Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 259
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம்-3
பாகம்-3
தேனருவி பூவிழி இருவரும் அருகில் இருக்கும் கல்லூரியில் தான் படிக்கிறார்கள். தேனருவி இப்போது மூன்றாம் ஆண்டு வணிகவியல் படிக்கிறாள்.
பூவிழி முதலாம் ஆண்டு கம்பியூட்டர் சயின்ஸ் தான் படிக்கிறாள். இருவருக்கும் வண்டி ஓட்டத் தெரியும் என்பதால் ஸ்கூட்டியை இருவரும் மாறி மாறி ஓட்டிக் கொள்வர்.
வழக்கமாக வழி நெடுகவும் வாய் அடித்துக் கொண்டே வரும் தேனருவி இன்று மிகவும் அமைதியாக வண்டியை ஓட்டி வரவும்.
பூவிழிக்குத் தான் நம் அக்கா இப்படி இருக்கும் ஆள் இல்லையே என்று நினைத்தவள்.
சரியாக அவர்கள் வந்த வண்டி கல்லறைத் தோட்டம் தாண்டும் முன் அக்கா நேற்று நீ ஏதோ நிழல் வந்தது என்று சொன்னாயே அது பார்க்க எப்படி இருந்தது.
நான் நேற்று தூக்க கலகத்தில் நல்லாவே பார்க்க வில்லை. பின்னால் உட்கார்ந்து கொண்டு போர் அடிக்கிறது கொஞ்சம் சொல்லேன். நானும் தெரிந்து கொள்கிறேன்.
அடக் கொடுமையே நாம மறந்தாலும் இந்த சைத்தான் விடாது போல இத்தனை நேரம் அமைதியாக வந்தவள் சரியா கல்லறைத் தோட்டம் அருகில் வந்து தான் கேட்க வேண்டுமா?
நிழல் கூட சொல்லியதே கல்லறைக் கல்லூரி அது உண்மையா? நமக்குத் தெரியவில்லையே ஒரு வேளை உண்மையாகவே கல்லறைக் கல்லூரி இருக்கிறதா? ஒரு நாள் உள்ளே சென்று பார்த்து விட வேண்டும்.
அருவிக்கா என்று பூவிழி அவளின் காதருகே கத்தவும் வண்டியை பிரேக் போட்டு நிறுத்தயவள். ஏண்டி உயிரை எடுக்கிறாய்? அதுவும் இந்த இடத்தில் தான் உனக்கு ஊரில் இல்லாத சந்தேகம் வரனுமா?
நேற்று இரவு நடந்ததை நினைத்து நானே பயங்கர டென்சனா இருக்கிறேன். நீயும் என்னைச் டார்ச்சர் செய்கிறாய்?
பூவிழி நீ அவ்வளவு தானா? இப்போது நான் பேச்சை மாற்றிப் பேசுகிறேன். ஏதோ நிழல் என்று தான் உளறிக் கொண்டு இருந்தாள். இவளை என்று அக்கா பாரேன் அங்கு ஒரு நிழல் இருக்கிறது நம் வண்டி அருகில் வருகிறது என்று சும்மா உல்ட்டா தான் விட்டாள்.
அதுக்கே தேனருவி பயத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் வண்டியை கீழே போட்டால் அதில் தேனருவி பூவிழி இருவரும் கீழே விழுந்து விட்டனர்.
அக்கா உனக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா? எதுக்கு வண்டியை கீழே விழுக விட்டாய்? இப்போது எப்படி எழுந்து கொள்வது.
நான் நல்லாத் தானே வண்டியை ஓட்டிக் கொண்டு சென்றேன். நீ தான் எருமை ஏததோ பேசினாய் அது தான் நான் வண்டியை நிறுத்தினேன். மறுபடியும் லூசுத்தனமாகப் பேசியது நீ. இப்போது கீழே விழுந்ததும் என் மேலே பழி போடுகிறாய்?
அவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டு இருக்கும் போது அருகில் மற்றொரு வண்டி வந்து நின்றது.
வண்டி வந்தது கூடத் தெரியாமல் சண்டை தொடர வண்டியில் அமர்ந்து இருந்தவனுக்கு கடுப்பைக் கிளப்ப ஏய் வாயை மூடுங்க என்று கர்ஜனைக் குரலில் தான் இருவரின் வாயும் பசை போல் ஒட்டிக் கொண்டது.
இரண்டு பேரும் தன் தலையை திருப்பி அப்போது தான் அந்தக் குரல் வந்த திசையைப் பார்த்தனர். அதில் திகைத்து வணடியோடு கீழே விழுந்தவர்கள் எழப் பார்த்தனர்.
கால் கீழே சிக்கி இருந்ததால் எழ முடியவில்லை.
அந்தக் குரலுக்கு சொந்தக்காரன் தனது ராயல் என்ஃபீல்டு வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியவன் வந்து அவர்களது ஸ்கூட்டியை தூக்கி விடவும் இருவரும் எழுந்தனர்.
அதில் தேனருவி தான் காலை நொண்டி அடித்துக் கொண்டு அடுத்த அடி எடுத்து வைக்கவே சிரமப் பட்டாள்.
வண்டி ஓட்டத் தெரியாமல் எதுக்கு வண்டி எடுத்து வருகிறீர்கள். நீங்கள் விழுந்ததால் பரவாயில்லை இதோ ரோட்டில் நடந்து போகிறவர்கள் மேல் ஏற்றி கொன்று இதோ இந்த கல்லறைத் தோட்டத்தில் புதைத்து விடலாம் என்று நினைப்போ?
விட்டால் அழுது விடுவாள் தேனருவி எதிர்க்க நின்று திட்டுவது தன் கிளாஸ் ப்ரொப்பசர் ஆயிற்றே சும்மாவே அவளைத் திட்டிக் கொண்டு இருப்பவனுக்கு லட்டு மாதிரி ஒரு ரீசன் கிடைத்தால் சும்மா விடுவானா?
அதுவும் அவன் முன்னால் இருப்பது கூடத் தெரியாமல் இரண்டு பேரும் சண்டை போட்டது வேறு இப்போது அதற்கு காரணம் கேட்டு இந்த ஓட்ட வாய் பூவிழி இவன்ட்ட சொல்லி வைத்தாள் மொத்த ப்ளேனும் காலி .அதனால் ஏதாவது சொல்லி தப்பித்து விட வேண்டும் என்று சார் வண்டி சரித்து விட்டது.
என்னது சரித்து விட்டதா? என்று கீழே பார்க்க அந்த சுத்தமான தார் சாலையில் மருந்துக்கூட மணலோ சருகோ இல்லை.
பூவிழி தன் அக்கா புளுகுவதைப் பார்த்து சிரிக்க.. தேனருவி அவளைக் கண்களாலேயே மிரட்ட
இவளின் சம்பாசனை பார்த்தவன். ஏய் எதுக்குடி பொய் சொல்கிறாய்?
பிறகு யோசித்தவனாய் நேரமாகுது கிளம்புங்கள் என்று கூறி தன் புல்லட்டில் ஏறி அமர்ந்து அவர்களைக் கடந்து சென்றான்.
அவன் தலை மறைந்ததும் தான் தாமதம் தேனருவி பூவிழியைப் பிடி பிடி என்று திட்ட ஆரம்பித்து விட்டாள். இத்தனையும் உன்னால் தாண்டி அதையும் மீறி நான் ஏதோ அவரிடம் சொல்லி தப்பிக்கப் பார்த்தால் நீ சிரிக்கிறாய். அந்த ராட்சசன் என்னை எப்போது கடித்துக் குதறலாம் என்று காத்துக் கொண்டு இருக்கிறான். நீ சிரித்தால் நான் பொய் சொல்கிறேன் என்று நினைப்பான் தாண்டி.
