Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 299
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 36
பாகம் - 36
சுரேஷ் என்று சத்தமாக ரவிக்குமார் அழைக்கவும் உள்ளே துகில் இல்லாமல் துயிலில் இருந்தவர்கள் இருவரும் எழுந்து விட்டனர்.
மெல்ல கண்விழித்த இருவரும் ஒருவரைப் ஒருவர் பார்த்து அதிர்ச்சியில் கத்தினர்.
ஆமா நீ எப்படி என் வீட்டிற்குள் வந்தாய்??
சுனைனா நான் நான்.. என்று விழி பிதுங்கி போகும் அளவுக்கு அவனையே பார்த்தாள். ஆடையற்ற அவனின் உரமேறிய நெஞ்சுப் பகுதியும் ரோமம் நிறைந்த உடல் அவளுள் ஏதோ செய்ய.. அவளைப் பார்க்க தவறி இருந்தாள்.
அவளின் முகத்தைப் பார்த்து தான் பேசிக் கொண்டு இருந்தவன் பார்வை அவளின் கழுத்துக்கு கீழே செல்ல அவனின் மனசு இது வேண்டாம் என்று தடுக்க அவனின் விழி சொன்னபடி கேட்க வேண்டுமே?
சுனைனா அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவன் பார்வை போன திசையில் தன்னைக் குனிந்து பார்த்தவள்.. அச்சோ என்று போர்வையை எடுத்து தனது உடலை மறைத்துக் கொண்டாள்.
விடிய விடிய போட்ட ஆட்டம் மறந்து விட்டதோ? சுரேஷ் தான் போதையில் இருந்தான். ஆனால் சுனைனா சுயநினைவில் தானே இருந்தாள். அவள் அவனிடம் இருந்து தன் பெண்மையைத் தற்காத்துக் கொண்டு இருக்கலாம் என்று சுரேஷ் நினைத்து இருக்க.
இருவரும் தங்களது ஆடைகளைத் தேடினர். அது அறை முழுவதும் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக கிடந்தது.
சுரேஷ் தான் முதலில் ஆமா நீ எப்படி என் வீட்டிற்குள் வந்தாய்?
சுனைனா என்ன பதில் சொல்வாள்?? அவளுக்கு அவளை நினைத்து கோபமாக வந்தது. தான் தேவ் ஆனந்த் மாமா என்று போதையில் இருந்ததால் தான்
வேறு ஒரு ஆண் தன்னைத் தொட்டும் கூட அதில் சுகித்திருக்கிறேனே.. இப்போது இங்கே இருந்து யாருக்கும் தெரியாமல் எப்படி வெளியே செல்வது என்று பார்த்தாள்.
கீழே குனிந்து அவளின் ஆடைகளை எடுத்துக் கொண்டு குளியலறை சென்றவள். தனது ஆடைகளைப் போடும் போது தான் தன் உடலில் அவனின் பல் தடங்கள் இருப்பதைக் கண்டவள் முகத்தைப் பார்க்க அதரங்கள் இரண்டும் வீங்கி காயம் வந்து உறைந்து போய் இருந்தது.
முகத்தை தண்ணீர் விட்டு நன்கு கழுவியவள் இப்போது வெளியே வந்தவள் கதவைத் திறந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள் சென்று விட வேண்டும் என்று தான் நினைத்து கதவைத் திறந்தாள்.
கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல் இந்தப் பெண்ணால் எப்படி இப்படி இருக்க முடிகிறது என்று சுரேஷ் யோசித்துக் கொண்டு.
"ஏய் சுனைனா நீ எதுக்கு என் வீட்டிற்குள் வந்தாய்? நான் கேட்கும் கேள்விக்கு முதலில் பதில் சொல்."
உனக்கு என்ன பதில் தெரிய வேண்டும் எனக்குத் தெரிந்தால் சொல்ல மாட்டேனா??
என்ன இப்போது இந்தக் கேள்வியை கேட்கும் நீ இரவு பூராவும் என் மேல் படுத்துக் கிடந்தாயே அப்போதே கேட்டு வெளியே அனுப்பி இருக்க வேண்டியது தானே?
எனக்குத் தான் சுயநினைவு இல்லை நீ நினைவோடு தானே இருந்தாய்? என்னிடமிருந்து தப்பி இருக்கலாம் தானே!!
இப்ப என்ன செய்ய வேண்டும் என்கிறாய்?? மூச்சு வெளியே தெரியாமல் இருந்து கொள்ளலாம். யாருக்கும் தெரியாமல் நான் வீட்டிற்கு சென்று விடுகிறேன். அது போல் நீயும் இருந்து கொள்.
ஏய்? என்னடி பேச்சு பேசுகிறாய்? நானே என் திருமணத்திற்கு முன் என் கற்பு போய் விட்டது என்று என் வருங்கால மனைவிக்கு துரோகம் செய்து விட்டேன் என்று குற்ற உணர்ச்சியில் இருக்கிறேன்.
