Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 259
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்-2
தேனருவி தூக்கத்தில் உளறிக் கொண்டு இருந்தாள். அவளைக் கல்லூரிக்கு நேரமாவதை உணர்ந்து பூவிழி எழுப்பினால் தேனருவியின் காலை இழுத்து.
ஏற்கனவே நிழல் கூட கனவில் பேசியவள் தன்னை நிழல் தான் பாதாளத்தில் தள்ள இழுக்கிறது என்று நினைத்து தன் காலில் எட்டி உதைத்தால் செத்து ஒழியட்டும்.
( அச்சோ அது ஏற்கனவே செத்ததால் தான் நிழலாகக் சுற்றுகிறது.)
தேனருவி உதைத்ததில் பூவிழி அம்மா என்று கத்திக் கொண்டே கதவின் அருகே போய் விழுந்தால்.
யசோதா தனது மகளை எழுப்பியவர். அடியேய் தேனு எழுடி உன்னை எழுப்பியவளை
இப்படி உதைத்து விட்டாயே என்று சத்தம் போட்டதில் எழுந்து அமர்ந்தவள் அப்போது தான் நிம்மதியாக உணர்ந்தால் நாம் இத்தனை நேரம் கண்டது கனவு என்று சந்தோசப் பட்டாள்.
பூவிழியைப் பார்த்ததும் தேனருவியின் சந்தோசம் மொத்தமாக வடிந்தது.
பூவிழி நேற்று தன்னிடம் கேட்ட அந்த சுடிதார் டாப் தான் போட்டு இருந்தால் அப்படி என்றால் இரவு நிழல் வந்தது நிஜம் தானோ?
தன் அக்கா எழுந்து அமர்ந்து கொண்டு இப்படி தன்னையே பார்ப்பதைப் பார்த்து பூவிழி சிரித்தவள் அக்கா டீல் மறந்து விட்டாயா?
தேனருவி வெகு வெசையாக எழுந்தவள் கட்டிலின் அடியில் குனிந்து பார்த்தாள்.
தேனு என்ன செய்கிறாய்? போ குளி நேரமாகிறது.
இரவில் நடந்ததைத் தன் அம்மாவிடம் சொன்னால் அந்த அறைக்குள் செல்லவே அனுமதிக்க மாட்டார்கள். அதனால் அவருக்கு சந்தேகம் வராதமாதிரி நடந்து கொள்ள வேண்டும்.
குளியலறைக்குள் சென்றவள் அது எங்கே போச்சு தெரியலையே. கட்டிலுக்கு அடியிலும் இல்லை. ஒரு வேளை துணிகள் இருக்கும் கபோர்டில் இருக்குமோ? நாம் தான் சரியாகப் பார்க்கவில்லையோ? அச்சோ கழுத்தில் என்னவென்று தெரியவில்லையே நிழல் தான் அதன் கூரிய நகத்தை வைத்து ஓட்டை போட்டு விட்டதோ? அது தான் இரத்தம் வருகிறதோ?
( நல்லாப் பாரு அது ஸ்டிக்கர் பொட்டு.)
ரொம்ப நேரம் ஆகியதால் இரத்தம் உறைந்து விட்டது போல் இருக்கிறது. அவளாகவே ஒரு தீர்மானம் எடுத்தவள் குளித்து விட்டு உடைமாற்றி விட்டு இப்போது நேராகச் சென்றது.
பூஜை அறையில் சென்று சாமியைக் கும்பிட்டவள். தனது நெற்றியில் விபூதியை வைத்தவள் பிறகு தான் டைனிங் டேபிள் வந்து அமர்ந்தாள்.
யசோதா இது நம்ம தேனருவி தானா? அதிசயமா சாமி கும்பிடுகிறாள். விபூதி வைக்கிறாள். அவள் செய்கைகளையே கண் இமைக்காமல் பார்க்கவும்.
அம்மா காலையில் என்னமா? டிபன் செய்தாய்?
