Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 289
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 28
பாகம் - 28
விஜயலதா தனது தங்கையைக் காணவில்லை என்று நான் பேசிக் கொண்டு இருக்கிறேன். அதற்கு மதிப்பு அளிக்காமல் நீங்கள் தேவ் ஆனந்த் பொண்ணு பார்க்க போகவேண்டும் என்று கிளம்பி நிற்கிறீர்கள்.
இந்த பெண்ணை விட்டா வேற பொண்ணு கிடைக்காதா? ஊர் உலகத்தில் இல்லாததா? அவளிடம் இருக்கப் போகிறது. நான் இந்த வீட்டின் இரண்டாவது மருமகள் என் ஒப்புதல் இல்லாமல் என் கொழுந்தனுக்குத் தான் திருமணம் செய்து விடுவீர்களா??
இங்கே பாரு விஜயலதா உன் தங்கச்சியை காணம் என்று எல்லாம் போகும் காரியத்தை நிறுத்த முடியாது. நீயும் உன் தங்கச்சியும் பேசி வைத்துக் கொண்டு கூட இப்படி கிளம்பும் நேரத்தில் தடைக்கல்லை வீசுவீர்கள் யார் கண்டா? அது தான் நான் நேற்றே தெளிவாக சொல்லி விட்டேனே உங்கள் இரண்டு தங்கையையில் யார் ஒருவரையும் தேவ் ஆனந்த் மணமுடிக்க விருப்பம் இல்லை என்று பிறகும் கூட நீ இப்படி விதாண்டாவாதம் செய்தால் எப்படி?
ரவிக்குமார் அம்மா கிளம்பலாமா? என்று வந்தான்.
ஏய் ஏண்டி நீ கிளம்பவில்லையா?
நீங்களே கேளுங்கள் நியாயத்தை என் தங்கச்சியை காணம் அது தான் நான் அத்தையிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறேன். இப்போது பொண்ணு பார்க்க போக வேண்டாம்.. சுனைனா எங்கே என்று தேடலாம் கூறுகிறேன் ஆனால் உங்கள் அம்மா என்னைக் கண்டபடி வாய்க்கு வந்ததை சொல்லி திட்டுகிறார்கள்.
என்னடா உன் பொண்டாட்டி சொல்வதை நம்பிக் கொண்டு அவள் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறாயா?
பாருங்கள் என் கொழுந்தனுக்கு பொண்ணு பார்க்க போகும் போது எனக்கும் வரவேண்டும் என்று ஆசை இருக்கும் தானே அது தான் நான் என் தங்கையைத் தேடி விட்டு பிறகு இந்தப் பொண்ணு இல்லாட்டி என்ன அவருக்கு வேறு பொண்ணு பார்க்கலாம் சொல்கிறேன். அது ஒரு தப்புங்களா?
அண்ணா அண்ணி அடுத்த தாய்க்குச் சமம் தானேங்க.
கிருஷ்ணவேணி உடனே விஜயலதா நானும் என் புருசனும் இன்னும் குத்துக் கல்லாடம் உயிரோடு தான் இருக்கிறோம். ஒரு வேளை செத்துப் போய் இருந்தால் அப்பா அம்மா ஸ்தானத்தில் இருந்து நீ பொண்ணு பார்த்து கட்டி வைத்து இருக்கலாம்.
செத்து தொலையாமல் எங்கள் உயிரை வாங்கிக் கொண்டு இருக்கிறீர்களே என்று விஜயலதா வாய்க்குள் முனக அது சரியாக ரவிக்குமார் காதில் விழுகவும் விட்டான் பாருங்க ஒரு அரை..
விஜயலதா கண்ணில் பூச்சி தான் பறந்தது. ஏண்டி உனக்கு என்ன நெஞ்சழுத்தம் இருந்தா என் முன்னாலே எங்கள் அப்பா அம்மாவை செத்துப் போகச் சொல்லுவாய்.
