Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 277
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்

பாகம்- 10
பாகம்- 10
தேனருவி தனது செல் போன் நம்பரைத் தனது அம்மாவுடையது என்று சொல்லி ஏமாற்றி விட்டு கூலாக இருந்தாள்.
தனது தோழிகள் இருவரும் கூறுவது போல் தனக்கு தேவ் ஆனந்த் மீது ஏதாவது அது வந்து விட்டதா? அச்சோ நினைக்கும் போதே செம பீலாகுதே.
அதுவும் அவர் புருவத்தை உயர்த்துவதில் தான் நான் ரொம்ப சொக்கிப் போகிறேன் என்று ஒரு மார்க்கமாகவே அன்றைய பெழுது கழிந்தது.
வீட்டிற்கு வந்து விட்டாள் நாளைக்கு டெஸ்ட் என்று வேறு சொல்லியதால் நல்ல பிள்ளையாக படித்துக் கொண்டிருந்தாள்.
தேவ் ஆனந்திற்கு போன் நம்பர் கொடுத்ததையே மறந்து விட்டாள். அவன் போன் நம்பரில் இவளை அழைக்கும் போதே அவனுக்கு தெரிந்து விட்டது. தேனருவி பெயரில் தான் இருக்கிறது. இருந்தும் அவள் என்ன செய்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்ளவே அழைத்தான்.
போன் வரவும் ஏதோ புது எண்ணாக இருக்க அழைப்பை ஏற்கலாமா? வேண்டாமா? என்ற சிந்தனையில் ஆழ்ந்து போக அது பூரா ரிங்கும் முடிந்து கட்டாகி விட்டது.
மறுபடியும் அழைப்பு வர எடுத்து காதில் வைத்தவள் எதிர்முனையில் யார் பேசுகிறார்கள் என்று தெரியாமல் ஏதாவது லோன் வேண்டுமா? என்று தான் கேட்க கால் வந்து இருக்கிறது என்று இவளாகவே முடிவு செய்து கொண்டு , பொழுது விடிஞ்சு பொழுது போனா? இதே வேலையாப் போச்சு லோன் வேண்டுமா? லொட்டு வேண்டுமா? லொசுக்கு வேண்டுமா?
பேங்கில் ஏசிக் காத்தில் உட்கார்ந்து கொண்டு இப்படி போன் செய்து பேசிப் பேசி நாங்களும் அதில் மயங்கி வந்து லோன் வாங்கினால் கொஞ்சம் பணம் கட்ட தாமதமனால் அதுக்கு வீட்டிற்கு முன்னால் வந்து நின்று கொண்டு ஏலம் போடுவது.
ஓஹோ அப்புறம். தேவ் ஆனந்த் குரல் கூட அடையாளம் தெரியவில்லை. அவள் தான் தனக்கு எல்லாம் தெரியும் என்பது போல் இன்றைக்கு நான் பேசும் பேச்சில் இனி யாரிடமாவது லோன் வேண்டுமா என்று கேட்பதையே மறந்து விட வேண்டும் என்று லெக்சர் அடிக்கும் முசுவில்.
நான் என்ன கதையா? சொல்லிட்டு இருக்கிறேன். அப்புறம் விழுப்புரம் என்று சொல்கிறீர்கள் சார்.
சரி என்ன பேச வேண்டுமோ? பேசு நான் குறுக்கே எதுவும் பேசவில்லை.
இது கொஞ்சம் கூட நல்லா இல்லை. நீங்கள் தான் போன் செய்தீர்கள். அதனால் நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
எதைப் பற்றி சொல்ல வேண்டும்.
எதுக்கு போன் செய்தீர்களோ? அதைப் பற்றி.
அது தான் நீயே பேசி விட்டாயே இனி நான் என்னத்தைப் பேசுவது.
நான் நினைச்சது சரியா போச்சு அப்படீனா நீங்கள் இப்படி தான் வீடு வீடாக போன் செய்து லோன் வேண்டுமா? கேட்டு கேட்டு லோல் படுகிறீர்களா?
பேங்க் எக்ஸாம் எவ்வளவு கஷ்டம் அதை எழுதி பாஸ் செய்து விட்டு இப்படி லோல் படுகிறீர்களே அதை நினைத்தா சிரிப்பு சிரிப்பா வருகிறது சார்.
சரி சிரிச்சுக்கோ..
நான் சிரிப்பேன் அழுவேன் உங்களுக்கு என்ன சார் இத்தனை அக்கறை வந்தது.
நான் அக்கறைப் படக்கூடாதா? உன் மேலே நீயும் நான் எப்படி லோல் படுகிறேன் என்று சொன்ன பின்னால் என் மனசில் ஒரு பாசம் வந்து விட்டது.
என்னது பாசமா? அது ரொம்ப தப்பாச்சே சார்.
ஏன் நான் பாசம் வைக்கக் கூடாதா? மேடம்.
என்ன சார் மேடம் சொல்கிறீர்கள் எனக்கு ஒன்றும் வயசாகவில்லை.
