Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 301
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 40
பாகம் - 40
தேவ் ஆனந்த் காரில் இருந்து இறங்குவதைக் கண்ட தேனருவி, அச்சோ வாத்தி மாம்ஸ் தொலைஞ்சேன் இன்றைக்கு வருங்கால புருஷர் என்ன சொல்லப் போகிறாரோ?
அச்சோ வெயில் மண்டையைப் பிளக்கிறது என்று தன் சுடிதார் சால் எடுத்து தலையில் போட்டவள் அப்படியே முகத்தை மூடிக் கொண்டாள்.
ஹனி என்ன ஏழரையைக் கூட்டி வைத்து இருக்கிறாளோ? தெரியவில்லை என்று நினைத்தவன். இப்போது தான் பூவிழி கூட இயல்பாக பேசிக் கொண்டு இருக்கும் வாலிபனைப் பார்த்தான்.
இது என்ன இவரைப் பார்த்து இந்த லொடலொட பார்ட்டி கப்சிப் என்று ஆகி விட்டாள். ஆமா இவர் யார்? உங்களுக்கு தெரிந்தவரா? நான் இவர்கிட்டவே நியாயம் கேட்கிறேன்.
இவர் தான் எங்கள் அக்காவிற்கு பார்த்து இருக்கும் மாப்பிள்ளை.
அது தான் இப்போது பம்மல் கே சுந்தரியா??
பம்மல் கே அப்படி என்றால் என்ன அர்த்தம் வில்லன் சார்..
ஏய் நீ என்ன அப்போது இருந்து என்னை வில்லன் சார் என்று கூப்பிடுகிறாய்? என்னைப் பார்த்தால் அப்படி வில்லன் மாதிரி இருக்கிறதா??
அப்படீனா நீங்கள் ஹூரோவா??
பின்ன இல்லையா??
அய்யோ ரொம்ப வடிகிறது எடுத்து தொடைத்துக் கொள்ளுங்கள்.
என்ன வடிகிறது..
உங்கள் மூளை தான் சார்.
அடிங்க என்று அவன் அவளை மிரட்ட..
ஹனிபால்ஸ் நீ தான் எனக்குத் தெரிந்து விட்டது. இப்போது எதுக்கு கிறுக்கச்சி மாதிரி வடிவேல் டயலாக் பேசிட்டு இருக்கிறாய்??
அச்சோ பேசலை அம்மாவிடம் இதைப் போட்டு கொடுத்து விடுவாரே என்று இப்போது நினைத்தவள்.
அதில்லை மாமா சார் அதிக வெயில் அது தான் இப்படி நின்று கொண்டு இருக்கிறேன்.
ஹனி வண்டியில் இருந்து கீழே விழுந்து விட்டாயா??
ஹலோ நான் ஒன்றும் வண்டி ஓட்டத் தெரியாமல் எல்லாம் இல்லை. எங்கிட்ட யும் லைசென்ஸ் இருக்கிறது. அது ஒன்றும் சும்மா கொடுக்க மாட்டார்கள்.
அப்படியா? கிண்டல் டி உனக்கு ஆமா இப்போ எந்த ஏழரையைக் கூட்டி வைத்து இருக்கிறாய்? யார் இவர்,
அதற்குள் கார்முகிலன் ஹலோ சார் என் பெயர் என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு சார் நல்லவேளை சார் நீங்கள் வந்து என்னைக் காப்பாற்றினீர்கள் சார்.
ஏன் வண்டியைக் கொண்டு வந்து கார் மேல் விட்டு விட்டாளா? காருக்கு ஏதாவது சேதமாகி விட்டதா?? நான் வேண்டும் என்றால் பணம் கொடுக்கிறேன் என்று அவனுடைய பர்ஸ் எடுக்க,
கார் சேதத்தை விட என் மனசு தான் சார் சேதமடைந்தது. என்ன வாய் இந்தப் பெண் பாருங்கள் எத்தனை மரியாதையாக பேசுகிறது என்று பூவிழியைச் சொல்லவும்.
