Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 293
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 31
பாகம் - 31
வனிதா தான் குடித்தது இளநீர் இல்லை கோமயம் என்று தெரிந்து விரலை விட்டு வாமிட் எடுக்க வெளியே சென்றாள்.
அவள் எழுந்து தலை தெறிக்க ஓடியதைக் கண்டு வானதி இவள் மயக்கத்தில் தானே இருந்தாள் இப்போது எப்படி இவளால் இத்தனை வேகமாக ஓட முடிகிறது.
வனிதா மாட்டுத்தொழுவம் இருக்கும் பக்கம் தான் போய் வாமிட் எடுத்து கொண்டு இருந்தாள்.
வாய்கொப்பளிக்க தண்ணீர் அவளின் அருகில் ஒரு பாத்திரத்தில் இருந்தது. அவள் குனிந்து இருக்கும் போது கழிநீர் தண்ணீர் கொண்டு வந்து நிழல் அவளின் கை எட்டும் தூரத்தில் வைத்து விட்டு சென்று விட்டது.
அதை எடுத்து கொஞ்சம் கூட யோசிக்காமல் வாயில் ஊற்றி விட மாடு குடிக்கும் தண்ணீர் எப்படி இருக்கும் புண்ணாக்கு அரிசி கழுவிய நீர் அவசரத்தில் வாயில் ஊற்றி விட அடச்சீ கருமம் இது என்ன இந்த நாற்றம் அடிக்கிறது என்று மறுபடியும் குடலை பிரட்டிக் கொண்டு வர..
அப்போது தான் அருகில் இருக்கும் தண்ணீர் தொட்டியைப் பார்த்து அங்கே சென்று முகம் கழுவி வாய் கொப்பளித்து விட்டு வீட்டிற்குள் வந்தவள்.
பூவிழியைத் தான் தேடினாள் எங்காவது கண்ணில் தட்டுப்படுகிறாளா? அவளின் நிலையைப் பார்த்து அருகில் வந்தவளிடம் தேன் இருந்தால் கொஞ்சம் குடுடா என்று சைகையில் கேட்க.
வழக்கமாக தேன் பாட்டில் இருக்கும் இடத்தில் தான் இருக்கும் என்று பூவிழி அதை எடுக்கச் செல்லும் முன் நிழல் தேன் பாட்டில் இருந்த இடத்தில் வேப்ப எண்ணெய் மாற்றி வைத்து விட பூவிழி அதை கவனிக்காமல் ஒரு பிளேட்டில் வேப்ப எண்ணெய் ஊற்றி வந்து இந்தாங்க அக்கா என்று கொடுத்து விட்டாள்.
வனிதா இவளாவது பரவாயில்லை நான் கேட்டதும் கொண்டு வந்து கொடுத்து விட்டாளே என்று அதில் இருப்பதை தேன் என்று நினைத்து ஒரே தடவையில் நாக்கை வைத்து நக்கிவிட இப்போது அந்த கசப்பு சுவையில் வனிதாவின் முகம் அஷ்டகோணலாக மறுபடியும் உவ்வே தான்.
நிழல் உடனே தேன் பாட்டில் அங்கே வைத்து விட்டது. வானதி கூட நம் வனிதாவிற்கு ஏதோ கிறுக்கு கிளம்பி விட்டது என்று தான் நினைத்து சிரித்தாள். அவளும் தான் எத்தனை நேரம் சிரிப்பை வாய்க்குள் முழுங்கி இருப்பாள். வனிதா வடிவேல் போல் நொந்து நூடுல்ஸ் ஆகி வந்தாள்.
ஏண்டி வனிதா எதுக்கு இப்படி ஓடுகிறாய்? என்னால் நீ செய்யும் கூத்தைப் பார்த்து சிரிப்பை அடக்க முடியவில்லை.
