• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
301
நீ உடல் நான் நிழல்
பாகம் - 41

தேனருவியை அடிக்க யசோதா கை ஓங்கும் போது.. அத்தை என்ற குரல் வந்ததும் தன் மகளை அடிக்கக் கை ஓங்கியவர் கையைக் கீழே விட்டார்.

தேவ் ஆனந்த் தான் அது தன்னவளைக் காக்க வந்த ஆபத்பாந்தனாய் மாறினான்.

இத்தனை நேரம் பேசிய பேச்சு அதை ஒதுக்கியவர் இப்போது தேவ் ஆனந்த் வந்தவன் வாசலில் நிற்பதைப் பார்த்து.. மாப்பிள்ளை வாங்க என்று முகம் மலர வரவேற்றார்.

தேனருவி அவனைப் பார்த்து விட்டு வேகமாக அவளின் அறைக்குள் ஓடி விட்டாள்.

கல்லூரியில் இருந்து வந்தது. அந்த உடையை மாற்றவே இல்லை. இதில் தன் அம்மாவோடு வேறு கத்திக் கொண்டு இருந்தாள். ஒரு வேளை தான் சத்தம் போட்டதை கேட்டு விட்டாரோ? அது தான் அவள் எதற்கும் கொஞ்ச நேரம் கழித்து வந்து பேசிக் கொள்ளலாம் என்று அவளின் அறைக்கு ஓடினாள்.

தேனருவியின் செயல் அவனுக்கு சிரிப்பு வந்தாலும். அவளைப் பார்க்கத் தான் வந்து இருக்கிறேன். ஆனால் இந்த ஹனி இப்படி கண்டு கொள்ளாமல் உள்ளே ஓடி விட்டாளே என்று புழுங்கிக் கொண்டு இருந்தான்.




யசோதா தேனு இங்கே வா என்று அழைத்து போ போய் மாப்பிள்ளை கூட பேசிக் கொண்டு இரு என்று அவளின் கையில் தண்ணீர் கொடுத்து அனுப்பினார்.

தன் அம்மாவை முறைத்தவள் தண்ணீர் சொம்பை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு போய் தேவ் ஆனந்த் முன் தான் நீட்டினாள்.

தேனருவி அவளின் அறைக்குள் இருப்பதால் அவன் செல்போனை எடுத்து வைத்துக் கொண்டு ரீல்ஸ் பார்த்துக் கொண்டு இருந்தான்.

ஹனிபால்ஸ் தன் அருகில் தான் நிற்கிறாள் என்று தெரிந்தாலும். நான் வந்ததும் எதுவும் பேசாமல் ஓடத் தெரிந்தது தானே இப்போது என் முன்னால் வந்து நீ நில்லு என்று தான் அமர்ந்து இருந்தான்.

அதில் காண்டான தேனு அவளின் தொண்டையை க்கும்.. க்கும் என்று செருமினாள்.

தேவ் ஆனந்த் சிரிப்பு வந்தாலும் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு இப்போது தன் முன்னால் நீட்டி இருந்த அவள் கையைப் பார்த்தான். தண்ணீர் என்று தெரிந்து கொண்டே.

என்ன??

தேவ் ஆனந்த் தண்ணீர் என்று தெரிந்து கொண்டே என்ன என்று கேட்க அவளோ?

மச்சான் அருவித் தண்ணீர் ங்க ஏனுங்க வேண்டாமுங்களா? பொறவு என்ன தானுங்க வேணுமுங்கோ?? உங்க வசதிக்கு நீங்க ஒட்டகப் பால் தான் குடிப்பீங்களா??

இவளுக்கு என்ன கிறுக்குப் பிடித்து விட்டதோ? அப்பப்ப லூசு மாதிரி பேசுகிறாள்.

சரியான கிறுக்கச்சி தான் என்று யோசனையில் இருக்க..