பூவிழி இடுப்பைப் பிடித்துக் கொண்டு வந்தவள் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் என்று சொன்னவளைப் பார்த்து முறைத்தாள் தேனருவி.
அருவிக்கா இது உனக்கே நல்லா இருக்கிறதா? ஒரு பச்சப் புள்ளைய எட்டி உதைச்சமே அது குத்துயிரும் கொலை உயிருமாய் இருக்கிறது என்று கொஞ்சமாச்சும் உனக்கு பீலிங் இருக்கிறதா?
நீ எதுக்குடி என் புது சுடிதார் டாப் போட்டு இருக்கிறாய்.
நீ தானே அருவிக்கா இரவில் உன் கூடவே இருந்தானே அந்த நிழல் சாட்சியாக உன் அருகில் படுக்க வேண்டும் என்றால் புதுசுடிதாரை கொடுக்கிறேன் என்று சொன்னதை மறந்து விட்டாயா?
அப்ப அது கனவு இல்லையா? நிழல் வந்தது உண்மையா? தேனருவி உடனடியாக காலண்டர் அருகில் ஓடினாள்.
இவள் எதுக்கு இப்போது இந்த ஓட்டம் ஓடுகிறாள்?
அதில் தேதி கிழிக்கப்படாமல் இருக்க அதை கிழித்து விட்டு மனதிக்குள் வேண்டிக் கொண்டாள். அந்த நிழல் சொன்னது போல் இன்று அமாவாசையாக இருக்கக் கூடாது.
மெதுவாக ஒற்றைக் கண்ணைத் திறந்து பார்த்தவள். பயத்தில் கத்தியே விட்டாள்.
அவள் கத்தியதில் யசோதா கையில் வைத்து இருந்த சாம்பார் குண்டாவை கீழே போட்டு விட்டார். நல்லவேளை அது ஆறி இருந்தது இல்லை என்றால் அவர் கால் வெந்து இருக்கும்.
அடிப் பிசாசு எதுக்குடி காலையில் எந்திரிச்சதில் இருந்து ஏதோ பேய் பிடித்தவளாட்டம் ஆடிட்டு இருக்கிறாய்?
அப்படி எதைப் பார்த்து இந்தக் கத்து கத்துகிறாய்? என்று யசோதா கேட்க.
அச்சோ அம்மாக்கு டவுட் வந்துருச்சே எப்படி சமாளிக்கிறது. உண்மையைச் சொன்னால் நம் ஆவிகள் பற்றி ஆராய்ச்சி செய்ய விடாமல் ஆய்ந்து விடுமே.
யசோதா விற்கு இவளின் செய்கையில் சந்தேகம் கொண்டவர். இவள் கத்துவது போல் அந்தக் காலண்டரில் அப்படி என்ன தான் இருக்கிறது.
தேனருவி தலையில் கொட்டியவர் எதுக்கு அமாவாசை என்று இருப்பதைப் பார்த்து லூசு மாதிரி கத்திக் கொண்டு இருக்கிறாய்?
எனக்குத் தெரியாமல் ஏதாவது செய்கிறாயாடி என்று அவர் சந்தேகமாக பார்க்கவும்.
அம்மா என்ன நீ சந்தேகப்படுவது நான் என்னம்மா செய்கிறேன். நான் அமாவாசை பார்த்து பயப்படவில்லை. இன்னைக்கு தான் அசைன்மெண்ட் கொடுத்தாரா எங்க சார் அதை இன்று சம்மிட் செய்யனும் அதைத் தான் தேதி பார்த்து இன்று கடைசி நாள் நான் இன்னும் எழுதவில்லை என்று ஏதேதோ உளறினாள்.
கொஞ்ச நேரத்தில் பயத்தை கிளப்பி விட்டாய் போ.
அதுக்கு என்று பாதிச் சாப்பாட்டில் எழுந்து வருவாயா? போய் சாப்பிடு.
ம்ம்..
சாம்பார் வேண்டும் என்று கத்தினாள் பூவிழி அடுப்பு மேல் இருக்கிறது. போய் ஊற்றிக் கொள் என்று கூறியவர் கீழே சிந்திக் கிடந்த சாம்பாரை சுத்தம் செய்தார்.
