• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Jan 29, 2025
Messages
87
அத்தியாயம் 29.

சந்திரன் கதிரவனுக்கு விடை கொடுத்து மேகதாயிற்குள் மறைய ஆரம்பித்திருந்த நேரம் அது.

காவல் நிலையத்தில்,

அந்த காலை நேரத்திலயே செய்தித்தாள் மற்றும் பத்திரிகை நபர்கள் இதழரசனிடம் பேட்டி எடுக்க காவல் நிலையத்தின் முன்பு குவிந்திருந்தனர்.

"சார்.. நீங்க குற்றவாளிகள கண்டுபிடிச்சது.அதுல பிரபல பிஸ்னஸ் மேன்ல ஒருவர் இறந்தது.இன்னும் இரண்டு பேர் கோமாக்கு போயிட்டதுன்னு நாங்க எல்லாத்தையும் தெரிந்துதான் இங்க வந்திருக்கோம்.

"காவல் துறை ஒரு பக்கம் குற்றவாளிகள கை செய்துட்டு இருந்தாலும் கூட மறுபக்கம் இந்த மாதிரி தவறுகள் தொடர்ந்து நடந்துட்டுதான் இருக்கு.

குறிப்பாக பெண்களுக்கு.அவங்களுக்கு நீங்க என்ன சொல்ல வரிங்க?"என்று பத்திரிக்கை நபர்களில் ஒருவர் முன் வந்து தனது கேள்வியை முன்வைக்க,

இதழரசன் தன் தொண்டை மெலிதாக செருமிய படி செய்தித்தாள் பத்திரிக்கை நபர்கள் இடம் பேச ஆரம்பித்திருந்தான்.

"ஏற்கனவே சொன்னதுதான்.பெண்கள் எப்பொழுதும் அவங்களோட கைப் பையில் பணம் இருக்குதோ இல்லையோ நிச்சயமாக மிளாக தூள்,பெப்பர் ஸ்ப்ரே ஜாமின்ட்ரி பாக்ஸில் பயன்படுத்தாத ஒரு காம்பஸ் இருக்குமே அது நிச்சயமாக இருக்கனும்னு நான் வலியுறுத்தி கேட்டுக்கிறேன்.

சமீபத்தில நான் செய்தித்தாள்ல படிச்சேன்.பீகார் ல ஒரு பொண்ணு மயங்கி கீழே விழுந்துட்டாங்க.அவங்கள அங்கிருந்த பொது மக்கள் ஆம்புலன்ஸ்ல போன் பண்ணி வரவசைச்சு மருத்துவமனைக்கு அனுப்பியிருக்காங்க.

ஆனா அவங்க கூட யாரும் துணைக்கு போகாததால அந்த ஆம்புலன்ஸ்ல இருந்த டிரைவருக்கு ரொம்ப வசதியா போச்சு.

ஆளில்லாத இடத்தல வண்டியை நிறுத்தி மயக்கத்தில் இருந்த பொண்ணு கிட்ட பலாத்காரம் செய்ய முயற்சி பண்ணியிருக்காரு.

நல்ல வேளையாக அதுக்குள்ள அந்த பொண்ணு கண் முழிச்சு தன் கற்பை காப்பாத்த போராடி வெற்றியும் கிடைச்சிருக்கு.

அந்த பொண்ணு ஸ்மார்ட்டா யோசிச்சு ஆம்புலன்ஸ்ல சார்ப்பா இருந்த ஒரு பொருள எடுத்து ஆம்புலன்ஸ் டிரைவரோட முதல்ல வலது கண்ணுல குத்துனதுமே அந்த டிரைவர் நிலை தடுமாற ஆரபிச்ச மறுநொடி அதே சார்ப்பான பொருள வைச்சு இடது கண்ணக்குள்ளயும் குத்துனதுதால அவன் முழுவதும் நிலை குலைந்து போய்விட்டான்.

அந்த சமயம் பார்த்து அந்த பொண்ணு அந்த டிரைவர தள்ளி விட்டு தப்பிச்சு வெளியே வந்துட்டாங்க.நான் என்ன சொல்ல வரேன்னு உங்களுக்கு புரிந்திருக்கும்.

அதுவும் இந்த காலத்தல யாரையும் நம்ப முடியாது.முக்கியமா பெண் குழந்தைகள தனியா வீட்ல விட்டுட்டு போகாதிங்க.முடிந்தளவுக்கு பெற்றோர் கூட கூட்டிட்டு போக பாருங்க.