இத்தனை கெட்ட எண்ணத்தை வைத்துக் கொண்டு நீ வரவே வேண்டாம். இங்கேயே கிட என்று கூறிவிட்டு அதிரா ஆதியா இருவரையும் அழைத்துக் கொண்டு காருக்குச் சென்றான்.
விஜயலதாவை அடிக்கும் முன்பே கிருஷ்ணவேணி கண்ணப்பன் ரவிக்குமார் தேவ் ஆனந்த் வானதி அனைவரும் கிளம்பி இருந்தனர். பிரணவ் தனது தாத்தா விடம் இருந்தான். ரவிக்குமார் வந்ததும் அவன் ஒரு காரில் அமர்ந்து கொள்ளவும் கார் பெண் பார்க்க பூவரசங்கோட்டை பயணமாகியது.
வானதி அங்கே கொண்டு செல்லும் பொருட்கள் எல்லாம் எடுத்து வைக்கச் சொன்னேனே எடுத்து வைத்தாயா?
அத்தை எல்லாம் எடுத்து வைத்து விட்டேன். போகும் வழியில் மல்லிகைப் பூ மட்டும் வாங்கிச் சென்று விடலாம்.
வானதிக்கு அன்று விழுந்த வசைவில் அவள் அதற்கு பிறகு தன் தங்கை வாழ்க்கை அதில் தலையிட்டு தன் வாழ்க்கையை இழக்க விரும்பாமல் ஒழுக்கமாக இருக்கிறேன் என்று சொன்னதால் சிவக்குமார் வீட்டில் இருக்க விட்டு வைத்து இருக்கிறான். ஒழுக்கமாக இருக்க விருப்பம் இல்லை என்றால் இப்போதே உன் அப்பா வீட்டிற்கு நடையைக் கட்டு என்று சொன்னதால் மறுபேச்சுப் பேசக் கூட வாயைத் திறக்கவில்லை.
தேவ் ஆனந்த் தனது செல்போனில் அவளுக்கு மெசேஜ் செய்தான்.
ஹாய் ஹனிபால்ஸ் மாமா ஆன் தி வே என்று அனுப்பி வைத்தான். அவன் அனுப்பி வைத்ததும் உடனே அவள் பார்த்திற்கான ப்ளு டிக் வந்தது.
அவளும் அழகான ஒரு பூங்கொத்து அனுப்பி விட்டாள்.
பூவரசங்கோட்டை தங்களை அன்புடன் வரவேற்கிறது. என்று வரவேற்பு பலகையைப் பார்த்து
மகிழ்ச்சி அடைந்தனர்.
அத்தை அங்கே பூக்கடை இருக்கிறது என்று வானதி சொல்லவும் சிவக்குமார் காரை நிறுத்தினான். இந்தா வானதி போய் பூ வாங்கி வா என்று ஐநூறு ரூபாய் எடுத்துக் கொடுக்கவும்.
தம்பி நீ வைப்பா இந்தா வானதி நீயும் வாங்கித் தலையில் வைத்துக் கொண்டு புது மருமகளுக்கும் வாங்கிட்டு வா என்று கிருஷ்ணவேணி பணத்தை எடுத்துக் கொடுக்க. வானதிக்கோ வாயெல்லாம் பல்லாக அத்தனை சந்தோசம்.
எங்கே தன் கணவன் தலையில் மொத்த செலவும் விழுந்து விடுமோ? என்று தான் அவளுக்குப் பயம். அடியே இது என்ன உன் அப்பன் வீட்டுச் சொத்தா?
உங்களுக்கு எத்தனை சொத்து இருக்கோ அதே அளவு தேவ் ஆனந்த் அவனுக்கும் பங்கு இருக்கிறது .
பூவை வாங்கி வந்ததும் கார் நேராகச் சென்றது. தேனருவி வீட்டின் முன்பு தான்.
குமாரசாமி கேட்டின் அருகிலேயே நின்று இருந்தார்.
கமலம் யசோதா இருவரும் வீட்டிலேயே பஜ்ஜி எல்லாம் சுட்டு எடுத்து வைத்து விட்டு பில்டர் காஃபி கூட ரெடி ஆகி விட்டது.
