கு சிரிப்பு தான் வருது. என்னவோ நீயும் உன் அப்பாவும் வலைவீசி தேடி மாப்பிள்ளை பிடித்தது போல் பேசுகிறீர்கள். நீ போட்டுக் கொடுத்த திட்டம் சொதப்பித் தான் அவளா போய் ஒரு இரவு பூராவும் ஆம்பளை கூடப் படுத்து எழுந்தவள் வீட்டில் இருக்கும் அத்தனை பேர் முன்னையும் எழுந்து வந்து வெட்கமே இல்லாமல் நின்று கொண்டு நீயும் அவளும் ஒருவர் மாற்றி ஒருவர் முகத்தில் சேரை பூசிக் கொண்டு இருந்தீங்களே அது நேத்து தான் நடந்தது.

நம் அத்தை முயற்சி எடுத்ததால் தான் இன்றைக்கு சுரேஷ் அம்மா அப்பா இந்தக் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார்கள். சும்மா வாயில் வடை சுடாமல் உன் தங்கச்சிக்கு ஆசிர்வாதம் செய் போ.

என் தங்கச்சி வாழ்க்கை பற்றி நீ கவலைப்பட வேண்டாம். அதை என்னோட அப்பா அம்மா பார்த்துக் கொள்வாங்க அப்படி அவங்களே பார்க்கவில்லை என்றாலும் நான் கூடப் பிறந்த அக்கா இருக்கிறேன். என் புருசன் இருக்கிறார் அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுப்பதற்கு உன் அக்கரை சக்கரை எல்லாம் உன் தங்கச்சி இல்லை இல்லை உன் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ளப் பாரு போ போ..


தொடரும்..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top