• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
318
நீ உடல் நான் நிழல்
பாகம் - 44


தேனருவி நிழலைப் பார்த்து நீ இந்தப் பேனாவிலா எழுதினாய்? போச்சு நாளைக்கு நான் எப்படி இந்த நோட் எல்லாம் சப்மிட் செய்வேன் என்று நினைத்து தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள்.

நிழல் ஏன் இந்தப் பேனாவில் எழுதினால் அனைத்தும் அழிந்து விடுமா??

அது தெரிந்தும் நீ எதுக்கு இதை வாங்குனாய்?

அது நிழல் எனக்கு ஒருத்தரை மாட்டி விட வேண்டும். அதற்கு தான் இதை வாங்கினேன்.

யார் அது? நான் இருக்கும் போது நீ எதுக்கு கவலைப் படுகிறாய்? உன்னிடம் நான் இல்லாத நேரத்தில் யாராவது வம்பு இழுத்தார்களா??

நிழலு என்கிட்ட வம்பிழுக்க இனி புதுசா பிறந்து தான் வரவேண்டும்.

அவ்வளவு பெரிய அப்பாடக்கரா நீ.. அது தான் கரப்பாம் பூச்சியைப் பார்த்து அண்டார்ட்டிகா வரைக்கும் ஓடுவியே என்று நிழல் நேரம் பார்த்து வார.

நான் எல்லாம் ஜான்சிராணி பரம்பரை என்று கெத்து காண்பித்தாள். தேனருவி!!

அப்படி கீது வெளியே சொல்லி விடாதே. அள்ளிட்டு போய் விடுவாங்க?

எங்கே??

இல்லை ஜான்சிராணி பரம்பரை என்று சொன்னாயா? அது தான் ஏதாவது ஆள் இல்லாத கோட்டைக்கு வாரிசு ஆக்கி விடுவாங்க.

ஐயோ நிஜமா வா சொல்கிறாய்? ஜாலியா இருக்கும்ல மகாராணி மாதிரி குதிரையில் உட்கார்ந்து கொண்டு ஊரைச் சுற்றி வரலாம்.

கிழிஞ்சுது போ குதிரை மேலே உட்காருவதற்கு எதுக்கு மகாராணி வேசம் போடவேண்டும் அது தான் கொடைக்கானல் அப்புறம் பீச் இந்த மாதிரி இடங்களில் எல்லாம் காசு கொடுத்தாலே குதிரை மீது சவாரி செய்யலாம்.

நிழலு இருந்தாலும் உனக்கு இந்த நக்கலு மட்டும் குறையவே இல்லை.

எனக்கு விக்கலும் தெரியாது நக்கலும் தெரியாது. ஏதோ கெமிக்கலு இருக்குதமா? இப்போது எல்லாம் புதுசு புதுசா கண்டுபிடிக்கிறாங்க.

விட்டா அரசியல் மேடை மாதிரி பேசுகிறாய் நிழலு. இப்போது நீ டாபிக் மாற்றாதே இந்த நோட்டில் நீ எழுதியது எல்லாம் இன்னும் ஒரு மணி நேரத்தில் அழிந்து விடும் நான் நாளைக்கு இதை எப்படி அந்த மீரா மேடம் கிட்ட சப்மிட் செய்வேன்.

என்ன பேர் சொன்னாய் மீரா வா

இல்லை ஜீரோ?

ஆமா உங்க காலேஜில் வெள்ளையா அழகா இருந்தாங்களே அவங்களையா? சொல்கிறாய்?

அவுங்க வெள்ளையா இருக்கிறாங்களா? அப்போ நான் என்ன? கரிச்சட்டி மாதிரி இருக்கிறேனா? நீ எனக்கு பாடிக்காடா வருகிறாயா? இல்லை எல்லாரையும் பார்த்து ஜொள்ளு விடுகிறாயா??

அட இது என்ன வம்பா போச்சு நான் ஜொள்ளு விட்டு என்ன கண்ணாலம் கட்டிக்கப் போகிறேன்.

அந்தப் பயம் இருக்கட்டும் என்று தேனருவி சொல்ல.

