• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
299
நீ உடல் நான் நிழல்
பாகம் - 39


தேனருவி தேவ் ஆனந்த் கூட பேசும் போது குறுக்கிட்ட சில்பா பேச்சில் தேனருவி பேசிய எண்ட மாமனுக்கு நான் மட்டும் தான் பொஞ்சாதி என்று கூறியதைக் கேட்ட தேவ் ஆனந்த் தனக்குள் சிரித்துக் கொண்டான்.

ஆனால் அடுத்து சில்பா சொன்ன மீரா என்ற பெயர் அவனுள் கடுப்பைக் கிளப்ப, எத்தனை பேர் தான் இதுக்கு என்று மினுக்கிட்டு திரிவார்கள் என்று மகிழுந்து எடுத்துக் கொண்டு இப்போது மாஞ்சோலை நோக்கி பயணம் செய்தான்.

அமைச்சர் காத்தவராயன் தனது நண்பர்கள் மற்றும் தொண்டர்களோடு காவல்துறையினர் சொன்ன மருத்துவமனை முன்பு வந்து நின்றனர்.

அமைச்சர் வருகிறார் என்று தெரிந்ததும் கமிஷனர் கரிகாலன் அவ்விடம் வந்து காத்து இருந்தார்.

கமிஷனரைப் பார்த்ததும் சிவராமன் வந்து சல்யூட் வைத்து விட்டு அவரிடம் பிரேத பரிசோதனை ரிப்போர்ட் கொடுத்தார்.

அதை வாங்கிப் பார்த்தவர். புருவமுடிச்சோடு சிவராமனைப் பார்க்க..

சார்...

சொல்லுங்க நான் சொன்னது போல் சிசிடிவி எல்லாம் செக் செய்து பார்த்தீர்களா??

பார்த்தோம் சார் என்று கூறிவிட்டு அமைச்சர் இருப்பதால் சிவராமன் கொஞ்சம் குரலைத் தளர்த்தி அவர்கள் முழுபோதையில் தான் சார் கார் ஓட்டி வந்துள்ளார்கள். அது சிசிடிவி காட்சியில் தெளிவாகத் தெரிகிறது.

காக்கிச் சட்டை போட்டா நீ பெரிய கொம்பனா? அவுங்க சரக்கு அடிச்சதை நீ நேரில் பார்த்தாயா?? அமைச்சராக இருந்தும் வார்த்தையை வெளியே நாகரிகம் கருதாமல் நிற்கும் இடம் பொருள் அறியாமல் பேசவும் கமிஷனர் கரிகாலனுக்கே கோபம் வந்தது.

சார் காக்கிச் சட்டை போடுவதால் எங்களுக்கு எந்த கொம்பும் முளைப்பதில்லை. ஆனால் ஐந்து வருடம் மட்டுமே ஆட்சியில் இருக்கும் அரசயல்வாதிகளுக்குத்
தான் பெரிய கொம்பன் என்று நினைப்பு நாட்டையே அவர்கள் கையில் கொடுத்தது போல் நினைப்பது.

என்னையா கமிஷனர் வாய் நீளுது.. நான் யார்? எத்தனை தில்லுமுல்லு செய்து இன்றைக்கு இந்தப் பதவியில் அமர்ந்து இருக்கிறேன் என்றால் சும்மாவா?
உன்னை மாதிரி என்னை எதிர்த்து பேசியவர்கள் இப்போது வெயிட்டிங் லிஸ்ட்டில்.. அதை மனதில் வைத்து பேசு, நானே என் மகனைக் கொன்றவர்கள் யார்?

என் அரசியல் வாழ்க்கையில் எனக்கு எதிரிகள் எக்கச்சக்கமா இருக்கிறார்கள். இப்போது என் வாரிசு மேலேயே கை வைத்து இருக்கிறார்கள் என்றால் என்
அரசியல் வாழ்க்கைக்கு எத்தனை பெரிய அவமானம் என்று கோபத்தோடு பேசும் போது தான் அமைச்சர் காத்தவராயனின் கையில் ஆறுவிரல் இருப்பதைப் பார்த்த சிவராமன், அவருடன் வந்த அவரின் சகாக்களைப் பார்க்க அவர்கள் கையிலும் ஆறுவிரல் இருப்பதைப் பார்த்து இது என்ன அதிசயமாக இருக்கிறது.

