• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Jan 29, 2025
Messages
87
அத்தியாயம் 17.

"என்னங்க உங்களுக்கு நூறு ஆயுசு.இப்பதான் அக்கா நீங்க ஏன் வரலைன்னு என்கிட்ட கேட்டுட்டு இருந்தாங்க.அதற்குள்ள சஸ்பென்ஸா நீங்களே வந்துட்டிங்க."என்று சிரித்தபடி ஆனந்தி தன் கணவனிடம் கூறவும்

"நம்ம மகனுக்கு பொண்ணு பார்க்க போறோம்.நான் இல்லாம எப்படி?"தன் மனைவிக்கு பதிலளித்து விட்டு தன் அண்ணியின் புறம் திரும்பியவர் "அண்ணி எப்படி இருக்கிங்க?"என்று கேட்டிருக்க

"நான் நல்லா இருக்கேன் தம்பி.வீட்டுக்கு வரேன்னு ஒரு வார்த்தை கூட எங்கிட்ட சொல்லவே இல்லையே?"என்று செந்தாமரை குறைபட்டுக்கொள்ள

"அண்ணி நான் ஆனந்தி கிட்டயே நான் வீட்டுக்கு வரத சொல்லவே இல்ல.சரி உங்களுக்கு எல்லாம் ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு சஸ்பென்ஸா வந்துட்டேன்."என்று அவர் கூறி முடிக்கும் தருவாயில்

"சித்தப்பா எப்படி இருக்கிங்க? நல்லா இருக்கிங்களா?"என்று மகிழ்ச்சியுடன் கேட்டபடி அவரை நெருங்கி இருந்தாள் பூர்ணா.

அவர் பூர்ணாவுக்கு பதில் கூறவதற்கு முன்பே சாகித்தியன் தன் தந்தையை ஆரத்தழுவி வெல்கம் அவர் ஹோம் என்று கூறி அவரை விடுத்து தள்ளி நின்றான்.

"எப்படி இருக்கிங்க மாமா?"என்று சந்தோஷ் கேட்க,

"நல்லா இருக்கேன் சந்தோஷ்."என்று அவர் கூறிமுடித்த நொடி

"ஏங்க நீங்க போய் சீக்கிரமா ரெடியாகி வாங்க.நாம நல்ல நேரத்துல பொண்ணு பார்க்க போகனும்."என்று தன் கணவனை துரிதப்படுத்தினார் ஆனந்தி.

"சந்தோஷ் நீங்க பூர்ணாவ கூட்டிட்டு உங்க கார்ல முன்னாடி மெதுவா போயிட்டு இருங்க.நாங்க பின்னாடி இன்னொரு காருல வந்து ஜாயின் பண்ணிக்கரோம்."என்று ஆனந்தி தன்மையாக சொல்லவும்

"சரிங்க அத்தை."என்று சந்தோஷ் பூர்ணாவை அழைத்துக்கொண்டு வீட்டின் வாயிலை கடக்கும் சமயத்தில்,

"மாப்ள நில்லுங்க.நானும் உங்க கூடவே வரேன்."என்றபடி செந்தாமரை அவர்களை நோக்கி நடை போடவும்,

"அக்கா நீங்க எங்ககோடயே வாங்க."என்று ஆனந்தி கூறவும்

"நீங்க குடும்பம் சகீதமா இன்னொரு காருல வாங்க.நான் என் மகளோட காருல போயிக்கிறேன்."என்று வெடுக்கென்று பிரித்து செந்தாமரை சொல்லவும் ஆனந்தியின் முகம் கூம்பி விட்டது.

ஆனந்தி என்றும் செந்தாமரையை தன் கூடப்பிறக்காத சகோதிரியாகத்தான் பார்க்கிறார்.

அவர் கூறியது சரியானதுதான் என்றாலும் சொன்ன விதம் மனதிற்கு நெருடலை தந்திருக்கிறது ஆனந்திக்கு.

