• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
259
நீ உடல் நான் நிழல்🌚🌚
பாகம் - 4


தேனருவி தனது முகத்தை இருகரங்களால் மூடி இருந்தவள். பயத்தைப் புறம் தள்ளியவள் ஒரு கையை விலக்கி கல்லறைத் தோட்டத்தைப் பார்க்கும் போது நேற்று இரவு வந்த நிழல் அவளைப் பார்த்து சிரித்தது.

ஹா ஹா ஹா ஹா ஹா அப்படியே சசிக்குமார் ( நடிகர் சிரிப்பது போல்) எல்லாம் ஒரு கற்பனை தான்.

தேனருவி செய்வதைப் பார்த்த தேவ் ஆனந்த் நீ ஒன்றும் தில்லான மோகனாம்பாள் பத்மினி இல்லை. மறைந்து இருந்து பார்க்கும் மர்ம என்ன என்று பரதநாட்டியம் ஆடுவது போல் கைவைத்து போஸ் கொடுக்க.. உன் நொண்டிக்காலை வைத்துக் கொண்டு பார்க்க சகிக்களை என்று திட்ட.

அவனை வாய்க்குள் முனுகி திட்டியவள். தடிமாடு மாதிரி வளர்ந்து கெட்டவனே இந்த வண்டியில் என்னால் ஏற முடியலை என்று இவள் கண்ணால் கதக்களி ஆட..

சரியான மெண்டல் கிட்ட வந்து காலையில் மாட்டிக்கிட்டேனே. ச்சை என்று சலித்தவன். வாய் நல்லாத்தானே இருக்க அதைத் திறந்து சொல்லு அதுவும் கோணைச்சுப் போய் விட்டதா?

தேவ் ஆனந்தை மூக்கு விடைக்கப் பார்த்தவள். அவளின் பார்வை இப்போது பூவிழியை குற்றம் சாட்டியது.

ஹேய் அங்கு என்ன? மறுபடியும் பார்வையில் டிரேன்சலேட் செய்கிறாய்??

இவளோடு அக்கப்போர் என்று பூவிழி தான் சார் அவளால் இந்தக் காலுவை வைத்துக் கொண்டு வண்டியில் ஏறி உட்கார முடியவில்லை அதைத் தான் இப்படி சொல்கிறாள்.

அவளைப் பார்த்தவன் இதை வாயைத் திறந்து சொல்வதற்கு என்னடி என்று வண்டியை சென்டர் ஸ்டேண்ட் போட்டு நிறுத்தியவன். அவளைத் தூக்கி
வண்டியில் ஒரு சைடாக உட்கார வைக்க இப்போது விழிப்பது அவள் வேலையாகிப் போனது.

வண்டியில் பிடிக்க எதுவும் இல்லை. அவனிடம் சாடையாக மறுபடியும் கேட்க வர.

தேவ் ஆனந்த் வந்த கோபத்தில் இப்போது வாயைத் திறந்து பேசவில்லை என்றால் வாயைத் திருப்பி விட்டு விடுவேன். அவனும் செய்கையில் சொல்ல.

ச்சை இந்த அரை மெண்டல் கூட கொஞ்ச நேரம் இருந்ததிற்கே நானும் முழுப் பைத்தியமாக ஆகி விடுவேன் போல. என்று வண்டியை வேகமாக கிளப்பினான்.

அதில் எதையும் பிடிக்காமல் அமர்ந்து இருந்த தேனருவி கீழே விழுகப் போக அவளின் கையை எடுத்து தேவ் ஆனந்த் வயிற்றில் வைத்து விட்டான்.

அதில் ஜெர்க் ஆனவள் வண்டியின் சைட் மிரரில் பார்க்க அவளைப் பார்த்து கண்ணடித்தான். அச்சோ இப்போது என்ன செய்வது? என்று மீண்டும் கண்ணாடியைப் பார்க்க அவன் முறைத்தான்.