நீ எப்போது பார்த்தாலும் என்னை டேமேஜ் செய்கிறாய்? என்று நிழல் அவள் மீது குறைபட.

நான் உன்னை எங்கே டேமேஜ் செய்தேன். உன்னை மேனேஜ் செய்வது தான் எனக்கு இப்போது பெரும் கஷ்டமா இருக்கிறது.

சரி நிழல் எனக்குத் தூக்கம் வருகிறது. நான் தூங்குகிறேன். நீ இந்த நோட்டில் இந்தா இந்த ஹீரோ பேனாவில் எழுதி விடு.

தேவ் ஆனந்த் வீட்டில் இவளோடு பேசிவிட்டு தன் அண்ணா தன்னிடம் சொன்ன நேற்று நடந்த சம்பவங்களை அசை போட்டுக் கொண்டு இருந்தான்.

எவ்வளவு மோசமான புத்தி அவர்களுக்கு நல்லவேளை அண்ணா ரூபத்தில் நான் தப்பித்தேன். ஆனால் அவள் இங்கே வராமல் வெளியே சுரேஷ் வீட்டிற்கு சென்றதும் அதிசயம் எப்படியோ நாம் தப்பித்தோமே தேனருவி இங்கே வந்த பிறகு இன்னும் என்னவெல்லாம் செய்யக் காத்து இருக்கிறார்களோ?

வீட்டில் இருப்பவர்கள் பேசி முடித்து இருந்தனர். சுனைனா சுரேஷ் இருவருக்கும் நாளைக்கு கோவிலில் திருமணத்தை முடித்து விட்டு ஒரு வாரத்தில் ரிசப்ஷன் வைத்துக் கொள்ளலாம் என்று சுனைனா அப்பா அம்மா என்று அனைவரும் பெண் கெட்டுப் போய் விட்டாள். சூட்டோடு திருமணம் செய்து வைத்து விடலாம். யாருடைய காதுக்கும் தெரியும் முன்பு என்று நினைத்து அவசர முடிவாக எடுத்து இருந்தனர்.

நிழலுக்கு அதே இடத்தில் இருக்க மொக்க போட்டது அதனால் தன் நினைவால் பறந்து விட்டது. தேவ் ஆனந்த் வீட்டிற்குத் தான்.

தேவ் ஆனந்த் வீட்டில் விஜயலதா மற்றும் சுனைனா அவர்களின் அப்பா அம்மா நால்வரும் தான் மாநாடு போட்டு இருந்தனர்.

நாம் ஒன்று நினைத்தால் இங்கே நடப்பது வேறு மாதிரி ஆகி விட்டதே. என்று தான் அமைதியாக அமர்ந்து இருந்தனர்.

விஜயலதா அப்பா உன் நம்பி இங்கே அனுப்பி விட்டால் நீ அவள் வாழ்க்கை நாசம் ஆவதற்கு வழி சொல்லி கொடுத்து இருக்கிறாய்?

ஒரு விசயம் பேசுகிறோம் என்றால் சுற்றி யாராவது இருக்கிறார்களா? இல்லையா? என்று பார்க்க மாட்டாயா நீ?

இத்தனை வருடம் இந்த வீட்டில் இருக்கும் நீ அது கூட உனக்குத் தெரிய வேண்டாமா? உன் வாழ்க்கையும் இதில் அடங்கி இருக்கிறது. அதை மறந்து விட்டு கண்டமேனிக்கு இப்படி செய்து கடைசியில் என்னோட நீண்ட கால ஆசையில் மண் அள்ளி போட்டு விட்டாயே மா.

அப்பா நீங்க வேற ஏன் புரியாத மாதிரியே பேசுகிறீர்கள். ஒரு நாள் இவ முழுக்க காணம் நான் எங்கே எல்லாம் தேடிப் பார்த்தேன். இவள் மட்டும் அன்றைக்கு காணாமல் போகாமல் இருந்து இருந்தால் நான் அவனுக்கு பொண்ணு பாக்க போய் இருப்பேன்.

