• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
275
நீ உடல் நான் நிழல்🌚
பாகம் - 14


தேனருவிக்கு தேர்வு வைக்க வினாத்தாள் கொடுத்து விட்டு அவளையே பார்த்தால் மற்ற மாணவர்களுக்கு சந்தேகம் வந்து விடும் என்று வகுப்பறையே சுற்றி வந்தான்.

தேனருவியோ? மனதில் நிழலோடு தர்க்கம் செய்தவள் அதை புக்கில் இருந்து படித்துச் சொல்ல அதுவோ? ஊரில் இல்லாத சாக்குச் சொல்லியது.

எனக்குத் தமிழ் மட்டும் தான் தெரியும். அது புரியாத மொழியில் இருக்கிறது. நான் தமிழ்ப் பேய்.. கல்லறைத் தோட்டத்தில் கூட இப்படி டார்ச்சர் செய்ய மாட்டார்கள். அந்தக் காலத்தில் தமிழ் இப்படி தான் இருக்கும் அது எல்லாம் அரசர் காலம்..

நிழல் தான் படித்த போது இருந்த தமிழ் எழுத்துகளை அதனுடைய நெஞ்சில் இருந்த திரையில் காண்பிக்க.

தேனருவி முதல் வினாவிற்கு இதைப் பார்த்து எழுதி விட்டாள். பிறகு தான் புத்தியில் உரைத்தவளாக இது என்ன புதுமொழியா இருக்கிறது. இதை நான் என் புத்தகத்தில் பார்க்கவே இல்லை.

நிழல் அவளின் காதருகில் வந்து உன்னை யார் இதை எழுதச் சொன்னாங்க. நீ இப்போது அதை எப்படி உன் வாத்தி படிக்கச் சொன்னா எப்படி படித்துச் சொல்லுவாய்?

அப்போது தான் போனாவை மூடி வைத்து இருந்தாள்.

நீ தான் பெரிய பிஸ்தா மாதிரி அன்றைக்கு நெஞ்சில் பட்டன் மாதிரி அழுத்தி உன் இருப்பிடம் காண்பித்தாயே அது மாதிரி இப்போது உன் நெஞ்சில் புக் வைத்து காண்பிக்கிறாய்? நான் அதைப் பார்த்து எழுதி விடுகிறேன்.

தேனருவி சொன்னதை ஏற்றுக் கொண்ட நிழல் தன் நெஞ்சில் புக் வைத்து அவள் சொன்ன பேஜில்
எதிர்க்க நிற்க இவளோ தன் முன்னால் கண்ணை வைத்து பேனா மூடியைத் திறக்காமலே எழுதிக் கொண்டு இருந்தாள்.

தேவ் ஆனந்த் என்ன? தேனருவி படித்தது எதுவும் நியாபகம் வரவில்லையா? அது தான் பேனா மூடியைக் கூடத் திறக்காமல் எழுதிக் கொண்டு இருக்கிறாயா?

அப்போது தான் குனிந்து தன் கையில் இருக்கும் போனாவைப் பார்த்தாள். அடக் கருமமே இந்த ஆளுகிட்ட மாட்டவே இப்படி செஞ்சு தொலைப்பனா?

எல்லாம் ப்ளாண் பண்ணி பண்ணனும் என்று நிழல் வந்து வடிவேல் காமெடி சொல்லி சிரிக்க.

தேனருவி விட்டால் பெரிய புருடா சார் இது ஒரு வித்தியாசமான பேனா எங்கள் தாத்தா ரூமில் இருந்து நான் எடுத்து வந்தேன். பேனாவைத் திறக்காமலே எழுதலாம். முதலில் பேப்பரில் எழுத்து இன்க் தெரியாது ஒரு மணிநேரம் கழித்து அது தெரிய ஆரம்பிக்கும்.

சரி நீ இத்தனை நேரம் எழுதிய வரைக்கும் போதும். அதைக் கொடு ஒரு மணி நேரம் கழித்து வந்து விடுகிறதா? பார்க்கலாம் என்று பேப்பரை வாங்கி விட.

