• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Jan 29, 2025
Messages
87
அத்தியாயம் 28.

சாகித்தியன் மருத்துவமனை,

அவசர சிகிச்சை அறையில் சாகித்தியன் தான் நாச்சியாருக்கு வைத்தியம் பார்த்துக்கொண்டிருந்தான்.
இதழருவி அவசர சிகிச்சை அறைக் கதவின் வெளியே நின்று வட்டவடிவ கண்ணாடியின் வழியாக தன் தாயை பார்த்து மெளனமாக கண்ணீர் விட்டுக்‌ கொண்டிருந்தாள் பாவை.

"அழதாத இதழ்.அவங்களுக்கு ஒன்னும் ஆகாது.நீ தைரியமா இரு."என்று இதழரசன் ஆறுதல் படுத்தவும்

"அழாம எப்படி என்னால இருக்க முடியும்? நான் வேணா அவங்களுக்கு சொந்த மகளா இல்லாம இருக்கலாம்.ஆனா அவங்க இப்பவரைக்கும் அவங்களோட சொந்த பொண்ணா நினைச்சுதான் என்மேல ரொம்ப அக்கறையா இருக்காங்க.

அவங்களுக்கு இந்த உண்மை தெரிந்திருக்கலாம்.தெரியாம இருக்கரதுக்கு வாய்ப்பு இல்லைதான்.

என்னைக்கும் எனக்கு அம்மான்னா அது அவங்க மட்டும்தான். தங்கச்சின்னா அது சாதனா மட்டும் தான்."என்று சன்ன குரலில் கூறியபடி மெளனமாக அவள் கண்ணீர் விடவும் , அதைப் பார்த்த சாதனா முகத்தை திருப்பிக் கொண்டாள்.

தற்பொழுது இதழருவியை பிடிக்காமல் முகத்தை திருப்பவில்லை,எங்கு அவள் அழுவதை தொடர்ந்து பார்த்தால் ஓடிச்சென்று தான் இதழருவியை ஆறத் தழுவி விடுவோம் என்று பயத்தினால் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அவளுக்கு தன் தந்தையை நினைக்க நினைக்க அருவருப்பாக இருந்தது.அவளுக்கு இதழருவியை பிடிக்காதுதான்.

ஆனால் இதழருவிக்கு ஒரு பிரச்சினை என்று வந்தபொழுது அவளாள் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கமுடியவில்லை.அந்த சூழ்நிலையில் அக்கா என்று நினைத்து உதவவில்லை.அதற்கு மாறாக இதழருவியும் தன்னை போல் ஒரு பெண்தானே.

பெண்ணுக்கு சக பெண்ணே உதவி செய்யாமல் இருந்தால் எப்படி? என்பது சாதனாவின் கொள்கை.

இதழரசன் இதழருவியிடம் ஆறுதலாக பேசிக் கொண்டிருந்த பொழுது அவனின் கவனத்தை கைபேசி தன் திசைக்கு திருப்பியிருந்தது.

தன் கைபேசியை எடுத்துவன் தொடு திரையில் வந்து கொண்டிருந்த அழைப்பை ஏற்று காதில் வைத்தபடி இதழருவியை விட்டு சற்று தூரம் தள்ளி வந்தவன்

"சொல்லு கார்த்திகேயன்."என்று கணீர் குரலில் கேட்டிருந்தான் இதழரசன்.

"சார்.. ராஜேந்திரன் இறந்துட்டாரு.தலையில ரொம்ப அடி பட்டதால் மருத்துவமனையில் இறந்துட்டாரு.

அப்புறம் விக்ரமும் அவங்க அப்பாவும் கோமாக்கு போயிட்டாங்க.விக்ரம் தம்பிங்க இரண்டு பேரும் எங்க நம்ம அப்பா அண்ணன செய்தித்தாள் மற்றும் டிவி ல்ல ஃப்ளாஷ் செய்தியா வந்திரும்னு நினைச்சு தற்கொலை பண்ணிட்டாங்க.

"அவங்க தற்கொலைக்கு நாம காரணம் கிடையாது.நீங்க ப்ர்தரா என்ன பண்ணனுமா அதை பண்ணிடுங்க.கையோட அந்த கேஷ்ஸ சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் கை செய்திடுங்க.

இந்த கேஷ் க்ளோஸ் பண்ணதுக்கப்புறம் நான் கொஞ்சம் ப்ரேக் எடுக்கலான்னு இருக்கேன் கார்த்திகேயன்."என்று கூறிவிட்டு அழைப்பை கட் செய்துவிட்டு தன் கால் சட்டை பாக்கெட்டில் திணித்து விட்டு இதழருவியை நெருங்கி இருந்தான் இதழரசன்.

