• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Jan 29, 2025
Messages
111
அத்தியாயம்6.

"சரி நீங்க ஃபுக் ரீட் பண்ணவரைக்கும் போதும்.வாங்க சாப்பிட போகலாம்."என்று அவன் அவளை அழைத்துக் கொண்டு உணவு மேஜையை நெருங்கி இருவரும் ஆளுக்கொரு நாற்காலியில் அமர்ந்தனர்.

அவனே தனுக்கும் உணவு பரிமாறி அவளுக்கும் தட்டில் நான்கு சப்பாத்தியை வைத்து பன்னீர் கிரேவி வைத்து தட்டை அவள் புறம் நகர்த்தி வைத்தான்.

இருவரும் அமைதியாக சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் நடுக்கூடத்தில் போடப்பட்டுள்ள நீள்விருக்கையில் அமர்ந்து விட்டு தத்தமது அறைக்கு சென்று கதவை அடைத்தனர்.

இன்று அதிகாலையிலே இதழருவிக்கு முழிப்பு தட்டிவிட்டது.சோம்பல் முறித்தபடி கட்டிலில் எழுந்து அமர்ந்தாள்.கடிகாரத்தை பார்க்க அது நான்கு முப்பது என்று காட்டியது.

மீண்டும் உறங்க முயற்சித்தாள்.ஆனால் அவளுக்கு உரக்கம் வரவில்லை.அமைதியாககுளியலறைக்குள் சென்று குளித்து விட்டு மாற்றுடைக்கு தாவி வெளியே வந்தாள்.

சாமி அறைக்கு சென்று விளக்கேற்றி கடவுளை மனமாற வணங்கி விட்டு சமையலறைக்குள் வந்தவள் கைபேசியில் யூடியூப் உதவியுடன் காலை உணவை தயாரிக்க ஆரம்பித்தாள்.

இன்று தாமதமாகத்தான் எழுந்தான் இதழரசன்.கடிகாரத்தை பார்த்தவன் அவசரமாக காக்க குளியலை போட்டு விட்டு காக்கி உடைகளுக்கு தாவி வெளியே வந்தவன் நாசியில் இதழருவி சமையலின் வாசம் மூக்கை துளைத்தது.

'என்ன என்ன சமையல்ன்னு தெரியல?ஆனா வாசம் மட்டும் ஆளயே தூக்கதே.நாம சமைக்கல.யாரு சமைச்சிருப்பா?'என்று மனதில் நினைத்தபடி உணவு மேஜையை அடைந்து சமைத்து வைத்திருந்த ஒவ்வொரு பாத்திரத்தையும் திறந்து பார்க்க ஆரம்பித்தேன்.

"சாப்பாடு, சாம்பார், பொறியியல்,ரசம்."என்று அவன் மெதுவாக சொல்லி முடிக்கும் தருவாயில் பொறித்த அப்பளம் அடங்கிய தட்டுடன் சமையலறையிலிருந்து இதழருவியை பார்த்து துனுக்குற்றவன்

"நீங்கதான் இதெல்லாம் சமைச்சிங்களா!"என்று ஆச்சரியமாக அவளிடம் கேட்டிருக்க

"ஆமாங்க."

"எப்ப எந்திரிச்சிங்க?"

"காலைல நாலு முப்பது மணிக்கெல்லாம் எந்திரிச்சுட்டேன்.தூக்கம் வரல.அதுனால நானே சமைச்சுட்டேன்."சிறிது தயக்கத்துடன் கூறியிருந்தாள் இதழருவி.

"ஓ..சரி இனிமேல் இப்படி நேரத்துல எந்திருச்சு தனியே வேலை செய்யாதிங்க.எனக்கு போன் பண்ணுங்க.நானும் வேலையை ஃசேர் பண்ணிக்கிறேன்."அவனின் குரலில் உள்ள மென்மை அவள் மனதை அசைத்துதான் பார்த்தது.

"தேங்க்ஸ்."என்று சிறு குரலில் கூறியவன் உணவு மேஜையை நெருங்கி நாற்காலியை இழுத்து அமர்ந்து இரண்டு தட்டில் உணவை பறிமாறினான்.

"ஏங்க ஒரு நிமிஷம் சாப்பிட வேண்டாம்."என்று அவசரமாக இதழருவி மொழிந்தபடி சமையலறையை நோக்கி ஓடியவள் கால் இடறி கீழே விழுந்துவிட இவன் தன்னை மறந்து "இதழ்.."என்று கத்தியபடி அவளை நோக்கி ஓடினான்.

"என்ன இதழ்..இப்படியா அஜாக்கிரதையா இருக்கிறது?"என்றபடி அவளை நெருங்கி அவளை அள்ளி தூக்கி தனதறைக்கு கொண்டு சென்றவன் நொடியில் சுதாகரித்து அவளை அவளின் அறைக்கு கொண்டு சென்று படுக்கையில் கிடத்தினான்.