ஏனுங்க அப்படி பார்க்கிறீங்க ஒன்னும் பண்ணாதுங்கோ வாங்கிக் குடியுங்கோ.. என்னைப் பெத்த ஆத்தா தானுங்க உங்களுக்கு அருவித் தண்ணி கொடுக்கச் சொல்லீங்கோ கொஞ்ச நேரம் பேசச் சொல்லுச்சுங்க அது தானுங்கோ
கொங்குத் தமிழில் பேசாலாம்க மச்சான் என்று அதில் அழுத்தம் கொடுத்து பேசினாள்.

அவன் இவளுக்கு இப்படி எல்லாம் பேசக் கூட தெரியுமா ? என்று தான் பார்த்து இருந்தான்.

ஏனுங்க அப்படி பார்க்கிறீங்க.. நான் அதே ஹனிபால்ஸ் தானுங்கோ அப்புறம் ங்க மச்சான் என்னோட அம்மா யசோதாவுக்கு ங்க நீங்க என் மேல் லவுட்டி அது தானுங்கோ காதல் சொன்னது தெரியாதுங்கோ..

நீங்கள் வரும் போது என்னைத் பெத்த ஆத்தா என்னை மொத்த கை ஓங்குச்சுங்க அதில் இருந்து என்னைக் காப்பாத்தி வுட்டீங்க அதுக்கு தேங்கஸூங்க மச்சான்..

உங்களுக்கு என்ற மேலே கோபம்ங்களா? நான் உங்களைப் பார்த்து உள்ளே ஓடினேன் என்று..

அது வேற ஒன்னும் இல்லைங்க மச்சான் எனக்கு உங்களைப் பார்த்ததும் வெட்க வெட்கமா வந்துருச்சுங்கோ? என்று ஒற்றை விரலை வாயில் வைத்து கட்டை விரலை தரையில் கோலம் போட்டாள்.

தேவ் ஆனந்த் இவள் பேசுவதைப் பார்த்து நல்லாத் தானே இருந்தா இவுங்க அம்மா உள்ளே இருக்கும் போதே இம்புட்டு வாய் அடிக்கிறாளே ஒரு வேளை நாம் வந்ததால் இவள் அடிலிருந்து தப்பித்து விட்டாள். இல்லை என்றால் இவுங்க அம்மா அடி கொடுத்து இவள் அடி வாங்கி வாய் வீங்கிப் போய் இருப்பா என்று யோசிக்க.

மச்சான் என்ன ரோசனையா இருக்கீக எம்மள பெத்த ஆத்தா உங்களுக்கு போண்டா போட்டுக் கொண்டு இருக்காங்க அது தானுங்கோ நானும் உங்க கூட
இம்புட்டு வெவரமா பேசேறனுங்க.

காலையில் நான் போன் செஞ்சேனுங்களே என்னமோ பெரிய வார்த்தை எல்லாம் சொன்னீங்களே அது நினைப்பு இருக்குதுங்களா?? மச்சான் வேற ஏதோ ட்ராக் ஓடுதுங்களா??

ஹனி என்று தேன் ஒழுக தேவ் ஆனந்த் ஹஸ்கி வாயிஸில் அவளை அழைத்து அவள் பார்த்ததும்.. கோவை சரளா மாதிரி பேசும் நினைப்பு ஏன் காலேஜில் ஏதாவது நாடகத்தில் நடிக்கப் போகிறாயா??

மச்சான் எம்புட்டு பெரிய ஆசை உங்களுக்கு இது அடுக்குமா?? என்னைப் பார்த்து நடிக்கிறேன் சொல்லிட்டீங்களே என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே.. தேனு என்று அவளின் அம்மா அழைத்திட.

இதோ வரேன்மா என்று தேவ் ஆனந்த் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு சமையல் அறைக்குள் ஓடி விட்டாள்.

அவளுக்கு இன்றைக்கு தேவ் ஆனந்த் அந்த ஜிப்பா போட்டு இருந்தது அத்தனை அழகா இருக்கவே பக்கி கன்னத்தில் ஒரு இச் வைத்து விட்டு ஓடி விட்டாள்.