தன் அக்காவை முறைத்துப் பார்த்தவள். நான் தான் வந்ததிலிருந்து சொல்கிறேனே அக்கா இங்கே எதுவுமே சரியாக இல்லை. ஆனால் நீங்கள் தான் நான் சொல்வதை நம்பவே இல்லை.
ஏன் பூவிழி நான் தேன் தானே கேட்டேன். நீ என்ன வேப்ப எண்ணெய் கொண்டு வந்து கொடுத்து விட்டாய். நானும் அதை யோசிக்காமல் வாயில் ஊற்றி விட்டேன். எல்லாரும் சேர்ந்து என்னைப் பழிவாங்குகிறீர்களா??
யசோதா பூவிழி உன் விளையாட்டு தனத்திற்கு ஒரு அளவு இல்லையா? என்று கடிந்து கொள்ள.
அம்மா நான் அந்த அக்காவிற்கு தேன் தான் மா ஊற்றி கொடுத்தேன். இதோ இந்த பாட்டில் தான் என்று கொண்டு வந்து காண்பித்தாள்.
அது தேன் தான் என்பது பாட்டில் பார்த்தாலே தெரிந்தது.
அப்படி என்றால் நான் பொய் சொல்கிறேனா? வேண்டும் என்றால் இந்த தட்டில் இருப்பதை சுவைத்து பாருங்கள் என்று அதைக் கொடுத்தாள்.
பூவிழியைப் பார்த்து நீ செத்தடி மகளே என்னையே கதிகலங்க வைத்தாய்.. இப்போது தெரிந்து விடும். நீ பாட்டில் மாற்றி வைத்தது என்று எக்காளமாக பார்க்க.
அந்தோ பரிதாபம் தான் அதை சுவைத்த யசோதா தேன் தான் என்று கூற.
வனிதாவோ? உங்கள் பெண் பிறகு நீங்கள் அவளுக்கு சாதகமாகத்தான் பேசுவீர்கள். அக்கா நீ எடுத்து சுவைத்து பாருங்க என்று தனது அக்கா வானதியிடம் தட்டைக் கொடுக்க அதை சுவைத்து பார்த்தவள். லூசாடி நீ தேன் தான் உனக்குத் தான் நாக்கு செத்து விட்டது என்று வனிதா தலையில் கொட்டினாள். வந்த இடத்தில் இப்படி பைத்தியம் போல் செய்து என் மானத்தை வாங்குகிறாய்?
என் பெண்கள் கூட சமத்தா இருக்கிறாங்க நீ தாண்டி படுத்தி எடுக்கிறாய்? பொத்திட்டு உட்கார் என்று சைகை செய்ய.
வனிதாவிற்கு மனசே ஆறவில்லை அதனால் அவள் அந்த தட்டில் இருந்ததை எடுத்து இப்போது வாயில் வைத்து பார்த்தாள். அது நிலவேம்பு போல் அண்டக் கசப்பு..
இப்போது வேறு வழியின்றி தட்டில் இருந்த மொத்த ஸ்வீட்டும் எடுத்து வாயில் போட்டுக் கொண்டு அமைதியாக உட்கார்ந்து விட்டாள்.
தேவகோட்டையில் விஜயலதா தனது தங்கை சுனைனா காணாமல் வீடு முழுவதும் தேடியவள் அவளைக் காணாது தவித்தாள். இவள் எங்கே தான் சென்றாள் தெரியவில்லை.
இவள் மட்டும் காணாமல் போகாமல் இருந்து இருந்தாள். நான் இன்று அந்தப் பெண் பார்க்கச் சென்று இருப்பேன். இவளால் தான் எல்லாமே கெட்டது.
நிழல் இங்கே வந்தது. சுனைனா கட்டி வைத்து இருந்ததை அவிழ்த்து விட்டு அவளின் வாயைத் திறந்து பேசுவதுபோல் செய்து விட்டு சென்று அந்தக் கதவின் அருகில் நின்று கொண்டது.