இவனாவது ரொமாண்டிக் ஹீரோ ஆவது. இவன் தான் விறைப்புக்கு பிறந்த வீராசாமி ஆயிற்றே. தனது தங்கையைத் தான் பார்த்தாள். எல்லாம் உன்னால வந்தது என்று அவளைத் தனது ஒரு கையை வைத்து திட்டிக் கொண்டு வரவும்.

வண்டியில் ஆடமா உட்கார முடியாதா? இன்னும் ஆடிக் கொண்டு வந்து வண்டியில் இருந்து கீழே விழுந்து உடல் பூரா காயமாகி பேய் மாதிரி பேண்டேஜ் போடனுமா?

மறுபடியும் பேயா?

உனக்கு வேண்டும் என்றால் வேறு வேலை இல்லாமல் இருக்கலாம். ஆனால் இன்று வணிகவியல் டெஸ்ட் வைக்க வேண்டும். என்ன படித்தாயா?

தேனருவி நேற்று பூராவும் தன் வீட்டில் பூட்டி இருந்து அறைக்குள் தான் இருந்தாள். அங்கே இருந்த அந்த பழைய பெட்டியைத் திறக்க முடியாமல் திறந்து அதில் இருந்த புத்தகம் ஒன்றை எடுத்துப் பார்த்தால் அதன் தலைப்பைப் பார்த்து அதில் ஆர்வம் ஏற்பட அதைத் திறந்தால்..

நீ உடல் நான் நிழல்.. இதில் கவரப்பட்டு முதல் ஒரு பக்கம் தான் படித்தால்.. அதிலிருந்தது போலவே இரவு நடந்து விட அதிலேயே திளைத்தவள் வகுப்பு வாத்தி டெஸ்ட் வைக்கிறேன் சொன்னதைக் கிடப்பில் போட்டால். இப்போது வாத்தி நியாபகம் படுத்தி விட, "அட அடடே கால் கோணையா போனதிற்குப் பதிலா, கை கோணையா? போய் இருக்கலாம் டெஸ்டில் இருந்து தப்பித்து இருக்கலாம்.

மருத்துவமனை வந்து விட அவளைக் கையில் தூக்கிக் கொண்டு சென்றான்.

கையை வைத்துக் கொண்டு அவனைச் சுரண்டினால் சார் நான் நடந்து வருகிறேன்.

கடுப்பாணவன் வாயில் கையை வைத்து மூடு என்று சொல்ல அவளோ கையை இப்போது கோணையா வைத்துக் கொள்ளலாம் என்று அதையும் நொண்டிக் கை போல் வைத்துக் கொண்டாள்.

டாக்டர் இருக்கும் அறைக்குள் போனதும் அவளை அவரின் முன் அமர வைத்தவன் வண்டியில் இருந்து கீழே விழுந்து விட்டதால் என்று காலில் இருக்கும் சுளுக்கை காண்பிக்கவும். வேறு எங்கும் அடி படவில்லையா? என்று தேனருவியிடம் காண்பிக்க
அவளோ தனது கையைக் காண்பித்தாள்.

என்னமா? கையில் அடிபட்டு இருக்கிறதா? என்று கேட்க..

அவளும் தலையை ஆட்ட..

டாக்டரோ? வாய் பேச முடியாதாமா? அச்சோ? சரிமா நீ கொஞ்சம் பொறுத்துக் கொள் உன் காலில் இருக்கும் சுளுக்கை எடுக்கலாம் கொஞ்சம் திரும்பி உட்கார் மா.

அதில் விழித்தவள் என்ன நாம் நினைத்தோம் பெரிய கட்டுப் போட்டு விடுவார். அதைச் சாக்காக வைத்து டெஸ்ட் எழுதாமல் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்தால் என் நிலைமை இப்படியாக ஆக வேண்டும்.

இந்தச் சொட்டைத் தலையன் என்னை ஊமை என்று சொல்லி விட்டானே என்று இவள் மனதில் புலம்பிக் கொண்டு இருக்க காலில் சுளுக்கு இருந்த இடத்தில் அவர் ஒரு திருப்பு திருப்ப இவளோ வாயைத் திறந்து கத்தி விட்டாள்.

