• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
318
நீ உடல் நான் நிழல்
பாகம் -45


நிழல் தேவ் ஆனந்த் வீட்டிற்குள் வரும் போது சுனைனா விஜயலதா அவர்களின் அம்மா அப்பா அனைவரும் பேசிக் கொண்டு இருந்தனர்.

உள்ளே வந்த நிழல் சுனைனா தந்தையின் காதுக்குள் புகுந்து விட்டது. காதுக்குள் எதுவோ புகுந்து விட்டது என்று அவர் திடிரென தலையை ஆட்டிக் கொண்டு இருப்பதைப் பார்த்து உடன் இருந்தவர்கள் பதற அவர் என்னவென்று சொல்வார்.

உள்ளே சென்ற நிழல் அவரை மிகவும் துன்பப்படவைத்து விட்டு பிறகு வெளியே வந்தது.

அப்பா என்று இருமகள்களும் அழைத்தனர். இத்தனை நேரம் நன்றாகப் பேசியவர் இப்போது அவர்கள் இருவரும் பேசுவது எதுவும் காதில் விழுகவில்லை. அவரின் செவி கேட்கும் திறனை இழந்து விட்டது.

இவர்கள் மூவரும் அவரிடம் பேச முயற்சி செய்ய அவருக்கு பதில் பேசத் தெரியவில்லை.

அப்பா உங்களுக்கு என்னாச்சு நன்றாகத் தானே இருந்தீர்கள்.

அவளையே உற்றுப் பார்த்தவர்சுனைனா கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்டார்.

இப்போ எதுக்கு பேசிக் கொண்டு இருக்கும் போது அவளை அடிக்கிறீர்கள். என்று சுனைனா அம்மா அவரிடம் பேச.

அவரை முறைத்துப் பார்த்தவர் நீ தான் சரியில்லை. நீ சரியாக இருந்து இருந்தால் இவளும் ஒழுக்கமாக இருந்து இருப்பாள்.

என்னமோ என் மேல் தான் குற்றம் போல் பேசாதீர்கள். நீங்கள் தான் உங்கள் பெண்ணுக்கு நல்ல புத்தி சொல்லி வளர்த்து இருக்க வேண்டும்.

என்னையே எதிர்த்துப் பேசுகிறாயா? நீ நான் ஆம்பளை வெளியே தான் அதிக நேரம் இருப்பேன். நீ தான் இவர்கள் கூடவே இருப்பாய் நான் என்ன உன்னை இவர்கள் கூடப் பேசவிடாமல் தடைபோட்டா வைத்து இருந்தேன்.

இவளையும் இங்கேயே கட்டிக் கொடுத்து விட்டு நாம் இந்த அரண்மனையே ஆளலாம் என்று நினைத்து இருந்தேன். எல்லாம் போச்சு என்று புலம்பிக் கொண்டு இருந்தார்.

அப்பா இப்போது ஒன்றும் கெட்டுப் போகவில்லை. நாளைக்கு இவளுக்கு நடக்கும் திருமணத்தை தடுத்து நிறுத்தி விடுங்கள். மிச்சத்தை நான் பார்த்துக் கிறேன்.

இங்கே பாருங்கள் அக்கா என் வாழ்க்கையில் நீங்கள் முடிவு எடுக்காதீர்கள். யார் தடுத்தாலும் நாளைக்கு எனக்கும் சுரேஷ்க்கும் திருமணம் நடப்பது உறுதி.

"ஏய் சுனைனா அந்த வேலைக்காரனை கட்டிக் கொண்டு என்னடி சுகத்தைக் காணப்போகிறாய்? "

அதை உன்னிடம் சொல்ல வேண்டியதில்லை. நான் உணர்ந்து கொண்டால் போதும். உனக்கு என்ன என் வாழ்க்கையை வைத்து விளையாட்டு வேண்டி கிடக்கு எல்லாம் என் நேரம். அது தான் உன் குடும்பத்து ஆட்கள் முன்பு நான் கூனிக் குறுகி நின்றேனே அப்போது என்னைக் குற்றவாளி ஆக்குவதற்கு என்னமா? நடிப்பு "போட்டாய்" இதை எல்லாம் தெரிந்த பிறகு நான் இன்னும் உனக்கு டால்டா டப்பா தூக்குவேனா?