விஜயலதா எல்லா அறையிலும் பார்த்து விட்டேன். இந்த அறையில் எதற்கும் பார்த்து விடலாம் என்று வந்து பார்த்த போது அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு எங்கோ வெறித்த பார்வையில் தான் இருந்தாள்.
விஜயலதா அவளின் அருகில் சென்றவள். சுனைனா இங்கே என்ன செய்து கொண்டு இருக்கிறாய்? நான் நேற்றிலிருந்து உன்னைத் தான் தேடிக் கொண்டு இருக்கிறேன்.
அக்கா நீ என்ன சொல்கிறாய்? நான் நேற்று லிருந்து இந்த அறையில் அடைந்து இருக்கிறேன். ஏதோ காட்டில் வெகு தூரத்தில் இருந்தது போல் உனக்கு என்னைக் கண்டு பிடிக்க ஒரு நாள் ஆகி இருக்கிறது.
சரிவா கீழே போகலாம் பொண்ணு பார்க்கப் போவதை தடுத்து விடலாம் என்று வெகு வேகமாக கீழே இறங்க படிக்கட்டில் கால் வைத்தனர் இருவரும்.
விஜயலதா சொல்லும் முன் சுனைனா செல்வதைப் பார்த்து அவளும் படிக்கட்டில் கால் வைத்தது தான் ஆனால் அவர்களால் அந்தப் படியில் இருந்து கால் கீழேவைத்தால் படி அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
இது என்னக்கா முதல் தளத்தில் இருந்து கீழே செல்வதற்கு நானும் நீயும் அரை மணிநேரமாக
இறங்குகிறோம் ஆனால் படியிலேயே நிற்பது போல் இருக்கிறது. படியே முடிய மாட்டேங்குது.
இருந்தாலும் உன் மாமனார் இத்தனை படியை வைத்து இந்த அரண்மனை கட்டி வைத்து இருப்பார் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை. என்று சுனைனா செல்வதைப் பார்த்து இவள் என்ன லூசு மாதிரிப் பேசுகிறாள்.
இப்போது கூட நான் இந்த வழியாகத் தானே மேலே ஏறி வந்தேன். இப்போது தான் இப்படி ஆகிறது. ஒரு வேளை இது தனது தங்கை சுனைனா இல்லையோ? ஏதாவது பேயாக இருக்குமோ?
சுனைனா விற்கு கால் இருக்கிறது. அவள் ஒவ்வொரு படிக்கட்டில் கால் வைப்பதை பார்த்து மனதை தேற்றிக் கொண்டாள் விஜயலதா,
அக்கா நீ ஏன் ஒரு மாதிரி என்னையே பார்க்கிறாய்?
அது நீ என் தங்கச்சி தானே இல்லை இந்த அரண்மனை படத்தில் வரும் ஹன்சிகா மோத்வாணி போல் பேயா? என்று கேட்டாள்.
அக்கா இப்போது எனக்குத் தான் சந்தேகமாக இருக்கிறது. நீ என் அக்காவா? இல்லை பேயா? என்று
எங்கே உனக்கு கால் இருக்கிறதா? நான் பார்க்கிறேன்.
ஏண்டி நான் உன்னைச் சந்தேகப் பட்டால் நீ என்னையவே சந்தேகப் படுகிறாயா? லூசு மாதிரிப் பேசாமால் கொஞ்சம் வழியை மறைக்காமல் சீக்கிரம் இறங்குடி எனக்குப் பசிக்கிறது.
நான் நேற்றிலிருந்து சாப்பிடவில்லை. அந்த அறைக்குள் நான் இருக்கும் போது பேய் என் பக்கத்தில் அமர்ந்து இருந்தது. அப்போது கூட நான் பயக்கவில்லை ஆனால் இப்போது உன்னைப் பார்த்து தான் எனக்குப் பயமாக இருக்கிறது.
