Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 316
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 43
பாகம் - 43
அத்தை என்று அழைத்துக் கொண்டு தேனருவி உள்ளே செல்ல அதற்குள் தேவ் ஆனந்த் அம்மா என்று அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
கமலா அம்மா யாரு என்று சமையல் அறையில் இருந்து வெளியே வந்தவர் தேவ் ஆனந்த் பார்த்து. வா ராசா சாமி நல்லா இருக்கிறாயா? வூட்டிலே எல்லா நல்லா இருக்கிறாங்களா??
நீ மட்டும் தான் வந்தாயா? யாரோ அத்தை என்று அழைத்த மாதிரி இருந்தது. என்று எட்டிப் பார்த்தார்.
பாரப்பா சின்ன வயதில் இருந்து உங்க கூடவே சுத்திட்டு இருந்த நான் கூப்பிட்டது உங்களுக்கு யாரோவா? அத்தை என்று தேனருவி மூக்கு விடைக்க வந்து நின்றாள்.
மருமகளே வா வா ஆமா இதுக்கு முன்னால் நீ எத்தனை தடவை இங்கே வந்து இருக்கிறாய்? அப்படியே வந்தாலும் மின்னல் மாதிரி ஓடி விடுவாய்?
இருந்தாலும் நீங்கள் என்னைய எப்படி மறக்கலாம். நான் உங்கள் கூட டூ என்று நின்றாள்.
நீ நின்று கொள் நீ வாப்பா உட்கார் உனக்கு ஏதாவது சாப்பிட எடுத்து வருகிறேன்.
அம்மா அது எதுவும் வேண்டாம் இப்போது தான் அத்தை வீட்டில் போண்டா கேரட் அல்வா எல்லாம் சாப்பிட்டு வந்தேன் வயிறு நிறைந்து இருக்கிறது.
நினைவு வந்தவளாக தேனருவி அத்தை இந்தாங்க யசோ உங்களுக்குத் தான் கொடுத்து விட்டு இருக்கிறார்கள். நீங்களும் சாப்பிடுங்கள்.
அங்கே வை தேனு நான் இப்போது தான் காஃபி குடித்தேன்.
அங்கே சிறிது நேரம் பேசிவிட்டு இப்போது இருவரும் அங்கே இருந்து விடை பெற்றனர்.
ஹே ஹனி நான் உன்னை வீட்டில் விட்டு விட்டு வீட்டிற்கு போய் போன் செய்கிறேன் என்று கூறிய தேவ் ஆனந்த் இப்போது அவளை வீட்டில் இறக்கி விட்டு விட்டு இப்போது காரில் அமர்ந்தவாறே வெளியே வந்த யசோதாவிடம் விடை பெற்றான்.
மாப்பிள்ளை உள்ளே வாங்க சாப்பிட்டு விட்டு போகலாம்.
அத்தை என் வயிற்றில் இடமே இல்லை. எனக்கு பசிக்கவே இல்லைங்க. நேற்றும் டிரைவ் செய்து இன்றும் டிரைவ் செய்து உடல் சோர்வாக இருக்கிறதுங்க. நான் மதுரை போய் வந்து விட்டதும் இங்கே கிளம்பி வந்து விட்டேன். இன்னும் அப்பா அம்மா கூட பேசவில்லை.. அது தான் இனி அடிக்கடி வருவேனே அப்போது சாப்பிட்டு கொள்கிறேன்.
சரிங்க மாப்பிள்ளை என்று விடை கொடுக்க தேனருவி யிடம் கண்ணாலே விடை பெற்று இப்போது அங்கே இருந்து கிளம்பி விட்டான்.
தேனருவி இப்போது படிக்கவில்லை மா நீங்கள் சாப்பிட்டு விட்டு தூங்குங்கள் நான் பிறகு சாப்பிட்டு கொள்கிறேன் என்று அவள் அறைக்குச் சென்று விட்டாள். எழுதுவது நிறைய இருக்கிறது என்று உள்ளே சென்றவள்.
