• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
299
நீ உடல் நான் நிழல்
பாகம் - 37


விஜயலதாவும் சுனைனா இருவரும் தோட்டத்தில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்ததை தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்து இருந்தாள் வானதி அதைத் தான் இப்போது தனது மாமியாரிடம் காண்பித்து இருந்தாள்.

அதில் தீயென முறைத்தாள் விஜயலதா.

அக்கா நான் உங்களை வேண்டும் என்றே படம் பிடிக்கவில்லை. நான் தோட்டத்தில் இரண்டு கிளிகள் இருந்ததைத் தான் முதலில் வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தேன்.

அப்போது காரசாரமாக சத்தம் கேட்டதால் நான் எத்தேச்சையாக வீடியோ ஆனில் இருந்தது அப்படியே பதிவாகி விட்டது.

வானதி நீ எதுக்கு அவளுக்கு விளக்கம் கொடுக்கிறாய்? செய்வது பூராவும் மொள்ளைமாரித்தனம் இதில் அவள் செய்ததிற்கு ஆதாரம் கேட்கிறாள். அப்படியே சி. பி. ஐ விசாரணை தான் வைக்க வேண்டும்.

மதுரைக்குச் சென்ற தேவ் ஆனந்த் முதலில் அங்கே இருக்கும் சர்க்கரை ஆலைக்குச் சென்று கரும்பு அரவைக்கு எத்தனை டன் தேவைப்படும் என்று ஆலை மேலாளரிடம் பேசி விட்டு.. சித்திரை திருவிழா அங்கே நடைபெறுவதால் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று தரிசனம் செய்கிறான்.

நித்யா சபரி அவர்களை எத்தேச்சையாக பார்க்க நேரிடுகிறது.

தன்னை யாரோ? பெயர் சொல்லி அழைக்க அவன் மீனாட்சி அம்மன் தெப்பக்குளம் அருகில் இருக்கும் பெண்மணியைப் பார்க்க.

தம்பி உங்கள் பெயர் தேவ் ஆனந்த் தானே என் பெயர் நித்யா சபரி நான் இங்கே மதுரை தான் நீங்கள் இவ்வளவு தூரம் வந்து விட்டு எங்கள் வீட்டிற்கு வராமல்
சென்றால் நல்லா இருக்குமா?

அதில்லைங்க அக்கா நான் உங்களை இன்றைக்குத் தான் பார்க்கிறேன். அது தான் யார்? என்று சட்டென நியாபகம் வரவில்லை.

நித்யா சபரி அவர்களின் மகன் அருகில் வந்தவன். அம்மா இந்தாங்க நீங்க கேட்ட "ஆலாமிட்டாய்" என்று அவரிடம் கொடுத்து விட்டு அம்மா உங்கள் சிறுவயது ஆசை இன்னும் தீர்ந்த பாடில்லை நான் போய் கடையில் கேட்டு வாங்கி வருகிறேன்.

கடைக்காரர் கேட்கிறார்.. உங்கள் அம்மா வாங்கி வரச் சொன்னார்களா? என்று எனக்கு வெட்கமா இருக்கிறது.

தம்பி என் விருப்பத்தை நான் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன். தம்பி தேவ் ஆனந்த் உங்களுக்கும் இந்தாங்க ஆலாமிட்டாய் என்று நித்யா சபரி மிட்டாய்🍭 கொடுக்க.

தேவ் ஆனந்த் உடனே தனது எண்ணவோட்டத்தில் நிலை கொண்டவளை நினைத்து சிரித்தான்.

தேனருவி சில நேரங்களில் இந்த ஆலாமிட்டாய் லாலிபாப் வாயில் வைத்து சப்பி சாப்பிடுவதை பார்த்து இருக்கிறான். அது தான் இந்த மிட்டாய் பார்த்ததும் அவள் நியாபகம் வந்து விட்டது.

