• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Jan 29, 2025
Messages
87
அத்தியாயம் 30.(நிறைவு அத்தியாயம்.)

இருபது நாட்கள் கழிந்த நிலையில்,

அது ஒரு மாலை நேரம்.தன் அறைக்குள் ஜன்னல் வழியாக தூரத்தில் சூரியன் மறைவதை பார்த்துக் கொண்டிருந்தாள் சாதனா.அவளின் கைபேசி அவளுடைய கவனத்தை தன் திசைக்கு திருப்பியிருந்தது.

மெலிதான புன்னகையுடன் அந்த அழைப்பை ஏற்று "சொல்லுங்க சாகித்தியன்."என்று இயல்பாக பேசியிருந்தாள் சாதனா.

"நாளைக்கு நம்ம கல்யாணத்துக்கு துணி எடுக்க போகனும்.இங்க எல்லாரும் நம்ம துணிக்கடைக்கு வந்துருவோம்.

நீ அத்தைய அழைச்சிட்டு அண்ணா அண்ணி கூட நம்ம துணிக்கடைக்கு சார்ப்பா பத்து மணிக்கெல்லாம் வந்துடுங்க."என்று கூறி விட்டு மறுமுனையில் அவன் அமைதியாக இருக்கவும்

"இந்த விசயத்தை என்கிட்ட சொல்லதான் எனக்கு போன் பண்ணிங்களா?"

"....."

"ஹலோ.. டாக்டர் என்ன நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?"என்று இயல்பாக சாதனா பேசவும்

"அந்த விசயத்திற்காக மட்டும் போன் பண்ணல.உன்கிட்ட பேசனும்னு தோணுச்சு.ஆனா என்ன பேசுவது என்று தெரியாமல் யோசிச்சிட்டு இருக்கேன்."என்று சாகித்தியனும் தற்பொழுது இயல்பாக பேச ஆரம்பிக்க

"அப்புறம் டாக்டருக்கு கேரளாவில் உள்ள வர்கலா ரொம்ப பிடிக்கமோ?"என்று வேண்டும் என்றே சாதனா அவனை சீண்டவும்

அவனோ "ஆமா.எனக்கு வர்கலாவில் என் மனைவி கூட நேரம் செலவிடறது ரொம்ப பிடிக்கும்.

போன தடவை மாதிரி நீ என்கோட சண்டை போட்டுட்டு உன்னோட உயிர் தோழியோட தனியா ரூம் எடுத்து ஸ்டே பண்ணாதிங்க மேடம்."என்று அவன் சிரித்தபடி சொல்லவும்,

அவனுடன் இணைந்து வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்திருந்தாள் சாதனா.

"ஆமா நான் கேட்கனும்னு நினைச்சேன்.உன் ப்ரண்ட் ஸ்வேதாவ சந்திச்சு பேசினியா?"

"இல்ல.எங்க அப்பா பிரச்சனைக்கு பிறகு அவ என்கிட்ட அவ சரியா பேசரது இல்ல.இப்ப எங்க அப்பாவும் உயிரோட இல்லை."என்று உள்போன குரலில் சொல்லியவளின் விழிகளில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

"ஹோ.. சாரி.உங்க அப்பாவ ரொம்ப மிஸ் செய்கிறாயா? நான் வேற உனக்கு உங்க அப்பா ஞாபகம் வருகிற மாதிரி பேசிட்டேன்டி."என்று கவலையாக சாகித்தியன் பேசியிருக்க

"எங்க அப்பா அந்த தப்பா செய்யாம இறந்து போயிருந்தா நான் ரொம்ப ரொம்ப மிஸ் செய்திருப்பேன்.இப்ப நான் அழுதது அவருக்காக நிச்சயமா இல்லை.

எத்தனையோ அப்பாவி பெண்களோட வாழ்க்கையை சீர் குலைய வைத்துவிட்டாரே..செய்யவே கூடாத ஒரு பாவத்தை செய்துவிட்டாரே இதெல்லாம் நினைத்து பார்க்கும் பொழுது விழிகளில் கண்ணீர் வந்துடுது."என்று உள் ஒலித்த குரலில் சாதனா சொல்லவும்

"கடந்த காலம் கடந்தது கடந்ததுதான் சாதுமா.கடந்த கால இனிமையான நினைவுகள மட்டும் நிகழ்காலத்தில நினைச்சு பாரு.கசப்பான நினைவுகள மறக்க முயற்சி பண்ணு.

ஆமா உனக்கு சாப்பிட என்ன பிடிக்கும்? என்ன பிடிக்காதன்னு நான் சொல்லுட்டுமா?"என்று அவளை திசை திருப்பவதற்கு பேச்சை மாற்றி இருந்தான் சாகித்தியன்.