இப்போது பூவிழிக்கு பக்கென்று ஆனது. அடிப்பாவி அவர் எனக்கு மாமா மட்டும் இல்லைடா என் சார் டா போச்சு தொலைஞ்சேன்.
பூவிழி இங்கே வா இவரை உனக்கு முன்னமே தெரியுமா?
இல்லைங்க சார்..
காலேஜ் முடிச்சு நேரே வீட்டிற்கு போகாமல் இங்கே நடுரோட்டில் நின்று கொண்டு இப்படித் தான் யாரும் இல்லாத ரோட்டில் யார் என்று தெரியாதவர் கூட வம்பிழுத்துக் கொண்டு இருபாபீர்களா??
தேனருவி இப்போது கார்முகிலனைச் சுட்டிக் காட்டி ஏண்டி பூவிழி என்னமோ சார் மோர் புடலைங்காய் என்று அந்த ஆள் கிட்ட கெஞ்சிட்டு இருந்தாய்? எப்படி மாட்டி விட்டான் பார்த்தாயா?? மெண்டல் வாயன் என்று கொஞ்சம் சத்தமாகவே சொல்லி விட்டாள்.
தேவ் ஆனந்திற்கு காது கேட்டு விட்டது. இவ மட்டும் அடங்கவே மாட்டாள். அவன் கம்முனு போனால் கூட ஏதாவது இழுவையை இழுத்து விட்டுக் கொள்வாள்.
கார்முகிலன் நீங்க எந்த ஊர் என்று தேவ் ஆனந்த் கேட்க?
உங்களைப் பார்த்தால் பொய் சொல்ல மனசு வரவில்லை. எனக்கு நம்பிக்கை இருக்கிறது நாம் மீண்டும் சந்திப்போம் என்று அதனால் உண்மையைச் சொல்லி விடுகிறேன் என்று தன் கிடாமீசையை எடுத்து விட்டு நெற்க்கண் யூடியூப் சேனல் என்னுடையது ஒரு முக்கிய விடயமாக இங்கே வர நேர்ந்தது. அது தான் இந்த வழியில் வந்தேன்.
ஏன் ப்ரோ நீங்கள் ஊரில் இல்லையா? எங்கேயே வெளியே சென்று வந்தது போல் இருக்கிறது. இன்று இங்கே இருக்கும் குளத்தில் நான்கு பாடி மிதந்து கொண்டு இருக்கிறது என்று போலீஸ் தகவலில் அதைப் பற்றி தெரிந்து கொள்ள வந்தேன்.
வந்த பிறகு தான் தெரிந்தது. அமைச்சர் காத்தவராயன் அவருடைய மகன் மற்றும் அவனின் நண்பர்கள் மொத்தம் நான்கு பேர் ஒரு நான்கு நாட்கள் முன் சரியான போதையில் கண் மண் தெரியாமல் ஓட்டி கார் கட்டுப்பாட்டை இழந்து குளத்திற்குள் வீழ்ந்து விட்டது.
நான்கு பேரும் இப்போது தான் ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்கிறார்கள். உங்கள் ஊர் மிகவும் அழகாக இருக்கிறது.
கார்முகிலன் சென்றதும். தேவ் ஆனந்த் அவர்களிடம் வந்து வண்டியை எடுங்கள் நான் உங்கள் பின்னால் வருகிறேன். நாளையிலிருந்து இரண்டு பேரும் கல்லூரி பேருந்தில் வாங்க இனி வண்டி எடுத்துப் பாருங்கள். நான் வீடு வரைக்கும் போய் விட்டு ஒரு அரைமணி நேரத்தில் வருகிறேன்.
மாமா சார் எனக்கு எதுவோ வாங்கிட்டு வந்து இருக்கிறேன் என்று சொன்னீங்க அதைக் கொடுத்து விட்டு போகலாமே.
தேவ் ஆனந்த் மதுரையில் இருந்து ஆலாமிட்டாய் வாங்கி வந்து இருந்தான். அதையே தான் அவளிடம் சொன்னதால் அவள் ஏதோ பெரிசா வாங்கி வந்து இருப்பார் என்று நினைத்து இருக்க.