இங்கே பாருடா சுரேஷ் அதை நினைச்சு கவலைப்பட வேண்டியவள் நானே அமைதியாக இருக்கும் போது நீ எதுக்கு இப்போது கூப்பாடு போடுகிறாய்?
சுனைனா நீயும் நானும் திருமணம் செய்து கொள்ளலாம்.
இந்த அரண்மனையில் நீ வெறும் வேலை செய்பவன். ஆனால் நான் இந்த அரண்மனை கட்டி ஆளப்பிறந்தவள் என்று சொல்லி விட்டு வேகமாக வெளியே வந்தவள். அதிர்ச்சியில் உறைந்து விட்டாள்.
தன் அக்கா வீட்டு ஆட்கள் அனைவரும் நின்று இருக்க தான் இத்தனை நேரம் பேசியது அனைத்தும் கேட்டு இருப்பார்களோ? என்று ஒரு நிமிடம் யோசித்தவள். இப்போது நடிப்பைப் போட்டாள் தன் அக்கா அருகில் அழுது கொண்டே சென்றாள்.
இத்தனை நேரம் அவள் பேசியதை அவளும் தானே கேட்டாள். அது தான் இவளாகத் தான் இந்த அறைக்குள் வந்து இரவு முழுவதும் வேறு ஒரு ஆணுடன் சல்லாபித்துக் கொண்டு இப்போது அனைவரும் முன் தன் மனதில் இருப்பதை அந்த அரண்மனை ஆளும் ஆசையை சொல்லி விட்டாளே எங்கே நான் தான் திட்டம் போட்டுக் கொடுத்தேன் என்று அனைவரும் முன்பும் சொல்லி விடுவாளோ?
அதற்கு முன் நாம் முந்திக் கொள்ள வேண்டும். அடியேய் பாதகத்தி என்னடி செஞ்சு வைத்து இருக்கிறாய்??
அப்பா அம்மா என்னை நம்பித் தானே இங்கே அனுப்பி வைத்தார்கள். உன் புத்தி இப்படி கீழ்தரமாவா போக வேண்டும். என்று அடித்தவள் அவளை விடுத்து சத்தம் கேட்டு வெளியே வந்த சுரேஷ் மீது தான் பாய்ந்தது.
அடேய் உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்து விட்டாயே எத்தனை ஆளா கனவு கண்டாய்?
என் தங்கச்சி வாழ்க்கையை சீரழிச்சு விட்டாயே!! இப்போது அவளை யாருடா ?? கல்யாணம் செய்து கொள்வாங்க.
நான் திருமணம் செய்து கொள்கிறேன். என்னால் சுனைனா வாழ்க்கை கேள்விக் குறி ஆக வேண்டாம்.
வேலைக்கார நாய் நீ உனக்கு அரண்மனை சொகுசு கேட்கிறதா?
ஏய் என்ன வார்த்தை பேசுகிறாய்? என்று இப்போது ரவிக்குமார் விஜயலதாவை அறைந்து இருந்தான்.
உனக்குத் தெரியுமாடி அவன் வேலைக்காரன் என்று நீ என்னமோ? பிறந்து வளர்ந்த திலிருந்து அரண்மனையில் வாழ்க்கை நடத்தியவள் போல் பேசுகிறாய்??
ஊரை ஏய்ச்சு உன் அப்பன் பெரிய மனுசன் வேஷம் போடலாம் ஆனால் அது எல்லாம் நிலைக்காது தெரிந்து கொள். அவனைப் பற்றி உனக்கு என்ன தெரியும்??
கிருஷ்ணவேணி அம்மா நாம் தான் தரகர் சொன்னார் என்று நல்லா விசாரிக்காமல் ஒரு சாக்கடை குடும்பத்தில் கை நனைத்து விட்டோம். என் தோழி அவள் பையனை என்னை நம்பி இங்கே அனுப்பி வைத்தாள். நான் அவளுக்கு எப்படி பதில் சொல்வேன்.
ஆண்ட்டி நீங்கள் எப்படி பொறுப்பாவீர்கள்? இது எங்கள் இருவரின் தவறு நானே அவளைத் திருமணம் செய்து கொள்கிறேன்.
சுரேஷ் இவர்கள் அளவுக்கு பணக்காரன் இல்லை தான் ஆனால் அவனுக்கும் தோட்டம் தோப்பு நெல் விளையும் பூமி இருக்கிறது.
மாஞ்சோலை கிராமத்தில் வசதியான குடும்பத்தில் பிறந்தவன் தான். ஒரு நாள் அவனுடைய சிநேகிதன் இவனும் வண்டியில் செல்லும் போது விபத்தில் உடன் வந்த தோழன் இறந்து விட்டதால். அங்கே இருந்தால் அதே நினைவில் ஒழுங்காக சாப்பிடாமல் வருத்தம் கொண்டு இருந்ததால் தான் இங்கே வந்தது.
மாஞ்சோலை கிராமத்தில் அவனும் பண்ணையார் தான் அது தெரியாமல் விஜயலதா வாயை விட இப்போது அவளுக்கு விழுந்த அடியில் தங்கை சுனைனா உன்னால் தானே இப்போது என் வாழ்க்கை இந்த மாதிரி ஆகி விட்டது என்று நினைத்தவள்.
