Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 299
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 38
பாகம் - 38
ஹனிபால்ஸ் ஒரு முத்தம் கொடுடி என்று தேவ் ஆனந்த் அவளிடம் கெஞ்ச,
அச்சோ எனக்கு வெட்கமா இருக்குங்க.. நான் மாட்டேன் போங்க மாமோய்..
கொடுக்காட்டி போடி நான் இங்கே மதுரையிலேயே அழகான பெண் பார்த்து சைட் அடித்துக் கொள்கிறேன்.
என்னது மதுரைக்கா போய் இருக்கிறீர்கள். என்கிட்ட சொல்லவே இல்லை. ஆமா கொஞ்ச நேரத்திற்கு முன்னால் என்ன சொன்னீங்க சாரே என்னைத் தவிர வேற எவளாச்சையும் பார்த்தீங்க புருசனுக்கு கண் குருடானாலும் பரவாயில்லை என்று நோண்டி விடுவேன்.
சில்பா அவளின் மண்டையில் கொட்டியவள் எருமை மாடு இப்போது எதுக்குடி ஊருக்கே தம்பட்டம் அடிக்கிறாய்?
நான் என்னடி தப்பாகச் சொல்லி விட்டேன். உண்மையைத் தான் சொன்னேன்.
ஆமா பெரிய உண்மை லூசாடி சார் பத்தி கொஞ்ச மாச்சும் நினைத்துப் பார்த்தாயா? தன் மாணவியையே மனைவி ஆக்கிக் கொண்டார் என்று அவர் பெயர் தானே கெடும். உனக்காகத் தானே அவரும் அவருடைய வீட்டாரும் படிப்பு முடிந்ததும் திருமணம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.
நீ வீட்டிற்கு போய் இந்த உறவு முறை சொல்லி பேசிக் கொள் இங்கே கேண்டீன்ல உட்கார்ந்து டூயட் பாடாதே லூசு என்று அவள் சத்தம் போட..
கொஞ்ச நேரமா மீரா மேடம் உன்னைத் தான் நோட் செய்து கொண்டு இருக்கிறாங்க. அதுவும் அது தேவ் ஆனந்த் சாரை ஒன் சைடா லவ் செய்து கொண்டு இருக்கிறது. அதுக்கு மட்டும் உன் விடயம் தெரிந்தது. அப்புறம் சங்கு தாண்டி என்று சொல்லவும் இப்போது தேனருவி ,
சில்பா அந்த மீராவிற்கு ஏதாவது கண்ணன் கிடைப்பான். ஆனால் எண்ட மாமாக்கு நான் மட்டும் தான் என்று வெளியே கெத்து காண்பித்து இருந்தாலும் உள்ளுக்குள் உதறல் தான் எடுத்தது.
சரியான நேரத்தில் இந்த நிழலு எங்கே போச்சு.. நேற்று இரவில் இருந்து என் கண்ணில் தட்டுப்படவே இல்லை.
இப்படியே நிழல் நான் கூப்பிடும் நேரத்திற்கு வராமல் இருந்தாய்!! மவளே உன்னை அந்த தகரப்பெட்டியில் அடைத்து விடுவேன்.
நிழல் சுனைனா அவளுக்கு சூம் மந்திரகாளி போட்டு விட்டு இன்று காலை அங்கே இருந்து நேராக வந்தது அதனுடைய கல்லறைத் தோட்டத்திற்குத் தான் அன்றைக்கு தேனருவி யிடம் அத்து மீறிய அந்த நால்வரும் குளத்தில் அவர்களின் காரோடு உள்ளே தண்ணீரில் தள்ளி விட்டது அல்லவா?
இன்று காலை தான் ஒவ்வொரு உடலாக தண்ணீரில் ஊறி உப்பி வெளியே வந்தது. அவ்வழியாக வந்தவர்கள் காவல் துறைக்கு அழைத்துச் சொல்லி இருக்க கொஞ்ச நேரத்திலேயே காவல்துறையும் பத்திரிகையாளர்களும் தீயணைப்பு வீரர்கள் என்று அனைவரும் வந்து விட்டனர்.