நிழலுக்கு தோன்றியது இதுகள் எல்லாம் மறை கழண்டு சுத்த விட வேண்டும். ஒரு இடத்தில் உட்கார விட்டால் இன்னும் யார் குடியைக் கெடுக்கலாம் என்று தான் யோசித்துக் கொண்டு இருப்பார்கள்.

அங்கே இருந்த நான்கு பேரையும் ஆளுக்கொரு திசையில் திருப்பியது.

சுனைனா வை மட்டும் ஒரு அறைக்குள் செல்ல வைத்த நிழல் அவளை அங்கே இருக்கும் ஊஞ்சலில் அமர்ந்ததும் ஆட வைத்து சுனைனா வை தூக்கத்தை தழுவ வைத்தது.

விஜயலதாவை சமையலறைக்கும் ஹாலுக்கும் திரும்பத் திரும்ப நடக்க வைத்தது.

அவளின் அம்மாவை வாசலை தண்ணீர் தெளித்து கோலம் போட வைத்ததது.

இதென்ன கோலம் போட்டால் உடனே அழிந்து விடுகிறது. அந்தப் பெண்மணி குழம்பி குழம்பி மறுபடியும் முயற்சி செய்து கொண்டே இருந்தது.

என்னங்க இங்கே வாங்க நான் புள்ளி வைக்க வைக்க அது மாயமா மறைந்து விடுகிறது.

அடிப்போடி இவளே நானே தேங்காய் உரித்து வைக்க வைக்க காணாமல் போய் விடுகிறது. அதைக் கண்டு பிடிக்க முடியாமல் திணறிக் கொண்டு இருக்கிறேன்.

நாளைக்கு பெண்ணுக்கு கல்யாணம் உனக்குத் தேங்காய் உரிப்பது தான் முக்கியமா? முதலில் வாசலில் கோலம் போடுவது தான் முக்கியம்.

தேங்காய் வேண்டும் கோவிலுக்கு கொண்டு போவதற்கு என்று கூறியவர்
அங்கே இருந்த தேங்காய் முழுவதையும் உரித்து விட்டார். ஆனால் உரித்த தேங்காய் எங்கே சென்றது என்று தான் தெரியவில்லை.

சுனைனா அம்மா கோலப் பொடி டப்பாவே காலியாகி விட்டது. இருவருக்கும் இடுப்பு கழண்டு விட்டது.

அம்மாடி விஜயலதா எனக்கு குடிக்கத் தண்ணீர் கொண்டு வாமா என்று அவர்கள் இருவரும் கேட்க விஜயலதா சொம்பு நிறையத் தண்ணீர் பிடித்து வந்தாலும் அவர்களிடம் கொண்டு வரும் போது ஒரு சொட்டு தண்ணீர் கூட அதில் இல்லாமல் காலியாகி விட்டது.

தண்ணீர் கேட்டு எத்தனை நேரம் ஆச்சு உனக்கு என்ன பைத்தியமா? வெரும் சொம்பைக் கொண்டு வந்து நீட்டுகிறாய்?

நானும் தான் பார்க்கிறேன் என் மேல் பழி போடுவதே உங்கள் வேலையாகிப் போச்சு. நடந்து நடந்து கால் தனியாக கழண்டு விழுந்து விடும். என்று அங்கேயே அயர்ந்து கீழே படுத்து விட்டாள்.

நிழல் மரத்தின் மேல் நின்று கொண்டு இவர்களைப் பார்த்து சிரித்து விட்டு இவங்க மூன்று பேரையும் என்ன செய்யலாம் என்று யோசித்தது.

விஜயலதாவை அந்தரத்தில் தூக்கியது. அவள் தூக்கத்திலே
பறந்து செல்வதைப் பார்த்து அவளின் அப்பா வாய் தந்தி அடித்தது.