நம் ஆளுக்கு தில்லு தான் அவுங்க அம்மா கூப்பிட்டதும் வரேன்மா சொன்னவள் போவாள் என்று பார்த்தால் எதிர்பாராத நேரத்தில் கிடைத்த முத்தம் அவனுக்கு அவளின் மேல் காதலைப் பெருக்கியது.

உள்ளே சென்றவள் ஒரு கையில் ஸ்வீட் ப்ளேட் ஒரு கையில் போண்டா எடுத்துக் கொண்டு வந்தாள்.

சாப்பிடுங்கள் என்று அவனிடம் கொடுத்தவள். இது எங்கம்மா செஞ்ச கேரட் அல்வா செமயா இருக்கும் சாப்பிடுங்கள்.

ஏன் உனக்கு வேண்டாமா??

நீங்கள் சாப்பிடுங்கள் நான் பிறகு சாப்பிட்டுக் கொள்கிறேன். அது தான் இரண்டு ப்ளேட் இருக்கிறதே.

இல்லை எனக்கு ஐஸ்க்ரீம் தான் சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது.

அப்போது தான் தேவ் ஆனந்த் அவளுக்கு ஐஸ்க்ரீம் வாங்கியது நினைவு வர ஹனி நான் மறந்தே விட்டேன். இந்தா நான் வந்ததும் நீ என்னைக் கண்டுக்காமல் உள்ளே போனதால் நான் வாங்கி வந்ததையே மறந்து விட்டேன். இந்தா உனக்குப் பிடித்த சாக்லேட் ஐஸ்க்ரீம் என்று அவன் கொடுத்ததும்.

அம்முனிக்கு முகம் பூரா மின்னல் போல் மகிழ்ச்சி. ஐய் ஜாலி இருங்கள் இப்போதே சாப்பிட்டு விடுகிறேன் என்று அவள் அறைக்குப் போனவளை அங்கே எதுக்குப் போகிறாய்? இங்கு இருந்தே சாப்பிடு டி என்று அவளின் கையைப் பிடித்து அமர வைத்தான்.

யசோதா வுக்குத் தெரிஞ்சா தோல் சீவி விடுவாங்களே. இப்போது என்ன செய்யலாம். சரி வாத்தி மாம்ஸ் இருக்கிறார். அவரை மீறி திட்டினாள் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சாக்கோ பார் ஐஸ்க்ரீம் எடுத்து அவள் சாப்பிடும் அழகு அவள் அம்மா வருவதற்குள் சாப்பிட வேண்டும் என்று வாய் பூராவும் அப்பிக் கொண்டு அவள் சாப்பிடும் வேகத்தைப் பார்த்து தேவ் ஆனந்த் ஏய் மெதுவா சாப்பிடு ஹனி யாரும் பிடுங்கிக் கொள்ள மாட்டார்கள்.

தேனருவி அவளின் முட்டைக் கண்ணை உருட்டிக் கொண்டு எங்கம்மா கிட்ட நீங்கள் கொட்டு வாங்குவீங்களா??

அவுங்க எதுக்கு கொட்டுவார்கள்.

அதற்குள் பூவிழி கையில் காஃபி கொண்டு வந்தவள். சேராததை சாப்பிட்டு விட்டு இருமிக் கொண்டே இருப்பாள். அது தான் எங்கள் வீட்டில் தேனுக்கா ஐஸ்க்ரீம் சாப்பிடுவதற்கு தடை அது தான் அக்கா அப்படிச் சொல்கிறாங்க.

தேனருவியைப் பார்த்து தேவ் ஆனந்த் சிரிக்கவும். இத்தனை வேகமாக ஐஸ்க்ரீம் சாப்பிட்டு உனக்கு தான் விக்கல் வந்ததா? இருக்கும். ஓ அம்முனிக்கு இது வேற இருக்கிறதா??