உங்களுக்கு வயசாகவில்லை என்பதை நான் எப்படி நம்புவது மேடம். நானே ஒரு கல்யாணம் ஆகாத கன்னிப்பையன், நீங்கள் இப்படி என் மேல் அக்கறைப் பட்டு பேசுகிறீர்களா? அது தான் ஒரு பாசத்துடன் மேடம் சொன்னேன்.
அக்கறையும் இல்லை சக்கரையும் இல்லை எனக்கு ஒன்றும் வயசாகவில்லை.
உங்கள் பேச்சைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே மேடம். எதுவோ ரொம்ப அனுபவப் பட்ட மாதிரி தெரிகிறது.
யாருனே தெரியாத உங்களுக்கு தெரிந்து இருக்கிறது. ஆனால் என்னைப் பெத்த ஆத்தாளுக்குத்
தெரியவில்லை சார்.
என்னாச்சு?
அதை ஏன் சார் கேட்கிறீங்க..
அப்படினா என் கிட்ட சொல்லமாட்டீங்க அப்படித்தானே. நான் கூட உங்கள் பேச்சைப் பார்த்து ஏதாவது கல்லூரிப் பேராசியராக இருப்பீங்க என்று தான் நினைத்தேன். நீங்களா உங்கம்மாவைப் பற்றி சொல்ல வந்தீங்க.. பிறகு அதை ஏன் கேட்கிறீங்க என்று பொசுக்குனு சொல்லி விட்டீங்க இந்தக் கன்னிப் பையன் மனசு கந்திப் போச்சுங்க.
சார் கொஞ்சம் என்னையப் பேச விடுங்கள் சார் நீங்களா ஒரு கற்பனை வளர்த்துக்கிட்டுப் பேசக் கூடாது.
சரி பேசலை மா நீ சொல் மா நான் மேடம் சொல்லலை மா..
நான் ஒன்றும் உங்களுக்கு அம்மா இல்லை.
அப்ப என்ன பொண்டாட்டி யா?
அய்யோ? கெட்ட வார்த்தை எல்லாம் பேசாதீங்கோ. நான் இன்னும் சின்னப் பெண். சாரி சார் உங்கள் கூட இத்தனை நேரம் உங்கள் பேங்க் வேலையைத் கேவலப்படுத்தி திட்டிப் பேசியது தப்பு தான் சார். அதுக்காக பொண்டாட்டி என்று சொல்லாதீங்க சார்.
இது ராங் நம்பர் தானே சார் நீங்கள் நம்பர் மாத்தி அழைத்து விட்டீர்களா?
இல்லையே எனக்கு இந்த நம்பர் தான் கொடுத்தாங்க மா.
சார் மா சொல்லாதீங்கோ?
ஏனுங்கோ?
நான் இப்போது தான் காலேஜ் படிக்கிறேன்.
அப்படீனா உங்கள் பேர் சொல்லுங்க.
உங்களோட ஒரே ரோதனையாப் போச்சு.. சார் எனக்கு படிக்கிற வேலை நிறையா இருக்கிறது.
நான் அதைப் பற்றி கேட்டனா? உங்களோட பேர் தான் மா கேட்டேன்.
நான் உங்களுக்கு ஒரு க்ளூ கொடுக்கிறேன் கண்டு பிடித்துக் கொள்ளுங்கள் சார்.
சொல்லுமா?
சார் மலையில் காடுகளில் எல்லாம் இருக்கும் சார் அது என்ன?
குரங்கா? அது தான் மலையிலும் காடுகளிலும் இருக்கும். என்ன இந்தக் காலத்தில் கூட இப்படி பெயர் வைத்து இருக்கிறார்கள். ஒரு வேளை உன் முகம் குரங்கு மாதிரி இருக்குமா? இல்லை உனக்கு வால் ஏதாவது இருக்கிறதா?
சார் நான் சொல்லவருவதைக் முழுசாக கேளுங்கள் சார்.
மரங்களில் இருக்கும் ரொம்ப இனிப்பாக இருக்கும்.
பலாப்பழம் இல்லை மாங்கனி, சக்கரைப்பழம். இதில் எதுமா ? உன் பெயர்.
சரியான மரமண்டை சார் நீங்கள் ஒரு க்ளூ கொடுத்தா கண்டுபிடிக்கத் தெரியுதா?
ஏய் என்ன வாய் நீளுது வந்தேன் வைச்சுக்கோ மவளே உன் தார் ரோடு மூஞ்சில் கீறி விட்டு விடுவேன்.
நான் ஒன்றும் தார் ரோடு மாதிரி இருக்க மாட்டேன்.
உலக அழகியா நீ.
சாரி சார் மன்னித்துக் கொள்ளுங்கள். ஆமா நீங்கள் எதுக்கு போன் செய்தீர்கள்.
இப்பவாது கேட்க தோனிச்சே.
ஆமா உங்களுக்கு என் நம்பர் எப்படி கிடைத்தது.
இத்தனை நேரம் ஒரு குரங்கு பேசியதே அது தான் கொடுத்தது.
சார் குரங்கு சொல்லாதீங்கோ.
ஏனுங்கோ? சொன்னா என்ன பண்ணுவீங்க.!!!
பேர் சொல்லிக் கூப்பிடுங்கள் சார்.