மீன்கள் அவர்களின் முகத்தை கடித்து இருக்க அவர்கள் முகம் அடையாளம் தெரியவில்லை.
இவர்கள் காரோடு விழுந்ததால் ஜே. சி. பி இயந்திரம் மூலம் டாடா சுமோ காரை வெளியே எடுத்தனர். அப்போது அந்த நம்பர் வைத்து தான் நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்று இப்போது அந்த டாடா சுமோ காரின் எண் பதிவேடு எடுத்து
வட்டார வாகன பதிவேடு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
பிறகு அவர்களது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கான்ஸ்டபிள் மலைச்சாமி சார் என்று கூறிக் கொண்டு வந்து எஸ். ஐ. சிவராமன் சாரிடம் சார் தகவல் வந்து விட்டது.
என்னையா மொட்டையா வந்து தகவல் வந்து விட்டது என்று சொல்கிறாய்?
சார் நாம் நம்பர் அனுப்பி இருந்தோமே சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அங்கே இருந்து தான் வந்துள்ளது.
அந்த நம்பர் அமைச்சர் காத்தவராயன் முகவரியில் தான் பதிவாகி இருக்கிறது.
சரி நீங்கள் சொல்வதைப் பார்க்கும் போது இதில் ஏதாவது எதிர்கட்சி போட்டியால் நடந்த கொலையா என்று விசாரித்தால் தான் தெரியும். எதற்கும் நான் அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் அவருக்கு தெரியப்படுத்து கிறேன்.
அதற்கு முன்பு கமிஷனர் கரிகாலனுக்கு அழைத்து விடயத்தைச் சொல்ல நீங்கள் முறைப்படி எது செய்ய வேண்டுமோ? அதைச் செய்யுங்கள்.
அங்கே சிசிடிவி ஏதாவது இருக்கிறதா?
சார் அப்படி எதுவும் இல்லை இது நடுக்காட்டுக்கு நடுவில் இருக்கும் குளம் அதனால் பெரும்பாலும் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி.
இது இதற்கான பதில் இல்லை சிவராமன்.. நீங்கள் இந்தக் கார் சுற்று வட்டாரங்களில் எந்த ஊர் வழியாக வந்தது என்று அனைத்து இடத்திலும் இருக்கும் சிசிடிவி புட்டேஜ் கலெக்ட் செய்து பாருங்கள் சந்தேகம் வரும் நாளில் இந்தக் காரை பின் தொடர்ந்து வந்த கார் ஏதாவது வருகிறதா என்று பாருங்கள் என்று அவர் கட்டளை யிட..
ஓகே சார்..
அமைச்சர் காத்தவராயன் வீட்டிற்கு தகவல் சொல்ல வேண்டுமே.
அவர்கள் வீட்டில் பையனைக் காணவில்லை என்று எந்தப் புகாரும் வந்து இருக்கிறதா? என்று பாருங்கள். இல்லை அவர்கள் வாகனம் ஏதாவது திருட்டு போய் இருக்கிறதா? அந்த நம்பர் உண்மைதானா? என்று எல்லாக் கோணங்களிலும் விசாரித்துப் பாருங்கள்.
அதே போல் அங்கே இருக்கும் எஸ். ஐ. பெருமால் அவருக்கு அழைத்து விபரத்தைச் சொல்ல அவர் அமைச்சர் பையன் அவனுடைய சகாக்கள் மூன்று பேரும் செய்யும் இல்லீகல் அனைத்தும் சொன்னார்கள்.
அரசியல் பலம் இருப்பதால் அழகாய் இருக்கும் பெண்களை எல்லாம் அவன்களுடைய கோட்டைக்கு எடுத்துச் சென்று விடுவார்கள். அவன்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் கணக்கெடுக்கவே முடியாது. அவன் அப்பன்கள் எல்லாம் தங்களது அரசியல் பலத்தை வைத்து அந்தப் பெண்ணின் குடும்பத்தை மிரட்டி கேஸ் போட விடாமலும் சாட்சி சொல்ல விடாமல் மிரட்டி விடுவார்கள்.