என்னடி சொல்கிறாய்? பேய் உன் பக்கத்தில் உட்கார்ந்ததா? அப்படீனா எனக்கு சந்தேகம் தீர்ந்து விட்டது. உன் உடம்புக்குள் தான் பேய் புகுந்து விட்டது.
நாளைக்கே உன்னைப் பேய் ஓட்ட அழைத்துச் செல்ல வேண்டும். எங்கே என் முகத்தை பாருடி என்று விஜயலதா தனது தங்கையைப் பார்க்கச் சொல்ல அவள் திரும்பி பார்க்க விஜயலதாவிற்கு சுனைனா பேய் முகமாகவும். சுனைனா அவளுக்கே தனது அக்கா முகம் பேய் முகமாகவும் தெரிந்தது.
இருவரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் பயத்தில் முகத்தைப் பிராண்டிக் கொண்டனர். இன்றோடு தொலைந்தாய் என்று.
இருவரும் அடித்து பிடித்து கொண்டு கீழே வந்து விட்டனர். அவர்கள் கீழே உருண்டு விழுகவும் . . தேனருவி வீட்டிற்கு சென்றவர்கள் மகிழ்ச்சியோடு வீடு வந்து சேர்ந்தனர்.
அவர்கள் வீட்டிற்குள் வருவதைப் பார்த்தும் அக்கா தங்கை இருவரும் சண்டையை நிறுத்தவில்லை. வந்தவர்கள் இது என்ன இவளுக இரண்டு பேருக்கும் பைத்தியம் பிடித்து விட்டதா? என்று யோசித்து நிற்க.
ரவிக்குமார் தான் நீ குடும்பம் நடத்தும் இலட்சணம் இது தானா? விஜயலதா இப்படி தான் அக்காளும் தங்கையும் நடுவீட்டில் சண்டை கட்டி உருண்டு பிரளுவீர்களா??
எனக்குத் தான் வெட்கக் கேடாக இருக்கிறது. என் அப்பா அம்மா முன் என்னைத் தலை குனிய வைக்கிறாய்? என்று முகத்தைச் சுழித்தவன்.
அம்மா அப்பா நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
நீ எதுக்கு ரவி மன்னிப்பு கேட்கிறாய்? விடு அவங்க இரண்டு பேரும் தானே அடித்துக் கொண்டார்கள். அந்தக் கண்கொள்ளாக் காட்சியை நாம் தான் பார்க்க முடியவில்லை.
என்னம்மா சின்ன மருமகளே உன் தங்கச்சியும் நீயும் போட்ட ப்ளாண் சொதப்பி விட்டதா? அது தான் உங்களுக்குள்ள சண்டையா உன்னால நான் கெட்டேன். என்னால நீ கெட்டேன் என்று கூறிவிட்டு கிருஷ்ணவேணி சிரித்து விட்டு உள்ளே சென்று விட்டார்.
என்னங்க நம் வீட்டில் அரண்மனை பேய் இருக்கிறதுங்க. என்று விஜயலதா தான் பேயைப் பார்த்தேன் என்று ஒரு புரடா விட்டாள்.
அது உனக்கு இப்போது தான் தெரிந்ததா? எனக்கு அது எப்போதோ தெரியும்.
அதை விரட்டி விடாமல் நீங்கள் அமைதியாக இருக்கப் போய் தான் இன்றைக்கு எனக்கும் சுனைனாவிற்கும் இந்த நிலைமை.
உனக்குச் சம்மதம் என்றால் பேயை விரட்டி விடலாம்.
ஏங்க நீங்கள் பேயை விரட்ட என்னிடம் அனுமதி கேட்கிறீர்கள்.
ஆமாம் டி அந்தப் பேயே நீ தாண்டி உன் கழுத்தில் தாலி கட்டி குடும்பம் நடத்தும் எனக்குத் தெரியாதா?
தொடரும்...