• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Jan 29, 2025
Messages
87
அத்தியாயம் 18.

"நான்தான் அன்னைக்கே உங்ககிட்ட சொன்னனே?
இதழருவிய பொண்ணு பார்க்க வரப்போர நாள்ல அவ விடியற்காலையில் வீட்ட விட்டு போயிட்டான்னு சொன்னனே."என்று ராஜேந்திரனை முந்திக்கொண்டு பதிலளித்தார் நாச்சியார்.

நாச்சியார் தன்னை முந்திக்கொண்டு பதில் அளிக்கவும் ராஜேந்திரனுக்கு அப்பாட என்று இருந்தது.

"மேடம் நான் உங்ககிட்ட கேட்கர கேள்விக்கு மட்டும் நீங்க பதில் சொன்னா போதும்."என்று அழுத்தமாக நாச்சியாரை பார்த்து சொன்னவனின் பார்வை மீண்டும் ராஜேந்திரனிடத்தில் அழுத்தமாக பதிந்தது.

"ஓகே சார்.ஒத்துழைப்புக்கு ரொம்ப நன்றி.நாங்க கிளம்புறோம்."என்று அழுத்தமாக அவரை பார்த்து சொல்லிவிட்டு கார்த்திகேயனை அழைத்துக்கொண்டு வெளியே செல்ல எத்தனிக்கும் தருணத்தில்,

"கிளம்புங்க ஆனா இனி இந்த வீட்டுக்கு திரும்ப வராதிங்க."தன் கனீர் குரலில் சத்தமாக வார்த்தைகளை சிதறவிட்டிருந்தார் ராஜேந்திரன்.

இதழரசன் தன் இதழில் படரவிட்டிருந்த புன்னகையுடன் திரும்பி அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவ்வீட்டை விட்டு வெளியேறி இருந்தான்.

அவனின் பார்வை ஏதோ ஒன்றை உணர்த்திய போலவே தோன்றியது ராஜேந்திரனுக்கு.அது என்ன என்றுதான் சரியாக அவருக்கு பிடிபடவில்லை.

ஆனந்தி இல்லம்,

"என்னங்க நானும் ரொம்ப நேரமா உங்கள பார்க்கிரேன்.ஏன் என்கோட பேசமாட்டிங்கிரிங்க?"என்று தன் கணவனிடம் கவவையாக கேட்டார் ஆனந்தி.

"என்ன பேச சொல்ர ஆனந்தி? பேசறதுக்கு எதுவும் இல்லை."முகத்தில் எந்த உணர்ச்சியும் வெளிப்படுத்தாது பேசியிருந்தார் சாந்தகுமார்.

'என்கிட்ட கலந்துக்காகம தன்னந்தனியா முடிவு எடுக்கர பழக்கம் எப்பதான் உன்ன விட்டு போகுமோ?'என்று ஆதங்கமாக மனதில் நினைத்தபடி மெளனமாக நீள்விருக்கையில் அமர்ந்திருந்தார் அவர்.

பெண் வீட்டில் நிச்சயத்தார்த்தையும் கையோட வைத்தது நல்லதுதான் என்றாலும் தன்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காது ஆனந்தியே அங்கு முடிவு எடுத்தது அவருக்கு சற்று வருத்தம்தான்.

"இப்ப நான் என்ன பண்ணிட்டேன்னு என்கோட பேசாம இப்படி அமைதியா இருக்கிங்க?"பொறுமையை இழுத்து பிடித்துக்கொண்டு சன்ன குரலில் கேட்டார் ஆனந்தி.

"நீ நிச்சயதார்த்தம் இன்னைக்கே பண்ணிடலாம்னு சம்பந்திக்கிட்ட கேட்கறதக்கு முன்னாடி ஏன் என்கிட்ட ஒருவார்த்தை கேட்கல?"நிறுத்தி நிதானமாக கேட்டார் சாந்தகுமார்.

"இதுக்கா இவ்வளவு நேரம் கவலையா இருந்திங்க."என்று ஆனந்தி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டவராக மேலும் தொடர்ந்தார்.

"சரி இனிமேல் உங்கள கேட்காம எந்த முடிவும் எடுக்க மாட்டேன் போதுமா."என்றார் நிதானமாக.

அவர் அப்படி கூறவும் சரி என்பது போல் சாந்தகுமார் தன் தலையை அசைத்திருந்தார்.

சாகித்தியன் கார்டனில் மெல்ல நடைபோட்டுக்கொண்டிருந்தான்.அந்த இளை வெய்யிலில் இயற்கை தென்றல் அவனின் தேகத்தை வருடிக்கொண்டிருந்தது.

சாதனாவை பற்றி நினைக்க நினைக்க அவனுக்கு கோபம்தான் வந்தது.அதே நேரத்தில் அவளின் அழகையும் ரசித்தான் அவன்.