சுற்றிலும் இருப்பவர்கள் தான் சார் பத்திரிகை செய்தியாளர்கள் இருக்கும் போது பார்த்து பேசுங்கள் என்று சொல்லவும் தான் சுற்றிலும் திரும்பிப் பார்த்தார்.

நான் பேசியதை யாராவது வீடியோ எடுத்து இருந்தால் அதை அழித்து விடுங்கள். அதை மீறி பத்திரிகையிலோ? இல்லை டி. விலோ வந்தது என்றால் அது தான் கடைசி நாள் உங்களுக்கும் உங்கள் சேனலுக்கும். என்று பகிரங்கரமாக மிரட்டல் விடவும் அதையும் சேர்த்து வீடியோ கவரேஜ் எடுத்து விட்டான் கார்முகிலன்.

நெற்றிக்கண் எனும் யூடியூப் சேனல் வைத்து இருப்பவன். கார்முகிலனின் சேனல் மிகவும் பிரசித்தி பெற்றது. மற்றவர்கள் அஞ்சும் அனைத்து விதமான வீடியோக்களை கூட அசால்ட்டாக செய்து கவரேஜ் போட்டு விடுவான்.

மற்றவர்கள் யாருக்கும் சந்தேகம் வராதமாதிரி இப்போது மாறுவேடத்தில் தான் வந்துள்ளான். கார்முகிலன் இதுவரை தனது முகத்தை தனது யூடியூப் சேனல் வழியாக கூட காண்பிக்க வில்லை.

முகத்தை மறைக்கக் காரணம் இருக்கிறது. எப்போதும் கருப்புக் கண்ணாடியும் கிடா மீசையோடு தான் அவனது நெற்றிக்கண் யூடியூப் சேனல் வழியாக பேசுவான். மக்கள் முன் விவாதிப்பது.

காத்தவராயன் அவனது நண்பர்கள் என நால்வரும் தங்களது மகன்களை பார்த்தனர். முகம் முழுவதும் சிதைந்த நிலையில் இருந்ததால் உடல் முழுவதும் வெள்ளை பாண்டேஜ் துணியால் கட்டப்பட்டு இருந்தது. அதுவும் ஜஸ் பெட்டிக்குள்.

இவர்கள் இரத்தம் என்றதும் துடிப்பவர்கள். இவர்களால் எத்தனை பேர் கொலை செய்யப்பட்டு இருப்பார்கள். அதுவும் இல்லாமல் இன்று பூத உடலாக இருப்பவர்கள் நால்வரும் எத்தனை பெண்கள் வாழ்க்கையச் சீரழித்து இருப்பார்கள். இவனுங்க என்ன பெரிய தியாகியா? என்று தான் பொருமிக் கொண்டு இருந்தனர் சிவராமன் மற்றும் மலைச்சாமி இருவரும்.

நான்கு ஆம்புலன்ஸில் அவர்களது உடல் கிடத்தப்பட்டு அவரது சொந்த ஊர் நோக்கிப் பயணமானார்கள்.

காத்தவராயனுக்கு இந்த ஊர் மேல் ஒரு கண் இருக்கிறது. தேவகோட்டை ஜமீன் அந்த அரண்மனையை அவனுக்குச் சொந்தமாக்கி விட ஆசை.. ஆனால் அவர்கள் அருகில் கூடச் செல்ல முடியவில்லை.

தேனருவி பூவிழி இருவரும் கல்லூரி முடிந்து வரும் போதே அந்த ஆம்புலன்ஸ் செல்வதைப் பார்த்து.

இதென்னடி பூவிழி இத்தனை ஆம்புலன்ஸ் லைன் கட்டிப் போகுது யார் மண்டையைப் போட்டார்கள் தெரியவில்லையே!!