அது அவளுக்கும் புரிந்துதான் இருந்தது."சரி சொல்லுங்க."என்று அவள் இயல்பாக பேசவும் தான் கைபேசியின் மறுமுனையில் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

"உனக்கு இயற்கை சுற்றுலா தளங்கள் ரொம்ப பிடிக்கும். இரவில் காருல லாங் டிரைவ் போறது ரொம்ப பிடிக்கும்.

அப்புறம் நான்வெஜ் விட வெஜிடேரியன் சம்பந்தப்பட்ட உணவுகள விரும்பி சாப்பிடுவே.

இன்னும் உனக்கு நிறையா ஆசைகள் கனவுகள் இருக்கன்னு எனக்கு தெரியும்.அதை நான் இப்ப சொல்ல மாட்டேன்.

நம்ம கல்யாணத்துக்கு பிறகு உன்னோட ஆசைகள், கனவுகள், லட்சியங்கள் நிறைவேற நிச்சயமாக நான் உறு துணையா இருப்பேன்."என்று தீர்க்கமான குரலில் அவன் கூறி முடிக்கவும்

"எப்படி நீங்க எனக்கு உறுதுணையாக இருக்க முடியும்?"என்று நமட்டு சிரிப்புடன் அவள் கேட்கவும்

"ஏன்?" கைபேசியின் மறுமுனையில் குழப்பமாக கேட்டிருந்தான் சாகித்தியன்.

"பின்ன எப்ப பார்த்தாலும் உங்க முதல் மனைவிக்கு உறுதுணையா இருக்கர நீங்க உங்க இரண்டாவது மனைவியா வரப்போர எனக்கு எப்படி உறுதுணையா இருக்க முடியும்?"

"ஹோ..சாது என்ன உளர்ற? இதுவரைக்கும் நான் எந்த பொண்ணையும் திரும்பி கூட பார்க்கல."என்று நிதர்சனத்தை படு சீரியஸாக தீவிரமான குரலில் சாகித்தியன் கூறவும்

"ஹலோ.. டாக்டர் நீங்க இந்த விசயத்தல அந்த அளவுக்கு நீங்க வொர்த் கிடையாதுன்னு எனக்கு ரொம்ப நல்லா தெரியும்.

நான் முதல் மனைவின்னு சொன்னது உங்க மருத்துவமனை.எப்ப பார்த்தாலும் மருத்துவமனையிலயே கதின்னு இருக்கிறதா நான் கேள்வி பட்டேன்.அதனால சொன்னேன்."என்று குறும்புடன் சாதனா சொல்லவும்

"ஓ... சாதுமாக்கு கொஞ்சம் குறும்புதான்.ஆமா.. நான் மருத்துவமனையிலயே கதின்னு இருக்கறத நீங்க யார் சொல்லி கேள்வி பட்டிங்கின்னு நான் தெரிந்து கொள்ளலாமா?"என்று சின்ன சிரிப்புடன் சாகித்தியன் தன்னவளிடம் கேட்டிருக்க

"பதிலை தெரிந்து கொண்டே என்னிடம் கேட்காதிங்க டாக்டர்."என்று சிரித்தபடி சாதனா கூறவும், சாகியத்தன் அவளுடன் இனைந்து கைபேசியின் மறுமுனையில் சத்தமாக சிரித்து வைத்தான்.

"ஹலோ டாக்டர்.. நீங்க நாளைக்கு லீவ் போடுவிங்களா? இல்ல எனக்கு மருத்துவமனை ரொம்ப முக்கியம்னு ஹாஸ்பிடல் போயிருவிங்களா?"என்று நமட்டு சிரிப்புடன் சாதனா கேட்டிருக்க,

"ஹே.. நாட்டி.. அதெல்லாம் லீவ் போடுவேன்.எனக்காக இல்லின்னாலும் உனக்காக இனிமேல் லீவ் போடுவேன்.இன்னைக்கு புதுசா இரண்டு ஹார்ட் சர்ஜரி மருத்துவர்கள் நம்ம மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்திருக்காங்க.

அதனால நோ ப்ராப்ளம்.அப்புறம் சொல்ல மறந்துவிட்டேன்.அண்ணி இன்னைக்கு லேட்டாத மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வருவாங்க.அண்ணா கிட்ட சொல்லி அவங்கள பிக் பண்ண வர சொல்லிடு."என்று தன்மையாக அவளிடம் சொல்லவும்

"ம்.. நான் இதழரசன் மாமாகிட்ட மறக்காம சொல்லிடரேன் போதுமா."என்று அவள் சிரித்தபடி கூறவும்

"ஓகே டியர்.நான் ரவுன்ஸ் போகனும்.நாளைக்கு நேர்ல மீட் பண்ணலாம்."என்றபடி அழைப்பை கட் செய்திருந்தான் சாகித்தியன்.

