• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
259
நிழல் - 1

நட்டநடு நிசியில் ஊரே அமைதியாக இருக்க நாய்கள்
ஊளையிட்டன.

ஊ.. ஊ...

தனது வீட்டில் உறக்கத்தில் இருந்த தேனருவி பயத்தில் எழுந்து அமர்ந்தாள்.

பூவரசங்கோட்டையில் தேனருவி வீடு தான் அந்தக் காலத்தில் கட்டிய வீடு அதைப் புரணமைக்க
வசதி இல்லாததால் அது பழைய
தோற்றத்தில் தான் இருந்தது.

அநேக அறைகள் புழங்காமல்
தங்கள் தேவைக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

வாசுதேவன் தந்தையின் சொத்துகளை ஊதாரியாக செலவிட்டதால் மகள்கள் இருவரை தன்னந்தனியாக விட்டு விட்டு தனது வாழ்நாளை முன்னமே முடித்துக் கொண்டார்.

யசோதா அவருக்கு வெளியுலக அறிமுக அறிவு இல்லாததால் இருக்கும் விவசாய நிலத்தில் தங்கள் வாழ்வாதரத்தை கழிக்க முடிகிறது.

தேனருவி தன் அருகில் படுத்து இருக்கும் பூவிழியை எழுப்புகிறாள்.
நாய்கள் ஊளையிடுவதை அவளால் காதுகொடுத்துக் கேட்க முடியவில்லை. அதோடு சன்னலில் இருந்த திரைச்சீலை விலகி ஏதோ ஒரு புகை போல் நிழல் வீட்டிற்குள் வருவது போலவும் அது தன்னையே பார்ப்பது போலவும் இருந்தது.

ஏய் எருமை மாடு என்று பூவிழியை எட்டி உதைத்தாள். நான் எத்தனை நேரமாக எழுப்புகிறேன். எருமை மாட்டின் மேல் மழை பெய்தது போல் தூங்குகிறாய்.

அருவிக்கா இதுக்குத் தான் உன்கூட படுக்க மாட்டேன் சொன்னேன். நாய் ஊளையிடுது
பூணை ஊளையிடுது என்று என்னை தூங்கவிடுகிறாயா? தினமும் உன்னோட ரோதனையா? போச்சு.

நான் பொய் சொல்லவில்லை பாருடி நம் அறைக்குள் ஒரு நிழல் உருவம் தெரிகிறது.

தூக்க கலகத்தில் எழுந்து அமர்ந்த பூவிழி இதுக்குத் தான் அந்த பூட்டிக் கிடந்த அறைக்குள் போக வேண்டாம் என்று சொன்னேன்.

அம்மாவும் சொன்னாங்க நீ அதைக் கேட்டாயா? போனாய் சரி எதுக்கு அந்தப் பழைய பெட்டிக்குள் இருந்த அந்தப் பேய்க் கதையை எடுத்து படித்தாய்? இப்போது அதே நினைவில் என்னை இம்சை செய்கிறாய்? நான் போய் அம்மாவிடமே படுத்துக் கொள்கிறேன்.

ப்ளீஸ் டி என்னைத் தனியாக விட்டு விட்டு போகாதேடி என் செல்லம் ல நீ கேட்டாயே அந்த சுடியை உனக்கு நாளைக்கு காலேஜிக்குப் போட கொடுக்கிறேன்.

சொன்னது நீ தானா? க்கா காலையில் பேச்சு மாறமாட்டாயே.. நீ ஏதோ வீட்டிற்குள் நிழல் இருக்கிறது என்று சொன்னாயே அது தான் சாட்சி. என்று பூவிழி கூறவும்.

அப்போது தேனருவி தன் முகத்திற்கு அருகில் அந்த நிழல் வந்து நிற்பதைப் பார்த்து பயத்தில் பேச்சு வராமல் பே.. பே.. என்று வாயைத் திறந்தும் தன் நாக்கை யாரோ? பிடித்து பசை போட்டு ஒட்டியது போல் வாயின் மேல்லண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.