தன் அக்கா அவள் மாட்டிக் கொள்வோம் என்று பயந்து தன்னை அடிக்கும் அவள் முகத்திரையை கிழிக்க எண்ணி நான் இது போல் நிற்கக் காரணம் என் அக்கா தான் அத்தை என்னை மன்னித்து விடுங்கள். நான் வேண்டாம் என்று தான் சொன்னேன். ஆனால் அவள் என்னை விடுவதாக இல்லை.
சுனைனா கொஞ்சம் யோசித்து பேசு நான் என்ன சொன்னேன் நீ என்ன செய்து வைத்து இருக்கிறாய்? எங்கே சுனைனா தனது திட்டத்தைச் சொல்லி விடுவாளோ? என்ற பயத்தில் விஜயலதா அவள் கூறியதை மறைமுக ஒப்புதல் கொடுத்து இருக்க.
ஓஹோ? நீ உடனே நல்லவள் வேடம் போடுகிறாயா? நான் நீ சொல்வதைப் பார்த்து அப்படியே அக்கா என்று பாசம் வந்து உன்னை காப்பாற்றி விடுவேனா?
நான் வாழ முடியாத அரண்மனை நீ மட்டும் நிம்மதியாக இருக்க விட்டு விடுவேனா? என்று மனதில் நினைத்தவள். செயலில் காண்பிக்க ஆரம்பித்தாள் சுனைனா.
அத்தை என் அக்கா தான் திட்டம் போட்டுக் கொடுத்தாள். தேவ் ஆனந்த் மாமா அறைக்குள் புகுந்து விடு காலையில் நான் வந்து உன் நிலைமையை எடுத்துச் சொல்லி உனக்கும் அவனுக்கும் திருமணம் செய்து வைத்து விடுகிறேன் என்று நான் அவள் சொல்லியதை நம்பித்தான் செய்ய விருந்தேன். ஆனால் கடைசியில் இங்கே எப்படி வந்தேன் என்பது தான் தெரியவில்லை.
கிருஷ்ணவேணி ரவிக்குமார் முதலில் சுரேஷ்கும் இவளுக்கும் திருமணம் செய்து வைத்து விடலாம். அப்படியே உன் பொண்டாட்டியை கொஞ்சம் அடிக்கி வைய்யடா.. என் சின்னப் பையன் திருமணம் முடியும் வரை அவள் கூட நீ பேசி முடிவு எடுத்து விடு.. ஒழுக்கமா இருக்கிறது என்றால் இருக்கச் சொல் இல்லை என்றால் அவுங்க அப்பா வீட்டிற்கு நடையைக் கட்டச் சொல்.
அத்தை அவள் தான் என் மேல் ஏதோ பழி போடுகிறாள்? அவள் செய்த தவறை மறைக்க நீங்களும் அவள் சொல்வதை நம்பிக் கொண்டு என்னை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்கிறீர்களா?
இல்லையே நீ காலையில் வீட்டிற்குள் என்ன? மாதிரி கூத்தடித்தாய் என்று நாங்கள் எல்லாரும் பார்த்துக் கொண்டு தானே இருந்தோம்.
தங்கச்சியை காணம் அது தான் அப்படி பேசுகிறாய் ? என்று நாங்களும் அமைதியாக இருக்கப் போய் தானே அக்காளும் தங்கச்சியும் போட்ட திட்டம் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.
அது நான் இவளைக் காணம் என்று இவள் தேவ் ஆனந்த் அறையில் தான் இருப்பாள். அவரை ஒரு தலையாக காதலித்து வந்ததால் அல்லவா? அது தான் என்று இப்போது சுரேஷ் முன்பு சுனைனா ஏற்கனவே வேறு ஒருத்தனை காதலிக்கிறாள் என்று சொல்லி விட.
சுனைனா உடனே அதிர்ச்சியோடு சுரேஷைத் தான் பார்த்தாள். அக்கா நான் எப்போது தேவ் ஆனந்த் மாமாவை காதலிக்கிறேன் என்று உன்னிடம் சொன்னேன். நான் தான் ஊரில் சிவனே என்று இருந்தவளை போன் செய்து வரச் சொன்னாய்?
உன் மாமியார் தொல்லை தாங்க முடியவில்லை . தேவ் ஆனந்த் திருமணம் செய்து கொண்டா இந்த வீட்டோட முழு அதிகாரம் உன் கைக்கு வந்து விடும் என்று இப்போது அப்படியே பிளேடு மாற்றிப் பேசுகிறாய்?
நான் தான் உனக்குத் திட்டம் போட்டு கொடுத்தேன் என்று சொல்கிறாயே அதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்று இப்போது விஜயலதா? கேட்க..
வானதி இங்கே பாருங்கள் என் செல்போனில் எனக்கே தெரியாமல் பதிவு ஆகி இருக்கிறது.
தொடரும்..