கூட்டிட்டு போக முடியாத சூழ்நிலை வரும் பொழுது அவங்கள உங்க நம்பிக்கை பாத்திரமா இருக்கரவங்க கிட்ட மட்டும் விட்டுவிட்டு போங்க.

நிச்சயமாக பெற்றோர் அவங்க பெண் குழைந்தைகளுக்கு தற்காப்பு கலைகள்ள ஒன்னுல சேர்த்து விடனும்.
பெண் குழந்தைகளுக்கும் சரி ஆண் குழந்தைகளுக்கும் குட் டச் அண்ட் பேட் டச் எதுன்னு தெரியனும்.

ஆண் குழந்தைகள பெற்றோர் வளர்க்கும் போது பெண்களுக்கு பாதுகாப்பா இருக்கனுமே தவிர அவங்களுக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது,அவங்கள மதிக்கனும்னு சின்ன வயதிலிருந்தே சொல்லிக் கொடுங்க."என்று இதழரன் சொல்லி முடித்ததும்,

"சார்... பிரபல தொழிலதிபர் ராஜேந்திரன் மூத்த மகள் நீங்க காதலிச்சதாக நாங்க கேள்விப் பட்டோம்."என்று மற்றொரு நபர் கேள்வி கேட்டு முடிப்பதற்கு முன்பே

" நிச்சயமாக அவங்கள தான் நான் திருமணம் செய்துக்க போரேன்.இதுக்கு மேல என்கிட்ட எதுவும் கேட்காதிங்க.நீங்க என் தனிப்பட்ட விசயத்தை தோண்டி துருவாம கேஷ் சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்டால் நல்லது."என்று தன் கணீர் குரலில் இதழரசன் சொல்லவும் அந்த பத்திரிக்கையின் நபர் அமைதியாகி விட்டார்.

அதன்பிறகு பத்திரிக்கை மற்றும் செய்தித்தாள் நபர்கள் இதழரசனின் சொந்த வாழ்க்கை கேள்விகளை கேட்காது கேஷ் விசயமாக சில பொது கேள்விகளை கேட்கவும்,

இதழரசனும் அவர்கள் கேட்ட கேள்விக்கு நிதானமாக பதிலளிக்கவும் அவர்கள் அமைதியாக அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அப்படியே மூன்று நாட்கள் கழிந்திருந்தது,

விக்ரமுக்கு இதழருவிக்கு திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்ட கோவிலில் பெரியவர்களின் முன்னிலையில் இதழரசன் இதழருவிக்கு எளிமையாக திருமணம் நடந்தது.

திருமணம் நடந்த கையோடு இதழரசன் தன் தாய் வீட்டிற்கு இதழருவியை அழைத்துச் சென்று பாலும் பழமும் சாப்பிட்டு விட்டு இரவு அங்கியே தங்கி விட்டு மறுநாள் தன் மனைவியை தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தான் இதழரசன்.

இதழரசன் அவன் இல்லத்திற்கு வந்ததுதான் தாமதம் அரிசி (பஞ்சவர்ணகிளி) பறந்து வந்து அவனின் வலது தோள்பட்டையில் அமர்ந்து 'கீ..கீ..'என்று கத்தவும் நாச்சியார் ஆளம் கரைத்த தட்டோடு வெளியே வந்தவர் அவர்களுக்கு ஆளம் சுற்றி வீட்டுக்குள் அனுப்பி வைத்துவிட்டு ஆளத்தை கேட்டின் சாலையின் ஓரத்தில் கொட்டி விட்டு மீண்டும் வீட்டை நோக்கி நடைபோட்டிருந்தார்.

தன் மகள் முகத்திலிருந்த பூரிப்பை பார்த்தவருக்கு அனைத்தும் புரிந்து விட்டது.நாச்சியார் மேற்கொண்டு எந்த கேள்விகளையும் தன் மகளிடம் கேட்க வில்லை.

இதழரசன் தனது அறையில் குஷன் சோஃபாவில் அமர்ந்து ஆங்கில நாவல் ஒன்றை படித்துக் கொண்டிருந்தான்.

"சாருக்கு ஃபுக்ஸ் படிக்கரது பிடிக்காதன்னு நான் நினைத்தற்கு மாறாக புத்தகம் படிக்கிறிங்க?எப்ப இருந்து புத்தகம் படிக்கற பழக்கத்த ஆரம்பிச்சிங்க?"என்றபடி அவனுக்கு அருகில் உள்ள மற்றொரு குஷன் சோபாவில் அமர்ந்தாள் இதழருவி.