போய் மட்டும் என்ன கிழிச்சு இருக்கப் போகிறாய்? அவுங்களை வீட்டில் இருக்கும் பொண்ணை கட்ட வைத்து இருந்தால் நீயும் சமார்த்தியசாலி.

என்னமோ இவள் மட்டும் தான் வீட்டில் இருந்தால் போல் பேசுகிறீர்கள். அந்த வானதி அவள் தங்கச்சியை வரவைத்து விட்டாள். நான் எந்தப் பக்கம் யோசித்தாலும் அவளும் அவள் தங்கச்சியும் போட்டியா வந்து நிற்கிறாங்க நான் தான் என்ன செய்வது?

அது தான் சுனைனாவை அவனுடைய அறைக்கு அனுப்பி இரண்டு பேரும் ஒரே அறையில் இருந்தால் பஞ்சும் நெருப்பும் பத்திக்கும். நான் எல்லோரையும் அழைத்துக் கொண்டு போய் கதவைத் திறக்கும் போது வேறு வழி இல்லாமல் இருவரும் கையும் களவுமாக மாட்டிவிடுவார்கள். பிறகு திருமணம் தான் என்று இருந்தேன். இடுப்பிலேயே தாலிக் கயிறு கூட வைத்து இருந்தேன்.

காலையில் நான் கரெக்டா தான் போய் பார்த்தா என் புருசன் அங்கே இருக்கிறார். எனக்கு ஒரு நிமிடம் உயிரே போய் விட்டது.

ஐடியா கொடுத்தவளே நீ தானே உனக்கு எதுக்கு உயிர் போகிறது. அப்படியே சுனைனா உன் புருசனிடம் கெட்டுப் போய் இருந்தாலும். இந்த வீட்டு மருமகள் ஆகி இருப்பாள்.

இப்போ பாரு உன் வீட்டு பண்ணையில் வேலைசெய்பவன் என் மாப்பிள்ளை ஆகி விட்டான். ஏன்டி சுனைனா? உன் புத்தி எங்கே போச்சு. நீ எதுக்கு அந்த அறைக்குப் போகாமல் வீட்டிற்கு வெளியே போய் அவுங்க கூட இருந்தாய்? சுனைனா அப்பா கேட்க.

அவள் என்ன சொல்வாள்? ஆனாலும் தன்னைப் பார்த்தாலே விலகிச் செல்பவனைக் காட்டிலும். சுரேஷ் அவளுக்குப் பிடித்து விட்டது.

சுனைனா காலையில் யாருக்கும் தெரியாமல் போய் விடுகிறேன் என்று சொன்னதும் தயங்காமல் நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னான். அது அவளுக்குப் பிடித்தது.

அம்மா அப்பா நான் அக்கா சொன்ன போது வேண்டாம் அது தப்பு என்று தான் சொன்னேன் ஆனால் அவள் வம்படியா இதைச் செய்ய வைத்து விட்டாள்.

ஏண்டி நான் உன்னிடம் சொன்னதை அந்த மனுசன் கேட்டு இருப்பார் என்று என்ன நான் கனவா கண்டேன். அவர் மட்டும் அதைக் கேட்க வில்லை என்றால் நீ தேவ் ஆனந்த் கையில் தான் தாலி வாங்கி இருப்பாய்.

நிழலுக்கு இவங்களுக்கு ஏதாவது இன்னும் பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்து விட்டது. முதலில் அந்த கொசுறு மண்டையன் அவனுக்கு ஏதாவது செய்ய வேண்டும்.

(அது யார்? கொசுறு மண்டையன் நான் தான் நிழலிடம் கேட்க.. ரைட்டர் ஜி எல்லாம் சுனைனா அப்பா தான் தேனருவி மட்டும் பட்டப் பேர் வைக்கிறாள். நானும் தான் வைப்பேன்.)

சரி அந்த ஆளை என்ன செய்யப் போகிறாய்?

அதைப் பார்க்கத்தானே போகிறீங்க என்று இப்போது அங்கே சென்றது தன் உருவத்தை சின்ன ஈ யாக மாற்றி விட்டது.