அவனால் பாதிக்கப்பட்ட யாரோ தான் இது போல் செய்து இருக்கிறார்கள்.
ஓகே சார் இருந்தாலும் நாம் அமைச்சர் காத்தவராயன் வீட்டிற்கு தகவல் சொல்வது தான் முறை நீங்கள் தெரியப்படுத்தி விடுங்கள். அவர்கள் முகங்கள் எல்லாம் மீன்கள் கடித்ததால் சிதைந்து உள்ளது அதனால் அவர்கள் யாராவது வந்தால் தான் அவர்களைப் பற்றி முழு விவரமும் தெரியும்.
நிழல் அவர்களை கை கால் அசைக்க முடியாதவாறு மாயக்கட்டு போட்டு வைத்து இருந்ததால் தான் அந்த நால்வரால் நீச்சல் அடித்து வெளியே வர முடியவில்லை.
கான்ஸ்டபிள் மலைச்சாமி ஒரு மீனவனை அழைத்து வருகிறார்.
அவன் தான் இந்த கார் நான்கு நாட்கள் முன்பு கல்லறைத் தோட்டத்தில் இருந்து வேகமாக வந்ததாகவும் அவர்கள் அனைவரும் சரியான போதையில் இருந்தாகவும் பார்த்து இருக்கிறான் அதற்கு பிறகு இன்று தான் ஊரில் இருந்து வந்து இருக்கிறான். அது தான் ஊருக்குள் செய்தி கேள்விப்பட்டு இங்கே வந்து உள்ளான்.
ஏப்பா உன் பெயர் என்ன?
சாமி சுப்பனுங்க..
என்ன வேலை செய்கிறாய்?
சாமி நான் மீன் பிடித்து ஊருக்குள் விற்பேனுங்க மத்தபடி
கிடைச்ச வேலை செய்வேனுங்க
ஓஹோ.. ஆமா நீ நன்றாகப் பார்த்தாயா? கல்லறைத் தோட்டத்தில் இவர்களுக்கு என்ன வேலை .. அது இங்கேயிருந்து எத்தனை கிலோமீட்டர் இருக்கும்.
சாமி நான் பார்க்கும் போது இவுங்க கார் ஓட்டிக் கொண்டு வந்ததே தாறுமாறாக வந்ததுங்க சாமி என்ற மேலே இடிச்சு விடுவாங்கோ என்று தான் நான் ஓரமா நின்று இருந்தேன் சாமி நாலு பசங்களுமே நல்லா போதையில் இருந்தாங்க சாமி என்னைப் பார்த்து கூட ஏதோ கெட்ட வார்த்தையால் திட்டினார்கள் சாமி.
காலங்கெட்டு கிடக்குது சாமி அது தான் சாமி வாழவேண்டிய வயசில் இப்படி கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகி உயிரை விட்டுடாங்க போங்க எல்லா பணக்கார ராசாவூட்டுப் பையன்களா சாமி.??
சார் என்று மலைச்சாமி வரவும்
சொல்லுங்க சார் பிரேதபரிசோதனை ரிப்போர்ட் ரெடியாகி விட்டதாம் . டாக்டர் அங்கே வரச் சொல்லுகிறார்.
சுப்பன் நீங்கள் சாட்சி சொல்ல வரவேண்டி இருக்கும்.
சாமி நான் கண்ணுல பார்த்தது சொல்கிறேன் சாமி அதற்காக என்னைய சிறைக்கம்பிக்குள் போட்டு விடாதீங்க சாமி எனக்கு இந்த சைக்கிள் மட்டும் தான் ஓட்டத் தெரியும் சாமி.