தேவ் ஆனந்த் சிரித்துக் கொண்டு காரில் ஏறி அமர்ந்து அவர்கள் அருகில் காரை நிறுத்தியவன் இந்தா ஆலாமிட்டாய் உங்கள் நித்யா அண்ணி தான் கொடுத்தாங்க.
தேனருவி ஏய் பூவு மாமா சார் இப்போது ஐஸ்கிரீம் தருவார் எனக்குத் தான் அதிகம் வேண்டும். நான் தான் இத்தனை நேரம் அந்த நெட்டக் கொக்கு கூட
தொண்டைத் தண்ணி வற்றும் அளவுக்கு சண்டைப் போட்டேன். ஓகே டீல்..
பூவிழிக்கு சிரிப்பு வந்து விட்டது. குச்சி மிட்டாய் இதற்கு தான் இவள் இத்தனை எதிர்பார்த்து நின்று இருந்தாளா?
தன்னைப் பார்த்து சிரித்துக் கொண்டு இருந்த பூவிழியை முறைத்தவள். கொடுடி குச்சி மிட்டாய் என்று இரண்டு மிட்டாய் அவள் வாயில் தான் இப்போது இருந்தது.
பரிமளா யார் தம்பி இந்தப் பொண்ணுக சரியான குறும்புக்காரியா? இருப்பா போல் இருக்கிறது.
அத்தை வண்டியை ஓட்டிக் கொண்டு போகும் பொண்ணு தான் எனக்கு பார்த்து இருக்கும் பெண் நேற்று காலையில் தான் முடிவு ஆகி இருக்கிறதுங்க அத்தை.
மகாலட்சுமி கணக்கா இருக்கிறாள். சின்னப் பெண்ணும் அழகா தான் இருக்கிறது.
எனக்குப் பார்த்த பெண் பெயர் தேனருவி சின்னப் பெண் பூவிழி தேனருவி இன்னும் மூன்று மாதத்தில் படிப்பு முடிகிறது. சின்ன பெண் இந்த வருடம் தான் கல்லூரியில் சேர்ந்து உள்ளதுங்க. நம்மளுக்கு தூரத்துச் சொந்தம் தானுங்கோ.
பூவரசம் கோட்டை தேனருவி வீடு திரும்பும் தான் தேவ் ஆனந்த் கார் தேவகோட்டை நோக்கி சென்றது.
தேவகோட்டை அரண்மனை வாசலில் கார் நின்றதும். கிருஷ்ணவேணி வந்து தனது தோழி பரிமளா அவர் கணவர் இருவரையும் வரவேற்று வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றார்.
அவர்களுக்கு இன்னும் எதற்காக அவசரமாக வரச் சொன்னார்கள் என்று தெரியாததால் வந்தும் வராததுமாக கேட்க வேண்டாம் என்று உள்ளே அமர்ந்தனர்.
ஏனோ எப்போதும் கலகலப்பாக பேசும் கிருஷ்ணவேணி முகம் வாடி இருக்கவும்.
உடம்புக்கு சரியில்லையா??
அதெல்லாம் நல்லாத் தான் இருக்கிறேன். அது உங்களிடம் எப்படி சொல்வது என்று தெரியவில்லை.
கிருஷ்ணவேணி என்கிட்ட சொல்லத் தயக்கமாக இருந்தால் வேண்டாம்.
பரிமளா தயக்கப் பட்டால் என்ன செய்வது? எப்படி இருந்தாலும் உனக்குத் தெரிந்து தானே ஆக வேண்டும்.
ஆமா எங்கே சுரேஷ் இருக்கிறானா? அவனுக்கு நாங்கள் வருவது தெரியுமா??
அவனைப் பற்றி பேசத்தான் வரச் சொன்னேன்.
அவனுக்கு என்னாச்சு உடம்புக்கு மறுபடியும் சரி இல்லையா?
உடம்புக்கு எல்லாம் நல்லாத் தான் இருக்கிறான். ஆனால் அவன் மனசுக்குத் தான் சரியில்லை.
வேணி நீ சொல்வது எனக்கு எதுவுமே புரியவில்லை. ஏங்க உங்களுக்கு ஏதாவது புரிகிறதா??