பூவிழி தேனு ரெடியாகி விட்டாளா? பார்மா மாப்பிள்ளை வீட்டார் வந்து விட்டார்கள் போல் இருக்கிறது என்று உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார்.
கிருஷ்ணவேணி கண்ணப்பன் இவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. அரண்மனை வீடாக இருக்கும் என்று சிவக்குமார் இப்போது தனது மனைவியைத் தான் திரும்பிப் பார்த்தான்.
அதிரா ஆதியா இருவரும் தேவ் ஆனந்த் இருபுறமும் கையைப் பிடித்துக் கொண்டு சித்தப்பா
நாம் உனக்கு பொண்ணு பார்க்க வந்து இருக்கிறோமா?
பொண்ணு என்னை விட அழகா இருப்பாங்களா? என்று இரண்டும் அவனைப் படுத்தி எடுத்தனர்.
வாங்க சம்பந்தி என்று கமலா அம்மா வீட்டிற்கு வெளியே வந்து வரவேற்றார்.
கிருஷ்ணவேணி மருமகளே நீ வா முதலில் என்று தாம்பூழத்தட்டில் அனைத்தும் இருக்கிறதா என்று பார்த்து விட்டு சிரித்தார். கூடவே மேலும் இரண்டு பெண்கள் இருந்தனர்.
அவர்கள் இருவரையும் தன் இரண்டு பக்கங்களிலும் அமர வைத்துக் கொண்டார்.
அது வேற யாரும் இல்லை.. கனவுகளின் தோழி ஆதிரா அவர்களும் சாருபிரபா ஆறுமுகம் இருவரும் தான்.. அவர்கள் இருவரும் தேவ் ஆனந்த் பெண் பார்க்க வரும் போது தாங்களும் வருவோம் எங்களுக்கும் மாப்பிள்ளை வீட்டார் என்று சிறப்பு கவனிப்பு வேண்டும் என்று கேட்டதால் தேவ் ஆனந்த் தங்கச்சிங்களாக இப்போது வந்து அமர்ந்தனர்.
பூவிழி அனைவருக்கும் குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
தரகர் குமாரசாமி இது சின்னப் பொண்ணு தேனருவிக்கு தங்கச்சிங்க என்று அறிமுகப் படுத்தினார்.
பிறகு இனிப்பு வகைகள் செவன்கப் ஸ்வீட் இது மைசூர் பாகு போல் இருக்கும். அத்தோடு
தேங்காய் ஒப்பிட்டு என்று அனைத்தும் வைத்தார்கள்.
சரி பொண்ணு வரச் சொல்லுங்கள் என்று கிருஷ்ணவேணி சொல்லவும்.
இப்போது கனவுகளின் தோழி ஆதிராவும் சாருபிரபா ஆறுமுகம் இருவரும் உள்ளே சென்றனர். தேனருவியை அழைத்து வர அவர்களுக்குத் தான் தெரியுமே தேவ் ஆனந்த் தேனருவி இருவரின் லவ்ஸ்.. அதனால் அவளை அழைத்து வந்தனர்.
தேவ் ஆனந்த் எடுத்துக் கொடுத்த மாம்பழக் கலர் சேலையில் அளவான ஒப்பனையோடு தேவலோக மங்கை போல் வந்தவள் யாருக்குத் தான் பிடிக்காது.
வா மா என்று தன்னருகில் அழைத்து அமர வைத்துக் கொள்ள கிருஷ்ணவேணிக்கு ஆசை ஆனால் மற்றவர்கள் ஏதாவது நினைத்துக் கொள்வார்கள் என்று அமைதியாக இருக்க.
தேனருவி அனைவரையும் பார்த்து வணக்கம் தெரிவித்தாள். அவளின் கையில் காஃபி டிரேயைக் கொடுத்து அனைவருக்கும் கொடுக்கச் சொன்னார்கள்.