அக்கா போலீஸ் கூடப் போகிறது ஏதோ பெரிய ஆட்கள் போல் இருக்கிறது. இதோ கட்சிக் கொடி கட்டி ஒரு கார் போகிறது.

தேனுக்கா அது இருக்கட்டும் நீ ஆம்புலன்ஸ் மேல் கொண்டு போய் வண்டியை விட்டு விடாதே பிறகு உள்ளே இருக்கும் பொணம் எழுந்து வந்து உன் மேல் விழுந்து விடப் போகிறது என்று மிகவும் அசால்ட்டாக பூவிழி சொல்லவும்.

இத்தனை நேரம் நன்றாக வண்டியை ஓட்டி வந்தவளுக்கு இப்போது உதறல் எடுக்க ஆரம்பித்து விட்டது.

ஏய் ஒழுக்கமாக உன் வாய்க்கு ஜிப் போட்டு மூடி விடு. இல்லை என்றால் நீ தாண்டி ஆம்புலன்ஸ் உள்ளே ஆஸ்பத்திரி போக வேண்டும் எப்படி வசதி என்று தேனருவி கேட்க..

அக்கா நீ தானா? இது உனக்கு எப்படி இத்தனை தைரியம் வந்தது.

பேய் கூடவே திரிகிறேன். எனக்குப் பயமா? அதற்கு வாய்ப்பிள்ளை ராஜா..

அப்படியா?? நீ தூக்கிய கூஜாவாகவே நான் இருந்து கொண்டு போகிறேன். பார் உனக்கு முன்னால் ரொம்ப நேரம் நிற்கும் வண்டிக்கு வழி விடு .

என்னடி சொல்லுகிறாய்? எங்கேடி எந்த வண்டியும் இல்லாமல் வண்டி நிற்கிறது என்று சொல்கிறாய்??

உனக்குத் தான் மறை கழண்டு விட்டது போல் இருக்கிறது.

தேனுக்கா நிஜமா உனக்கு தான் கண் தெரியவில்லை அங்கே பார் என்று பூவிழி வேண்டும் என்றே சொல்ல.

தேனருவிக்கு தான் நமக்குத் தான் கண் தெரியவில்லையோ? என்று இப்போது கண் தேய்த்து விட்டு பார்க்கும் போது உண்மையில் எதிர்க்க ஒரு கார் நின்று கொண்டு இருந்தது.

அந்தக் கார் காரர் ஹார்ன் அடித்துக் கொண்டு இருந்தார். பார்த்தா படிக்கிற பொண்ணு மாதிரி இருக்கிறது. நடுரோட்டில் நின்று கொண்டு கதை பேசிக் கொண்டு இருக்கிறாய்?

போ போய் புளிய மரத்தின் அடியில் நின்று கொண்டு நாள் பூராவும் யோசி போ அக்னி நட்சத்திர வெயிலில் நின்று ஏன் மண்டை காய்கிறாய்? கொஞ்சூண்டு இருக்கும் மூளை கரைஞ்சு வெளியே வந்து விடப் போகிறது.

தேனருவியை வாயைக் கிண்டி விட்டவனுக்கு இனி அவள் வழி விடுவாளா??

அடேய் உன் மண்டையில் முதலில் அந்த கொஞ்ச மூளையாவது இருக்குதா?

சொட்டை மண்டையனுக்கு பேச்சைப் பாரு பேச்சு நீ போய் புளிமரத்தில் உட்கார்ந்து கொள்டா என்று மரியாதை காற்றில் பறந்தது.

அந்தக் காரில் இருந்து இறங்கியவனைக் கண்டு இப்போது பயந்து விட்டாள்.

பூவிழி தேனுக்கா உன் வாயை வைத்துக் கொண்டு அமைதியாக இல்லாமல் வில்லன் சார் தூண்டி விட்டாய் வில்லங்கம் தான் டிரெயின் ஏறி வந்து விட்டது.

தேவ் ஆனந்த் மாமா இருந்தால் கூட பயமில்லாமல் இருக்கலாம் இப்போது பார் அந்த ஆள் உயரத்தை பனைமரத்தில் பாதி இருப்பான். பூவிழி தான் இப்போது தனது அக்காவை ஏலத்தில் விட்டவள்.