பூவிழி அவர்களுக்கு பிரைவசி கொடுத்து விட்டு சென்று விட்டதும். யசோதா வருவதற்குள் தேவ் ஆனந்த் அவளின் வாயைச் சுற்றி அப்பி இருந்த ஐஸ்க்ரீம் முழுவதும் தனது கர்சீப் எடுத்து துடைத்து விட்டு இப்போது அவள் கையில் போண்டா கொடுத்து சாப்பிடு பிறகு சுடு தண்ணீர் ஒரு டம்ளர் குடி அதற்கு பிறகு உனக்கு இருமல் வராதுடி சரி மை ஹனி பால்ஸ் என்று அவளிடம் கூறிவிட்டு அவனும் காஃபி குடித்து விட்டு இப்போது நாம் கிளம்பலாம் என்று உள்ளே பார்த்து குரல் கொடுத்தான்.

அத்தை நான் கிளம்பரேனுங்க இந்த வாரம் போய் எல்லாருக்கும்
ஜவுளி எடுத்துக்கலாம்.

தேனருவி இந்தா இதில் ஸ்வீட் ப்ரூட்ஸ் இருக்கிறது என்று கூறிவிட்டு அத்தை நான் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி விட்டேன். நாளையிலிருந்து இருவரையும் கல்லூரிப் பேருந்தில் வரட்டும்.

இருவரும் நம் ஊருக்கு வரும் வழி அவ்வளவு பாதுகாப்பு இல்லை. அதுவும் இல்லாமல் மழைக்காலம் தொடங்கி விட்டது. அது தான் என்று கூறிவிட்டு அத்தை நான் மதுரை போய் இருந்தேனுங்க ஒரு சோலியா
அப்போது மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் முடிச்சு உட்கார்ந்து இருக்கும் போது உங்கள் அக்கா மருமகள் நித்யா அவுங்க வீட்டிற்கு போய் வந்தேன்.

மாப்பிள்ளை ஆமாங்க இரண்டு நாளைக்கு முன்னாடி நான் போன் செய்து அவர்களிடம் சொல்லி இருந்தேன். அப்படிங்களா? வீட்டிற்கு போனீர்களா? சாப்பிட்டீர்களா??

ஆமாங்க அத்தை அந்த ஆலாமிட்டாய் அக்கா சாப்பிடாமல் விட மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள்.

சரிங்க என்று கிளம்பும் போது நான் இப்போது குமராசாமி அப்பா வீட்டிற்கு தான் போகிறேன் நீ வருகிறாயா? தேனருவி கமலா அம்மாவைப் பார்க்காமல் எப்படி போவது என்று இப்போது யசோதாவைப் பார்க்க.

மாப்பிள்ளை அழைக்கிறார் தேனருவியை எப்படி இப்போது அவர் கூட அனுப்புவது அவராகக் அழைத்து அனுப்பாமல் இருக்க முடியாது. என்ன செய்வது? என்ற யோசனையில் இருக்கும் போதே அத்தை நான் தேனுவைப் பத்திரமாக கொண்டு வந்து விட்டு விட்டுச் செல்கிறேன்.

தேவ் ஆனந்த் இத்தனை தூரம் கேட்டு நாம் விடாமல் இருக்க முடியாது என்று நினைத்தவர். இப்போது தேனருவியைப் பார்த்து போய் பாவாடை தாவணி போட்டு விட்டு மாப்பிள்ளை கூட கமலா அண்ணி வீட்டிற்கு போய் வா என்று அவளுக்கு பார்வையில் உருத்துச் சொல்லி விட்டு சமையல் அறைக்குள் சென்றார். கேரட் அல்வா மற்றும் போண்டாவை பாத்திரத்தில் போட்டு கொடுப்பதற்கு பாத்திரத்தைத் தேடினார்.

யசோதாவிற்கு இருவரையும் ஜோடியாகப் பார்க்க அத்தனை அழகாக இருந்தது.


தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top