"இதழ்.. நீ நினைவுகள் இல்லாம இங்க இருக்கறப்போ புத்தகத்தான் அதிகம் படிப்ப.உனக்கு இந்த புத்தகங்கள்தான் பொழுது போக்கு.

நானும் உன்னை தனியா விட்டுட்டு வேலைக்கு போயிடுவேன்.நான் காவல் நிலையத்தில் இருந்தாலும் எனக்கு நேரம் கிடைக்கும் போது உனக்கு போன் பண்ணி பேசுவேன்.

அந்த விக்ரம் அன்னைக்கு கடத்திட்டு போனப்போ நான் ரொம்ப நிலைகுலைந்து போனேன்.நீ இல்லாம பைத்தியம் பிடிக்கர மாதிரி இருந்துச்சு.அப்ப இருந்து நீ கிடைக்கர வரைக்கும் இரவு புத்தகத்த படிக்க ஆரம்பிச்சேன்."என்று
அவன் சொல்லி முடிக்கவும்

"அதுதான் நீங்க என்ன கண்பிடிச்சு என்ன அந்த விக்ரம் கிட்டிருந்து காப்பாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களே.அப்புறம் நைட்ல தான நீங்க புத்தகம் படிக்கனும்.
இப்ப எதுக்கு பகல்ல புத்தகத்தை படிக்கரிங்க?"என்று அவள் எதார்த்தமாக கேட்கவும்

"இதழி நேத்து இரவு நமக்குள்ள நடந்தத மறந்துட்டியா என்ன? அந்த காரணமாகதான் பகல்ல புத்தகம் படிக்கிரேன்."என்று நமட்டு சிரிப்புடன் இதழரசன் அவளை ஒரு மார்க்கமாக பார்த்தபடி கூறவும்,
இதழருவியின் முகம் நாணத்தால் சிவந்தது.

"ஆமா நான் உன்கிட்ட ஒன்னுகேட்கனும்?"என்று தீவிரமான இதழரசனின் குரலில்தான் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

"என்ன?"என்று அவளும் முகத்தை தீவிரமாக வைத்தபடி அவனிடம் கேட்டிருந்தாள்.

"நான் பெண் வேடத்தில் இருக்கும் பொழுது உனக்கு என்மேல கொஞ்சம் கூட சந்தேகம் வரவில்லையா என்ன?"என்று இதழரசன் இயல்பாக அவளிடம் கேட்டிருக்க

"எனக்கு உங்கள் பெண் வேடத்தில் பார்க்கும் பொழுது லைட்டா சந்தேகம் வந்தது.ஆனா அதை நான் பெரிசா எடுத்துக்கல.ஒருவேளை நான் அப்ப இருந்த சூழ்நிலையால் இருக்கலாம்னு நினைக்கிறேன்."
என்று இதழருவி நிதர்சனத்தை கூறவும்

"அப்படியும் இருக்கலாம்."என்று ஆமோதிப்பாக இதழரசன் தலை மேலும் கீழும் தலையாட்டியவன்,
 
Joined
Jan 29, 2025
Messages
87
"ஆனா ஆன்ட்டி நான் வந்த முதல் நாள்ளே நான் யாருன்னு கண்டுபிடிச்சிட்டாங்க.சாதனா கூட நான் பெண் மாறி நடக்கலன்னு ஆன்ட்டி கிட்ட போய் சொல்லியிருக்காங்க.

சாதனா என்று சொல்லும் போதுதான் எனக்கு நினைவு வருது.சாதனாவும் என் தம்பி சாகித்தியனுக்கும் அடுத்த மாதம் பதிமூண்றாம் தேதி கல்யாணம்.
அம்மா மண்டபம் புக் பண்ணிட்டாங்க.

அக்கா மாமா என்ற முறையில் சாதனாவுக்கு இனிமேல் நாம்தான் எல்லாத்தையும் பார்த்துக்கனும்."என்று இதழரசன் மனதில் இருந்து ஆத்மார்த்தமாக சொல்லவும்

"ரொம்ப நன்றி."என்று உணர்ச்சி வசப்பட்டு கூறவும் அவளின் கரங்களை தன் கரங்களுக்குள் வைத்து பாதுகாத்தபடி

"எனக்கு தெரியும் உனக்கு சாதனாவ எந்தளவு பிடிக்கும்னு."என்றபடி அவளின் கரத்தை விடுவித்திருந்தான் இதழரசன்.