வில்லன் சார் வில்லன் சார் என் அக்கா பாவம் சார்.. அவள் ஏதோ மூளை கெட்டுப் போய் உங்களைப் பேசி விட்டாள். உங்களுக்கு புண்ணியமாகப் போகும் நீங்கள் கண்ணை மூடி திறப்பதற்குள் நாங்க போய் விடுவோம் என்று பூவிழி காரில் இருந்து கீழே இறங்கி வந்த கார்முகிலனிடம் கெஞ்ச.

ஏய் பூவிழி நீ எதுக்குடி இந்த வில்லங்கம் பிடித்தவனிடம் கெஞ்சிக் கொண்டு இருக்கிறாய்? என் கெத்து என்னாவது??

உன் கெத்து இப்போது கொத்துப் புரோட்டா போடுகிறேன் பார் என்று கார்முகிலன் தேனருவியை முறைத்துக் கொண்டு பஜாரி மாதிரி பேசுகிறாள். என்று முனுமுனுத்தவன் பூவிழி பெயர் நல்லா இருக்கிறது என்று இப்போது தான் பூவிழியைப் பார்த்தான்.

நல்லவேளை அவன் தேனருவியைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. பூவிழி மேல் தான் அவன் பார்வை இருந்தது.

தூரத்தில் இன்னும் ஒரு கார் வருகிறது என்று இப்போது பூவிழி தான் அட இனிப் பயமில்லை. நான் கூட இந்த தேனுக்கா வாயாடல் வினை தேடிக் கொள்வாள் என்று தான் நினைத்தேன். இப்போது இன்னொரு கார் வருவதால் அந்த பயமில்லை எப்படி இருந்தாலும் பிரச்சினை பெருசு ஆகாது என்று தைரியமாக நின்று விட்டாள்.

இத்தனை நேரம் கெஞ்சியவள் இப்போது அமைதியாக நிற்கவும்
அப்போது தான் தேனருவி பூவிழி பார்வை சென்ற திசையில் பார்த்தவள்.

தேவ் ஆனந்த் கார் என்று தெரியாமல் அந்தக் காரின் முன்னால் போய் நின்று விட்டாள் காரை குறுக்காட்டி நின்று கொண்டு ஹலோ இது ஒன்வே இதில் வழியில்லை வேறு வழியில் செல்லுங்கள் என்று கூறிக் கொண்டு இருந்தாள்.

தேவ் ஆனந்த் பார்த்து விட்டான். ஹனிபால்ஸ் தான் என்பதைத் தெரிந்து கொண்டவன். காரில் இருந்தவர்களை இருங்கள் வெளியே ஏதோ பிரச்சினை போல் இருக்கிறது என்று கூறி விட்டு கார்க்கதவைத் திறந்து வெளியே வந்தவனைப் பார்த்த தேனருவி அச்சோ மை வருங்கால புருஷர் வந்து விட்டார். போச்சு ஜோலி முடிந்தது.

ஹனிபால்ஸ் என்ன ஏழரையைக் கூட்டி வச்சுருக்கிறாளோ? எதற்காக காருக்கு குறுக்கே வண்டியை நிறுத்தி வைத்து இருக்கிறாள்.

தேனருவி தேவ் ஆனந்த் பார்த்ததும் அச்சோ மாட்டிக்காமல் ஏதாவது செய்டி என்று அவளுக்கு அவளே ஒரே வெயிலா இருக்கிறது என்று சுடிதார் சால் எடுத்து முகத்தை மறைக்க தலையில் முக்காடு போல் போட்டுக் கொண்டாள்.

இவள் இத்தனை நேரம் அடித்த வாய் என்ன? இப்போது இந்தக் காரில் இருந்து இறங்கியவரைப் பார்த்து எப்படி பம்முகிறாள் என்று கார்முகிலன் சொல்ல.

அவர் தான் என் அக்காவிற்கு பார்த்து இருக்கும் மாப்பிள்ளை.

ஓஹோ அது தான் இந்த பம்மல் கே சுந்தரியா??


தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top