நிழலைத் தான் திட்டினாள் இந்த லூசு கண்ணிலேயே தட்டுப் பட மாட்டீங்கிறது எனக்கு இருக்கும் எழுத்து வேலைக்கு அதை எழுதச் சொல்லலாம் என்று பார்த்தால் எங்கே போய் தொலைந்ததோ??
நிழல் அவள் அறையில் மின் விசிறியில் தான் தொங்கிக் கொண்டு இருந்தது.
என்னம்மா கண்ணு இப்போது தான் நான் உனக்கு நியாபகம் வருகிறேனா? படிக்கும் வாசகர்கள் கூட நிழல் பாப்பா இல்லாமல் நல்லா இல்லை நாங்கள் ரொம்ப மிஸ் செய்கிறோம் களத்தில் இறக்கி விடுங்கள் என்று ரைட்டர் ஜி கிட்ட
என்னைத் தேடி இருக்கிறார்கள். ஆனால் நீ உனக்காக நான் வேலை செஞ்சு களைச்சுப் போய் கல்லறை தோட்டத்தில் இளைப்பாறி வரலாம் என்று கொஞ்சூண்டு நேரம் தான் போனேன் நீ அதுக்குள்ளாக சும்மா கரிச்சுக் கொட்டுகிறாய்?
அச்சோ என்ற ராசாத்திப் பேய்ல்ல கோச்சுக்காதே. நான் உன்னைத் தேடிக் கொண்டு தான் இருந்தேன்.
ஆமா நம்பிட்டேன் போ. நீ உன் கையில் நான் கிடைத்தால் மறுபடியும் அந்த பொட்டிற்குள் போட்டு பூட்டி வைக்கிறேன் என்று திட்டியது எல்லாம் எனக்குத் தெரியாது நினைத்தாயா??
சொல்வா?? வேண்டாமா?? நான் உனக்காக என்னவெல்லாம் செய்தேன் என்று நிழல் தேனருவியிடம் மல்லுக்கு நிற்க.
நிழலின் தொங்கும் கூந்தலை கையில் பிடித்து இழுத்தவள். என்ன? சத்தம் பெருசா இருக்கிறது. நீ கனவுகளின் தோழி ஆதிரா அவுங்க கதை டைட்டில் எடுத்து சொல்லவா?? வேண்டாமா?? என்று பில்டப் கொடுக்கிறாயா?
ஒழுக்கமா சொல்லிட்டே எனக்கு இந்த நோட்டில் இருப்பதை எல்லாம் இந்த நோட்டில் எழுதிக் கொடு.
விட மாட்டாளே என்ன நடந்தாலும் அவள் காரியத்தில் கண்ணாக இருப்பாளே. பேசாமல் நெருப்பின் சாம்பலாய் சாருபிரபா ரைட்டர் கிட்டவாவது வேலைக்கு சேர்ந்து இருக்கலாம்.
என்ன? நிழல் வாய்க்குள் முனங்குகிறாய்?? நீ சொல்வது எனக்கு காது கேட்காது என்று நினைத்தாயா??
அது நெருப்பு நீ வெறும் பருப்பு என்று அவள் நிழலிடம் கூறிவிட்டு இதை எல்லாம் எழுது என் முன்ஜென்மமே என்று கூறிவிட்டு அவளுக்கு தேவ் ஆனந்த் கிட்ட இருந்து போன் வரவும் அதை அட்டெண்ட் செய்து பேச ஆரம்பித்து விட்டாள்.
நிழல் தனது இரண்டு கையிலும் பேனாவைப் பிடித்து எழுதிக் கொண்டு இருந்தது.
நிழல் இதில் அவளுக்கு ஒரு டுவிஸ்ட் வைத்தது. ஆனால் அது தெரியாமல் தேனருவி நாளைக்கு சிக்கப் போகிறாள்.