ஆனந்தி இல்லம்,

"என்னங்க இப்பெல்லாம் அக்கா அதிகமாக என் கிட்ட பேசரது இல்லை.யார் கூடயும் பேசாம அறையே கதின்னு இருக்காங்க.

சாப்பிடுவதற்கு மட்டும் அறையிலிருந்து வெளியே வராங்க.அமைதியா சாப்பிட்டு மறுபடியும் அவங்க அறைக்கே சென்று விடுகிறார்."என்றபடி ஆனந்தி டீ போட ஆரம்பிக்கவும்

"என்னால உன்ன மாதிரி அவங்க செய்த தவறை மனசல வெச்சுட்டு வெளியே இயல்பாக பேச முடியவில்லை ஆனந்தி.

அவங்க செய்த எல்லா விசயத்தையும் சொல்லி.. ஏங்க அண்ணி இப்படி செய்தீர்கள்?இப்படி செய்ய உங்களுக்கு எப்படி மனசு வந்தது ன்னு கேட்டேன்."என்று சாந்தகுமார் சொல்லவும்

"ஏங்க நான் உங்க கிட்ட அவ்வளவு தூரம் கேட்க வேண்டாம்னு சொல்லி ஏன் கேட்டிங்க? அவங்க முகமே இந்த பத்து நாளா சரியே இல்ல.

இப்பெல்லாம் பூர்ணா அவங்ககூட சரியா பேசறது கிடையாது.ஒரு வேளை நீங்க அக்காகிட்ட பேசிட்டு இருக்கும் போது பூர்ணா கேட்டிருப்பான்னு எனக்கு தோனுதுங்க."என்றபடி டீ குவளையில் ஊற்றி தன் கணவனிடம் கொடுத்து விட்டு வேக நடையில் செந்தாமரை அறைக்கு சென்றிருந்தார் ஆனந்தி.

செந்தாமரை மெளனமாக கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பதை பார்த்து பதறிப் போனவராக "ஏங்க அக்க இப்ப எதுக்காக அழுதுட்டு இருக்கிங்க?"என்று ஆனந்தி கேட்கவும்

"எல்லாத்துக்கும்
ம்.என்ன எவ்வளவு நம்பின நீ.உனக்கு துரோகம் இழைத்ததற்கு சேர்த்துதான் அழுதுட்டு இருக்கேன்.
 
Joined
Jan 29, 2025
Messages
87
முடிஞ்சா என்னை மன்னிச்சிடு.நீ என் மகன பிரிச்சு உன் தம்பி வீட்ல வீட்டோட மாப்பிள்ளை அனுப்பிட்டன்னு தப்பா நினைச்சு உன் இரண்டு மகன்களையும் உன்னிடம் இருந்து பிரிக்கனும்னு புத்தி கெட்டுப் போய் இப்படியெல்லாம் பண்ணிட்டேன்."என்று தழுதழுத்த குரலில் ஆனந்தியின் இரு கரங்களை பற்றி மெளனமாக கண்ணீர் சிந்த ஆரம்பித்தார் செந்தாமரை.

"அக்கா கடந்த காலத்தை மறந்து விடலாம்.இனிமேல் நடப்பதை பார்க்கலாம்.நீங்கதான் முன்னாடி நின்னு சாகித்தியன் சாதனா கல்யாணத்தை நடத்தி வைக்க வேண்டும்.

எந்திரிச்சு வெளிய வாங்க.சாகித்தியன் சாதனா கல்யாணப் பத்திரிக்கை அடிக்க கொடுத்திருந்தோம்.கொஞ்ச நேரத்தில் பத்திரிக்கை வீட்டுக்கு வந்துவிடும்.
நாம்தான் பத்திரிக்கை வைக்க போகனும்."என்றபடி வலுக்கட்டாயமாக செந்தாமரை நடுக் கூடத்திற்கு அழைத்து வந்தார் ஆனந்தி.

நடுக் கூடத்தில் நீள்விருக்கையில் அமர்ந்திருந்த பூர்ணா தன் தாயை பார்த்ததும் எழுந்து தன் அறைக்கு செல்ல முயலும் போது,

"பூர்ணா.. என்னாச்சு? இவ்வளவு நேரம் இங்குதான் அமர்ந்து இருந்தாய்?எதுக்கு அம்மாவ பார்த்ததும் அறைக்கு போற? நானும் உன்ன கவனிதாது கொண்டு தான் இருக்கேன்.