"உங்களுக்கு கால் ஏதும் சுலிக்கிருக்கான பாருங்க?"என்று அவன் கூறவும்

தனது இரண்டு கால்களை தரையில் ஊன்றி எழுந்து அமர்ந்தவள் அவன் முன்பே தனக்கு எதுவும் ஆகவில்லை என்று நன்றாக நடந்து அவனுக்கு உணர்த்தியிருந்தாள்.

அதைப் பார்த்ததும்தான் அவனுக்கு நிம்மதியாக மூச்சு விட முடிந்தது."சரிங்க எனக்கு டியூட்டிக்கு நேரமாச்சு.நான் மதியம் வந்து சாப்டரேன்.நீங்க மறக்காம சாபிட்டு டேபிலட் போட்டுக்குங்க.நான் வரேன்."என்று அவளிடமிருந்து விடைபெற்று வீட்டிலிருந்து வெளியேறினான் இதழரசன்.

'நான் விழுந்தப்போ அவர் பதறனுது அப்புறம் உரிமையா பேசனது.முக்கியமா என்ன இதழ்னு கூப்பிட்டதுன்னு இதெல்லாம் வெச்சு பார்க்கும் பொழுது அவருக்கு என்ன நல்லா தெரிஞ்சிருக்கு.எப்படி அவர்கிட்ட கேட்குறது?

வேண்டாம் நாமளே கண்டுபிடிக்கலாம்.வீடு முழுக்கா தேடலாம்.நாமலே தெரிஞ்சிக்கலாம்.அதற்கு முதல்ல மேலே இருக்கர ரூம்ல தேடி பார்த்துவிட்டு கீழே வரலாம்.'என்று மனதில் நினைத்தபடி வெளியே வருவதற்கும் அரசி அவள் வலது தோள் பட்டையில் வந்து அமர்வதற்கும் சரியாக இருந்தது.

"ஹே.. அரிசி இப்பதான் வந்தியா?வா உனக்கு கொய்யா பழம் வெட்டி தரேன்."என்றபடி சமையலறைக்குள் வந்தவள் பழக்கூடையில் உள்ள கொய்யா பழத்தை வெட்டி அரசிக்கு கொடுத்துவிட்டு இதழரசன் அவனுக்கு உணவை பரிமாறியிருந்த தட்டில் இவள் தன்னையறியாமல் சாப்பிடத் தொடங்கினாள்.

'நல்ல வேலை தட்டுல பரிமாறின சாப்பாட்ட மூடி வெச்சுட்டுதான் போயிருக்காரு.'என்று மனதில் நினைத்தவள் அருகில் உள்ள கண்ணாடி குவளையில் உள்ள தண்ணீரை எடுத்து பருக ஆரம்பித்தாள்.

அரசி வந்ததும் தான் என்ன நினைத்திருந்தோம் என்பதையே மறந்து போயிருந்தாள் இதழருவி.

ராஜேந்திரன் இல்லம்,

"சீக்கிரமா அதையெல்லாம் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கரத பாருங்க.லேட் பண்ண வேண்டாம்.இப்பெல்லாம் போலிஷ் கெடுபிடி பயங்கரமா இருக்கு."என்று தன் அலுவுல அறையில் கைபேசியில் யாரிடமோ போசியபடி குறுக்கும் நெடுக்குமாக நடை போட்டுக்கொண்டிருந்தார் ராஜேந்திரன். அலுவுலக அறையின் கதவு தட்டப்படவும் அதில் எரிச்சலானவர் "நான் அப்புறம் பேசறேன்."என்றபடி அழைப்பை கட்செய்தவர் கதவை திறந்தார்.

"உனக்கு எத்தனை தடவ சொல்ரது நான் என்னோட அலுவலக அறையில இருக்கும் போது இப்படி கதவ தட்ட வேண்டாம்னு."என்று தன் மனைவியிடம் எரிந்து விழுந்தார்.

"இல்லிங்க ஒரு முக்கியமான விசயம்.."என்று பரிதவித்து பேசினார் நாச்சியார்.

"என்ன?"என்று சீற்றமாக கோட்டார்.

"இல்லிங்க நம்ம பொண்ணு சாதனா நேத்து நைட்டும் வீட்டுக்கு வரல.காலையலும் வரல.போன் பண்ணா போன எடுக்கலிங்க.எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க."என்று பதட்டமாக கூறினார் நாச்சியார்.

"ம்..அவ நிவேதாவோட கேரளாக்கு ட்ரிப் போயிருக்கா.மூனு நாள்ல வந்துருவா.சரி நீ போ எனக்கு வேலை இருக்கு.நானா ரூம விட்டு வெளியே வரவறைக்கும் என்ன தொந்தரவு பண்ணாதா."என்று சிறு குரலில் எச்சரித்து விட்டு தன் அலுவுலக அறையை சாத்திக்கொண்டார்.