ஐயா நீங்கள் பயந்து கொள்வது போல் எல்லாம் நடக்காது. என்று கூறிவிட்டு அங்கேயிருந்து இப்போது அரசுமருத்தவனை நோக்கிச் சென்றார் சிவராமன்.
மருத்துவமனை உள்ளே சென்று டாக்டர் சொன்ன தகவலில் அதிர்ந்து தான் விட்டார். எஸ் ஐ. சிவராமன்.
சார் நீங்கள் என்ன சொல்கிறீர்கள். அவர்கள் உடலில் எலும்புகளில் காயம் ஏற்பட்டு இருந்ததா? அதுவும் இது மனிதர்கள் அடித்தது போல் இல்லை என்று கூறுகிறீர்கள் அனைவரது உடலிலும் ஒரு முத்திரை இருக்கிறது. அதை விட வேறு ஒரு அடையாளம் நான்கு பேர் கையிலும் ஆறு விரல்கள் உள்ளது.
நீங்கள் சொல்வதைப் பார்த்து இந்தக் கேஸே எந்தக் கோணத்தில் விசாரிப்பது என்பது பெரிய தலைவலியாக இருக்கிறது.
சிவராமன் சார் அவர்கள் நான்கு பேரும் இறப்பதற்கு முன்பு நிறைய ஆல்கஹால் உட்கொண்டு உள்ளனர்.
அப்போது மருத்துவமனை வளாகம் முன்பு அமைச்சர் காத்தவராயன் மற்றும் அவருடைய நண்பர்கள் மூன்று பேரும் நிறைய தொண்டர்களோடு வெள்ளை வேட்டி சட்டையோடு வருகின்றனர்.
கமிஷனர் கரிகாலன் அவரும் கூடவே வருகின்றனர்.
ஊழல்வாதியாக இருந்தாலும் அரசியல்வாதி அமைச்சராக இருக்கும் போது அவருக்கு மரியாதை கொடுத்துத் தானே ஆக வேண்டும்.
சிவராமன் தன்னிடம் உள்ள பிரதேபரிசோதனை ரிப்போர்ட் கமிஷனர் கையில் கொடுத்து விட்டு அங்கே விசாரித்தவகையில் அனைத்தையும் சொன்னார். ஆனால் அவர்கள் கல்லறைத் தோட்டம் சென்றதைச் சொல்லாமல் அவர்கள் வாகனத்தை முழு போதையோடு இயக்கி வந்ததையும் அதனால் வண்டி கட்டுப்பாட்டை இழந்து குளித்தின் தடுப்புச் சுவரை இடித்து விட்டு தண்ணீருக்குள் பாய்ந்து உள்ளது என்று சொல்ல.
ஏய்யா காக்கி அவுங்க தண்ணி போட்டதை நீ பார்த்தாயா?? இல்லை கட்டுப்பாட்டை இழந்து தண்ணீருக்குள் மூழ்கியதை நீ பார்த்தாயா?
எனக்கு வேண்டாத அரசியல் எதிரிகள் தான் என் மகனை கொன்று குளத்தில் வீசி இருப்பார்கள் அதை விசாரிப்பதற்கு வக்கில்லை சும்மா இத்தனை பேப்பரை காண்பித்து தப்பித்துக் கொள்ள பார்க்கிறாயா??
சிவராமனுக்கு மனதிற்கு கஷ்டமாக இருந்தது. பதவியில் இருப்பவரை கமிஷனர் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் போது நாம் என்ன? செய்ய முடியும். அமைச்சர் கையை ஆட்டி ஆட்டி பேசும் போது தான் அவரது கையில் ஆறு விரல்கள் இருப்பதை பார்த்தார். அப்படியே அவரின் நண்பர்கள்
மூவரையும் பார்க்க அவர்கள் கையிலும் ஆறுவிரல்கள் இருந்தது.
நிழலின் வேட்டை தொடரும்...
அந்த நால்வர் தான் நிழல் பழிவாங்க நினைப்பவர்கள் பார்ப்போம் இனி வரும் பதிவுகளில்..
தொடரும்...