தம்பி என்ன உங்களுக்கு திருமணமா ? அது தான் உங்களுக்கு பிடித்தவர்கள் சாப்பிட்ட அழகு மனக்கண்ணில் தோன்றுகிறதோ??

அக்கா எப்படிங்கா? கண்டு பிடித்தீர்கள்.!! எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

தம்பி நான் ஒரு எழுத்தாளர் தான் அது தான் ஒருவர் முகமாறுதலை எளிதாக உள்வாங்கி சொல்ல முடிகிறது.

தேவ் ஆனந்த் உடனே தேனருவி போட்டோவைக் காண்பிக்கிறான். அக்கா நேற்று தான் பெண்பார்க்க போனோம். அதற்குள் எங்கள் அண்ணா டவுனில் ஒரு வேலை இருக்கிறது என்று சொல்லி அனுப்பி விட்டார் அது தான் வந்தது வந்தோம். மீனாட்சி சுந்தரேஸ்வரர் தரிசித்துச் செல்லலாம் என்று வந்தேன்.

தம்பி உங்களை எனக்கு முதலிலேயே தெரியும். அதனால் தான் நான் உங்களைப் பெயர் சொல்லி அழைத்தேன்.

ஓ ஆமாம் ல நீங்கள் என் பெயர் சொல்லி தான் அழைத்தீர்கள்.

சொல்லுங்கள் அக்கா என்னை எப்படி தெரியும் உங்களுக்கு.

உங்களுக்கு பார்த்து இருக்கும் பெண் தேனருவி யின் பெரியம்மா மருமகள் நான் இங்கே மதுரையில் தான் இருக்கிறோம்.

யசோதா எனக்கு சின்ன அத்தை தான்.. தேனருவி எனக்கு கொழுந்தியா தான் தம்பி..

முந்தா நேற்று மாலை தான் சின்ன அத்தை அழைத்துச் சொன்னாங்க நம்ம தேனுக்கு ஒரு இடம் அமைஞ்சு இருக்கிறது.

ஆனா நான் நேற்று அங்கு உங்களைப் பார்க்கவில்லை.

தம்பி இங்கே சித்திரை திருவிழா நடைபெறுகிறது. அது தான் நாங்கள் அனைவரும் இங்கே இருந்து விட்டோம். கண்டிப்பாக திருமணத்திற்கு வந்து விடுவோம்.

அக்கா கண்டிப்பாக வாங்க பரவாயில்லைங்க இங்கே பிஸ்னஸ் சம்பந்தமாக வந்தேன். முதலில் யாரோ ஒருவர் என்று தான் பேசினேன். பிறகு பார்த்தால் உறவினர் ஆகி விட்டோம்.

தம்பி நீங்கள் வாங்க இங்கே தான் எங்கள் வீடு இருக்கிறது. போய் விட்டு பிறகு போகலாம் வாங்க.. டேய் தம்பி மாமாவை அழைத்து வாடா என்று நித்யா சபரி அவர்களின் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.

அக்கா நான் காரில் தான் வந்தேன். அதனால் நாம் அனைவரும் காரிலேயே சென்று விடலாம்.

அவர்கள் வீட்டிற்கு சென்று அங்கே இருந்தவர்களோடு பேசி விட்டு கிளம்புகிறேன் என்று தேவ் ஆனந்த் சொல்ல.

தம்பி சாப்பிடாமல் எங்கே செல்கிறீர்கள். நீங்கள் பையன்களோடு பேசிட்டு இருங்கள் நான் சீக்கிரம் சமைத்து விடுவேன் என்று பழங்கள் கட் செய்து கொடுக்க..

அத்கா இப்போது தான் இனிப்பு சாப்பிட்டேன். மறுபடியும் பழங்கள் கொடுக்கிறீர்கள். எனக்கு இதற்கே வயிறு நிரம்பி விட்டது.