'வரட்டும் அவள பேசிக்கிரேன்."என்று மனதில் நினைத்தவர் சமையலறையை நோக்கி சென்றார் நாச்சியார்.

கேரளா(வர்கலா)

வானத்தை தொடும் கடல்.கடலின் எதிர்திசையில் பீச் ரிசார்ட்.ஆங்காங்கே தென்னை மரங்கள்.பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது அவ்விடம்.

கடல் அலைகளை ரசித்தவண்ணம் ஃகாபியை அருந்திக் கொண்டிருந்தாள் சாதனா.

"ஏய் சாதனா உன்ன எங்கெல்லாம் தேடறது?ஆனா நீ இங்க நின்னு ஹாயா ஃகாபி குடிச்சிட்டிருக்க?"என்று குறைபட்டுக்கொண்டாள் நிவேதா.

"நீயே பாருடி.எதிர்பக்கம் கடல்.நாம ரிசார்ட்டோட கார்டன்ல நின்னிட்டு இருக்கோம்.இங்க நின்னு கடல் அலைகள ரசிச்சிட்டு ஃகாபி குடிக்கிற ஃபீலே தனி.

அது சரி.உனக்கு இதெல்லாம் எங்க புரியப்போகுது.ஓகே நான் ஃகாபி குடிச்சிட்டு வரேன்.நீ ரூம்க்கு போனாலும் சரி.இல்ல நீயும் ஃகாபி ஆர்டர் பண்ணி இங்க நின்னு ஃகாபி குடிச்சாலும் சரி."எனக்கூறியவள் இயற்கை அழகை உள்வாங்கி ரசித்தபடி ஃகாபியை அருந்த ஆரம்பித்தாள் சாதனா.

"எல்லாம் எந்நேரம்டி."என்றபடி தாங்கள் தங்கியிருந்த அறையை நோக்கி நடை போட்டிருந்தாள் நிவேதா.

நிவேதா சென்று சிறிது நேரம் கழித்து சாகித்தியன் ரிசார்ட்டின் முன்பகுதிக்கு வந்தான்.

இயற்கை அழகை ரசசித்தான்.டீசர்ட் சார்ட்ஸ் அணிந்த அவனை கண்டு உதட்டை கோணலாக வளைத்தபடி தன் பார்வையை திருப்பிக் கொண்டாள் சாதனா.

'திமிர்பிடிச்சவன்.'என்று மனதில் நினைத்தபடி அவள் திரும்பி தான் தங்கியிருந்த அறையை நோக்கி செல்லும் வேளையில் அவளை சாகித்தியன் பார்த்து விட்டு வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.

இவளுக்கு கோபம் மூக்கிக்கு மேல் வந்தது.அதெப்படி இவன் தன்னை பார்த்து சிரிக்கலாம் என்று ஈகோ வேறு.

"ஹலோ.. என்ன திமிரா? எதுக்கு இப்படி கக்கபுக்க ன்னு சிரிக்கர?"தற்பொழுது கோபத்தில் பண்மையை மறந்து ஒருமைக்கு தாவியிருந்தாள்.

"நீ என்ன பையத்தியமா?அதனாலதா இப்படி சிரிக்கிரியோ?"சந்தேகமாக கேட்டாள்.

"கண்டிப்பா சொல்லனுமா?"சிரிப்பிற்கிடையில் கேட்டான் அவன்.

"சொல்லு."

"அது உன்ன பைத்தியாகரியா நினைச்சு பார்த்தேன்.பக்கன்னு சிரிப்பு வந்திருச்சு.நீயே நினைச்ச பாரு உன்ன பைத்தியகாரியா உனக்கு உன்னையும் மீறி சிரிப்பு வரும்."எனக்கூறி அவன் மேலும் சத்தமாக சிரிக்கவும் இவளுக்கு பொறுமை தீர்ந்து போனது.

அனல் கக்கும் பார்வையுடன் அவனை நெருங்கியவள் அவனை அடிக்க தன் வலது கையை ஓங்க அவனோ அவளின் கையை லாவகமாக பிடித்தவன் "இந்த அடிக்கி வர வேலையெல்லாம் வேண்டாம்.அப்புரம் சேதாரம் உனக்கு தான் பார்த்துக்கோ.

ஒரு பொண்ணா நீட்டா ட்ரெஸ் பண்ணு.அத விட்டுட்டு சின்ன வைசுல போடவேண்டிய கவுன இப்ப போட்டுட்டு திரியாது.