பூவிழியோ? இது என்ன அருவிக்கா டிசைன் டிசைனா? வாயிலே டான்ஸ் ஆடுகிறாள். என்னமோ செய்யட்டும் நாம தூங்கலாம். அவள் பெட்சீட்டை முகம் மறைத்து தூங்க ஆரம்பித்து விட்டாள்.

தேனருவி தன் தூக்கத்தை தொலைத்து விட்டு விடிய விடிய அமர்ந்த வாக்கில் கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து இருந்தவள், மூன்று மணிக்கு தூக்கம் கண்ணைக் கட்ட தூங்கித் தூங்கித் நிமிர்ந்து விழித்துப் பார்த்தவளுக்கு தன்னை மறந்து தூங்கியவள் கட்டிலில் இருந்து கீழே விழுந்து விட்டாள்.

கீழே விழுந்ததும் தன் கால் இரண்டும் ஏதோ ஒரு நிழலிருந்து நீண்டு வந்த கையில் தன்னை இழுத்து அதள பாதளத்தில் கொண்டு செல்வது போல் நினைத்து கத்தி கதறினாள்.

என்னைய விட்ரு நிறைய ஆசைகள் இருக்குது. நிறைய படிக்க வேண்டும். நல்ல வேலைக்குப் போகவேண்டும்.

அவளின் கத்தலுக்கு அந்த நிழலோ எனக்கும் நிறைய ஆசை இருக்கிறது. இத்தனை நாட்கள் அடைந்த கிடந்தேன். நீ என்னை தொட்டு விட்டாய் அதனால் நிறைவேறாத ஆசைகள் அனைத்தும் உன் உடலில் இருந்து நான் நிறைவேற்றிக் கொள்கிறேன்.

நான் அழகாக இருக்கிறேன். நீ கருப்பாக இருக்கிறாய்? எப்படி என் உடலுக்குள் நீ வரமுடியும் நீ பொய் தானே சொல்கிறாய்? ஒரு குருட்டு தையரித்தில் பேசி விட.

ஹா ஹா என்று அறை அதிர சிரித்த நிழல்.. நீ உடல் நான் நிழல் அப்படித்தான் இருக்கும்.
உன் கண்ணுக்கு மட்டும் தான் தெரிவேன். மற்றவர்கள் முன் நீ நான் இருக்கும் திசையைக் காண்பித்தால் அவர்கள் உன்னை பைத்தியம் என்று தான் கூறுவார்கள்.

நீ தயாராக இரு நாளைக்கு அமாவாசை நான் வருவேன் உன்னுள் புதைந்து இந்த உலகை வெற்றி வாகை சூடுவேன்.

ஏய் நிழல் வரும் போது உன் தலை முடியை நான் சொல்லும் சொப்பனா பார்லரில் போய் சேப் மாறாமல் வெட்டி வா.. இந்த நீண்ட நெயில் எல்லாம் வெட்டிவிடு.. கொஞ்சமா பேசியல் செய்து வா.. நீ நிழல் தான் இருந்தாலும்.. நீ இப்படியே அழுக்கா குளிக்காமல் வந்தால் செம கப்( நாற்றம்) அடிக்கிறது.

தேனருவி பயத்தில் இருந்தாலும் அவள் கொஞ்சம் கூட பயமில்லாமல் பேச ஆரம்பித்து விட்டாள். நாளைக்கு அந்த நிழல் வரும் போது பார்த்துக் கொள்ளலாம். இப்போது அதை நன்றாக குழப்பி விட்டு விடலாம் என்று நினைத்து.

ஆமா உங்க வீடு எங்கே இருக்கிறது. நான் எப்படி நீ அந்த புக்கில் இருந்து வந்த நிழல் ஆவி என்று நம்புவது.