தேவ் ஆனந்த் இந்த சுளுக்கை அங்கேயே எடுத்து விட்டு இருப்பான். இவள் தான் காலு உடைத்து விட்டான் என்று கத்துவாளே அதனால் எலும்பு முறிவு சிகிச்சை அளிக்கும் இடத்திற்கு தான் அழைத்து வந்து இருந்தான்.

சரி இப்போது நடந்து பார்மா சரியாகி இருக்கும் என்று சொன்னவர் குடுமா கையையும் இதே போல சரி செய்து விடலாம்.

தேனருவி திகைத்தால் அடப்பாவி முள்ளங்கி மூஞ்சிக்கார உன்னை நம்பி என் நல்லா இருக்கும் கையை கொடுத்து வடிவேலு மாதிரி என் பாடி டேமேஜ் ஆகவா?

நோ சான்ஸ் இப்போது சொல்கிறேன் பார். என்று சார் நீங்கள் மிகச் சிறந்த மருத்துவர் தான் என் காலில் சுளுக்கு எடுக்கும் போது கையில் இருந்ததும் நன்றாகி விட்டது என்று கையைத் திருப்பி திருப்பி காண்பித்தாள்.

டாக்டர் தான் திருதிருவென விழித்தார். அம்மாடி உனக்கு பேச வருமா? அதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை. நான் கூட வாய் பேச முடியாத பெண் என்று வலிக்கும் என்று மெதுவாக தான் காலு சரிசெய்தேன்.

நீங்கள் தெய்வம் சார்.. உண்மையில் எனக்கு சிறுவயதில் இருந்தே பேச்சு வராது நீங்கள் இப்போது செய்த ட்ரீட்மென்ட் தான் சார் என் உடலில் எல்லா நரம்பு மண்டலத்தின் வேலையைச் செய்து பேச வைத்து விட்டீர்கள். எங்கம்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்க..

( அடியே அந்த நரம்பு எங்கே இருக்கிறது என்று உன் அம்மாவிற்கு தெரிந்தால் அவர்களே அதைக் கட் செய்து விடுவார்கள். என்னமா பொய் பேசுகிறாள்.)

சார் பீஸ் எவ்வளவு சார் என்று தேவ் ஆனந்த் இவள் சுற்றும் பீலாவை ரசித்தபடியே அவரிடம் கேட்க.

அவரே என்ன தம்பி நான் வைத்தியம் செய்து இந்தப் பிள்ளையாண்டாளுக்கு பேச்சு வந்து இருக்கிறது. அதுக்கு விலை பேசினால் அது கடவுளுக்கே அடுக்குமா? என் பாக்கியம்.. அம்மாடி உனக்கு எங்கே அடிப்பட்டாலும் இங்கேயே வாமா?

எதுக்குயா? முள்ளங்கி மூஞ்சிக்கார என்னை மூன்றாம் பிறை படத்தில் கமலஹாசன் போல் சப்பாணி மாதிரி மாற்றுவதற்கா? என்று மனதில் நினைத்தவள்.

ஈஈஈ என்று இளித்து வைத்து அது உங்கள் ஆசையாக இருந்தால் விதியை யாராலும் மாற்ற முடியாது. அப்பொழுது ஒரு சபதம் எடுத்துக் கொண்டாள்.. நம் நிழல் ப்ரெண்ட் கிட்டச் சொல்லி டீல்
வைத்துக் கொண்டு இந்த போண்டா மூக்கனை என் காலு எப்படி திருப்பினான் அது போல் திருப்பி விட வேண்டும்.

அடித் தேனருவி அப்படி என்றால் நீ நிழல் எப்போது வரும் என்று எதிர்பார்த்து இருக்கிறாயா? அவளின் மனச்சாட்சி எட்டிப் பார்த்து👀 சொல்லி தொலைக்க..