"என்ன மாப்ள ஒரே கணவுலயே இருக்கிங்க போல.நான் வந்தது கூட தெரியாம அப்படி என்ன பலத்த யோசனை உங்களுக்கு?"என்று சந்தோஷ் சாகித்தியனிடம் கேட்டபடி அங்க போடப்பட்ட இருக்கையில் அமர்ந்தான்.

"நீங்க வேற ஏங்க மாமா?"என்று சலிப்புடன் கூறியபடி அவரின் அருகில் அமர்ந்தான் சாகித்தியன்.

அவன் அமர்ந்ததுதான் தாமதம் "சாகித்தியன்... கொஞ்சம் சீக்கிரம் இங்க வா?"தன் அன்னையின் சத்தமான பதட்டமான அழைப்பில் என்னவோ எதோ என்று வேகமாக வீட்டை நோக்கி ஓடினான் சாகித்தின்.

அவனை தொடர்ந்து சந்தோஷ் ஓடினான்."என்னமா?"என்றபடி வேக நடையுடன் வீட்டிற்குள் சாகித்தியன் வரவும்

"என்னன்னு தெரியல திடீரென்று பூர்ண மயங்கி விழுந்துட்டா. கொஞ்சம் என்ன ஏதுன்னு பாருப்பா. தவித்த குரலில் கூறினார் ஆனந்தி.

"என்ன சொல்றீங்க அக்கா என்ன ஆச்சு?"என்றபடி தன் சகோதரியின் அறைக்குள் சென்றான் சாகித்தியன்.

சந்தோஷ் பதட்டமாக அறைக்குள் செல்லும் போது ஆனந்தி தன் மகனின் அறையில் இருந்து வேகமாக ஸ்டத்ஸ்கோப்பை எடுத்துக் கொண்டு வந்து சாகித்தியனிடம் கொடுத்துவிட்டு தள்ளி நின்றார்.

பூர்ணாவின் வலதுகையின் மணிக்கட்டை பிடித்து நாடி பிடித்து பார்த்து விட்டு புன்னகையுடன் தன் மாமனை ஏறிட்டு பார்த்தவன் "வாழ்த்துக்கள் மாமா.நீங்க அப்பா ஆக போறிங்க."என்று சாகித்தியன் மகிழ்ச்சியாக சொல்லவும்தான் ஆனந்திக்கு நிம்மதியாகவும் அதே நேரத்தில் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

மகிழ்ச்சியில்
சந்தோஷ்க்கு சில நிமிடங்கள் எல்லாம் பேச்சே வரவில்லை.
 
Joined
Jan 29, 2025
Messages
87
"சாகித்தியன் சரி வா நாம போலாம்.இனி மாப்ள பூர்ணாவ பார்த்துப்பாரு."என்று அவர்களுக்கு தனிமை கொடுத்து தன் மகனை கையோட வெளியே அழைத்து வந்து விட்டார் ஆனந்தி.

"அம்மா.. பெரியம்மா எங்க ஆளயே காணோம்?"என்று தன் தாயிடம் கேட்டபடி வீடு முழுவதும் பார்வையை ஓடவிட்டிருந்தான் சாகித்தியன்.

"அக்கா இந்நேரத்திக்கி ரூம்ல நல்லா தூங்கிட்டு இருப்பாங்கடா."

"என்னம்மா சொல்ரிங்க? தினமும் பெரியம்மா மதியத்துக்கு மேல தூங்குவாங்களா!"என்று ஆச்சரியமாக கேட்டான் சாகித்தியன்.

"ஆமாடா மதியத்துக்கு மேல இரண்டு மணிநேரம் தூங்குவாங்க.நீ என்னைக்காச்சு லீவு போட்டு வீட்ல இருந்திருந்தா நீ இப்படி ஆச்சரியமா கேட்டிருக்க மாட்ட?"

"அதுதான் இன்னைக்கு மருத்துவமனைக்கு போகவிடாம பொண்ணு பார்க்க சாக்குல கையோட நிச்சயதார்த்தத்தையும் முடிச்சு வீட்ல இருக்க வெச்சிட்டிங்களே."என்று அவன் சொல்லி முடிப்பதற்குள்

"எனக்கு கொஞ்சம் தலைவலி.நானும் சித்த நேரம் போய் ஓய்வெடுக்கிறேன்."என்று கூறியவர் நைசாக நழுவி தன் அறையை நோக்கி நடை போட்டார் ஆனந்தி.

மாலை மங்கும் நேரம் அது.

விக்ரமனின் கொஸ்ட் ஹவுஸ்,

மயக்கத்திலிருந்து அப்பொழுதுதான் கண் விழித்திருந்தாள் இதழருவி.அவள் சுய நினைவுக்கு வர சில நிமிடங்கள் பிடித்தது.