இரண்டு பேரும் மதியம் கேண்டீன்ல சாப்பிட்டு கொள்ளுங்கள். நைட் ஏனென்று தெரியவில்லை நாய் ஊளையிட்டுக் கொண்டே இருந்ததால் தூக்கம் வரவே இல்லை.
அம்மா என்ன உனக்கும் கேட்டுதா? நாய் ஊளையிட்டதா?
நான் என்ன சந்திர மண்டலத்திலா? இருந்தேன். எனக்கு கேட்காமல் இருக்க உன் பக்கத்து அறையில் தான் தூங்கிக் கொண்டு இருந்தேன்.
வேறு ஏதாவது சத்தம் கேட்டதா?
ஆமா உனக்கு எதுக்கு இப்போது தேவையில்லாமல் என்னைக் கேள்வி கேட்கிறாய்? காலேஜிக்கு
நேரமாகவில்லையா?
இதோ கிளம்புகிறேன் என்று கையைக் கழுவியவள் அப்படியே வெளியே செல்லப் போனவளை
அதிர்ச்சியாகப் பார்த்தனர். பூவிழி யசோதா இருவரும்.
ஏய் கிறுக்கு நில்லுடி இப்படியே போகிறாயே? உன்னை கல்லூரிக்குள் விடுவார்களா?
அதெல்லாம் என்னைய விடாமல் யாரை விடப் போகிறார்கள்.
அப்படியா? கொஞ்சம் குனிந்து பாரு இந்த துணியோட போனால் விடுவாங்களா? அப்படினா? போ
எதுக்கும் உன் முகத்தை கண்ணாடியில் பார்த்து விட்டு போ என்று பூவிழி கூறவும்.
என்றைக்கும் இல்லாத திருநாளா? யசோதா சொல்கிறார். பூவிழி சொல்லியதை கருத்தில் எடுக்கவில்லை என்றாலும். எதுக்கும் கண்ணாடியில் பார்க்க நெற்றி நிறைய விபூதி சந்தனம் குங்குமம் இருக்க. அவசரத்தில் சுடிதார் பேண்ட் போடுவதற்கு பதிலாக இன்ஸ்கட் போட்டு இருந்தாள். கையில் கல்லூரி பேக் இல்லை. அய்யோ இவர்கள் சந்தேகப்படும் முன் ஏதாவது பிட் போடலாம்.
அம்மா என்றழைத்தாள்.
என்னடி?
அது நீ நேற்று இரவு நாய் குறைத்தது என்று சொன்னாயா? அது தான் அந்த நாய்கள் அங்கே தான் இருக்கிறதா? இல்லை போய் விட்டதா? என்று பார்க்கப் போனேன்.
ஏன் இதுக்கு முன்னால் நீ நாயைப் பார்த்ததே இல்லையா?
ஐயோ அம்மா நீ என்ன இவ்வளவு புத்திசாலியாக இருக்கிறாய்? ஆனால் உன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லும் அளவுக்கு நான் புத்திசாலிப் பெண் இல்லை.
இன்னும் அங்கே நின்று தன் அம்மாவின் சந்தேகத்தை கிளப்பி விடாமல் தனது அறைக்குள் ஓடி விட்டாள்.
நேற்று இரவு வந்தது கனவு இல்லை. நிழல் இங்கே தானே நின்று கொண்டு இருந்தது. அந்த இடத்தில் நின்று பார்த்தால் எதிரில் கண்ணாடி இருப்பதைப் பார்த்தாள்.
இன்றைக்கு வந்தால் நாம் கண்ணாடியில் அதன் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று அவளின் சிந்தனை வேறு எங்கோ போக. அய்யோ இன்றைக்கு இரவு அது வரும் போது அதுக்கு ஆகாது என்று சொன்னதை நாம் செய்து வைக்க வேண்டும்.
அம்மாவிற்குத் தெரியாமல் இதை எல்லாம் செய்ய வேண்டும்.