தேவ் முதன்முதலில் இங்கே வந்து இருக்கிறீர்கள். எப்படி சாப்பிடாமல் அனுப்புவது. சமையல் முடிந்தது. வடையும் பாயாசமும் ஒரு பத்து நிமிடம் என்று இப்போது சமையல் அறைக்குள் செல்ல ஏற்கனவே சமையல் அம்மா முக்கால்வாசி வேலைகளை முடித்து இருக்க மளமளவென்று வாழைப்பூ வடை
அன்னாச்சிப்பழ கேசரி.. பால் பாயசம் செய்து அமர்க்களமாக தலவாழை இலை விருந்து சாப்பிட்டு விட்டு தான் அங்கே இருந்து கிளம்பினான்.

கிளம்பும் முன் அக்கா நான் உங்களை ஆலாமிட்டாய் அக்கா என்று தான் கூப்பிடுவேன். மிட்டாய் இனிப்பு உங்கள் பேச்சிலும்.. விருந்திலும் இருக்கிறது.

ரொம்ப சந்தோஷமா இருக்கிறது தம்பி எனக்கு கூடப் பிறந்த தம்பி இல்லை உங்களை என் தம்பியா நினைத்துக் கொள்கிறேன்.

சரிங்க அக்கா நான் கிளம்புகிறேன். பிறகு பார்க்கலாம்.

தேவ் ஆனந்த் தன் அண்ணன் ரவிக்குமாருக்கு அழைத்தான்.

ஹலோ அண்ணா நீங்கள் சொன்ன வேலை எல்லாம் முடித்து விட்டேன். இன்னும் ஏதாவது வேலை இருக்கிறதா??

தேவ் இன்னும் ஒரு வேலை இருக்கிறது. நீ நம் தோட்டத்திற்கு
உரங்கள் தேவைப்படுகிறது அதை அந்தக் கடையில் மொத்தமாக நமக்குத் தேவைப்படும் அளவு எவ்வளவு என்று நான் அனுப்புகிறேன் அதை மட்டும் நீ அந்தக் கடையில் பார்த்து நம் முகவரிக்கு அனுப்பச் சொல்லி விட்டு.. என்று சொல்ல வந்தவன்..

நீ இப்போது இன்னமும் மதுரையில் தான் இருக்கிறாயா??

ஆமாம் அண்ணா ஏனுங்க நம் வீட்டிற்கு தேவை ஆன பொருட்கள் ஏதாவது வாங்கி வர வேண்டுமா?.

அதெல்லாம் வேண்டியதில்லை உனக்கு வேறு ஏதாவது வேலை இருக்கிறதா?

இல்லை அண்ணா ஏனுங்க உங்கள் குரலில் ஒரு வித பதட்டம் தெரிகிறது. அம்மா அப்பா நல்லா இருக்கிறார்களா??

அதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் வேறு ஒரு யோசனையில் இருந்தேன். அது தான் நீ இப்போது என்ன செய்கிறாய்? தெரியுமா? நேராக மாஞ்சோலை போகிறாய்?

சுரேஷ் ஊருக்கா எதுக்குங்க அண்ணா?

அங்கே போய் சிவலிங்க மாமாவையும் பரிமளா அத்தையும் நம் வீட்டிற்கு அழைத்து வா?

ஏதோ விடயம் நடந்து உள்ளது. அண்ணா பேசுவதில் தெரிகிறது. போனில் அண்ணா சொல்லத் தயங்குவதிலேயே தெரிகிறது. சரி இங்கே இருந்து அவர்களை அழைத்துச் சென்றால் தெரிந்து விடும் என்று இப்போது காரை மாஞ்சோலை நோக்கித் திருப்பினான்.

மறுபடியும் தேவ் ஆனந்த் செல்போன் அழைப்பு வரவும் இப்போது யார்? என்று பார்த்தால் அவனின் கனவு தேவதை தேனருவி தான்.

அழைப்பை ஏற்றவன் ஹேய் பொண்டாட்டி என்னடி மாமன் கூடப் பேசாமல் இருக்க முடியவில்லையா??