தேவ் ஆனந்த் அவள் முதலில் எழுதி வைத்து இருந்த தமிழ் எழுத்துகளைப் பார்த்து விட்டு உனக்கு இந்த எழுத்துகள் படிக்கத் தெரியுமா? அடுத்த அணுகுண்டு தூக்கிப் போட.

இப்போது அவளுக்கு நிழல் மேல் சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது. தன் முன்னால் நின்று பேசுவது நிழலா? வாத்தியா? என்று அவனையே பார்க்க.

அவனோ? இன்றைக்கு நான் போன் செய்வேன் நீ பேச வேண்டும் என்று மிரட்டி விட்டு அவள் எழுதிய பேப்பரை வாங்கிச் சென்றான்.

தேனருவிக்கு உண்மையில் உதறல் எடுக்க ஆரம்பித்து விட்டது. ஐயோ நான் பாட்டிற்கு ஒரு மணி நேரம் கழித்து பேப்பரில் எழுத்து வந்து விடும் என்று சொல்லி வைத்தேனே ஒரு வேளை ஒரு மணி நேரம் கழித்து வரவில்லை என்றால்.. அச்சோ நான் புருடா மட்டும் விட்டது தெரிந்தது அவ்வளவு தான்.

மலர்க்கொடி அருகில் வந்தவள் தேனு ஏன் ஒரே சோகமாக உட்கார்ந்து இருக்கிறாய்?

அவள் என்னத்தைச் சொல்வாள்? ஒன்றா? இரண்டா? அதுவும் நிழல் தன் கூட இருப்பது தெரிந்தால் தன் கூட நெருக்கமாகப் பழகவோ? ஏன்? அருகில் உட்காரவோ? மாட்டார்கள். இப்போது தான் தேர்வில் செய்து வைத்து இருக்கும் தில்லுமுல்லு தெரிந்தால். என்னை மோசடிப் பேர்வழி என்று அனைவரும் சொல்லி விடுவார்கள் என்பது மட்டும் தான் அவளின் புத்தியில் வந்து சென்றது.

அவளுக்கு ஒரு கெடுதல் நடக்க விட்டு விடுமா? நிழல் சரியாக ஒரு மணிநேரம் கழித்து அந்தப் பேப்பரில் இருந்த எழுத்துகள் அனைத்தும் ஒவ்வொன்றாகத் தெரிய ஆரம்பித்து இருந்தது.

தனது டெஸ்கில் சோகமே உருவமாக அமர்ந்து இருந்தவளை தேவ் ஆனந்த் சார்
அழைக்கிறார் என்று ப்யூன் வந்து சொல்ல அவனின் அறைக்குள் பயந்து கொண்டு போனால்.

சார் என்று தலையைக் குனிந்து கொண்டு தான் நின்று இருந்தாள். கோசலை மேடம் மற்ற மேம் எல்லாம் இவ என்ன தினமும் இங்கே வந்து திட்டு வாங்கிக் கொண்டு இருக்கிறாள். இவளைப் பார்த்து சிரித்துக் கொண்டு சென்றனர்.

தேனருவிக்கு கண்ணீர் துளிர்த்து விட்டது. இருந்தாலும் தலையைக் குனிந்து இருந்ததால் அவள் கண்ணீர் அவனுக்குத் தெரியவில்லை.

ஹனிபால்ஸ் என்று தேவ் ஆனந்த் மெதுவாக அழைத்தான். நீ சொன்னது போல பேப்பரில் என்று நிறுத்தி விட்டு அவளிடம் விடைத்தாளை எடுத்துக் கொடுத்தான்.

என்ன பயந்து விட்டாயா? உண்மையில் அதிசயப் பேனா தான் இங்கே பாரேன் எழுத்துகள் பூராவும் வந்து விட்டது என்று அவன் சொல்லவும்.

தேனருவிக்கு சிரிப்பு வந்து விட்டது. அவள் மனதில் நிழலுக்கு நன்றி சொன்னவள். உன்னை நம்பி நான் எந்த புருடா வேண்டுமானாலும் விடலாம் போல் இருக்கிறது.