இதழருவி வராண்டாவில் போடப்பட்ட இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்து அமைதியாக அமர்ந்திருந்தாள்.

கதிரவன் சந்திரனுக்கு விடை கொடுத்திருந்த நேரம் அது.

ஆனந்தி அனைத்து விசயத்தையும் தெரிந்து கொண்டு இரவு உணவை சமைத்து மருத்துவ மனைக்கு எடுத்து வந்திருந்தார்.

ஆனந்திக்கு சாதனாவை நன்கு தெரியும்.ஆனால், இதழருவியை தற்பொழுதுதான் பார்க்கிறார்.இதழரசன் தன் தாய் தந்தை வீட்டுக்கு சென்று அனைத்து உண்மையும் கூறியிருந்தான்.

தற்பொழுது அவரை அழைத்து வந்தது கூட இதழரசன் தான்.

"இதழ்.. இவங்கதான் என்னோட அம்மா."என்று இதழரசன் தன் தாயை இதழருவிக்கு அறிமுகப்படுத்தி வைக்கவும்

இதழருவி அந்த சூழ்நிலையிலும் கூட அவருக்கு எழுந்து நின்று கைகூப்பி 'வணக்கம் அத்தை 'என்று கூறியிருந்தாள்.

இதழருவியோட இந்த பணிவு நிதானம் ஆனந்தியை வெகுவாக கவர்ந்திருந்தது.

"இதழருவி நான் எல்லாத்தையும் கேள்வி பட்டேன்மா.நீயும் சாதனாவும் தைரியமா இருக்கனும்.உங்க ரெண்டு பேர்த்துக்கும் நான் இருக்கேன்.

நீங்க இரண்டு பேரும் ஆனந்தியோட மருமகள்கள்.எதற்கும் சோர்ந்து போயிடக் கூடாது.இப்படியே நீயும் சாதனாவும் இரண்டு பேரும் ஆளுக்கு ஒரு திசையில சாப்பிடாம உட்கார்ந்து இருந்தா என்ன அர்த்தம்?

உங்களுக்கு நான் சமைச்சு எடுத்துட்டு வந்திருக்கேன்.இரண்டு பேரும் எழுந்து வாங்க சாப்பிட "என்று ஆனந்தி சாதனா மற்றும் இதழருவியை அழைத்திருக்க

"ஆன்ட்டி எனக்கு இப்ப பசிக்கல.நான் கொஞ்ச நேரம் கழித்து சாப்பிட்டுக்கிறேன்."என்று சாதனா சொல்லவும்

"என்னம்மா சாதனா உன் முகத்த பார்த்தா காலையில இருந்தே சாப்பிடாம இருப்ப போல,

என் இடத்தில் உங்க அம்மா சாப்பிட வான்னு கூப்பிட்டு இருந்தா வந்திருப்பிங்க."என்று ஆனந்தி குரல் தேய்ந்து உள் ஒலிக்க,

"நாங்க சாப்பிட வரோம் ஆன்ட்டி."என்று மறுநொடி தீர்க்கமாக கூறியிருந்தாள் சாதனா.அவள் நாங்க என்று இதழருவியையும் சேர்த்துதான் கூறியிருந்தாள்.

ஆனந்தி அவர்களை அங்கு இருந்த உணவு விடுதிக்கு அழைத்து சென்றார்.
சாதனாவும் இதழருவியும் தற்பொழுதும் பேசிக்கொள்ளவில்லை.

அமைதியாக பெயரிற்கு சிறிது சாப்பிட்டு விட்டு மீண்டும் காரிடாரில் ஆளுக்கொரு திசையில் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

இவர்கள் தான் சாப்பிட அழைத்தற்காகவாவது சிறிதேனும் சாப்பிட்டார்களே என்று நிம்மதி அடைந்தவர்,

"இதழருவி, சாதனா பார்த்து பத்திரமா இருங்க.உங்களுக்கு துனையா என் இரண்டு மகன்களும் இங்க இருப்பாங்க.உங்களோட சூழ்நிலை புரிந்து தான் நான் உங்கள நம்ம வீட்டுக்கு கூப்பிடல.

மணி இப்ப பத்தாச்சு.இன்னும் மூனு மணி நேரத்தில் உங்க அம்மாக்கு மயக்கம் தெளிந்து விடும் என்று சாகித்தியன் சொன்னான்.

நான் உங்கள நாளைக்கு வந்து பார்க்கிறேன்.நாளைக்கு நாம எல்லாரும்
நம்ம வீட்டுக்கு போயிடலாம்."என்று சாதனா இதழருவியிடம் விடைபெற்றார் ஆனந்தி.
 