பூவிழி அக்கா இன்னும் எத்தனை நேரம் நான் காத்திருப்பது. நான் போகிறேன் என்று சத்தம் போட்டாள்.
அப்போது தான் நினைவு வந்தவளாக இவளும் போய் விட்டால் நான் தனியாக
கல்லறை தோட்டத்தை கடக்க வேண்டும். அதில் தன்னிலை உணர்ந்தவள். இருடி அஞ்சே நிமிசம் தான் வந்து விடுவேன் என்று கூறியவள் முதலில் தன் முகத்தைக் கழுவி விட்டு ஒரு பொட்டு மட்டும் வைத்தவள். அவசரமாக உடையையும் மாற்றி விட்டு மறக்காமல் கல்லூரி பேக் எடுத்துக் கொண்டு வெளியே வந்து இப்போது எப்படி இருக்கிறேன்.
அம்மா போய் வருகிறேன் என்று கூறியவள். அம்மா இன்றைக்கு அமாவாசை. ஏதாவது கோவிலுக்குப் போவாயா?
ஆமா போவேன். அதற்கு என்ன?
இல்லை எலுமிச்சம் பழம் சாமி காலடியில் வைத்து எடுத்து வாம்மா?
எதுக்கு? என்று ஒரு மார்க்கமாக பார்த்தவர். நீ ஏண்டி காலையில் இருந்து முனி அடித்தவள் போல் பேசுகிறாய்?
அம்மா நீ என்னை புரிந்து கொள்ளவே இல்லை. என்று சிரித்தவள். நான் இனி வெயில் அதிகமாக இருக்கும் அதனால் லெமன் ஜூஸ் குடிக்கலாம் அதுக்கு தான் கேட்டேன்.
அதுக்கு கடையில் வாங்கினால் போதுமே. அது எதுக்கு சாமிகிட்ட வைக்க வேண்டும்?
அம்மா அப்பத்தான் பவர் கிடைக்கும்.
என்ன பவர்? யாராவது உடம்புக்குள் போகும் பவரா?
யசோதா அருகில் ஓடிவந்த தேனருவி தனது அம்மாவின் கால் இருக்கிறதா? என்று சுற்றிலும் பார்த்தவள். நல்ல வேளை கால் இருக்கிறது. ஒரு வேளை இது கால் இருக்கும் பேயோ?
அடியே கிறுக்குச்சி என்ன? புதுசாப் பார்க்கிற மாதிரி பார்த்துக் கொண்டு என்னைச் சுற்றுகிறாய்?
ஹீ ஹீ என்று பல்லைக் காட்டியவள்.. அது நீ பேசினாயா?
என்னவென்று?
அது தான்மா பவர் அது தான் உனக்கு உடலில் பவர் வந்து விட்டதோ? சந்தேகமா பார்த்தேன். இந்த வெப் சீரியல் எல்லாம் காலுக்கி கீழ் புகை வருமே அப்படியே கையை மேலே தூக்கிட்டு பறப்பாங்களே ஒரு வேளை உனக்கு அது மாதிரி இருக்கிறதா? என்று பார்த்தேன்.
தேனருவி நீ தாண்டி காலையில் இருந்து பேசுவதும் நடந்து கொள்வதும் சந்தேகமாக இருக்கிறது. எதுக்கும் இன்றைக்கு நீ வந்த பிறகு நாம் சேர்ந்தே கோவிலுக்கு போகலாம்.
ஹே என அதிர்ச்சி அடைந்து பார்க்க..
மந்திரவாதியிடம் மந்திரித்து தாயத்து போட்டு விடுகிறேன்.
பூவிழி எதுக்கும் அக்காவை இன்று மாலை வரை கொஞ்சம் பார்த்துக் கொள் சரியா?
சரிம்மா நான் பார்த்துக் கொள்கிறேன்.
இன்றைக்கு கல்லூரியில் என்ன? கலாட்டா செய்யக் காத்திருக்கிறாளோ?
நீ உடல் நான் நிழல்
தொடரும்...