சிறிது நேரத்திற்கு பிறகு இரண்டு மகிழுந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக பொண்ணு வீட்
டை நோக்கி சென்று கொண்டிருந்தன.
 
Joined
Jan 29, 2025
Messages
87
ராஜேந்திரன் இல்லம்,

"இந்த செயின போட்டுக்கோ சாதனா.உனக்கு ரொம்ப நல்லா இருக்கும்."என்றபடி ஆசையாக தங்கத்தால் ஆன தாமரை டாலருடன் கூடிய செயினை தன் மகள் கழுத்தில் நாச்சியார் அணிவிக்க செல்லும் தருணத்தில்,

"அம்மா வேண்டாம்மா."வெடுக்கென்று சாதனா மறுக்கவும் அந்த செயினை அதற்குரிய பாக்ஸில் போட்டு பீரோவுக்குள் வைத்தார் நாச்சியார்.

சாதனா மறுக்கவும் அவரின் முகமே சரியில்லை.

"சாதனா நீ ரெடியாகி இரு."என்று தன் மகளிடம் கூறியவர் திரும்பி சாதனாவின் தோழி நிவேதாவிடம் "நான் கூப்டும்போது நீ சாதனாவ கூட்டிட்டு வாம்மா."என்று அவர் தன்மையாக அவளிடம் சொல்லவும்

"நீங்க போங்க ஆன்ட்டி.நான் பார்த்துக்கிரேன்."என்று நிவேதா சிரித்து முகத்துடன் பதில் கூறவும்தான் அவ்வறையை விட்டு வெளியேறி இருந்தார் நாச்சியார்.

"சாதனா ஆன்ட்டி எவ்வளவு ஆசையா அந்த செயினை உனக்கு போடவந்தாங்க தெரியுமா?நீ மூஞ்சியல அடிச்சமாறி வேண்டான்னு சொன்னதும் அவரு முகமே சரியில்லை."என்று நிவேதா ஆதங்கமாக சொல்லவும்

"என்ன என்னதான் பண்ணச் சொல்ர நிவேதா? அந்த செயின் அவளோடது.அவளோட செயின எனக்கு போட வந்தா எனக்கு கோபம் வராதா?அதனாலதான் டக்கென்னு வேண்டாம்னு சொல்லிட்டேன்."என்றபடி தான் கழுத்தில் அணிந்திருந்த செயினை அலங்காரக் கண்ணாடியில் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தாள் சாதனா.

"சாதனா ரெடியாகிட்டாளா?"பட்டும் படாமல் அவரிடத்தில் கேட்டார் ராஜேந்திரன்.

"ரெடியாகிட்டு இருக்காங்க."என்று உள்போன குரலில் அமைதியாக தன் கணவனிடம் பதில் கூறினார் நாச்சியார்.

"இன்னும் பதினைந்து நிமிசத்துல மாப்ள வீட்ல இருந்து வந்துருவாங்க.நீயும் போய் ரெடியாகு.உனக்கு இந்த சேலை நல்லா இல்ல."என்று கூறிவிட்டு அவர் முன்னோக்கி செல்ல

நாச்சியாருக்கு கோபம் கலந்த சிரிப்பு இதழில் குடிகொண்டது.'நேத்து அந்த திட்டு திட்டிட்டு இன்னைக்கு என்ன சமதானப்படுத்துராறாம?'என்று தனுக்குள் முனகிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றிருந்தார்.

இருபது நிமிடங்கள் கடந்த பின்பு,

விலையுயர்ந்த இரு மகிழுந்துகள் வாசலில் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நிற்கவும்,

நடுக் கூட்டத்தில் இருந்து
ராஜேந்திரன் நாச்சியாரும் வேகநடையில் வாசலை அடைந்து,

"வாங்க.. வாங்க சம்பந்தி."என்று இருவரும் ஒரு சேர மாப்பிள்ளை வீட்டாருக்கு வணக்கம் வைத்து அவர்களை வீட்டிற்குள் அழைத்து வந்தனர்.