என் வீடு தானே கேட்கிறாய் பாரு என்று தன் நெஞ்சுப் பகுதியில் ஒரு பட்டன் வைத்து அழுத்தியது. உடனே அங்கே ஒரு திரை இருந்தது அதில் வந்ததைப் பார்த்து மிரண்டு விட்டாள்.

அங்கே நீ தனியாகவா இருக்கிறாய்? பயமாக இருக்காதா?

பயமா? எனக்கா இல்லவே இல்லை.. நான் இருக்கும் வீட்டில் நிறையப் பேர் வசித்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் ஏற்கனவே நிறைய
ஆசைகளோடு தான் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் தான் இது போல் ஒரு வழியைச் சொன்னார்கள்.

உடலில் நிழலாக இருந்து நம் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். அது தான் இது என்னுடைய முதல் ப்ராஜெக்ட் தெரியுமா?

என்னது ப்ராஜெக்ட் பற்றி எல்லாம் சொல்கிறாய்?

கல்லறைக் கல்லூரி நீ கேள்விப்பட்டது இல்லையா?

என்னது? ஹா ஹா கல்லறைக் கல்லூரியா? நீ பார்க்கத்தான் டெரர் பீஸ் ஆனா சரியான காமெடியா? இருக்கிறது நீ சொல்வது. யார் காதில் பூ சுற்றுகிறாய்?

என்னைப் பார்த்து இப்படி கேலி செய்கிறாயே.. அதற்கு நீ மிகவும் வருத்தப்படப் போகிறாய்? பாரு..
உன் உடலுக்குள் வந்து பிறகு நீ இப்போது பேசுவதிற்கும் சேர்த்து உன்னைத் துன்பப் படுத்துவேன். என்று தன் பற்கள் தெரிய சிரித்து விட்டு கத்தியது. ஆ... உடனே அதனுடைய கண்கள் சிவப்பாக
நெருப்பு கங்குபோல் கரகரவென சுற்றியது தேனருவிக்கு பயத்தை காட்டியது.

ஐயே நீ என்ன கண்ணுல பம்பரம் விடுகிறாய்? தன் பயத்தை புறம் தள்ளியவள் நிழலிடம் பேச.,

என்னது பம்பரமா? என்னைப் பார்த்தால் உனக்கு பயமாக இல்லையா? இரு என் கூரிய நகத்தால் உன் கழுத்தில் ஓட்டை போட்டு உன் உடலில் இருக்கும் இரத்ததைப் பூராவும் உறிஞ்சுகிறேன்.

நீ நாளைக்குத் தான் என் உடலில் இறங்குவேன் சொல்லி விட்டு இப்போது பேச்சு மாறுகிறாய்? நீ சரியான பொய் சொல்லும் பேய் .

இல்லை நான் நல்ல பேய் தான்.

நீ நல்ல பேயாக இருந்தால் என் உடலில் உள்ளே இறங்குவேன் என்று சொல்ல மாட்டாய் தானே. 'தேனருவி நீ சரி டேலண்ட். பேயவே குழப்பி விட்டு விட்டாய்.' என்று அவளின் மனசாட்சி வந்து குறுக்கால செய்தி சொல்ல. "பேய்.. பேய்..' என்று அவளின் குரலில் தேன் ஒழுக பேசினாள். நீ நான் சொல்வது போல் கேட்டால், நீ அழகாக மாறுவதற்கு நான் நிறைய டிப்ஸ் கொடுப்பேன். என்றாள்.

ஏய் நான் பேய் இல்லை நிழல். யாரை ஏமாற்றப் பார்க்கிறாய்?

இல்லை நிழல் சார் உங்களை நான் ஏமாற்றவில்லை.

சார் மோர் எல்லாம் சொல்லாதே. நான் பேசுவது யாருக்கும் கேட்காது. என் உருவமும் தெரியாது. பிறகு உனக்குத் தான் சிரமம்.

நிழல் நான் சொல்ல வருவதை கொஞ்சம் காது கொடுத்துத் தான் கேளுங்களேன்.