அது எழுதி முடிக்கும் வரை இவள் போன் பேசிக் கொண்டு இருந்தாள். பிறகு நாளைக்கு கல்லூரியில் பார்க்கலாம் என்று கூறிவிட்டு வைத்த பின்னால் தான் பார்த்தாள் நிழல் பூராவும் எழுதி முடித்து விட்டது என்று.
ஆமா அது என்ன நீ என்னமோ சாதனை செய்தேன் சொன்னாயே இப்போது சொல் என்று தேனருவி கேட்க நிழல் அந்த நால்வரையும் குளத்தில் தள்ளி விட்டதிலிருந்து சுனைனா உன் வாழ்க்கை பல்ப் வைக்க இருந்ததை நான் தான் ஏற்கனவே உன்னிடம் சொல்லி இருந்தேனே அதனால் அவளுக்கு அவள் பாணியிலேயே சென்று வேறு ஒரு வீட்டிற்குள் விட்டு வந்தது வரைக்கும் சொல்லி முடித்தது.
தேனருவி உனக்கு இன்னும் ஒரு உண்மையைச் சொல்கிறேன். நான் இத்தனை நாட்கள் யாரைப் பழி வாங்க இந்தப் பூமியில் நிழலாக சுற்றி திரிந்தேனோ? அவர்களைப் பார்த்தேன்.
நிஜமாகவா? சொல்கிறாய்? பார்த்தேன் சொல்கிறாய்? எங்கே எப்போது பார்த்தாய்? உனக்கு உதவி வேண்டுமா? நான் உனக்கு உதவி செய்கிறேன்.
ஆமா உன்னை அன்று கீர்த்தி டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வம்பிழுத்தார்களே அவர்கள் நான்கு பேரையும் தான் என் கல்லறைத் தோட்டத்தில் வைத்து நல்ல நைய புடைத்து அவர்கள் கார் குளத்தில் விழுக வைத்து விட்டேன்.
அவர்களுக்கும் நீ பழி வாங்கப் பேகிறவர்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா??
ஆமா நான் அதை அந்த நால்வரையும் கல்லறைத் தோட்டத்தில் அடிக்கும் போது தான் பார்த்தேன்.
ஏதாவது அடையாளம் இருந்ததா? உனக்கு எப்படி அவர்கள் தான் என்று தெரிந்தது.
அவர்கள் நான்கு பேருக்கும் ஆறு விரல்கள் இருக்கும் அது தான் எனக்கு அவர்களைப் பழி வாங்கவே குளத்தில் தள்ளி விட்டேன். ஆனால் பிறகு தான் தெரிந்தது. அவர்கள் அப்பாக்களுக்கும் கையில் ஆறு விரல்கள் இருப்பதைக் கண்டு கொண்டேன்.
அவர்கள் நால்வரும் பெரிய அரசியல் வாதிகளின் பையன்கள் ரொம்ப மோசமானவர்கள்.
தேவ் ஆனந்த் அவர்களின் அரண்மனை வீட்டின் மேல் அவர்களுக்கு ஒரு கண் இருக்கிறது. கண்டிப்பாக அவர்கள் மீண்டும் இங்கே வருவார்கள். அப்போது நான் அவர்கள் ஒவ்வொருவராக பழி வாங்குவேன்.
என்ன? நான் வாக்கப் பட்டுப் போகும் வீட்டு மேல் அவனுங்க கண் வைத்து இருக்கிறார்களா? நானும் உன் கூட கூட்டணி வைத்துக் கொள்கிறேன். பாகுபலி படத்தில் அனுஷ்கா வில் விடுவது மாதிரி நானும் அவர்கள் மேல் அம்பு விடுகிறேன். என்று தேனருவி சொல்ல..