கொஞ்ச தூரம் சென்றும் இவர்கள் இருவரும் வராததைக் கண்டு தனது புல்லட்டைத் திருப்பியவன் அவர்களுக்கு கொஞ்ச தூரத்தில் வண்டியை நிறுத்தியவன் தேனருவி தன்னை ராட்சசன் என்று சொல்லும் போது அவளின் பின்னால் தான் நின்று இருந்தான்.
பூவிழிக்குத் தெரிந்தும்.. தன் எதிரில் இருப்பவனின் மிரட்டலான பார்வையில் எதுவும் பேசாமல் நின்று கொண்டாள். இவள் அவனை எவ்வளவு பொரிய முடியுமோ? பொரிந்தவள் அவளுக்காக வாய் ஓயும் போது தான் விட்டாள்.
தான் இத்தனை பேசியும் பூவிழி பதில் எதுவும் பேசாமல் இருக்கவும் தன் பேச்சில் பயந்து விட்டாள். அது இந்த பயம் இருக்க வேண்டும் என்று இல்லாத காலரைத் தூக்கி விட்டவள்.
இப்போது தான் ஸ்லோமோசனில் திரும்பினாள். தன் பின்னால் தன் வாத்தி நிற்பதைப் பார்த்தவள். அய்யோ நான் இத்தனை நேரம் இவனைக் கழுவி ஊற்றியது அத்தனையும் கேட்டு இருப்பானோ?
தேவ் ஆனந்த் இவர்கள் படிக்கும் கல்லூரியில் தான் பேராசிரியராக பணிபுரிகிறான்.
மாநிறமாக இருந்தாலும் செம அழகு கல்லூரியில் இருக்கும் பெண்களின் க்ரஷ் இவன் தான் அவனைப் போய் இராட்சசன் என்று சொல்லி இருக்கிறாளே அய்யோ? அய்யனார் கணக்கா நிற்கிறானே அவன் கண்ணைப் பார்த்தாலே பயமாக இருக்கிறதே.
என்ன? உங்க சண்டை தீரவில்லையா? வெட்கமாக இல்லை நடுரோட்டில் நின்று கொண்டு சண்டை போடுவதற்கு. நீ எதுக்கு கல்லூரிக்கு வருகிறாய்? ஆடு மாடு மேய்க்கப் போவது தானே என்று திட்டினான்.
அவனைத் திட்டியதைப் பற்றி எதுவும் திட்டவில்லை என்று தெரிந்ததும் தேனருவி தன் நெஞ்சில் கை வைத்து தப்பித்தேன் என்று வண்டியை ஸ்டார்ட் செய்ய அவளால் கிக்கர் உதைக்க முடியவில்லை.
தேவ் ஆனந்த் முகத்தை பாவமாக பார்த்தாள் இதுக்கும் ஏதாவது திட்டுவான் என்று. அவன் முறைத்ததில் வண்டியை விட்டாள் மறுபடியும் கீழே விழும் முன் பிடித்தவன் வண்டியை ஒரு உதையில் ஸ்டார்ட் செய்தவன் பூவிழி உனக்கு வண்டி ஓட்டத் தெரியுமா?
தெரியும் சார். சரி நீ ஓட்டு என்று அவளின் கையில் வண்டியைக் கெடுத்தவன். தேனருவியை முறைத்தான்.
முறைக்கவே பிறந்து இருப்பான் போல் என்று அவள் வாய்க்குள் முனக. அந்தப் பாம்புக் காதனுக்குத் தெளிவாகவே கேட்டது.