அதுக்கு நீ உன் பெயர் சொல்ல வேண்டும்.
ஹனிபால்ஸ் சார் கண்டு பிடித்துக் கொள்ளுங்கள் இதுக்கு மேல் எல்லாம் சொல்ல முடியாது. நான் எப்போது உங்களிடம் வந்து என் போன் நம்பர் கொடுத்து உங்களைப் போன் செய்யச் சொல்லி வண்டை வண்டையா பேசச் சொன்ன மாதிரி என் மேல் பழி போடுகிறீங்களே. நீங்கள் யார் சார்?
ஹனிபால்ஸ் நீ தானே இன்றைக்கு போன் நம்பர் கொடுத்தாய்?
அப்போது தான் தேனருவி மனதில் சாக் அடித்தது. அச்சோ நாம் தானே இன்று வாத்திக்கிட்ட
போன் நம்பர் கெடுத்தோம். அதை எப்படி மறந்தோம். அச்சோ நாம் அவரை நம்ம மம்மி வாய்சில் பேசி திணறடிக்கலாம் என்று நினைத்து இருந்தோமே இப்படி வசமா மாட்டிக் கிட்டாயே தேனருவி. சரி ஏதாவது பேசி சம்மாளிப்போம்.
என்ன லைனில் இருக்கிறாயா? இத்தனை நேரம் ஏழு ஊருக்கு நீண்ட வாயீ இப்போது எங்கே போச்சு ஹனிபால்ஸ் பேசத் தெரியுமா ? இல்லை ஊமையாகி விட்டதா?
சார் அது வந்து நான் ஒன்றும் சும்மா இல்லை. இத்தனை நேரம் படித்துக் கொண்டு தான் இருந்தேன்.
அதை நான் நம்ப வேண்டுமா? இத்தனை நேரம் நீ வாயாடுவதிலேயே தெரிகிறது தினமும் இப்படி தான் யார் யாரோடு போன் பேசிக் கொண்டு தூங்காமல் விடியற வரைக்கும் கடலை வறுத்து விட்டு அங்கு வந்து தூங்கவேண்டியது.
சார் அப்படி எல்லாம் குற்றம் சொல்லாதீங்க நான் இது தான் முதல் தடவை பேசுவது சார்.
இல்லையே உன் பேச்சப் பார்த்தா அப்படித் தெரியலையே.
உங்கள் மேல் சத்தியமா சார்.
உனக்கு என்ன தைரியம் இருந்தா உன் நம்பர் உன் அம்மா நம்பர் என்று என்னைச் சீட்டிங் செய்து இருப்பாய்.
ஆமாய்யா உன் கூட காதல் பயிர் வளர்க்கத்தான் என்று மனசுக்குள் திட்டினாள். அவளின் மனதில் தோன்றியதை நினைத்து அவளே அவளுக்கு தலையில் கொட்டு வைத்துக் கொண்டாள்.
மனசுக்குள் திட்டினது போதும் இத்தனை நேரம் படித்தேன் என்று சொன்னாயே அதைக் கொஞ்சம்
சொல்லு பார்க்கலாம்.
சார் அது நீங்கள் காலேஜில் இருக்கும் போது திட்டுவது மாதிரி இப்போது திட்டாதீர்கள். நான் வேண்டும் என்றால், எனக்கு உடல்நிலை சரியில்லை என்று இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்கிறேன்.
இரண்டு நாள் கடந்து வருவாய் தானே!! அப்போது டெஸ்ட் வைப்பேன். என்று தேவ் ஆனந்த் கூறிவிட்டு. ஆமா நீ தெரிந்தே என்னை ஏமாற்றி இருக்கிறாய்? அதுக்கு முதலில் பதில் சொல்லு.
தேனருவி உனக்குத் தேவையா? இது என்று அவளே அவளைப் பார்த்து திட்டி விட்டு சார் இந்த ஒரு தடவை மட்டும் என்னை மன்னித்து விடுங்கள் சார் இனி மேல் இப்படி செய்ய மாட்டேன்.
நாளைக்கு லீவ் போடாமல் வந்து சேர் ஹனிபால்ஸ் என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டு அவனால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
பார்க்க சிலுவண்டு மாதிரி இருந்து கொண்டு பெயர் கேட்டதிற்கு க்ளூ கொடுக்கிறாள் பாரு செம க்யூட் தான் இவ மை செல்ல பொண்டாட்டி என்று நினைத்துக் கொண்டு சிரித்தான்.
தேவகோட்டை ஜமீன் பேரன் நிலக்கிழார் தான் இருந்தாலும் கற்பித்தல் அவனுக்கு பிடித்த ஒன்று அதனால் தான் படிப்பு முடிந்ததும் கல்லூரியில் விரிவுரையாளராகப் சேர்ந்து விட்டான்.
தன் அண்ணன்கள் இருவரும் விவசாயம் பார்க்க இவன் வேலைக்குச் சென்றதை யாரும் தடுக்கவில்லை.
அண்ணன்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து இருக்க. தேவ் ஆனந்திற்கு தான் இன்னும் திருமணம் ஆகவில்லை.
தொடரும்...