ல தா.. என்ன பறந்து போகிறாய்? என்று அவளின் பின்னாலேயே சென்றார்.

"திடீரென அவளைக் காணாமல் தவித்தார். விஜயலதா எங்கே போனாய். இந்த கும்மிருட்டில் எங்கேனு போய் தேடுவேன். "

அவரின் தோள் பட்டையை ஒரு கை பற்றியது. அவரின் ஈரக்குலையே நடுங்கியது.

மெதுவாக தன் தலையைத் திரும்பிப் பார்த்தார். அதில் அவரின் நாக்கு மேல் அன்னத்தில் ஒற்றிக் கொண்டது.

திறந்த வாயினுள் இருந்த சிறு நாக்கு வெளியே வந்து சென்று விட்டது. அவரை அப்படியே மேலே தூக்கித் தென்னை மரத்தின் பச்சை மட்டையில் அமர்த்தி விட்டது.

நிழலின் உருவம் மரத்தின் உயரம் வரை இருந்தது. அடுத்தது சுனைனா அம்மாவைத்தான் பார்த்தது. ஏற்கனவே கோலம் போட புள்ளி வைத்து ஓய்ந்து இருந்தவரை சுற்றிலும் அவர் வைத்த புள்ளிகளே எறும்புகளாக மாறி அவரைத் துரத்த ஆரம்பித்தது.

விஜயலதா அந்தரத்தில் தூங்கிக் கொண்டு இருந்தவள் திடீரென கீழே விழுந்தாள். அவள் கீழே விழுந்தது தெரியாமல் அவளின் அம்மா அவள் மேல் விழுந்து இருவரும் உருண்டு கொண்டு இருந்தனர்.

சுனைனா அப்பா தென்னை மரத்தின் மட்டையில் இருந்து எப்படி கீழே வருவது என்று தெரியாமல் கையால் துலாவி அங்கே இருந்த தேன் கூட்டில் கையை வைத்து விட தேனீக்கள் சும்மா விடுமா?? சோலி முடிஞ்சது அதை விரட்டி விடுவதற்கு மரத்தை ஆதராமாக பிடித்து இருந்த கையை எடுக்கவும் அங்கே இருந்து கீழே விழுந்தார்.

கீழே விழுந்தவர் வைக்கோல் போரில் விழுந்து அவர் விழுந்த வேகத்திற்கு இடுப்பு பகுதி வைக்கோல் போரில் நன்றாக மாட்டி விட்டது.

விஜயலதா அவளின் அம்மா இருவரும் கீழே உருண்டு சென்றவர்கள் மாட்டுத் தொழுவத்தின் அருகில் சென்று விட்டனர். அப்போது அங்கே இருந்த ஒரு மாடு எழுந்து நின்று சாணியும் மூத்திரமும் அவர்கள் இருவரின் மேல் ஊற்றி விட்டது.

உன்னால் நான் கெட்டேன் என்னால் நீ கெட்டாய் என்று இருவரும் எழுந்து நின்று கொண்டு அங்கே இருக்கும் கிணற்று அடிக்குச் சென்று தண்ணீர் ஊற்றி கழுவிக் கொள்ளலாம் என்று தான் நினைத்து குடத்தை கட்டி தண்ணீர் சேந்தினர். அவர்கள் விட்ட குடம் தண்ணீர் நிரம்பியதும் மேலே தூக்கினர். ஆனால் குடம் ஓட்டை என்பதால் அவர்கள் வெளியே எடுக்கும் போது அதில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை.

விஜி என்னடி செய்கிறாய்? நாத்தம் குடலைப் பிடுங்குகிறது. இன்னும் விடிவதற்கு கொஞ்ச நேரம் தான் இருக்கிறது. சீக்கிரம் உங்கள் வீட்டு ஆட்கள் எழுந்து விடும் முன் இந்தக் கோலத்தை கழுவ வேண்டும். இல்லாட்டி மானக்கேடா போய் விடும்.