மாப்பிள்ளை வீட்டார் நீள்விருக்கையில் அமரவும் வேக நடையில் சமையலறைக்கு சென்று நீர் நிறைந்த செம்பை அதே வேகநடையில் கொண்டு வந்து மாப்பிள்ளை வீட்டாரின் முன்பு நீட்டியிருந்தார் நாச்சியார்.

சம்ப்ரதாய பேச்சுக்கள் முடிந்த பின்பு,"என் மருமகள கூப்டுங்க."என்று சிரித்த முகத்துடன் கூறிய தன் தாயை ஆவென்று பார்த்தான் சாகித்தியன்.

"டே..வாய க்ளோஸ் பண்ணு."சன்ன குரலில் தன் மகன் காதில் கிசுகிசுத்தார் ஆனந்தி.

"அம்மா மருமகள்ன்னு முடிவே.. பண்ணிட்டிங்களா?"அதே சன்ன குரலில் அவன் கேட்க,

"ஆமா முடிவே பண்ணிட்டேன்.அங்க பாரு என் மருமக வருகிறாள் பாரு."என்று தன் மருமகளை பார்த்தபடி மெல்லிய குரலில் தன் மகனிடம் கூறினார் ஆனந்தி.

தன் தாய் கூறிய பின்புதான் நிமிர்ந்து பொண்ணை பார்த்தவனுக்கு அதிர்ச்சி.
'தன்னிடம் கேரளாவில் உள்ள வர்கலாவில் வம்புவளர்த்த பெண்.'என்று மனதில் நினைத்தபடி தன் அதிர்ச்சியை மறைத்து இயல்பாக இருக்க ஆரம்பித்தான்.

சாதனாவுக்கும் அதே நிலைதான்.'அட! கடவுளே இவன்கிட்ட ரொம்ப வம்பு வளர்த்து வச்சிருக்கமே.இவனதான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.என் வாழ்க்கை என்னாகப்போகதோ?'மனதில் எழுந்த கவலையுடன் வரவழைத்த புன்னகையுடன் நின்றிருந்தாள்.

"உன் பெயர் என்னம்மா?"என்று முகம்கொள்ளா புன்னகையுடன் ஆனந்தி அவளிடம் கேட்டிருக்க

"சாதனா ஆன்ட்டி."தன்மையாக பதில் அளித்திருந்தாள்.

'இவதா பொண்ணுன்னு எனக்கு முன்னாடியே எனக்கு தெரிஞ்சிருந்தா இந்த கல்யாணத்துக்கு நோ சொல்லிருப்பேன்.'என்று மனதில் சாகித்தியன் நினைத்துக்கொண்ட அதே நேரத்தில்,

'இவன்தான் எனக்கு பார்த்திருக்கிர மாப்பிள்ளைன்னு முன்னாடியே எனக்கு தெரிஞ்சிருந்தா அப்பாகிட்ட வேற மாப்பிள்ளை பார்க்க சொல்லிருப்பேன்.'என்று அவளும் தன் மனதில் நினைத்திருந்தாள்.

இருவரும் நொடியில் ஒருவரையொருவரை முறைத்து விட்டு சுற்றம்கருதி தங்களின் விழிகளை தாழ்த்திக்கொண்டனர்.