நான் உங்கள் டூ போங்க நீங்க நேற்று பேசும் போது பாதியில் கால் கட்டாகியது. நான் இரவு திரும்பவும் அழைத்தால் சுவிட்ஜ் ஆப் என்று தான் வந்தது. என்று அழுது விடுபவள் பேசவும்.

தேவ் ஆனந்த் காரை ஓரமாக நிறுத்தியவன் அவளிடம் இப்போது நீ போனை வைடி நான் வீடியோ கால் வருகிறேன்.

அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் நான் உங்கள் கூட டூ என்று பழைய பல்லவியைப் பாட.,

அவ்வளவு தானா? இன்னும் வேற ஏதாவது பேசவேண்டுமா? என்று கோபமாக தேவ் ஆனந்த் பேசவும்.,

தேனருவி கப்சிப் என்று அமைதி ஆகி விட்டாள்.

ஹனிபால்ஸ் லைனில் இருக்கிறாயாடி.. நீ பேசாட்டிப் போ நான் உனக்குப் பிடித்த ஒன்று தான் இப்போது சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன். உனக்கும் வேண்டுமா சொல் டி நான் வாங்கி வந்து நாளைக்கு கல்லூரியில் கொடுக்கிறேன்.

சாரே உங்களுக்கு இப்போது தான் கல்லூரி இருக்கிறது என்று நினைவு வந்ததுங்களா? சாரே நான் காலையில் வந்து பார்த்தாள் நீங்கள் உட்கார்ந்து இருக்கும் சேரே சாரே காணம் என்று பீலாகி விட்டது சாரே. நான் என் மனசைக் கவர்ந்த நாதன் காணாமல் பரிதவித்துப் போனேன் சாரே அது தான் சாரே கோசலை மேடம் வெளியே துரத்தி விட்டாங்க சாரே நான் நீண்ட நேரமாக தங்களுக்கு அழைத்துக் கொண்டு இருக்கிறேன் சாரே.. ஆனால் தாங்கள் தொலைவு எல்லைக்கு அப்பால் உளாளீர்கள் என்றே வருகிறது சாரே.

அப்படி எங்கே சாரே போனீங்க நான் வாடிய மலராய் துவண்டு போய் அமர்ந்து இருக்கிறேன் சாரே.

என்னடி கிண்டலா நான் பக்கத்தில் இல்லை என்று இத்தனை வாயடிக்கிறாயே வந்தேன் அந்த சுழிச்சு சுழிச்சு பேசும் உன் அதரத்தை அப்படியே அமுக்கி கடித்து விடுவேன்.

வீடியோ கால் வரமாட்டீங்கிறாயே நீ போடி என்று தேவ் ஆனந்த் சொல்ல.

சாரே இப்போது தானே சொன்னேன் நான் கல்லூரியில் படிக்கும் மாணவி அதனால் வீடியோ காலில் காதலன் கூடப் பேசினேன் என்று புகார் மழை பொழிந்து விடுவார்கள். அது தான் மாமோய் என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னாள்.

கேண்டீன்ல தான் உட்கார்ந்து இருக்கிறாய்?

அதெப்படி உங்களுக்குத் தெரியும்? எனக்குத் தெரியாமல் என்னைக் கண்காணிப்பதற்கு ஆள் வைத்து இருக்கிறீர்களா??

ஆமா இவள் பெரிய இங்கிலாந்து இளவரசி டயானா இவளைக் கண்காணிக்க ஆள் வைக்கிறார்கள். உன்னைச் சுற்றி கேட்கும் சத்தம் தாண்டி அதுவும் இந்த நேரத்தில் நீ எங்கே இருப்பாய் என்று எனக்குத் தெரியும் டி என் செல்லப் பொண்டாட்டி.

சரி அப்படியே மாமனுக்கு ஒரு முத்தம் கொடுடி.

போங்க எனக்கு வெட்கமா இருக்கிறது.



தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top