அக்கா விடம் நீ இப்பெல்லாம் முகம் கொடுத்து பேசறது கிடையாது.நீ பேசாம இருந்தா அவங்களுக்கு வருத்தமா இருக்காதா?"என்று ஆனந்தி நிதானமாக சொல்லவும்

"சித்தி.. உங்களுக்கு எல்லாம் தெரிந்து அவங்களுக்கு சாதகமா பேசரது எனக்கு வேடிக்கையா இருக்கு."என்று விரக்தியான குரலில் பூர்ணா சொல்லவும்

"பூர்ணா அவங்க தவற உணர்ந்துட்டாங்க.அதை முதல்ல நீ புரிஞ்சுக்கனும்.உனக்கே தெரியும் உன் தம்பி வினய்ய விட அக்கா உன் மேல்தான் அதிகமா பாசத்தை வைத்திருக்கிறார்கள்.
அவங்களோட மனச நோகடிக்க வேண்டாம் பூர்ணா."என்று நிதர்சனத்தை ஆனந்தி புரிய வைக்கவும்

"உங்கள வருத்தப்பட வைத்ததற்கு சாரிம்மா.உங்களிடம் நார்மலா பேச எனக்கு கொஞ்சம் டைம் தேவைப் படுகிறது.

அந்த டைத்த நீங்க கொடுப்பிங்கன்னு நான் நம்புகிறேன்.அப்புறம் இந்த விசயம் வினய்க்கு தெரியாது.நீங்க தெரியாம அவன் கிட்ட உளறி வெச்சிடாதிங்க."என்று தன் தாயை பார்த்து கூறிய பிறகுதான் தன் அறையை நோக்கி நடை போட்டிருந்தாள் பூர்ணா.

அன்றிரவு அப்படியே கழிந்தது.

மறுநாள் காலை பத்து மணி,

மொத்த குடும்பமும் அவர்களின் சொந்த ஜவுளிக்கடையில் குழுமியிருந்தனர்.சாதனாவிற்கு சாகித்தியன் மூகூர்த்த புடவையை தேர்ந்தெடுப்பதில் ஒரு புறம் முன்புறமாக இருக்க

மறுபுறம் இதழரசன் தன் மனைவிக்கு நான்கைந்து பட்புப்புடவைகளை தேர்ந்தெடுப்பதில் பிசியாக இருக்க, மற்றவர்கள் தங்களுக்கு புத்தாடை தேர்வு செய்வதில் பிசியாக இருந்தனர்.

சாதனா சாகித்தியன் கல்யாண வேலையில் மொத்த குடும்பமும் பிசியாக இருந்தார்கள்.

மொத்த குடும்பமும் ஒரு பக்கம் கல்யாண வேலையில் படு பிசியாக இருந்ததால்.. மணமக்கள் இருவரும் படு கூலாக கைபேசியில் ஒரு புறம் கடலை போட்டுக் கொண்டிருந்தனர்.

பதினைந்து நாட்கள் கழிந்த நிலையில்,
அந்த மிகப்பெரிய மண்டபம் சொந்த பந்தங்களுடன் நிரம்பி வழிந்தது.

மணமேடையில் சாகித்தியன் தன் வருங்கால மனைவியை எதிர்பார்த்தபடி ஐயர் கூறும் மந்திரங்களை கூறிக்கொண்டிருந்தான்.

சில நிமிடங்கள் ஐயர் பெண்னை அழைத்து வாங்கோ என்று கூறியதும் நான்கு மாத மேடிட்ட வயிறுடன் பூர்ணா சாதனாவை கல்யாண மேடைக்கு அழைத்து வந்து சாகித்தியன் அருகில் அமரவைத்தாள் தன் கணவனுடன் சேர்ந்து நின்றாள்.

இதழரசன் தன் மனைவியின் தோளில் கைபோட்டபடி மணமக்களுக்கு பின்பு மகிழ்ச்சியாக நின்றிருந்தான்.

சாகித்தியன் சாதனாவின் அழகில் தன்னை மறந்து அவளையே பார்த்திருக்க,

"தம்பி.. மாங்கல்ய நாணை வாங்கி அவங்க கழுத்துல அணிவித்து மூன்று முடிச்சு போட்டு நிதானமா உங்க மனைவியை ரசிக்கலாம்."என்று ஐயர் சொல்லவும்,

சுயநினைவு பெற்றவன் போல் அவரிடமிருந்த மாங்கல்ய நாணை சாதனாவின் கழுத்தில் அணிவித்து மூன்று முடிச்சிட,

குடும்ப உறுப்பினர்கள் அவர்களுக்கு பின் மகிழ்ச்சியாக நின்றபடி அர்ச்சனை தூவும் பொழுது அழகாக ஃபோட்டோ கிராபர் படம் பிடித்திருந்தார்.

முற்றும்.
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top