"அம்மா நான் பொண்ணு கிட்ட கொஞ்சம் பேசணும்."என்று தன் தாயின் உள்ளங்கையை சாகித்தியன் சுரண்டவும்

"நீ அமைதியா கொஞ்ச நேரம் இருடா."என்று பற்களை கடித்தபடி மெல்லிய குரலில் தன் மகனிடம் கூறிவிட்டு,

"ஏங்க சம்பந்தி இன்னைக்கு ரொம்ப நல்ல நாள்.இன்னைக்கே தட்டு மாத்தி நிச்சியம் பண்ணிரலாம்னு நான் நினைக்கிறேன்.நீங்க என்ன சொல்றிங்க?"என்று புன்னகையுடன் ஆனந்தி ராஜேந்திரனிடம் கேட்டிருக்க

"நான் சொல்ரதுக்கு என்ன இருக்கு சம்பந்தி.உங்க எல்லாருக்கும் விருப்பம்னா இன்னைக்கே கையோட நிச்சயதார்த்தத்தையும் வெச்சுக்கலாம்."என்று ராஜேந்திரன் தன் சம்மதத்தை சொல்லவும்

ஆனந்தி சாந்தகுமார் எழுந்து நின்று சேலை, பூ, பழங்கள்,குங்குமம் மஞ்சள் வெற்றிலை பாக்கு அடங்கிய தட்டை ராஜேந்திரன் நாச்சியார் தம்பதி கரங்களில் இடம் மாற்றியிருந்தனர்.

பிறகு, நாச்சியார் ராஜேந்திரன் தங்கள் வசமிருந்த பூ, பழங்கள், மஞ்சள்,
குங்குமம்,வெற்றிலை பாக்கு அடங்கிய தட்டை ஆனந்தி சாந்தகுமார் தம்பதியர் கரங்களில் இடம் மாற்றி இனிதே நிச்சய விழாவை முடிவு செய்திருந்தனர்.

அன்றே ஜோசியரை வரவழைத்து திருமணத்திற்கு தேதி குறிக்கப்பட்டது.தேதி குறிக்கப்பட்டு பின்புதான் ஆனந்திக்கு மனதில் நிம்மதி பிறந்தது.

"இப்ப என் மருமகள் கிட்ட பேசரியா?"என்று சன்ன குரலில் தன் மகன் காதை கடித்தார் ஆனந்தி.

"நான் பேசரக்கு இனி ஒன்னும் இல்லாதமாறி நீங்க நிச்சயமே பண்ணிட்டிங்களே."என்றான் கவலையாக.

"ஆமாட இல்லன்னா நீ பேசி அந்த பொண்ணு உன்ன பிடிக்கலன்னு சொல்லிட்டா என்ன பண்றது? அதுக்குதான் இந்த அவசர நிச்சயதார்த்தம்."என்று ஆனந்தி மமதையுடன் கூறினார்.

"ஆனா ஒன்னு உங்க அண்ணன்மாறி நீ இருக்க மாட்டன்னு நான் நம்புரேன்."என்று ஆனந்தி சொல்லவும் சாகித்தியன் முகம் வாடிப்போனது.

"சம்பந்தி எவ்வளவு நேரம் எல்லாரும் கார்டன்லயே இருப்பிங்க?வாங்க சாப்பிடலாம்."என்று ராஜேந்திரன் மதிய உணவை உண்ண மாப்பிள்ளை வீட்டாரை அழைத்திருந்தார்.

திருமணத்திற்கு தேதி குறிக்கப்பட்ட முதல் தற்போது வரை மறந்தும் சாதனா சாகித்தியன் ஒருவரையொருவரை பார்த்துக்கொள்ளவில்லை.

மதிய உணவை முடித்து விட்டு மாப்பிள்ளை வீட்டார் விடைபெற்று சென்றபின்புதான் அக்கடாடென்று நீள்விருக்கையில் அமர்ந்தார் நாச்சியார்.

சாதனாவின் அறையில்,

"சாதனா இப்ப என்னடி பண்ணப்போற? இதுக்குதான் சொல்ரது வாய வெச்சுட்டு அமைதியா இருக்கனும்னு."என்று கண்டிப்புடன் நிவேதா சாதனாவிடம் சொல்ல

"நீ வேற கொஞ்சம் அமைதியா இருடி.நான் எங்க அப்பாவுக்கு வாக்கு தந்துட்டேன்.வேற வழியில்லை அவன நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்."என்று சோகமாக கூறினாள் சாதனா.