அனைவருக்கும் கொடுத்தவள்தேவ் ஆனந்த் அருகில் வந்து நின்று கொண்டு காஃபி டிரேயைக் தலையைக் குனிந்து கொண்டு நீட்ட.. அண்ணி இப்போதே மாப்பிள்ளை பார்த்துக் கொள்ளுங்கள். என்று தேவ் ஆனந்த் தங்கைகள் இருவரும் சொல்ல..
வானதி உடனே அவர் தான் பொண்ணு பார்க்க வந்து இருக்கிறார் என்று பெரிய அறிவாளித் தனமாக பேசுவது போல் பேசி சிரிக்க..
தேவ் ஆனந்த் தனது அண்ணியை முறைத்தவன் ஏண்டா தங்கச்சிகளா? எனக்கு பொண்ணு ரொம்ப பிடித்தது. என்று சொல்லி விட..
தற்போது வந்த தங்கச்சிகள் இருவரையும் கிருஷ்ணவேணி அம்மாவிற்கு மிகவும் பிடித்து விட்டது. பிறகு என்ன அவர் ஆசைப்பட்டதை அவர் பெறாத இரு மகள்களும் தேனருவியை அவரின் அருகில் அமர்த்தி வைத்தனர்.
தேவ் ஆனந்த் மனதில் தன் பக்கத்தில் உட்காராமல் அங்கே போய் உட்கார்ந்து விட்டாளே என்று தான் பார்த்து வைத்தான்.
இரண்டு தங்கைகளும் அம்மா அண்ணா அண்ணி கூடப் பேசி வரட்டும் என்று சொல்ல.
தேவ் ஆனந்த் இப்போது தனது தங்கைகள் இருவரையும் நன்றியோடு பார்த்தான். அப்பா என் தேவதையை பக்கத்தில் பார்க்க வேண்டும் என்று ஆசையில் இருந்தேன். தங்கச்சிங்க இரண்டு பேரும் என் ஆசையை நிறைவேற்றி வைத்து விட்டார்கள்.
இரும்மா முதலில் பூ வைத்து விடுகிறேன் என்று கிருஷ்ணவேணி தன் மருமகள் தேனருவியை ஏற்றுக் கொண்டு அவளுக்கு பூவை வைத்து விட்டாள்.
கனவுகளின் தோழி ஆதிரா சாருபிரபா ஆறுமுகம் இருவரும் அம்மா நாங்கள் எல்லாம் அப்படி அப்படியே போட்டு வந்து விட்டோம் என்று கூறிவிட்டு விடை பெற்றனர்.
இரண்டு பேரும் வந்தீங்க ஸ்வீட் கூட சாப்பிட வில்லை என்று கமலா அம்மா தான் அவர்கள் இருவருக்கும் தட்டில் போட்டு இப்போது இதைச் சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் என்று கூறிவிட இத்தனை பாசமாக கொடுப்பதை வேண்டாம் என்று சொல்வதற்கு மனது வராமல் சமையல் அறையில் அமர்ந்து சாப்பிடும் போது அங்கே வந்த பூவிழி..
ஐய் கனவுகளின் தோழி ஆதிரா அக்கா உங்கள் கதை சொல்லவா? வேண்டமா? கதை சூப்பரா இருக்கிறது. என்று கூறிவிட்டு..
சாருபிரபா ஆறுமுகம் அக்கா நீங்கள் உங்கள் கதை நெருப்பின் சாம்பலாய் பயங்கர த்ரில்லா கொண்டு போகிறீர்கள் என்று சொல்லி இருவரையும் சந்தித்தது பெரு மகிழ்ச்சி எனவும். கூற
அக்கா நீங்க ரெண்டு பேரும் அக்கா கல்யாணத்திற்கு வர வேண்டும் என்று பூவிழி கூற.
கண்டிப்பாக நாங்கள் இருவரும் வருவோம் வந்து நடத்தினார் முடிச்சு போடுனும் சரி நாங்க வருகிறோம்.. என்று விடை பெற்றனர்.
தொடரும்...