Joined
Jan 29, 2025
Messages
87
ஆனந்தி இல்லம்,

"என்ன ஆனந்தி நீ சாப்பாடு எடுத்துட்டு போனியே அவங்க ரெண்டு பேரும் சாப்பிட்டாங்களா?"என்று சாந்தகுமார் தன் மனைவியிடம் கேட்டிருக்க

"அதென்ன அவங்க ரெண்டு பேரும் ன்னு சொல்லிட்டு நம்ம மருமகள்னு சொல்லுங்க."என்று கூறியபடி தன் கணவருக்கு உணவை பரிமாற ஆரம்பித்தார் ஆனந்தி.

"அட.. விடு ஆனந்தி.அது ஒரு ப்ளோல்ல வந்திருச்சு.நீ பெரிசா எடுத்துக்க வேண்டாம்.
சரி சொல்லு நம்ம மருமகள்கள் இரண்டு பேரும் சாப்பிட்டாங்களா?"என்று உணவை பிசைந்தபடி இயல்பாக சாந்தகுமார் கேட்கவும்,

"இரண்டு பேரும் கொஞ்சம் சாப்பிட்டாங்க."என்று ஆனந்தி கூறிமுடிக்கும் தருவாயில்

"என்ன ஆனந்தி அந்த பொண்ணுங்களோட அப்பாவ பத்தி தெரிந்தும் நீ அந்த பொண்ணுங்கள மருமகள்களா ஏத்துக்கிறது எனக்கு ஒன்னும் சரின்னு படல."என்று செந்தாமரை நடுக் கூடத்தில் இருந்து தொலைக்காட்சியை பார்த்தபடி சத்தமாக சொல்லவும்

"அவங்க அப்பா செய்த தப்புக்கு என் மருமகள்கள் என்ன செய்வாங்க?"என்று செந்தாமரையிடம் பதில் கேள்வி கேட்டுவிட்டு தனுக்கு உணவை பரிமாறி சாப்பிட ஆரம்பித்தார் ஆனந்தி.

ஆனந்தி அப்படி கேட்கவும் செந்தாமரைக்கு முகம் கருத்து விட்டது.
'இதுவரை தான் எதை கூறினாலும் எதிர் கேள்வி கேட்காது சரி சரி என்று தலையாட்டி வந்தவளுக்கு திடிரென்று என்ன ஆயிற்று?'என்று யோசனை செய்தபடி டிவி சுவிட்சை ஆப் செய்துவிட்டு தன் அறையை நோக்கி நடை போட்டிருந்தார் செந்தாமரை.

சாகித்தியன் மருத்துவமனை,

"சாதனா சாப்பிட்டு விட்டீர்களா?"என்று சாதனாவை நெருங்கி சாகித்தியன் சன்ன குரலில் கேட்டிருந்தான்.

தான் சாப்பிட்டு விட்டதாக மெளனமாக தலையை மேலும் கீழுமாக அசைத்து பதில் அளித்திருந்தாள் சாதானா.

"அப்ப சரி.இந்த மெடிசன எடுத்துக்குங்க.உங்க இடது பக்க நெற்றியில் உள் காயம் ஏற்பட்டிருக்கு.நிச்சயமா வலிக்கும்ன்னு எனக்கு நல்லா தெரியும்.

அதனால இந்த மெடிசன எடுத்துக்குங்க.வலி இல்லாம இருக்கும்."என்று அவளின் வலது உள்ளங் கையில் இரு மாத்திரைகளை வைத்திருந்தான்.

அவள் மாத்திரை விழுங்க சாகித்தியனே வாட்டர் பாட்டிலை மூடியை திறந்து கொடுக்க,

அவளும் அவன் தந்த வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீர் அருந்தி மாத்திரைகளை விழுங்கி விட்டு மீண்டும் வாட்டர் பாட்டிலை அவனிடம் திரும்ப கொடுத்திருந்தாள் பாவை.

சாதனாவின் அருகில்தான் சாகித்தியன் அமர்ந்திருந்தான்.எப்படி ஆறுதல் சொல்லது என்று தெரியவில்லை அவனுக்கு.

தன் வருங்கால அண்ணி இதழருவி என்று தெரிந்ததும் சாகித்தியனுக்கு மற்றற்ற மகிழ்ச்சிதான்.