கொசுறு மண்டையன் காதுக்குள் போய் விட்டது. பேசிக் கொண்டு இருந்தவர் தீடிரென துள்ளிக் குதித்தார்.

அப்பா என்னாச்சு என்று மகள் இருவரும் மனைவி ஒரு பக்கம் என்னங்க என்னாச்சு??

கொசுறு மண்டையன் என்னவென்று தெரிந்தால் தானே சொல்லுவார்.

கொசுறு மண்டையன் தலையில் தான் முடி இல்லை ஆனால் காதுக்குள் புதரே வளர்த்தி வைச்சு இருக்கானே. ஏதாவது லைட் ஹவுஸ் மாதிரி இருந்தா நல்லா இருக்கும் . இது என்ன காதா? பனைமரத்தில் செறை எடுக்காமல் வைத்து இருக்குமே அது மாதிரி இருக்குது.

கொசுறு மண்டையா நீ தாண்டா எனக்கு இன்னைக்கு எண்டர்டெயின்மெண்ட் என்று உள்ளே சென்ற நிழல் இது என்ன ஒரே பிசுபிசுனு இருக்குது படு பாவி காதை சுத்தமே செய்ய மாட்டான் போல் இருக்குது. முதலில் இவன் காதுக்குள் ஒரு லிட்டர் பெனாயில் தான் ஊத்தி விட வேண்டும்.

இந்தக் காதுக்குள் புகுந்து அந்தக் காதில் வந்து விடத்தான் திட்டம் போட்டது. ஆனால் இந்த காதுக்குள் இருந்து வெளி போவதற்கு வழி தெரியாமல் நிழல் விழிக்க தேனருவி செல் போனில் கூகுள் மேப்பில் வழி தேடுவது போல் நாமளும் வழி தேடலாம் என்று நிழலாக இருக்கும் ஈ இப்போது அதன் கண்ணில் திரையைப் பார்க்க இச்சை இங்கே சிக்னல் கிடைக்க மாட்டீங்குது இப்போது நாம் என்ன செய்யலாம்.

நிழலுக்கு யோசனை வந்து விட்டது. அதனுடைய கல்லறைத் தோட்டத்தில் இருக்கும் குட்டிச் சாத்தானுக்கு அழைத்தது.

டேய் மச்சான் என்ன செய்து கொண்டு இருக்கிறாய்?

பன்னாடை எந்த நேரத்தில் என்ன கேள்வி கேட்கிறான் பாரு?

ஏன்டா என்னைத் திட்டுகிறாய்? கல்லறைத் தோட்டத்தில் இருக்கும் புளியமரத்தில் இருக்கும் குட்டிச் சாத்தான் பதிலுக்கு கேட்க.

மரியாதை கொடுத்து பேசுடா கொஞ்சமாச்சும் சீனியர் பேய்க்கு மரியாதை என்பதே இல்லை. சரி நீ என்ன செய்து கொண்டு இருக்கிறாய்??

நான் புளியமரத்தின் அடியில் புஷ்பலதா மடியில் படுத்துக் கொண்டு இருக்கிறேன்.

ஓஹோ பேய் பிசாசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உனக்கு புஷ்பலதா மடி கேட்கிறதா?? நான் ஒரு லொக்கேசன் அனுப்பி விடுகிறேன். அதற்கு கூகுள் போய் வழி கண்டு சொல் என்று கொசுறு மண்டையன் காது வரைபடத்தை அனுப்பி வைத்தது.

அப்புறம் எல்லாரும் எவ்வளவு சீரியசாக கதை எழுதிக் கொண்டு இருக்கிறாங்க ஆனால் இந்த ரைட்டர் ஜி இப்படி எழுதிட்டு இருக்கிறதே என்று ஏதாவது பீல் செய்கிறீர்களா? கதையின் போக்கு எப்படி இருக்கிறது என்று அப்படியே படித்து விட்டு அந்த கமெண்ட் பாக்ஸில் உங்கள் பொன்னான கருத்தைச் சொன்னா ஏதோ நமக்கும் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கும்ல அது தான் வேறு என்ன காசு பணமா கேட்க போகிறோம்.



தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top