இப்போது சொன்னாய் பார். இதே மரியாதை இதில் இருந்து மாறினாய். நான் என்ன செய்வேன் என்றால் என்று அவளின் அருகில் சென்ற நிழல்.. தனது மூச்சை ஆழமாக எடுத்தது. ஆமா நீ என்ன சோப்பு போட்டு குளிக்கிறாய்?

மணக்குதா நிழல். அது சந்தூர் சோப்பு போட்டு குளிக்கிறேன். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மேடம் அது தான் போட்டு குளிக்கிறாங்க அவங்க நடிச்ச விளம்பரம் பார்த்து நான் அவங்களோட பேன் அது தான் அந்த சோப்பு போட்டு குளித்தேன். செம வாசனையா இருக்கிறது தானே? நீயும் போட்டுக் குளித்து பாரேன்.செமயா இருக்கும். உன் முகம் கூட பிரகாசமாக மாறும்.

நிழல் அவளை முறைத்துப் பார்த்தது. நான் உனக்கு தகவல் சொல்லிச் செல்லத் தான் வந்தேன். நாளைக்கு வருவேன் நீ தயாராக இரு. எங்கேயாவது நான் உன் உடலுக்குள் வருவதற்கு தடையாக மந்திரவாதியிடம் மந்திரித்து ஏதாவது தாயத்து கட்டி வீட்டிற்குள் எலுமிச்சை பழம் வைத்து வித்தை காட்டினால் என் கோபத்திற்கு நீ ஆளாக வேண்டும்.

ஐய் நிழல் நீ சொன்னது போல் செய்தால் நீ வீட்டிற்குள் வர மாட்டாயா? செம தெரியுமா? உன் ஐடியா சும்மா லட்டு மாதிரி எனக்கு எடுத்துக் கொடுத்து விட்டாய்?

என்ன இருந்தாலும் நீ கல்லறைக் கல்லூரியில் படிக்கிறாய் தானே?
உன் அறிவே அறிவு தான்.

இந்த தேனருவி தூக்கத்தில் இப்படி உளறிக் கொண்டு இருக்க
அவளையே பார்த்தவாறு பூவிழியும் யசோதாவும் அமர்ந்து இருந்தார்கள்.

ஏண்டி பூவிழி இரண்டு பேரும் ஒரே நேரத்தில் தான் தூங்குனீர்கள் நீ எழுந்து கல்லூரி செல்ல தயாராகி விட்டாய்.

தேனருவி இன்னும் எழுந்து கொள்ளாமல் என்னவோ? உளறிக் கொண்டு இருக்கிறாள். எழுப்புடி.

எழுப்பி விடுவேன் ஆனால் நீ தான் அவளின் முகத்திற்கு அருகில் இருக்க வேண்டும்.

அருவி அக்கா எழுந்து கொள் நேரமாச்சு கல்லூரி செல்ல வேண்டும். என்று தேனருவியின் கால இழுக்க.. தேனருவியோ? நிழல் தான் தன் கால இழுத்து பாதாளத்தில் தள்ளுகிறது என்று பயந்து வியர்வையோடு வேக மூச்சை இழுத்து விட்டு பூவிழி தான் எழுப்புகிறாள் என்ற நினைவு இல்லாமல் நிழல் என்று நினைத்து எட்டி ஒரு உதை விட்டாள்.

பூவிழி கதவின் அருகில் போய் விழுந்தாள். தேனருவி எட்டி உதைத்தது அத்தனை வேகம்.

யாருகிட்ட..

தொடரும்...

மக்களே புதுசா ஒரு ட்ரெண்ட் தான் இந்தக் கதை கொஞ்சம் படித்து ஆதரவு தாருங்கள் ப்பா..
திகில் மற்றும் நகைச்சுவை கலந்து எழுதலாம் என்று இருக்கிறேன்.


நீ உடல் நான் நிழல்....
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top