"பாருங்க.. உங்க கூட பேசிட்டே நான் வந்த விசயத்தையே மறந்துவிட்டேன்."என்று நினைவு வந்தவளாக,

"அம்மா உங்கள சாப்பிட என்ன அழைத்து வரச்சொன்னாங்க.நாம சாப்பிட போலாமா?"என்று
சிரித்தபடி அவள் கூறவும்

"ஓ..போலாமே."மெலிதாக புன்னகைத்தபடி தன் வலது கையோடு தன்னவளின் இடது கையோடு கோர்த்தபடி உணவு மேசையை நோக்கி நடை போட்டிருந்தான் இதழரசன்.

இருவரும் ஒரு சேர தங்களுக்குள் பேசி சிரித்தபடி வருபவர்களை பார்க்க பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது நாச்சியாருக்கு.

'எங்கு தன் கண்ணே பட்டு விடுமோ!'என்று மனதில் எண்ணியவர் மறுநொடி சமையலறைக்குள் சென்று கல் உப்பு சிறிது நான்கு வர மிளாய்களை கல் உப்புடன் சேர்த்து தன் வலது கையின் உள்ளங்கையை மடக்கியபடி வெளியே வந்தவர்

"தம்பி.. நீங்களும் இதழருவியும் சேர்ந்த இப்படி கிழக்கு பார்த்து நில்லுங்க.உங்க ஜோடி பொறுத்தம் வேற லெவல் போங்க.என் கண்ணே பட்டுடும் போல இருக்கு."என்றபடி அவர்களுக்கு கண் டிஸ்டி கழித்து அவர்களை அமரச் சொல்லிவிட்டு வீட்டின் வாயிலை கடந்து வெளியே சென்றிருந்தவர்,

ஐந்து நிமிடம் கழிந்த நிலையில் வேக நடையுடன் வீட்டிற்குள் வந்தவர் தன் மகள் மருமகனுக்கு உணவை பறிமாற ஆரம்பித்திருந்தார்.

"அத்தை எங்க சாதனாவை காணோம்?"என்று கேட்டபடி சாதத்தை சாம்பாரில் பிசைந்து சாப்பிட ஆரம்பித்தான் இதழரசன்.

"தம்பி.. சாதனாவ சம்பந்தி அம்மா அவங்க கம்பனிக்கு வரச்சொல்லி இருந்தாங்க."என்று நாச்சியார் கூறவும் தான்,

இதழரசன் நினைவு வந்தவனாக "ஆமாங்க அத்தை.சாதனாவ கம்பனில ஜாயின் எம்.டி.யா அறிமுகப்படுத்தரபத்தனும்னு சொல்லிட்டு இருந்தாங்க.

அதுக்குதான் சாதனாவ கம்பனிக்கு கூப்பிட்டு இருப்பாங்க.இருங்க அம்மாக்கு போன் பண்ணி உறுதி படுத்திக்கிறேன்."என்று கூறியபடி தன் கால் சட்டையில் இருந்த கைபேசியை எடுத்து தன் தாயிற்கு அழைப்பு விடுத்திருந்தான்.

அப்பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டதும்,
"அம்மா சாதனா நம்ம கம்பெனி அலுவுலகத்தலதான் இருக்காங்களா?"

"ஆமாடா.நான்தான் சாதனாவ ஜாயின் எம்.டி.யா அறிமுகப்படுத்தப் போறேன்னு உன்கிட்ட சொல்லியிருந்தனே.மறந்திட்டியா?"
என்று இயல்பாக ஆனந்தி தன் மகனிடம் கேட்டிருக்க ,

"எனக்கு தெரியும் அம்மா.ஜெஸ்ட் சாதனா அங்கதான் இருக்காங்களான்னு உறுதி செய்ய உங்களுக்கு போன் பண்ணேன் அம்மா."

"ஓ.கே.மா நானும் இதழருவியும் காலை உணவை முடித்து விட்டு ஒரு மணி நேரத்தில் அங்க இருப்போம்."என்றபடி அழைப்பை கட் செய்துவிட்டு தனது கைபேசியை மீண்டும் கால் சட்டையில் திணித்து விட்டு உணவில் கவனம் செலுத்த ஆரம்பித்தான் இதழரசன்.

"அத்தை நம்ம கம்பெனிலதா அம்மா கூட சாதனா இருக்காங்க.சாதனவா ஜாயின் எம்.டி.யா அறிமுகப்படுத்தரப்போ நாங்க அங்க இருக்கனும்.நானும் இதழருவியும் திரும்பி வீட்டுக்கு வரும் போது சாதனாவ கூட்டிட்டு வரோம் அத்தை."என்றபடி கடைசி வாய் உணவை சாப்பிட்டு விட்டு தட்டிலே
கை கழுவி இருந்தான் இதழரசன்.

தொடரும்.
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top