'காலையிலிருந்து எவ்வளவு வேலை சாமி..'என்று மனதில் அவர் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது காலிங்பெல் ஒலி அவரின் செவிகளில் விழவும் சலிப்பு தான் வந்தது அவருக்கு.

'எந்நேரம் 'என்று மனதில் நினைத்தபடி வாயில் கதவை திறந்தவருக்கு அதிர்ச்சி.

"இதழருவி பத்தி கொஞ்சம் டீட்டியல்ஸ் தேவைப்படது."என்று இதழரசன் கூறியபடி வீட்டிற்குள் வரவும் அதே நேரத்தில் ராஜேந்திரன் மாடிப்படிகளில் இறங்கி வரவும் சரியாக இருந்தது.

"இதழருவிய முதல்ல எங்க பொண்ணே கிடையாது.நீங்க போகலாம்."என்றார் கறார் பேர்வழியாக ராஜேந்திரன்.

"உங்க சொந்த பொண்ணா இல்லாட்டியும்கூட இத்தன வருசமா நீங்கதான வளர்த்து டாக்டருக்கு படிக்க வைச்சிருக்கிங்க.அதனால நாங்க கேட்கர கேள்விக்கு நீங்க பதில் சொல்லித்தான் ஆகனும்."என்று விடாப்பிடியாக கூறினான் இதழரசன்.

நாச்சியாருக்கு தற்பொழுது என்ன செய்வதென்று தெரியாது கைகளை பிசைந்தபடி அமைதியாக நின்றிருந்தார்.

"நாங்க ஒன்னும் இதழருவிய காணோம்னு கம்ப்ளைன்ட் கொடுக்கலயே?"தெனாவெட்டாக கூறினார் ராஜேந்திரன்.

"நீங்க புகார் கொடுக்கலின்னாலும் இதழருவியோட அண்ணன் புகார் கொடுத்திருக்காரு."என்று அசட்டையாக கூறினான் இதழரசன்.

"இதழருவியோட அண்ணணா?"என்றார் குழப்பமாக ராஜேந்திரன்.

"நீங்க உங்க வளர்ப்பு மகள் மேல அக்கறை இல்லாமல் போனாலும் என் தத்துதங்கை மேல எனக்கு அதீக அக்கரை இருக்கு."என்றபடி உள்ளே வந்தான் கார்த்திகேயன்.

"என்ன பாக்கிறிங்க எனக்கு இரண்டு வருசமா இதழருவிய தெரியும்.
இப்ப கொஞ்ச நாளா இதழருவிய காணோம்.அதனால நான் புகார் கொடுத்தேன்."என்று பொறுமையாக கூறினான் கார்த்திகேயன்.

ராஜேந்திரனுக்கு தற்பொழுது வேறவழியில்லை."உங்களுக்கு என்ன தகவல் வேனும்?"என்றார் இழுத்து வைத்த பொறுமையுடன்.

"இதழருவிக்கு எதிரிங்கன்னு யாராச்சு இருக்காங்களா?"என்று கேட்டபடி நாச்சியாரை ஒரு பார்வை பார்த்துவிட்டு ராஜேந்திரனை பார்த்தான் இதழரசன்.

இதற்கிடையில் கார்த்திகேயன் தன் பார்வையை வீடு முழுவதும் ஓட விட்டிருந்தான்.

"இல்ல.இதழருவிக்கு எதிரிங்கன்னு யாருமே இல்லை."என்று விரைப்பாக ராஜேந்திரன் கூறவும்

"என்னைக்கு இதழருவி இந்த வீட்ட விட்டு போனாங்க?"என்று இதழரசன் கேட்டதுமே ராஜேந்திரனுக்கு தூக்கிவாரி போட்டது போல இருந்தது.

தொடரும்.
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top