அந்தப் பேப்பரை வாங்கி கையில் வைத்துக் கொண்டு அவள் சும்மா கொடுத்த பக்கங்கள் அனைத்தும் விடை இருக்க.. பேப்பருக்கு ஒரு முத்தம் வைத்தாள்.

தேவ் ஆனந்த் இவள் என்ன அன்றைக்கு பிரண்ட்ஸ் முத்தம் கொடுத்தா இன்றைக்கு பேப்ருக்கு கொடுக்கிறாள் என்று தன் குரலைக் கணைக்கவும் தான் புத்தியில் உரைத்தவள். தேவ் ஆனந்த் பார்த்து அசடு வழிந்து விட்டு.. தனது வகுப்பிற்குள் சென்றவள். தனது தோழிகளிடம் பேப்பரை காண்பித்தவள். அன்றைய பொழுது இனிமையாகவே சென்றது.

தேவகோட்டையில் தேவ் ஆனந்த் அம்மா தம்பிக்கு பொண்ணு பாருங்கடா என்று தன் மூத்த மகன் சிவக்குமாரிடம் சொல்ல அவனின் மனைவியோ?

அத்தை என் தங்கை வனிதா பார்க்கலாமே தேவ் ஆனந்திற்கு என்று எடுத்துக் கொடுக்க.

விஜயலதாவோ? அத்தை என் தங்கச்சி சுனைனாலும் தான் படிப்பை முடித்துக் கொண்டு வீட்டில் இருக்கிறாள். வனிதா கூட குள்ளமாக இருப்பாள். ஆனால் என் தங்கை சுனைனா நல்ல வளர்த்தியா இருப்பா தேவ் ஆனந்திற்கு என்று பிறந்தவள் போல் இருப்பாள்.

வானதியோ? என் தங்கை வனிதா உயரம் குறைவாக இருந்தாலும் பார்க்க லட்சனமா ஒல்லியா இருப்பாள். உன் தங்கச்சி இதோ இந்த அரண்மனையில் இருக்கும் தூண் போல் இருப்பாள் சுனைனா என்று பெயர் வைத்ததிற்குப் பதில் பூசணிக்காய் என்று வைத்திருக்கலாம்.

ஆமா உன் தங்கச்சிக்கு வனிதா என்பதிற்குப் பதில் குனிதா வைத்து இருக்கலாம்.

அடச்சீ வாயை மூடுங்கள் இத்தனை நாட்கள் எங்கள் காதில் தான் குடைந்தீர்கள் என்றால் இப்போது என் அம்மா அப்பா காதில் சங்கு மாதிரி ஊதினால் இதென்ன சண்டைக் களமா?

போதும் உங்க இரண்டு பேர் மட்டும் என் தம்பி அவன் ஆசைப்பட்டு அவன் வாழ்க்கை அமைத்துக் கொள்வான்.

இரண்டு மருமகளும் முகத்தில் கொணடிக்கொண்டு நின்று கொண்டார்கள். தேவ் ஆனந்த் பைக் வரும் சத்தம் கேட்டதும். சரி இரண்டில் ஒன்று தெரிந்து விடும்.

அம்மா இதோ தம்பியே வந்து விட்டான். அவனிடம் கேட்டு விட்டு நாம் தரகரிடம் அவனின் ஜாதகத்தைக் கொடுக்கலாம்.

என்ன? அதிசயமாக இருக்கிறது. எல்லோரும் வரவேற்பு அறையில் அமர்ந்து இருக்கிறார்கள். யாராவது விருந்தினர்கள் வருகிறார்களா? அவர்களை வரவேற்கத்தான் அமர்ந்து இருப்பார்கள்.

தேவ் ஆனந்த் தன்னுடைய அறைக்குப் போனவனை தேவ் இங்கே வாப்பா என்று கிருஷ்ணவேணி அழைக்க.

அருகில் வந்தவன் ஏம்மா ஏதாவது கேட்க வேண்டுமா?