உனக்கே புரியவில்லை என்றால் நான் மக்குப் பையன் எனக்கு எங்கே புரியப் போகிறது என்று அவர் கிண்டலாகப் பேசவும்.
அண்ணா அதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. அவன் காதலிக்கிறான். அதுவும் என் சின்னச் சம்மந்தியின் மகளை அது தான் அவர்களையும் வரச் சொல்லி இருக்கிறேன்.
அவர்கள் இருவரும் ஒன்னா மண்ணா பழகியது எப்படியோ எல்லாருக்கும் தெரிவதற்குள் அவர்கள் ஒரு கால்கட்டு போட்டு விடலாம் என்று தான் உங்களை வரச் சொன்னேன்.
இரண்டு பேரும் இருந்த நிலையை வா சொல்ல முடியும். அது தான் இப்படி முடிவு எடுத்து இருந்தார்கள்.
தேவ் ஆனந்த் அவர்களை இறக்கி விட்டு தனது அறைக்குள் சென்று தனது பேக்கை வைத்தவன் உடம்பு கசகசவென இருக்க அவசரமாக ஒரு குளியல் போட்டு விட்டு இப்போது தேனருவியைப் பார்க்க கிளம்பி இருந்தான்.
கீர்த்தி டிபார்ட்மென்ட் ஸ்டோர் சென்றவன். தேனருவி ஐஸ்கிரீம் சாப்பிட ஆசைப் பட்டதால் இப்போது அருண் ஐஸ்கிரீம் பேமிலி பேக் வாங்கியவன். இனிப்பு பழங்கள் வாங்கி விட்டு அபபடியே பூக்கடையில் பூவும் வாங்கி விட்டு தேனருவி வீட்டிற்குத் தான் சென்றான்.
தேனருவி வீட்டிற்கு வந்து ஆடித் தீர்த்து விட்டாள். எதற்கு என்றா கேட்கிறீர்கள். அவள் அம்மாவிடம் இவள் ரோட்டில் கார் வழிமறித்து செய்த தில்லாலங்கடி வேலையை பூவிழி யசோதாவிடம் சொல்லி விட்டாள். அது மட்டுமா இனி மேல் தேனுக்கா கையில் வண்டியைக் கொடுக்க வேண்டாம் என்று வேறு சொல்லி விட்டாள்.
யசோதாவும் அடியே காலம் கெட்டு கிடக்கிறது. உங்கப்பன் செத்த பிறகு உங்களை வளர்க்க நான் எத்தனை கஷ்டப்பட்டேன். உங்களை ஒரு நல்லவனாப் பார்த்து கையில் பிடித்துக் கொடுக்கும் வரை நெருப்பை வயித்தில் கட்டிக் கிட்டு நான் இருக்கிறேன். உனக்கு எம்புட்டு கொழுப்பு இருந்தால் வேலி போகும் ஓணானை எடுத்து மடியில் போட்டு இருப்பாய்? நல்ல வேளை மாப்பிள்ளை அந்த வழியாக வந்ததால் எதுவும் பயப்படும் படியாக ஆகவில்லை.
இன்னும் மூன்று மாதம் தான் அதுவரை கொஞ்ச அடக்க ஒடுக்கமா இரு ஒழுக்கமா கல்லூரி பஸ்ஸில் போ இல்லை டவுன் பஸ்ஸில் போ..
அம்மா நீ இவள் சொல்வதை நம்பாதே இவள் சரியான கேடிமா. இவள் தா மா பின்னால் உட்கார்ந்து கொண்டு என்னை வண்டியை ஒழுக்கமாக ஓட்ட விடாமல் செஞ்சா. அவள் சொல்வதை கேட்கும் நீ நான் சொல்வதையும் கேட்க வேண்டும் என்று வீடு அதிரும் படி கத்திக் கொண்டு இருந்தாள்.
அதில் காண்டான யசோதா அவளை அடிக்க வர. அவருக்கு பின்னால் அத்தை என்ற குரல் கேட்கவும் அதிர்ந்து கையைக் கீழே விட்டார்..
தொடரும்..