ஆமாம் மா அது தான் வேகவேகமாக தண்ணீர் எடுக்கிறேன். ஒரு வேளை குடத்தில் தண்ணீர் எட்ட வில்லையோ? என்னமோ? நீ வேண்டும் என்றால் கிணற்றில் இறங்கி தண்ணீர் எந்த அளவுக்கு இருக்கிறது என்று பார்க்கிறாயா?

உன்னைப் போய் பத்து மாதம் சுமந்து பெற்றேன். அதற்கு தான் என்னை உயிரோடு கொல்லப் பார்க்கிறாயா? கொஞ்சம் கூட உனக்கு என் மேல் பாசமே இல்லை.

சொல்லுவாய் மா உங்களுக்கு உதவப் போய் தான் நான் இந்த நிலையில் இருக்கிறேன். நான் மட்டும் கொஞ்சம் உன் புருசன் பக்கம் சாயாமல் என் புருசன் பக்கம் சாய்ந்து இருந்தால் இப்போது பஞ்சு மெத்தையில் தான் உறங்கி இருப்பேன். இப்படி சாணியிலும் மூத்திரக் குளியல் முடித்துக் கொண்டு நடுச்சாமத்தில் நாறிக் கொண்டு இருக்க மாட்டேன்.

விஜி நீ வாய் தான் ஏழு ஊருக்கு நீட்டுகிறாய்? ஆனால் காரியத்தில் வெரும் பூஜ்ஜியம் தான். உங்கப்பன் அந்த கருவாயன் எங்கே போனான் என்று தெரியவில்லை.

என்னம்மா? சொல்கிறாய்? அவர் எங்கே போனார். நம் இருவரையும் தனியாக விட்டு விட்டு.. அவர் ஏதாவது சின்ன வீடு செட்டப் வைத்து இருக்கிறாரா??

எதை வைத்து அப்படி சொல்கிறாய்?

இந்த ஆம்பளைகளை எப்போதும் நம்பவே கூடாது மா அது தான் நாம் மூன்று பேரும் தான் நின்று இருந்தோம். ஆனால் அவரை மட்டும் காணவில்லை. அது தான் அவர் நம்மை நம்பவைப்பதிற்காக நாடகம் ஆடி விட்டு அவர் சின்ன வீட்டைத் தேடிப் போய் விட்டாரோ??

உங்கப்பன் இருட்டில் தனியாக உச்சாப் போகவே பயப்பான். அவனாவது இந்த கும்மி இருட்டில் வைப்பாட்டி வீட்டிற்கு போகப் போகிறான். உங்கப்பன் அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்.

"என்னமா, இப்படி பொசுக்குனு சொல்லி விட்டாய்? " என்ன இருந்தாலும் அவர் உன் கழுத்தில் தாலி கட்டியவர்.

அது தாண்டி அந்த ஆளுக்கு எப்போதும் அடுத்தவர் சொத்தை எப்படி ஆட்டைய போடலாம் என்று தான் நினைப்பான். அவனாவது வைப்பாட்டி வைத்து அவளுக்கு செலவுக்குப் பணம் கொடுக்கப் போகிறான்.


"நீ பேசுவதை அப்பா கேட்டு விட்டா என்னமா? செய்வாய்??

போடி அதை அப்போது பார்க்கலாம். இப்போது தண்ணீர் கிடைக்குமா? இல்லை இந்த நாத்தத்தில் தான் சாக வேண்டுமா??

அம்மா எனக்கு நல்ல யோசனை தோன்றுகிறது. நாம் மோட்டார் போட்டுக் கொண்டு கூட குளிக்கலாம் .

விஜயலதா மோட்டார் ரூம்மிற்குச் சென்றவள் . மோட்டார் சுவிட்ச்
போட்டவள் உடனே கரண்ட் கட்டாகி விட்டது . அப்போது தான் தலையைக் கொஞ்சம் தூக்கிப் பார்த்தா அங்கே வைக்கோல் போரில் ஒரு ஒருவம் அதைப் பார்த்து பயந்து கொண்டு பேச்சு வராமல் மயங்கி விழுந்தாள்.


தொடரும்..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top