அரைமணி நேரம் கழிந்த நிலையில் ஒரு எமர்ஜென்சி கேஷ் வந்த நிலையில்,

"சாகித்தியன் இந்த கேஷ நான் பார்த்துக்கொள்கிறேன்.நீங்க கொஞ்சம் ஓய்வெடுங்க."என்று இதழருவி கூறிவிட்டு அவசர நடையில் தனது கேபினுக்கு சென்றவள் பச்சை உடை அணிந்து முழு மருத்துவராக கம்பீர நடையுடன் வெளிய வந்தவளை பார்க்க இதழரசனுக்கு அளவற்ற மகிழ்ச்சிதான்.

சாதனாவுக்கும் மகிழ்ச்சிதான்.ஆனால்,அவள் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

இதழரசன் தனது வலது உள்ளங்கையின் அனைத்து விரல்களையும் மடக்கி பெரு விரலை மட்டும் உயர்த்தி இதழருவிக்கு காட்டியபடி உதடு பிரிக்காது 'குட்'என்று தலையை மேலும் கீழுமாக அசைத்திருந்தான்.

இதழருவி தன் விழிகளை மூடித்திறந்து அவனுக்கு எதையோ உணர்த்தி விட்டு ஸ்டெத்ஸ் கோப்பை கழுத்தில் மாட்டியபடி அவசர சிகிச்சை பிரிவின் அறைக்குள் சென்றிருந்தாள்.

சரியாக மூன்று மணிநேரம் கடந்த நிலையில் முகம் மலர்ச்சியுடன் வெளியே வந்திருந்தாள் இதழருவி.அவளின் முக மலர்ச்சியை வைத்தே அவள் வைத்தியம் செய்யப்பட்ட நபரின் நிலையை அறிந்து கொண்டான் சாகித்தியன்.

இதழருவி தனது கேபினுக்கு சென்று தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு திரும்பி வரும் பொழுது,

"இதழ்.. அத்தை இப்ப நல்லா இருக்காங்க.அவங்கள நார்மல் வார்டுக்கு சாகித்தியன் மாத்திட்டான்."என்று இதழரசன் கூறிய மறுநொடி,

இதழருவி சாகித்தியனை பார்த்து தன் இரு கரங்களையும் கூப்பியவள் "ரொம்ப நன்றி."என்று அவள் உணர்ச்சி மிகுதியில் சொல்லவும்

"நான் என் கடமையைதான் செய்தேன் அண்ணி.சாதனா ஆன்ட்டி கிட்ட இருக்காங்க.

அவங்க மயக்கத்தில் இருந்து சுயநினைவுக்கு வந்ததும் முதல்ல உங்கள் தான் கேட்டாங்க.

நீங்க பழைய படி உங்க கடமையை செய்ய ஆரம்பித்து விட்டதா அண்ணன் சொன்னதும் அவங்க முகத்துல அப்படியொரு மகிழ்ச்சி.அதை வார்த்தையால என்னால சொல்ல முடியல.

மகிழ்ச்சியல இரண்டு சொட்டு ஆனந்தக் கண்ணீர் விட்டுட்டாங்க.நீங்க போய் அவங்களை பாருங்க."என்று கூறிவிட்டு கையோடு தன் அண்ணனையும் அழைத்துக் கொண்டு கேபினுக்கு சென்றான் சாகித்தியன்.

இதழருவி தன் தாய் அனுமதிக்கப் பட்டிருந்த அறைக்கதவை திறந்து உள்ளே சென்றதும்,

அவளைப் பார்த்த நாச்சியார் "இதழருவி.. உனக்கு பழைய நினைவுகள் திரும்பி விட்டதா இதழரசன் தம்பி சொன்னாங்க.எனக்கு ரொம்ப மகிழ்ச்சிடா."என்று முகத்தில் புன்னகை அரும்ப அவர் கூறவும்,

அவரின் வலதுகை மேல் தன் வலது கை வைத்து கண்ணீர் சிந்த ஆரம்பித்தாள் இதழருவி.

"இங்க பாரு சும்மா அழுது வடியாத.நீ அழுதா அம்மாவும் அழுவாங்க.சூழ்நிலைய புரிந்து நடந்துக்கோ."என்று இதழருவியை பார்க்காது எங்கயோ பார்த்தபடி பட்டும் படாமல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கூறும் தன் தங்கையை பார்க்க பார்க்க சிரிப்புதான் வந்தது இதழருவிக்கு.

"அம்மா அப்புறம் இன்னொரு விசயம் உங்ககிட்ட சொல்லணும்.."என்று இதழருவி சிறிது தயங்கவும்

"உங்க காதல் விசயத்தை இதழரசன் தம்பி என்கிட்ட சொல்லிட்டார்மா."என்று நாச்சியார் மகிழ்ச்சியாக கூ
றவும் தான் இதழருவிக்கு மனதில் சிறு நிம்மதி பிறந்தது.

தொடரும்.
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top