அப் கோர்ஸ் என்று வாய் விட்டு சொல்ல..

தேவ் ஆனந்த் இவளுக்கு என்னமோ ஆகி விட்டது என்று நினைத்தவன். அங்கே இருந்து கிளம்பினான்.

தேனருவி அவன் வண்டி அருகில் வந்து நின்று கொண்டு ஏறப் பார்த்தாள்.

ஹேய் நில்லு.. இங்கே எதுக்கு வந்தாய்?

சார் கல்லூரி தானே செல்கிறீர்கள் அது தான் உங்களோடவே வருகிறேன்.

எதுக்கு? அது தான் மேடம் எல்லா நரம்பு மண்டலம் வேலை செய்யுதே போ போய் உன் வண்டியில் உட்கார்ந்து வா அதெல்லாம் உன் தங்கச்சி நல்லாத் தான் வண்டி ஓட்டுவா?

இடையில் எங்காவது தகிடத்தனம் செஞ்சு டெஸ்ட் எழுத டிமிக்கி கொடுக்கலாம் நினைத்தாய்.. தொலைத்து விடுவேன்.

போ வண்டியில் ஏறு என்று அவர்களை முன்னால் போகச் சொல்லி அவன் கொஞ்சம் தள்ளி பின்னால் வந்தான்.

பூவிழி வண்டி ஓட்ட தேனருவி பின்னால் அமர்ந்து இருந்தவள். மெதுவாகத் திரும்பி இவன் எதுக்கு நம் வண்டி பின்னால் வருகிறான்.

அவன் ஹெல்மெட் போட்டு இருப்பதால் அவனின் முகத்தில் இருந்த சிரிப்பு இவளுக்குத் தெரியவில்லை.

ஒரு வழியாக கல்லூரிக்குள் வந்து சேர்ந்தனர். ஏற்கனவே தேவ் ஆனந்த் பர்மிசன் கேட்டு இருந்ததால் ப்ரிசின்பால் அறைக்குச் செல்லாமல் இருவரும் தங்களது வகுப்பறைக்குச் சென்றார்கள்.

தனது தோழிகள் மலர்க்கொடி..
சில்பா இருவரும் இவளின் சோர்ந்த முகத்தைப் பார்த்து. ஏய் ஏண்டி உடல்நிலை சரியில்லையா?

இல்லடி சில்பா வண்டியில் இருந்து கீழே விழுந்து விட்டேன்.

அச்சோ? என்னடி ஆச்சு அடிபடலையா?

அந்த அளவுக்கு இல்லை. ஆனால் அதைவிட ஒரு கொடுமை நடந்து விட்டது. என்று நடந்து முடிந்த சம்பாசனைகள் சொல்ல.

இதுக்கு ஏண்டி எருமை மூஞ்சியை நாலு ஊருக்கு தூக்கி வைத்து இருக்கிறாய்? சார் பைக்கில் அவரே தூக்கி உட்கார வைத்து இருக்கிறார். அவரோட இடுப்பை பிடித்து உட்கார்ந்து கொண்டு போய் இருக்கிறாய். அப்புறம் உன்னைக் கையில் தூக்கிக் கொண்டு போய் இருக்கிறார். இது எவ்வளவு பெரிய லைப் சார்ம் .. அச்சோ உன் இடத்தில் நான் இருந்து இருக்க வேண்டும் செம எஞ்சாய் செய்து இருப்பேன்.

சில்பா கழுதை இன்றைக்கு வாத்தி எக்ஸாம் வைப்பேன் சொன்னார் டி அதுக்கு தாண்டி ப்ளாண் பண்ணினேன் அது சொதப்பி விட்டது. அது தான் மீ
சோகமாக பீல் செய்கிறேன்.

அந்த டெஸ்டில் மேடம் என்ன? தான் எழுதுவாள் அடுத்த பதிவில்..


தொடரும்...

நீ உடல் நான் நிழல்..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top