ஆமா நீ ஆலா மிட்டாய் பார்த்து வேண்டும் என்றால் ஜொள்ளு விடுவாய்.. அம்பு விடும் ஆளும் மூஞ்சியையும் பாரு. அவனுங்க நீ அம்பு விடும் வரைக்கும் பூ பறித்துக் கொண்டு இருப்பாங்களா??
நிழலு நீ என்னைத் தப்பாக புரிந்து விட்டாய்? நான் எல்லாம் களத்தில் இறங்கி அடிச்சேனு வைச்சுக்க அவன் கையில் எக்ஸ்ட்ரா இருக்கிற அந்த ஆறாவது விரலில் தூரி கட்டி ஆடுவேன்.
சட்டப் யுவர் மௌத் என்று நிழல் சொல்லி விட்டு. நீ ஆடுவேன் என்று சொன்ன பிறகு தான் எனக்கு நியாபகம் வருகிறது.
உன் தங்கச்சி ப்ளவர் ஐ இருக்கிறாள அவள் அறைக்குள் நான் இனறைக்கு போனேன்.
அது என்ன ப்ளவர் ஐ நீ நிழலு நல்லா டெவலப் ஆகி விட்டாய். ம்ம் எப்படியோ? என் கூட கல்லூரி வந்து இங்கிலீஷ் எல்லாம் பேசுகிறாய்? அழகா அர்த்தம் கண்டு பிடித்து பேர் வைக்கிறாய்??
ஆமா நான் இதற்கு பி. ஹெச். டி பண்ண வேண்டும் போ போ நித்யா சபரி அவுங்க தான் அவளுக்கு அந்தப் பெயர் வைத்து அழைக்கிறாங்க. ஆமா நான் இப்போது எதில் விட்டேன்.
நியாபகம் வந்து விட்டது. நீ காணவில்லை என்று சொன்ன பொருட்கள் எல்லாம் உன் தங்கச்சி தான் எடுத்து வைத்து இருக்கிறாள்.
நிழலு அவள் மேல் வீணாக பழியைப் போடாதே அவள் அது மாதிரி எல்லாம் செய்ய மாட்டாள்.
நீ இப்படியே நம்பிக் கொண்டு இரு.. நான் சொன்னால் நீ நம்பமாட்டாய் அது தான் இப்போது பார் என்று தனது நெஞ்சில் இருக்கும் பட்டண் தட்டவும் அது திரை போல் ஆகி பூவிழி கபோர்டில் தேனருவி புதுசா எது வாங்கினாலும் அதை அவள் எடுத்து வைத்து இருந்தாள்.
இன்றைக்கு வாங்கி வந்த பேனாவைத் தான் தேடிக் கொண்டு இருந்தாள்.
எதைத் தேடுகிறாய்?
நான் இன்றைக்கு ஒரு பேனா வாங்கி வந்தேன் அதைத் தான் தேடுகிறேன்.
இந்தா இதுவா? பாரு.
ஆமா இது தான் உனக்கு எப்படி கிடைத்தது.
அவள் அறையில் இருந்து தான் எடுத்தேன்.
இது என்ன இன்க் இல்லை. நான் இந்த பேனாவை நிறைத் திட்டம் போட்டுக் கொண்டு இருந்தாள்.
நிழல் உடனே அது எழுதுவதற்கு தானே வாங்கி வந்தாய்?? பிறகு தீர்ந்து போனால் என்ன? வேறு வாங்கிக் கொள்ளலாம்.
இந்த பேனாவில் எழுதினால் ஏதாவது உலக அதிசயம் நடக்கப் போகிறதா??
ஆமா நிழலு நீ எந்தப் பேனாவில் என் நோட்டில் எழுதுனாய்??
போச்சு போச்சு நான் இனி நாளைக்கு சம்மிட் பண்ண வேண்டும். அந்த நோட் டை எப்படி காட்டுவேன் என்று தலையில் கைவைத்து அமர்ந்து விட்டாள்.
தொடரும்...
பார்க்கலாம் அது ஏன் தேனருவி அப்படி சொன்னால் ???