இரண்டு பொண்ணுங்க தனியா வந்திருக்கிங்க.கவனமா இருந்துட்டு பார்த்து பத்திரமா வீட்டுக்கு போங்க."என்று சிறுகுரலில் எச்சரித்து விட்டு அவ்விடத்தை விட்டு அகன்றிருந்தான் சாகித்தியன்.

'இவனுக்கு என்ன திமிர் இருந்தா என் கையை பிடித்து எனக்கே அட்வைஸ் பண்ணிருப்பான்?'என்று மனதில் நினைத்தபடி தான் தங்கியிருந்த அறையை நோக்கி நடை போட்டிருந்தாள் சாதனா.

அறைக்குள் வந்தவள் தொம் என்று கதவை சாற்றி விட்டு அங்குள்ள குஷன் சோபாவில் பொத்தென்று அமர்ந்தாள்.

"யாரு மேல கோபம்?"என்றபடி அவளின் அருகில் உள்ள மற்றொரு குஷன் சோபாவில் அமர்ந்திருந்தாள் நிவேதா.

நடந்ததை தன் தோழியிடம் சுருக்கமாக கூறினாள் சாதனா.அதைக்கேட்ட நிவேதாவுக்கும் சிரிப்பு வரத்தான் செய்தது.அவளும் சாதனா பையத்தியகாரியாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்ததுமே சிரிப்புதான் வந்தது.சிரிப்பை அடக்கி வைக்க தான் முயன்றாள்.

ஆனால், அது அவளாள் இயலாமல் போனது.அவள் வெடித்து சிரிக்க ஆரம்பித்துவிட

"நீயெல்லாம் ப்ரண்ட்ன்னு உன்கிட்ட வந்து சொன்னேன் பார்த்தியா? என்ன சொல்லனும்?"என்று சாதனா கோபித்துக் கொள்ளவும்தான் தன் சிரிப்பை கட்டுப்படுத்தி விட்டு

"சாரி டி.. தப்பா எடுத்துக்காதா.நான் உன்ன ஹர்ட் பண்ணணும்னு சிரிக்கல.எவ்வளவு ட்ரை பண்ணியும் சிரிப்ப அடக்க முடியலடி.சாரிடீ."என்று வருத்தமாக நிவேதா சொல்லவும்

"பரவால்வடி.நீ சிரிச்சது கூட எனக்கு பரவால்ல.ஏனா நீ என் தோழி.ஆனா அவன் யாருடி என்ன அப்படி நினைச்சு சிரிக்க? இங்கிருந்து போரதுக்குள்ள அவனுக்கு சரியான பாடத்த கத்து தருவேன்."என்று சபதமாக கூறியவளை பார்க்க பார்க்க நிவேதாவிற்கு சற்று பயமாக இருந்தது.

"இப்படியெல்லாம் பேசாத சாதனா.வந்த இடத்தல பிரச்சனை வேண்டாம்."

"ம்.."

அப்போதுதான் நிவேதாவால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

"சரிடி.. நீ போய் குளிச்சிட்டு கிளம்பு.நாம டிபன் சாப்பிட்டு சுத்தி பார்க்க போகலாம்."என்று நிவேதா சொல்ல அமைதியாக குளியலறைக்குள் சென்று கதவை சாற்றினாள் சாதனா.

தோழிகள் இருவரும் கிளம்பி தங்களின் அறையை விட்டு வெளியே வந்தனர்.அங்குள்ள ஹோட்டலில் தங்களுக்கான உணவை ஆர்டர் செய்துவிட்டு தங்களுக்கான மேசையை தேர்வு செய்து ஆளுக்கொரு இருக்கையில் அமர்ந்தனர்.

அதே ஹோட்டலுக்கு தான் சாகித்தயனும் கதிர் சாப்பிட வந்தார்கள்.

நேராக வந்தவர்கள் சாதனா நிவேதா அமர்ந்திருந்த மேசைக்கு வந்தவர்கள் அவர்களுக்கு எதிரில் உள்ள இரு நாற்காலிகளில் ஆளுக்கொரு இருக்கையில் அமர்ந்தனர்.

"ஹலோ மிஸ்டர் இங்க நாங்க உட்கார்ந்து இருக்கோம்."என்று எரிச்சலுடன் பேசினாள் சாதனா.

"ஹலோ ஒரு டேபிள்ள நாலு பேர் உட்காரலாம்.இங்கதான் நாங்க சாப்பிட இடம் கிடைச்சது.எல்லா உணவு மேசையில ஃபுல்லா இருக்கு.இல்லின்னா நாங்க ஏன் இங்க
வந்து உட்கார போறோம்? உங்களுக்கு பிடிக்கலன்னா நீங்க எந்திரிச்சு போலாம்?"தோள்களை குலுக்கி தெனாவட்டாக கூறினான் சாகித்தியன்.

தொடரும்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top