"என்ன இது?நாம இதழரசன் வீட்ல ஊஞ்சல்ல ஆடிட்டிருந்தோம்.அதுக்கப்புறம் கீழே விழுந்தோம்.இப்ப பார்த்தா இங்க இருக்கிறோம்."என்று மனதில் நினைத்தபடி தன் பார்வையை சுற்றியும் ஓட விட்டாள்.

"ஹெல்ப்.. யாராவது இருக்கிறார்களா?.."என்று தன்னால் முடிந்தவரை கத்தி கூச்சல் போட்டாள் பாவை.

தூரத்தில் கடலில் அலைகள் வரும் சத்தம் அவள் செவியில் நன்றாக விழுந்தது.

"ஹலோ ஹலோ.. ஏன் இப்படி கத்துரிங்க?"என்று மென்மையாக கூறியபடி அவள் இருக்கும் அறைக்குள் வந்தான் விக்ரம்.

"நீங்க யாரு? நான் எப்படி இங்க இருக்கேன்?"என்று நெற்றியை சுருக்கி குழப்பமாக அவள் கேட்டிருக்கவும்

"என்ன உனக்கு தெரியலயா?"தற்பொழுது ஒருமைக்கு தாவி தவிப்புடன் கேட்பது போல் நடித்தான் விக்ரம்.

நெற்றியை சுருக்கி இல்லை என்பது போல் தலையாட்டினாள் இதழருவி.

"நாம இரண்டு பேரும் இரண்டு வருசமா காதலிச்சிருக்கோம் இதழி.நீ என்னடான்னா எதுவுமே ஞாபகம் இல்லைன்னு சொன்னா எப்படி?"என்று அவளின் மனதை அசைக்கும்படி அவன் உருகி பேசியதில் ,

இதழருவி மிகவும் குழம்பிப்போனாள்.'தான் உண்மையாகவே இவனை காதலித்தோமா? இல்லை இவன் பொய் கூறுகிறானா? 'என்று பல கேள்விகள் அவளின் மனதில் எழுத்தொடங்கியிருந்தது.

"எனக்கு இங்க வலிக்குது" என்று வருத்தமாக சொல்லியபடி தன் நெஞ்சில் இருக்கும் இதயத்தை சுட்டிக்காட்டியவன் மேலும் தொடர்ந்தான்.

"இங்க பாரு உன்ன அந்த இதழரசன் கிட்டிருந்து போராடி காப்பாத்தி இங்க கூட்டிட்டு வந்து வெச்சிருக்கேன்.

அந்த இதழரசன் நல்லவன் கிடையாது இதழி.அவனுக்கும் எனக்கும் ஆரம்பத்தல இருந்தே ஆகாது.

இப்ப என்ன பழிவாங்க உன்ன பயன்படுத்திக்க பார்க்கிரான் இதழி.அதுவும் உனக்கு பழைய நினைவுகள் இல்லாதது அவனுக்கு இன்னும் வயசதியா போச்சு.

நல்ல வேளை நான் அவன்கிட்ட இருந்து உன்ன காப்பாத்திட்டேன்.கடவுளுக்குதான் நன்றி சொல்லனும்."உணர்ச்சி பூர்வமாக நடித்தான் விக்ரம்.

இவன் சொல்வதை அமைதியாக கேட்டபடி நின்றிருந்தாள் இதழருவி.மீண்டும் விக்ரமனிடம் ஒருவார்த்தை கூட பேசவில்லை.

"இதழி நாம சாப்பிடலாம?"என்றபடி அவளின் கையை அவன் தொட போகும் சமயத்தில் பாடரென்று கையை பின்னுக்கு இழுத்துக்கொண்டாள் இதழருவி.

"என்ன இதழி? நான் உன்கையை தொடக்கூடாதா?ஓ..நீ அப்படி வர்ர.சரி சரி நான் சீக்கிரா என் அப்பாகிட்ட பேசி நம்ம கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண சொல்றேன்."என்று அவன் கூறவும் அவளுக்கு பகீர் என்றிருந்தது.

தைரியத்தை வரவழைத்துக்கொண்டு "நான் என் அம்மா அப்பாவ பார்க்கனும்?"என்று உள்போன குரலில் கேட்டிருந்தாள் இதழருவி.

"ஓ.. தாராளமா.நீ சாப்பிடு முதல.அதற்குபிறகு நானே உங்க மம்மி டாடி வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் போதுமா."என்று அவன் கூறியதும்தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

அவன் தட்டில் பறிமாறி கொண்டு வந்த உணவை பெயருக்கு சாப்பிட்டு முடித்த மறுநொடி,"அம்மா அப்பா வீட்டுக்கு கூட்டிட்டு போறிங்களா?"என்று அவள் கேட்கவும்

"போலாம்."என்று முகம் கொள்ளா புன்னகையுடன் அவளை அழைத்து வந்து மகிழுந்தின் பின் இருக்கையில் அமறசொல்ல,அவள் அமர்ந்ததும் தான் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து வாகனத்தை உயிர்பித்து செலுத்த ஆரம்பித்திருந்தான்.