ஆமாம் பா உனக்கும் வயசு இருப்பத்தி ஏழு ஆச்சு அது தான் காலகாலத்தில் ஒருத்தியைப் பிடித்து மணமுடித்து வைத்து விட்டோம் என்றால் நாங்களும் நிம்மதியாக இருப்போம்ல. நீங்கள் நிம்மதி இல்லாமலா? இப்போது இருக்கிறீர்கள். நான் திருமணம் செய்வதால் தான் உங்களுக்கு நிம்மதி கிடைக்குமா? என்னம்மா லாஜிக் இது எனக்குப் புரியவில்லை.

நாங்கள் இத்தனை நாட்கள் சொந்தத்தில் மணம் முடிக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் இன்று நம் வீட்டிற்கு ஜோசியர் வந்து இருந்தார். அவர் சொன்னார் வெளியே இருந்து தான் பொண்ணு அமையும் ஆனால் அவர்களும் உங்களைப் போல் பெரிய குடும்பம் தான் அதுவும் மூன்று மாதத்தில் முடிந்து விடும் என்று சொன்னார். அது தான் உன்னிடம் கேட்டு விட்டு தரகரிடம் உன் ஜாதகத்தை கொடுக்கலாம் நினைக்கிறோம். நீ என்ன சொல்கிறாய்?

தேவ் ஆனந்த் முகத்தில் ஒரு மலர்ச்சி அது தேனருவியை நினைத்துத் தான். அதை சரியாக கேட்ச் பிடித்து விட்டார். சிவக்குமார்.. உடனே மற்றவர்கள் முன் கேட்க வேண்டாம் என்று நினைத்து அது தான் அவன் காதில் போட்டாச்சு அம்மா அவன் யோசித்து சொல்லட்டும். என்ன தேவ் நான் சொன்னது சரிதானே என்று அவர் கண்ணில் சிக்னல் காண்பிக்க அதைப் புரிந்து கொண்டான்.

ஆமாம் அம்மா நான் ஒரு வாரத்தில் சொல்கிறேன். என்று கூறிவிட்டு தன் அண்ணாவிடம் தலையை ஆட்டிவிட்டுச் தன் அறைக்குச் சென்றவன். தன் செல்ல ராட்சசி இன்று காலையில் இருந்து மாலை வரை செய்தவைகள் மேலும் அவளது ஸ்கூட்டில் தன்னைப் பார்த்தவாறு அப்படியே பச்சையா? தன்னை சைட் அடித்துக் கொண்டு வந்தது என்று அத்தனையும் நினைத்து சிரித்தவன்.

அறையில் மெத்தையில் படுத்துக் கொண்டு இருந்தான். தன்னப் போல் சிரித்துக் கொண்டு.

சிவக்குமார் தன் தம்பி அறைக்குள் சென்று பிரஸப் ஆகட்டும் என்று பத்து நிமிடம் கழித்து உள்ளே சென்று பார்த்தவன். அவன் இன்று புதிதாகத் தெரிந்தான் காலையில் கல்லூரி செல்லும் போது போட்டிருந்த அதே துணியோடு மின்விசிறியைப் பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தான்.

தேவ் ஆனந்த் தேனருவியை தூக்கிக் கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை செய்தது என்று அனைத்தும் ஏற்கனவே சிவக்குமார் காதிற்கு வந்தது.

அன்று அவனின் சிநேகிதன் குமரேசன் அவனது கால் வரப்பில் நடக்கும் போது சேர் வழிக்கி விட்டதில் கால் மடங்கி சதை பிரண்டதைப் காண்பித்து சிகிச்சை பெறச் சென்று இருந்தார்.

இது என்ன தேவ் ஆனந்த் போலவே இருக்கிறான் என்று அந்த நொண்டி காலை வைத்து வந்து அவன் அவளைத் தூக்கிக் கொண்டு வருவதை நன்கு கவனித்து அந்தப் பெண் யார் என்று கூட சொல்லி இருந்தான்.


தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top