நின்று அவளைப் பார்த்தவன் அவள் காலை நொண்டுவது தெரிந்து அவளின் அருகில் வந்து அவளின் காலை நேராக வைக்க வைத்தான் அதில் அவளுக்கு வலி எடுக்க தனது வாத்தி என்பதை மறந்தவள் டேய் பணங்கொட்டை மண்டையா? உனக்கு அறிவு இல்லையா? எனக்கு வலிக்கிறது என்று தான் கால் ஊன முடியாமல் நொண்டுகிறேன். நீ அதே காலத் திருகுகிறாயே என்று கத்தினாள்.
பூவிழிக்கு தன் அக்கா தன் வாயால் தான் மறுபடியும் சார்கிட்ட சிக்கிக் கொள்கிறாள் என்று தெரிந்தாலும் அமைதியாக இருக்க தேவ் ஆனந்த் உன் அக்காவை வைத்து உன்னால் ஓட்டிச் செல்ல முடியாது நீ வண்டியை எடுத்துக் கொண்டு கல்லூரிக்குப் போ நான் இவளை
மருத்துவமனை அழைத்துச் செல்கிறேன்.
பூவிழி இல்லை சார் நானும் இவள் கூட மருத்துவ மனை வருகிறேன். இன்று வேறு அமாவாசை அது தான் என்று அவளும் தன் அக்கா பயத்தில் வேறு ஏதாவது செய்து சார் மறுபடியும் ஏதாவது செய்து விட்டால் என்ன செய்வது? என்று யோசித்தவளாக இருக்க.
சரி இங்கேயே இரண்டு பேரும் நில்லுங்கள் நான் 108 ஆம்புலன்ஸ் வரவைக்கிறேன் அதில் போய் பெரிய கத்தி எடுத்து ஆப்ரேஷன் செய்து கால் ஊன்றி உன் அக்கா நடந்து வரும் போது வரட்டும்.
தேவ் ஆனந்த் பயத்தைப் போட,தேனருவி நானே வண்டியை ஓட்டுகிறேன் என்று பிகு செய்தான்.
ஆமாம் நீ பெரிய ஜான்சிராணி தான் என்று கூறிய தேவ் ஆனந்த், பூவிழி நீ உன் வண்டியில் என் வண்டியை ஃபாலோ செய். நான் முன்னால் செல்கிறேன் என்று கூறியவன். தனது செல்போன் எடுத்து கல்லூரிக்கு இரண்டு மணி நேரம் பர்மிசன் வாங்கியவன் வண்டியை எடுத்து வரச் சென்றான்.
தேனருவி அருகில் வண்டியை நிறுத்தி ஏறுடி பம்பரக்கண்ணி என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் என்னையவா? இராட்சசன் சொன்னாய். நீ தாண்டி இரத்த காட்டேரி மாதிரி சுடுகாட்டுக்கு முன்னால் கீழே விழுந்து காலு திரும்பிக் கிடக்கிறது. அநேகமாக உன் உடம்புக்குள் ஏதாவது ஆவி புகுந்து இருக்குமோ? அது தான் அதன் இருப்பிடம் வந்ததும் அது
இறங்கிப் போய் விட்டதோ?
உன் உடலில் பேலன்ஸ் செய்ய முடியாமல் கீழே விழுந்து விட்டாயோ?
பூவிழியிடம் கண்ணைக் காண்பித்தவன். தேனருவி உன் முகத்தில் வேறு முகத்தின் சாயல் தெரிகிறது. நீ வேண்டும் என்றால் இந்தக் கண்ணாடியில் பாரு என்று மேலும் பயத்தைப் போட
தேனருவிக்கு உண்மையில் இத்தனை நேரம் இருந்த தைரியம் காற்றில் பறக்க இப்போது தான் தாங்கள் நிற்கும் இடத்தைப் பார்த்தாள். பெரிய கல்லறைத் தோட்டம்..
தன் கண்ணை இறுக்க மூடியவள் மெதுவாகத் திரும்பிப் பார்த்தாள். அங்கே நேற்று பார்த்த நிழல் இவளைப் பார்த்து பலமாக சிரித்தது.
தொடரும்..
நீ உடல் நான் நிழல்