இதழருவி தன் வலதுகையின் ஆள்காட்டி விரலை பயன்படுத்தி நெற்றியின் ஓரத்தில் அழுத்தமாக தேய்த்ததை ப்ரன்ட் ரிவீயு கண்ணாடி மூலமாக பார்த்தவன் பின்பு சாலையில் கவனத்தை பதித்தபடி வாகனத்தை செலுத்த ஆரம்பித்தான் விக்ரம்.

அவன் இதழருவியை அழைத்துக்கொண்டு ராஜேந்திரன் இல்லத்திற்கு வரும் போது இரவு ஏழு மணி ஆகியிருந்தது.

விக்ரம் இதழருவியை அழைத்து வந்ததும் நாச்சியார்க்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை.

இதழருவிக்கு பழைய நினைவுகள் இல்லை என்பது தெரிந்ததும் உள்ளுக்குள் மகிழ்ச்சி அடைந்தார் ராஜேந்திரன்.அவரிடம் ஏற்கனவே இந்த விசயத்தை கைபேசியின் வழியாக விக்ரம் ஒரு நாளுக்கு முன்பே கூறியிருந்தான்.

இதழருவி வீட்டிற்கு வந்தது சாதனாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

"நாச்சியா.. அதுதான் இதழருவி கிடச்சட்டாளே.பெரியவளுக்கு கல்யாணத்த முடிக்காம சின்னவளுக்கு எப்படி கல்யாணம் பண்றது?

இது ஆவணி மாசம்தான.பேசாம இந்த மாசம் முடியரதுக்குள்ள இதழருவிக்கு கல்யாணம் பண்ணி வெச்சிருலாம்.நீ என்ன சொல்ர?"என்று ராஜேந்திரன் வெகு இயல்பாக பேசுவது நாச்சியாருக்கு புதிதாக இருந்தது.

நேற்றுவரை இதழருவிமேல் சிறு அக்கறைகூட இல்லாது இருந்தவருக்கு தற்பொழுது இதழருவியின் திருமணத்தை பற்றி பேசுவது நாச்சியாருக்கு புரியாத புதிராகத்தானே இருக்கும்.

'எது எப்படியோ இதழருவிக்கு நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டும்.'என்று மனதில் நினைத்துவிட்டு "சரிங்க."பட்டும் படாமல் பதில் அளித்திருந்தார் நாச்சியார்.

"அன்க்கில் கல்யாணத்த விமர்சியா பண்ண வேண்டாம்.எளிமையா கோயில்ல வெச்சுக்கலாம்.அதுவும் பத்து நாள்ல.

நாளைக்கே நாம நிச்சியதார்த்தம் வெச்சுக்கலாம்.நீங்க என்ன சொல்றிங்க அன்னக்கில்?"தற்பொழுதுதான் முதல் முறையாக கேட்பதுபோல் கேட்டிருந்தான் விக்ரம்.

"நான் சொல்ரதுக்கு என்ன இருக்கு விக்ரம்?உனக்குதான் நான் நன்றி சொல்லனும்.

இதழருவிகிட்ட உன்னோட போட்டாவ முன்னாடியே காட்டி நீதான் மாப்பிள்ளைன்னு முன்னாடியே சொல்லியிருக்கனும்.அப்படி சொல்லியிருந்தா இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது.

நல்ல வேளை நீயாவது சொன்னயே உங்கள் காதல் விசயத்தை.நீ சொன்னதும் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது."என்று ஆனந்த்தில் ராஜேந்திரன் சொல்ல சொல்ல இதழருவிக்கு மனதில் ஏதோ ஒன்று உறுத்த தொடங்கியது.

"ஆன்ட்டி இனிமேல் அந்த இதழரசன்கிட்டிருந்து இதழருவிய ரொம்ப பத்திரமா பார்த்துக்குங்க.

அவன் இங்க வந்தா நீங்களே ஏதாவது சொல்லி வெளிய அனுப்பிடுங்க.அதுவும் எங்க கல்யாணம் நடக்கற வரைக்கும்தான்.

அதுக்கப்புறம் நான் என்னோட இதழிய பத்திரமா பார்த்துக்குவேன்."என்று உதட்டில் எழுந்த சிறு புன்னகையுடன் இதழருவியை பார்த்தபடி அவன் கூறவும் இதழருவி தன்
தலையை தாழ்த்திக் கொண்டாள்.அது நாணத்தினால் அல்ல என்பது அவளுக்கு மட்டுமே தெரியும்.

தொடரும்.
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top